Showing posts with label எதார்த்தம். Show all posts
Showing posts with label எதார்த்தம். Show all posts

Wednesday, March 12, 2014

பாசப்பிரிவு


ஈரைந்து   திங்கள்  கருவில்  சுமந்து...

ஈன்ற நாள்  முதலாய்  நெஞ்சில்  சுமந்து...

ஈட்டிய   பொருளனைத்தினையையும்.....

ஈட்டும்    பொழுதத்தனையையும்.......

எனக்காக  மட்டுமே  செலவழித்து......

என்மனம்  விரும்ப    குளிர்வித்து.....

என்    நலம்  சிறக்ககாத்துப்பேண.....

தன்  நலம்  சிறிதேனும்  பேணாமல்.....

தாலாட்டி ,எனைத்  தழுவி    சீராட்டி......

தளர்வின்றி ,   பிறர் மெச்சப் பாராட்ட.....

தயை   செய்த  தாயே! ......

பட்டங்கள்   பல  பெற்று......

பதவிக்கு   சில    கற்று.....

விரைவில்    வளர்ந்த   நான்.....

வாழ்க்கைத்     துணை   கைப்பற்றி.....

வசந்தம்   தேடிச்   செல்லும்  போது ,   உன்.....

விழிகளில்    கருணையையும்   கனிவையும்  கடந்து.....

வார்த்தைகள்  இல்லா  மெளனத்தில்  எழுந்த......

விழி கசிவை   விரல்  கொண்டு  மறைத்துஎன்.....

பிரிவின்   சோகத்தை உன்  சொந்தமாக்கிக்கொண்டு.....

பிறிதொரு   செயல்களில் கவனத்தை ஈர்த்து கொண்டு......

இதுதான்  கடமையென”  மனதை தேற்றி.....

இது போதுமென”   மன  நிறைவெய்தி,    அன்று....

நீ      பட்ட    பெரும்பாடு ,   இன்று......

நீர்  கோத்த    என்     விழிகளில்.......

நிரந்தரமானதுஏனெனில் ,    இப்பொழுது.....

உன்   இடத்தில்    நான்.....

என்  நிலையில்  என்  மகள்.....

காலங்கள்    மாறினாலும்  இந்த......

காட்சிகள்   மாறுவதில்லை,     இதில்.....

கவலை   கொள்ள  ஏதுமில்லை ,   என்றபோதும்.....

கனத்த  இதயம்  ஏற்க  மறுக்கின்றது.......

மங்கையராய்   பிறப்பதற்க்கே..........

மாதவம்   செய்திடல்    வேண்டுமென்றான்....

மங்கையரை   சிறப்பித்த    அந்த மகா கவிஆனால் ஏன்?.....

மங்கையருக்கு   மட்டுமிந்தமாபெரும்.....

மனம் மாற்றும்    மா பதவி?......

மட்டற்ற   பொறுமையுடன்  மங்கையர்  தம்.....

மனதை  மாற்றிக்  கொள்வதால்தான்............

மங்கையரை   சிறப்பித்தானோ? அந்த.....

மாசற்ற    மகா கவிபுரியவில்லை!......

காலங்காலமாய்  இது நடந்தாலும் ......

காலத்தை  வென்று  விட்ட அக்கவியிடம்.....

காரணமும்  கேட்க  இயலவில்லை.......

காரணம்  சொல்லி விளக்க  அந்தக்கவி, மறுபடி.....

காலத்தில்  பிறந்து  வருவான்  என....

கடவுளை  நம்பி   காத்திருப்போம்!