Saturday, November 23, 2019

தகுதி...!


வீடு ஒரு மாதத்திற்கும் மேலாகவே அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. தினமுமே பரபரப்புத்தான். காலையில் பள்ளிச்செல்லும் குழந்தை பரத், ஆபீஸ் வேலைக்கு பறக்கும் மகன், மருமகள் என ஒவ்வொரு நாட்களுக்கும் விரைவுக்கு பஞ்சமில்லை. இப்போது அதற்கும் ஒருபடி மேலாகவே அனைவரும் அதனுடன் ஓடிக் கொண்டிருந்தனர். நாட்களும் "இவர்களின் உத்தரவு பெற்றா நான் நகர வேண்டும்... " என்ற ஒருவித  கர்வ மனப்பான்மையில்  மெள்ள நகர்ந்து செல்லாமல் விரைவாக ஓடிய வண்ணம் இருந்தது.

ஆச்சு..! காலையிலிருந்து காப்பி, டிபன், சமையல் வேலை,  நடுநடுவே சமையலயறை சிங்கிலிருக்கும் பாத்திரங்களை சுத்தப்படுத்துவது, இடையே வாஷிங் மெஷினில் துவைத்த துணிகளை எடுத்து காயப் போடுவது என  " "என்னுடன் ஓடிய காலை நேரம் மதியத்தை தொட்டு விடவா?" எனக் கேட்டுக் கொண்டே போய் தொடவும்  ஆரம்பித்து விட்டது. குழந்தை வினோத்  தூங்குகிறான். அவன் எழுவதற்குள் காலை வேலைகளை முடித்து விட்டால் மறுபடி பரத் வந்ததும், இருவரும் சேர்ந்து உறங்கும் போது, மதிய,  மாலை நேரங்களில் பாக்கி வேலைகளை முடித்து விடலாம்.  இப்படி பம்பரமாக சுழன்று யாருககாக இத்தனை வேலைகளை பண்ணுகிறோம் என்று மனசு ஆயாசபடும் போது, சிறிது நேரம் ஏதாவது ஒரு புத்தகத்தை புரட்டுவது  என் பழக்கம். அப்படி ஒரு புத்தகத்தை கைகள்  பிரித்ததும் கண்கள் மேயத்துவங்கின.


இந்த கர்வம் என்பது மனித குலத்திற்கு இயல்பான ஒன்று. (வாழ்க்கையில் வித விதமான செல்வங்களான குழந்தை செல்வம், கல்விச் செல்வம், வாழ்க்கையில் செளகரியமாக வாழ்வதற்கு ஆதாரமான பணச் செல்வம், எதுவுமே நினைத்தபடி கிடைத்து விடும் போது வரும் பெருமைப் செல்வம், முதிர்ந்த அறிவு வரவர தன்னைப் போலவே அனைவரும் வாழ கற்றுக்கொள்ள வேண்டுமென்ற ஞானச்செல்வம் என இத்தனை செல்வங்களும் ஒருவனுக்கு படிப்படியாக கிடைக்கும் போது, இது தனக்கு மட்டுந்தான் அமைகிறது என்ற கர்வ குணமும், ஒவ்வொரு மனிதனிடம் தானாகவே அடிமையாகி விடுகின்றன. ஒரு குழந்தையின் பிறப்பிலிருந்தே இந்த குணம் தோன்றி விடுமோ? "எனக்கு திருமணம் ஆனவுடனே இந்தக் குழந்தைச் செல்வம் நான் நினைத்தபடி எனக்கு கிடைத்து விட்டது பார்த்தாயா?" என்ற எண்ணம் மனிதர்களிடையே வளர வளர அந்த குழந்தையுடன் சேர்ந்து அதுவும் வளர்ந்து விடும் போலிருக்கிறது. 

இத்தனைக்கும் மூலக்காரணம் அவரவர் கொடுப்பினை, இறைவன் தரும் வரங்கள் என்ற அதிர்ஷ்டம்தான் என்பதை புரிந்து கொண்டால், இந்த கர்வம் உணரப்படும் ஒரு பொருளாக மாறி விடாதா? அப்பொருளை உணர்ந்த பின் நமக்கென்று வாய்ப்பதை சுலபமாக, மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் வரும் போது அந்த மமதை இருக்குமிடம் தெரியாது நசிந்து விடுமே..!! 

ஏன் மனித குலம் அதை புரிந்து கொள்ள மறுக்கிறது.? புரிந்து  கொள்ளாதது மட்டுமின்றி, பிறருக்கும் நம் போன்ற கைப்பிடி இதயந்தானே.. !!அதை நொறுங்கச் செய்கிறோமே என்ற  பச்சாதாப எண்ணங்களையும் அந்த  மமதை தூரத்தில் தள்ளிவைத்து அழகு வேறு  பார்க்கிறது...! நரம்பில்லாத   நாக்கை சுழற்றி வார்த்தைகள் எனும் பந்தைக் கொண்டு பிறரை அடிக்கும் போது  சுவற்றில் அடிபட்ட பந்துக்களாய் அவை திரும்பி வந்து தங்களையும்  தாக்க எவ்வளவு நேரமாகும் என்பதை செருக்கின்  அறிவு சிறிதேனும் ஏன் புரிந்து கொள்ளாது போகிறது..? 

இந்த மாயை நிரம்பிய  உலகத்தில் வாழும் ஒவ்வொரு நொடியும் மனமானது இறைவனை நினைத்தபடி இருந்தால்,  ஆணவம், மமதை, கர்வம், செருக்கு என்ற இந்த குணங்கள் தலை தூக்கி மனம் வீசும் புயல் காற்றுக்கு தோதாக ஆடி யாருக்கும் சேதத்தை விளைவிக்காமல், செல்லரித்த வேரற்ற மரங்களாய் வீழ்ந்து விடும் இல்லையா?

படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி விட்டு எழுந்தேன். மனம் ஏனோ ஒரு நிலையில்லாமல் தவித்தது. வாழ்ந்த காலங்கள் வரிசையாய் நினைவுக்கு வந்தன. இதில் கர்வம் கொள்ளும் அளவுக்கு  என்று நடந்திருக்கிறது...?  அதற்கும் ஒரு தகுதி வேண்டுமே...! அந்த தகுதி தானாகவே வருமா? இல்லை வளர்த்துக் கொள்ள வேண்டுமா?

மனசு சுற்றி, சுற்றி வந்து பழையனவற்றை நினைத்துப் பார்த்தது. . "தினமும்  வேகமாக  சாப்பிட்ட உணவை அசை போடும் மாடு கூட ஒரிடத்தில் அமர்ந்தபடி எதையும் நினைக்காமல், கொள்ளாமல் அசை போடுவதிலேயே குறியாக மனதை வைத்துக் கொள்ளும்." ஆனால் அந்த சக்தியும் மனிதருக்கு இல்லை. மனம் அலை பாய்ந்தபடி அசை போடக்கூட நேரமில்லாமல் மென்மேலும், பாரங்களை ஏற்றியபடி, ஓடிக் கொண்டிருக்கிறது. இன்றில்லை.. என்றைக்குமே அது அப்படித்தான்..!

 பன்னிரெண்டரை மணிக்கு ஸ்கூல் வேன் வந்து விடும்.. இரண்டு மாடி படிகளில் இறங்கி  வீட்டு வாசலில் இறக்கி விடும்  குழந்தை பரத்தை அழைத்து வர வேண்டும். அதற்குள் உறங்கி கொண்டிருக்கும் வினோத்தை எழுப்பி அவனுக்கு கொஞ்சம் வயிற்றுக்கு ஏதாவது ஆகாரம் தந்து விட வேண்டும். அப்புறம் பரத் வந்ததும், அவனுடன் இவனும் மல்லுகட்டத் தொடங்கி விட்டால் ஏதும் சாப்பிட மாட்டான். மறுபடி தினசரி கடமைகளில்  சக்கரமாக மனது சுழல ஆரம்பித்தது.

என்னங்க...! நீங்க வர்ற திங்கள் கிழமைக்கு லீவுக்கு சொல்லிட்டீங்களா? இன்னமும் ஒரு வாரந்தானே இருக்கு..! நல்லபடியா இந்த "இண்டர்வியூ" லே செலக்ட் ஆகணும். அப்பத்தான் நல்லாயிருக்கும். " மருமகள் என் மகனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

பரத்துக்கு சாதம் ஊட்டிக் கொண்டிருந்த நான்  "வினோதா..! இப்பவே அவன் ரொம்ப களைச்சு வர்றான். இது  ஒத்துக்குமான்னு கொஞ்சம் பாத்துக்கம்மா..!" என்றதும், அவள் முகம் லேசாக மாறியது.

"நீங்க கொஞ்சம் இதிலெல்லாம் தலையிடாமே இருங்க.." என்ற முகபாவம் வார்த்தைகளில் சற்று மெருகேற, "நானும் எவ்வளவு நாளா சொல்லிகிட்டே இருக்கேன். உங்க பையன் ஆரம்பத்திலே எடுத்த இந்த முடிவு சரியில்லைன்னு.. எங்க ஆபீஸ்லே கூட வேலை பாக்கிறவங்க இதை விட பெரிய இடமெல்லாம் ட்ரை பண்ண கூடாதான்னு கிண்டல் பண்றாங்க..! இத்தனைக்கும் உங்க பையனுக்கு அன்னைக்கு தேதியிலே லீவு கூட கிடைச்சிடும்....! எனக்குத்தான் போராடி வாங்கனும். ஏன்னா என்னோட வேலை அப்படி...!! என்றதும் என் மகனுக்கு லேசாக  வந்த கோபம் கொஞ்சம் திசை திரும்பி என் மேல் அடித்தது.

"அம்மா...! உனக்கொண்ணும் தெரியாது. நீ இன்னமும் அந்த காலத்திலேயே இருக்கே..! உன்னோட வேலை என்னவோ அதை மட்டும் பாரு..! எதுக்கு எல்லாத்தியும் மூக்கை நுழைச்சு அவஸ்த்தை படுறே..! என்றபடி எழுந்து  அவன் அறைக்குள் போனான்.

எனக்கு காரணமில்லாமல், கர்வத்தின் நிலைபாடு பற்றி படித்தது நினைவுக்கு வந்தது. ஒரே குடும்பத்தில் பிரிக்க முடியாத பந்தத்தில் இருந்தால் கூட, தன்னை விட ஊதியக் குறைவோ, இல்லை, வேலைகளின் தரக்குறைவோ பிறருக்கு கொஞ்சம் குறைவாக இருந்தாலே அதுவும் கூட ஒரு வித கர்வத்தை எதிராளி மனிதருக்கு உண்டாக்கும் என்று தோன்றியது. இதில் ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லை எனவும் புரிந்தது.

எப்போதும் போல், வார்த்தைகளின் தாக்கம்  கொஞ்சம் வலித்தாலும், இயல்பாக அதை தாங்கி பழக்கப்பட்ட மனது சமாதானபடுத்திக் கொண்டது.  ஒன்றுமே  தெரியாததால்தான், கணவருக்கு வந்த குறைந்த சம்பளத்தில், செட்டும் கட்டுமாக குடும்பம் நடத்தி, தனக்கென்றோ, தன் கணவருக்கென்றோ, எதுவும் ஆசைப் பட்டதை வாங்கிக் கொள்ளாமல் வாழ்ந்து, மகனையும், மகளையும் படிக்க வைத்து இருவருக்கும் தகுந்த வாழ்க்கைத் துணைகளை தேடி வைத்த பின்னர், தீடிரென வந்தழைத்த காலனின் பின் சென்ற கணவரின் மறைவையும் தாங்கியபடி, தன் உழைப்பை இவர்களுக்கு மட்டுமே அளித்தபடி இப்படி  உலாவ முடிகிறதோ...!! மனதில் எப்போதும்  தானாக வந்து மறையும் சின்ன சின்ன  கோபங்கள்  இன்றும் தலைகாட்டி மறைந்தன. தன் மனதும் இந்த விஷயத்தில் கொஞ்சம் கர்வத்தின்பால்  நிரந்தரமாக வசப்பட்டு விடுமோ? என எண்ணிய அடுத்த கணம்  மெல்லிய இளநகை என் மனதுள் உருவாக அங்கிருந்து பேசாமல் நகர்ந்தேன்.

மறுநாள் காலை எழுந்தவுடன் ஆபீஸுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்த வினோதினி பரத்தை  பள்ளிக்கு ரெடி செய்து விட அவன் எழுப்பச் சென்றவள் "ஐயோ..! ஏன் இப்படி குழந்தைக்கு அனலா கொதிக்குது..! சங்கர்...சங்கர்... இங்கே வாங்களேன்..!" என்றலறிய கூச்சலுக்கு, குளியலறைக்கு குளிக்கச் சென்று கொண்டிருந்த என் மகனும், இவர்கள் ஆபீஸ் புறப்படுவதற்காக சமையல் ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த நானும் பதறி அடித்துக் கொண்டு படுக்கையறைக்குள் சென்றோம்.

குழந்தைக்கு தீடிரென காய்ச்சல் வந்தது எல்லோருக்குமே கொஞ்சம் பயத்தை ஊட்டியது. குழந்தையை அவசரமாக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று வந்த பின், சற்று தாமதமாக, அவர்கள் இருவரும் அலுவலகம் புறப்பட்டு சென்றார்கள். போகும் போது என்னென்ன மருந்துகள் தர வேண்டுமென மாறி, மாறி இருவரும் பத்து தடவை கூறிய பின் "என்னதான் அவனுக்கு சாப்பிட கொடுதீர்கள்? ஏதாவது அவனுக்கு ஒத்துக் கொள்ளாததையெல்லாம் அவன் கேட்டவுடனே எடுத்து தந்திடுவீங்களா? இரண்டு பேரை பாத்துக்க முடியல்லையா உங்களுக்கு? அதை விட உங்களுக்கு வேறே என்ன வேலை? எனக்கு இப்படியெல்லாம் அடிக்கடி  லீவு எடுக்க முடியாது.. நான் ஒருத்தி இப்படி ஓடி ஓடி சம்பாதிக்கிலைன்னா , உங்க மகன் சம்பளத்தை கொண்டு எப்படி நினைச்சபடி நல்லா வாழறதாம்.! அதனால்தான் இப்படி படிச்சு படிச்சு சொல்றேன். " என்று படபடத்தபடி புறப்பட்டுச் சென்றாள் வினோதினி.

இரண்டொரு நாளில், மருத்துவர்  தந்த மருந்துகள் உதவியுடன் பரத் குணமாகி வந்தான். தினமும் காலை வேலைக்குச் செல்லும் முன், "என்னங்க..  நாள் நெருங்கிடுச்சு..! கொஞ்சம் தயார் படுத்திக்கோங்க.. எனக்கு டயமே இல்லை.. நான் வந்துதான் சொல்லனும்னு அலட்சியமாக இருக்காதீங்க!!" நல்ல வேளை! பரத்துக்கு குணமாயிண்டு வர்றது. இப்போ பார்த்து இப்படி ஆயிடுச்சேன்னு ரொம்ப கவலையாயிருந்தது...! என்று என் மகனை விரட்டியபடிச்  சென்றாள் விநோதினி. அவள் உஷ்ணப் பார்வைகள் என் பக்கம்  திரும்பும் நேரமெல்லாம்  " நீதான் இதற்கு காரணம்...! என்பது போல் சுட்டதாக எனக்குத் தோன்றியது.

அன்று காலை புலபுலவென சீக்கிரமே விடிந்து விட்டதாகத் தோன்றியது. "ஒரு வாரத்தின் பரபரப்பு  இன்னுமும் கொஞ்ச நேரத்தில் நான் அடங்கி விடுவேன்" என பயமுறுத்தியதில், ஓடும் ஒவ்வொரு விநாடிகள் கூட நிமிடங்களுக்கு சற்று பயந்தது மாதிரி தெரிந்தன.

"எங்கே போனாய் வினோ? உன்னைக் காணோமேயென்று பார்த்து சிறிது நேரம் தேடியதில் நான் தயார்படுத்திக் கொள்ள தாமதமாகி விட்டது. சொல்லிக் கொண்டு போகக் கூடாதா? ஃபோனை வேறு வீட்டிலேயே வைத்து விட்டு அப்படி எங்கே போய் விட்டாய்.? " என்ற என் பையனின்  உரத்த குரல் கேட்டு அத்தனை நேரம் அவளை காணோமே என்று நினைத்த நானும் வாசல் பக்கம் வந்தேன்.

" நீங்க அதுக்குள்ளே கிளம்பியாச்சா? வேறே எங்கேப் போகப் போறேன்? நீங்க குளிக்கிறதுகுள்ளே பக்கத்திலே பிள்ளையார் கோவிலுக்குச் சென்று ஒரு சுத்து சுத்திட்டு, தரிசனம் செய்து ஒரு சிதறு தேங்காய் போட்டு வந்தேன். போற வேலை நல்லபடியா நடக்க வேண்டாமா? என்று  விநோதினி திரும்பி என்னை பார்த்தவள் "ஒரு இருபத்தோரு கொழுக்கட்டையாவது பண்ணி, வீட்டு பிள்ளையாருக்கு இன்று கை காட்டி விடுங்கள். இன்னைக்கு கிளம்பறதுக்கு எத்தனையோ தடைகள்..! நாலு பக்கமும் நம்மாலானதை கடவுளுக்கு செய்தால்,  "இண்டர்வியூ" நாம எதிர்பார்க்கற மாதிரி சுமுகமாக அமையும்."  என்றாள் உத்தரவு பொதிந்த குரலில்.

நான் மெளனமாக தலையசைத்தேன்.

வெளி நாடு சென்று நல்லபடியாக வாழ்ந்து வரும் மகளும், மருமகனும்  தம் வாழ்க்கை தம் வசதி என வாழ்ந்து வருகின்றனர். என்றைக்காவது இந்த அம்மாவின் நினைவு என் மகளுக்கு வரும் போது ஃபோனில் அரைமணி நேரம் மகள்   பேசுவாள். குழந்தைகளையும் பேச சொல்வாள். குழந்தைகளின் கல்வி, விளையாட்டு, பிற திறமைகள் என்ற  பெருமைகளே அதில் பாதி நேரம் எடுத்துக் கொள்ள, மீதியில் சிறிது நலம் விசாரிப்பும், பெரும்பான்மை "நானோ இங்கிருக்கேன். என் மாமியார், மாமனாரே மூணு மாசத்துக்கு மேலே இங்கு தங்க முடியாம கிராமத்து நிலம், வீட்டையும் பாத்துக்க முடியாம போயிட்டும்,வந்து கிட்டும்  இருக்காங்க...! நீ எப்போதும் அண்ணனிடமும், அண்ணியிடமும் அனுசரித்து நடந்து கொள்..! இதுதான் உனக்கும் நல்லது..! "என்ற ரீதியிலும், பேச்சு முடியும்.

மகனும், "தன் குடும்பம்" என்ற பக்குவம் வரப்பெற்றவனாய், எந்த ஒரு கருத்துக்கும் "எதற்கும் பேசாமல் இரு.! எதையும் கண்டுக்காதே.. ! அதுதான் உனக்கும், எனக்கும் நல்லது. !!" என்று மட்டும்  பேசியே நகர்ந்து கொள்வான்.  ஆக இருவருக்கும் நம் அம்மா என்பவள் தங்கள் "அடக்கு முறையில் இருப்பவளே" என்ற எண்ணங்களில் ஊறிப் போய் பல வருடங்கள் ஆகி விட்டன.

அன்று படித்த புத்தகத்தின் வாக்கியங்கள் கண் முன் நிழலாடின.  அம்மாவைத் தவிர்த்து, பிறரை நோக வைக்காத மனம் கொண்டபடி இவர்கள் இருவரையும் நல்லபடியாகத்தான்  வளர்த்திருக்கிறோம்" என்ற கர்வங்கூட ஒரு சில சமயம் எனக்கும் வந்திருக்கிறது. அது மட்டுமல்ல.. !! "என்னால்தான், என் ஒருத்தியால்தான் இத்தனையும் சமாளித்து கொண்டு, எதையும் பொருட்படுத்தாது ஒரு நல்ல "அம்மாவாக"வாழ முடிகிறது "என்ற செருக்கும் அவ்வப்போது  வந்திருக்கிறது. வேறு எந்த பொழுதிலும், பிறந்ததிலிருந்து எதற்கும் கர்வம் காட்டாத மனம் இந்த இரு நேரங்களில் அந்த கர்வம் தானாக வந்து போவதை என்னால் தடுக்க இயலவில்லை. என்பதே மாபெரும்  உண்மையாய்    விஸ்வரூபம்  எடுத்து தோன்றி மறைந்தது.

இதோ...! காலை வேலைகள் இனிதே முடித்த கையோடு டிபனையும் சாப்பிட்டு விட்டு, குழந்தை வினோத்தை பத்திரமாக பார்த்துக் கொள்ள சொல்லி விட்டு அவசரமாக என் மகனும், மருமகளும்  பரத்தையும் அழைத்துக் கொண்டு "இண்டர்வியூ" க்கு கிளம்பி விட்டனர் அவர்கள் வருவதற்குள் குழந்தை வினோத்தை கவனித்து உறங்க பண்ணி விட்டு, மதிய சமையலை முடித்து,  மருமகள் விருப்பபடி கடவுளுக்கு கொழுக்கட்டை செய்து படைத்து, குழந்தை "பரத்துக்கு" அவர்களின் விருப்பப்படியே அந்தப் பெரிய பள்ளியில்   நடக்கும் இந்த அட்மிஷன்   "இண்டர்வியூ" வில் வெற்றிப் பெற்று  அவனுக்கு பிரி. கே .ஜி க்கு நல்லபடியாக இடம் கிடைத்து அவனும் நன்றாக படித்து பெரிய ஆளாக வர  பிரார்த்தனைகள்  செய்ய ஒரு நல்ல அம்மாவாக  மட்டுமில்லாமல் ஒரு நல்ல பாட்டியாகவும் தயாரானேன்.

முடிந்தது..... 🙏.... 

76 comments:

 1. கடைசியில் இண்டர்வியூ குழந்தை படிப்புக்குதானா ?

  முடிவில் முடிச்சை அவிழ்த்தது அருமை.

  பல இல்லங்களில் அம்மாவின் நிலைப்பாடு இதுதான் என்ன செய்வது வாழ்ந்தே தீரவேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தாங்கள் முதலில் கதைக்கு வருகை தந்தற்கும், வந்து தந்த கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.

   கதையை ரசித்துப் படித்து (குறிப்பாக கதையில் இண்டர்வியூ பகுதியை)
   பாராட்டியமைக்கு மிக்க நன்றி.

   /பல இல்லங்களில் அம்மாவின் நிலைப்பாடு இதுதான் என்ன செய்வது வாழ்ந்தே தீரவேண்டும்./

   உண்மை..ஒவ்வொரு குடும்ப வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேறுபட்ட கதாபாத்திரங்கள். ஆனால் வாழ்க்கை முடிவு வரை அனுசரித்தோ , இல்லை மனக் கலக்கமுற்றோ வாழ்ந்துதான் ஆகவேண்டும்.

   நல்லதொரு கருத்துக்கு நன்றி சகோதரரே.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 2. ஏதோ பாலசந்தர் படம் பார்ப்பதுபோல இருந்தது. முடிவும் அப்படியே... சிறப்பு.
  தமிழ் விக்கிபீடியா டிசம்பர் 2019இல் நடத்துகின்ற ஆசிய மாதம் போட்டியில் கலந்துகொண்டு கட்டுரைகளை எழுதி வருகிறேன். இந்த மாதம் 30ஆம் நாள் வரை இப்போட்டி நடைபெறுகிறது. தமிழில் இல்லாத செய்திகளை/பதிவுகளை ஆங்கில விக்கிபீடியாவிலிருந்து தமிழுக்குக் கொண்டு வரும் என்னுடைய சிறிய முயற்சி. ஒரு நாளைக்குக் குறைந்தது ஒரு கட்டுரையாவது எழுத/மொழிபெயர்க்க திட்டமிட்டு எழுதி வருகிறேன். ஆதலால் கருத்துரை இடுவதில் தாமதமாகிறது. பொறுத்துக்கொள்க.


  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   /ஏதோ பாலசந்தர் படம் பார்ப்பதுபோல இருந்தது. முடிவும் அப்படியே... சிறப்பு./

   தங்கள் கருத்துரைகள் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். பாராட்டுகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

   /தமிழ் விக்கிபீடியா டிசம்பர் 2019இல் நடத்துகின்ற ஆசிய மாதம் போட்டியில் கலந்துகொண்டு கட்டுரைகளை எழுதி வருகிறேன். தமிழில் இல்லாத செய்திகளை/பதிவுகளை ஆங்கில விக்கிபீடியாவிலிருந்து தமிழுக்குக் கொண்டு வரும் என்னுடைய சிறிய முயற்சி. ஒரு நாளைக்குக் குறைந்தது ஒரு கட்டுரையாவது எழுத/மொழிபெயர்க்க திட்டமிட்டு எழுதி வருகிறேன். /

   தங்களுக்கு முதலில் என மனம் நிறைந்த வாழ்த்துக்கள். தங்களின் இவ்வளவு எழுத்துலக வேலைகளுக்கு நடுவிலும் என் தளம் வந்து கதையை படித்து கருத்திட்டிருப்பது என்னை மிகவும் பெருமை கொள்ளச் செய்கிறது. தாங்கள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டு தினம் ஒரு கட்டுரை முயற்சியில் ஈடுபட்டிருப்பது மிகவும் மகிழ்வீன விஷயம். நீங்கள் இப் போட்டியில் வெற்றி பெற ஆண்டவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

   தாமதம் என எண்ணவேயில்லை. தங்களுக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது வந்து பதிலளியுங்கள். அன்றும் சரி..! இன்றும் சரி! தங்களின் ஊக்கம் மிகுந்த கருத்துரைகள் என் எழுத்தை செம்மையாக்க உதவுகின்றன. தங்களின் அன்பான கருத்துக்களுக்கு மீண்டும் மிக்க நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 3. கதை ஆரம்பிக்கும் போது இருந்து நிறைவு வரை மிக அருமை. கதையை ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.

  //நாட்களும் "இவர்களின் உத்தரவு பெற்றா நான் நகர வேண்டும்... " என்ற ஒருவித கர்வ மனப்பான்மையில் மெள்ள நகர்ந்து செல்லாமல் விரைவாக ஓடிய வண்ணம் இருந்தது//

  காலம் யாருக்காவும் காத்து இருப்பது இல்லை, அது பாட்டுக்கு ஓடிக் கொண்டே இருக்கும்.


  //குழந்தை வினோத் தூங்குகிறான். அவன் எழுவதற்குள் காலை வேலைகளை முடித்து விட்டால் மறுபடி பரத் வந்ததும், இருவரும் சேர்ந்து உறங்கும் போது, மதிய, மாலை நேரங்களில் பாக்கி வேலைகளை முடித்து விடலாம்.//

  இப்படி வயதான காலத்திலும் முன்பு பிள்ளைகளுக்கு ஓடியது போலவே பேரகுழந்தைகளுக்கும் ஓடி கொண்டு இருக்கும் பாட்டிகளை பார்க்கிறேன்.


  //அசை போடக்கூட நேரமில்லாமல் மென்மேலும், பாரங்களை ஏற்றியபடி, ஓடிக் கொண்டிருக்கிறது. இன்றில்லை.. என்றைக்குமே அது அப்படித்தான்..!//

  உண்மைதான், படித்த புத்தகத்தை அசை போட கூட முடியாமல் என்பதை படிக்கும் போது அந்த அம்மாவின் நிலை கவலை அளிக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   முதலில் நேற்று தங்களுக்கு பதில் தராமல் இன்று தருவதற்கு என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். இதுவும் கால அவகாசத்தினால்தான் தாமதமாகி விட்டது.

   கதையை ரசித்து படித்து கருத்திட்டிருப்பது எனக்கு மிகவும் மன மகிழ்ச்சியை தருகிறது. தங்களின் ஊக்கமிகுந்த கருத்துக்கள்தான் என்னை மென் மேலும் எழுத தூண்டுகிறது. அதற்கு முதலில் என் நன்றிகள்.

   /இப்படி வயதான காலத்திலும் முன்பு பிள்ளைகளுக்கு ஓடியது போலவே பேரகுழந்தைகளுக்கும் ஓடி கொண்டு இருக்கும் பாட்டிகளை பார்க்கிறேன்./

   உண்மைதான்.. எவ்வளவு வயதானாலும். தன் குழந்தைகள் என்ற அந்த அன்பு, பாசம் வரத் தயங்குவதில்லை. என் பாட்டியின் வளர்ப்பிலே நான் அதை கண்டு கொண்டு விட்டேன்.

   இப்போதும் அந்த மாதிரி தன் குடும்பம் என ஓடி, ஓடி உழைக்கிறவர்களை காண்கிறேன். அதன் கலவையாக கதை உருவாகி விட்டது. கதையின் வாசகங்களை மேற்கோளுடன் சுட்டிக்காட்டி தாங்கள் ரசித்திருப்பதற்கு மகிழ்வுடன் கூடிய நன்றிகள் சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 4. உரிமையுடன் தன் கருத்துக்களை சொல்லமுடியாமல், எவ்வளவு பொறுப்பாய் பார்த்துக் கொண்டும் குற்றம் குறை சொல்லும் மகன், மருமகள் . அந்த மாவை எது இப்படி கட்டி போட்டு இருக்கிறது குழந்தைகள் மேல் உள்ள அன்பு, பாசம்.

  //பெரிய ஆளாக வர பிரார்த்தனைகள் செய்ய ஒரு நல்ல அம்மாவாக மட்டுமில்லாமல் ஒரு நல்ல பாட்டியாகவும் தயாரானேன்//

  குழந்தைகள், பேரன் பேத்திகள் நலத்திற்கு பிரார்த்தனை செய்து கொண்டே இருக்கட்டும் அன்பு தாய். மகன், மகள், மருமகள் அவர் அருமையை உணர்ந்து நடத்த நாம் பிரார்த்தனை செய்வோம்.

  ReplyDelete
  Replies
  1. முடிவெடுக்கும் அதிகாரம் இருக்கும் இடத்திலிருந்து, மற்றவர்கள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படும் இடத்துக்கு வருவது சற்றே கடினமான விஷயம்தான்.

   Delete
 5. ஆஆவ்வ்வ்வ் கண்டுபிடித்து வந்துவிட்டேன், ஊக்கேயிலிருந்தே 4 ஆவதாக வந்துவிட்டேனாக்கும்:))..

  கதையோ.. ஆவ்வ்வ்வ் நன்றாகக் கதை எழுதுறீங்க.. உங்களுக்கு கதை எழுதும் ஆர்வம் அதிகம் இருக்கிறதுபோலும்.. இன்னும் எழுதுங்கோ.. எனக்கும் கையில் கொப்பி பென் வைத்து எதையாவது எழுதப் பிடிக்கும்.

  எங்கள் வீட்டுக்கு வந்து பார்த்தால் தெரியும், கிச்சினில், பெட்டில், கொம்பியூட்டர் அருகில், காண்ட் பாக்கில், காரில் இப்படி அனைத்து இடங்களிலும் ஒரு கொப்பியும் பென் இருக்கும்.. காதில் விழுவதை எழுதி வைப்பேன் ஹா ஹா ஹா... கையால எழுதப்பிடிக்கும் எனக்கு.

  // சிங்கிலிருக்கும் பாத்திரங்களை

  ReplyDelete
 6. // சிங்கிலிருக்கும் பாத்திரங்களை//

  எங்கே நெல்லைத்தமிழன் போயிட்டாரோ..:) எனக்கு இதுக்கு டமில் வேணும்?:).

  //வாழ்க்கையில் வித விதமான செல்வங்களான குழந்தை செல்வம், கல்விச் செல்வம், வாழ்க்கையில் செளகரியமாக வாழ்வதற்கு ஆதாரமான பணச் செல்வம், எதுவுமே நினைத்தபடி கிடைத்து விடும் போது வரும் பெருமைப் செல்வம்,//

  இது உண்மைதான், பலரிடம் இதைக் காண முடியும், ஆனா அனைத்தும் கிடைத்தாலும், அப்பவும் நல்ல மனதோடு பணிவாக அடுத்தவர்களை மதிச்சு நடக்கத் தெரிந்தோருக்கு மட்டுமே இவை கிடைத்தால், அவை நிஜச் செல்வங்களாகும்...

  பதவி வரும்போது பணிவும் வர வேண்டும்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அதிரா சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   தாங்கள் உடனடியாக 4 ஆவதாக வந்து இந்தளவிற்கு விமர்சனங்கள் தந்திருப்பது என்னை சந்தோஷமடையச் செய்கிறது. எனக்குத்தான் அனைவருக்கும் பதில் தர தாமதமாகி விட்டது. மன்னிக்கவும்.

   கொப்பி கதைக்காக எழுதப்பட்டதல்ல. காப்பியை களவாடி எடுத்திருப்பது
   தத்துவக்கடல் கல்லிடை கமலானாந்தா விடமிருந்துதான். ஹா. ஹா. ஹா.

   /எங்கள் வீட்டுக்கு வந்து பார்த்தால் தெரியும், கிச்சினில், பெட்டில், கொம்பியூட்டர் அருகில், காண்ட் பாக்கில், காரில் இப்படி அனைத்து இடங்களிலும் ஒரு கொப்பியும் பென் இருக்கும்.. காதில் விழுவதை எழுதி வைப்பேன்/

   நல்ல விஷயத்திற்கு பாராட்டுக்கள் நினைவில் மறந்தாலும் நல்ல செய்திகள் எப்போதும் உடன் தங்கி இருக்கும்.

   "சிங்லிருக்கும்" . எழுதும் போதே இங்கு தமிழ் தடுமாறுகிறதே என நினைத்தேன். "சமையல் மேடையில் பாத்திரங்களை கழுவுமிடம்" என வந்திருக்க வேண்டுமோ?
   ஆமாம்.. நீங்கள் தமிழில் புலமை பெற்றவர் என்று பார்த்தால் உதவிக்கு நெ. தமிழரை அழைத்திருக்கிறீர்கள். அவரும் "மேடை" யேற விருப்பமின்றி கீழிருந்தே வேறு வகைக்கு விளக்கம் அளித்து விட்டார்.. ஹா ஹா ஹா. இப்போது" சிங்" கிற்கு யார் பதில் சொல்லப் போகிறார்கள் என காத்திருக்கிறேன்.:)

   ஆமாம்.. பதவி வரும் போது பணிவு கண்டிப்பாக வர வேண்டும். நல்ல கருத்துக்கள் தந்திருப்பதற்கு மிக்க நன்றிகள் அதிரா.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 7. // "எனக்கு திருமணம் ஆனவுடனே இந்தக் குழந்தைச் செல்வம் நான் நினைத்தபடி எனக்கு கிடைத்து விட்டது பார்த்தாயா?" என்ற எண்ணம்//

  உண்மை, தாம் நினைத்தது நடந்துவிட்டால், சிலருக்கு கடவுள்கூட கண்ணுக்கு தெரிவதில்லை, வருங்காலம் முழுக்க இப்படி தன் கெட்டித்தனத்தாலேயே அனைத்தையும் சாதித்து விடுவேன் எனும் ஆணவம் வந்து கண்ணை மறைத்து விடுகிறது.

  //பிறருக்கும் நம் போன்ற கைப்பிடி இதயந்தானே.. !!அதை நொறுங்கச் செய்கிறோமே என்ற பச்சாதாப எண்ணங்களையும் அந்த மமதை தூரத்தில் தள்ளிவைத்து அழகு வேறு பார்க்கிறது...!//

  தன்னைப்போலப் பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே.. அந்தத் தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே....

  ReplyDelete
 8. //இதில் கர்வம் கொள்ளும் அளவுக்கு என்று நடந்திருக்கிறது...? அதற்கும் ஒரு தகுதி வேண்டுமே...! அந்த தகுதி தானாகவே வருமா? இல்லை வளர்த்துக் கொள்ள வேண்டுமா?//

  ஹா ஹா ஹா குட் கொஸ்ஸன்:)).. இதை அப்படியே எடுத்துப்போய் புதன்கிழமையில இன்றே கொப்பி பேஸ்ட் பண்ணிடுங்கோ கமலாக்கா ஹா ஹா ஹா...

  ReplyDelete
  Replies
  1. ஆஆஆ ஸ்ரீராமைக் காணமே என நினைச்சேன், நான் ரைப் பண்ணுவதில் மும்முரமாக இருந்தபோது வந்திருக்கிறார் ஹா ஹா ஹா..

   Delete
 9. ///பரத்துக்கு சாதம் ஊட்டிக் கொண்டிருந்த நான் "வினோதா..! இப்பவே அவன் ரொம்ப களைச்சு வர்றான். இது ஒத்துக்குமான்னு கொஞ்சம் பாத்துக்கம்மா..!" என்றதும், அவள் முகம் லேசாக மாறியது.//

  இதுதான்.. இதுதான் எனக்குப் பிடிக்காத ஒன்று, நான் இப்போ தொடக்கம் என்னை நிறைய விசயங்களில் ரெடி பண்ணி வச்சிருக்கிறேன், எனக்கு எதெல்லாம் பிடிக்காதோ அதை என் பிள்ளைகளுக்கும் செய்திடக்கூடாது என்பது....

  பேசாமல் பேரனுக்கு சாப்பாட்டைத்தீத்தாமல் எதுக்கு காதை அங்குவரை நீட்டி, அதுக்கு இவ பதில் சொல்றா கர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அவர்களாக வந்து ஆலோசனை கேட்டால் மட்டுமே நம் விருப்பத்தை சொல்லோணும், மற்றும்படி தலையிடக்கூடாது, மகன் மருமகளும் பெரியவர்கள்தான் அவர்களுக்கும் சிந்திக்க தெரியும் என நினைச்சு நாம் ஒதுங்கி விட வேண்டும்..

  இந்த விசயத்தை எனக்கு கற்றுத்தந்தது எங்கள் மாமாதான்[கணவரின் அப்பா], அவர் தன் விருப்பம் என்ன என்பதை என் கணவரிடம் சொல்லுவார், சொல்லிவிட்டுச் சொல்லுவார் “இது என் விருப்பம், ஆனா நீங்க அதிராவிடம் கேட்டு முடிவு செய்யுங்கோ” என்பார்..

  ReplyDelete
  Replies
  1. தானும் அந்தக் குடும்பத்தில் ஒரு அங்கம் என்கிற உணர்வு இருக்கும் யாருக்கும் அப்படிச் சொல்லத்தானே தோன்றும் அதிரா...  

   Delete
  2. இல்ல ஸ்ரீராம், நான் அப்படி நினைப்பதில்லை, திருமணமாகிட்டால் அது வேறு குடும்பம், அவர்களுக்கு தம் குடும்பத்தை நடத்த தெரியும், நமக்குத்தான் அனுபவமும் அறிவும் அதிகம் என உள்ளே நுழையக்கூடாது, எண்ணிப்பார்க்கோணும், இவ இளமையாக இருந்தபோது, இவவின் மாமி தலையிட்டால், இவவுக்குப் பிடிக்குமோ என எண்ணிப்பார்க்கோணும் மருமகளின் இடத்திலிருந்து... சும்மா சும்மா அனைத்துக்கும் மூக்கை நுழைக்கக்கூடாது கர்ர்:))

   Delete
  3. நீங்கள் மருமகளாக மட்டும் இருக்கிறீர்கள் அதிரா!

   Delete
  4. அப்பூடியா தெரியுது ஸ்ரீராம் என் கொமெண்ட்ஸ் படிக்க, இல்ல அனைத்துக் கொமெண்ட்ஸ் ஐயும் பாருங்கோ, இருவர் சார்பாகவும்தான் பேசுகிறேன்.

   ஆனா எனக்கென்னமோ மாமா, மாமி என்பவர்கள் மகனோ மகளோ திருமணம் முடிச்சபின், அந்தக் குடும்பத்துள் மூக்கை நுழைக்காமல் இருந்தாலே பிரச்சனை வராது.

   நான் நிறையப் புரோகிராம்ஸ் பார்ப்பேன், ஏன் படக்கட்டங்கள் கூட, அதில் வருவனவெல்லாம், மாமியார் கொடுமைகள்தான், கொஞ்சம் வசதி படைச்ச குடும்பம், வசதி இல்லாத வீட்டில் ஒரு மருமகளை எடுத்தால், அந்தப் பிள்ளையை மாமியார் என்ன பாடு படுத்துகிறார். மகன் எப்பவும் தன்னோடும், தன் பேச்சைக் கேட்டபடியும் இருக்கோணும் என நினைக்கும் அம்மாக்கள் மகனுக்கு திருமணம் முடிச்சு வைக்கக்கூடாது!.

   எப்பவோ படிச்ச கவிதை..
   “அம்மாவின்
   வாக்குகளே
   வேத வாக்கானால்
   நீ
   தொட்டிலிலேயே
   இருந்திருக்கலாம்
   கட்டிலுக்கு வந்திருக்க
   வேண்டியதில்லை”..

   Delete
  5. ஸ்ரீராம் விடாதீங்க நல்லா சண்டை பிடிங்க :) நெல்லைத்தமிழன் எங்கே ?? அந்த ரசவாளியை பார்த்து மயங்கி விழுந்துட்டாரா ??@ மியாவ்  வளர்த்து ஆளாக்கிய அம்மாவின் தயவு இப்பவும் அந்த பிள்ளைக்கும் தேவை ஆனா அம்மா ஒரு ஒப்பீனியன் கூட சொல்லக்கூடாதா ??? 

   Delete
  6. மனைவியின் கோபம் தான் தாயின் வருத்தத்தை விட அதிக முக்கியத்துவம் வாய்ந்தது! அதோடு அம்மாவுக்கு நம்மை விட்டால் வேறே யார் இருக்காங்க என்னும் எண்ணமும் இருக்கலாம். ஆனால் கோபித்தாலும் மனைவி எதிரில் சொல்லி இருக்க வேண்டாம் என்றே என் கருத்தும். ஏஞ்சல் சொல்லுவது சரியே, அந்தத் தாயின் காலத்தில் மாமியார், மாமனாருக்குக் கட்டுப்பட்டே வாழ்ந்திருப்பார். இப்போது பிள்ளை, மாட்டுப் பெண்! :( என்னத்தைச் சொல்லுவது! என் கட்சி ஏஞ்சலின் கட்சியே!

   Delete
  7. //ஸ்ரீராம் விடாதீங்க நல்லா சண்டை பிடிங்க :) நெல்லைத்தமிழன் எங்கே ??//

   இருவரும் கட்டிலுக்குக் கீழே:)) ஒளிச்சிருந்து வோச்சிங்:)).

   //ஆனா அம்மா ஒரு ஒப்பீனியன் கூட சொல்லக்கூடாதா ??? //
   அப்படி இல்லை அஞ்சு, சந்தர்ப்பம் சூழ்நிலை என ஒன்று இருக்குதெல்லோ... குழந்தையை நல்ல ஸ்கூலில் சேர்க்க மருமகள் ஆசைப்படுறா.. இது ஒருநாள் மட்டராக இருக்காது, கொஞ்ச நாட்களாக கணவன் மனைவிக்குள் ரென்ஷன் இருக்கும், இப்படி சூழலில் மாமி, மாமா மூக்கை நுழைப்பது தப்பு, அல்லது கொஞ்சம் பொறுமையாக இன்னொரு நேரம் சொல்லியிருக்கலாம் தன் கருத்தை.. இது மருமகளை எதிர்ப்பதுபோலத்தான் அமையும்...

   //என்னத்தைச் சொல்லுவது! என் கட்சி ஏஞ்சலின் கட்சியே!///

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. நில்லுங்கோ இப்பவே கீசாக்காவுக்காக ரெண்டு ஹிந்திப்படம் பார்த்து ரிவியூ எழுதி எசப்பாட்டுப் பாடப்போறேன்ன்:))..எழுதவில்லை எனில்... எனக்காக அஞ்சு தேம்ஸ்ல குதிப்பா:))

   Delete
  8. வணக்கம் அதிரா சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

   /பேசாமல் பேரனுக்கு சாப்பாட்டைத்தீத்தாமல் எதுக்கு காதை அங்குவரை நீட்டி, அதுக்கு இவ பதில் சொல்றா கர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அவர்களாக வந்து ஆலோசனை கேட்டால் மட்டுமே நம் விருப்பத்தை சொல்லோணும், /

   பேச்சு வேறெங்கோ இருந்தால் அந்த மாமியார் ஏன் காதை நீட்டி கேட்கப் போகிறார்? அவர் முன்னாடி சாப்பாடுறையில் நடக்கிறது. அதனால் தன் கருத்தை முன் வைக்கிறார். இரண்டாவதாக அவர் "குழந்தை சோர்வாக வருகிறான்" என்றது தன பேரனைக் குறித்து சொன்னதுதான்...! இன்னமும் பெரிய பள்ளியென்றால் சட்டதிட்டங்கள் அதிகரித்தால் அவன் இன்னமும் களைப்புறுவான் எனத்தான் அவர் கோடிட்டு காட்டினார்.

   அனைவரும் புரிந்து கொண்டு அழகாய் கருத்துக்கள் தந்தமைக்கு மிக்க நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 10. இண்டர்வியு யாருக்கு என்பதோ வெற்றி பெறுவார்களா என்பதோ பிரச்னையே இல்லை.    கதையில் முக்கியம் பாட்டியின் மனம்தான்.  எவ்வளவு சிந்தனைகள், தத்துவ விசாரங்கள்...    

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   /இண்டர்வியு யாருக்கு என்பதோ வெற்றி பெறுவார்களா என்பதோ பிரச்னையே இல்லை/

   என்ன இப்படி சொல்லி விட்டீர்கள்? அதை வைத்துதான் கதையை நகர்த்தியதாக/கதையும் நகர்வதாக நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். இல்லையா? ஹா. ஹா. ஹா.

   /கதையில் முக்கியம் பாட்டியின் மனம்தான். எவ்வளவு சிந்தனைகள், தத்துவ விசாரங்கள். /

   அது என்னவோ உண்மைதான்....!ஆனால், பாட்டியின் விசார மனதினூடேயே வரும் ஒரு நிகழ்வாக இண்டெர்வியு.யும் கலந்துள்ளது.

   கருத்துரைகளில் அதிராவின் மனமும், சிந்தனைகளும், தத்துவங்களும்,கதையில் வரும் பாட்டியின் சிந்தனைகளை தூக்கி சாப்பிட்டு விட்டன.தங்கள் கருத்துக்களும் வெகு சிறப்பு. நல்லதொரு கருத்துக்களுக்கு நன்றி சகோதரரே. பதிலளிக்க தாமதமாகி விட்டது. மன்னிக்கவும்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 11. ஒரு கட்டத்தில் யாருக்காக வாழ்கிறோம் என்பதே மறந்து அல்லது மரத்துப்போய் இயந்திர மயமாகிவிடுகிறது வாழ்க்கை. எப்போது முடியும் என்கிற மறைமுக எதிர்பார்ப்பும் கூட இருக்குமோ...

  ReplyDelete
  Replies
  1. இதுவும் உண்மைதான்... பெரும்பாலான வீடுகளில், பிள்ளைகள் பெற்றோரிடம் ஓவராக வேலை வாங்குகின்றனர்.

   எங்கள் மாமா ஒருவர் சொன்னார், அவர்கள் மாமா மாமி இருவரும் ஓய்வாக வீட்டில் இருக்கின்றனர்[கனடாவில்] மகனும் மருமகளும் வேலைக்குப் போபவர்கள், இரு குழந்தைகள், பகல் முழுக்க இவர்கள் குழந்தையைப் பார்ப்பார்கள், சரி பின்னேரமாவது கொஞ்சம் ஓய்வெடுக்கலாமே என நினைச்சாலாம், வீட்டுக்கு வந்ததும் சொல்வார்களாம், கொஞ்சம் மோலுக்குப் போய்வரப்போகிறோம், பார்த்துக் கொள்ளுங்கோ பிள்ளைகளை என.. இதுவும் மிகப் பெரிய தப்புத்தானே... அலல்து பெற்றோரையும் சேர்த்துக் கூட்டிப் போனால் என்ன...

   Delete
  2. அதிரா.... உரிமை உரிமை என்று பெற்றோரை வேலை வாங்குவது தவறுதான். ஒவ்வொருவருக்கும் பெர்சனல் ஸ்பேஸ் கொடுக்கணும்.

   நிறைய வீட்டில், குழந்தைகளை ஓசியில் பார்த்துக்கொள்ளும் வேலையை பெற்றோருக்கோ மாமனாருக்கோ பசங்க கொடுத்துவிடுகிறார்கள். கொஞ்ச நேரம் கொஞ்சலாம், பார்த்துக்கலாம். ஆனால் அதுவே வேலை என்று வந்துவிட்டால் ரொம்பக் கஷ்டம்.

   Delete
  3. அது உண்மைதானே, என்னதான் அன்பு பாசம் இருப்பினும் அவர்களுக்கும் ஓய்வு தேவை என்பதைப் பல பிள்ளைகள் நினைப்பதில்லை.

   Delete
  4. வணக்கம் நெ. த. சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   தங்கள் கருத்துக்களையும் வழி மொழிகிறேன். கதையைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லையே! அவசரம் இல்லை. தங்கள் பிராயாணங்கள் இனிதே முடிந்ததும் நேரம் கிடைக்கும் போது வந்து படியுங்கள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 12. //எப்போதும் போல், வார்த்தைகளின் தாக்கம் கொஞ்சம் வலித்தாலும், இயல்பாக அதை தாங்கி பழக்கப்பட்ட மனது சமாதானபடுத்திக் கொண்டது. //

  அப்படி நினைக்கக்கூடாது, மகனின் இடத்தில இருந்து யோசிக்க வேண்டும், மகனும் பாவம்தானே அவர் தன் கோபத்தை யரிடம் காட்ட முடியும், மனைவியிடம் காட்டினால் அழுவா, பாவம்தானே, அம்மா என்பவ கோபிக்க மாட்டா, எதையும் தாங்குவா எனும் நினைப்புத்தான், இப்படி நினைச்சு, என்னைப் பெருமையாக மனதில் எண்ணியே என்னோடு கோபமாகப் பேசினார் மகன் என எடுத்துக் கொள்ள வேண்டும்... ஹா ஹா ஹா..

  சத்தியமாக இப்படிப் பொசிடிவ் சிந்தனையை எனக்குள் ஊட்டியவர் எங்கள் அப்பா.. எங்கள் குடும்பக் கரெக்டர் எல்லாம் என் கண்முன் வருகிறதே ஹா ஹா ஹா..

  ReplyDelete
 13. // ஒன்றுமே தெரியாததால்தான், கணவருக்கு வந்த குறைந்த சம்பளத்தில், செட்டும் கட்டுமாக குடும்பம் நடத்தி, தனக்கென்றோ, தன் கணவருக்கென்றோ, எதுவும் ஆசைப் பட்டதை வாங்கிக் கொள்ளாமல் வாழ்ந்து, மகனையும், மகளையும் படிக்க வைத்து//

  இதுதான்.. இதுதான் நம்மவர்களிடம் இருக்கும் பெரிய பிரச்சனை, உடனே பழைய பல்லவிக்குப் போய்விடுவார்கள், மகன் சொன்ன ஒரு சொல்லால், தாம் அப்படியே தாழ்ந்துவிட்டோம் எனும் எண்ணத்தை உருவாக்கிக் கொள்வது.. இத்தனைக்கும் காரணம் மனதுள் மருமகளோடு போட்டி அவ்வளவே ஹா ஹா ஹா..

  அட போடா லூசுப்பையா... எனச் சொல்லிட்டுப் போனால் அங்கு சிரிப்பொலி வந்துவிடும் வீடும் குதூகலமாகிவிடும்:))..


  //! என்று என் மகனை விரட்டியபடிச் சென்றாள் விநோதினி. அவள் உஷ்ணப் பார்வைகள் என் பக்கம் திரும்பும் நேரமெல்லாம் " நீதான் இதற்கு காரணம்...! என்பது போல் சுட்டதாக எனக்குத் தோன்றியது.///
  ஹா ஹா ஹா செய்யிறதையும் செய்துபோட்டு குற்ற உணர்வு வேற:) ஹா ஹா ஹா..

  ReplyDelete
  Replies
  1. /மகன் சொன்ன ஒரு சொல்லால், தாம் அப்படியே தாழ்ந்துவிட்டோம் எனும் எண்ணத்தை உருவாக்கிக் கொள்வது..// - நீங்கதானே ஒரு தடவை சொன்னது... உங்களிடம் அன்போடு இருந்தால் மனது உருகுவதும். உங்களை ஏதேனும் சொல் சொல்லிவிட்டால் மனது வருத்தமாவதும் உண்டு என்று.

   Delete
  2. ஹா ஹா ஹா ஹையோ தேடித்தேடி அட்டாக் நடத்தீனமே எல்லோரும் இங்கு... மீ தனியா மாட்டிட்டனோ:)) ஹா ஹா ஹா..

   இப்போ அந்த மகன் என்ன சொல்லிட்டார் என, இந்த அம்மா இப்பூடிக் கவலைப்படுறா.. அது மகன் தனக்கிருந்த எரிச்சலை அம்மா மீது கொட்டினார்.. அதைப் புரிஞ்சுகொள்ளோணும் அம்மா, ஆர் ஏசியது என் மகன் தானே, ஏசட்டுமே என நினைக்கலாம் இந்த இடத்தில்.. ஏனென்ண்டால், மகன் நெஞ்சிலிருந்து அம்மாவை நோகடிக்கோணும் என நினைச்சு அப்படிச் சொல்லவில்லை என்பதைப் புரிஞ்சுகொள்ள முடியாத அம்மாவோ இந்த அம்மா.
   உண்மையில் சுடுசொல் சொல்லி நோகடிச்சால், கவலைப்படுவதில் அர்த்தம் இருக்கு, இது வீண் கவலை என்றே எனக்குப் படுது... அதுவும் இவ மூக்கை நுழைச்சு அங்கு பேசியதாலதான் வந்தது:))..

   Delete
  3. //இப்போ அந்த மகன் என்ன சொல்லிட்டார் என, இந்த அம்மா இப்பூடிக் கவலைப்படுறா..//

   யாராவது என் கையை பிடிங்க இல்லன்னா நேரே பொய் பூனையை தேம்ஸில் தள்ளிடுவேன் :)ஓவரா மருமகளுக்கும் மகனுக்கும் சப்போர்டிங் :) கொஞ்சம் அந்த முதிய தாயின் நிலையிலும் இருந்து யோசிங்க மூக்கு பொடிவாங்கி இடிதாங்கி 

   Delete
  4. /// பொய் பூனையை தேம்ஸில் தள்ளிடுவேன் :)//

   அப்பாடா மீயும், நம்மளத்தானோ எனப் பயந்துட்டேன்:)) இது ஆரோ பொய்ப்பூனையாமே ஹா ஹா ஹா:))..

   ///ஓவரா மருமகளுக்கும் மகனுக்கும் சப்போர்டிங் :) கொஞ்சம் அந்த முதிய தாயின் நிலையிலும் இருந்து யோசிங்க மூக்கு பொடிவாங்கி இடிதாங்கி ///

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இந்தத் தாய்க்கு என்ன பிரச்சனை? மகன் மருமகள் பேரக்குழந்தைகள் என நல்லாத்தானே இருக்கிறா:)).. ச்சும்மா சின்ன சின்ன விசயங்களுக்கெல்லாம் முட்டையில முடி பிடிங்கிக்கொண்டிருந்தால், தன் நிம்மதியைத்தானே கெடுத்தது போலாகிடும்.. அதனால இப்பூடியான அம்மாக்களுக்கு நாம் கொஞ்சம் உசார்தான் கொடுக்கோணுமே தவிர, கூடச் சேர்ந்து அழுதால், அவர்கள் இன்னும் ஓவ் ஆகி, தாம் ஏதோ பொல்லாத உலகில் வாழ்கிறோமோ எனும் நிலைமைக்குக்கூடத் தள்ளப்படலாம்.

   எப்படிக்கு எவ்ளோ இடியையும் தாங்கும் இடிதாங்கி:) அதிரா:)) ஹா ஹா ஹா..

   Delete
  5. garrr that was typing error :))///பொய் பூனையை//

   Delete
 14. ///விநோதினி திரும்பி என்னை பார்த்தவள் "ஒரு இருபத்தோரு கொழுக்கட்டையாவது பண்ணி, வீட்டு பிள்ளையாருக்கு இன்று கை காட்டி விடுங்கள். இன்னைக்கு கிளம்பறதுக்கு எத்தனையோ தடைகள்..! நாலு பக்கமும் நம்மாலானதை கடவுளுக்கு செய்தால், "இண்டர்வியூ" நாம எதிர்பார்க்கற மாதிரி சுமுகமாக அமையும்." என்றாள் உத்தரவு பொதிந்த குரலில்.//

  இதுதான் மருமகள்கள் செய்யும் தப்பும், மாமியை பெரிதாக கண்டுகொள்வதில்லை, கலந்து ஆலோசிப்பதில்லை, ஆனா தம் தேவைக்கு மட்டும்.. அம்மாவைப்போல நட என எதிர்பார்ப்பது.... அது தப்புத்தானே, கேட்டதைச் செய்யவில்லை எனில் உடனே போய் கணவரிடம் ஓதி விடுவது கர்ர்ர் ஹா ஹா ஹா:))

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   கதை என்றில்லை..! நம் குடும்ப வாழ்விலும் ஒவ்வொருவருடைய எண்ணங்களை, சிந்தனைகளை அதன் விளைவால் வரும் கருத்துக்களை மற்றவர் புறக்கணிக்காமல் காது கொடுத்து கேட்டு அதன் நன்மை தீமைகளை எடுத்தியம்பி சுமுகமாக சென்றால், குடும்பம் என்றுமே அமைதியாக இருக்கும்.( இது குடும்பத்திலுள்ள மூத்தவர்களுக்கும் சரி.! இளையவர்களுக்கும் சரி!) ஒருவரைப்பற்றி மற்றவருக்கு தாழ்வு மனப்பான்மையோ, இல்லை குறை கூறும் தன்மையோ வராது..

   முழுவதும் தன் அம்மாவாக ஒரு மருமகள் தன் மாமியாரையும், தன் பெண்ணாகவே ஒரு மாமியார் தன் மருமகளையும் நினைத்து விட்டால் என்றுமே ஒரு குடும்பத்தில் பிரச்சனைகள் தலை தூக்குவதில்லை.. இது அன்றிலிருந்து இன்று வரை என்றும் சாத்தியமாகுமா எனத் தெரியவில்லை. ஆனால் சில/பல இடங்களில் சாத்தியம் ஆகின்றன. அந்த இடங்கள் அமைதிப்பூங்காவாக உள்ளன.

   நான் இங்கு இந்தக் கதையில் மாமியாரின் மன எண்ணங்களை மட்டுமே அலசியுள்ளேன். கதையை தாங்கள் ரசித்ததினால் வந்த கருத்துக்களை பகிர்ந்திருப்பதற்கு மிக்க நன்றிகள் சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 15. ///ஆக இருவருக்கும் நம் அம்மா என்பவள் தங்கள் "அடக்கு முறையில் இருப்பவளே" என்ற எண்ணங்களில் ஊறிப் போய் பல வருடங்கள் ஆகி விட்டன.//

  உண்மை, சில குடும்பங்களில் இப்படி நடக்கிறதுதான், தனக்கு நடக்கும்போது மட்டுமே இதை அவர்களால் உணர முடியும்.

  ஆனா இதுக்காகத்தான் வெள்ளையர்கள் எப்பவும் பிள்ளைகளோடு வாழ்வதில்லை, எலி வளையானாலும் தனிவளை என்பது போல, தாம் தனியே இருப்பார்கள்.. ஒரு இழவு நடந்தால்கூட தங்க மாட்டார்கள், நைட் தம் வீட்டுக்கு வந்துவிடுவினம்.

  ஆ பொசுக்கென கதையை முடிச்சதுபோல இருக்கு.. அழகான கதை, எப்பவும் நம்மிடத்தில் மட்டும் இருந்து யோசிச்சால், நம்மை இப்படி பார்க்கிறார்களே, கவனிக்கிறார்கள் இல்லையே எனும் எண்ணம், பேன் பெருமாளான கதையாக வளரும், அதனால நம்மைப் பற்றிச் சிந்திக்காமல், நாம் அவர்களிடத்தில் இருப்பின் என்ன பண்ணியிருப்போம், அவர்களும் பாவம்தானே, வாழ வேண்டிய சின்ன வயசில சந்தோசமாக இருக்கட்டுமே, நாம் அனுபவித்து விட்டோம், இனி அவர்களுக்கு துணையாக இருப்பதில் என்ன தப்பிருக்கு என எண்ணினால்தான், நாமும் மகிழ்ச்சியாக இருந்து, குடும்பத்தையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அதிரா சகோதரி.

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   கதையை நன்றாக துவைத்து அலசி காய வைத்து விட்டீர்கள். இப்போது ஆங்காங்கே சற்று கிளிசல்களும் தெரிகின்றன. ஹா. ஹா. ஹா. ஹா. தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்...! இது துவைப்பதற்கு முன்பே கதையிலிருந்த கிளிசல்கள். அழுக்கு அகன்றி சுத்தமாக பளிச்சென்று தெரிகின்றன. ஹா. ஹா. ஹா. தங்கள் விளக்கமான பதில்களை மிகவும் ரசித்தேன். ஒரு பக்க எண்ணங்களுக்கு எப்போதுமே மறுபக்கம் என்று ஒன்று இருக்குமல்லவா? தங்கள் விளக்கங்களை நானும் ஆமோதிக்கிறேன். ஆகா.. இதை யெல்லாம் படிக்கும் போது மற்றொரு கதைக்கு வித்து என்னுள் முளைக்கிறது.., அதையும் கூடிய வரையில் நல்லபடியாக விளைவிக்க வேண்டுமே..! என்ற சிந்தனை உருவாகிறது.:) கருத்துகளுக்கு நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 16. உண்மை. யதார்த்தம். ஆனாலும் மகன், மருமகள் பேச்சுக்கு இடையே நாம் குறுக்கிட்டுப் பதில் சொல்வது என்னமோ சரியாப் படலை. அந்தச் சமயங்களில் நமக்குக் கண் தெரியக் கூடாது, காது கேட்கக் கூடாது, வாயும் ஊமையாக இருந்தாக வேண்டும். கொஞ்ச நாட்கள் அப்படி இருந்தால் பின்னர் நமக்கு அங்கே என்ன நடந்தாலும் மனதைப் பாதிக்காது. குழந்தையைப் பார்த்துக்கொள்ளச் சொல்லி நம்மை நம்பி விடுகிறார்களே! இந்தக் காலங்களில் அதுவே பெரிது. ஆனால் குழந்தைக்கு உடம்பு வந்ததுக்கு மாமியாரைக் குற்றம் சொன்னது சரியில்லை.

  ReplyDelete
  Replies
  1. //குழந்தையைப் பார்த்துக்கொள்ளச் சொல்லி நம்மை நம்பி விடுகிறார்களே! இந்தக் காலங்களில் அதுவே பெரிது.//

   ஹா ஹா ஹா இதுவும் நடக்குது சில இடங்களில். இன்னொரு கதை, என் கணவரின் நண்பர்கள்தான் இருவரும் டொக்டேர்ஸ், அந்த பெண் தன் குடும்பத்துக்கு ஒரே ஒரு பிள்ளை, ஆண் - தன் குடும்பத்தில் மூத்த ஆண்பிள்ளை, கீழே 2 தம்பிகள்.

   அப்போ இவர்கள் இருவருக்கும் அதுவும் கொஞ்சம் குழந்தை இல்லாமல் இருந்து ஒரு பெண் குழந்தை பிறந்தது, அந்தக் குழந்தையின் அம்மா[அந்த டொக்டர்] குழந்தையை மாமா, மாமி தூக்க அனுமதிப்பதில்லையாம், குழந்தைக்கு காச்சல் தடிமன் வந்திடும் என, பாருங்கோ...

   ஆனா அதைக் காட்டிக் கொள்ளாமல் மூத்த பேரப்பிள்ளையாச்சே என ஆசையாக அடிக்கடி வந்து பார்த்துவிட்டுப் போவார்கள்.. அது ல்வ் மரீச் என்பதனால், கணவரும்[அந்த டொக்டர்] எதுவும் சொல்வதில்லை மனைவிக்கு, ஆனா என் கணவரோடு வந்து கொஞ்சம் வருத்தப்படுவார். எங்களுக்கு அந்தப் பெற்றோரைப் பார்க்கப் பாவமாக இருக்கும்.

   Delete
  2. கொஞ்சம்son /daughter inlaw அவங்க அட்ரஸ் தர முடியுமா மியாவ் :) 

   Delete
  3. யாருடைய son /daughter in-law?? அந்தக் குழந்தையின் பெற்றோருடையதோ?:))

   Delete
  4. யெஸ்ஸ்ஸ் :) ஆசைதீர அடிச்சிட்டு :) தாங்க்ஸ் அதிரான்னு கத்திட்டு வரணும் :)

   Delete
 17. என்ன ஒரு குறை எனில் மகளாவது சில மாதங்கள் தாய் ஓய்வெடுக்கும்படி தன்னிடம் கொண்டு வைத்துக்கொள்ளலாம். அவளும் சுயநலமாகச் சிந்தித்துக்கொண்டு தாயைப் பற்றி நினைக்காமல் இருக்கிறாள். பொதுவாகப் பெண்கள் தாய்க்கு ஆதரவாக இருப்பார்கள். இங்கே அதுவும் இல்லை. என்றாலும் அந்தத் தாயின் மனோ தைரியம் பாராட்டத்தக்கது. மெச்சத் தக்கது. தன் மன உணர்வுகளை எல்லாம் கதையகா வடித்துவிட்டு மேலே அடுத்த வேலையைக் கவனிக்கச் சென்று விடுகிறாள். இதான் குடும்பத்துக்கும் நன்மை தரும் என்பதை உணர்ந்தே இருக்கிறாள். ஒரு நாள் அவளை வெளியே எங்காவது அனுப்பிட்டு அவங்க இருவரையும் குடும்பத்தை நட்த்தச் சொல்லிப் பார்த்தால் அப்போது தாயின் அருமை தெரியும். இங்கே மனைவி அதிக சம்பளம் என்பதால் அவள் கை ஓங்கி இருக்கிறது என்கிறார். ஆனால் சம்பாத்தியம் இல்லாமலேயே பல பெண்கள் மாமியாரை ஆட்டி வைக்கிறார்கள். அதுக்கு என்ன சொல்ல முடியும்!

  ReplyDelete
  Replies
  1. இதனால்தான் நம் நாட்டில், பெற்றோர் இருப்பது மகளோடுதான்:))... மகள் இல்லாதவர்கள் விரும்பினால் மகனோடு, இல்லை எனில் தனியாக இருப்பினம்..

   Delete
  2. எங்கே இடிதாங்கி? இங்கே மகள் தான் தாயைக் கை கழுவி விட்டு விட்டாளே! :( அவளாவது கொஞ்ச நாட்கள் வைச்சுக்கலாம் இல்லையா?

   Delete
  3. அது கீசாக்கா.. இது தமிழ்நாட்டை மனதில நினைச்சுக் கமலாக்கா எழுதிய கதையெல்லோ.. அதனால தப்பாக நினைச்சிடாதீங்க, எல்லோரும் இல்லை, ஆனா அங்கு பெரும்பாலான வீடுகளில், பெண்பிள்ளையை சீதனம் கொடுத்துக் கட்டிக்குடுத்திட்டால் சரி எனத்தானே நினைக்கினம், அதனால பெண்பிள்ளைகளும் அம்மா வீட்டுக்கு வருவது எதையாவது வாங்கிப்போக எனத்தானே பல இடங்களில் நடக்குது.. “பண்ணையாரும் பத்மினியும்” நான் பாட்டுப்போட்டனே போன போஸ்ட்டில் அப்படத்திலும் இப்படி நடக்குது..

   அண்ணாவுக்கு தம்பிக்குதானே எல்லாம் குடுத்தீங்க, அவர்களே பார்த்துக் கொள்ளட்டும் என நினைக்கும் மகள்களும் அங்கு அதிகமாக இருக்கினமெல்லோ..

   Delete
  4. வணக்கம் கீதா சாம்பசிவம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   அந்தப் பெண்ணிற்கு அவங்க மாமியார் மாமனார் அடிக்கடி வருவது போவது என்ற நிலை. இதில் தன அம்மாவை அழைத்து வைத்துக் கொள்ள ஒரு தர்ம சங்கடம்.. என்னதான் மனைவி சொல்வதை மதித்தோ, இல்லை மறுபேச்சு பேச வழியின்றியோ,அவள் குடும்பத்தை தன் குடும்பமாக பெரும்பான்மை இடங்களில் கணவர்மார்கள் நினைத்து இருந்தால் கூட ஒருசில இடங்களில்." உன் அண்ணன் ஒரே பையன்தானே ! என்னை மாதிரி தாய் தந்தையரை வைத்துக் கொள்ளக் கூடாதா? " என்று கண்டிப்பு காட்டும் கணவர்மார்கள் இருக்கிறார்கள். ஆக இருவரில் ஒவ்வொருவர் குணாதிசயங்கள் எப்படி அமைகிறதோ அது மற்றவரின் அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது...!

   /சம்பாத்தியம் இல்லாமலேயே பல பெண்கள் மாமியாரை ஆட்டி வைக்கிறார்கள். அதுக்கு என்ன சொல்ல முடியும்!/

   அதுவும் உண்மைதான்..! இதிலும் அக்குடும்பதிற்கு வந்த மருமகளின் இல்லை, அக்குடும்பத்தில் வாழ்ந்த மருமகளின் (மாமியார்) இவர்களின் அதிர்ஷ்டத்தைப் பொறுத்துதான் அனைத்தும் அமைகிறது...!
   தங்களது நல்லதொரு கருத்துகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 18. தனக்கு ஏற்பட்ட அவமானத்தை எல்லாம் நினைக்காமல் அதையே பலமான அடித்தளமாகக் கொண்டு ஒரு நல்லபாட்டியாக விளங்கும் அந்தக் குடும்பத் தலைவிக்கு என் வணக்கம்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   கதையை படித்து ரசித்து அன்புடன் பல கருததுக்கள் தந்து கதையில் வரும் அந்த அன்புத் தாயை பாராட்டி இருப்பதற்கு என் மன மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 19. வணக்கம் சகோதர சகோதரிகளே

  நான் பதிந்த இந்த கதைக்கு இந்த அளவு விமர்சனங்கள் தந்து இன்று என்னை மகிழ்வுறச் செய்திருக்கும் உங்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள். அவ்வப்போது கொஞ்சம் வேலைகள் என்று வருவதாலும், இன்று விடுமுறை என்பதால் கைப்பேசியில் உறவுகள் பேசி, வாட்சப்பில் வீடியோ கால் என அமர்ந்து பேசி,என் கைப்பேசியை மற்றதுக்கு (பதிவுக்குச் செல்ல / வந்த கருத்துக்கு பதிலளிக்க) இயக்க விடாமல் செய்வதாலும் எனக்கு உடனுக்குடன் பதில் தர தாமதமாகிறது. மெள்ள பதில் தருவதை பொறுத்துக் கொள்ளவும். அனைவருக்கும் என் அன்பான நன்றிகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. நான் கைபேசியில் யாருடனாவது எப்போதாவது பேசுவது, வாட்சப் செய்தி தவிர்த்து வேறே பயன்பாடுகளுக்கு வைச்சுக்கறதே இல்லை. அதோடு என்னை அழைத்து பேசுபவர்கள் ரொம்பக் குறைவு தான். நானும் அவசியமானால் தவிர யாரையும் அழைப்பது இல்லை. நீங்கள் வீட்டையும், குழந்தைகளையும் பார்த்துக்கொண்டு எல்லாவேலைகளையும் தனியே செய்து கொண்டு பதிவுகளும் அவ்வப்போது போட்டுக்கொண்டு உறவினர், நட்புக்களிடம் தொடர்பு கொண்டு எந்நேரமும் உங்களை வேலை மும்முரத்திலேயே வைத்திருப்பது மிக நல்ல பாராட்ட வேண்டிய விஷயம். அஞ்சுவின் இரக்கசுபாவம், உதவும் குணம், அதிராவின் கலங்காத மனம், எல்லோரிடமும் தக்கபடி பழகும் குணம், எல்லாவற்றோடும் உங்களிடமிருந்தும் கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது.

   Delete
  2. ///அஞ்சுவின் இரக்கசுபாவம், உதவும் குணம்,//

   ஆச்சச்சோ கீசாக்கா அது அத்தனையும் நடிப்பாக்கும் ஹா ஹா ஹா,

   அஞ்சு இதைப் படிக்க மாட்டா எனும் தெகிறியம் தேன்:)) ஹா ஹா ஹா...

   Delete
  3. வணக்கம் கீதா சகோதரி

   எனக்கும் என்றுமே போன் பண்ணுவார்கள் இல்லை. என் அண்ணா, மன்னி எப்போதாவது அழைப்பார்கள். வாரத்தில் சனி ஞாயிறு தற்சமயம் வெளி நாட்டில் இருக்கும் இளைய மகனும், மருமகளும் வீடியோ காலில் கொஞ்ச நேரங்கள் பேசுவார்கள். மற்ற உறவுகள் அழைத்துப் பேசுவது அதியசந்தான்..

   மற்றபடி திக்கான கலங்காத எதையும் ஈசியாக எடுத்துக் கொண்டு அனைவரிடமும் அவரவருக்கு தக்கபடி பேசிப் பழகும் நல்ல மனம் படைத்த அதிராவுடனும், ஈகை குணமும், இரக்க சுபாவமும், இன்னும் நானறியாத நல்ல குணங்களும் அமையப் பெற்ற அஞ்சுவுடனும் என்னை ஒப்பிட்டிருப்பது கொஞ்சம் கூட சரியில்லை என நான் நினைக்கறேன். இருப்பினும், தங்கள் வாழ்த்துக்களுக்கு என் மனப்பூர்வமான நன்றி கூறிக் கொள்கிறேன்.

   அதிரா சகோதரி.. ஏன் அப்படி சொல்கிறீர்கள்? எங்களை விட நீங்கள்தான் அவரது சுபாவங்களை அதிகம் உணர்ந்திருப்பீர்கள்..! தீடிரென அஞ்சு இங்கு "தீடீர் விஜயம்" செய்து வந்து படித்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை.. ஹா. ஹா. ஹா.நன்றி

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்

   Delete
 20. @கீதாக்கா அன்ட் கமலாக்கா ..ரொம்ப தேங்க்ஸ் உங்கள் அன்புக்கு ..@கமலாக்கா .ஸ்டோரி ஈவ்னிங் வந்து படிக்கிறேன் .
  இந்த அடிவாங்கி கொடிதாங்கி என்னுடன் ///நீங்க கமலாக்கா பக்கம் போகக்கூடாது போனாலும் அங்கே கீதாக்கா கமலாக்கா கமெண்ட்ஸ் பாக்கவே கூடாது என்று மெயில் போட்டிருக்கார் :) நான் அதை இப்போ பார்த்து ஓடி வந்தேன் :)))))))))))என்னை வம்புக்கு இழுக்காட்டி பூனைக்கு தூக்கமே வராது :)))சர்ச் போயிட்டு வரேன் ஸ்டோரி படிக்க 

  ReplyDelete
  Replies
  1. ஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ் நான் ஜொன்னனே என் பேச்சை ஆரூ கேய்க்கிஆ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)...மீ ஓடிப்போய்ப் புகைக்கூட்டுக்கு கீழே ஒளிச்சிடுறேன்ன்ன்ன்ன் 2 நாளைக்கு மீ லீவூ:) என்னை ஆரும் தேடக்கூடாதூஊ:)

   Delete
  2. வாங்க ஏஞ்சல் சகோதரி

   வணக்கம்..நலமா? தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   என் நம்பிக்கையை காப்பாற்றி வந்து விட்டீர்கள். ரொம்ப நன்றி..! நீங்கள் எப்போது வேண்டுமானலும் நிதானமாக வந்து கதையைப் படித்து கருத்துரை தரலாம். அவசரமேயில்லை. என்னதான் வாய்ச்சண்டை போட்டு வம்பிழுத்தாலும் உங்கள் இருவருக்குள்ளும் இருக்கும் ஆழமான அன்பான நட்பைக் கண்டு எனக்கு மிகவும் மகிழ்வாக உள்ளது. இத்தனை நெருக்கமான நட்பானவர்களுடன் என்னையும் இணைத்து வைத்த அந்த இறைவனுக்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன். என் தளம் வந்து கருத்து தந்த தங்களுக்கும் மிக்க நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
  3. வணக்கம் அதிரா சகோதரி

   உங்களால் என் இந்த பதிவு களைகட்டி ஜொலிக்கிறது. எத்தனை ஆழமான கருத்துகள். அத்தனையும் நன்றாக இருந்தன. அத்தனைக்கும் மிக்க நன்றி.

   /2 நாளைக்கு மீ லீவூ:) என்னை ஆரும் தேடக்கூடாதூஊ:)/

   இரண்டு நாட்களுக்குள் நீங்களும் புதுப் பதிவு எழுதும் உத்தேசமா? விரைவில் தங்களை வேறு பட்டத்துடன் சந்திக்க தயாராகிறேன். ஹா. ஹா. ஹா.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
  4. ஹா ஹா ஹா கமலாக்கா.. நான் சொல்வதுதான் சரி என என்றைக்கும் சொல்ல மாட்டேன், ஆனா என் மனதில தோன்றுபனவற்றை ச் சொல்லிடுவேன்:))

   Delete
 21. /வாழும் ஒவ்வொரு நொடியும் மனமானது இறைவனை நினைத்தபடி இருந்தால்//
  உண்மைதான் மனம் சில நேரம் செய்தி அது இதுன்னு பார்த்து அவசரப்பட்டு முணுக்கென்று கோபப்படத்தோணும் அப்போல்லாம் உடனே இறைவனிடம் தஞ்சமடைவேன் .
  //எப்போதும் போல், வார்த்தைகளின் தாக்கம்  கொஞ்சம் வலித்தாலும்//பேசும்போது எதிரில் இருப்பவரை பெரும்பாலும் நினைத்தும் பார்ப்பதில்லை பாவம் ..

  வெறும் வார்த்தைக்காக சொல்லவில்லை உங்கள் எழுத்து நடை எனக்கு எழுத்தாளர் லக்ஷ்மி மற்றும் அனுராதா ரமணன் கதை வாசித்தாற்போல் இருக்கு ..
  இங்கே வெளிநாடுகளில் வெளிநாட்டுப்பெற்றோர் தங்கள் பிள்ளைகள் 18 வயதானதும் அவர்களை தனித்து இருக்க சொல்லி அறிவுறுத்துவார் .வேலை கிடைச்சா தனி வீடுதான் யாரும் யாருக்கும் பாரமில்லை .அவரவர் அவரவருக்கான வாழ்க்கையை சந்தோஷமா வாழறாங்க .விசேட நாட்களுக்கு வருவாங்க பேரப்பிள்ளைங்களை அழைத்து சென்று பரிசு வாங்கி கொடுப்பர் .யாரும் யாருக்கும் தொல்லையில்லை 
  உண்மையில் மிகவும் கடினமான வேலை எது தெரியுமா ? அது கைக்குழந்தைகள் 10 வயதுக்கு கீழுலரை கவனிப்பது .ஆக கடைசியில் குழந்தையின் இன்டர்வியூக்கா இத்தனை தடபுடல் :)

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   உண்மைதான்..! இறைவனிடம் தஞ்சமடையும் போது தாள முடியாத துக்கங்களும், கோபங்களும், மனதில் குறைகின்றன.

   வெளிநாட்டு செய்முறைகள் ஒரு வகையில் நல்லது எனத் தோன்றுகிறது. அனைவருக்கும் சந்தோஷத்தை அளிப்பது. பொதுவாக பந்த பாசங்களை குடும்பத்திலுள்ள அனைவரிடமும் குறைத்து கையாளும் போது மனம் ஒரு அதிக பற்றற்ற நிலையை ஏற்றுக் கொள்ள தயாராகி விடுகிறது என நினைக்கறேன். ஆனால் அதற்கு நாமும் வெளிநாட்டிலேயே பிறந்து வளர்ந்து அங்குள்ள சுற்றுச்சூழலை பார்த்து உணர்ந்திருக்க வேண்டும். இங்குள்ள கலாசாரத்தின்படி அந்த காலத்திலிருந்தே, பின்னால் நிகழப் போகும் ஒரு எதிர்பார்ப்புகளை மையமாக வைத்து குழந்தைகளை வளர்ப்பதால்தான் அவர்களுடன் சேர்ந்து இருக்கும் மனப்பான்மையும் கூடவே ஆவலாக தானும் வளர்ந்து நிற்கிறது. இப்போது பரவாயில்லை...! இங்கும் நிறைய குடும்பங்கள் பிரிந்து இருப்பதை ஏற்றுக் கொண்டு விட்டன. பிரிவையும் எவ்வித கிலேசமும் இன்றி சந்தோஸமாகவே உண்டாக்கி விடுகின்றன.

   உங்களுடைய பல வேலைகள் நடுவிலும், நீங்கள் என்தளம் வந்து கதையை ரசித்துப் படித்தமைக்கும் உங்களுடைய அன்பான பாராட்டுகளுக்கும் மிகவும் மகிழ்வுடன் கூடிய நன்றிகள் சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 22. சிறப்பான படைப்பு இது

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   நலமா? தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 23. உண்மை. யதார்த்தம். ஆனாலும் மகன், மருமகள் பேச்சுக்கு இடையே நாம் குறுக்கிட்டுப் பதில் சொல்வது என்னமோ சரியாப் படலை. அந்தச் சமயங்களில் நமக்குக் கண் தெரியக் கூடாது, காது கேட்கக் கூடாது, வாயும் ஊமையாக இருந்தாக வேண்டும். கொஞ்ச நாட்கள் அப்படி இருந்தால் பின்னர் நமக்கு அங்கே என்ன நடந்தாலும் மனதைப் பாதிக்காது. குழந்தையைப் பார்த்துக்கொள்ளச் சொல்லி நம்மை நம்பி விடுகிறார்களே! இந்தக் காலங்களில் அதுவே பெரிது. ஆனால் குழந்தைக்கு உடம்பு வந்ததுக்கு மாமியாரைக் குற்றம் சொன்னது சரியில்லை. ////////sariyaana karuththu Geethaa ma.

  ReplyDelete
 24. அன்பு சகோதரி கமலா அவர்களுக்கு
  அருமையான கதை தந்ததற்கு பாராட்டுகள்.
  எத்தனையோ குடும்பங்களின் கதைகள் இங்கே இணைகின்றன. அந்தப் பொறுமையான தாய்க்கு
  நமஸ்காரங்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   வாங்க. வாங்க..! தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி

   கதையை ரசித்து படித்து பாராட்டியமைக்கு தங்களுக்கு மிக்க நன்றிகள் தங்களுடைய அன்பான வருகையும், கருத்துக்களும் என எழுத்தை நல்ல முறையில் செம்மையாக்கும் என நம்புகிறேன்

   /எத்தனையோ குடும்பங்களின் கதைகள் இங்கே இணைகின்றன. அந்தப் பொறுமையான தாய்க்கு
   நமஸ்காரங்கள்./

   ஆமாம்.. சகோதரி. கதைகள்தாம் வாழும் வாழ்க்கையாகின்றன. வாழ்க்கையில் நடப்பவை கதைகளாகின்றன. சரியாகச் சொன்னீர்கள்.! வாஸ்தவமான கருத்து. அந்த தாயின் சார்பிலும் தங்களுக்கு மனப்பூர்வமான நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 25. ஆஹா அருமையான படைப்பு கமலா அக்கா ...அடுத்து அதை பற்றிய விவாதங்கள் இன்னும் இன்னும் சிறப்பு அனைத்தையும் ரசித்து படித்தேன் ...

  அவர்கள் வீட்டில் அமர்ந்து பார்ப்பது போன்ற உணர்வை தங்கள் வரிகள் உண்டாக்குகின்றன ..

  அந்த மாமியின் நிலையில் பலர் உள்ளனர் ...குழந்தையை கவனிக்க வேண்டும் ...ஆனால் சுழல் பார்த்து பார்த்து.. பேசி நடக்க வேண்டும் என ..ஆனாலும் அவரின் எண்ணங்கள் என்னும் சுழலில் நானும் இழுத்து செல்லப்பட்டென் ..


  கர்வம் என்பதன் விளக்கம் மிக அருமை ..மனதில் நிறுத்த வேண்டிய கருத்து ...என்னுளும் யோசனை எனது கர்வப்பட்ட நேரங்களும் என்னால் பிறர் வருந்த செய்த நேரங்களும் என...

  இறைவன் அருளால் கர்வம் என்னும் எண்ணம் இல்லாமல் வாழும் வகை வேண்டும் ...


  அன்புடன்
  அனுபிரேம்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   கதையை மட்டுமின்றி அதற்கு வந்த கருத்துரைகளையும் ரசித்துப் படித்து கருத்துக்கள் தந்திருப்பதற்கு என் மன மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.

   மனிதர்களில் பலவிதம். தன் பேச்சுகள், கருத்துக்கள் பலசமயங்களில் புறக்கணிப்படுகிறது என தெரிந்துமே, தன் காலத்தில் இருந்த வழிமுறைகளை நினைத்துக் கொண்டு குழந்தைக்காக, தன் அன்பு பேரனுக்காக பரிந்து பேசுகிறாள் அந்த பாட்டிம்மா.. புரிந்து கொள்ளாமல் போனாலும் தன் கடமையில் இருந்து விலகவில்லை.

   கர்வம் பற்றி கூறியதை ரசித்துப் படித்தமைக்கும் மிக்க நன்றி. "நானும் கடவுளிடம் தினமும் வேண்டும் எத்தனையோ வேண்டுதல்களில் சிறிதேனும் கரவமில்லாத மனதையும் கொடு" என வேண்டிக் கொண்டே உள்ளேன்.

   தங்களின் வேலைகளுக்கு நடுவிலும், என் தளம் வந்து அத்தனையும் ரசித்து சிறப்பாக நல்லதொரு கருத்துக்களை தந்தமைக்கு மீண்டும் மிக்க நன்றிகள் சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 26. நல்லதொரு பகிர்வு... அருமை...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   "நல்லதொரு பகிர்வு" என மனம் நிறைந்து பாராட்டியமைக்கு மிகுந்த மன மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 27. சஸ்பென்ஸ் உடைபடுவது மிகச்சரியாய் வந்திருக்கிறது. நானாக இருந்திருந்தால் அந்த கடைசி ட்விஸ்டில் மட்டும் கவனம் செலுத்தி சுருக்கமாக எழுதியிருப்பேன். நீங்கள் இந்த சின்ன கதைக்குள் நிறையன் நல்ல விஷயங்களையும் கவர் பண்ணியிருக்கிறீர்கள். பாராட்டுகள். மிகவும் தாமதமாக வந்து கருத்துரை இடுகிறேன், பயணம், சில விருந்தினர்கள், வேறு சில வேலைகள். பெட்டர் லேட் தேன் நெவெர் இல்லையா?  

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   கதையை ஸ்வாரஸ்யமாக படித்து நல்லதொரு கருத்துக்கள் தந்தமைக்கு என் மனம் நிறைந்த மகிழ்ச்சி சகோதரி.

   எழுதுவதில் அனுபவங்கள் நிறைந்த உங்கள் எழுத்துக்களை விடவா என் எழுத்துக்கள்? தங்களின் தன்னடக்கம் வியக்க வைக்கிறது. என்றாலும் என்னையும் பாராட்டியமைக்கு மனமுவந்த நன்றிகள்.

   தாமதம் என்றுமே ஒரு பொருட்டல்ல..! தங்களின் அன்பான கருத்துக்கள்தான் என எழுத்திறகு உரம். அவசரமேயில்லை... தங்களுக்கு எப்போது செளகரியபடுகிறதோ அப்போது வந்து என் பதிவுகளை படித்துப் பார்த்து கருத்தளியுங்கள். தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete