புத்தாண்டில் புதுமைகள் பல புகுத்தும் புரட்சிகளை, என்னிடமிருந்து
புகுந்தே புறப்படும், பிரமானங்கள் பலவற்றை, பிரயாசையுடனும்
இறைவனின் துணையுடனும், எடுத்தாள மனம் விரும்பினாலும்,
இதுவொன்றையாவது, இறுதி வரை தக்கவைத்து கொள்ள அந்த
இறைவனின் திருவடியின் துணை வேண்டி பிரார்த்திக்கிறேன்.
தமிழில் நல்லதோர் அறிவைப்
பெற்றிடுவோம்…
தமிழின் தணியாத ஆர்வத்தை, ஊட்டிடுவோம்…
தமிழில் என்றும் இயற்றிடவே, கற்றிடுவோம்…
தமிழின் கொடுக்கும் ஈகையைப், பரப்பிடுவோம்…
தமிழில் உயர்ந்ததால் உலகத்தையும், அளந்திடுவோம்..
தமிழின் பழமைதனை ஊக்கமாய், செப்பிடுவோம்….
தமிழில் நம்முடைய எண்ணமதை, வடித்திடுவோம்…
.
தமிழின் நிரந்தர ஏற்றமதை, நிலைபெறச்செய்திடுவோம்…..
தமிழில் உண்டாகும் ஐயத்தை, களைந்திடுவோம்…
தமிழின் குல ஒற்றுமையை, பறைசாற்றிடுவோம்..
தமிழில் புகழ் ஓங்கியதால், பெருமை கொண்டிடுவோம்…
தமிழின் சிறப்பான ஔடதத்தால், பிணிகளைத் தீர்த்திடுவோம்….
தமிழில் இஃத்தொன்றால், செய்யும் செயல்களனைத்தும்
தமிழன்னைக்கு செய்யும் தலையாய
கடமையென்று,
தப்பாமல் தரணிக்கு தவறின்றி நாம் உணர்த்திடுவோம்.
படம் ..௬குள்....நன்றி...!
படம் ..௬குள்....நன்றி...!