Sunday, November 6, 2011

அன்னைக்கு மடல்

அன்னை தந்தையின் வளர்ப்பினிலே,
அருமையாய் தினம் வளர்ந்து,
குலப்பெருமை குன்றாமல்,
குணமுடன், பிறர்குறை கூறாமல்,
குன்றில் இட்ட விளக்காக திகழ,
குமுறும் இரு நெஞ்சங்களுக்காக,
பால் மறக்கா பருவத்திலே,
பள்ளி பாடங்கள் பாங்காய் தினம் கற்று,
மழலை மொழி சொற்களை,

Monday, October 3, 2011

Navarathri

[Text Source from Wikipedia]: Navarathri is a 10-days (nine nights) festival celebrated in India. Navarathri represents celebration of Goddess Durga, the manifestation of Deity in form of Shakti [Energy or Power]. Nine Forms of Shakti are worshipped during the Navarathris. In South-India, people set up steps (like a staircase) and place idols on them and this is known as golu.

Navarathri is divided into sets of three days to adore

Monday, July 25, 2011

விசுவாசிகள்

இந்த ஒரு வாரக்காலத்தில், வீட்டின் அன்றாட பழக்கங்கள் முற்றிலும் மாறிவிட்டது. வேளாவேளைக்கு சோறும், பிற உணவுகளும் யாரும் சரியாக கொடுப்பாரில்லை. அந்த பழைய அன்பும், நேசமும் யாரிடமிருந்தும் கிடைக்கவில்லை. மொத்தத்தில், சந்தோசம் காணாமல் போய், துக்கமும், வருத்தமும் அந்த இடத்தை நிரப்பிக் கொண்டிருந்தது.

நாங்கள் வந்த புதிதில் இப்படியில்லை.. சிறுவயதிலேயே இவர்கள் வீட்டிற்கு நானும் என் சகோதரனும் வந்து விட்டோம். அம்மாவையும், மற்றவர்களையும் பிரிந்த ஏக்கம் மனதில் பதியாமல் எங்கள் முதலாளி

Sunday, July 24, 2011

அலைகளின் ஏக்கம்ஆர்ப்பரித்து வந்த கடலலைகள்,
ஆச்சரியத்துடன் கரையை கவனித்துவிட்டு
அடித்து புரண்டு மீண்டும் கடலுக்குள்
அடைக்கலமாயின.
என்ன இது?
ஏன் இந்த மாற்றம்?

பயணம்

நீ பயணித்த பேருந்தில்
நீண்ட நாட்களாக நானும் பயணித்ததில்
இருக்கைகள் இல்லாத காரணத்தால்,
இருவரும் பரிச்சியமானோம்!
பரிச்சியத்தின் வேரை
பார்வை உரமிட்டு
"பார்த்து பார்த்து" பேணிய உன்

பயணித்த காதல்

பேருந்துடன் பயணித்தது நீ
உன்னுடன் பயணித்தது என் மனம் !!!
பயணம் ஒன்று தான்... ஆனால்
பாதை தான் வேறு! வேறு!

Monday, May 30, 2011

கால்கள்அன்றுதான் அவர்கள் அங்கு குடிவந்தார்கள், மூவருமே திருமணமாகதவர்கள் என்று அந்த வீட்டை குடக் கூலிக்கு விடும் சொந்தக் காரரிடம் தரகர் கூறியதை நினைவு கூர்ந்த எனக்கு சற்று ஆறுதலாக இருந்தது. பிரம்மச்சாரிகள்  என்றால் சோம்பேறிகள் என்பது என் ஆழமான கருத்து. இருப்பினும் இவர்களிடமும் சற்று எச்சரிக்கையாகத்தான் இருக்க வேண்டும். இவர்களிலும் சிலர்

Sunday, May 29, 2011

படைப்பு"படைத்து விட்டான்", இறைவன்
பாரினில் வாழ்ந்து பார்! என்று
விடை புரியா இப்புவியில் உன்
வினாக்களை நீ தொடுத்து,
தகுந்த விடைகளை நீயே

Monday, May 23, 2011

ஏன் இந்த கண்ணீர்?ஏன் இந்த கண்ணீர்?

உன்
எதிரில் உள்ளவரின் வேடிக்கையால்
விளைந்ததுவா? இல்லை,

ஏழ்மையின் கொடுமையால்
எழுந்ததுவா? இல்லை,

Wednesday, May 11, 2011

அம்மா யசோதை அம்மாமண்ணை தின்ற கண்ணன்
மடிமீது அமர்ந்த போது,
மலர்ந்த முகத்துடன் அவனை
கடுஞ்சொல் கூறாது அன்போடு
கட்டியணைத்துக் கொண்ட
அம்மா,

கோபியர் கோள்கள் பலகூற,
கோபப்படாது சாந்தமாக பதிலுரைத்தபின்,
கோபாலனை பாசமாக கண்டித்து, உன்
கோபத்தை அன்பில் கரையவிட்ட
அம்மா,

கண்ணனை வளர்ப்பதில் பொழுதோடு உன்
கருத்தனைத்தையும் மொத்தமாக செலவிட்டு
நீ இந்த மண்ணில் பிறந்ததே உன் மைந்தன்
கண்ணனுக்காகத்தான் என்று மெய்பித்த
அம்மா!

உன் மகன் விழிசிவந்து
அழப்போகும் தருணத்தில்
அனைவரும் வியக்கும் வண்ணம் உன்,
புன்னகையால் அவன் இதழ்களிலும்,
மென்னகையை தவழ விட்ட தாயே!
யசோதை தாயே!

காலச் சுழற்சியில் மறைந்து விட்ட என்
கண்மணித் தாயை உன்னில் நான்
காண்கிறேன்!
தாய் பாசத்தை தொலைத்து விட்டழும்
எனக்காக, உன்,
மடிமீது தலைவைத்து,
மன சாந்தி நானடைய
உன் கண்ணனோடு
ஓரிடம் எனக்கும்
ஒண்டிக்கொள்ள நீ தருவாயா!

பகல் கனவு (வேண்டுதல்)

ரவாரமிட்டபடி ஆடி ஓடிய,
அணில்கள் காணாமல் போயின!
காகங்களின் கரையல் சப்தம்,
கார் முகிலின் இடியோசையில்,
கரைந்தே  போயின!      மற்ற
பறவைகளின் விதவிதமான ஒலிகளும்,
பறந்தே போயின!   பிறநில வாழ்-
விலங்கினங்களும் விரக்தியுடன் இந்த
வில்லங்கத்தில் மாட்டாமல் ஒதுங்கி போயின!
காரணம் என்ன வெனில்,  இது,