பறங்கிக்காய் ..
வட அமெரிக்கா, தென் அமெரிக்கா , மத்திய அமெரிக்கா ஆகிய நாடுகளில் அதிகமாகப் பயிரிடப்படும் காய்கறிகளில் ஒன்று சிகப்பு பூசணி
இதன் மருத்துவ குணங்கள்.
இதில் நார்ச்சத்து, புரதம் , இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் இ.,ஆகிய சத்துகள் நிறைவாக உள்ளன. மேலும், மாங்கனீஸ், பாஸ்பரஸ், மக்னீசியம், தாமிரம், துத்தநாகம் ஆகிய அத்தியாவசிய தாதுச்சத்துகள் நிறைவாக உள்ளன. 100 கிராம் பூசணி விதைகளைச் சாப்பிடுவதன் மூலம் 600 கலோரிகளைப் பெறலாம்.
நன்றி ஆ. விகடன்.
இது நிறைய நோய் தீர்க்கும் மருத்துவ குணத்தையும் உள்ளடக்கியது. உச்சி முதல் உள்ளங்கால் வரை அனைத்திற்கும் நலம் பயக்கும் வண்ணம் இதன் பயன்கள் சிறந்து விளங்குகிறது.
இந்தப் பூசணியில் அந்தக்காலத்தில் தோல் நீக்கி, உள்ளிருக்கும் விதைகள்அடங்கிய பகுதியை நீக்கி, கெட்டியான காய் பகுதியை மட்டும் சமையலுக்கு பயன்படுத்துவார்கள். இவையெல்லாம் சற்றும் யோசிக்காமல் அருகிலிருக்கும் வீடுகளில் வளர்த்து வரும் ஆடு, மாடு போன்ற வாயில்லா ஜீவன்களுக்கு அற்புத உணவாக போகும். இல்லையென்றால் , குப்பைகளோடு மக்கி சிறந்த உரமாகிப் போகும்.
இந்த இடத்தில் அனைவருமே அறிந்த ஒரு கதை நினைவுக்கு வருகிறது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு தடவை விதுரர் இல்லத்திற்கு அவரைக் காண சென்ற போது, வந்த கிருஷ்ணரை அன்போடு வரவேற்று, அவருக்கு உண்ண வாழைப் பழங்களை விதுரர் உரித்து கொடுக்கலானார். கிருஷ்ணரின் அழகில், அவருடைய தேஜஸில் மெய்மறந்து அவருடன் பேசிக்கொண்டே உரித்தப் பழங்களை கீழே போட்டு விட்டு வெறும் தோலை மட்டும் கொடுக்க கிருஷ்ணரும் அதை அமிர்தமாய் உண்ணவே, ஒரு கட்டத்தில் தன் தவறை உணர்ந்து கண்ணீர் பெருகியோட விதுரர் மன்னிப்பு கேட்டதும், கிருஷ்ணர், "இதற்கெல்லாம் வருத்ப்படுகிறீர்களே..! கோகுலத்தில் வளர்ந்த போது, தாய் யசோதை பழங்களை எங்களுக்கு கொடுத்து விட்டு அதன் தோல்களை எங்கள் ஆவினங்களுக்கு கொடுக்க, அது சுவைத்து உண்ணும் போது எனக்கும் அந்த தோல்களின்பால் மிகவும் ஆசை உண்டாயிற்று. ஒருநாளேனும் இப்படி தோல்களை மட்டும் சாப்பிடும் ஆசையை கட்டுக்குள் வைந்திருந்தேன். இன்றுதான் அந்த ஆசையும் உங்களால் நிறைவேறியது."என்றாராம்.
அப்படி பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே தோல்களை சாப்பிட்டிருக்கும் போது, நாமெல்லாம் சாப்பிட கூடாதா என்ற எண்ணம் எவரோ ஒருவருக்கு வந்ததும் இந்த பூசணி தோல்களின் மகத்துவமும், அதனுள் இருக்கும். A. to. Z சக்திகளும், என் புத்தியிலும் பரவி விடவே அன்றிலிருந்து நானும் தோல்களை கால்நடைகளுக்கு தருவதில்லை. இரண்டாவதாக கால்நடைகளும், நான் சென்னை வந்த பின் வீட்டிற்கு அருகில் கூப்பிடு(ம்) தூரத்தில் கண்களுக்கு தென்படவுமில்லை.
அம்மா வீட்டில் இருந்த போது அருகில் ஒருவர் நிறைய ஆவினங்களை வளர்த்து வந்தார். அந்த ஆவினங்களுக்குதான், எங்கள் வீட்டிலிருந்து, தினமும் அரிசி அலம்பிய கழனி, சாதம் வடித்த கஞ்சி, சற்று சேதமாகும் பழங்கள்,காய்கறிகள், இந்த காய்கறிகளின் தோல்கள் என சத்துக்கள் பலவும் தானமாக போகும். பதிலுக்கு வாசல் தெளிக்க எச்சிலிட என பசுவின் சாணம் எங்களுக்கு பண்டமாற்றாக கிடைக்கும்..
சென்னை வந்த பின் வாடகைக்கு இருந்த ஒட்டு குடித்தனத்தில், ஆவினங்களை கண்ணில் காணாது, நீரிலிருந்து வடித்த சாதங்கள் என்று பிரிக்காமல், அரிசி வானெலி குக்கரில் கலவையாக சாதமாக, (அப்போதுதான் வெங்கலப்பானையில் சாதம் தவிர்த்து, வானெலி குக்கரில் சாதம் வைத்து சாப்பிட்டேன்.) அரிசி அலம்பிய நீரை, "கோகுலத்து பசுக்களா ... ஓடி வந்து குடியுங்கோ.. " என்று என் பாட்டி சொல்லித் தந்த முறையில் சொல்லி பாத்திரத்தில் கொட்டி வைத்துக் கொண்டு, அதில் சமையல் செய்த பாத்திரங்களை முதலில் கழுவ வைத்துக் கொண்டு, (எல்லாம் தண்ணீர் தட்டுப்பாடு) வாழ்க்கையை ஓட்டி விட்டாகி விட்டது.
அப்போது இந்த காய்கறிகளின் (சவ், சவ், சிகப்பு பூசணி பீர்க்கங்காய் ,) தோல்களும் , சுவையான உணவாகிப் போயின.( ஆனால் என்னைப் போன்றவர்களின் சேவைகளினால்தான் ஆவினங்கள் பிளாஸ்டிக் கவர்களின் மேல் நாட்டம் கொண்டு விட்டது என எவரேனும் குற்றம் கூறி விடாதீர்கள். ஹா. ஹா. ஹா.)
சரி.. நாம் இப்போது நம்மினங்களுக்கு இந்த பறங்கியின் முழு உபகாரத்தைப் பற்றி விளக்குகிறேன். இந்த காயை வாங்கி நன்றாக கழுவி, விட்டு, கொஞ்சம் தோலுடன் பட்டையாக எடுத்துக் கொண்டு உள்ளிருக்கும் பகுதியையும் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
பாக்கியிருக்கும் கெட்டியான பகுதிகளை சிறு துண்டுகளாக்கி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, கெட்டியான பாத்திரத்திலோ , இல்லை, கடாயிலோ சிம்மில் வைத்து சரியான பக்குவத்தில் வேக வைத்துக் கொள்ளவும். பூசணி நன்றாக வெந்து குழைந்து விட்டால் கூட்டு பார்ப்பதற்கு கூ(பா) ழாகி விடும். (அப்படியே பாழானாலும் விட மாட்டோம் அது வேறு விஷயம்...! ) அத்துடன் தேங்காய் துருவல், மி. வத்தல், சீரகம் ஒரு ஸ்பூன், தனியா ஒரு ஸ்பூன், ஒரு ஈர்க்கு அலம்பிய கறிவேப்பிலை அத்தனையும் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்து விட்டு ஒரு கொதி வந்ததும், அரை ஸ்பூன் அரிசி மாவு கலந்து விட்டு, மற்றொரு கொதி வந்ததும், ஒரு நிமிடம் கழித்து ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் கொஞ்சம் கடுகு, உ. ப தாளித்து கூட்டாகிய அதில் கொட்டி இறக்கினால், அந்த கூட்டின் வாசனைக்கு, வானத்து தேவர்கள், (பொதுவாக வானத்தில்தான் தேவர்கள் உள்ளதாக எத்தனைப் படங்களில் தவறாது பார்த்திருக்கிறோம். :) ) "இங்குதான் நாம் விரும்பி உண்ணும் அமிர்தம் உள்ளதா? " என்று பேசிக்கொண்டபடி வானத்தின் மேலிருந்து இறங்கி வருவதை உணரலாம்.
பின் வேறு ஒரு கடாயில், மி. வத்தல் நான்கைந்து, ஒரு ஸ்பூன் கடுகு, தலா உ. ப, க. ப ஒரு ஸ்பூன் எடுத்து கொண்டு, கொஞ்சம் தேங்காய் எண்ணெய் விட்டு சிவக்க வறுத்துக் கொண்டு, கோலி அளவு புளி, தேவையான உப்புடன், பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொண்டு நாம் மேலே ஏற்கனவே வதக்கி வைத்திருக்கும், பறங்கிக்காயின் தோல் +உள்ளிருக்கும் விதைகள் அடங்கியப் பகுதியையும் சேர்த்து அரைத்து எடுத்தால், பறங்கித்துவையல் தயார்.
சூடான சாதத்தில் நெய் சேர்த்து இந்த துவையலை கலந்து கொண்டு அந்தப் பறங்கி கூட்டையும் தொட்டுக்கொண்டபடி டூ இன் ஒன் பாணியில், சாப்பிடும் போது, இதற்கு நிகர் இதுவே எனத் தோன்றும்.
இந்த இடத்திலும் நாயன்மாரின் ஒரு கதை நினைவுக்கு வருகிறது. இதுவும் யாவரும் அறிந்த கதைதான்.
இளையான்குடி மாற நாயனார் சிவ பக்தியில் சிறந்து விளங்கியவர். செல்வந்தராக இருந்த போது தினமும் சிவனடியார்களுக்கு உணவளித்து பெருமகிழ்ச்சியடைந்த வந்த அவரது பெருமையை உலகிற்கு உணர்த்த எண்ணம் கொண்ட சிவனாரின் லீலைகளினால், அவர் வறுமைப் பிடியில், சிக்கியப்போதும், தினமும் ஒரு அடியார்காவது எப்படியோ உணவளித்து சிவத் தொண்டாற்றி வந்தார்.
அப்போது விடாது பெய்யும் ஒரு அடைமழை காலத்தில் ஒரு நாள் காலை தொடங்கி இரவு வரை சிவனடியார் எவரையும் காணாது. அதனால் தானும், தன் மனைவியும் எதுவும் உண்ணாது, விசனத்துடன் சிவநாமத்தைச் சொல்லி உறங்க எண்ணிய போது, சிவனே ஒரு அடியவர் கோலத்தில். மழையில் நனைந்தபடி, அவர் இல்லத்தை அணுகி, "பசிக்கிறது உணவு ஏதேனும் கொடு" என்றவுடன் பதறி எழுந்தார்.
அவரை வரவேற்று ஆசனத்தில் அமர வைத்து மாற்று உடுப்பு தந்து உபசரித்த பின், இரவில் அவர் பசி போக்க என்ன தயாரிப்பது என்ற கவலையில், மழையில் நனைந்தபடி ஓடி, தன் வயலில் அன்று மதியம் விதைத்த செந்நெல் விதைகளையும், வளர்ந்து மழையில் சாய்ந்திருந்த கீரைகளையும் சேறோடு மிதந்து கொண்டிருந்ததை திரட்டி/பறித்து வந்து தம் மனைவியிடம் தந்ததும், அந்த அம்மையார், பொறுமையாக அடுப்பெரிக்க விறகில்லாமலிருந்தும், வீட்டின் மேற்கூரையின் ஓலைகளை பிரித்தெடுத்து அதைக் கொண்டு அடுப்பெரித்து, தன் கணவர் கொண்டு வந்து தந்த நெல் விதைகளையும், நீரால் சுத்தம் செய்து உரலில் குத்தி அரிசியாக்கி, கீரைகளை ஆய்ந்து விதவிதமான வகைகளில், அறு சுவையோடு சமைத்தார். அத்தனையும் விரைவில் முடித்து அன்போடு சிவனடியாருக்கு உணவு படைத்தவுடன், அவர்களது அன்பைக் கண்டு ஆனந்தமடைந்த சிவபெருமான் உமாதேவி சகிதம் காட்சி தந்து, இளையான்குடி மாற நாயனாரையும், அவர் மனைவியையும், தம்முடன் கயிலைக்கு அழைத்துச் சென்றார்.
இப்படி ஒரே காயை வைத்து பல விதமாக செய்யும் போதெல்லாம் இந்தக் கதை எனக்கு நினைவுக்கு வந்து வீட்டில் சொல்லிக் கொண்டேயிருப்பேன். ஆனால் முன்னதாக கூறிய சிவனடியார் கதையில் பலன் ஏதும் எதிர்பாராத அன்பு மட்டுந்தான் கலந்திருந்தது. நான் செய்வதில், சோம்பேறித்தனம் கஞ்சத்தனம், எப்படி உள்ளதென அனைவரும் சிலாகித்து பாராட்ட வேண்டுமென எதிர்பார்க்கும் குணம் இப்படி பலதும் உள்ளதெனவும் கூறிக் கொள்வேன்.
இன்று உங்களுடன் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டு பூசணி பதிவையும் போட்டு விட்டேன். கண்டு, ரசித்த கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் அனைத்து அன்புள்ளங்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள். 🙏 .
வட அமெரிக்கா, தென் அமெரிக்கா , மத்திய அமெரிக்கா ஆகிய நாடுகளில் அதிகமாகப் பயிரிடப்படும் காய்கறிகளில் ஒன்று சிகப்பு பூசணி
இதன் மருத்துவ குணங்கள்.
இதில் நார்ச்சத்து, புரதம் , இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் இ.,ஆகிய சத்துகள் நிறைவாக உள்ளன. மேலும், மாங்கனீஸ், பாஸ்பரஸ், மக்னீசியம், தாமிரம், துத்தநாகம் ஆகிய அத்தியாவசிய தாதுச்சத்துகள் நிறைவாக உள்ளன. 100 கிராம் பூசணி விதைகளைச் சாப்பிடுவதன் மூலம் 600 கலோரிகளைப் பெறலாம்.
நன்றி ஆ. விகடன்.
இது நிறைய நோய் தீர்க்கும் மருத்துவ குணத்தையும் உள்ளடக்கியது. உச்சி முதல் உள்ளங்கால் வரை அனைத்திற்கும் நலம் பயக்கும் வண்ணம் இதன் பயன்கள் சிறந்து விளங்குகிறது.
இந்தப் பூசணியில் அந்தக்காலத்தில் தோல் நீக்கி, உள்ளிருக்கும் விதைகள்அடங்கிய பகுதியை நீக்கி, கெட்டியான காய் பகுதியை மட்டும் சமையலுக்கு பயன்படுத்துவார்கள். இவையெல்லாம் சற்றும் யோசிக்காமல் அருகிலிருக்கும் வீடுகளில் வளர்த்து வரும் ஆடு, மாடு போன்ற வாயில்லா ஜீவன்களுக்கு அற்புத உணவாக போகும். இல்லையென்றால் , குப்பைகளோடு மக்கி சிறந்த உரமாகிப் போகும்.
இந்த இடத்தில் அனைவருமே அறிந்த ஒரு கதை நினைவுக்கு வருகிறது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு தடவை விதுரர் இல்லத்திற்கு அவரைக் காண சென்ற போது, வந்த கிருஷ்ணரை அன்போடு வரவேற்று, அவருக்கு உண்ண வாழைப் பழங்களை விதுரர் உரித்து கொடுக்கலானார். கிருஷ்ணரின் அழகில், அவருடைய தேஜஸில் மெய்மறந்து அவருடன் பேசிக்கொண்டே உரித்தப் பழங்களை கீழே போட்டு விட்டு வெறும் தோலை மட்டும் கொடுக்க கிருஷ்ணரும் அதை அமிர்தமாய் உண்ணவே, ஒரு கட்டத்தில் தன் தவறை உணர்ந்து கண்ணீர் பெருகியோட விதுரர் மன்னிப்பு கேட்டதும், கிருஷ்ணர், "இதற்கெல்லாம் வருத்ப்படுகிறீர்களே..! கோகுலத்தில் வளர்ந்த போது, தாய் யசோதை பழங்களை எங்களுக்கு கொடுத்து விட்டு அதன் தோல்களை எங்கள் ஆவினங்களுக்கு கொடுக்க, அது சுவைத்து உண்ணும் போது எனக்கும் அந்த தோல்களின்பால் மிகவும் ஆசை உண்டாயிற்று. ஒருநாளேனும் இப்படி தோல்களை மட்டும் சாப்பிடும் ஆசையை கட்டுக்குள் வைந்திருந்தேன். இன்றுதான் அந்த ஆசையும் உங்களால் நிறைவேறியது."என்றாராம்.
அப்படி பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே தோல்களை சாப்பிட்டிருக்கும் போது, நாமெல்லாம் சாப்பிட கூடாதா என்ற எண்ணம் எவரோ ஒருவருக்கு வந்ததும் இந்த பூசணி தோல்களின் மகத்துவமும், அதனுள் இருக்கும். A. to. Z சக்திகளும், என் புத்தியிலும் பரவி விடவே அன்றிலிருந்து நானும் தோல்களை கால்நடைகளுக்கு தருவதில்லை. இரண்டாவதாக கால்நடைகளும், நான் சென்னை வந்த பின் வீட்டிற்கு அருகில் கூப்பிடு(ம்) தூரத்தில் கண்களுக்கு தென்படவுமில்லை.
அம்மா வீட்டில் இருந்த போது அருகில் ஒருவர் நிறைய ஆவினங்களை வளர்த்து வந்தார். அந்த ஆவினங்களுக்குதான், எங்கள் வீட்டிலிருந்து, தினமும் அரிசி அலம்பிய கழனி, சாதம் வடித்த கஞ்சி, சற்று சேதமாகும் பழங்கள்,காய்கறிகள், இந்த காய்கறிகளின் தோல்கள் என சத்துக்கள் பலவும் தானமாக போகும். பதிலுக்கு வாசல் தெளிக்க எச்சிலிட என பசுவின் சாணம் எங்களுக்கு பண்டமாற்றாக கிடைக்கும்..
சென்னை வந்த பின் வாடகைக்கு இருந்த ஒட்டு குடித்தனத்தில், ஆவினங்களை கண்ணில் காணாது, நீரிலிருந்து வடித்த சாதங்கள் என்று பிரிக்காமல், அரிசி வானெலி குக்கரில் கலவையாக சாதமாக, (அப்போதுதான் வெங்கலப்பானையில் சாதம் தவிர்த்து, வானெலி குக்கரில் சாதம் வைத்து சாப்பிட்டேன்.) அரிசி அலம்பிய நீரை, "கோகுலத்து பசுக்களா ... ஓடி வந்து குடியுங்கோ.. " என்று என் பாட்டி சொல்லித் தந்த முறையில் சொல்லி பாத்திரத்தில் கொட்டி வைத்துக் கொண்டு, அதில் சமையல் செய்த பாத்திரங்களை முதலில் கழுவ வைத்துக் கொண்டு, (எல்லாம் தண்ணீர் தட்டுப்பாடு) வாழ்க்கையை ஓட்டி விட்டாகி விட்டது.
அப்போது இந்த காய்கறிகளின் (சவ், சவ், சிகப்பு பூசணி பீர்க்கங்காய் ,) தோல்களும் , சுவையான உணவாகிப் போயின.( ஆனால் என்னைப் போன்றவர்களின் சேவைகளினால்தான் ஆவினங்கள் பிளாஸ்டிக் கவர்களின் மேல் நாட்டம் கொண்டு விட்டது என எவரேனும் குற்றம் கூறி விடாதீர்கள். ஹா. ஹா. ஹா.)
சரி.. நாம் இப்போது நம்மினங்களுக்கு இந்த பறங்கியின் முழு உபகாரத்தைப் பற்றி விளக்குகிறேன். இந்த காயை வாங்கி நன்றாக கழுவி, விட்டு, கொஞ்சம் தோலுடன் பட்டையாக எடுத்துக் கொண்டு உள்ளிருக்கும் பகுதியையும் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
சூடான சாதத்தில் நெய் சேர்த்து இந்த துவையலை கலந்து கொண்டு அந்தப் பறங்கி கூட்டையும் தொட்டுக்கொண்டபடி டூ இன் ஒன் பாணியில், சாப்பிடும் போது, இதற்கு நிகர் இதுவே எனத் தோன்றும்.
இந்த இடத்திலும் நாயன்மாரின் ஒரு கதை நினைவுக்கு வருகிறது. இதுவும் யாவரும் அறிந்த கதைதான்.
இளையான்குடி மாற நாயனார் சிவ பக்தியில் சிறந்து விளங்கியவர். செல்வந்தராக இருந்த போது தினமும் சிவனடியார்களுக்கு உணவளித்து பெருமகிழ்ச்சியடைந்த வந்த அவரது பெருமையை உலகிற்கு உணர்த்த எண்ணம் கொண்ட சிவனாரின் லீலைகளினால், அவர் வறுமைப் பிடியில், சிக்கியப்போதும், தினமும் ஒரு அடியார்காவது எப்படியோ உணவளித்து சிவத் தொண்டாற்றி வந்தார்.
அப்போது விடாது பெய்யும் ஒரு அடைமழை காலத்தில் ஒரு நாள் காலை தொடங்கி இரவு வரை சிவனடியார் எவரையும் காணாது. அதனால் தானும், தன் மனைவியும் எதுவும் உண்ணாது, விசனத்துடன் சிவநாமத்தைச் சொல்லி உறங்க எண்ணிய போது, சிவனே ஒரு அடியவர் கோலத்தில். மழையில் நனைந்தபடி, அவர் இல்லத்தை அணுகி, "பசிக்கிறது உணவு ஏதேனும் கொடு" என்றவுடன் பதறி எழுந்தார்.
அவரை வரவேற்று ஆசனத்தில் அமர வைத்து மாற்று உடுப்பு தந்து உபசரித்த பின், இரவில் அவர் பசி போக்க என்ன தயாரிப்பது என்ற கவலையில், மழையில் நனைந்தபடி ஓடி, தன் வயலில் அன்று மதியம் விதைத்த செந்நெல் விதைகளையும், வளர்ந்து மழையில் சாய்ந்திருந்த கீரைகளையும் சேறோடு மிதந்து கொண்டிருந்ததை திரட்டி/பறித்து வந்து தம் மனைவியிடம் தந்ததும், அந்த அம்மையார், பொறுமையாக அடுப்பெரிக்க விறகில்லாமலிருந்தும், வீட்டின் மேற்கூரையின் ஓலைகளை பிரித்தெடுத்து அதைக் கொண்டு அடுப்பெரித்து, தன் கணவர் கொண்டு வந்து தந்த நெல் விதைகளையும், நீரால் சுத்தம் செய்து உரலில் குத்தி அரிசியாக்கி, கீரைகளை ஆய்ந்து விதவிதமான வகைகளில், அறு சுவையோடு சமைத்தார். அத்தனையும் விரைவில் முடித்து அன்போடு சிவனடியாருக்கு உணவு படைத்தவுடன், அவர்களது அன்பைக் கண்டு ஆனந்தமடைந்த சிவபெருமான் உமாதேவி சகிதம் காட்சி தந்து, இளையான்குடி மாற நாயனாரையும், அவர் மனைவியையும், தம்முடன் கயிலைக்கு அழைத்துச் சென்றார்.
இப்படி ஒரே காயை வைத்து பல விதமாக செய்யும் போதெல்லாம் இந்தக் கதை எனக்கு நினைவுக்கு வந்து வீட்டில் சொல்லிக் கொண்டேயிருப்பேன். ஆனால் முன்னதாக கூறிய சிவனடியார் கதையில் பலன் ஏதும் எதிர்பாராத அன்பு மட்டுந்தான் கலந்திருந்தது. நான் செய்வதில், சோம்பேறித்தனம் கஞ்சத்தனம், எப்படி உள்ளதென அனைவரும் சிலாகித்து பாராட்ட வேண்டுமென எதிர்பார்க்கும் குணம் இப்படி பலதும் உள்ளதெனவும் கூறிக் கொள்வேன்.
இன்று உங்களுடன் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டு பூசணி பதிவையும் போட்டு விட்டேன். கண்டு, ரசித்த கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் அனைத்து அன்புள்ளங்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள். 🙏 .
ஆஹா மீதான் பர்ஸ்ட்ன்னு நினைக்கிறேன்
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
ஆமாம் நீங்கள்தான் சந்தேகமற முதல். முதல் வருகை தந்து கருத்தைக்கூறி பதிவை சிறப்பித்தமைக்கு மனம் மகிழ்வான நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சமையல் குறிப்பை நல்ல கதையுடன் சேர்த்து பதிவை சுவாரஸ்யமாக எடுத்து சென்ற விதம் அருமை
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
பதிவு சுவாரஸ்யமாக உள்ளதெனக் கூறி ஊக்கமிகும் கருத்துக்கள் தந்திருப்பதற்கும், பாராட்டியமைக்கும் என் மன நிறைவான நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்
சுவையான துணைக் குறிப்புகளுடன் செய்முறையைச் சொல்லி கலக்கி இருக்கிறீர்கள். அதன் பயன், அது தரும் சத்து விவரங்கள், சிவனடியாழ் கதை, கிருஷ்ணன் கதை.... ஸூப்பர்.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
பதிவை ரசித்துப் படித்து மனமுவந்து தந்த பாராட்டுகளுக்கு மிக்க நன்றிகள் சகோ.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பரங்கிக்காயி் எங்கள் வீட்டில் எப்போதும் வெந்தயக் குழம்பு மட்டுமே செய்வார்கள். என் அம்மா காலத்தில் பிஞ்சு பரங்கியில் பால் கூட்டு செய்து தந்து சாப்பிட்டதுண்டு. இது புதுசு எனக்கு.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
பறங்கிக்காயில் வெந்தய குழம்பும் நன்றாக இருக்கும். து. ப கொஞ்சம் நிறைய போட்டு சாம்பார் வைத்தாலும் நன்றாக இருக்கும். சில காய்கள் நமக்கு அமைவதை பொறுத்து இருக்கிறது. பால் கூட்டு (ஓலன்தானே) என் நாத்தனார் வீட்டில் அடிக்கடிச் செய்வார்களாம். என் கணவருக்கு அது அசட்டு இனிபென்பதால் பிடிக்காது. இந்த மாதிரி கூட்டு, சாம்பார் என காரமாகத்தான் அவருக்குப் பிடித்தம்.நீங்கள் துவையல் செய்ததில்லையா? தோலுடனே பறங்கிக்காயை நறுக்கிக் வைத்துக் கொண்டும் துவையல் செய்யலாம். மிகவும் ருசியாகவும் இருக்கும். கருத்துக்களுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஓலன் வேறே பறங்கிக்காய்ப் பால்க்கூட்டு வேறே. பால் கூட்டுக்குப் பிஞ்சுப் பறங்கி தான் சிறந்தது. இளங்கொட்டை என்போம்.
Deleteஆமாம். ஓலன் என்பது கிட்டத்தட்ட நம்மூர் அவியல் மாதிரி, இல்லையா? பால்கூட்டு இனிப்பானது.
Deleteவணக்கம்
Deleteஓ அப்படியா? ஓலனும், பால் கூட்டும் வேறேயென்று இப்போதுதான் தெரிந்து கொண்டேன். ஓலனும் பால் சேர்த்துதான் செய்வோமென என் நாத்தனார் அடிக்கடி கூறியுள்ளார். உங்கள் இருவரின் கருத்துக்கள் கண்டு தெளிவடைந்தேன். ஒருநாள் இப்படியெல்லாம் செய்து பார்க்க வேண்டும். மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஓலனுக்குத் தேங்காய்ப் பால் தான் நாங்கள் சேர்ப்போம். உங்க நாத்தனர் எப்படினு தெரியாது. :)
Deleteகீதாக்கா சொல்லிட்டாங்க ...ஓலன் வேறு பாக் கூட்டு வேறு. ஓலனுக்குத் தேங்காய்ப்பால் கூடவே காராமணி சேர்த்துச் செய்வது நல்ல டேஸ்டியா இருக்கும்.
Deleteஸ்ரீராம் ஓலன் வேற டேஸ்ட்! அவியல் போல இல்லை
கீதா
வணக்கம் சகோதரி
Deleteதாங்கள் சொல்வது போல், தேங்காய் பாலுடன் காராமணி சேர்த்துதான் ஓலன் செய்ததாக என் நாத்தனார் கூறுவார்கள். நான் இதுவரை அதுபோல் செய்ததில்லை.
ஆமாம்.. பால் கூட்டு வேறே என மூவரும் அழுத்தி சொல்லுகிறீர்கள். ஆனால் அந்த முறையை குறிப்பிடவே இல்லையே.. உங்கள் பதிவுகளில் விளக்கம் காண காத்திருக்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்
துவையலுக்கு அதன் விதைகளையுமா சேர்த்து அரைப்பீர்கள்?
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
துவையல் பண்ணும் போது அந்த காயின் தன்மையைப் பொறுத்து (இளசாக இருந்தால்) அந்த விதைப்பருப்புகளை சேர்க்கலாம். கொஞ்சம் முத்தலாக இருந்தால், உலர வைத்து அதை உடைத்து சாப்பிடலாம். மிகவும் ருசியாக இருக்கும். ஆனாலும் அந்த பருப்புகள் தோலுடனே நன்றாக வெந்து விடுகிறது. அனைத்து கருத்துக்கும் நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பறங்கிக்காய்த் துவையல் அடிக்கடி உண்டு எங்க வீட்டில். ஆனால் இவ்வளவு முற்றிய காயை வாங்கியதே இல்லை. கொஞ்சமானும் பச்சை இருக்கும். கூட்டும் அடிக்கடி பண்ணுவேன். ஓலன் நன்றாக இருக்கும். செய்முறையோடு கதையையும் கலந்து அதற்கேற்றபடி செய்முறையையும் சொல்லிக் கலக்கி விட்டீர்கள். உங்கள் திறமை பாராட்டத்தக்கது. நல்ல படைப்பாற்றல் உள்ள நீங்கள் அதை இன்னும் மேலும் மேலும் அபிவிருத்தி செய்து கொள்ளுங்கள். சுவையான பதிவு. அலுப்புத்தட்டாமல் சொல்லும் விதத்தால் அழகாக வந்துள்ளது. இதெல்லாம் பானுமதி சொல்வது போல் இயல்பாகப் பிறவியிலேயே கிடைத்திருக்கும் வரம். வாழ்த்துகள்.
ReplyDeleteவணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
/இவ்வளவு முற்றிய காயை வாங்கியதே இல்லை/
அது முற்றிய நிலையிலிருக்கும் போது வெறும் கூட்டாக மட்டுமே பண்ணுவேன். இரண்டாவதாக எங்கள் வீட்டிலும் இந்தக் காய் அடிக்கடி இடம் பெறுவதால் அந்த செய்முறைகளை எடுத்த படங்களும் நிறையவே.. இதிலும் ஒவ்வொரு தடவையும் பண்ணும் காய்களும் மொத்த படங்களாக கலந்திருக்கின்றன. பொதுவாக இந்த பூசணியில் எல்லாவித சமையலும் எல்லோரும் அடிக்கடி செய்வதுதான். நான் கொஞ்சம் நீட்டி முழக்கி, விவரித்து எழுதியுள்ளேன்.
என்னிடம் அப்படியெல்லாம் திறமை ஒன்றுமில்லை. இப்போது உங்கள் அனைவரின் மூலமாக கற்பதுதான். ஆனாலும் உங்கள் திறன்களின் உயரத்தை என்னால் எட்ட முடியவில்லை. ஆனால் நீங்கள் சொல்வது போல் நிறைய எழுத வேண்டுமென்ற ஆசை மட்டும் கடலளவு உள்ளது.
இதோ பாருங்கள்..! பதிவுக்கு வந்த கருத்துரைகளுக்கு உடனே என்னால் அமர்ந்து பதிலளிக்க இயலவில்லை. இப்பொழுது ஊரடங்கினால். இடைவிடாத வேலைகள் என்னை பிணைத்துக் கொண்ட போதும், கைப்பேசியில் வேகமாக கருத்துரைகளுக்கு பதில் அடிக்க இயலவில்லை. கருத்து தந்தவர்களுக்கு உடனே பதில் தர இயலவில்லையே என எனக்கே கஸ்டமாக இருக்கிறது. உங்களின் அன்பான பாராட்டுகளுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
புராணக்கதை முதன்முதலாக கேட்கிறேன் பறங்கிக்காயின் நற்குணங்கள் பற்றி பொருத்தமாக விலக்கியது அருமை வாழ்த்துகளுடன்...
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
புராண கதைகளும். பறங்கியின் பிரதாபங்களும் பொருத்தமாக உள்ளதென கூறி, பதிவை ரசித்துப் படித்தமைக்கு என் மன மகிழ்வுடன் கூடிய நன்றிகள் சகோ. தங்கள் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
Slide Show, காணொளி என விளக்கம் எல்லாம் அசத்தல்...
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
பதிவு அசத்தலாக உள்ளது என பாராட்டியமைக்கு மிக்க நன்றி. வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெற்றதைத் போல சந்தோஷமடைந்தேன். உங்களிடமிருந்து கற்க வேண்டியவை ஏராளமாக உள்ளது. நீங்கள் உங்கள் பதிவில் சொல்லும் வழிகளை என் குழந்தைகளிடம் கூறி அவர்களையும் அது எப்படியென கற்றுத் தரும்படி சொல்லியுள்ளேன். பாராட்டுக்களுக்கு மீண்டும் மிக்க நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
விதுரர் கதை, இளையான்குடி மாற நாயனார் கதையோடு அருமையான சமையல் குறிப்பு இந்த பதிவில் எவ்வளவு விஷயங்கள் சொல்லி இருக்கிறீர்கள்! பூசணியின் மருத்துவக்குறிப்பு அருமை.
ReplyDeleteஅத்தனையும் அருமை. தண்ணீர் சிக்கனம், எந்த பொருளையும் வீணாக்காமல் அதை பயனுள்ளதாக ஆக்குவது என்று.
படங்கள், காணொளி எல்லாம் அருமை.
//அரிசி அலம்பிய நீரை, "கோகுலத்து பசுக்களா ... ஓடி வந்து குடியுங்கோ.. " என்று என் பாட்டி சொல்லித் தந்த முறையில் சொல்லி பாத்திரத்தில் கொட்டி வைத்துக் கொண்டு, அதில் சமையல் செய்த பாத்திரங்களை முதலில் கழுவ வைத்துக் கொண்டு, (எல்லாம் தண்ணீர் தட்டுப்பாடு) வாழ்க்கையை ஓட்டி விட்டாகி விட்டது.//
பாட்டி சொன்னது அருமை.
நான் அரிசி, உளுந்து கழுவிய தண்ணீரை செடிகளுக்கு விடுவேன்.
தொட்டி செடிகளுக்கு சத்து வேண்டுமே!
//"இங்குதான் நாம் விரும்பி உண்ணும் அமிர்தம் உள்ளதா? " என்று பேசிக்கொண்டபடி வானத்தின் மேலிருந்து இறங்கி வருவதை உணரலாம்.//
வானத்து தேவர்களும் விரும்பி உண்ணும் கூட்டா! அருமை.
கூட்டு, குழம்பு எதற்கும் அரிசி மாவு சேர்க்க மாட்டேன். மற்றபடி நீங்கள் சொல்லும் பக்குவத்தில் செய்து இருக்கிறேன் கூட்டு.
துவையலில் தோல் அரைத்து இருக்கிறேன் துவையலாக உள்ளிருக்கும் விதை சதைபகுதியை சேர்த்து செய்தது இல்லை.
புடலையில் அப்படி செய்வார்கள் துவையல் எங்கள் வீட்டில்.
சின்மயா மிஷ்ன் நடத்தும் பாலவிஹாரில் சின்ன வயதில் ஆண்டுவிழாவில் 63 நாயன்பார்களைப் பற்றி பேச்சுப்போட்டி வைத்தார்கள் அதில் கலந்து கொண்டேன்.
இளையான்குடி மாற நாயனார் கதையை எடுத்துக் கொண்டேன் பேச . வீட்டில் மிக நன்றாக பேசி அப்பாவிடம் பாராட்டு வாங்கினேன். மேடை ஏறியதும் கூட்டத்தைப்பார்த்தும் வாய் தந்தி அடிக்க ஆரம்பித்து விட்டது.
எப்படியோ கதையை சொல்லி முடித்து வேர்க்க விரு விறுக்க மேடையை விட்டு கீழ் இறங்கியதை மறக்கவே முடியாது.
பல விஷயங்கள் அடங்கிய பதிவு படிக்க நன்றாக இருந்தது.
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.
தாமதமாக பதில் தருவதற்கு முதலில் என்னை மன்னித்து விடுங்கள்.
படங்கள், காணொளியை ரசித்துப் பாராட்டியமைக்கு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.
அரிசி அலம்பி தண்ணீரை கீழே வெறும் தரையில் கொட்டக்கூடாது என எங்கள் பாட்டி சிறு வயதிலேயே சொல்லி வளர்த்திருக்கிறார். அதற்காகத்தான் சென்னை வந்த புதிதில் இப்படிக் கூறிக் கொண்டே அந்த தண்ணீரையும் கீழே கொட்டாமல் சமையல் செய்த பாத்திரங்கள் ஊற வைக்க, முதல் தடவை அலம்ப என பயன்படுத்திக் கொண்டேன். எங்கள் புகுந்த வீட்டில் (சென்னை) மரம் செடி வகைகள் எதுவும் வைக்க வசதி ஏதும் இல்லா சூழ்நிலை. நீங்கள் அந்த தண்ணீரை செடிகளுக்கு விடுவது நல்ல செயல். அவையும் ஆரோக்கியம் பெறும்.
நான் கூட்டு வகையாறாக்களுக்கு கடைசியில் சிறிதளவு அரிசி மா விடுவது அவை சேர்ந்து இருக்குமென அம்மா சொல்லித்தந்து அப்படியே பழக்கமாகி விட்டது. எங்கள் மாமியாரும் திருமணமான புதிதில் அப்படியே செய்யச் சொல்லுவார்கள். மற்றபடி செய்யும் பதார்த்தம் கெட்டியாக அமையும் பட்சத்தில்,சில நேரங்களில் அரிசி மாவை தவிர்த்து விடுவேன். புடலை, பூசணி துவையலில் நாம் பார்த்து செய்வதுதான். அதன் விதைகள் சற்று முத்தி இருந்தால். அதை சேர்ப்பதில்லை. மற்றபடி இந்த பக்குவங்கள் யாவரும் அறிந்ததுதானே. இருப்பினும் பதிவை ரசித்து கருத்துக்கள் தந்திருப்பதற்கு மிக்க நன்றிகள்.
/சின்மயா மிஷ்ன் நடத்தும் பாலவிஹாரில் சின்ன வயதில் ஆண்டுவிழாவில் 63 நாயன்பார்களைப் பற்றி பேச்சுப்போட்டி வைத்தார்கள் அதில் கலந்து கொண்டேன்./
அப்படியா..! நீங்கள் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு மேடையேறி பேசியதற்கு வாழ்த்துக்கள்.
சிறு வயதாயிருந்த போது சில சமயம் மேடை ஏறியதும் பயங்கள் நம்மைத் தொற்றிக் கொள்ளும். நம் வீட்டுப் பெரியவர்களிடம் பாராட்டுக்கள் வாங்கியது பெருமை தரும் நினைவுகள்தாம். எனது பதிவு தங்கள் மலரும் நினைவுகளை உண்டாக்கியது குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்.
கதைகளும் பதிவும் நன்றாக உள்ளதென பாராட்டியமைக்கு என் பணிவான நன்றிகள் சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
காலையிலேயே சொல்ல மறந்துட்டேன், உங்க காணொளி எனக்குக் காலையும் வரலை, இப்போவும். நானும் சாம்பார், கூட்டு போன்றவற்றிற்கு மாவு ஊற்ற மாட்டேன். அதன் உண்மையான ருசி போய் மாவு வாசனை வந்துடும்னு ஓர் எண்ணம்.
ReplyDeleteவணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
இப்போது காணொளியைப் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இரண்டொரு நாட்கள் ஆகி விட்டனவே. நானும் எல்லாப் பொழுதும் அரிசிமா பயன்படுத்த மாட்டேன். நீர்க்க இருந்தால் சேர்ந்து இருப்பதற்காக சேர்ப்பேன்.ஒரு கொதி வந்து விட்டால் மாவின் பச்சை நெடி இருக்காது. தங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
உங்கள் பதிலைப் படிச்சதும் இப்போத் தான் காணொளியே பார்த்தேன். அருமையாக எடுத்திருக்கிறீர்கள். வாழ்த்துகள்.
Deleteவணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
மீண்டும் பழைய பதிவென்று எண்ணாமல் காணொளியையும் பார்த்து ரசித்து வாழ்த்துக்கள் தெரிவித்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி
இங்கு இரண்டு நாட்களாய் நெட் இணைப்பு துண்டித்து விட்டதில் உடன் பதில் தர இயலவில்லை.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தண்ணீர்த்தட்டுப்பாடு நான் அனுபவித்தது இல்லையே தவிரச் சென்னையில் நிறையப் பார்த்திருக்கேன். எங்கெங்கோ போய்த் தண்ணீர் கொண்டு வருவதோடு இரவில் அதுவும் நடு இரவில் தண்ணீர் லாரி வரும் என்பதால் தூங்காமல் விழித்திருந்து தண்ணீர் பிடித்து வைத்துக் கொள்வார்கள். ஒரு ஸ்பூன் கூட விடாமல் தண்ணீர் இருக்கும்.
ReplyDeleteவணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
தண்ணீர் தட்டுப்பாடு நான் சென்னைக்கு 79ல் திருமணம் முடிந்து சென்ற போது அவ்வளவாக வரவில்லை. 81ல் ஆரம்பித்து விட்டது. மேலும் மூணு குடித்தனத்துக்கு ஒரே ஒரு கார்ப்பரேஷன் (அடிக்கும் பம்ப்) பம்புத்தான் இருந்தது. எப்போதும் தண்ணீர் வர்ணம். ஆனால் 81ல் குறிப்பிட்ட டயம் என ஆரம்பித்து 82ல் சுத்தமாக வருவதேயில்லை. வெளியில் சென்றுதான் வீட்டின் எல்லாத் தேவைக்கும் தண்ணீர் எடுத்து வந்து உபயோகப்படுத்தணும். அப்போது என் இரண்டாவது மகன் வயிற்றில். ரொம்பவே தண்ணீர் கஸ்டப்பட்டாச்சு. மதுரை வந்தும் இதே கஸ்டங்கள் தொடர்கதையாய் படுத்தி எடுத்து விட்டது. நீங்கள் கூறியபடி சின்ன பாத்திரங்களும் கூட தண்ணீரை சேமிப்போம் . மீண்டும் வந்து தந்த தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆஹா ஒரு குண்டுப் பூசணிக்குள் இத்தனை விசயங்கள் ஒளிஞ்சிருக்கோ.. நிறையத் தகவல்கள் சொல்லியிருக்கிறீங்கள். ஸ்லைட் ஷோ, வீடியோ என்ப போட ஆரம்பிச்சிருக்கிறீங்க, யூ ரியூப் தொடங்கப் போறீங்கள் போல:).. இப்போ கொரோனா நேரத்தில எல்லா நடிகர்களும் யூ ரியூப் ஆரம்பித்து விட்டனர், ஆனா எதையும் பார்க்க சகிக்கவிலை ஹா ஹா ஹா.
ReplyDeleteவணக்கம் அதிரா சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
தங்கள் கருத்துக்கு தரும் தாமதமான பதிலுக்கு மன்னியுங்கள். கொரோனா நேரங்கள்தான் என வேலைகளையும் அதிகப்படுத்தி ரசித்துக் கொண்டிருக்கிறது. சும்மா ஒரு மாறுதலுக்காக நிறைய விஷயங்கள். வீடியோ என சேர்த்திருக்கிறேன். நன்றாக உள்ளதா? இன்னமும் உங்கள் அளவுக்கு பதிவை அழகுபடுத்த நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். மற்றபடி யூடியூப்பெல்லாம் ஆரம்பிக்க திறமைகள் நிறைய வேண்டும். ஆனால் தங்கள் வாக்கு பலித்தால் சந்தோஷமும் அடைவேன். தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இதனை நாங்கள் சக்கரைப் பூஸணி என்போம். எனக்கு தெரிஞ்சு தோலுடன் சமைக்கிறோம், நான் சின்னப் பிள்ளையாக இருக்கும்போது ஒரு கோயில் சாம்பாறில், தோலுடன் பூசணித் துண்டுகள் இருந்தது கண்டு, அம்மா அந்த சமையல்காரரைக் கேட்டபோது, அவர் சொல்லியிருக்கிறார் தோலுடன் சமைச்சால் சத்தும் சுவையுமாக இருக்கும் என.. அன்றிலிருந்து தோலுடனேயே அம்மா சமைப்பா. அப்படியே நாங்களும்.
ReplyDeleteஇதேபோலதான், உருளைக்கிழங்கின் தோலிலும் சத்திருக்குது, நன்கு கழுவிப்போட்டு அப்படியே சமைக்க வேண்டும்.
ஆனா இக்காலத்து பூசணிக்கு மெழுது பூசி விடுகிறார்கள் பழுதடையாமல் இருக்கு, ஊரில் அப்படி இருக்காது, வெளிநாட்டு ஏற்றுமதிக்கு... அதனாலதான் சில சமயம், தோலை மெதுவாக கத்தியால் விராண்டிப் பார்த்தால் மெழுகுபோல வருவது தெரியும்... இதனால நன்கு சுடுதண்ணியில் போட்டுக் கழுவியபின்னரே சமைக்கோணும்.
உருளைக்கிழங்கு, பறங்கிக்காய் எல்லாம் நான் எப்போதுமே தோலுடன் தான் சமைக்கிறேன். அதிலும் இங்கெல்லாம் பறங்கிப் பச்சைப் பறங்கிக்காயாகக் கிடைக்கும். அதைத் தோல் சீவவே வேண்டாம்.
Deleteவணக்கம் அதிரா சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
ஆமாம்.. இதை சர்க்கரைப்பூசணி என்றும் சொல்வோம். சற்றுப் பெரிதாக கொஞ்சம் பச்சைக்கலரும் சேர்ந்து இருப்பதை கல்யாண பூசணி என்றும் சொல்வோம்.
நானும் நிறைய விஷேச வீடுகளில், உணவகங்களில், சமையல்கார்களை வைத்து சமைக்கும் இடங்களில் தோலுடனே இந்தக்காயைப் சாம்பாரில் போட்டிருப்பதை சாப்பிட்டுள்ளேன். வெண் பூசணியையும் இதே மாதிரி தோலுடன் போட்டிருப்பார்கள் .அது ஒரு வித்தியாசமாகவும் சுவையாகவும் இருந்தது.
உருளையின் தோல் என்றில்லை பொதுவாகவே எந்த காய்க்கும் தோலின் அடிப்பாகத்தில் நிறைய சக்திகள் இருப்பதால் தோலை மெலிதாக வெட்ட வேண்டும் என்பார்கள்.
/ஆனா இக்காலத்து பூசணிக்கு மெழுது பூசி விடுகிறார்கள் பழுதடையாமல் இருக்கு, ஊரில் அப்படி இருக்காது, வெளிநாட்டு ஏற்றுமதிக்கு... அதனாலதான் சில சமயம், தோலை மெதுவாக கத்தியால் விராண்டிப் பார்த்தால் மெழுகுபோல வருவது தெரியும்... இதனால நன்கு சுடுதண்ணியில் போட்டுக் கழுவியபின்னரே சமைக்கோணும்./
இப்போது பூசணிக்கும் இதே கதியா? ஆப்பிள் அப்போதெல்லாம் தோலோடு சாப்பிட்டால்தான் சக்தி என்றார்கள். இப்போது அதுல் மெழுகுப்பூச்சு இருக்கிறதென்று தோல் சீவிதான் சாப்பிடுகிறோம். இதிலேயுமா? என்னவோ இனி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பூசணியின் பருப்பை எடுத்துக் காயப்போட்டு விட்டு, பின்பு நானே சாப்பிடுவேன்:) எனக்கு கொறிப்பதுதான் பிடிச்ச விசயமாச்சே:)... ஆனா உள் பகுதியை எறிஞ்சுபோடுவோம், இது அதையும் சமைக்கலாம் என்கிறீங்க, அதன் மணம் எனக்குப் பிடிப்பதில்லை.
ReplyDeleteபூசணி எனில் பிரட்டலாக உறைப்பாக வைப்போம், அப்படியே துண்டு துண்டாக சாப்பிட சூப்பர். அல்லது மரவள்ளிக்கிழங்கு சேர்த்த வெள்ளைக்கறி நம் நாட்டில் பிரபல்யம், எந்த நல்ல காரியம், கெட்ட காரிய வீடுகளில் அப்படி ஒரு வெள்ளைக்க்கறி எப்படியும் இருக்கும்.
உங்கள் முறையில் ச்ய்து பார்க்கலாம்..
உங்கள் குடை மிளகாய் பிட்லே:)) செய்திட்டேன். நன்றாக வந்தது.
கதைகள் இரண்டும் அருமை, தெரியும் ஆனாலும் மறந்து போயிருந்தேன், நினைவுபடுத்திட்டீங்கள்.
வணக்கம் அதிரா சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
தாங்கள் கூறுவது போல் பூசணி பருப்புக்களை உரித்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். நானும் முக்கல் வாசி விரும்பி அப்படித்தான் சாப்பிட்டுள்ளேன்.இப்போது முழு பூசணிக்காயை, அதுவும் கொஞ்சம் இளசாக இருப்பதால், அதன் பருப்புக்கள் உரிக்க வரவில்லை. அதனால் துவையலுடன் கலந்து விடுகிறேன்.
பூசணி காரக்கறியும் ஒருநாள் செய்து பார்க்கிறேன்.
/உங்கள் குடை மிளகாய் பிட்லே:)) செய்திட்டேன். நன்றாக வந்தது./
நான் எங்கே பிட்லே செய்தேன்.? அதுவும் கறியாகத்தானே செய்து பகிர்ந்திருந்தேன். இனி உங்கள் சொல்படி பிட்லை செய்து விடுகிறேன்.:)
கதைகளை படித்து பாராட்டியமைக்கு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். தங்களின் அனைத்து கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
// "இங்குதான் நாம் விரும்பி உண்ணும் அமிர்தம் உள்ளதா? " என்று பேசிக்கொண்டபடி வானத்தின் மேலிருந்து இறங்கி வருவதை உணரலாம்.//
ReplyDeleteம்ஹூம்ம்.. அப்போ நீங்க பார்த்திட்டீங்கள் தேவர்களை?:).. வீடியோ செல்பி எல்லாம் எடுத்தீங்களோ? விரைவில் போடவும்:)).. நான் தேவர்களோடு தேவதையையும் சேர்த்துக் கூப்பிடப்போறேன்ன்.. இதோ பூசணி வாங்கப் புறப்பட்டு விட்டேன்:)..
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
பதில்களின் தாமதத்திற்கு மன்னிக்கவும்.
/ம்ஹூம்ம்.. அப்போ நீங்க பார்த்திட்டீங்கள் தேவர்களை?:).. வீடியோ செல்பி எல்லாம் எடுத்தீங்களோ? விரைவில் போடவும்:)).. நான் தேவர்களோடு தேவதையையும் சேர்த்துக் கூப்பிடப்போறேன்ன்.. இதோ பூசணி வாங்கப் புறப்பட்டு விட்டேன்:)/
ஹா.ஹா.ஹா. நான் அவர்களை போட்டோ எடுப்பதற்குள், அவர்கள் அமிர்தத்தை உண்ணும் வேலையில் ஈடுபட்டு விட்டார்கள். சரி.. ஒரு செல்பி எடுக்கலாமென கஸ்டப்பட்டு எனக்கு தெரிந்த கோணத்தில் எடுத்தேன். அவர்கள் மறைந்தவுடன் பார்த்தால் அந்த செல்பியில் நான் மட்டுந்தேன்..! அப்புறந்தானே புரிந்தது. அவர்கள் போட்டோவில் சிக்கி அகப்பட சாதாரண மனிதர்கள் அல்லவென்று...:)
சரி.. நீங்கள் இப்போது பூசணி வாங்கி விதவிதமாக செய்து பார்த்தாயிற்றா? விரைவில் உங்கள் பக்கத்தில் பூசணி யின் தினுசுகளை எதிர்பார்க்கிறேன். தங்கள் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பறங்கிக்காயின் மகாத்மியம் அருமை.
ReplyDeleteஆனால் அதனை பூசனி என்று சொல்லி, பூசனிக்காயை (வெண்பூசனி) நினைவுபடுத்தலாமா?
பறங்கிக்காய் அல்வா நினைவுக்கு வரவில்லையா?
இந்தப் பறங்கிக்காயைத்தானே அப்படியே விட்டுவைத்து, உள்ளே உள்ளவை காய்ந்த பிறகு, மேலே ஓட்டை போட்டு (அல்லது மூடி மாதிரி வெட்டி) உள்ளுள்ளதை எடுத்துவிட்டு, தண்ணீர் வைத்துக்கொள்ளும் பாத்திரமாக மாற்றிக்கொள்வார்கள். கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
பதில் அளிக்க நேர்ந்த தாமதத்திற்கு மன்னிக்கவும்.
தாங்கள் பதிவை ரசித்துப் படித்து தந்த கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி. இதையும் சிகப்பு பூசணி என்று சொல்வோமே... சென்னையில்தான் பறங்கிக்காய் என்றுச் சொல்லி அப்படியே பழக்கமாயிற்று. வெண்பூசணியை நம் திருநெல்வேலி பக்கம் தடியங்காய் எனச் சொல்வோம்.
ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பெயர்.
பறங்கியில் அல்வாவும் செய்யலாம். அதிகம் இனிப்பு இழுக்காது. அதற்கு காயும் சற்று இனிப்பாக அமைய வேண்டும். பெரிதாக இருக்கும் இந்த (இதை மஞ்சள் பூசணி என்றும் சொல்வோம்.) வெட்டி பத்தையாக தருவார்கள். சென்னையிலிருக்கும் போது வாங்கியிருக்கிறோம். இரண்டு பத்தை வாங்கினால். கூட்டுக்கு சரியாக இருக்கும்.மீதியிருந்தால் மறுநாள் சாம்பாரிலும் போடலாம்.
/இந்தப் பறங்கிக்காயைத்தானே அப்படியே விட்டுவைத்து, உள்ளே உள்ளவை காய்ந்த பிறகு, மேலே ஓட்டை போட்டு (அல்லது மூடி மாதிரி வெட்டி) உள்ளுள்ளதை எடுத்துவிட்டு, தண்ணீர் வைத்துக்கொள்ளும் பாத்திரமாக மாற்றிக்கொள்வார்கள். கேள்விப்பட்டிருக்கிறீர்களா/
இல்லையே.. இது வரை கேள்விப்பட்டதில்லை. இது தெரிந்திருந்தால் அந்த தண்ணீர் கஸ்டத்தில் ஒரு பாத்திரமாக அதையும் மாற்றியிருப்போமே..ஹா ஹா. தங்களின் அன்பான கருத்துக்களுக்கு மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அனைவருக்கும் அன்பான வணக்கம்
ReplyDeleteகாலையில் வந்து பதிவைப் பார்த்து அப்படியே எ. பிக்குச் சென்று அனைவருக்கும் ஒரு வணக்கம் வைத்து விட்டு சென்றவள்தான். இப்போதுதான் ஃபிரீயாகி வந்து கைப்பேசியை பார்க்கிறேன். பதிவுக்கு உடனே வந்து தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்த சகோதர, சகோதரிகளான உங்கள் அனைவருக்கும் என் இதயபூர்வமான நன்றிகள். இனிதான் உங்களனைவருக்கும், பதில், தந்து மற்ற பதிவுகளுக்கு சென்று கருத்திடவும் வேண்டும். கொஞ்சம் தாமதமாகும் எனத்தான் தோன்றுகிறது. இத்தனை நேர தாமதத்திற்கு அனைவரும் பொறுத்துக் கொள்ளவும். தங்கள் அனைவரின் அன்புக்கும் நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பறங்கிக்காயை பறித்து பட்டை எல்லாம் சீவி பொடி பொடியாய் நறுக்கி உப்பு காரம் பொட்டு ஒன்றாய் கூடி திங்கலாம் இங்கே ஓடி வாருங்கள்// என்ற பள்ளியில் சொல்லிகொடுத்த பாடல் நினவுக்கு வருகிறாது. துணைக் கதைகளுடன் பதிவு அருமை
ReplyDeleteநான் கிருஷ்ணதேவராயன் வித்தியாசமான சரித்திரக் கதை-ரா.கி.ரங்கராஜன்
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
என் தளத்திற்கு உங்களின் அன்பான முதல் வருகையும், கருத்துக்களும் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். நெட் பிரச்சனை காரணமாக உடன் பதிலளிக்காமைக்கு மன்னிக்கவும்.
பதிவை குறித்து சொன்ன கருத்துக்களுக்கும், பாராட்டிற்கும் என் மனம் நிறைந்த நன்றிகள். நானும் விரைவில் உங்கள் தளம் வந்து படிக்க வருகிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பூசணி மகாத்மியம் அருமை. பிஞ்சு பூசணி பால்கறியும்,பழப்பூசணியில் காரப் பிரட்டலும் செய்வோம். குருத்து இலை பொரியல்,பூ பஜ்ஜி செய்வோம்.
ReplyDeleteவணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
நெட் பிரச்சனை காரணமாக உடன் பதிலளிக்காமைக்கு மன்னிக்கவும்.
ஓ. நீங்களும் பால்கறி செய்வீர்களா? மேலே சகோதர சகோதரிகளும் இதையே குறிப்பிட்டுள்ளார்கள். காரக்கறியும் சகோதரி அதிரா சொல்லியுள்ளார்கள். நீங்கள் இலையிலும், பூவிலும் செய்திருக்கும் உணவு முறைகள் வியக்க வைக்கிறது. பாராட்டுக்கள். ஆக சிகப்பு பூசணிக்காய் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. அதன் முழுமையான பயன்களை நானும் இப்பதிவு வெளியிட்டதில் உங்கள் அனைவரின் மூலமாகவும் அறிந்து கொண்டேன். இப்பதிவை படித்து பாராட்டுக்கள் தந்தமைக்கும் தங்களின் ஊக்கமிகு கருத்துரைகளுக்கும் மிக்க நன்றிகள் சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கதைகளோடு மஞ்சள் பூசணி மகாத்மியத்தையும் அழகாக பகிர்ந்திருக்கிறீர்கள். படங்களும் பதிவும் அருமை.
ReplyDeleteவணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
நெட் பிரச்சனை காரணமாக உடன் பதிலளிக்காமைக்கு மன்னிக்கவும்.
உங்கள் பதிவுக்கும் விரைவில் வந்து படிக்கிறேன். இப்பதிவைப் படித்து நல்லதொரு கருத்துக்களும், பாராட்டும் தந்தமைக்கு என் மனம் நிறைந்த மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
gif மற்றும் வீடியோ மிக சிறப்பு மா ...
ReplyDeleteவிதுரர் கதை, இளையான்குடி மாற நாயனார்கள் கதை மிக அருமை
என்ன ஒரு பக்தி ..விதுரர் கதை சமீபத்தில் வாசித்தேன் ...
நாயனார் கதையில் கண்கள் பனிக்கும் அன்பு ..
இந்த பரங்கில அம்மா பண்ற புளி கூட்டும் , அத்தை பண்ற பொரியலும் ரொம்ப பிடிக்கும் ...
நீங்க சொன்னது எல்லாம் அரைச்சு விட்டு குழம்பா செய்வேன் ..
இந்த துவையல் ரொம்ப புதுசு ...
மிக அருமையான பதிவு மா ...வாழ்க நலம்
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
ஆமாம் சகோதரி,. இந்த கதைகளில் உள்ள ஆத்ம பூர்வமான அன்பு மெய்சிலிர்க்க வைக்க கூடியவை. பூசணியில் அனைவரும் விதவிதமாக செய்வதுதான். தங்கள் வீட்டில் செய்யும் புளிக் கூட்டும் பொரியலும் அற்புதமாகத்தான் இருக்கும். நானும் பொரியல் தேங்காய் துருவி சேர்த்து அடிக்கடி செய்வேன். என் பதிவிலும் செய்முறைகளைப் பார்த்து ரசித்தமைக்கு மிக்க மகிழ்வுடன் கூடிய நன்றிகள். சகோதரி. தங்கள் கருத்துக்கு தாமதமாக பதில் தருவதற்கு மன்னிக்கவும். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கமலாக்கா ஸாரி லேட்டு லேட்டு. இடையில் வலை வராததால் இப்பத்தான் பார்த்தேன் அக்கா என்ன பொட்டிருக்காங்க என்று.
ReplyDeleteகமலாக்கா எங்க வீட்டுல மஞ்ச பூஷணி வாங்கியாச்சுனா இப்படித் துவையல் கூட்டு என்றுதான் செய்வது. இதே போலத்தான். கூட்டும் துவையலும் பிசைந்து சாப்பிட ஆஹா ஆஹா அமிர்தம்.
அக்கா இந்தப் பூஷணி வைச்சு எரிசேரியும் கேரளத்து டைப் எரிசெரியும் செய்வதுண்டு. அப்புறம் பால் கூட்டும். நீங்களும் செஞ்சுருப்பீங்கதான்.
செம டெக்னிக் எல்லாம் பயன்படுத்தி போட்டிருக்கின்ங்களே அக்கா படங்கள் வீடியோ எல்லாம் சூப்பர் கமலா அக்காஅ.
கீதா
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
எதற்கு ஸாரி.. லேட் என்றெல்லாம் இல்லை சகோதரி. நீங்கள் வந்து ரசித்து கருத்துக்கள் இட்டது எனக்கு மிகவும் சந்தோஷமாகத்தான் உள்ளது. உங்கள் கணினி சில மாதங்களாக சரியாக செயல்படவில்லை என்பதும் நான் அறிந்ததே. ஆனாலும் உண்மையைச் சொல்கிறேன்.. மனதின் ஒரு ஓரம் உங்களை காணவில்லையே என உங்கள் வருகையை எதிர்பார்த்துக் கொண்டேயிருந்தது. தங்கள் கைவலி இப்போது பரவாயில்லையா? பூரண குணமாகி விட்டதா?
நீங்களும் இந்த முறையில் துவையல். கூட்டு எனச் செய்து ஆனந்தமாக ரசித்து சாப்பிட்டிருப்பதற்கு மகிழ்ச்சியடைகிறேன். பறங்கிக்காயின் ருசியே தனிதான். யார்தான் அதை விரும்பாதவர்.?
உங்கள் செய்முறைப்படி இந்த காயில், அந்த எரிசேரியும் ஒரு நாள் செய்து பார்க்கிறேன். கேரளத்து டைப் என்றால்? உங்கள் பதிவிலோ, எ. பி யிலோ ஒரு முறை செய்து காண்பியுங்கள். தெரிந்து கொள்கிறோம். இதுவரை அதுபோல நான் செய்ததில்லை. அருமையான தகவலுக்கு மிக்க நன்றி.
படங்கள் வீடியோ நன்றாக இருப்பதாக கூறி பாராட்டியமைக்கு நன்றி. எல்லாம் என் குழந்தைகள்தான் குரு. கைப்பேசியிலிருந்து அவர்கள் மூலமாக கற்று வருகிறேன். தங்கள் அன்பான கருத்துக்களுக்கு நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்
பாருங்க கமலாக்கா நீங்க என்னதான் அழகான கதைகள் சொல்லியிருந்தாலும் முதலில் கண்ணுல படுறது திங்க விஷயம்தான்..ஹா ஹா ஹா ஹா
ReplyDeleteஎங்க போனாலும் அதுவும் கோயில் போனா எங்கியாவது பிரசாதம் கொடுக்கறாங்களான்னுதான் கண்ணு அலை பாயும் ஹா ஹா ஹா ஹா நிஜம்மா அக்கா....அதென்னவோ தெரியலை கோயில் என்றால் பிரசாதத்திற்கு மனசு அலையும்...
கதைகள் ரெண்டுமே அருமை. முதல் கதை கேட்டிருக்கேன். இரண்டாவது கதை இப்பத்தான் அறிகிறேன் கமலாக்கா
நான் மஞ்சள் பூஷணி எல்லாம் தோலோடு சமைப்பது வழக்கம். உள்ளே உள்ள அந்த நார் போன்று இருக்குமே அதை துவையல் அரைத்துவிடுவது உண்டு..
கீதா
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
ஆமாம். உண்மைதான்..வயிறு நிரம்பினால்தான் உடலில் சக்தியே பிறக்கும். இது பிறப்பின் நியதிதானே.. இதை நம்முள் பிறப்பிலிருந்தே "அவன்" ஏற்படுத்திய பழக்கமுந்தானே..! பிறந்த குழந்தையும் பசிக்கு பால் அருந்தி விட்டால் அழுகையை நிறுத்தி விடும். அழற குழந்தை பால் குடிக்கும் என்ற பழமோழியே உண்டே..!
/அதென்னவோ தெரியலை கோயில் என்றால் பிரசாதத்திற்கு மனசு அலையும்.../
ஆமாம்.. கோவில்களில் பிரசாதம் தரும் போது "அவனுக்கு" முறையாக படைக்கப்பட்டதாலோ என்னவோ அந்த வாசனை நம் நாசிக்குள் சென்று சீக்கிரம் தரிசனத்தை முடித்துக் கொண்டு பிரசாத வரிசையில் நிற்க வைத்து விடும். இதுவும் "அவன்" உத்தரவு என நானும் நினைத்துக் கொள்ளுவேன்.
ஜீவாத்மாக்குள் இருக்கும் பரமாத்மாவின் கட்டளைப்படி நாம இயங்குகிறோம். அதனால்தான் கண்ணும் மனதும் எனக்கும் அலை பாயும். ஹா.ஹா.ஹா
கதைகள் இரண்டையும் படித்து ரசித்தமைக்கு நன்றி.
நீங்களும் தோலோடு மஞ்சள் பூசணியை சமைப்பது குறித்து மகிழ்ச்சி. கல்யாண வீட்டில் எல்லாம் சாம்பாருக்கு பூசணி வகைகளை தோலோடுதான் போடுவார்கள். நானும் அதனுள்ளிருக்கும் பகுதியை துவையல் செய்த நாள் முதலாய் ருசி கண்டு கொண்டேன். அதற்கு முன்பெல்லாம் தோல் நீக்கி. கெட்டியான காய் மட்டும் வைத்து பொரியல் கூட்டுக்கள் செய்து வந்தேன். இப்போது முழு பூசணியும் என்னிடம் படாதபாடு படுகிறது. ஹா. ஹா.ஹா. தங்கள் கருத்துக்களுக்கு நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அந்த கூட்டின் வாசனைக்கு, வானத்து தேவர்கள், (பொதுவாக வானத்தில்தான் தேவர்கள் உள்ளதாக எத்தனைப் படங்களில் தவறாது பார்த்திருக்கிறோம். :) ) //
ReplyDeleteஹா ஹா ஹா அக்கா படம் போல உங்களைச் சுற்றி தேவர்கள் பாடி ஆடினாங்களா?!!! பாரதிராஜா படம் போல என்றால் தேவதைகள் வந்திருப்பாங்க!! ஹா ஹா ஹா
கீதா
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
/ஹா ஹா ஹா அக்கா படம் போல உங்களைச் சுற்றி தேவர்கள் பாடி ஆடினாங்களா?!!! பாரதிராஜா படம் போல என்றால் தேவதைகள் வந்திருப்பாங்க!! ஹா ஹா ஹா/
ஹா.ஹா.ஹா. பதிவை எழுதி முடித்து வெளியிட்ட பின் கண்ணை மூடி படுத்தால் கனவில் வந்து விட்டு போகிறார்கள். (நான் பொதுவாக இரவு படுக்கும் முன்தான் எனது பதிவை வெளியிடுவேன்.) கூட சேர்ந்து ஆட அழைத்தால் ஆடி விட்டால் போகிறது.. இல்லையெனில் அவர்கள் ஆட்டத்தை மட்டும் ரசித்து விடலாம். பாரதி ராஜாவும் இப்படித்தான் கனவை நிஜமாக்கினாரோ என்னவோ..!ஹா.ஹா. தங்கள் ரசனையான அனைத்து கருத்துக்களுக்கு மிகவும் நன்றி கீதா ரெங்கன் சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.