Showing posts with label மறக்க முடியாத பழைய பாடல்கள். பொது. நல்ல கருத்துள்ள திரைப்பட பாடல்கள்.. Show all posts
Showing posts with label மறக்க முடியாத பழைய பாடல்கள். பொது. நல்ல கருத்துள்ள திரைப்பட பாடல்கள்.. Show all posts

Tuesday, December 24, 2024

மறக்க முடியாத பாடல்கள்.

டிசம்பர் 24. 

தமிழக முன்னாள் முதல்வராகவும், மக்கள் திலகமுமாக திரையுலகிலும் கொடிக்கட்டி பறந்த திரு. எம். ஜி ராமச்சந்திரன் அவர்கள் இந்த உலகை விட்டு  மறைந்த நாள். இது நம்மால் எளிதில் மறக்க முடியாத நாளும் கூட. இரண்டு இடங்களிலும் தன் திறமையை பறைசாற்றிய அவரின் புகழ் அவர் மறைந்தும் என்றும் நீடித்து நிற்கும். / நிற்கிறது. அதுபோலவே நல்ல கருத்துள்ள மறக்க முடியாத பல பாடல்கள் திரைப்படங்களில் இவருக்கெனவே உருவானவை. அந்த வரிசையில் இன்று நான் பகிர்ந்த இந்த பாடல்கள். 

பிரபல பாடகர் திரு. டி. எம் சௌந்திரராஜன் இவருக்கெனவே பிறந்தது போல், நல்ல கம்பீரமான குரலுடன் இந்த நல்ல அர்த்தமுள்ள பாடல்களை பாடுவதற்காகவே இறைவனால் நிர்ணயக்கப்பட்டவர். திரு. டி. எம் எஸ் அவர்கள் நிறைய பக்தி ரசமிக்க பாடல்களையும் இறைவன் அருளால் தந்துள்ளார். தவிரவும் மக்கள் திலகத்திற்கெனவே நிறைய பாடல்களைப் பாடி  இருவரின் வெற்றிகளையும் நிலை நிறுத்தி கொண்டவர். இவரின் புகழும் என்றும் நீடித்து நிற்கும். 

மேலும் இந்த பாடல்களை இயற்றி, அதற்கு இசையமைத்து மேலே குறிப்பிட்ட இருவரின் வெற்றிகளுக்கும் படிக்கல்லாக இருந்த பாடலாசிரியர்களுக்கும் இசையமைத்த இசை மேதைகளுக்கும் என் பணிவான வணக்கங்கள். நன்றிகள். 🙏. 

திருடாதே பாப்பா.. நல்ல அறிவுரைகளுடன் கூடிய ஒரு பாடல். 

திரைப்படம்: திருடாதே (1961)

இசை: S.M. சுப்பைய்யா நாயுடு

பாடலாசிரியர்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். 

பாடியவர்: T.M. சௌந்தரராஜன்


தூங்காதே தம்பி தூங்காதே.. சோம்பலை விரட்டும் நல்ல பாடல். 

திரைப்படம்: நாடோடி மன்னன் (1958)

இசை: S.M. சுப்பைய்யா நாயுடு

பாடலாசிரியர்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

பாடியவர்: T.M. சௌந்தரராஜன்

நீ உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம். இதுவும் தன்னம்பிக்கை ஊட்டும் நல்ல பாடல். 

படம் : வேட்டைக்காரன்

இசை : K.v.மகாதேவன்

பாடல் : கண்ணதாசன்

பாடியவர் :: T.M.செளந்தரராஜன்


நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே..! நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே...! குழந்தைகளுக்கான அறிவுரை பாடல். 

திரைப்படம்: நம் நாடு
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை:  : K.v.மகாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்


இந்தப்பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது. கண் போன போக்கிலே காலும்...! மனம் போன போக்கெல்லாம் மனிதனும் போகக்கூடாது என்பதை அறிவுறுத்தும் பாடல். 

பாடல்: கண் போன போக்கிலே கால் போகலாமா.. ? 
படம் : பணம் படைத்தவன் ( 1965 )
பாடியவர் : டி எம் சௌந்தரராஜன்
இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடலாசிரியர் : வாலி


நேற்று (23ஆம் தேதி. திங்கள்கிழமை) தேசிய விவசாயிகள் தினம். இது ஏதேச்சையாக இன்றைய முதல் நாளாக அமைந்துள்ளது. விவசாயிகளுக்கான இந்த அற்புதமான பாடலை நான் பகிர நினைத்தேன்.அதற்கு பொருத்தமாக இந்த (விவசாயிகள் தினம்.) நாளும் இணைந்து கொண்டது. இந்த படத்தில் நல்ல நடிப்புடன் அருமையான இந்தப்பாடலையும் திரு. எம்ஜிஆர் அவர்கள் விவசாயிகளை போற்றுபடி தந்திருக்கிறார்

படம்: விவசாயி 

பாடியவர்: T.M. சௌந்தரராஜன்

இயற்றியவர்: A.மருதகாசி

இசை: K.V. மகாதேவன்


கூகுளுக்கு நன்றி பாடல்கள் பகிர்வுக்கு

இன்னமும் பல பல பாடல்கள் நம் மனதை விட்டு நீங்காதவையாக இருக்கின்றன. இப்படிபட்ட  பாடல்களை சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், பதிவு நீண்டு விடும் என்பதால் மற்றதை நம் மனதோடு விட்டு, கூட்டுத் தொகையில் சிறந்த பாடலாக நான் நினைத்ததை மட்டும் (ஆ(றாக)ரமாக) பதிவிடடு உள்ளேன். மறக்காத இந்த பல பாடல்களை தந்த  இந்த அபூர்வ கலைஞர்களுக்கு நம் வணக்கங்களும் நன்றிகளும்🙏.

இந்த பதிவையும், பாடல்களையும் ரசிக்கும் சகோதர சகோதரிகளுக்கு என் பணிவான நன்றிகள்.