வணக்கம் அனைவருக்கும்
எல்லோரும் இப்போது வந்த புது படங்களை ரசிப்பார்கள். அதில் பாடல்கள் சிறப்பாக இருந்தால் அதை சிறப்பித்து கொண்டாடுவார்கள். இந்த படம் நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னால் வந்தது. ஆனால் நான் இப்போதுதான் பார்த்தேன். இதைப்போலவே அன்னமைய்யா படமும் நடிகர் நாகர்ஜூனா அவர்களின் உருக்கமான பக்திபரவச நடிப்யில் மிகவும் மனதை உருக்கும் வண்ணம் வெற்றிப்படமாக அமைந்தது. அதையும் முன்பே பலமுறை தெலுங்கிலும், தமிழிலும் பார்த்துள்ளேன். அதில் வந்த பாடல்களும் மிக பிரபலம். இதுவும் அப்படித்தான் என நினைக்கிறேன். இந்தப் பாடல் இந்தப் படத்தில் முதல் தடவையாக கேட்டதிலிருந்து பிரதி தினமும் கேட்கிறேன். நாகர்ஜூனா அவர்களின் பக்தி பரவசத்தை ஏற்படுத்தும் நடிப்பும், அனுஷ்கா அவர்களின் அழகு ததும்பும் அமைதியான நடிப்பும் இந்த படத்தையும் பல தடவை என்னை பார்க்க வைத்து விட்டது. மெய்சிலிர்க்க வைக்கும் குரலில் பாடும் சரத் சந்தோஷ் அவர்களுக்கும் ஜானகி ஐயர் அவர்களுக்கும் (தெலுங்கு படத்தில் ஜானகி ஐயருக்கு நிகராக பாடுவது பாடகி ஸ்ரீ நிதி அவர்கள்.) நன்றி. பாடலில் ஸ்ரீமன் நாராயணனை கண்ணெதிரில் நிற்க வைக்கும் இவர்களது (பாடகர்கள், நடிகர் நாகர்ஜூனா) திறமைகளுக்கு தலை தாழ்த்தி வணங்குகிறேன். இதில் ஸ்ரீபாலாஜியாக வருபவர் நாம் கண்ட இறுதியாக வந்த மகாபாரத தொடரில் ஸ்ரீ கிருஷ்ணராக வந்தவர். அப்படியே தெய்வீக களையுடன் இருக்கும் இவரைப் பார்க்கும் போது மனது நாராயணனின் மேல் வைத்திருக்கும் பக்தியோடு ஒன்றிணைந்து சாட்சாத் அந்த இறைவனை காண்பது போல் திருப்தி கொண்டு விடுகிறது. இவரது அருள் சுரக்கும் அந்த தெய்வீக நடிப்புக்கும் நன்றி 🙏.