Sunday, March 17, 2019

மயிலாக நான் மாற வேண்டும்.


சென்ற வருடம் திருநெல்வேலிக்கு  போகும் போது அகஸ்தியர் அருவிக்கும் சென்றிருந்தோம். வரும் வழியில், பல இயற்கை காட்சிகள், அருமையாக இருந்தது. ஓரிடத்தில் காரை மெதுவாக ஓட்டி வரும் போது ( ஓட்டி வந்தது அண்ணா பையன்தான்.) நாங்கள் வந்த காருக்கு அருகில் தைரியமாக ஒரு மயில் வந்து நலம் விசாரித்தது.(நாங்களும் காருக்குள் இருந்ததினால் தைரியமாகத்தான் இருந்தோம்.) ஏதாவது சாப்பிட இருக்கிறதா?எனகேட்கும்  பாவத்தில், காரைச் சுற்றி வந்தது. கைவசம் கொண்டு போன நொறுக்குத்தீனிகள் பையை துழாவினோம். நாங்கள் இயற்கையை ரசித்த போதினில், கண்கள் இமை கொட்டாதிருந்த சமயம் பார்த்து, கையும், வாயும் மட்டும் நட்புறவாக பேசி வைத்த மாதிரி பையை காலி செய்திருந்ததை  கண்கள் அப்போதுதான் பார்த்து அதிர்ச்சியடைந்தது. "நல்லவேளை.!" ( அந்த மயிலுக்குத்தான்)  ஒரு அரை டஜன் முறுக்கு பாக்கெட் மட்டும் சற்று முறுக்கிக்கொண்டு  வாய், கைகள் நட்புறவில் சேராமல் "கா"விட்டு  ஓரத்தில்  ஒளிந்திருக்க கண்டு கண்களுடன் சேர்ந்து மனதும் நிம்மதியடைந்தது.

இவர்கள் ஒன்றும் தராமல் நம்மை வேடிக்கை பார்க்கும் ஜீவன்கள் போலிருக்கிறது என்ற எண்ணத்தில் எங்களை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்து விட்டு "ஒருமையில்" வந்த "அம்மயில்" நகரும் முன் நாங்கள் அந்த  முறுக்கை கார் ஜன்னல் கதவை திறந்து வெளியில்  போட சற்று அவநம்பிக்கையுடன் திரும்பிய மயில் அட,.! முறுக்கா...!  இதைக் கொடுக்கத்தான் இவர்களுக்கு இத்தனை முறுக்கா ? என்று இளப்பமாக ஒருதடவை பார்த்து விட்டு சாப்பிட ஆரம்பித்தது.

அப்போது எடுத்த படங்கள்தான் இவை.


நலமா? என விசாரிக்க வந்த மயில்.


உங்களிடம் சாப்பிட ஏதாவது இருக்குமாப்பா ...?


அட.! உங்களைத்தான் கேட்கிறேன்.. உங்கள் இதய கதவை... வேண்டாம்.. கார் ஜன்னல் கதவை திறக்க கூட மனமில்லையா உங்களுக்கு?


அட. .! போங்கப்பா.. நீங்களும் உங்க உபசாரமும்.. ஏதோ தேடு தேடென்று தேடுகிறீர்களே ஒழிய ஒன்றும் கை நீட்டி வெளியில் வர மாட்டேங்குது..


நானும் எவ்வளவு நேரந்தான் பொறுமையாயிருப்பது? சரிப்பா.. வரட்டா..! வேறே ஏதாவது வண்டி வந்தா அவங்ககிட்ட கேட்டுக்கிறேன்.. அடேடே.! கிளம்புற நேரத்திலே கார் ஜன்னல் கதவு லேசாக திறக்குதே.!


ஒரு மட்டும் ஒரு முறுக்கை ரொம்பவும் முறுக்கிக்காமே எப்படியோ போட்டுட்டாங்கப்பா.. சரி.. சாப்பிட்டு பார்க்கலாம்.


இதைக்கடிக்க கூட முடியலயே.! இதை எங்கேயிருந்து வாங்கிட்டு வந்தாங்களோ.! இதையா இந்த மனுசங்க இவ்வளவு நேரம் தின்னுகிட்டு வந்தாங்க... சுத்தமா ரசனையில்லாத மனுசங்கப்பா...


இது முறுக்கு தானா? வேறு ஏதாவது தந்து நம்மை கடத்தி, கிடத்தி காரிலேயே கொண்டு போயிடுவாங்களா.. ?


இந்தப் பக்கம் வேற நிறைய போட்டிருக்காங்களா? இதைப் பாக்கவேயில்லையே.. .!


இதுவாச்சும் நல்லாயிருக்குமா . ? கொஞ்சம் டவுட்டு வருகிறது. அதான் கேட்கிறேன்...


இல்லை.. அந்தப் பக்கம் ஒன்னு இருக்கே.. அதை சாப்பிடலாமா?


அட...! இங்கேயும் அதே வஸ்துதான் போடறீங்களா? இது எப்படியிருக்குமோ?


என்னவோ.. போங்க.! சுத்தி, சுத்தி வந்ததுக்கு ஒரே "கைசுத்தல்" முறுக்கா போட்டுட்டு கிளம்புறீங்க! இது எங்கிட்டே வரும் போது எத்தனை "கைசுத்தி" வந்திருக்கோ .! சரி.. சரி... நிதானமா சாப்பிட்டுகிறேன். போயிட்டு வாங்க.. ஆனா.. அடுத்த தடவை இந்த முறுக்கை மட்டும் கொண்டு வந்துராதீங்க...! என்ன இருந்தாலும் உணவை கொடுத்ததுக்கு நன்றி.. .! உங்களுக்கும் மட்டுமில்லை.. நம்மையெல்லாம் படைத்தவனுக்குந்தான்..!

இத்தனை மயில் படங்களை பார்த்து ரசித்தவர்களுக்கு போனஸாக இந்த வீடியோ..

எத்தனை அழகாக பறக்கிறது இந்த ண் யில்...



"மயிலாக நான் மாற வேண்டும்.  வள்ளி மணவாளன் என் தோளில் இளைப்பாற வேண்டும்." என அருமையாக பாடியுள்ள சீர்காழியின் கம்பீரமான வெங்கல குரலுடைய பாடல்  நினைவுக்கு வருகிறது.

இதோ.. போனஸுக்கு ஒரு போனஸாக இந்தப் பாடலும்..... இதையும் கேட்டு ரசிக்க வேண்டுகிறேன். 


இந்த வீடியோக்கு மட்டும்... கூகுளுக்கு  நன்றி....

என் பதிவையும், நான் எடுத்த மயிலாரின் படங்களையும். நான் பதித்த வீடியோவையும்,  கூகுளிடமிருந்த பெற்ற சீர்காழியின் பாடல் வீடியோவையும் ரசித்த அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.

39 comments:

  1. ஆஆஆஆவ்வ்வ். மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊஊ:)))... மயிலாக மாறிக்... இம்முறை லேட்டாத்தான் வருவேன்ன்ன்ன்:)..

    ReplyDelete
    Replies
    1. அடடே... மயில் அதிரா நள்ளிரவிலேயே (நம்கணக்கில்) வந்து சென்று விட்டாரா?

      Delete
    2. வணக்கம் அதிரா சகோதரி

      தாங்கள் முதலில் வருகை தந்தமைக்கும் தந்த கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      வாங்க.. வாங்க. நிதானமாக வாங்க அவசரமில்லை.
      அதான் மயில் ஒடி விடாமல் முறுக்கைப் போட்டு பிடித்திழுத்து வைத்திருக்கிறேனே. ! ஓ.. தாங்களும் மயிலாக மாறி வரப்போகிறீர்களா? ஹா. ஹா. எப்போது வந்தாலும் "நானும் இங்குதான் இருப்பேன்" என்கிறது மயில்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்

      Delete
    3. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /அடடே... மயில் அதிரா நள்ளிரவிலேயே (நம்கணக்கில்) வந்து சென்று விட்டாரா/

      ஆமாம்.. இரவோடிரவாக வந்து மயில் மாதிரி பறந்து சென்று விட்டார்... முறுக்கை சாப்பிடும் முதல் மயில் இவரை அண்ட விடவில்லை போலும். ஹா ஹா ஹா.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    4. கமலாக்கா இப்படி நைட்டுக்கா போட்ட தேம்ஸ்லருந்து வந்து குதிச்சுருவாங்க ஹா ஹா ஹா ஹா குதிச்சுட்டு மீ ஃபர்ஸ்டூஊஊஊஊஊனு வேற சொல்லிக்குவாங்க ஹா ஹா ஹா ஹா...

      கீதா

      Delete
    5. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /இப்படி நைட்டுக்கா போட்ட தேம்ஸ்லருந்து வந்து குதிச்சுருவாங்க ஹா ஹா ஹா ஹா குதிச்சுட்டு மீ ஃபர்ஸ்டூஊஊஊஊஊனு வேற சொல்லிக்குவாங்க ஹா ஹா ஹா ஹா/

      ஆமாம்.. அடிக்கடி குதிக்க வசதியாக இருக்குமென்பதால்,சகோதரி அதிரா அவர்கள் எந்நேரமும் தேம்ஸிலேயே இருப்பார்களளோ? ஹா ஹா ஹா ஹா. மற்றொன்று.. நம் நைட் அவர்களுக்கு பகல் இல்லையா? நானே சிலசமயம் நைட்டில் பகலை கொண்டு வருகிறேன். (பகல் பொழுது நேரப்பற்றாக்குறை காரணமாக) ஆனால் இந்த மாதிரி நைட்டும் சரி, பகலும் சரி என்னால் எங்குமே ஃபர்ஸ்டூஊஊஊஊஊனு குதிக்க முடியவில்லையே.! ஏனென்றால், நானெல்லாம் உண்மையிலேயே ஸ்வீட் பதினாறை "பதினாறு வயது மயில்" காலத்தில் கடந்து வந்து விட்டேன். ஹா. ஹா. ஹா. அவர்கள் இன்னமும் "மயில்" பருவத்தை தக்க வைத்துக்கொண்டிருப்பதால், மயில் பதிவுக்கு அதன் வேகத்தில் வந்து குதித்து விட்டார்கள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    6. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /ஹா ஹா ஹா சுவீட் 16 மயிலு:))/

      ஆமாம். ஆமாம். என்றும் இனிய பதினாறு வயது மார்கண்டேஸ்வரி... ஹா ஹா ஹா. இவ்வாறே என்றும் இளமை(மயில்)யுடன்" இருக்க பிரார்த்திக்கிறேன். நன்றி சகோதரி

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. குட்மார்னிங். மயில் படங்கள் ஜோர். அந்த வீடியோ எனக்கும் வந்தது!

    அட, மயில் முறுக்கெல்லாம் சாப்பிடுமா? பிடிக்காது என்று முறுக்கிக்கொண்டு போய்விடும் என்றல்லவா நினைத்தேன். எதுவும் தரா விட்டால் மண்டையில் நொட்டென்று ஒன்று அலகால் போடுமோ!

    ,ஆயில்களுக்குக் கொடுக்கபப்ட்டிருக்கும் வரிகளையும் ரசித்தேன்கா...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

      தாங்களும் அந்த வீடியோவை முதலிலேயே பார்த்து விட்டீர்களா? மகிழ்ச்சி..

      அது என்ன சாப்பிடும் என்று தெரியாத பட்சத்தில், வேறு எதுவும் எங்களிடம் இல்லாத நேரத்தில், இருக்கும் முறுக்கைத்தான் கொடுத்தோம்.

      /எதுவும் தரா விட்டால் மண்டையில் நொட்டென்று ஒன்று அலகால் போடுமோ/

      அந்த பயத்தில்தான் நாங்கள் கீழே இறங்கவேயில்லை. எங்களுடன் குழந்தைகள் வேறு ! அவர்களை வைத்துக் கொண்டு எப்படி இறங்குவது.? வேறு வழியின்றி முறுக்கிக்காமல் கார் கிளம்பிய பிறகு சாப்பிட்டிருக்கும் என நினைக்கிறேன். ஹா ஹா ஹா.

      ரசித்ததற்கும், பாராட்டியமைக்கும் நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. சீர்காழி பாடல் எனக்கும் மிகவும் பிடிக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்களுக்கும், சீர்காழியின் பாடல்கள் பிடித்தமானதா? மிக்க மகிழ்ச்சி.

      எனக்கு சீர்காழி அவர்களின் பக்திப் பாடல்கள் அனைத்தும் மிகவும் பிடிக்கும். மனதோடு, நினைவுகளோடு தங்கி இருப்பவை..சில பாடல்கள் அவர் பாடும் போது கண்களில் நீரை வரவழைக்கும்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. மயில் அழகாக இருக்கிறது கமலாக்கா...எவ்வளவு வேண்டுமானாலும் பார்த்த்துக் கொண்டே இருக்கலாம்...அத்தனை அழகு. ஆடுவதும் கண்டிருக்கிறேன் கொள்ளை அழகு...

    மயில் முறுக்கை எப்படித் தின்றது? கஷ்டப்பட்டிருக்குமோ? யாராவது நம் வீட்டில் எல்லாம் வயதானவங்களுக்குப் பொடித்துக் கொடுப்போமே அப்படிப் பொடிச்சுக் கொடுக்கணுமோ அதுக்கு?!!! ஹா ஹா ஹா ஹா

    படங்களும் அதுக்கான உங்கள் கேப்ஷன்ஸும் சூப்பர் அக்கா ரசித்தோம்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      மயில் எப்போதுமே மிக அழகுதான்.. அது தோகை விரித்து ஆடுவது பார்க்க மிகவும் அழகாக இருக்கும். நானும் பார்த்திருக்கிறேன்.

      /யாராவது நம் வீட்டில் எல்லாம் வயதானவங்களுக்குப் பொடித்துக் கொடுப்போமே அப்படிப் பொடிச்சுக் கொடுக்கணுமோ அதுக்கு?!!! ஹா ஹா ஹா ஹா/

      உண்மையிலேயே அப்படி பொடித்து சாப்பிடுவது டேஸ்டாக இருக்கும். அந்த காலத்தில், கோகுலாஷ்டமி பட்சணங்களை எங்கள் பாட்டி அம்மியில் பொடித்து சாப்பிடும் போது, (நான் வேண்டியதை பல்லால் அரைத்து சாப்பிட்ட பின்பும்) அதற்கும் போய் நிற்பேன். தங்கள் கருத்து அந்த பொடி செய்த பட்சணங்களை இன்று நினைவுபடுத்தியது. மயிலுக்கு பல் உண்டோ? அப்படி செய்து போட உபகரணங்களுக்கு எங்கே போவது? கார் டயரை முறுக்கின் மேல் ஒட்டித்தான் செய்ய வேண்டியிருந்திருக்கும். ஹா ஹா ஹா.. அப்படியே பொடி செய்து போட்டிருந்தாலும், அலகால் கொத்தி,கொத்தி அங்குமிங்குமாக இரைக்குமோ என்னவோ?

      படங்களையும், வாசகங்களையும் ரசித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றிகள். தங்கள் ஊக்க மிகு கருத்துரைகளுக்கு மகிழ்ச்சி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. எனக்கும் வாட்சப்பில் வந்தது மயில் பறக்கும் காணொளி..

    என்ன அழகு இல்லையா.

    அப்புறம் இப்பாடல் மிகவும் பிடித்த பாடல் அதுவும் சீர்காழியின் குரல் மிகவும் பிடிக்கும் தமிழ் உச்சரிப்பும்....

    அருமையான பாடல் மீண்டும் கேட்க முடிந்தது மிக்க நன்றி கமலா அக்கா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தாங்களும் முன்னரே இந்த மயில் வீடியோ கண்டு ரசித்து இருக்கிறீர்களா? மகிழ்ச்சி. அந்த மயில் எவ்வளவு அழகாக இருக்கிறது.. அதனால்தான் பகிர்ந்தேன்.

      சீர்காழி அவர்களின் பக்திப் பாடல்கள் தெவிட்டாத தெள்ளமுதம் போன்றவை. அவரின் அழுத்தமான தெளிவான தமிழ் உச்சரிப்பும், பாடல்களை ரசிப்பதற்கு ஒரு காரணம். மீண்டும் அருமையான இந்தப் பாடலை கேட்டு ரசித்தமைக்கும் நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. மயிலுக்கு முறுக்கு கொடுத்தமைக்கும் அது உங்களுக்கு நன்றி சொல்லிய விதமும் மிக அருமை.
    படங்களுக்கு பொருத்தமாய் வசனங்கள் நன்றாக எழுத வருகிரது உங்களுக்கு.
    காணொளிகள் பார்த்து கேட்டு மகிழ்ந்தேன்.
    பாட்டு மிகவும் பிடித்த பாடல்.
    நானும் தென்காசி போகும் தூரத்தில் வயலில் இருந்த மயில்களை படம் எடுத்து இருக்கிறேன்.
    அருமையான பதிவு.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /நானும் தென்காசி போகும் தூரத்தில் வயலில் இருந்த மயில்களை படம் எடுத்து இருக்கிறேன்/

      அப்படியா சகோதரி.! விரைவில் தாங்கள் எடுத்தப் படங்களையும் பகிருங்கள் பார்த்து ரசிக்கலாம். மயில்கள், மட்டுமல்ல.. பறவைகளின் படங்களே பார்த்து ரசிப்பதற்கு நன்றாக இருக்கும். இறைவனின் படைப்பில் பறவைகள் யாவும் மிகுந்த அழகுதான் இல்லையா?

      என் பதிவை ரசித்தமைக்கும், பாராட்டியமைக்கும், காணொளிகள் கண்டு, கேட்டு மகிழ்ந்தமைக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள். சீர்காழி அவர்களின் பாடல் தங்களுக்கும் பிடித்தமானது என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி. தங்களின் ஊக்கமிகு கருத்துரைகள் எனக்கு மகிழ்வை தருகிறது. அருமையான பதிவு என கூறியமைக்கு மிக்க நன்றிகன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. மயில் படங்கள் எல்லாம் மிக அழகு.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      என்னிடம் உள்ள கைபேசியில் தான் படங்களை எடுத்தேன். மயில் படங்கள் எல்லாம் மிகவும் அழகாக உள்ளதென பாராட்டியமைக்கு மிக்க நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. மயிலுடன் பேசிய பாவங்கள் ரசிக்க வைத்தது சகோ.

    காணொளிகள் அருமை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      மயில் பதிவை ரசித்தமைக்கும், காணொளிகளை கண்டு பாராட்டியமைக்கும் மிக்க நன்றி சகோ.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. ஒரு வாரமாக அந்த மயில்வீடியோ சுற்றுகிறது.சீர்காழி பாட்டைப் பின்னர் தான் கேட்கணும். அருமையான பதிவு. ஆனால் இயற்கையாகக் காடுகளில் வளரும் மயில்களுக்குக் கூடியவரை நம் உணவுப் பழக்கத்தைக் கொடுக்க வேண்டாமோ என்பது என் கருத்து! இது நம் முன்னோர் முதல் எல்லா விலங்குகளுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். தவறாகச் சொல்லி இருந்தால் மன்னிக்கவும். உங்கள் கற்பனைக்கேற்ற தலைப்புகளைக் கொடுத்து அசத்தி விட்டீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆமாம். எனக்கும் இப்போதுதான் இந்த வீடியோ வந்தது. ஆனால் நான் எப்போதோ எடுத்து வைத்த மயில் படங்களை பகிரலாம் என எண்ணும் போது இதுவும் நினைவுக்கு வந்தது. எல்லோரும் பார்த்திருப்பார்களே எனவும் நினைத்தேன்.

      அந்த மயில் நாங்கள் செல்லும் வழியில் காரைச் சுற்றி வந்ததை பார்த்துதான் முதலில் பிஸ்கட் போட்டோம். அது கைவசம் குறைவாக இருந்ததால் இந்த முறுக்கை கொடுத்தோம். மற்றபடி அது அனைத்தையும் சாப்பிட்டதா, இல்லையா என்பது எங்களுக்கு தெரியாது.நாங்கள் கிளம்பின பிற்பாடு அனைத்தையும் அது தவிர்த்திருக்கலாம். நான் எடுத்த படங்களுக்கு தகுந்த மாதிரி கற்பனையை தட்டி விட்டேன். அவ்வளவுதான்..! மற்றபடி உங்கள் கருத்தை சொன்னதற்கு எதற்காக மன்னிப்பு...அதெல்லாம் தேவையேயில்லை.

      பதிவை ரசித்தமைக்கும், பாராட்டியமைக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. மயிலின் காட்சிகள் வெகு அழகு ...

    அதைவிட மயிலின் அழகை விவரித்த மங்கையின் மொழிகள் மிக மிக அழகு ...


    புன்னகையுடன் வாசித்தேன் மா...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      மயிலின் படங்களை ரசித்துப் பார்த்தமைக்கும், வாசகங்களை விரும்பி படித்தமைக்கும் என்மனம் நிறைந்த நன்றிகள்.

      தங்கள் உற்சாகமூட்டும் கருத்துரைகள் இன்னமும் நிறைய எழுத வேண்டுமென்ற ஆவலை தூண்டுகிறது. தங்களின் அன்பான ஊக்கமிகும் கருத்துக்களுக்கு மிகவும் நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. மயில் எப்போதுமே அழகு. கொஞ்சம் முறுக்கைப் பொடித்துப் போட்டு இருக்கலாமோ.
    நீங்கள் கொடுத்திருக்கும் தலைப்புகள் தான் வசீகரிக்கின்றன.

    நன்றி கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      ஆமாம் சகோதரி. மயில் எப்போதுமே அழகான பறவை..நாங்கள் குழந்தைகளுடன் பயணித்தால், கொண்டு சென்ற பிஸ்கெட் எல்லாம் காலியாகி விட்டது. கைவசமிருந்த கொஞ்சம் பிஸ்கட் போட்டதும் அது தன் அலகால் கொத்தி கொத்தி கிளறி விட்டு மறுபடியும் காரை எடுக்க விடாமல் எங்களையே சுற்றி வந்ததினால் அந்த முறுக்கையும் உடைத்துதான் கொடுத்தோம். பொடித்துப் போட வசதி ஏதும் இல்லையே! ஆனால் அது முழுதாக போட்டதையெல்லாம் உண்டதா என்பதை அறியோம்.....!

      படங்களை ரசித்தமைக்கும் அதற்கேற்ற வரிகளை படித்து ரசித்து பாராட்டியமைக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள் சகோதரி. தங்கள் அன்பான வருகை என்னை மிகவும் சந்தோஷமடையச் செய்கிறது.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. அழகு மயிலும்
    அருமையான கருத்தும்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      நலமா? தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
      நீண்ட நாட்கள் கழித்து, தாங்கள் என வலைத்தளம் வந்தது குறித்து மிகவும் பெருமகிழ்வடைகிறேன். தங்கள் கருத்துக்கும், பாராட்டிற்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  13. //(நாங்களும் காருக்குள் இருந்ததினால் தைரியமாகத்தான் இருந்தோம்.) /

    ஆவ்வ்வ் மயிலை எதிர்த்த மகாராணி. எனும் பட்டம் கமலாக்காவுக்கு அளிக்கப்படுகிறது.. காருக்குள் வச்சுத்தான்:)..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /ஆவ்வ்வ் மயிலை எதிர்த்த மகாராணி. எனும் பட்டம் கமலாக்காவுக்கு அளிக்கப்படுகிறது.. காருக்குள் வச்சுத்தான்:)../

      ஆஹா.. மற்றொரு பட்டமா? நன்றி..நன்றி. அந்த காலத்திலிருந்து நாமெல்லாம் புலியை (நிஜப்புலி.. புளி அல்ல...) முறத்தால் அடித்து விரட்டிய வீர பெண்களின் வம்சாவளிகளாயாயிற்றே.. இந்த மயிலைக்கண்டு நானெல்லாம் பயப்படுவேனா? ஆனாலும் ஒரு தற்காப்பு கவசம் தான் கார்... (ஏனென்றால் அந்த முறம் கூட அப்போது என் கைவசமில்லை). ஹா ஹா ஹா ஹா. தங்கள் கருத்துகளுக்கு நன்றி சகோதரி..

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  14. முறுக்குக் குடுத்ததால் மயில் முறுக்குக் கம்பிபோல நீஈஈஈஈஈளமாக இருக்கிறாஅர்ர்:)).. நீங்க தொசை அப்பம் குடுத்திருந்தால் குண்டராக இருந்திருப்பார்போலும்.. இருப்பினும்.. முறுக்குச் சாப்பிட்டுவிட்டு முறுக்கிக்கொண்டு போஸ் குடுத்த அழகோ அழகு...

    நீங்களும் ஒரு ம்மயிலை வச்சு ஒம்பேது படமெடுத்து.. வீராங்களையுமாகிட்டீங்க:))

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சகோதரி

      தங்கள் வருகைக்கும்கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /முறுக்குக் குடுத்ததால் மயில் முறுக்குக் கம்பிபோல நீஈஈஈஈஈளமாக இருக்கிறாஅர்ர்:)).. நீங்க தொசை அப்பம் குடுத்திருந்தால் குண்டராக இருந்திருப்பார்போலும்.. இருப்பினும்.. முறுக்குச் சாப்பிட்டுவிட்டு முறுக்கிக்கொண்டு போஸ் குடுத்த அழகோ அழகு/

      ஹா ஹா ஹா ஹா. ஆமாம் சற்றே நீளமான பெரிய மயில்தான். அதைப் பார்த்தும் கீழே இறங்க சற்று பயமாக இருந்தது. (அப்பாடா... நான் பயப்பட்டதற்கு ஒரு காரணம் சுலபமாக கிடைத்து விட்டது.) ஒரு வேளை அது ஒல்லியாக அழகாக இருக்க ஆசைப்படும் மயிலோ என்னவோ? அது முறுக்கிக்கொண்டு போஸ் தந்திருக்கும் அழகை ரசித்து கருத்திட்டிருப்பதற்கு மிக மிக நன்றிகள்.

      நீங்களும் ஒரு ம்மயிலை வச்சு ஒம்பேது படமெடுத்து.. வீராங்களையுமாகிட்டீங்க:))

      ஹா ஹா ஹா. அப்படி ஒன்பது தடவை படமெடுத்த தால்தான் வீராங்கனை என்ற பட்டமும் தங்களால் எனக்கு கிடைத்துள்ளது. ஹா ஹா ஹா. அருமையான கருத்துகளுக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  15. மயில் வீடியோ நீங்க எடுத்ததோ? என்ன அழகாகப் பறக்கிறார் மயிலார்ர்... இப்படிப் பறக்குமென்பது எனக்குத் தெரியாது... அழகோ அழகு... வீடியோ எடுத்த கைகளுக்கு ஒரு வைரக் காப்புப் போடலாம் எனத் தேடினேன்ன்.. கையைக் காணம்:))... சரி போனாப்போகுதென என் லொகரில் வச்சிட்டேன்:)..

    சீர்காழி பாடல்.. கேட்டுக் கேட்டு ரசித்த அழகிய பாடல்....

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /மயில் வீடியோ நீங்க எடுத்ததோ? என்ன அழகாகப் பறக்கிறார் மயிலார்ர்... இப்படிப் பறக்குமென்பது எனக்குத் தெரியாது... அழகோ அழகு... வீடியோ எடுத்த கைகளுக்கு ஒரு வைரக் காப்புப் போடலாம் எனத் தேடினேன்ன்.. கையைக் காணம்:))... சரி போனாப்போகுதென என் லொகரில் வச்சிட்டேன்/

      நான் எடுத்தது இல்லை சகோதரி.! அதான் ஒரு வார காலமாக இந்த மயில் வீடியோ வாட்சப்பில் சுற்றுகிறது என கீதா சாம்பசிவம் சகோதரி மேலே கூறியுள்ளார்களே.! எனக்கும் அது வாட்சப் மூலமாக வந்ததுதான். என்ன அழகாக பறக்கிறது பார்த்தீர்களா? அந்த அழகுக்காகவே என் தளத்தில் அதை பதிந்தேன். மயில் பற்றிய பதிவுக்கும் பொருத்தமாக இருந்தது.

      வீடியோ எடுத்த கைகளுக்கு உரித்தான வைரக்காப்பை எனக்கு வேண்டுமானால் அனுப்பி வையுங்கள். (அது எனக்கே எனக்கல்ல.! நானும் அந்தக் கைகளை எப்படியாவது தேடி கைக்கு உரியவர்களுக்கே உரிமையாக்கி விடுகிறேன். ஏனென்றால் தங்கள் லாக்கருக்கு ஏற்படும் இந்த மாதிரி பிறருக்கு கொடுக்க வேண்டியவற்றால் நிறைந்து நிரம்பி வழியும் அவஸ்த்தைகளை சற்று குறைக்கலாம் என்பதால்தான்.)..ஹா.ஹா.ஹா.

      சீர்காழி பாடல் தங்களுக்கும் விருப்பமானதா ? மிகவும் சந்தோஷம். அந்தப் பாடலை கேட்டமைக்கும் நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  16. அழகான மயில்கள்...

    தற்போது திருவரங்க வீட்டின் அருகே நிறைய மயில்கள் வருகின்றன. முன்பு தில்லியில் நிறைய மயில்கள் வந்ததுண்டு. கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய்க் கொண்டிருக்கிறது தில்லி மயில்கள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆமாம்.. திருவரங்கத்தில் தங்கள் வீட்டருகே வந்த மயில்களை படமெடுத்து பதிவாக தாங்கள் போட்டு படித்ததும் நினைவுக்கு வருகிறது.அப்படியா? தில்லியிலும் மயில்களின் நடமாட்டம் குறைவது வருந்த வேண்டிய விஷயந்தான்.! நல்லதொரு கருத்துக்கள் தந்தமைக்கு நன்றிகள் சகோதரரே..

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete