பிறகு கொழுக்கட்டை மேல் மாவு செய்ய இரண்டு டம்ளர் அரிசியை அலம்பி ஊற வைத்துக் கொண்டு கொஞ்ச நேரம் பெரிய தட்டிலோ, துணியிலோ உலர விட வேண்டும். பின் அதை மிக்ஸியில் நன்கு நைசான மாவாக அரைத்துக் கொண்டு, அந்த மாவில் தேவையான நீர், மற்றும் உப்பையும் கலந்து கரைத்துக் கொண்டு, பின் அடுப்பில் கடாயை ஏற்றி, அதில் சிறிது நல்லெண்ணெய விட்டு சற்று காய்ந்ததும், கரைத்த மாவை அதில் விட்டு கை விடாமல் நன்றாக பந்து போல் கிளறினால், கார கொழுக்கட்டைகளுக்கான மிருதுவான மேல்மாவு கிடைக்கும்.
முன்பே வேக வைத்திருக்கும் இந்த உளுந்து இட்லிகளை சற்று ஆற வைத்த பின், நன்கு உதிர்த்துக்கொண்டு அடுப்பில் வேறு ஒரு கடாயை வைத்து ஒரு கரண்டி ந. எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு போட்டு, அது வெடித்தவுடன் உதிர்த்து வைத்திருக்கும் பூரணத்தை சேர்த்து சிறிதளவு மஞ்சள் பொடியையும் அதனுடன் சேர்த்து மேலும் உதிராக வரும் வரை புரட்டி விட்டு அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைக்கவும்.(நான் அரைத்த மாவுடனே ம. பொடி கலந்து விட்டேன்.)
இப்பொழுது தயாரித்து வைத்திருக்கும் மேல்மாவை கிண்ணங்களாக (செப்பு) செய்து அதனுள் ரெடியாகவிருக்கும் பூரணத்தை ஒரு சிறு ஸ்பூனினால் எடுத்து நிரப்பி, இரு விளிம்புகளையும் விரல்களில் எண்ணெய் தொட்டுக்கொண்டு மெல்ல அழுத்தி நீளமான கொழுக்கட்டைகளாக செய்து கொள்ளவும். பின் இட்லி கொப்பரையிலேயோ, குக்கர் பீரித்திலோ ஆவியில் வைத்து எடுக்கவும்.
இதுவே சுவையான கார கொழுக்கட்டைகள். இதற்கு ஜோடியாக விஷேட நாட்களில், இனிப்பு கொழுக்கட்டைகள் (தேங்காய், வெல்லம் சேர்ந்த பூரணம் வைத்து செய்யும் கொழுக்கட்டைகள். ) உடன் இருந்தால்தான் இது நன்றாக சோபிக்கும் என்பது என் கருத்து. ஆனால், மாலை நேர சிற்றுண்டிக்கென காப்பி, தேனீர் அருந்தும் நேரத்தில் இதை மட்டும் செய்து சாப்பிட்டாலும், நன்றாகத்தான் இருக்கும்.
இந்த மேல் மாவு (அரிசி மாவு) மீந்து விட்டால் அதிலும் தேவையான உப்பு, மிளகாய் தூள், கொஞ்சம் தேங்காய் துருவல், பெருங்காயப்பொடி,மற்றும் கறிவேப்பிலை பொடிதாக அதனுடன் அரிந்து சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, இட்லி தட்டுக்களில் வைத்து, ஒரு பத்து நிமிடங்கள் வேக வைத்து எடுத்து சாப்பிடலாம். இதுவே அம்மணி கொழுக்கட்டை எனப்படும். இதை புகைப்படம் எடுத்து வைத்திருந்தேன். இப்போது "அது இந்த அம்மணியிடம் என்ன சொல்வதென்ற எண்ணத்தில்" எங்கோ ஓடி ஒளிந்து கொண்டு விட்டது. ஹா ஹா ஹா.அதனால் பகிர முடியவில்லை. மற்றொரு முறை செய்யும் போது புகைப்படங்களுடன் பகிர்கிறேன்.
இந்த இரு கொழுக்கட்டைகளுமே நல்ல காரசாரமாக இருக்கும். (அவரவர் விரும்பியபடி காரங்களை கூட்டிக் குறைக்கலாம்.) ஆனால்,பொதுவாக சிலருக்கு அதிக காரம் ரொம்ப பிடிக்கும், சிலருக்கு இனிப்பு ரொம்ப பிடிக்கும். சிலருக்கு இரண்டுமே அளவாக இருந்தால்தான் பிடிக்கும். சிலர் இனிப்பை தவிர்த்து காரமானதை மட்டும் எடுத்துக் கொள்வர். இது அவரவர் மன/உடல் நிலையை பொறுத்த விஷயங்கள்.
நம் சகோதரி அதிராவுக்காக இதை மட்டும் என் கொழுக்கட்டை பதிவிலிருந்து போட்டோக்களை எடுத்துப் மீள் பதிவாகவும், சில(நிறைய) வற்றை மீண்டும் புதிதாக எழுதியும், இணைத்துப் பதிந்துள்ளேன்.
அப்போது அதிரா சகோதரி என் வலைதளம் வந்து என்னுடன் பழக்கமாகவில்லை. எனவே இப்போது வந்து இந்த கொழுக் கட்டைகளைத் பார்வையிட்டு ரசித்து, (கண்களால் எடுத்து சுவைத்து ) மற்ற நட்புறவுகளுடன் தங்களின் நல்ல கருத்துக்களையும் தாருங்கள் அதிரா சகோதரி.
பதிவை படித்து ரசிக்கும் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் என் அன்பான நன்றிகள். 🙏.
உப்புக் கொழுக்கட்டை எனச் சொல்லப்படும் காரக்கொழுக்கட்டை செய்முறையை ரசனையுடன் பதிந்திருக்கிறீர்கள். நன்று
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்களின் அன்பான உடனடி வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
பதிவை படித்து ரசித்து தந்த தங்களது அன்பான பாராட்டிற்கு என் மனம் நிறைந்த நன்றி சகோதரரே
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வட்டமான சொப்பு வைத்து எப்படி நீளமான காரக் கொழுக்கட்டை வந்தது என்று கேட்கமாட்டேன்.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
/வட்டமான சொப்பு வைத்து எப்படி நீளமான காரக் கொழுக்கட்டை வந்தது என்று கேட்கமாட்டேன்/
.ஹா ஹா ஹா. இப்படி கேட்டு விடுவீர்களோ என்றுதான் அதன் சூட்சுமத்தை பதிவில் எழுதி விட்டேனே..! வட்டத்திற்குள் சதுரம் என்ற ஒரு திரைப்படம் வேறு வந்துள்ளதே.! தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இரு நாட்களுக்கு முன் இந்தப் பூரணம் பண்ணி சேவை செய்து அதில் கலந்து அவள் அம்மாவிற்காகச் செய்திருந்தாள். மிக ருசியாக இருந்தது
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
ஆம்.. இந்த பூரணத்தை தயார் செய்து கொண்டு, அரிசி சேவையோடு கலந்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும். கெட்டி அவல் ஊற வைத்து அதனுடனும் இதை கலந்து தாளித்து காலை டிபனாக எடுத்துக் கொள்ளலாம். மேலும் இந்த பூரணம் வெறுமனே சாப்பிட்டால் கூட ஒரு தனி ருசிதான். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
உளுத்தம் பூரணத்துடன் சேவை கலந்தா.... புதிதாய் இருக்கிறதே....
Deleteவணக்கம் ஸ்ரீராம் சகோதரரே
Deleteவீட்டில் செய்யும் அரிசி சேவையாடு இந்த பூரணத்தை சேர்த்து கலந்து வதக்கினால், இந்த உளுந்து பூரண சேவை மற்ற கலவன் சேவைகளை விட மிகவும் சுவையாக இருக்கும். நானும் நிறைய தடவைகள் இப்படி செய்துள்ளேன். இதை எழுதும் போதும் சரி, இப்படியெல்லாம் விதவிதமாக சமையல் தினுசுகள் செய்யலாம் என்று நினைக்கும் போதும் சரி, அந்த பாடலும் அடிக்கடி நினைவு வரும். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
// அந்த பாடலும் அடிக்கடி நினைவு வரும். //
Deleteஎந்தப் பாடல்?
பிரபு தேவா பாடல் என நினைக்கிறேன். "படுத்துக்கினே போர்த்திக்கவா? என்று வரும். ஹா ஹா ஹா. எப்போதோ கேட்ட பாடல். எப்படியானாலும் ஒன்றுதானே..! என நினைக்க வைக்கும் பாடல். அது.
Delete//உளுத்தம் பூரணத்துடன் சேவை கலந்தா.... புதிதாய் இருக்கிறதே....//
Deleteஉளுத்தம் சேவை கேள்விப்பட்டதில்லையா? எங்கள் வீட்டில் இதுதான் போணியாகும். சேவை என்றால் உளுத்தம் சேவைதான்.
வணக்கம் சகோதரி
Deleteதங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
ஆம்.. உளுந்து சேவை நன்றாக சுவையுடன் இருக்கும். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரரே
Deleteதங்களின் அன்பான வருகைக்கும் பாடல் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
பாடல் பற்றி முழுதாக தெரிந்து கொண்டேன். ஆனால், நீங்கள் தந்த சுட்டியில் பாடல் கேட்க இயலவில்லை. பிறகு யூடியூபில் சென்று கேட்டேன்.அந்த பாடலின் முதல் வரிகளை போல நம் சமையலிலும் உ. பூ, அ. மாவு வைத்து எப்படியும் செய்யலாம் என்பதற்காக அந்தப்பாடலை குறிப்பிட்டேன். வேறு ஒன்றுமில்லை. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஸ்ரீராம் உளுந்து அரைத்து உதிர்த்து சேவையுடன் கலந்து செய்தால் நல்லாருக்கும்.
Deleteகீதா
வணக்கம் சகோதரி
Deleteதங்களது வருகை கண்டு மனம் மகிழ்ந்தேன்.
தங்களின் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அடடா... இப்படி நாவூறச் செய்து விட்டீர்களே... நான் எங்கு போவேன் இப்போதே சாப்பிட.... படங்களை பார்க்கும்போதே நல்ல தரமான கொழுக்கட்டை என்று தெரிகிறது. சில மாவுக் கோட்டைக்குள் துளி பூரணம் வைத்து கடுப்பேற்றுவார்கள்!
ReplyDeleteஆமாம்.. எனக்கும் கடுப்பா இருக்கும். மெல்லிய மேல் மாவுக்கூடு செய்யத் தெரியாதவர்கள் கொழுக்கட்டை பண்ணக்கூடாதுன்னு ஒரு சட்டம் போட்டுவிட வேண்டியதுதான்.
Deleteவணக்கம் சகோதரரே
Deleteதங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
பதிவின் போட்டோக்கள் எப்போதோ கொழுக்கட்டை செய்த பழைய போட்டோக்கள்.
நான் அடிக்கடி வீட்டில் சொல்வேன்.. எப்போதுமே நாம் செய்யும் ஒரு செயல் எப்போதும் போலவே அமையாது. சமையலிலும், அது போலத்தான்...! ஒரு பதார்த்தம் செய்யும் போது ஒரு தடவை நன்றாகவும், சுவையாகவும் அமைந்து விட்டால், அவரே அதை மறுபடி மறு தடவை அதை அளவுகளுடன் அதைச் செய்தாலும், அப்படிச் செய்யும் போது, அதே சுவை அமையாது. வேறுபடும், இல்லை அதை விட சுவை குன்றியோ , அதிகமாகவோ சிறிது வித்தியாசத்தை காட்டும். இதுதான் அனைவருக்குமான இயல்பு.
இருப்பினும் இன்றைய பழைய போட்டோக்களை ரசித்து நல்லதொரு கருத்தை தந்திருப்பதற்கு மகிழ்வுடனான நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சுவை மாறலாம்; தரம் குறையக் கூடாது!
Deleteஉண்மை...! ஆனால், சுவை மாறும் போது, அதுவரை சமைத்தவர்களின் தரம் தாழ்ந்து விடுகிறதே..! என்ன செய்வது.?
Deleteசொப்பு செய்வதற்கான அந்த மேல்மாவு தயாரிப்பதில் இருக்கிறது சூட்சுமம். நான் கப் எப்படி பிடிப்பது என்று எழுதி வைத்திருந்தேன். எங்கோ டிராஃப்டில் கிடக்கிறது. எங்கே தேட...!
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
ஆமாம்.. நல்ல தரமான அரிசியாக இருக்க வேண்டும். அரிசி புது அரிசியாக இல்லாமல் கொஞ்சம் பழையதாக இருந்தால் மாவு நன்றாக செப்பு செய்ய வரும். கடைகளில் வாங்கும் மாவுகளிலும், சில தடவைகள் நன்றாக வரும். சில சமயம் வராது ஏமாற்றி விடும்.
நீங்களும் ஒரு திங்களில், உங்களின் கொழுக்கட்டை மேல் மாவு தயாரிப்பு பக்குவ முறைகளை எழுதி / எழுதியதை எடுத்து பகிருங்கள். படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இன்று பாஸுடன் சண்டைதான்... இங்கு கொ.க படத்தைப் பார்த்து விட்டு இப்போதே, இன்றே செய்து கொடு என்று கேட்கப்போகிறேன்... கடுப்பாவார்.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
அடாடா...! என் பதிவால் இன்று தங்கள் பாஸுடன் சண்டையா..? வேண்டாமே..! "செய்து கொடு உன் இன்றைய வேலைகளின் சமயறிந்து" எனக் நீங்களும் "சமயறிந்து" அன்பாக கேட்டால், உடனே செய்து தந்து விடுவார். அதுதான் ஒரு அன்பான மனைவியின் இலக்கணம்.( இந்த என் பதில் கருத்தையும் "சமயறிந்து" தங்கள் பாஸின் காதில் போட்டு விடுங்கள். "சமயத்தில்" அதற்கும் பலனுண்டு. ஹா ஹா ஹா)
உங்களின் "சண்டை" என்ற வார்த்தையினால் நானும் இந்தக் கருத்துக்கு முதலில் உடன் பதில் அளிக்கிறேன். இன்று மாலை, உங்களுக்கு பிடித்தமான இந்த சிற்றுண்டி கண்டிப்பாக கிடைக்கும். கிடைக்க வேண்டுமென நானும் இறைவனை பிரார்த்தித்துக். கொள்கிறேன். (இதுக்கெல்லாம் போய் இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டுமா என யாராவது வந்து கலாய்க்கப் போகிறார்கள். :))) ) தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கேட்டு விட்டேனே... இன்று கிடையாதாம்.... இன்று சுண்டலுக்கு ஊறப்போட்டிருக்கிறாராம்...
Deleteஅடாடா...! யோசனைகள் பலனளிக்காமல் போனது வருத்தந்தான்.! 😭. ஆனால், நாளை என்ற ஒன்றுள்ளதே.. ! அதில் வெற்றி நிச்சயம்.. :))
Deleteஶ்ரீராம்... என் யோசனை... நீங்கள் கேட்டிருக்கக்கூடாது. உங்க பையனிடம் சொல்லி, இன்னைக்கு இரவு எனக்கு பூரணக் கொழுக்கட்டை பண்ணி வைம்மா என்று சொல்லச் சொல்லியிருக்கணும். நிச்சயம் உங்களுக்குக் கிடைத்திருக்கும். அம்மாக்களின் குணம் எங்கும் ஒன்றேதான் இல்லையா?
Deleteவணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே
Deleteதங்களின் மீள் வருகைக்கும், நல்ல செண்டிமெண்டான யோசனைக்கும் நன்றி.
ஆனால், தன் அம்மாவுக்கு நிறைய வேலைகளை தந்து சிரமத்தை தரக் கூடாது என சகோதரர் ஸ்ரீராமின் மகன் நினைத்து விட்டால்...? ஹா ஹா ஹா. ஒரு கொழுக்கட்டை எப்படியெல்லாம் யோசிக்க வைக்கிறது. நன்றி சகோதரரே .
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆகமொத்தம் கொழுக்கட்டை படம் பார்த்து ஜொள்ளு விடுவதோடு சரி...
Deleteகைக்கு / வாய்க்கு கிடைக்கப் போவதில்லை!!
:((. கஷ்டந்தான்..! விரைவில் தீரட்டும். ஒரு திங்களில் நாங்கள் சற்றும் எதிர்பாராமல் நீங்களே உங்கள் பதிவாக கொ. க பதிவை போடுவீர்கள்.
Deleteதிங்கள் எ பி அவல் கொழுக்கட்டைக்கு பதிலா? பின்னூட்டமா?
ReplyDeleteஅதாவது வடை மாவை இட்லி ஆக்கி, பின்னர் அந்த இட்லியை பொடிமாஸ் ஆக்கி அதை பூரணமாக வைத்து கொழுக்கட்டை உண்டாக்கி காரக்கொழுக்கட்டை என்று பெயர் (மோமோஸ் என்றால் சரியாகாது இதில் மைதா இல்லை) வைத்திருக்கிறீர்கள். இவ்வளவு மெனக்கெடுணுமா? வடையை வடையாகவும், மேல்மாவு கொழுக்கட்டை மாவை கொழுக்கட்டையாகவும் சாப்பிட்டால் போதுமே.
இவ்வளவும் எழுதிவிட்டு கடைசியில் பார்த்தால் பதிவு அதிராவுக்காக. அவர் கொழுக்கட்டை என்றவுடனே மீண்டும் காணாமல் போய்விட்டார்.
Jayakumar
வணக்கம் சகோதரரே
Deleteதங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
/திங்கள் எ பி அவல் கொழுக்கட்டைக்கு பதிலா? பின்னூட்டமா?/
ஆம்.. ஒரு விதத்தில் நீங்கள் யோசித்தது சரிதான்..! சரியாக கூறி விட்டீர்கள். மனமார்ந்த பாராட்டுக்கள். திங்கள் பதிவில், சகோதரி அதிராவுக்காக தந்த கருத்துரையாக சகோதரர் நெல்லை தமிழரின் கருத்துரையை கண்டதால் வந்தது இந்த அவசர பதிவு.
/அவர் கொழுக்கட்டை என்றவுடனே மீண்டும் காணாமல் போய்விட்டார்/
ஆகா.. ஆமாம்.. ஆமாம்.. .. நேற்று அவர் வரவில்லை. ஆனால் இந்த கொழுக்கட்டை பதிவு இன்று அவரை அழைத்துக் கொண்டு வந்து விடுமென நம்புகிறேன்.
/வடையை வடையாகவும், மேல்மாவு கொழுக்கட்டை மாவை கொழுக்கட்டையாகவும் சாப்பிட்டால் போதுமே./
ஹா ஹா ஹா. சாப்பிடலாம்தான்..! நிறைய வேலைகள் மிச்சம். ஆனால், நாக்கின் ருசி "உன் கண்களுக்கும், எனக்கும், ஏன் உன் மனதிற்கும் ஒரு மதிப்பளிக்க வேண்டாமாவென,... " நறுக்கென கேள்விகள் கேட்குமே..! அதனால்தான் இந்த மெனக்கிடல்கள்.:)) தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க மகிழ்வுடனான நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஹா ஹா ஹா இப்போ கொஞ்சக்காலமாக ஜே கே ஐயா எல்லோரையும் புரட்டி எடுக்கிறார் கொமெண்ட்டில்:))
Deleteவணக்கம் அதிரா சகோதரி
Deleteதங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.
ஆஹா.. உங்கள் வருகை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். என் நம்பிக்கை வீண் போகவில்லை. நீங்கள் இந்த பதிவுக்கு கண்டிப்பாக வருவீர்கள் என எதிர்பார்த்துக் கொண்டேயிருந்தேன். வந்து விட்டீர்கள். உங்களுக்கும், அந்த இறைவனுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி .
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆஆஆஆஆ கமலாக்கா உங்கட குசினிக் கதவைக் கொஞ்சம் திறந்து விடுங்கோ, காரக்கொழுக்கட்டை வாசம் இங்குவரை வருதே... அதுசரி என் கொழுக்கட்டைகளை எடுத்துப் பிரிஜ்ஜில வச்சனீங்களோ?.. 2 நாளாயிற்றே...
ReplyDeleteமுதலில் மிக்க நன்றி.. எனக்காக காரக்கொழுக்கட்டை செய்து போட்டமைக்கு.. நெல்லைத்தமிழனும் செய்து தரப்போறேன் என்றவர், பார்ப்போம்...
நேரில எனில் இப்பூடி எல்லோரும் செய்து தருவினமோ என்னமோ அந்த திருச்செந்தூர்க் கிருஸ்ணப் பரமானந்தாவுக்கே வெளிச்சம் ஹா ஹா ஹா...
வணக்கம் அதிரா சகோதரி
Deleteதங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.
நீங்கள் இன்று இந்த பதிவுக்கு வந்தது எனக்கு எவ்வளவு மகிழ்வாக இருக்கிறது தெரியுமா? அதை வார்த்தைகளால் வர்ணிக்க இயலவில்லை.
கண்டிப்பாக இது உங்களுக்காக எழுதிய பதிவு. உங்களுக்கான கொழுக்கட்டைகள் உங்களுக்காகவே கு. சா பெட்டியில் இருக்கின்றன. நீங்கள் யாருடைய பெர்மிஷன் கேட்காமலே அதிலிருந்து எடுத்துக்கொள்ளலாம். எடுத்து சாப்பிட்டீர்களா? நன்றாக இருந்தா?
சகோதரர் நெல்லைத் தமிழர் அவர்களும் இதேப் போல் உங்களுக்கு செய்து தரப் போகிறார் எனப் படித்ததும் தான் நான் அவரை முந்திக் கொண்டேன்.
/நேரில எனில் இப்பூடி எல்லோரும் செய்து தருவினமோ என்னமோ அந்த திருச்செந்தூர்க் கிருஸ்ணப் பரமானந்தாவுக்கே வெளிச்சம் ஹா ஹா ஹா.../
பதிவில் மட்டுமல்ல..! நீங்கள் நேரில் எங்கள் வீட்டுக்கு வந்தாலும், நீங்கள் கேட்கும் சுவையான உணவுகளை நான் தயாரித்து தருவேன். அதற்காக நீங்கள் கோவில்களில் குடியிருக்கும் இறைவனை மாற்றினாலும், நான் அஞ்ச மாட்டேன். இது அந்த கிருஷ்ணா பரமாத்மாவுக்கே தெரியும். ஹா ஹா ஹா ஏனெனில் நான் அவருக்கு பிரியமான பக்தை. அவருக்கு மட்டுமல்ல.. அவரின் மருமகனுக்குந்தான். :)))) தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கொழுக்கட்டைப் பூரணத்துக்கு உழுந்து வச்சிருக்கிறீங்கள் எனக்கு ஆச்சரியமா இருக்கு, இப்படி ஒரு கொழுக்கட்டை இதுவரை கேள்விப்பட்டதில்லை.. ஆனா இதுவும் நல்லாத்தான் இருக்குது, செய்து பார்த்திடலாம்... நீங்கள்
ReplyDelete"பூரணம்" என்பதை நாங்கள் "உள்ளுடன்".. என்போம்...
வணக்கம் சகோதரி
Deleteதங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.
நீங்கள் பதிவை ரசித்து படித்தமைக்கு மிக்க நன்றி. இதை உளுந்து பூரணம் என்போம். தேங்காய் வெல்லம் சேர்த்து செய்வதை இனிப்பு பூரணம் என்போம். நீங்கள் "உள்ளுடன்" என்று சொல்வதும் பொருள் பொதிந்தாக நன்றாக உள்ளது. பூரணம் என்ற சொல்லுக்கு ஆன்மீகத்தில் "இறைவன் நம்முள்ளே ஆத்மாவாக பூரணத்துடன் நிலைத்திருக்கிறான்" எனவும் அர்த்தம். நீங்கள் சொல்வதும் அதற்கு ஒத்து வருகிறது. வார்த்தைகள் வேறுவேறாயினும் அர்த்தங்கள் என்றும் ஒன்றுதான். நீங்களும் ஒரு முறை இவ்வாறு செய்கிறேன் என்று சொன்னதற்கு மிக்க மகிழ்ச்சி சகோதரி. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அந்த "அம்மணி"யைக் கொஞ்சம் தேடிக் கண்டுபிடிங்கோ:)...
ReplyDeleteஇந்த அம்மணியை நாங்கள் பிடிக்கொளுக்கட்டை என்போம், ஆனா இனிப்பாகத்தான் செய்ததுண்டு.
எனக்கு நேரமும் கிடைக்கவில்லை, சரியான ரயேட்டாகவும் இருந்துது, அதனால சரி புளொக் பக்கம் போக வேண்டாம், நாளைக்கு முடிஞ்சால் எட்டிப் பார்ப்போம் என நினைச்சுப்போட்டும், பின்பு மனம் சொல்லிச்சுது, இல்லை 2 நாளாகப் போகவில்லையே, ஒரு தடவை போய் வருவோம் என... நல்ல வேளை கொளுக்கட்டை பழுதாக முன்னர் வந்திட்டேன்:).. நன்றி கமலாக்கா.
வணக்கம் சகோதரி
Deleteதங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
/அந்த "அம்மணி"யைக் கொஞ்சம் தேடிக் கண்டுபிடிங்கோ:).../
ஹா ஹா ஹா கண்டிப்பாக.. தேட முடியவில்லை என்றாலும் புதிதாக ஒரு அம்மணியை (உங்களுக்காக) உருவாக்கி விடுகிறேன். ("அட.. கதிர் காமத்து ஈஸ்வரா... மறுபடியும் எனக்காக ஒரு பதிவா? "என நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது. ஹா ஹா ஹா.)
நானும் இரு தினங்களாக உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். தங்கள் வேலைகளுக்கிடையில் என் பதிவுக்கு வந்து நல்லாதான கருத்துக்களை தந்திருப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது சகோதரி. உங்கள் ஊக்கம் நிறைந்த வரிகள் என் எழுத்துகளை உரமேற்றி வளர்க்கிறது. நம் நட்பு இப்படியே தொடர வேண்டுமென இறைவனை மனதாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்
வணக்கம் சகோதர சகோதரிகளே
ReplyDeleteசுமாராக இருப்பினும் இந்தப்பதிவுக்கு நீங்கள் அனைவரும் வந்து நல்ல கருத்துக்களை தந்து என்னை கௌரவபடுத்தியமைக்கு உங்களனைவருக்கும் என் பணிவான நன்றிகள்.
சகோதரி கீதா ரெங்கன் அவர்களைதான் இன்னமும் காணவில்லை. அவர்களின் நேரங்களில் கடினம் நானுமறிவேன். அவர்களால் முடியும் போது வர வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். அதுவரை கொ. க. கள் கு. சா. பெட்டியில் பத்திரமாக இருக்கும். ஹா ஹா ஹா. நன்றி அனைவருக்கும்.
பி. கு. பேட்டா விலை போலில்லாமல் கருத்துரைகள் முழுதாக இருக்கட்டுமென உருவாக்கிய கருத்திது. :)))
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கமலாக்கா வந்துவிட்டேன். ஸ்ரீராம் சொல்லியிருந்தார் இந்தக் கருத்தை எனக்குக் காட்டி.
ReplyDeleteகு சா பெட்டியில் பத்திரமாக இருக்கும் கொ க களை கொஞ்சம் சூடு பண்ணி எடுத்துக் கொண்டுவிட்டேன்..
சூப்பர் சூப்பர் நல்லாருக்கு
எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
படங்கள் எல்லாமே நல்லா வந்திருக்கு
கீதா
வணக்கம் சகோதரி
Deleteதங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.
அடாடா..! நான் சும்மா நகைச்சுவைக்காக இந்த கருத்தை எழுதினேன். உங்கள் அலுவலக வேலைகளின் பளுவும், வீட்டு வேலைகளின் பொறுப்பும் உங்கள் நேரத்தை சரியாக வைத்திருக்கும் என்பதை நானறிவேன். உங்களுக்கு எப்போது சௌகரியபடுகிறதோ அப்போது வரலாம். ஒன்றும் பிரச்சனையில்லை. ஆனால், உங்களுக்கு சகோதரர் ஸ்ரீராம் அவர்கள் தகவல் கூறுவார் என நான் எதிர்பார்க்கவில்லை. நீங்களும் இவ்வளவு வேலைகளுக்கும் நடுவே வந்து பதிவை படித்து கருத்து தெரிவித்திருப்பதற்கு மிக்க மகிழ்ச்சியுடனான நன்றி சகோதரி. ஆனால், உங்களை நான் மிகவும் தொந்தரவு செய்து விட்டேனோ.? மன்னிக்கவும் சகோதரி.
கு. ச. பெட்டியில் இருந்ததை எடுத்து சூடு படுத்தி சாப்பிட்டதற்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் சகோதரி. ஹா ஹா ஹா நன்றாக இருந்ததா?
பதிவை பாராட்டி என்னை ஊக்கப்படுத்தியமைக்கு என் பணிவான நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இன்றுதான் டார்கெட் முடிந்தது கமலாக்கா. புதன் நான் வரவே இல்லை....
ReplyDeleteநானும் மீறும் கொழுக்கட்டை மாவில் அம்மிணிக்கொழுக்கட்டை செய்வேன். திருநெல்வேலிப்பக்கம் அம்மிணி கொழுக்கட்டை ஃபேமஸ்
அதே அம்மிணிக்கொழுக்கட்டையை தேங்காய்க்குப் பதிலாக க ப து ப போட்டு நார்மல் உசிலி செய்வோமே அப்படி உசிலி செய்து இந்தக் கொழுக்கட்டையை கலந்தும் செய்யறதுண்டு
உ ப வை அரைத்துவிட்டு வேக வைப்பீங்களஆ?!! நான் அரைத்ததை அப்படியே வாணலியில் தாளித்துவிட்டு போட்டு கொஞ்சம் பிரட்டி விட்டு உருண்டை பிடித்து ரெடியாக வைத்துக் கொண்டுவிட்டு அப்புறம் அதே தான் கொழுக்கட்டை செய்வது
கீதா
வணக்கம் சகோதரி
Deleteதங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
உங்கள் கருத்தில் எல்லாவற்றையும் புரிந்து கொண்டேன் சகோதரி. உங்களை நிர்ப்பந்தப்படுத்தி பதிவுக்கு அழைப்பு விடுத்தமைக்கு என்னை மன்னித்து விடுங்கள்.
நானும் அம்மணி கொழுக்கட்டை பற்றி கூறியுள்ளேன். ஆனால், அது நீங்கள் செய்வது போலில்லை. வெறும் தேங்காய் துருவி, ப. மி கடுகு வதக்கி மீந்த மாவுடன் சேர்த்து, உருண்டைகளாக சிறு பண்ணி வேக வைப்பேன்.
உங்கள் செய்முறையும் மிக நன்றாக உள்ளது. இது போலவும் உசிலி போல் செய்து, மாவை சிறு உண்டைகளாக செய்து வேக வைத்து எடுத்துக் கொண்டு உசிலியுடன் கலப்பது. சமயத்தில் இப்படியும் செய்வேன். அதை மணி கொழுக்கட்டை என்போம்.
/நான் அரைத்ததை அப்படியே வாணலியில் தாளித்துவிட்டு போட்டு கொஞ்சம் பிரட்டி விட்டு உருண்டை பிடித்து ரெடியாக வைத்துக் கொண்டுவிட்டு அப்புறம் அதே தான் கொழுக்கட்டை செய்வது/
உங்கள் உ. கொ. க. செய்முறையும் அருமையாக உள்ளது. சுலபமான செய்முறை. இப்படியும் செய்யலாம். நல்ல யோசனைகளுக்கும், உங்கள் அன்பான கருத்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கொழுக்கட்டை மாவுக்குள் பூரணம் நன்றாக வைத்திருக்கீங்க எனக்கும் அதுதான் பிடிக்கும் சும்மா மேல்வாமு ஜாஸ்தியாக உள்ளே கடுகு சைசுக்குப் பூரணம் வைத்தால் சுமார் தான்..
ReplyDeleteநன்றாக வந்திருக்கு கமலாக்கா சூப்பரா இருக்கு எல்லாக்கொழுக்கட்டைகளும்
கீதா
வணக்கம் சகோதரி
Deleteதங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.
ஆம். கொஞ்சம் அதிகமாக பூரணம் வைத்தால்தான் கொழுக்கட்டை சுவையாக அமையும். வெறும் மேல் மாவாக மட்டும் இருந்தால் அந்த பூரணத்தின் சுவையே கிடைக்காமல் போய் விடும்.
தாங்கள் பதிவை ரசித்து, படங்களை விமர்சித்து தந்த கருத்துக்களுக்கு, மற்றும் பாராட்டிற்கும் மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பதில்களுக்கு நன்றி கமலாக்கா.... ஆனாலும் பாருங்கோ சென்னைக்கு கிழக்கால மேற்கால... பெங்களூருக்கு வடக்கால...[நெ தமிழன் இப்போ எந்த ஊரெனத் தெரியவில்லையே:] எல்லாம் புகைப்புகைய்ப்போகுது:))))..
ReplyDeleteடெய்லி வாற எங்களுக்குச் செய்யாமல் காணாமல் போன அதிராவுக்குக் காரக் கொழுக்கட்டையோ என ஹா ஹா ஹா..:)))
வணக்கம் அதிரா சகோதரி.
Deleteதங்களது மீள் வருகைக்கும், கருத்துப்பகிர்வுக்கும் என் அன்பான நன்றி சகோதரி.
ஆகா.. பொன்னியின் செல்வன் படிக்க ஆரம்பிக்கிறீர்களா? எத்தனையாவது பாகத்தில் இருக்கிறீர்கள்? நல்லது. தொடர்ந்து படித்து முடிக்க வாழ்த்துக்கள்.
/டெய்லி வாற எங்களுக்குச் செய்யாமல் காணாமல் போன அதிராவுக்குக் காரக் கொழுக்கட்டையோ என ஹா ஹா ஹா..:)))/
ஹா ஹா ஹா. உங்கள் கருத்தைக் கண்டு சிரித்தே விட்டேன். என் பதில்களை ரசித்து வந்திருக்கும் தங்களுக்காக மறுபடி இனிப்பு கொழுக்கட்டைகளும் செய்து தரலாம். தப்பேயில்லை சகோதரி. உங்களின் ஊக்கம் தந்த கருத்துரைகள் எனக்கு மிக சந்தோஷத்தை தருகிறது. என்றும் உங்களை வரவேற்கிறேன். மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி. நன்றி பதிவுக்கு வந்த அனைவருக்கும் நன்றி.
Delete