Showing posts with label இந்தக்காலம். Show all posts
Showing posts with label இந்தக்காலம். Show all posts

Sunday, April 6, 2014

காலம் மாறிப் போச்சு…..



கடல் போன்ற வீடு!... அதில்
கணக்கற்ற  நிறைய மனிதர்கள்!...
சுற்றங்களும்,  சுகங்களுமாக,
சுமைதாங்கும், உறவுகள்!....
அன்பும் , அரவணைப்புமாக ,
அரண் போன்ற மனங்கள்!...
தவழும் பேரன்களோடு, சேர்ந்து ,
தளர்வின்றி,தவழ்ந்தாடும் தாத்தாக்கள்!...
பாட்டும், கதையுமாக, பேத்திகளை,
பாசத்துடன் பக்குவமாக்கும் ,பாட்டிகள்!...
விடியலில்  உதிக்கும் விறகடுப்பு,
வீதி அசந்து உறங்கும் வரை,
அனல்  கக்கும்  அதிசயம்,
அண்டை அசலெங்கும் தொடரும்!...
உணவுகளுக்கும், பஞ்சமில்லை!...
உடைகளுக்கும். வஞ்சமில்லை!....
உறவுகளின், உணர்வுகளும்,
உரிமைகளும் , என்றுமே, சிதைந்ததில்லை!....
நான், நீ, என்ற பேதமில்லை1….
நாணயம் தவறிய பேச்சுக்களுமில்லை!...
மதிப்பும் , மரியாதையும் குறைந்ததில்லை!...
மற்ற சண்டைகள் என்றும் வந்ததில்லை!...
       னால் , இது அந்தக்காலம்!....
இன்று கடல்கள், கணிசமாக வற்றி,
கரையோரங்கள்,கவனிப்பின்றி,
கடுகாய் சின்னதாகி விட்டது!...
அடுப்பும், மரித்து விட்டது!...மக்களின்,
உடுப்பும், மாறி விட்டது!... மனிதனின்,
சுயநலமெனும், போர்வைக்குள்,
சுற்றங்களின், சுகங்களும்,
சுமைகளும், சிறிதளவும் சிரமின்றி,
சுகமாக சுருண்டோடி கொண்டு விட்டன!...
௯டி வாழ்ந்தால் கோடி நன்மையென,
௯டி வாழ்ந்த குடும்பங்கள்,இன்று,
நான் , நீ , என்று  நாலும் ௯றிக்கொண்டு,
நான்காய்  பிரிந்ததில், நன்றாயிருந்த
நாகரீகங்கள் , மாறி விட்டதால்,
நலம் குலைந்த ந(ரக)கரமாயிற்று!...
        ன்  வாழ்வில் இப்படி மாறிய காலம்!,,,
உன் காலத்தில் எப்படி மாறுமோ?...என்று
புலம்பிக்கொண்டிருந்த என் பாட்டியின்,
புலம்பல்கள் இன்றும், இன்னாளிலும்,
காதருகே, கால் கடுக்க நின்றபடி
காதுகளில் ஓதியபடிதான் இருக்கின்றது!!!...
கடல் கடந்து சென்று வாழ்வதுதான், தன்
கருமமென, ௯றி காரியத்தை சாதித்தான் ஒரு பிள்ளை!.....
காசிருந்தும், கார்கள் பலவிருந்தும், என்
கால் வைக்க இடமில்லை, என்றான் மற்றொருவன்!......
இல்லத்தில்  இணைந்திருந்து பழகு!....என்
இல்லத்தில் பிறகு சேர்த்துக்கொள்கிறேன் என்றான் ஒரு பிள்ளை!....
சிறிய  பிரச்சனை எனக்கு, அது தீர்ந்து முடிந்ததும்
சில காலத்துக்குள் நீ என்னுடன் … என்றான் இன்னொருவன்!.....
இயந்திரமயமான இக்காலத்தில்,
இளமை விரட்டிய, எங்களுக்கு , இவ்
இல்லம் என்ற ஒன்றிடமில்லாதிருந்தால்,
இன்னல்களுடன் இணைந்திருப்போம்!......              
நான்கு பிள்ளைகள் பிறந்திருந்தும் ,
நான்கும்  நாலுவிதமாய் போனதில் , இன்று
முகமறியா ,உறவுகளுடன்  வாழ்க்கை,
முதுமையுடன் முறியாமல் தொடர்கின்றது!.....
உன் சோகத்தை சுமக்க , பாட்டி!...அன்று
உன் பேத்தி நானிருந்தேன்!....
என்  வார்த்தை உரைக்க வகையாய், இன்று
என்பேத்தி என்னிடமில்லையே!.....
இந்த இல்லத்தின் உறவுகளுக்கும் இன்று
இதே நிலமைதான்!...இந்நிலை மாறுமா?
கடல் போன்ற  வீடு!....அதன்
காலம் மாறிப் போச்சு!...என்று பாட்டி, நீ
கடவுளிடம்  புலம்புவது இன்றும் என்
காதுகளில்  ஒலிக்கிறது!………ஆம்!
      காலம் மாறித்தான் போச்சு!.....

Tuesday, March 18, 2014

நீ ஒரு கணினிப்பெண்….



நிலா   நிலை குலைந்து ,நின்றது!
இந்நிலமாது   என்னொளியை, எங்கணம்?
தன்னொளியாய் தக்க வைத்து கொண்டாளென்று!!!!
நீள்வீச்சு கதிரவன், தன் நிம்மதியை,
நீண்ட பெருமூச்சொன்றில், தொலைத்தது.
தன் அந்திச் செம்மை எவ்வாறு?
தன்  நிலை  சிறிதும்  மாறாது,
தன்னிடம் எதுவும் கேளாது ,
தன்னை தவிக்க வைத்து விட்டு, இந்த
தளிர் மேனியிடம் அடகாய் போனதென்று!!!!
வானம் வியந்து போனது! தான்
வாரியிறைக்கும் வண்ண நிறங்களை,
வார்த்தைகளில்  அடங்காத, தன்
வர்ண ஜாலங்களை, வெகு விரைவில் , இவ்
வஞ்சிக்கொடி தன்வசப்படுத்தி கொண்டாளென்று!!!!
நட்சத்திரங்கள்  சற்றே நாணி கோணியது1
நானறியா  பொழுதினிலே, நகருமென்னை
நங்கை இவள்  சிறிதும் நலுங்காமல்,
காலங்காலமாய் கண் சிமிட்டி,மானிடரை
கவர்ந்திழுக்கும்  தன் ஜொலிப்பை,
கண்ணிமைக்கும் நேரத்தில், சிறிது
கண்ணயர்ந்த  வேளையிலே,
கவர்ந்து கொண்டது எப்படியென்று!!!!
 பெண்ணே ! இப்படி இயற்க்கையோடிணைத்து,
இயன்ற வரை உனை இகழாமல், இன்னும்
பூக்களுடனும் இணைத்து பாக்களாய்,
புகழ வைத்து, இறுமாப்புற செய்தும்,
புதுமைப்பெண்ணாய்,  நீ  புவனத்தில்,
புதுத்தோ் ஏறி புறப்பட இயலாமல்,
புதுமலராகவே, உதிர்ந்து நின்றது,
            அந்தக்காலம்!!!!
இன்று இமயம் தொட்ட குளிர்ச்சியில்,
இதயம் நிறைத்த மகிழ்ச்சியில்,
திக்கெட்டும் கொடி நாட்டி, வெற்றியுடன்,
திக் விஜயம் செய்து வருவது,
           இந்தக்காலம்!!!!
இன்  இயற்க்கை  எப்பொழுதும்,
இயற்க்கையாயிருக்கட்டும்!!!!
இயற்க்கையோடிணைக்கும் இனிய மதுவுக்கு,
வசப்படாத வண்டாக வளர்ந்து,
வானில் வட்டமிட்டு வருபவள்….. நீ…...
 படிப்பிலும், பணியிலும்,
பாரினில், சரிபாதியாக,
பரிமளித்து, பட்டங்கள் பல சுமந்து, புது
பரிதியாக பிரதிபலிப்பவள்……நீ…..
  கடமையையும், கருணையையும், இரு
கண்களாகக்  கருதி  வீட்டின்,
கண்மணி இவளென கருதும்,
கணிப்பை உருவாக்கியவள்…..நீ…..
துன்பங்களை, துச்சமாக்கி,
துயர்களை, துகள்களாக்கி,
தூரத்தள்ளி, வாழ்க்கையின்,
தூணாகி போனவள்……நீ…..
நாட்டுடன்,  நன்றாய் வீடும்,
நலங்கெடாது சிறப்பாய் வாழ,
நன்மைகள் பல புரிந்து, பாரதியின்,
நல்லதோர் வீணையானவள்…..நீ…….
காலத்தோடிணைந்த, கணணியில்,
காலம் நேரம்  பார்க்காமல், கவனமான
கருத்துடன்  காரியமாற்றி,
கணினிப்பெண்ணாக உலாவருபவள்……..நீ……
இனி இவ்வையத்தில்,வாழ்வாங்கு
வாழ்க நின் புகழ்,
வளர்க நின் பணி!.