Tuesday, February 25, 2020

சற்றுப் பூரிப்பாக...

பூரியும், பீட்ரூட் கூட்டும்.

முதலில் பூரி செய்வது எப்படி? என நான் விளக்கிக் கூறலாம் என நினைத்து வார்த்தைகளை தயார் செய்தபடி ஆரம்பிக்கும் போது, தீடிரென என்னைச்சுற்றி நிறைய பூரிக்கட்டைகள் பாய்ந்து பாய்ந்து அடிக்க வருவது போல் என் கண்களுக்கு தெரிந்தன. ஒரு வேளை மன பிரமையாக இருக்கலாம்.. இல்லை பூரிக்கட்டையை கழுவி துடைத்து, அதை வைத்து பத்து பதினைந்து பூரிகளுக்கு மேலாக உருட்டி, பூரிகளை ரெடி செய்து, அவைகளை கைப் பேசியில் சிறைப்பிடிப்பு செய்து என அந்த "உருட்டுக் கட்டைகளுடன்" இதுவரை  சௌஜன்யமாக உறவாடியதில், அது கோபமடைந்து  ஒரு "வில்ல"
மனப்பான்மையைை பெற்று விட்டதோ என அதை அன்புடன் பார்த்த போதும், அவைகள் சீற்றமுடன் தன் உருட்டும் விழியைக் கொண்டு, உறுமிக் கொண்டபடியே என்னை நோக்கி உருண்டு  வர ஆரம்பித்தது.

 அவசரமாக அவைகளை தடுத்து, 🤗 நிறுத்தி விசாரித்ததில்,  "எங்களை பயன்படுத்தி நீ நினைப்பதை விட அழகான  பூரி செய்து, பூரிப்படைந்தவர்கள் இதுவரை உலகில் கோடி பேர் இருக்கிறார்கள். இதிலே நீ வேறு எங்களை வைத்து பிரபலம் தேட போகிறாயா?" எனகோபமாக  சீறிப் பாய்ந்தது. அதிலே ஒருசில  கனத்த பூரிக்கட்டைகள் "அது மட்டுமா? எங்களால் பல பேருக்கு அடிகள் வேறு விழுந்துள்ளன. அந்த விபரமெல்லாம் உனக்கும் அரசல் புரசலாக "மதுரை வாழ் தமிழர்களால்" தெரிந்திருக்கும்....! இல்லையென்றால், இப்போது ஒரு தடவை உன் தலையில் அடித்து நினைவூட்டவா?" என மிரட்டவும், "தலை த(உ)ப்புவது(ம்) இந்த தம்பிரான்களின் புண்ணியந்தான்.. " என்ற அவசர யோசனையில்," நான் எடுத்த உங்களின் படங்களை மட்டும் பகிர்ந்து விடுகிறேன். மற்றபடி நான் செய்த செய்முறை விளக்கமெல்லாம், என் செல்லிருப்பதை, செயலிலும் காட்டாது செயலிழந்து போகச் செய்து விடுகிறேன். "என்று வாக்குறுதி தந்ததும்," தலையில் அடித்துச்சொல்..." என்ற அதன் மிரட்டலுக்கு அதன் தலையை தேடி  அடிக்கச் சென்றதும், "எங்கள் தலையில் அல்ல.. உன் தலையில்...." என்ற மறுபடி சீறிய வார்த்தை மிரட்டலுக்கு அடிபணிந்து அதை மெதுவாக பிடித்து என் தலையில் லேசாக வலிக்காமல் அ(இ)டித்துக் கொண்டதும், அத்தனை பூரிக்கட்டைகளும் கண்ணெதிரே நிமிடத்தில் மாயமாயின.

" அப்பாடா..! நிம்மதியா இருக்கு..! இனி படத்தை தவிர்த்து பூரி வந்து பிறந்த  கதை யெல்லாம் உன்னால் அளக்க முடியுமோ?" என வந்த  ஏகப்பட்ட மகிழ்ச்சி குரல்களுக்கிடையே..... (அட.  !  அதில் உங்களனைவரின் குரலும் சேர்ந்து கேட்கிறதே. .) பூரி படங்களை மட்டும் பகிர்கிறேன்.





"அதற்காக படங்கள் எப்போதும் போல்  இரண்டா? அநியாயமாக இருக்கிறதே..! என மறுபடியும் பூரிகட்டையின் உதவியை நாடி ஓடி விடாதீர்கள்.." இவை ஒன்று  பார்த்தாலே ஒன்று இலவசம்" என்ற கணக்கை சார்ந்தவைகள். ஹா  ஹா. ஹா.


நாம் அதற்குள் "இப்படி பேசி, பேசியே ரூட்டை மறந்து போகும் இவங்களை என்ன செய்தால் பரவாயில்லை.." என்ற முணுமுணுப்புடன், தன் ரூட்டை மாற்றப் போகும்  எண்ணம் கொண்ட பீட்ரூட்டின் கோபத்தை சமாதான படுத்தலாமா ?

நன்கு கழுவி சுத்தப்படுத்திய ஒரு நான்கைந்து பீட்ரூட்டையும், அதே மாதிரி ந. க. சு. ப...ய உ. கி.  (ஆமாம்.. கோவப்பட்டு ரூட் மாறி போக நினைத்த பீட்ரூட்டுக்கு கிடைத்த விவரணை நமக்கும் சொன்னால் என்னவாம்..! நாம் அப்போதே பிடித்து இவர்களுக்காக இங்கேயே ரூட்டெல்லாம் மாற்ற நினைக்காது "உருண்டு" கிடக்கிறோம் என உ. கி நொடித்துக் கொள்ள.... "நாமிருவரும் ஒரே மாதிரி மண்ணுக்குள்ளிருந்து பிறந்தாலும்,  அதுதான் உன் பெயர் "உருளைக்கிழங்கு." ஆனால் "என் ரூட்டே தனி..!" பெயரிலும், கலரிலும் என்னை "பீட்" அடிக்க முடியாது.." என பெருமையடித்துக் கொண்டது பீட் ரூட். )  நான்கையும் குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். கூடவே அதன் மேல் தட்டில் பா. பருப்பு பாதி டம்ளர் எடுத்து கழுவி, ஒரு டம்ளர் அளவு தண்ணீருடன் வேக வைக்கவும்.

வெந்ததை எடுத்து நன்கு ஆறியதும்,  காய்களை ஒன்றிரண்டாக ஒரே மாதிரி நறுக்கிக் கொண்டு அத்துடன் பா. பருப்பு மசித்து கடாயில் கொதிக்க விடவும்.

 ஒரு மூடி தேங்காய், ஐந்தாறு மி. வத்தல் (அவரவர் காரத்திற்கு தகுந்த மாதிரி கூடக்குறைய எடுத்துக் கொள்ளலாம் )  எடுத்துக் கொண்டு ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் வறுத்த வேர்க்கடலை, கறிவேப்பிலை இலைகள்  (நான்கு ஆர்க்கு) சேர்த்து மிக்ஸியில் அரைத்து  அதனுடன் கொதிக்க விடவும்.

அது கொதித்துக் கொண்டிருக்கையில், அடுப்பை சிம்மில் வைத்தபடி, நான்கு பெல்லாரி வெங்காயம் பொடிதாக அரியவும்.  ஒரு கடாயில், கடுகு, உ. ப  ஒரு பெரிய ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு தாளித்து அதனுடன் அரிந்த வெங்காயத்தைப் போட்டு வதக்கி அந்த கூட்டில் போட்டு ஒரு கொதி வந்ததும், கொஞ்சம் பெருங்காய தூள் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். கூட்டு கொஞ்சம் நீர்க்க இருந்தால், வெங்காயம் சேர்க்கும் போதே அரை ஸ்பூன் கடலை மாவு கரைத்து விட்டால் கெட்டியாகி சூடான பூரியுடன் தொட்டுக்கொள்ள ஏதுவாக இருக்கும்.


தோலுடன் குக்கரில் வைத்து வேக வைத்த பீட்ரூட் .


அதைப் போன்று வேக வைத்த உ. கிழங்கு.


அரிந்த வெங்காயம்..


வறுக்க தயாரான சாமான்கள்.


வேக வைத்த காய்கள் மஞ்சள் தூள் சேர்த்து இனி "உன் ரூட், என் ரூட்" எனப் பிரித்து பேச முடியாது எனப் புரிந்தபடி அடக்கமாக ஒற்றுமை தத்துவத்தை உணர்த்தியபடி  சேர்ந்து இருக்கும் காட்சி..


அரைபட்ட விழுது.


வேக வைத்த பருப்பு வழித்தடங்கள் மாறாமல். பீட்ரூட்  கூட்டணியுடன் இணைந்து விட தயாராக இருக்கிறது. ..


அரிந்த வெங்காயமும், வதங்கி கூட்டுடன் கலந்து தயாராகி...


இனி பூரியுடன் ஐக்கியமாவோம் என்ற பூரிப்புடன்...


அனைத்தும் ஒன்று கலந்து தன் மேலே அழகுக்காக ஒன்றிரண்டாக சேர்க்கப்பட்ட கறிவேப்பிலையுடன் காட்சியளிக்கிறது.

இனி என்ன..! பூரி கட்டைகளை தேடாமல், பூரிப்புடன், ரூட்மாறி விடுவேன் என பயமுறுத்தினாலும், மாறாமல் சமர்த்தாக வந்து கூட்டாக சேர்ந்து இருக்கும் கூட்டின் உதவியுடன் இந்த பூரிகளை அனைவரும் சாப்பிட ஆரம்பிக்கலாமே ...!

இவ்வளவு நேரம் பொறுமையாக பூரி, கூட்டின் கதை கேட்டு (எல்லோரும் பெரும்பான்மையாக இந்த பக்குவங்கள் அறிந்ததுதான்...! இருப்பினும் அரைத்த மாவாக இதை என் பதிவிலும்.... ) அதை எடுத்துக் கொண்ட உங்களுக்கு என் அன்பான நன்றிகள். 🙏. இனி இந்த தயாரிப்பு 👌இருக்கிறது என சொல்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் உங்கள் சகோதரி
கமலா ஹரிஹரன். 

72 comments:

  1. இல்லை,இல்லை, இது எனக்குப் புதுசு, புதுசோ புதுசு. இம்மாதிரி அரைத்துவிட்டு தால் வகைகள் தான் பண்ணி இருக்கேன். பீட்ரூட், உ.கி. போட்டுப் பண்ணலாம் என்பது இன்னிக்குத் தான் தெரியும். ஒருதரம் முயற்சி பண்ணிப் பார்க்கணும். பகிர்வுக்கு நன்றி.

    நல்ல ரசனையாக அனுபவித்து எழுதி இருக்கிறீர்கள். பீட்ரூட்டும், உருளைக்கிழங்கும் சொன்னபடி கேட்டிருக்கே! உங்கள் கற்பனை வளமும் அதை எழுத்தில் கொண்டுவரும் விதமும் அபாரம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீங்கள் முதலில் வந்து பூரி,கூட்டு எடுத்துக்கொண்டு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. தங்களுக்கு இது புதுசு என்பது எனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது. நீங்கள் பலவித சமையல் பக்குவங்கள் (வடமாநில உணவுகள் உட்பட) அறிந்தவர். நானோ இந்த தென்னிந்திய உணவு வகைகள்தான் ஓரளவு கற்றுக் கொண்டவள்.

      மசாலா (கரம் மாசாலா, பட்டை சோம்பு) என்பது என் கணவருக்கு அவ்வளவாக பிடித்ததில்லை என்பதினால்,பூரி, சப்பாத்திக்கு இந்த வெங்காயம் மட்டும் சேர்த்து சில வகை காய்களையும் உடன் சேர்த்து இந்த மாதிரி கூட்டுக்கள்தான் செய்வேன். இல்லையென்றால் உருளைகிழங்கு வெங்காயம் சேர்த்து வதக்கி கொஞ்சம் நீர்க்க.. தால் மாதிரி.. மற்றபடி பூரி சப்பாத்திக்கு மசாலா சேர்ந்த ஐட்டங்கள் என் குழந்தைகளுக்காக எப்பவாவதுதான்.

      தங்கள் கருத்துக்கள் எனக்கு மன மகிழ்வை தந்தது. தங்களின் அன்பான பாராட்டுகளுக்கும் என் மன மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. இதுவரை அறியாத சமையல்குறிப்பு...வித்தியாசமாக சொன்னவிதம் குறிப்பாக பீட்ரூட் லிங்க் எடுத்ததை மிகவும் இரசித்தேன்.படங்களுடன் பகிர்ந்த விதம் அருமை..வாழ்த்துகளுடன்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      வித்தியாசமான சமையல் குறிப்பு என்றமைக்கு என் மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

      நான் எழுதிய சமையல் பதிவை உடனடியாக வந்து ரசித்துப் படித்து பாராட்டுக்கள் தந்ததற்கு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். பீட்ரூட்டின் வர்ணனைகளை ரசித்தமை கண்டு சந்தோஷமடைகிறேன்.

      உங்களின் ஊக்கமிகு கருத்துக்கள் என் எழுத்துக்களின் அஸ்திவாரத்திற்கு அன்றிலிருந்து பலமாக இருக்கின்றன. மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. சொல்லிய விதம் ரசிக்க வைத்தது சகோ வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /சொல்லிய விதம் ரசிக்க வைத்தது/

      உடனே வந்து பதிவை ரசித்துப்படித்து கருத்துக்கள் தந்தமைக்கும், பாராட்டிற்கும், வாழ்த்துக்களுக்கும் என் மனமகிழ்வுடன் கூடிய நன்றிகள் சகோ.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. முதற்கண் பூரியின் படங்கள் வெகுவாகக் கவர்கின்றன.  எங்கள் இல்லத்தில் பூரிகள் இந்த விடுவதில் எப்போதாவதுதான் கிடைக்கும்!  இந்த மாதிரி எப்போதும் பூரிக்கிடைக்க ரகசிய வழி ஏதும் இருப்பின் அதை ரகசியமாக எனக்குச் சொல்லிக்கொடுங்கள். சோடா உப்பு எல்லாம் சேர்க்க மாட்டீர்கள்தானே?

    ReplyDelete
    Replies
    1. சோடா உப்பெல்லாம் சேர்த்தால் பூரி எண்ணெயைக் குடிக்கும். அடுப்பில் எண்ணெயை வைத்துவிட்டு மாவை நன்கு கெட்டியாகப் பிசைந்து கொண்டு (சுமார் பத்து நிமிஷமாவது பிசையணும்) பூரிகளைப் பொரித்தால் நன்கு உப்பிக் கொண்டு வரும். மாவு ஊறினால் எண்ணெய் குடிக்கும். நாலைந்து பூரி இட்டால் நாங்கல்லாம் எல்லாவற்றையும் சேர்த்துப் போட்டே பொரிப்போம். அதுக்கு நிறைய எண்ணெய் பெரிய சட்டியில் வைக்கணும். நிறையப் பேருக்கு வேணும்னா அது சரியா இருக்கும். ஆட்கள் கம்மியாக இருக்கும்போது கொஞ்சமாக எண்ணெய் வைத்து ஒன்றிரண்டாகப் பொரிக்கலாம்.

      Delete
    2. மறுபடியும் இப்படி ஒருமுறை முயற்சி செய்து பார்க்கிறேன்.  தேவையான மாவை மட்டும் அவ்வப்போது பிசைந்துகொள்ள வேண்டுமோ!

      Delete
    3. வணக்கம் சகோதரரே

      பூரி படங்கள் நன்றாக உள்ளதென கூறியதால், பூரி பற்றி சொல்ல வந்தேன். அதற்குள் சகோதரி கீதா அவர்கள் கூறி விட்டார். சப்பாத்தி போல் தளர்வாக மாவு பிசையாமல் கொஞ்சம் கெட்டியாக பிசைந்து கலந்தவுடனே இட்டு பொரித்து விட்டால் பூரிப்பாக வரும். வெறும் உப்பு மட்டும் போதும். கையில் ஒட்டாமல் இருக்க ஒரு ஸ்பூன் எண்ணெய் தொட்டுக் கொள்ளலாம். மாவை நிறைய நேரம் வைத்துப் பொரித்தால் சிவந்து விடும்.

      நான் செய்த பூரி முதலில் அன்று சந்தோஷத்தில் பயங்கர பூரிப்புடன் இருந்தது. ஆனால், உடனே ஆசையாய் கை அலம்பி கைப்பேசி எடுத்து அதை சரியான கோணத்தில் அமர்த்தி படமெடுப்பதற்குள், சற்று முகம் வாடி விட்டது. அதற்கும் உள் மனதில் போட்டோ போஸ் சரியாக அமையாத காரணத்தால் ஏற்பட்ட வருத்தத்தில் இருக்குமென நினைத்துக் கொண்டேன். ஹா. ஹா. ஹா.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    4. ஆஆவ்வ்வ் எனக்கு எப்பவுமே இப்படித்தான் வரும் பூரி ஶ்ரீராம், அதன் ரகசியம் கண்டுபிடிச்சேன் என்னவெனில், மாவில் தண்ணி கூடியிருக்கக்கூடாது, அப்போதுதான் ரொட்டியாக தட்டும்போது , சின்ன திவாரம்கூட வராது. எங்காவது குட்டியாக ஓட்டை விழுந்திருந்தாலோ இல்லை, விழிம்பு வெடித்திருந்தாலோ இப்படிப் பொங்காது. அது துவாரம்:)...

      Delete
    5. வட இந்தியாவில் பூரி பொரிக்கையில் மாவிலேயே தேய்க்க மாட்டார்கள். எண்ணெயும் வீணாகும், பூரியும் நன்றாக வராது என்பார்கள். எண்ணெய் தொட்டுத் தான் பூரி இட்டுப் பொரிப்பார்கள். சப்பாத்திக்குக் கூட அதிகம் மாவு தொட்டுக்க மாட்டார்கள். எனக்கும் கிட்டத்தட்ட அதே பழக்கம் வந்திருக்கு.

      Delete
  5. உருளைக்கிழங்கையும் பீட்ரூட்டையும் இணைத்து என் அக்கா 'கரேமது' (நன்றி நெல்லை!) செய்வார்.   இது புதுசு.    ஆனானப்பட்ட கீதா அக்காவுக்கே இது புதுசாக இருக்கும்போது நானெல்லாம் எம்மாத்திரம்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

      இந்த கரமேது என்பது கூட வெங்காயம் தவிர்த்து வெறும் காய்களை மட்டும் பருப்புடன் சேர்த்து கூட்டாக தேங்காய், சீரகம், மி. வத்தல் அரைத்து விட்டு செய்வதுதான் இல்லையா? நான் இதில் வெங்காயம் வதக்கிச் சேர்த்தது சற்று வித்தியாசமாக வந்திருக்கிறது.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. @கமலா, "கரேமுது" வேறே, நீங்க சொல்லி இருக்கும் கூட்டு வேறே! கறி வகைகளைத் தான் வைணவர்கள் "கரேமுது" என்பார்கள்.

      Delete
    3. கரேமது பற்றிய தகவல்களுக்கு நன்றி.. நன்றி.

      Delete
  6. உருளைக்கிழங்கு, வெங்காயம் சேர்த்து மசாலா இல்லாமல் தால் வகையில் செய்திருப்பது புதுசு.  மகன்கள் மசாலா சேர்க்கா விட்டால் திரைப் படத்தையே ரசிப்பதில்லை. என்ன சொல்வார்களோ!  அவர்கள் ரசிக்காவிட்டால் நான் மட்டும்தான் சாப்பிடவேண்டும்!  பாஸ் எப்போதாவதுதான் வெங்காயம் சேர்த்ததைச் சாப்பிடுவார்.  மாமியார் சுத்தம்!  தொடவே மாட்டார்!  ஆனாலும் சுவையாக இருக்கும் என்று தெரிகிறது.   செய்துடலாம் ஒருமுறை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /மகன்கள் மசாலா சேர்க்கா விட்டால் திரைப் படத்தையே ரசிப்பதில்லை./

      ஹா. ஹா. ஹா. மசாலா அவர்களுக்கு தேவையென்றால் அதையும் இந்த கூட்டிலேயே கொஞ்சம் சேர்த்து விட்டால் போச்சு.. என்னிடமும் மசாலா பொடிகள் எப்போதும் இருப்பதில்லை. மருமகள்கள் விருப்பபடும் போது மட்டும் வாங்கி வந்து சப்பாத்தி பூரிக்கு தொட்டுக் கொள்ள காய்கறிகள் குருமாவாக பண்ணுவேன். இல்லை, வெஜிடபுள் சாதம் செய்யும் போது அவ்வப்போது மசாலா சாமான்கள் வாங்குவேன். இதில் வெங்காயம் இல்லாமலும்,அப்படி பிரியபடுகிறவர்களுக்கும் வெங்காயம் தவிர்த்து செய்யலாம். ஆனால் ருசியில் சற்று மாறுபடும். அவ்வளவுதான்.. பதிவை ரசித்து கருத்துக்கள் இட்டிருப்பதற்கு மிக்க நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்

      Delete
    2. @ஸ்ரீராம், சாதாரணமாகப் பாசிப்பருப்பில் தால் செய்கையிலேயே அதிலேயே ஒரு உருளைக்கிழங்கையும், தக்காளியையும் சேர்த்து வேகவிட்டுக்கொண்டு வெங்காயத்தை வதக்கிச் சேர்ப்பார்கள். பச்சை மிளகாய், இஞ்சி தான் அதுக்குக் காரம் போட்டுச் சேர்ப்பார்கள். கமலா நிறைய உருளைக்கிழங்கு போட்டிருப்பதால் அரைச்சு விட்டுச் செஞ்சிருக்காங்கனு நினைக்கிறேன். என் அம்மா முன்னெல்லாம் பூரிக்கு பாம்பே சட்னி எனப்படும் கடலைமாவு கரைத்த தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டது, இல்லைனால் பாசிப்பருப்பில் மேலே சொன்னாப்போல் உருளைக்கிழங்கு, தக்காளி சேர்த்து வெங்காயத்தை வதக்கிப் போட்டுப் பண்ணுவாங்க. இதையே பெரிய அளவில் பூண்டும் சேர்த்துப் பண்ணினால் கடப்பா! :)))))

      Delete
    3. மசாலா சாமான்கள் எனத் தனியாகவெல்லாம் தேவை இல்லை. நாம் வீட்டில் பயன்படுத்தும் ஏலக்காய், கிராம்பு போன்றவையே பெரும்பாலும் போதும். இல்லை எனில் லவங்கப்பட்டை வாங்கும் வழக்கம், சோம்பு வாங்கும் வழக்கம் இருந்தால் இவை நான்கையும் வறுத்து அரைத்து வைத்துக்கொள்ளலாம். ஏலக்காய், கிராம்பு போன்றவை ச்ராத்தத்திலேயே பயன்படுத்துவதால் இவை மசாலாவில் சேராது. லவங்கப்பட்டையை வறுத்துப் பொடி செய்து வைத்துக் கொண்டிருப்போம். அவ்வப்போது வெந்நீரில் போட்டுச் சாப்பிட்டால் வயிற்றுக்கும் நல்லது. உடலில் கொழுப்பும் சேராது.

      Delete
    4. கீதா அக்கா...    தால் நாங்களும் அப்படிதான் செய்வோம். குருமா போன்றவைகளுக்கு என் அம்மா காலத்தில் அவ்வப்போது அம்மியில் வைத்து அரைத்துக் கொள்வோம்- தேங்காயுடன் சேர்த்து,  இப்போதெல்லாம் ரெடிமேட் மசாலாத்தூளும் உபயோகிப்பது உண்டு.  லவங்கப்பட்டை, பெருஞ்சீரகம் என்று தனியாக சேர்த்துக் கொள்வதும் உண்டு.

      Delete
    5. குருமா என்பது தக்காளி, வெங்காயத்தோடு மசாலா சாமான்களும் (பிடித்தவர்களுக்குப் பூண்டும்) சேர்த்து அரைத்துச் செய்வது. பொடிகள் சேர்த்துச் செய்வது வேறு வகை. அரைச்சே விடாமல் பொடிகள் மட்டும் போட்டும் பண்ணலாம்.

      Delete
    6. வணக்கம் சகோதரி

      தாங்கள் மீள் வருகை தந்து விபரமாக நிறைய விஷயங்களை சொல்லியிருப்பதற்கு நன்றிகள்.
      இதில் நீங்கள் மேற்சொன்னவை எல்லாம் நம் வீட்டிலேயே இருப்பவர்தான். நான் சமயத்தில் ஜீனி போட்ட பாசத்துக்கு ஏலக்காய் பொடியுடன் (நிறைய ஏலக்காய் வாங்கி லேசாக கடாயில் வெதுப்பி மிக்ஸியில் பொடித்து வைத்துக் கொள்வேன்.) ஒன்றிரண்டு கிராம்பையும் தட்டிப் போடுவேன்.

      நான் பொதுவாக மசாலாவுக்கு சோம்பை விட கசகசா, பட்டை, ஏலக்காய், கிராம்பு ஒரிரு பூண்டு பற்கள் என தேங்காயுடன் அரைத்து செய்வேன். மசாலா இலையை காய்கறிகளுடன் வேக வைத்து விடுவேன்.

      வெஜிடபுள் பிரியாணிக்கு இந்த மராத்தி மொக்கு போடுகிறார்கள். இப்போது எங்கள் வீட்டிலும் வாங்கி வைத்திருக்கிறேன். ஆனால் பிரியாணி செய்து மாத கணக்கு ஆகி விட்டது. நான் முதலில் ஒரு திருமண விழாவில் சாப்பிடுகையில் இந்த மொக்கை பார்த்து (அப்போது எங்களுக்கு இந்த பிரியாணியில் அவ்வளவாக பிடித்தமில்லையாததால்) "இது வெஜ்ஜுக்கு இடையில் வந்த நான் ஆஆஆ.." என பயந்து விட்டேன். ஹா. ஹா. ஹா. அவ்வளவு பெரிதாக இருந்தது. அப்புறந்தான் அதில் இதுவும் ஒரு அங்கம் என புரிந்து கொண்டேன்.

      லவங்கம் சூடு தரும் இல்லையோ? ஒரு கிராம்பு சாப்பிட்டால் ஒரு டம்ளர் பால் எடுத்துக்க வேண்டும் என்பார்கள் எங்கள் அம்மா. ஒரு வேளை லவங்க பட்டை சூடு தராதோ? தாங்கள் தந்த தகவல்களுக்கு நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    7. கசகசா சேர்த்தால் தூக்கம் வரும் என்பார்கள். நான் தமிழ்நாட்டுப் பாணிக் குருமா பண்ணினால் கசகசா சேர்ப்பேன். இல்லைனா அதிகம் சேர்ப்பதில்லை. பொதுவாகக் கசகசா வாங்குவதே அதைப் பாலில் ஊற வைத்து முகத்தில் தேய்க்கத் தான். வெயில் காலத்தில் அதிகம் பயன்படும். பொதுவாகப் பரு வந்தாலோ வேனல் கட்டி வந்தாலோ வசம்பு, கஸ்தூரி மஞ்சள், சந்தனம் சேர்த்து அரைத்தும் தேய்ச்சுப்பேன். நமக்குத் தான் திடீர் திடீர்னு நிறம் ஒவ்வாமை வேறே வந்துடுமே! அதனால் எல்லாமும் கையில் வைச்சுக்க வேண்டி இருக்கு.

      Delete
    8. கிராம்பு சூடுனு தெரியாது. எங்க தாத்தா வெற்றிலை, பாக்கோடு ஏலக்காய், கிராம்பு சேர்த்துப் போட்டுப்பார். எங்க மாமனார் வீட்டிலும் ஸ்ராத்தம் அன்று வெற்றிலை, பாக்கோடு ஏலக்காய், கிராம்பு வைத்து வைதிக பிராமணர்களுக்குக் கொடுப்போம். நான் வயிறு சரி இல்லை எனில் சோம்பு+ஜீரகம்+மிளகு உடைத்தது+கருஞ்சீரகம்+லவங்கப்பட்டை பொடித்தது+ஏலக்காய்+கிராம்பு பொடித்தது +சுக்குச் சேர்த்துக் குடிநீரில் போட்டுக் கொதிக்க வைத்து வைத்துவிடுவேன். தேவையான போது அரைத் தம்பளர் சாப்பிட்டால் வயிறுப் பிரட்டல், உப்புசம், வலி, வேதனை எல்லாம் குறைந்து சரியாகும். இருமல் இருந்தால் அதற்கும் கேட்கும்.

      Delete
    9. வணக்கம் சகோதரி

      தங்கள் அன்பான வருகைக்கு என் மகிழ்வான நன்றிகள்.

      கசகசா சேர்த்தால் தூக்கம் வரும் என்பது எனக்கு தெரிந்ததை விட மாசக்காத்தான் அதிக மயக்கம் கொடுக்கும் என அறிந்திருக்கிறேன். நாங்களும் அந்த காலத்தில் வெற்றிலை போடும் போது, ஏலக்காய். துளி கிராம்பு, துளி மாசக்கா, குங்குமப்பூ போன்ற வாசனாதி பொருட்களை கலந்து போடுவோம். ஸிராத்ததற்கும் நீங்கள் கூறியபடி அம்மா வீட்டில் தந்துள்ளோம்.

      /நான் வயிறு சரி இல்லை எனில் சோம்பு+ஜீரகம்+மிளகு உடைத்தது+கருஞ்சீரகம்+லவங்கப்பட்டை பொடித்தது+ஏலக்காய்+கிராம்பு பொடித்தது +சுக்குச் சேர்த்துக் குடிநீரில் போட்டுக் கொதிக்க வைத்து வைத்துவிடுவேன். தேவையான போது அரைத் தம்பளர் சாப்பிட்டால் வயிறுப் பிரட்டல், உப்புசம், வலி, வேதனை எல்லாம் குறைந்து சரியாகும். இருமல் இருந்தால் அதற்கும் கேட்கும்./

      நல்ல கைப்பக்குவம். நானும் சமயம் வரும் போது உபயோகித்துக் கொள்கிறேன். அருமையான விஷயங்களை நினைவு கூர்ந்து சொன்னதற்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. எழுதுவதில் நீங்கள் தனி பாணி வைத்திருக்கிறீர்கள்.   ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      இந்த பதிவு நேற்று மாலையே வெளியிட்டு விட்டேன். நீங்கள் இந்த பதிவுக்கு வரவில்லையேயென குறிப்பிட்டு அழைத்து விட்டேன். மன்னிக்கவும். உடனே வந்து கருத்துரைகள் தந்தது கண்டு மிகவும் மகிழ்வடைந்தேன். உங்கள் கருத்துரை என் எழுத்து வேர்களுக்கு சிறந்த பலம். எல்லாவற்றையும் குறிப்பிட்டு பதிவை சிறப்பித்தமைக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. இனிமேல் உங்களிடமிருந்து சில வார்த்தைகள் வரக்கூடாது என்று கோரிக்கை வைக்கிறேன்.

      தாமதமாக வந்துவிட்டேன்...  மன்னிக்கவும்...

      இப்படி செய்து விட்டேன், அப்படி செய்து விட்டேன் மன்னிக்கவும்...


      இதுபோல வரிகளை இனி கண்டிப்பாகத் தவிர்க்கவும்- அட்லீஸ்ட் என்னிடமாவது.


      இன்னொரு விஷயம்...   நீங்கள் அந்த கமெண்ட்டை அங்கு இருவதற்கு முன்னாலேயே நான் உங்கள் பதிவில்தான் இருந்தேன்.  கமெண்ட் தயார் செய்துகொண்டிருந்தேன்.

      Delete
    3. மேலே ஒரு ஹா ஹா ஹா விட்டுப்போய்விட்டது.   மேலே உள்ள கமெண்ட்டை நான் கோபமாக எழுதியிருப்பதாக கொள்ளவேண்டாம்.   ஜாலியாக, உரிமையாக எழுதி இருக்கிறேன்.  

      Delete
    4. //நான் கோபமாக எழுதியிருப்பதாக கொள்ளவேண்டாம்.  //

      *நான் கோபமாக எழுதியிருப்பதாக நினைத்துக் கொள்ளவேண்டாம். 

      Delete
    5. வணக்கம் சகோதரரே

      இல்லை. இல்லை.. நான் நீங்கள் உடனே வந்து கோபமாக கருத்துகள் இட்டு விட்டீர்கள் என நிஜமாகவே நினைக்கவேயில்லை. (அந்த பூரிகளின் தலையில் அடித்துச் சொல்கிறேன். ஹா. ஹா. ஹா.)

      நான் சொல்லி முடிப்பதற்குள் உங்கள் கருத்துக்கள் இங்கு வந்திருக்கிறதை பார்த்ததுமே எனக்கு புரிந்தது. மனதுக்கு கஸ்டமாக இருந்தது. அந்த பதைப்பில்தான் உடனே "மன்னிக்கவும்" என்ற வார்த்தைகள் முளைத்து விட்டன. மற்றபடி என சுபாவம் எல்லோரையும் என் வார்த்தைகள் துன்புறுத்தி விடுமோ என்ற பயந்தான்.. அதனால்தான் பொதுவாக கருத்துக்கள் இட்டவுடனே ஆயிரம் வருத்தங்கள், மன்னிப்புக்கள் இவைகளை பிரயோகித்து விடுகிறேன். தவறெனின்...ஆகா.. மறுபடியும் முதலிலிருந்தா ? ஹா ஹா ஹா. அனைத்து விளக்கங்களுக்கும் மிக்க நன்றி சகோ.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    6. //அந்த பூரிகளின் தலையில் அடித்துச் சொல்கிறேன். ஹா. ஹா. ஹா//

      அப்பாடி...     பூரிகள் நசுங்கி விட்டாலும் அந்த சத்தியத்தைநம்புகிறேன், விரும்புகிறேன்!   இனி மன்னிப்பு என்கிற வார்த்தை வராது என்றும் மகிழ்கிறேன்...   நமக்குள் என்னக்கா ஸம்ப்ரதாயமெல்லாம்...கூடி வருந்தியிருக்க அல்ல, கூடி மகிழ்ந்திருக்கவே விரும்புவோம்.

      Delete
    7. வணக்கம் சகோதரரே

      /அப்பாடி... பூரிகள் நசுங்கி விட்டாலும் அந்த சத்தியத்தைநம்புகிறேன், விரும்புகிறேன்! /

      ஹா. ஹா. ஹா. இன்று எப்படியோ பூரி சாட்சியாக என்னிடமிருந்து ஒரு சத்தியத்தை வாங்கி விட்டீர்கள். நான் அதை எப்போதாவது மறதியாக கடைப்பிடிக்க தவறினால், இனி பூரிக் கட்டைகளுடன் பூரியும் உடன் வந்து மிரட்டும். ஹா. ஹா. ஹா.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. எனக்கு என்னவோ - கூட்டுகளில் பீட்ரூட் சேர்த்தால் பிடிக்காது. பீட்ரூட் என்ற வஸ்து, அல்வாவுக்கும், ஜூசுக்கும் மட்டும்தான் ஏற்றது என்பது என்னுடைய கருத்து. பெங்களூர் ஹோட்டல்களில், பூரிக்கு சைடு டிஷ் - காரட், பீட்ரூட் கொண்டைக்கடலை மசாலா சேர்த்த கூட்டு - கடவுளே! பூரி மீது இருந்த ஆசை இந்த கா பீ கொ கூட்டைப் பார்த்து காததூரம் ஓடிவிட்டது. பூரி என்றால், உ கி + வெங்காய மசாலா அல்லது பயத்தம்பருப்பு + பச்சைமிளகாய் + எலுமிச்சம்பழ கூட்டணி டால். மீதி எல்லாம் ஊஹூம்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      எனக்கும் முதலில் எல்லாம் இந்த பீட்ரூட்டின் கலர் பார்க்கவே அலர்ஜியாகத்தான் இருந்தது. அதுவும் எங்கோ ஓர் இடத்தில் பீட்ரூட் சாம்பாரை பார்த்ததும், சாம்பாரின் மேல் வைத்த பற்றை காசிக்கு போகாமலே விட்டு விடத்தான் நினைத்தேன். ஆனால் பீட்ரூட் உடம்புக்கு நல்லதென உறவுகள், தெரிந்தவர்கள் எனக்கு சிபாரிசு செய்த வண்ணமிருந்தனர்.

      அதன்பின் ஒரு 1990களில் குருவாயூர் பயணத்தில் ஒரு உணவகத்தில் இந்த கூட்டு பூரிக்கு பொருத்தமாக சுவையாக இருந்ததை கண்டு நாங்கள் அங்கு தங்கியிருந்த இரண்டு நாளைக்கு இரு வளைக்கும் அந்த உணவகத்திற்கு சென்று பூரியை மட்டுமே சாப்பிட்டு வந்தோம். அதிலிருந்துதான் இந்த முப்பெரும் கூட்டு எங்கள் உணவகத்தில் வந்து அமர்ந்து கொண்டது.

      நீங்கள் கூறுவது போல், உ. கிழங்கு மசாலா, பயத்தம்பருப்பு. எலுமிச்சம்பழம் கூட்டணி தால் இவைகளும் பூரிகளை அஞ்சாது அமிர்தமென சாப்பிட வைக்கும் குணமுடையவைகள்.. பொதுவாக பூரியே அதற்கு துணையில்லாமல் தனியாகவே சாப்பிடத் தோன்றும். சப்பாத்திதான் இந்த ஆர்ப்பாட்டத்தை விரும்பும்.

      தங்கள் அன்பான கருத்துக்கள் மன நிறைவை, மகிழ்ச்சியை தருகின்றன. மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. பாம்பே சட்னியை விட்டுட்டீங்களே கௌதமன் சார்!

      Delete
    3. பாம்பே சட்னி நான் அதிகம் சாப்பிடாதது.  என் அக்கா வீட்டில் அடிக்கடி செய்வது!

      Delete
    4. எங்க பெண் வீட்டில் அடிக்கடி பண்ணுவார்கள். இங்கே மாமாவுக்கு அவ்வளவாப் பிடிக்காது என்பதால் எப்போதாவது!

      Delete
    5. பூரிக்கு பாம்பே சட்னியும் நன்றாக இருக்கும். நேற்றே சொல்ல நினைத்தது.

      Delete
  9. பூரிப்புடன் வாசித்தேன்... செய்முறை விளக்கம் அருமை...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /பூரிப்புடன் வாசித்தேன்... /

      ஹா. ஹா. ஹா. பூரிப்பாக வாசித்து ரசித்து கருத்திட்டமைக்கு பூரிப்புடன் கூடிய நன்றிகள். செய்முறை விளக்கம் அருமை என்ற மனங்கனிந்த பாராட்டிற்கும் என் பணிவான நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. கேட்டு வாங்கிப் போடும் கதையில் வந்த உங்கள் கதைக்கான தனது விமர்சனத்தை ஜீவி ஸார் இப்போது எழுதி உள்ளார்கள்.  பாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      இப்போதுதான் இதைப் படிக்கிறேன். அருமையான எழுத்துக்குரியவர் நான் எழுதிய கதைக்கு வந்து விமர்சனம் செய்திருப்பது எனக்கு மிகவும் பெருமையை தருகிறது. கதை வந்த நாளிலிருந்து தினமும் யாராவது கருத்து எழுதி உள்ளார்களா எனப் பார்த்து வருகிறேன். இரண்டொரு நாட்களாக பார்க்கவில்லை. இதோ..! இப்போதே சென்று பார்க்கிறேன். நீங்கள் தகவல் தந்தமைக்கு நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. //" இவை ஒன்று பார்த்தாலே ஒன்று இலவசம்" என்ற கணக்கை சார்ந்தவைகள். ஹா ஹா. ஹா.//

    பார்த்தாலே இலவசம். அருமை.

    பூரிகளை அனைவரும் சாப்பிட ஆரம்பிக்கலாமே ...!
    சாப்பிட்டேன் மிக ருசியாக இருந்தது.

    சமையல் குறிப்பு சொன்ன விதம் மிக அருமை.



    //"இப்படி பேசி, பேசியே ரூட்டை மறந்து போகும் இவங்களை என்ன செய்தால் பரவாயில்லை.." என்ற முணுமுணுப்புடன், தன் ரூட்டை மாற்றப் போகும் எண்ணம் கொண்ட பீட்ரூட்டின் கோபத்தை சமாதான படுத்தலாமா //

    அருமையான நடை.
    பூரி பார்க்க அழகு.

    அதைவிட தொடுகறி அழகு.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      இந்தப் பதிவை மிகவும் ரசித்திருக்கிறீர்கள் என்பதை அறிந்ததும் எனக்கு மகிழ்வாக இருக்கிறது சகோதரி. பூரியும், அத்துடன் தொடுகறியும் அழகு எனக் கூறியதற்கும், எழுத்தை ரசித்து மனமுவந்து பாராட்டுக்கள் தந்தமைக்கும் என் பணிவான நன்றிகள்.

      தங்கள் கருத்துக்கள் என் எழுத்துக்கு மிக்க பலத்தை கொடுக்கிறது. மிகவும் மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. ஐ ஒப்ஜக்‌ஷன் யுவர் ஆனர்:). தலைப்பில் பூரியும் பீற்றூட்டும் என மட்டும் இருக்கு ஆனா போஸ்ட்டில் உ கி இருக்கு... இது எந்த வகையில் நியாயம்:)... எனக்கு தேவை கடமை நேர்மை எருமை:)...

    மிகவும் அழகாகப் பூரி செய்து பூரிப்படைந்ததில் நானும் ஒரு ஆள் என சொல்லிப் பூரிப்படைகிறேன்ன்ன்... எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பூரி ரொம்பப் பிடிக்கும்:)... எனக்கு எதைத் தந்தாலும் சாப்பிடுவேன்:)... ஆனா பூரி பெரிசாப் பிடிக்காது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆகா . எப்படியோ கண்டு பிடித்து விட்டீர்களே..
      உங்கள் கடமை,நேர்மை, என் மீது எருமையாக மாறி மோதி மெய் சிலிர்க்க வைக்கிறது. ஹா. ஹா. ஹா.

      பூரிகளை செய்து நீங்களும் அசத்தி, அசந்தது கண்டு பெருமையடைகிறேன்.

      /எனக்கு எதைத் தந்தாலும் சாப்பிடுவேன்:)... ஆனா பூரி பெரிசாப் பிடிக்காது./

      ஏன் பெரிதான பூரி உங்களுக்கு பிடிக்காமல் போயிற்று? ஹா.ஹா.ஹா.
      (அ. ஜோக். எப்படி உள்ளது?)

      தங்கள் வரவும், கருத்தும் என்னை மகிழ்ச்சி அடைய செய்கிறது.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  13. ஏன் பெல்-லாரி வெங்காயம் தான் பீற்றூட்டுடன் குடும்பம் நடத்துமோ? பெல்-பஸ், பெல்-வான், பெல்-கார்... இந்த வெங்காயம் எனில் பீற்றூட் அண்ணாக்கள் சட்டியை விட்டு அடுப்புக்குள் குதிச்சிடுவினமோ கோபித்துக் கொண்டு?:)...
    குறிப்பு வித்தியாசமாக இருக்கு , நன்றாகத்தான் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சகோதரி

      தங்கள் வருகைக்கு நன்றி.
      சற்று நேரம் கழித்து தங்களுக்கு விரிவாக பதில் தருகிறேன்.

      Delete
    2. வணக்கம் அதிரா சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /ஏன் பெல்-லாரி வெங்காயம் தான் பீற்றூட்டுடன் குடும்பம் நடத்துமோ? பெல்-பஸ், பெல்-வான், பெல்-கார்... இந்த வெங்காயம் எனில் பீற்றூட் அண்ணாக்கள் சட்டியை விட்டு அடுப்புக்குள் குதிச்சிடுவினமோ கோபித்துக் கொண்டு?:)...
      குறிப்பு வித்தியாசமாக இருக்கு , நன்றாகத்தான் இருக்கும்./

      ஹா. ஹா. ஹா. மிகவும் நகைச்சுவையாக எழுதி உள்ளீர்கள். ஒரு வேளை பெல்"லாரி"தான் பீட்"ரூட்க்கு" சரியாக வருமோ என்னவோ? அது ஒன்றுக்கொன்று ஒற்றுமையாய் பேசி வைத்து கொண்டிருக்கும். நம்மிடமெல்லாம் சொல்லுமா? நாமும் இந்த"லாரி"யை தவிர்த்து வேறு வாகனங்களை அதன் "ரூட்"டில் விட்டு இதுவரை விஷப்பரீட்சை ஏதும் செய்ததில்லை. ஹா.ஹா.ஹா.

      வித்தியாசமாக உள்ளதென ரசித்து பாராட்டியமைக்கு மகிழ்ச்சி அடைந்தேன். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  14. எல்லாரும்பூரி செய்யறேன்னு ஆரம்பிச்சுடறாங்களேன்னு நினைத்தேன். எண்ணெய் பளபள எனத் தெரியாமல், இரட்டை அப்பளாம் போல் இல்லாமல் மேற்பகுதி சிறிது சிவந்து பூரி சுடுவது என்பது ஒரு கலை.

    பூரிக்கு உருளை வெங் போட்ட மசாலா (உடனே அதில் கேரட், பட்டாணி என அந்நிய வஸ்துகளைச் சேர்ப்பவர்களை விட்டுவிடுங்கள். அவர்கள் கலப்பட வியாபாரிகள்) பூரிக்கேற்ற மணப்பெண்.

    நீங்க பீட்ரூட்லாம் போட்டுச் செய்திருக்கீங்க. கட்டாயம் வித்தியாசமா இருக்கணும்னு நினைக்கும் பசங்களுக்கு ருசியாத்தான் இருக்கும். என்னைப்போல் பழமைவாதிகளுக்கு திருநெவேலி பூரிமசால்தான் லாயக்கு, விருப்ப தேவதை

    ReplyDelete
    Replies
    1. காலை வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கு நன்றி.
      சற்று நேரம் கழித்து தங்களுக்கு விரிவாக பதில் தருகிறேன்.

      Delete
    2. ஒரு பூரிக்குப் போய் இப்பூடி ஐஸ் வைக்கிறார்:), நான் கஸ்டப்பட்டுச் செய்த குழை ஜாஆஆஆஆதத்துக்கு ஒரு மருவாதை இல்லாமல் இருக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா...

      Delete
    3. வணக்கம் சகோதரி

      அதானே.. முதலில் வந்த குழை சாதத்திற்கு "முதல் மரியாதை"கிடைக்க வேண்டாமோ? ஒரு வேளை சிவாஜி ரசிகர் இல்லையோ? அவர் ஊரிலிருந்து வந்த பின் விசாரிக்கலாம்.. நடுவில் பூரி ஜெகநாதர் தரிசனம் வேறு இருக்கிறதா எனத் தெரியவில்லையே? ஹா. ஹா. ஹா.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    4. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      துவாரகா தரிசனம் நல்லபடியாக கிடைத்து ஆனந்தம் பெற்றீர்களா?
      பூரியின் மணம் துவாரகை கண்ணனுக்கும் வந்து விட்டது போலும்.. அதனால்தான் தங்களை முதலில் அனுப்பியிருக்கிறார்.. ஹா. ஹா. ஹா.
      பூரிகளின் பாராட்டுக்கு மிக்க நன்றி.

      "பூரிக்கேற்ற மணப்பெண்" உவமானம் மனம் விட்டு சிரிக்க வைத்தது. உண்மைதான்..! ஒவ்வொன்றின் பொருத்தங்களும் இணை பிரியாதிருத்தலே அதற்கு பன்மடங்கு சிறப்பைத் தரும்.

      திருநெல்வேலி பூரிக்கிழங்கு சிறுவயதில் நானும் அறிவேன். எங்கள் ஊரில்( வசித்த இடம்) ஒரு போத்தி ஹோட்டலில் மாலையில் தயாரிக்கும் அந்த பூரி கிழங்கை வாங்கி சாப்பிடுவதற்காக மதியம் பன்னிரண்டு மணிக்கே மதிய சாப்பாட்டை முடித்து விட்டு காத்திருந்த காலங்கள் நினைவுக்கு வருகிறது. அந்த ஹோட்டலில் எப்போதோ ஒரு தடவைதான் தீடிரென மாலையில் பூரிக்கிழங்கு ஸ்பெஷலாக இருக்கும். சாப்பிட்ட மணமும் நெஞ்சு நிரம்ப பல நாட்கள் மனதுக்குள்ளேயே தங்கியிருக்கும். எனக்கும் பழமை நினைவுகள் வந்து விட்டன.

      தாங்கள் பயணத்திலும் என் பதிவுக்கு வந்து கருத்திட்டு சிறப்பித்தமைக்கு மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  15. தங்களது 'வரவில்லை என்று' சொன்ன கருத்துரை மட்டும் தான் வந்தது அம்மா... ஸ்பேம் போல்டரிலும் சரி பார்த்து விட்டேன்... அங்கும் இல்லை... இந்த தகவலை இங்கே சொல்வதற்கு மன்னிக்கவும்... ஒவ்வொரு பதிவிற்கும் தங்களின் கருத்துரை மிகவும் உற்சாகம் தரும்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      அப்படியா? அப்போது என்னிடம்தான் ஏதோ தவறு நடந்துள்ளது. மறுபடியும் தங்கள் பதிவை ஆழ்ந்து ரசிக்க மற்றொரு சந்தர்ப்பம் தந்த அந்த தவறுக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன். இதில் மன்னிக்க ஒன்றுமேயில்லை.. எத்தனை முறை படித்தாலும் தங்கள் பதிவு எனக்கு புதிதுதான். அந்தளவிற்கு தங்களின் தொழில் நுட்பம் ஒவ்வொரு முறையும் வியக்க வைக்கும். இதோ வந்து படித்து கருத்திடுகிறேன். நீங்கள் இங்கு வந்து தந்த தகவலுக்கு நானும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  16. சாதாரண உருளை, பீட்ரூட் கூட்டை மன்னிக்கவும் குருமாவை  நீங்கள் சொல்லியிருக்கும் விதத்தால் சிறப்பாக்கி விட்டீர்கள். குடோஸ்! 

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்களைத்தான் எதிர்பார்த்து கொண்டேயிருந்தேன். பதிவை ரசித்துப் படித்து தந்த பாராட்டுகளுக்கு என் மனம் நிறைந்த மகிழ்வுடன் கூடிய நன்றிகள் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  17. எப்படி இந்த போஸ்ட் திரும்பவும் மேலே வந்தது? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. நான் புதுசாக்கும் எனத் திறந்தேன்..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சகோதரி

      தங்கள் வருகைக்கு நன்றி. எப்படியோ இந்த போஸ்ட் உங்களை இங்கு அழைத்து வந்து விட்டது எனக்கு மகிழ்ச்சியே. என் கைத் தவறுதல்களினால் இருக்கும். இனி வர இருக்கும் போஸ்ட்களுக்கு இதுபோல் உடனடியாக வருகை தந்து ஆதரவளிக்கவும் வேண்டுகிறேன். ஏனெனில் உங்கள் கருத்துக்கள் என் பதிவுகளுக்கு பலம். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  18. ஆஹா... ரசனையாக எழுதி இருக்கிறீர்கள்... உங்களுக்கு இதோ ஒரு பூங்கொத்து.

    உருளையும் பீட்ரூட்டும் சேர்த்து இப்படி ஒரு கூட்டு இதுவரை செய்ததில்லை. பூரி பீட்ரூட் கூட்டு என சாப்பிடாவிட்டாலும், இரண்டையும் சேர்த்து பீட்ரூட் பூரியாக சாப்பிட்டதுண்டு!

    சுவையான, ஸ்வாரஸ்யமான குறிப்புகள் தொடரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்களது பாராட்டிற்கும். உங்களது அருமையான பரிசான பூங்கொத்திற்கும், என் மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.

      ஆமாம்..காய்கறிகளை கலந்து கொண்டு பூரி செய்து சாப்பிடலாமே! நீங்களும் அவ்விதம் பீட்ரூட் பூரியாக செய்து சாப்பிட்டது அறிந்து கொண்டேன். நீங்கள் பல வித சமையல்களை செய்து அசத்துபவர். உங்களுக்கு தெரியாத சமையல் குறிப்புகளா ? உங்களது பல வகை திறமைகள் கண்டு வியந்திருக்கிறேன். தங்கள் அன்பான கருத்து கண்டு மகிழ்வடைந்தேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  19. ஆஹா...கமலா அக்கா....


    பூரியும் பீட்ரூட் ம்..அடடா...படங்களும் செய்முறையும் வெகு சுவை....😍😍😍😍


    பார்க்க வே அட்டடகாசமா இருக்கு😋😋😋😋😋😋😋😋😋😋...


    ஆனா பூரிக்கு இப்படி ஒரு குருமா வா...எனக்கு ரொம்ப புதுசு...

    பீட்ரூட்ல் தேங்காய் சோம்பு அரைத்து விட்டு கூட்டு செய்வோம் ஆனா அது சாதத்துக்கு தான்...

    இன்னும் வியப்பாகவே பார்க்கிறேன் அந்த 🌰🌰பீட்ருட்டை..😁😁😁..


    திரும்ப திரும்ப பயணத்தில் இருப்பதால் படித்தாலும்...கருத்து இட தாமதம் ஆகிவிடுகிறது அக்கா..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்கள் கருத்தை இப்போதுதான் பார்த்தேன். அதனால் எனக்கும் பதிலிட தாமதம்.

      பதிவை ரசித்துப் படித்து தந்த, அருமையான கருத்துகளுக்கும், பாராட்டுகளுக்கும் நான் மனம் நிறைந்த மகிழ்ச்சியடைந்தேன்.

      /இன்னும் வியப்பாகவே பார்க்கிறேன் அந்த 🌰🌰பீட்ருட்டை..😁😁😁../

      ஹா. ஹா. ஹா. அருமையாக எழுதி உள்ளீர்கள். உங்களையே வியந்து பார்க்க வைத்து விட்டதா? ஆமாம் சாதத்திற்கும் வெறும் பாசிபருப்பு சேர்த்து தேங்காய் அரைத்து விட்டு கூட்டாக செய்து கலந்து சாப்பிடலாம். நன்றாக இருக்கும். தங்கள் முறையிலும் நான் செய்வேன். (சோம்புக்கு பதில் ஜீரகம் சேர்த்து.)

      /திரும்ப திரும்ப பயணத்தில் இருப்பதால் படித்தாலும்...கருத்து இட தாமதம் ஆகிவிடுகிறது அக்கா../

      பரவாயில்லை சகோதரி. தங்களுக்கு எப்போது சௌகரியபடுகிறதோ அப்போது வந்து கருத்திடுங்கள். தங்கள் ஊக்கமிகும் கருத்துக்களுக்கு நான் எப்போதும் மகிழ்வுடன் காத்திருப்பேன். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  20. புதிதாக இருக்கிறது.
    பீற்றூட் நமக்கு சாதத்துக்கு மட்டும்தான்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை ரசித்து படித்து கருத்திட்டிருப்பதற்கு மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

      /பீற்றூட் நமக்கு சாதத்துக்கு மட்டும்தான்./

      சாதத்திற்கும் கறியாக கூட்டாக கை கொடுக்கும். இந்த மாதிரி பூரி, சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ள உடன் ஒத்துழைக்கும் சகோதரி. தங்கள் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  21. தலைப்பை பார்த்தவுடன் நீங்கள்தான் பூரிப்பாக இருக்கிறீர்களோ என்று உள்ளே வந்து பார்த்தால் பூரி கட்டையிடம் அடி வாங்கிக்கொண்டு இருக்கிறீர்கள் ... சரி போகட்டும் பூரியாவது பூரிப்பாக இருக்கிறதே ... சந்தோசப்படுங்கள் ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

      /பூரி கட்டையிடம் அடி வாங்கிக்கொண்டு இருக்கிறீர்கள் ... சரி போகட்டும் பூரியாவது பூரிப்பாக இருக்கிறதே ... சந்தோசப்படுங்கள்/

      ஹா. ஹா. ஹா. இன்றுதான் தங்கள் கருத்தைப் பார்த்தேன். தாங்கள் என் வலைத்தளத்திற்கு முதல் வருகையாக வந்து அன்புடன் பதிவை படித்து கருத்துகள் அளித்தது எனக்கும் பூரிப்பாக இருக்கிறது. என் தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete