வாழ்ந்து பார்க்கும் ஆசையா?
இல்லை, இயன்றவரை
வாழ்ந்துதான் காட்டுவோமே என்ற
பேராசையா.? உன்
சின்ன சின்ன அலகால், தினம்
சின்ன சின்னதாய் இளம்
இலைகளை கிழிக்க எத்தனை
இன்னல்கள் பட்டாயோ... நீ.. ? மேலும்
உனக்கு உற்சாகமளித்து
இன்முகம் காட்டி வரவேற்க
நன்மனம் கொண்டோராகவும்
நாங்களில்லையென அறியாயோ..?
அதிலும், அன்றாடம்
சமையலில எழும் புகையை
சாதூர்யமாய் வடிகட்டி தன்
சாகசத்தை மெய்படுத்தும்
சாதனத்தை ஏன் சற்றும்
சந்தேகமின்றி குடிப்புகும்
சந்தோஷத்தோடு தேர்ந்தெடுத்தாய் . .
ஒவ்வொரு நாளும் பல தினுசாக
சமையலின் விதங்களிலும் கசியும்
ஒவ்வொரு துளி எண்ணெய்யும்
பகட்டான பார்வைக்காக
பளிங்கு போல வடிவமைத்த
பிளைவுட் மரவடிவுகளில்
பாங்காக வந்தமருவதை தடுக்க
பார்த்துப்பார்த்து வாங்கி
பதித்த சாதனமல்லவா அது..!
சென்ற வருடம் உன்னைப் போன்றே
செதுக்கிய அழகுடைய, அந்த
மஞ்சள் விழியழகி, மைனாவின்
மறைவுக்கு வழி வகுத்தது இந்த
வழிதான் என்பதையும் அறியாயோ..?
என்னவோ போ..! உங்களினத்தை
எப்படியோ இவர்(எங்)களோடு
வாழ்ந்து மு(ம)டி என ஆணையிட்ட
அந்த இறைவனை
எஞ்சிய இவ்வாழ்வின்
ஓர் நாளில் நான் காண வேண்டும்.
பாவ மன்னிப்புக்களை அந்த
பரமனோடு கூட்டிக் கழித்து
பகிர்ந்து பேசும் அந்நாளில்
"உன் படைப்பில் இனியாவது,
இச்சுதந்திரப் பறவைகளுக்கு
இம்மண்ணின் மனிதர்களின்
சுயநலன்களைப் பற்றி விளக்கிச்
சுட்டிக்காட்டி, இனி
மனிதரோடு அண்டி வாழாமல்,
மற்றைய ஜீவன்களோடு
மனம் ஒன்றி வாழ்" என
இரக்கத்தோடு வரமளிக்க
இயலாதென மட்டும்
மறுத்து விடாதேயென
இறைஞ்சி கேட்க வேண்டும். 🙏.
எப்போதும் போல் என் மனதில் எழுந்த இக்கவிதையை (அறுவையை) படித்து கருத்து தெரிவிக்கும் உங்கள் அன்புள்ளங்களுக்கு என் கோடானுகோடி நன்றிகள். 🙏.
கிராமங்களில் இன்றும் குருவி கூட்டை கலைப்பது பாவம் என்கிறார்கள். ஒரு சிலர் கூட்டை தொட்டு கும்பிடவும் செய்வார்கள். இப்படியெல்லாம் சொல்லி வைத்தால் தான் மனித இனம் மற்றொரு இனத்தை தொந்தரவு செய்யாது என்ற காரணத்திற்காக சொன்னார்களா? என தெரியவில்லை.
குருவி கூடு கட்டினால் அடிக்கடி விஷேச எண்ணங்கள் ஏற்படும் அதாவது மன அழுத்தங்கள், எதிர்மறை எண்ணங்கள் போன்றவை இல்லாமல் எப்போதுமே புத்துணர்வாக இருக்க முடியும். வீட்டில் சுறுசுறுப்பாக பறவை இனங்கள் இருக்கையில், அதனை பார்க்கும் போது நமது மனமும் லேசாகி விடும்.
மலேசியா போன்ற நாடுகளில், காடுகளில் வாழ்ந்து முடித்த பறவையின் கூட்டை கடைகளில் விற்பனை செய்கிறார்கள். இதன் விலையோ லட்ச கணக்கில்.. இதனை வாங்கி வீடுகளில் வைக்கும் போது, வீட்டில் நேர்மறை எண்ணங்கள் அதிகரித்து விரைவில் விஷேச நிகழ்வுகள் ஏற்படுவதாக நம்புகிறார்கள்.
நம்மூரில் ஒன்றை பின்பற்றினால் மூடத்தனம் எனும் சொல்பவர்கள், வெளிநாட்டில் அதே செயலை செய்யும் போது மறுப்பு தெரிவிக்காமல் நம்புகிறார்கள். அப்படியென்றால் நமது முன்னோர்கள் குருவி கூட்டை தொட்டு கும்பிட்டதும் கூட்டை கலைத்தால் பாவம் என சொன்னதெல்லாம் சரிதான் போல...
இத்தகவல்களுக்கு நன்றி. கூகுள்.
பின் குறிப்பொன்று.. நான் இந்த வருடம் பதிவுகள் எழுதியே மாதங்கள் பல ஆகிறது. எத்தனையோ பதிவுகள், மேலும், சென்ற வருடம் பிரயாணங்களில் சென்ற கோவில்களைக்குறித்து பதிவுகள் என எழுத தினமும் நினைப்பேன். என்னவோ ஒன்றைக்கூட எழுத இயலாமல் போய் விடும். சரி...! அதுதான் அப்படியென்றால் என் வலைத்தள நட்புகளின் எல்லோரின் எல்லா பதிவுகளுக்கும் உடனடியாக செல்ல முடியாமல், தாமதமும் ஆகி விடும். இருப்பினும் எப்படியோ மாலைக்குள் படித்து மறுநாளேனும் கருத்துகள் கூறி விடுவேன். (இதற்காகவும் அனைவரும் மன்னிக்கவும்.)
இப்போது கூட ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ஒரு பத்து நாட்கள் அடங்கிய நெடுந்தூர பயணம் வந்துள்ளது. (அது நல்லபடியாக சென்று வந்த பின் அந்தப்பயணம் பற்றி/ அதைப்பற்றியாவது பகிர இறைவன் அருள வேண்டும்.) அதற்கான யத்தனங்களில் நேரம் பறக்கிறது. எனவே ஏப்ரல் மாதம் முதல் தேதியிலிருந்து மாதத்தின் பாதி நாட்களுக்கு மேல் என்னால் நம் நட்புகளின் பதிவுகளுக்கு வர இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் என் அன்பான, பணிவான நன்றிகள். 🙏.






கவிதை நல்லாயிருக்கு. ஆனால் வாழ்ந்துதான் பார்க்கலாமே என்கிற பேராசையா வரி பொருந்தவில்லை! பேராசை என்று சொல்லாமல் தன்னம்பிக்கை என்று சொல்லலாமே...
ReplyDeleteஇரண்டாவது கவிதையின் வரிகளும் கருத்தும் அருமை. படங்களில் அந்தக் குருவியின் பாட்டையும் அதனால் நீங்கள் பட்ட பாட்டையும் படித்து நெகிழ்ந்தேன்.
ReplyDeleteபொதுவாகவே தங்களுக்கு ஒரு துன்பம் வரும்போது அந்நாளில் மக்கள் புலம்பும் வரிகள் "நான் யார் கூட்ட கலைச்சேன்? யார் தின்ன சோத்தில் மண்ணள்ளிப் போட்டேன்? என்பதாகும்!
ReplyDeleteஏப்ரல் பயணத்துக்கு வாழ்த்துகள். என்ஜாய்! சென்று வந்து பதிவை மொத்தமாக எழுதலாம் என்று நினைக்காமல் ஒவ்வொரு நாளும் ஓய்வாக இருக்கும் தருணங்களில் அன்றைய நிகழ்ச்சிகள் குறித்து எழுதி டிராஃப்டில் போட்டு வைத்து விட்டால் பின்னர் ஃபிரிஜ்ஜிலிருந்து எடுத்து பரிமாறுவது போல ஈஸியாக பதிவிட்டு விடலாம். பரிமாறும் முன் இலேசாக சூடு படுத்துவது போல பதிவிடும் முன் கொஞ்சமாக மெருகேற்றி விட வேண்டும்! படங்களை இணைத்து விடவேண்டும்!
ReplyDeleteஅடுத்து வருவது.... டண்ட...டாய்ங் .. ட்ரட்ட ட்ரட்ட ட்ரட்ட (மியூசிக்!) நான் முந்தைய வருடங்களில் பேஸ்புக்கில் பதிவிட்ட சிர்ருக்குருவி தினத்துக்கான இரண்டு பதிவுகள்..
ReplyDeleteமுதலில் கவிதை!!! நம்புங்க.. அது கவிதைதான்!
குட்டி சைசில் ஒரு பட்டு உருவம்
உள்ளங்கையில் மூடி விடலாம்
அவ்வளவு சிறிய உருவம்
பஞ்சு போன்ற உடல்.சிறு பந்து போல
கைகளுக்குள் அடையும்
கடுகு சிறுத்தாலும் காரம் போகாது
இதன் சுறுசுறுப்பு யாருக்கும் வாராது!
விட்டுக் கொடுக்க முடியாத இந்த
சிட்டுக்குருவிக்கு
மக்கள் ஒரு தினமே
ஒதுக்கி விட்டார்கள்.
இதை வைத்து பல
படங்களும் பாடல்களுமாய்
புனைந்து விட்டார்கள்
நீயே ஒரு கவிதை
உனக்கெதற்கு தனிக்கவிதை!
உன்னை வைத்து இனி லேகியம்
எல்லாம் செய்ய மாட்டோம்
பயப்படாதே
பறந்து அருகில் வா செல்லம்
இணைந்து வாழ்வோம்..
2023 பேஸ்புக் மார்ச் 20
கடைசி பாரா கவிதை அட்டகாசம் போங்க!!! ஸ்ரீராம்.
Deleteகுருவி!
உன்னை அட(டை)க்க முயலும்
மனிதனின் தலையில்
ணங் ணங் என்று கொத்திவிடு!
கீதா
இதை 'எங்கள் பிளாக்'கில் பகிர்ந்தேனா என்று நினைவில்லை கீதா... 'இல்லை' என்கிறது Search engine
Deleteசூப்பர் கவிதை ஸ்ரீராம்.
Deleteநன்றி கீதா.
Deleteநன்றி கோமதி அக்கா.
அடுத்து ஒரு ப்ளேடு...
ReplyDeleteஇன்று சிட்டுக்குருவி தினமாமே... சி.கு பற்றி (நானும்) ஏதாவது சொல்லவேண்டியது என் கடமை.
1) சிட்டுக்குருவி என்று ஒரு படம் வந்திருக்கிறது. சிவகுமார்-சுமித்ரா நடித்தது. இளையாராஜா இசையில் நல்ல பாடல்கள் இருக்கின்றன.
2) லேகியம் விற்பவர்கள் சிட்டுக்குருவி லேகியம் என்று ஒன்று விற்பார்கள்.
3) "சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா... எனை விட்டுப் பிரிஞ்சி போன கணவன் வீடு திரும்பல..." எம் எஸ் ராஜேஸ்வரி குரலில் இப்படி ஒரு தமிழ்ப் பாடல் இருக்கிறது.
4) "சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு.. தென்றலே உனக்கேது சொந்த வீடு.." பி சுசீலாம்மா குரலில் பாடல்.
5) "சிட்டுக்குருவி.. முத்தம் தருது..." எஸ் பி பி-ஜானகிம்மா குரலில் பாடல்.
6) "சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து..." சுசீலாம்மா குரலில் பாடல்.
7) "ஏ குருவி சிட்டுக்குருவி,, உன் சோடியெங்கே..."
8) "விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்த சிட்டுக் குருவியைப்போலே - பாரதியார்.
9) அலைபேசி டவர்களால்தான் சிட்டுக்குருவி அழிந்து வருகிறதாம்.. இன்று ஒரு நாளாவது அலைபேசியை உபயோகப்படுத்தாமல் இருக்கலாமே...
அடி பொளி பாடல்கள் ஸ்ரீராம்.
Deleteகீதா
நன்றி கீதா.
Deleteசிட்டுக்குருவிக்கான உங்கள் கவிதை நன்று. அது குறித்த சிந்தனைகளும் சிறப்பு.
ReplyDeleteபதிவுகள் முடிந்த போதெல்லாம் எழுதுங்கள். அதைப் போலவே முடிந்தபோதெல்லாம் மற்றவர்களின் பதிவுகளையும் படியுங்கள். கடமைகள் இருக்கும்போது நம் ரசனைகள், விருப்புகள் மறக்கத்தான் வேண்டியிருக்கிறது.
ஏப்ரல் 1 முதல் 10 வரை பயணம் - உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துகள். சென்று வந்ததும் பயணம் குறித்த தகவல்களை தொடர்ந்து எழுத வாழ்த்துகள்.
கமலாக்கா சிட்டுக்குருவிக்கான கவிதையும் படங்களும் நல்லா இருக்கு.
ReplyDeleteபெரும்பான்மை பெண்களுக்கு அதாவது நம் தலைமுறைகளுக்கான கஷ்டங்கள் நீங்கள் முதலில் சொல்லியிருப்பவை பொருந்தும் பெரும்பான்மைக்கு. ஒரு சில குடும்பங்களில் மட்டுமே சப்போர்ட் கிடைக்கும். நம் விருப்பங்களை நிறைவேற்ற.
கீதா
அக்கா இனி படம் எடுக்கும் போது சூரிய ஒளி உங்கள் பின்னாலிருந்து பொருளின் மீது விழுவது போல் இருக்கும் கோணத்தில் எடுத்தால் படம் குருவியைக் காட்டும்! இப்ப குருவிக்குப் பின்னாடி அதாவது குருவி நிழலில் இருந்திருக்கும் சூரிய ஒளி. இல்லைனா நடுப்பகலில் எடுத்தாலும் ஓவர் ஒளி ப்ளாக் அடித்துவிடும். அல்லது பொருளை க்ளியராகக் காட்டாது. எனக்கும் இப்படி ஆகியதுண்டு. ஆரம்பக்காலங்களில்.
ReplyDeleteஏன் இப்படி ஆகிற்டது என்று கொஞ்சம் புகைப்படக்கலை பற்றி வாசித்த போது தெரிந்து கொண்டதுதான் அக்கா.
"உங்க திறமை வியக்க வைக்கிறது...உங்களுக்கு நிறைய விஷயங்கள் தெரிந்திருக்கு" என்ற வரிகளை நீங்க சொல்லக் கூடாது ஓகே வா. ஹாஹாஹா....நானும் ஒவ்வொரு தவறுகளில் இருந்தும்தான் கற்றுக் கொண்டு வருகிறேன்.!!!!!
கீதா
அக்கா, அதாவது மனித மனம் குறிப்பாக நம்ம ஊர்களில், பாருங்க, சிக்னலை சிவப்பு விளக்கு இருக்கும் போது கடக்கக் கூடாது என்று சொன்னால் யாரும் அதை மதிக்கமாட்டாங்க ஆனால் அதே கடுமையான தண்டனை இருந்தால் ஒழுங்கா போவாங்க. அதே போலதான் பல விஷயங்களுக்கும்....
ReplyDeleteஅப்படித்தான் சில விஷயங்களைப் பாவ புண்ணியம் கலந்து சொன்னாதான் மக்கள் ஒழுங்கா இருப்பாங்கன்னு சொல்லப்பட்டவை. ஏன்னா சுய சிந்தனை, கட்டுப்பாடு, ஒழுக்கம் இல்லாததால். கூட்டைக் கலைக்கக் கூடாது என்பது...சிட்டுக்குருவிக்கு மட்டுமல்ல எல்லாத்துக்கும்தான்.
கீதா
குருவி கூடு கட்டினால் அடிக்கடி விஷேச எண்ணங்கள் ஏற்படும் அதாவது மன அழுத்தங்கள், எதிர்மறை எண்ணங்கள் போன்றவை இல்லாமல் எப்போதுமே புத்துணர்வாக இருக்க முடியும். வீட்டில் சுறுசுறுப்பாக பறவை இனங்கள் இருக்கையில், அதனை பார்க்கும் போது நமது மனமும் லேசாகி விடும்.//
ReplyDeleteஆம் ஆனால் சிட்டுக் குருவி என்றில்லை, எல்லாப் பறவைகளுமே. எல்லா விலங்குகளுமே, இப்போது விலங்குகள் தெரப்பி என்றும் இருக்கின்றன. கிளி தெரப்பி என்றும் இருக்கிறது. மன அழுத்தம். ஆட்டிசம் குழந்தைகளுக்கும்....
கீதா
அக்கா எப்ப முடியுதோ வாசிங....பதிவு எழுதங....
ReplyDeleteகீதா
கவிதை மிக அருமை.
ReplyDelete//மனிதரோடு அண்டி வாழாமல்,
மற்றைய ஜீவன்களோடு
மனம் ஒன்றி வாழ்" என
இரக்கத்தோடு வரமளிக்க
இயலாதென மட்டும்
மறுத்து விடாதேயென
இறைஞ்சி கேட்க வேண்டும். 🙏//
நல்ல பிரார்த்தனை..
கூட்டைக் கலைக்க கூடாது என்று தான் மீண்டும் புறா ஜன்னலில் கூட்டு கட்டி இரண்டு முட்டை இட்டு இருப்பதை ஒன்று செய்ய முடியாமல் இருக்கிறேன்.
//ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ஒரு பத்து நாட்கள் அடங்கிய நெடுந்தூர பயணம் வந்துள்ளது//
ReplyDeleteபயணம் இனிமையாக இருக்க வாழ்த்துகள்.
வாழ்க வளமுடன். பயண அனுபவங்கள் நேரம் கிடைக்கும் போது பகிரலாம்.
உங்கள் சிறுவயது நினைவுகள் திருமணம் ஆன பின் ஏற்பட்ட மன உணர்வுகள் பகிர்வு எல்லாம் அருமை. வீட்டை விட்டு புகுந்த வீட்டுக்கு வந்த பின் உள்ள மன நிலை ஒவ்வொருவரும் அனுபவித்து கடந்து இருப்போம்.
ReplyDelete//இப்போது வலைத்தள அறிமுகங்களுக்குப் பின் சகோதர, சகோதரிகளின் பதிவுகளை படிக்கும் போது இந்த சிட்டுக்குருவியின் நினைவுகள் என் மனதை மிருதுவாக வந்து தொடுகின்றன. அந்த தாக்கத்தில், நானும் ஏதோ சிட்டுக்குருவியைப் பற்றி ஒரு சில பதிவை எழுதியுள்ளேன். என்ற பெருமிதமும் சில சமயங்களில் வந்து போகின்றன. //
பெருமித படலாம். அருமையான சிட்டுக்குருவி கவிதை.
படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.