செய்யும்
தொழிலே, சிறந்ததோர் தெய்வமென,
சிறப்பான
வழியினிலே, சீர்வகுத்த புலவரையே,
சிந்தைதனில்
நிறுத்தி வைத்து, சிறிதேனும் கற்றுணர்ந்து,
சீரான
வாழ்வதையே, சிலகாலமேனும் வாழுங்கள்.!!
ஆயக்கலைகள்
அறுபத்தி நான்கினிலே, எழுத்துக்கலையின்
அருமை
பெருமைகளை, நாளும் உயர்த்த எண்ணும்,
அருந்தவ
உடன்பிறப்புகளின், ஆதங்கம் ஏதுமறியாமல்,
அவர்களின்
படைப்புகளை, அநியாயமாய் உண்ணாதீர்கள்.!!
திருட்டென்ற
கொடுந்தொழில் செய்து பின்னர்,
திருந்தி
வாழ்ந்து, சென்ற திக்கெல்லாம் புகழடைந்து,
திருப்தியுடன்
இறைவனது திவ்யமலரடி தொழுது,
திரும்பவும்
பிறப்பெய்தாத, வரமுடன் சென்றடைந்தவருண்டு.!!!
அவரைப்போல்
நாங்களும், திருட்டென்ற பாபம் செய்து,
அகிலத்திலே
பெயரெடுத்து, புவனம் உள்ளளவும்,
அவனியிலே
பவனி வருவோமென கற்பனையில் களிக்காதீர்கள்.!!!
அவரும்,
நீங்களும், சத்தியமாய் எந்நாளும்,
அவனிதனில்
சரிநிகராய் ஆகவும் இயலாது.!!
அவர்
தான்சுமந்த பாபத்தை இறக்கிவைக்க அவதரித்தார்.!
அவரித்த
நாமனைவரும், அதைச்சுமக்கத்தான் பிறந்துள்ளோம்.!
முல்லைக்குத்தேர்
கொடுத்தோன், பறவைக்கு உயிர்தரவே
முயன்றவரை
உடல் கொடுத்தோன், கவி எழுதும்
முயற்சிக்கு
பொருள் கொடுத்தோன், பிறர் வளர்ச்சிக்கு,
முன்னின்று
தோள் கொடுத்தோன், இவர்களை படிப்பித்த
மூத்தோர்சொல்
வார்த்தைகளை, நினைவினின்றி நீங்கச்செய்து
முழுமையாக
முழுவீச்சில் மறந்துதான் போனீர்களோ.?
உயிர்
விடும் வேளையிலும், உடல் தொய்ந்த பொழுதினிலும், தன்
உதிரத்தால்
தான் உவந்து பெற்ற தர்மமெல்லாம், கேட்டவர்க்கு
உவகையுடன்
தானமளித்த கர்ணன் எனும் மாமன்னன்,
உலகில்
அழியாப் புகழோடு இன்றுவரை வாழுகின்றான்..!!
இன்னும்
இறந்தும் தானமளித்தார் சீதகாதி வள்ளளவர்.!
இங்கணம்
இடுக்கண் களைவோர், இப்புவியில் ஏராளம்.!
இவர்கள்
பிறந்த மண்ணில்தான், நாங்கள் பிறந்து வந்ததினால்,
இல்லையென்று
சொல்ல எங்கள் நாவும் மனமும் ௬சும்.!
இனிமேலாவது
திருடாமல், இணக்கமாய் வேண்டி பெற்றிடுங்கள்.!
இயன்றவரை
படைத்ததை பெருமையாய் தந்திடுவோம்..!
இத்தனையும்
விரிவாய் ஏன் சொன்னேன் என்றால்,?
இத்தனைக்கதையிலும்,
ஏதாவதை சுயமாய் எழுதப்பழகுங்கள்.!
இத்திருட்டை
இனியும் இசைவான மனமுடனே செய்யாதீர்கள்..!!
இதற்குத்தான்
இப்பதிவு, இயல்பாய் எழுந்தது என்னுள்ளே..!!!!
இத்தனைச்சொல்லியும்,
எந்நாளும் திருந்தோம் என்றால்,
இப்படைப்பையும், என் உரிமையின்றி உமதாக்கிக் கொள்ளுங்கள்..!