Showing posts with label ஒருதலைகாதல். Show all posts
Showing posts with label ஒருதலைகாதல். Show all posts

Monday, October 27, 2014

நான் சொல்லாமல் விட்டது…!


அழகிய வானவில்லென நீ ஒளிர்ந்தால், --- நான்
ஓடும் மழைமேகங்களாகி, உனைச் சூழுவேன்…!

இனிய பாட்டென நீ பரிமளித்தால், --- உனைத்
தொடும் இசையாகி, உன்னுடன் சங்கமிப்பேன்…!

இதம் தென்றலென நீ நகர்ந்தால், --- நான்
பெரும் காற்றாகி, உனை அரவணைப்பேன்..!

புது மலரென நீ மணம் வீசினால், --- நான்
கரும் வண்டாகி, உனைச் சுற்றுவேன்…! 

வட்ட நிலவாகி நீ தண்ணொளி தந்தால், --- உனைத்
தேடும் விண்மீனாகி, வானில் சுடர்விடுவேன்…!

தளிர் கொடியென நீ நடை பயின்றால், --- நான்
படரும் மரமாகி, மண்ணில் வசித்திடுவேன்…! இப்படி

நகமும், சதையுமாய், தேனும், பாலுமாய்,
கண்ணும், இமையுமாய், உடலும், உயிருமாய்,
இன்னும், ஆயிரமாயிரம் உவமானங்கள், உன்னிடம்
இயலும் வரை அற்புதமாய் சொல்லி விட்டேன்…!
      
        “இவ்வளவு  இசைவாய்,
      மனதாலும், மடலாலும்,
    வார்த்தையாலும், வாதத்தாலும்,
    வலியுறுத்தியும், வறுப்புறுத்தியும்,”
      
      இனம்புரியா வேதனைகளுடன்
      இதயம் நொந்து நானிருக்க,
   இன்று நீ மட்டும் என் அருகில் இல்லை..!

இல்லத்தரசியாக நீ வேறொரு இல்லத்தில்..!
இதயத்தரசியாக நீ வேறொரு இதயத்தில்…! ---- காரணம்,
       
     
       இத்தனை இயம்பிய நான்,
இறுதியில் சொல்லாமல் விட்டது "இதுதான்…!"

  
"வாய்ப்பும் வசதியுமென, நீ வாழ்க்கையில் தினம் வளர்ந்திடவே,

                          நான்

வரும் நாளில் பெரும் செல்வத்தை, சேர்த்து தந்திடுவேன்…!"

இயற்கையையெல்லாம் உன்னுடன் ஒப்பிட்டு சேர்த்த --- நான்
இயல்பான செல்வத்தை என்னுடன் சேர்க்க தவறியதால்,
ஒராயிரம் ஆசைகளை என்னுள் வளர்த்தும்,
ஒருதலைக் காதல் ஆனது நம் உறவு…!

படங்கள் --- ௬குள்! நன்றி!