Thursday, November 24, 2022

இனிய அனுபவங்கள்.

 ரவா வெல்ல கேசரி புராணம்...


ஸ்ரீ விக்னேஸ்வரனே அனைவருக்கும் துணை

அருள் மிகும்  விநாயகர் இந்த தடவையும் என் பதிவில் இடம் பெற வந்து விட்டார். அதுவும் முன்னாடி பதிவிலேயே (கதைப் பதிவுக்கும், அதற்கடுத்த  முந்தைய பதிவுகளுக்கும்) தங்கள் விருப்பமாக கருத்துக்கள் சொன்ன  என் அன்பான சகோதர சகோதரிகளின் அன்பான வேண்டுகோளிற்கு இணங்கி வந்த அவருக்கு என் பக்தியுடன் கூடிய நமஸ்காரங்கள். 🙏. 

அவரை வரவழைத்த உங்கள் அனைவருக்கும் என் அன்பான நன்றிகள். 🙏. 

இந்த பாம்பே ரவையை கேசரி செய்து சாப்பிட்டு எல்லோருக்கும், பழக்கந்தான்.. அதிலும் ஒரு ஆண், பெண் வாழ்க்கைப் பயணத்தில் அறிமுகமாகும் ஒரு நன்னாளில், இது இல்லாமல், இதன் அனுமதி இல்லாமல் அந்த காலத்தில் எந்த வித இனிப்பும் தலை காட்ட முடியுமா? போதாகுறைக்கு வாழைக்காய் பஜ்ஜியையும் இது துணைக்கு அழைத்துக் கொள்ளும். அதன் துணை இதற்கு ஒரு வாழ்க்கைத்துணை மாதிரி. பெயர் பொருத்தமும் பஜ்ஜி ஜொஜ்ஜி என இணையாகவும், பொருத்தமாகவும்  வைத்துக் கொண்டபடி அனைவரும் அவரவர் வாழ்க்கைத்துணை களை தேர்ந்தெடுக்கும் சமயங்களில் இதன் உலா அக்காலத்தில்  தொடரத்தான் செய்தது. ஆனால், காலங்கள் மாற மாற வேறு இனிப்புகள், காரங்கள் இதன் இடத்தைப்பிடித்து இவைகளின் அதிருப்தியை சம்பாதித்து கொண்டன. அதன் பின்னும் வந்த காலத்தில், ஒரு காப்பி, டீ, ஏதாவது பழ ஜூஸ், இல்லை வெறும் தண்ணீர் என்ற காலங்கள் மாறி, மேற்படி பையனும், பெண்ணும் உயர்தர உணவகத்தில் விலையுயர்ந்த ஒரு காஃபியை வாங்கி சிறிது சிறிதாக நீண்ட நேரம் அருந்தி, பெரிது பெரிதாக தங்கள் வாழ்க்கையைப் பற்றி அலசி ஆராய்ந்து, தங்கள் ஒப்புதல்களை பெரியவர்களுக்கு தரும் நாளை தீர்மானித்து, முடிவில் சேர்ந்தோ, அல்லது விலகியோ போகும் நவநாகரீக காலங்கள் என்று இப்போது வந்த பின் இந்த ரவை கேசரி வெட்கி தலைகுனிந்து இந்த சுபமான வைபவங்களுக்குள் கலந்து கொள்ளாமலே விலகி விட்டதோ என நான் நினைக்கிறேன். (தப்பித்தவறி இதற்கு இருந்த மதிப்பு இன்னமும் அநேக இடங்களில் நிலையாக இருந்தால், இதைப்பற்றி  இப்படி எழுதும் என்னை மன்னித்து விடுமெனவும் ஆணித்தரமாக நம்புகிறேன். :)))) ஏனென்றால் ரவா கேசரி எங்களுடைய பிடித்தமான உணவு. முன்பு நாங்கள் குழந்தைகளுடன் சேர்ந்திருந்த போது, சனி ஞாயறுகளில், மாலை ஏதாவது ஒரு காரமான ஸ்நாக்ஸாக வடை, பஜ்ஜி உ. கி. சேர்த்தோ , இல்லை உளுந்து போண்டா, குணுக்கு போன்றவற்றையோ செய்யும் போது இனிப்பான இது எங்களை மறக்காது அடிக்கடி இதுவும் வந்து உடன் சேர்ந்து கொள்ளும். ) 

எனக்கு தெரிந்து எனக்கும் சரி, என்னை சார்ந்த  என் இனிய சுற்றங்களுக்கும் இந்த ரவை கேசரி படலம் வாழ்வின் இரண்டாவது அத்தியாயத்தின் முதலாவதாக தொடர்ந்தது . சென்னையிலிருந்து  என் கணவர்  என்னை பெண் பார்க்க வரும் போது காலை நேரம். பத்து பதினொன்று என அந்த நேரத்தில் கேசரியும், பஜ்ஜியும் அத்தனை பேருக்கும் முன்னால் அமர்க்களமாக அணிவகுத்து நின்றன. இத்தனைக்கும் காலை சீக்கிரமாகவே எழுந்து காலை டிபனை (வழக்கப்படி இட்லிதான்) முடித்து விட்டு வீட்டிலிருந்த நாங்கள் அனைவரும்  காத்திருந்தோம். அவர்களும்  (அவர்கள் அக்கா வீட்டிலிருந்து) காலை டிபனை முடித்து விட்டு வந்திருந்தார்கள். பெண் பார்க்கும் வைபவங்கள் முடிந்த பின் பெரியவர்களுக்குள் பேச்சு வார்த்தைகள் முடிந்ததும், உடனே மாலை நிச்சயதார்த்தம் என முடிவானது. ஏனென்றால் அப்போது சென்னையிலிருந்து அடிக்கடி வந்து போவது கொஞ்சம் கடினம். அவர் அலுவலகத்தில் அடிக்கடி விடுமுறையும் எடுக்க இயலாது என்பதினால், பெரியவர்கள் கலந்தாலோசித்து இந்த அவசர முடிவு. 

அன்றைய மாலைக்குள் எங்கள் அம்மா (அப்போதெல்லாம் யாரையும் உடனடியாக சமையலுக்கு அழைக்கும் வசதி கிடையாது) வடை பாயாசத்துடன் இனிப்பு வகைகளையும் செய்து சமையலையும்  (அதுவும் நவீன வசதிகள் ஏதுமற்ற சூழ்நிலைகளில் ) தடபுடலாக முடித்து நிச்சயதார்த்தத்திற்கு மனையிலும் அப்பாவுடன்  வந்தமர்ந்தார். அதற்குள் வாத்தியார் ஏற்பாடு, பிற வேலைகள் என அப்பாவும், அண்ணாவும் மன்னியும் பயங்கர பிஸி. வீட்டிலேயே நடைபெற்ற அந்த அவசர விழாவுக்கு அக்கம் பக்கம் உறவினர்கள், தெரிந்தவரகள் என நிறைய பேர்களை விழாவில் கலந்து கொள்ளவும் , சாப்பிடவும்,  அழைத்திருந்தோம் .மாப்பிள்ளை வீட்டை சார்ந்தவர்கள் பத்து பேர்களுக்கு மேல் வந்திருந்தனர். மனையில் வைக்க சீர்  பட்சணங்களும் (அதை முதல்நாளே நிச்சயதார்த்திற்கென அம்மா, பாட்டி செய்து வைத்து விட்டார்கள். "என்னம்மா இது  இன்னும் முதல்படியிலேயே கால் பதியவில்லை... அதற்குள் இரண்டாவது படி மேல் காலை வைக்க முயற்சி செய்கிறாயே" என நாங்கள் கேட்டும், அம்மாவுக்கு  என்னவொரு அசைக்க முடியாத நம்பிக்கை....!! "சுபமஸ்து எல்லாம் நல்லபடியாக நடந்து விடும்.. அப்படியில்லையென்றால், நமக்கு இதையெல்லாம் சாப்பிட வாய் இல்லையா என்ன?" என்று உறுதியுடன் பதிலளித்து விட்டு மாலாடு, ரவாலாடு, தேன்குழல், திரட்டுப்பால் என எல்லாம் வகையாக செய்து விட்டார்.)  தயார் நிலையில் இருந்தன. 

இத்தனை பேருக்கும் சமையல், வீட்டிலுள்ள எங்களுக்கு காலை டிபன், பின் இடையில் வந்தவர்களுக்கும் இனிப்பு காரத்துடன் டிபனும் (இட்லிகளும்) என பரபரப்புடன் அவர்கள் (எங்கள் அம்மாவும், பாட்டியும். ) விடாமல் செய்ததை என்னால் இன்னமும் மறக்க இயலாது. இப்போது உள்ளவர்களால் இப்படி தனியாக அத்தனையும் செய்யவே இயலாது. நல்லவேளை...! என் முதல் பெண் பார்க்கும் படலத்துடன் அத்தனையும் சுபமாக முடிந்தது. மேலும் நிறைய தடவைகள் இந்த பஜ்ஜி கேசரி சிரமங்களை என் பெற்றோருக்கு நான் தர வைக்கவில்லை அந்த இறைவன். 

திருமணமாகி எங்களுக்கு குழந்தைகள் பிறந்த காலத்திற்கு பின் என் புகுந்த வீட்டின் ஒரு சுற்றத்திற்காக  ஒரு இடத்தில் பெண் பார்க்கும் படலத்திற்கு சென்றிருந்தோம்பெண் வீட்டுக்காரர்கள்  ஏற்கனவே எனக்கு மிகவும்  அறிமுகமானவர்கள். (அக்கம்பக்கமாக ஒரு இடத்தில் முன்பு ஒரு சமயம் நாங்கள் குடியிருந்ததில் ஏற்பட்ட  நெருங்கிய நட்பு) நாங்கள் உறவு என கூட்டமாக அவர்கள் வீட்டுக்கு பெண் பார்க்கப் போனதோ கிட்டத்தட்ட பத்து பதினைந்து பேர். அத்தனை பேருக்கும் அவர்கள் சுடச்சுட வாழைக்காய் பஜ்ஜிகள், நெய் சொட்ட கேசரி என அமர வைத்து போதும் போதுமென தடுத்தும் அன்போடு விடாப்பிடியாக பறிமாறினார்கள். பிறகு நல்ல பெரிய டம்ளர்களில் காஃபி. மயங்கி கீழே விழாத குறையாக சாப்பிட்ட (சாப்பிட வைத்தார்கள்) பிறகு பெண் பார்க்கும் படலம் முடிந்தது. 

அந்தப் பெண்ணை நான் ஏற்கனவே பல தடவைகள் பார்த்து பேசியுள்ளேன். ஆனால், மாப்பிள்ளை உறவுகள்  அப்போதுதான் பார்க்கிறார்கள். இறுதியில் வீட்டுக்கு வந்ததும் அந்தப் பெண் வேண்டாமென மாப்பிள்ளை பையன்  சொன்னதும் எங்களுக்கு ஒரே அதிர்ச்சி. (அடாடா.. அவர்கள் வீட்டில் அன்று  தின்றதிற்காகவாவது ஒத்துக்கொள்ள கூடாதா? என்று என் மனதிற்குள் அந்தப்பையனிடம் பல முறை கேட்டு கேட்டு அலுத்து விட்டேன்.) என்னசெய்வது? "இன்னாருக்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று" என்ற மாதிரி பிறக்கும் போதே இதையெல்லாம் முடிப் போட்டல்லவா இறைவன் அனுப்பி வைக்கிறான். 

பெண் வீட்டுகாரர்களுடன் அநநிகழ்வுக்குப் பின்னும் நான் பேசி பழகினேன். எனக்குத்தான்  சங்கடமாக இருக்கிறதென்று  வருத்தமாக அவர்களிடம்  சொல்லும் போதெல்லாம் அவர்கள்தான்" "இது எல்லாம் உலகில் சகஜந்தான்" என என்னை சமாதானபடுத்துவார்கள். அவர்களின் நல்ல மனதை எண்ணி நானும் அவர்களுடன் எப்போது பேசும் போதும் வியந்திருக்கிறேன். இன்று அந்தப் பையனுக்கும், பெண்ணிற்கும் வெவ்வேறு இடங்களில் திருமணமாகி நலமாக, வளமாகத்தான் இருக்கிறார்கள். இதைதான் "இறைவன் செயல்" என்கிறோம். 

அட......! இன்னமும் இவர் தலைப்புக்கு வரவில்லையே...!  என நீங்கள் எண்ணலாம். நான் இப்போது ஒரு தினம் இதைச் செய்யும் போது சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் போட்டு செய்தேன். கடவுளுக்கும் நேவேத்தியமும் செய்யலாம். சர்க்கரை சேர்க்கக் கூடாத என்னைப் போன்றவர்களும் இது மாதிரி செய்தால் கொஞ்சம் (கொஞ்சந்தான்) சாப்பிடலாம் என்ற நினைப்பில் வெல்லம் சேர்த்து செய்தேன். 

இதைப் பகிர நினைக்கும் போது, இந்த கேசரி  சம்பந்தபட்ட நிறைய புகைப்படங்களை நான் எடுக்கவே இல்லையே என்ற நினைவு வந்தது. அதனால், என் மனதின் எண்ணங்களும் ரவையோடு சேர்ந்த வெல்லமாய் உடன் கலந்து  பதிவாக வந்து விட்டது. ரவையின் அளவுடன் கண்ணளவாக வெல்லம் கரைத்து வடிகட்டி சேர்த்து கிளறும் போது நெய்யும் சேர்த்து நன்றாக வந்த இந்த வெல்ல கேசரியை நீங்களும் கொஞ்சம் எடுத்து சுவைக்கலாமே.. மேலும் மு. ப. , ஏலப்பொடி போட்டவைகளை படங்கள் எடுக்கவேயில்லை.அதறகாக என்னை மன்னிக்கவும். ஆனாலும் சுவையாக வந்த கேசரிக்காக நீங்கள்  அனைவரும் இந்தப் பதிவையும் படிப்பீர்கள் என அன்புடன் நம்புகிறேன். உங்களனைவருக்கும் என் பணிவான நன்றிகள். 🙏. 


   
வெல்ல கேசரியையும், என் சுவையான  அனுபவ எண்ணங்களையும் முறையே பார்த்து படித்து ரசித்தமைக்கும் உங்கள் அனைவருக்கும் மீண்டும் என் அன்பான நன்றி... 🙏.. .

இது இப்போது எங்கள் வீட்டின் சின்னக் குழந்தைகளுக்காக கிளறிக் தந்த ரவா ஜீனி கேசரி. நான் வெல்ல கேசரி பதிவை எழுதி முடித்ததும் அதற்குப்போட்டியாக இதுவும் வந்து விட்டது.குழந்தைகளுக்கு மு. ப. உடைத்து வறுத்துப் போட்டால் அது அவ்வளவாக அவர்களுக்கு பிடிக்கவில்லை. தனியே எடுத்து வைத்து விடுகின்றனர். அதனால் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி வறுத்து இறுதியில் ஏலக்காய் பொடியுடன் சேர்த்து இதையும் கேசரியுடன் கலக்க  வைத்திருக்கிறேன். 


பதிவை படித்து இரண்டு விதமான கேசரிகளை எடுத்துச் சுவைத்த அனைவருக்கும் மிக்க நன்றி. 🙏. . 

51 comments:

 1. அம்மாவின் நம்பிக்கையும், பாட்டியுடன் சேர்ந்து செய்த வேலைகளின் சுறுசுறுப்பும், செய் நேர்த்தியும் வியக்க வைக்கின்றன. என் அண்ணாவுக்கு பெண் பார்க்க போனபோது கூட இதே போன்ற அனுபவம்.  காலை பெண்பார்த்து, மாலையே நிச்சயதார்த்தம் முடித்து திரும்பினோம்.  அதற்கு காரணம் எங்கள் தாத்தா.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   பதிவுக்கு தங்களின் உடனடி வருகைக்கும், அருமையான பல கருத்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   ஆம்.. அந்த கால பெரியவர்களின் திட்டமிடுதலும், உழைப்பும் இப்போது காண இயலாது. இப்போது எதுவுமே "கடையில் வாங்கி மனையில் வை" என வந்து விட்டது. அதனால் வேலைகள் என்னவோ சுலபமாக முடிந்து விடுகிறதென்றாலும், அந்த பழைய கால சாஸ்திரங்கள், சம்பிரதாயங்களின் பழக்க வழக்கங்கள் சற்று மாறுபடுகின்றனவோ என தோன்றும். ஆனால் எல்லாவற்றையும் எளிதாக ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இப்போது அனைவருக்கும் வந்து விட்டது. அதனால் பிரச்சனையுமில்லை.

   உங்கள் அண்ணாவின் நிச்சயதார்த்தமும் அவ்விதம் ஒரே நாளில் நடைப்பெற்றது குறித்து மகிழ்ச்சி. மேலும் அப்போதெல்லாம் இப்போது போல் மண்டபம் பார்த்து பெரிதாக நிச்சயதார்த்தம் செய்வது குறைவு. சில வீடுகளில் பெண் பார்த்தவுடன் எளிதாக "வெற்றிலை பாக்கு மாற்றிக் கொண்டோம்" என்பார்கள். தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 2. ஏனோ எனக்கு ரவா கேசரி அவ்வளவு இஷ்டமில்லை.  ஒரு ஸ்பூன் கடமைக்கு சாப்பிடுவேன்.  அவ்வளவுதான்.  என் பாஸ் உங்களை எல்லாம் போல ரவா கேசரி ஸ்பெஷலிஸ்ட்.  ஆனால் எனக்குதான் பிடிக்காதே...  வாழைக்காய் பஜ்ஜி ரொம்பப் பிடிக்கும்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   அடாடா.. உங்களுக்கு ரவா கேசரி பிடிக்காதா? ஏன் அப்படி? ரவா உப்புமாதான் சிலருக்கு பிடிக்காது. எங்கள் வீட்டில் எப்போதும் ரவா உப்புமா குலதெய்வம். :))) சமீப காலமாகதான் இந்த சின்ன குழந்தைகள் அவ்வளவாக வேண்டாமென கூறுகிறார்கள். (காரணம் இந்த நூடுல்ஸ் பூரி சப்பாத்தி என அவர்களுக்கு பிடித்து விட்ட காரணத்தால்..)

   எங்களைப் போலவே ரவா கேசரி பிரியை என்பதால் உங்கள் பாஸுக்கு என் வாழ்த்துகள். இப்போது என்னாலும் முன்பு போல அடிக்கடி இனிப்பு சாப்பிட இயலவில்லை.. அதனால் இந்த கேசரி படலம் எப்போதோதான்.

   பஜ்ஜி யாருக்குமே பிடித்தமான விஷயம். அதுவும் எண்ணெய் அதிகம் குடித்து விட்டால், நமக்கு ஒத்துக் கொள்ளாமல் போய் விடும். அதனால் அதற்கு தாகம் ஏற்படாத வண்ணம் கவனமாக நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். :)) தங்கள் அன்பான கருத்துகளுக்கு மிக்க நன்றி சகோதரரே.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 3. நாங்கள் இப்போது பார்க்கும் பெண் எல்லாம் பொது இடங்களில்தான்.  பெரும்பாலும் கோவில்.  ரொம்ப நேரம் பெண்ணுடன் தனியாகப் பேசிவிட்டு பையன் வந்து வேண்டாம் என்று சொல்லும்போது எனக்கும் கஷ்டமாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   ஆமாம்... இப்போதெல்லாம் ஒவ்வொரு ஊருக்குச் சென்று பெண் பார்க்கும் படலம் குறைந்து விட்டது. பெண்ணும், மாப்பிள்ளையும் எந்த ஊரில் வேலை பார்க்கின்றார்களோ அங்கேயே ஏதாவது கோவில் போன்ற பொது இடங்களில் பெண்ணும், பிள்ளையுமாக, பெண்ணின் பெற்றோர், மற்றும் மாப்பிள்ளையின் பெற்றோர் என இணைந்து சந்தித்துக் கொண்டு பார்த்துப் பேசி விடுகின்றனர். பிறகு நாள் பார்த்து ஒரு நல்ல நாளில் நிச்சயதார்த்தம்.

   உண்மை.. அவர்கள் பார்த்து பேசி விட்டு வருகிற வரை நமக்கு டென்ஷன்தான்... அது கோவிலாக இருந்தால் அந்த கோவிலின் தெய்வத்தை வேண்டியபடி ஒரு தவிப்புடன் இருக்க நேரிடும்.

   தங்கள் மகனுக்கும் விரைவில் திருமணம் பேசி அமைய இறைவனை மனதாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 4. கோதுமை ரவாயிலா கேசரி செய்திருக்கிறீர்கள்.  வெல்லம் போட்டு சாப்பிட்டதில்லை.  பார்க்க கொஞ்சம் பொங்கல் போலவும் இருக்கிறது! :))

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீராம், கோதுமை ரவையில் )கொஞ்சம் பெரிதாக) இருப்பதில் வெல்லம் போட்டு செய்யும் பிரசாதம்தான் அன்னவரம் சத்யநாராயணா பிரசாதம். பங்கி பிரசாதம். செம் டேஸ்ட் ....நாள்பட இருப்பது போல் பாகு வைத்துச் செய்வதுண்டு....நன்றாக இருக்கும்.

   கீதா

   Delete
  2. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   இல்லை.. இது பாம்பே ரவையில்தான் செய்துள்ளேன். இப்படி வெல்லம் சேர்த்து இதற்கு முன்பே பல முறைகள் செய்துள்ளேன். வீட்டின் விஷேடங்களில் இறைவனுக்கு நிவேதனம் செய்யும் சமயங்களில் இப்படித்தான் செய்வேன்.

   ஓ.. வெல்லம் சேர்த்ததால் ச. பொ மாதிரி உள்ளதோ என்னவோ...!! கோதுமை ரவையில் செய்யும் போது, எங்கள் வீட்டில் அதன் சுவை சிலருக்குப் பிடிக்காமல் போகிறது. என்னைப் பொறுத்த வரை அதில் செய்வது எனக்குப் பிடிக்கும். சேமியா கேசரி யும் எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் இஷ்டம். உங்களுக்கு ரவை சேர்த்தது பிடிக்கவில்லையானால், சேமியாவில் முயற்சிக்கலாமே..! அதன் வாசம் நன்றாக இருக்கும். தங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரரே.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
  3. வணக்கம் சகோதரி

   தங்களின் மேலதிக தகவலுக்கு மிக்க நன்றி. தாங்கள் சொல்லும் பக்குவமும் நன்றாக இருக்கும். ஒவ்வொரு சமயம் அரிசி ப. பருப்பு வறுத்து இப்படி பாகு வைத்து ச. பொ செய்வது போல இந்த கோ. ரவையையும் வேக வைத்துக் கொண்டு பாகுடன் செய்திருக்கிறேன். எப்போது என சரியாக நினைவில்லை. எங்கள் வீட்டில் மெஜாரிட்டி இனிப்புக்கு அடிமை. இப்போதுதான் அது குறைந்துள்ளது. எனக்கு அறவே கூடாது என மருத்துவர் எச்சரிக்கை. சமயங்களில் இப்படி செய்யும் போது ஒரிரு ஸ்பூன்கள் அளவு சாப்பிட்டு விடுகிறேன். தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 5. எங்க பெண்ணுக்கும் பெண் பார்த்த உடனேயே எங்க வீட்டிலேயே நிச்சயதார்த்தம் முன் கூட்டியே மாப்பிள்ளை வீட்டில் சொல்லி இருந்தாலும் எங்களுக்குக் கொஞ்சம் சந்தேகம் தான். பெண் பார்க்கையில் வழக்கமான பஜ்ஜி, கேசரி வேண்டாமென்று மைசூர்ப்பாகும் உ.கி. போண்டோவும் பண்ணி இருந்தோம். மதியம் 3 மணி அளவில் பெண் பார்க்க வந்தார்கள். பின்னர் பெண்ணும்/பிள்ளையும் கலந்து பேசிக் கொண்டு சம்மதம் சொன்னதும் நிச்சயதார்த்த ஏற்பாடுகளை நானும் என் மாமியாருமாகப் பண்ணினோம். உடனே பருப்புத்தேங்காய் முதற்கொண்டு பிடித்துத் திரட்டுப் பால் மட்டும் ஆவினில் வாங்கி மற்ற பக்ஷணங்களில் விரைவில் செய்ய முடிந்ததைச் செய்து நிச்சயம் பண்ணினோம். முதல்நாளே மாவு அரைத்து வைத்துவிட்டதால் அனைவருகும் இட்லி, சேவை, கேசரி, கல்கண்டுப் பொங்கல் எனப் பண்ணிப் போட்டு நிறைவு செய்தோம். பின்னர் நான் ஃப்ரூட் சாலட் செய்து வைத்திருந்தேன் சின்னச் சின்னக் கிண்ணங்களில் அவற்றைப் போட்டுப் பரிமாறினோம். எல்லோருக்கும் ரொம்பவே சந்தோஷமாக இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. //கலந்து பேசிக் கொண்டு சம்மதம் சொன்னதும் நிச்சயதார்த்த ஏற்பாடுகளை // யோசிச்சுச் சொல்றோம்னு சொல்லியிருந்தால், கொடுத்த கேசரி, மைசூபாக்கு, உ.கி. போண்டாவைத் திருப்பி வாங்கிக்கொண்டிருப்பாரோ?

   Delete
  2. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   ஆகா.. தங்கள் அனுபவ பகிர்வும் படிக்க நன்றாக இருந்தது. பெண் பார்த்த அன்றே நிச்சயதார்த்தம் என முடிந்து விட்டால். பெற்றோர்களுக்கு மகிழ்ச்சிதானே ..!! மாலை மூன்றுக்கு மேல் பெண் பார்த்து விட்டு பேசி முடித்ததும், பின் உடனே நிச்சயதார்த்தமும் சிறப்பாக செய்தது சற்று கடினந்தான். உடல் உழைப்பும் கடினமாக இருந்திருக்கும். பாராட்டுக்கள்.

   /பின்னர் நான் ஃப்ரூட் சாலட் செய்து வைத்திருந்தேன் சின்னச் சின்னக் கிண்ணங்களில் அவற்றைப் போட்டுப் பரிமாறினோம். எல்லோருக்கும் ரொம்பவே சந்தோஷமாக இருந்தது./

   வீட்டுக்கு வருகிறவர்களின் தேவையறிந்து செய்து பரிமாறுவதுதானே நம் இயல்பு.. அவர்கள் அந்த நேரங்களில் சந்தோஷபடுவது மறக்க இயலாத ஒன்று. தங்களின் அனுபவத்தையும் இங்கு பகிர்ந்து கொண்டதற்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் சகோதரி. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
  3. வணக்கம் சகோதரரே

   /யோசிச்சுச் சொல்றோம்னு சொல்லியிருந்தால்,/

   ஹா ஹா ஹா.. அதையெல்லாம் எப்படி திருப்பி வாங்கறது.? எல்லாம் வயிறெனும் சுரங்கத்திற்குள் போயிருக்குமே..! "உண்டு முடித்த உணவுக்கு ருசி பார்க்காதே ?" என்றொரு பழமொழி உண்டு.

   இது போல் சாப்பிட்டு விட்டு "யோசிக்கிறோம்" என்று செல்பவர்கள் பல பேர். எதைப்பற்றி யோசிப்பாரகளோ? மேலும் கணக்கில்லாமல் எங்கெல்லாம் பெண் பார்க்க போகலாமென்று யோசிப்பார்களோ? :)))) நன்றி சகோதரரே

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 6. மஹாராஷ்ட்ராவில் இந்த வெல்லக் கேசரி/க்ஷீரா என்னும் பெயரில் அடிக்கடி பண்ணுவாங்க. அங்கே வெல்லம் சேர்த்துத் தான் அதுவும் கோதுமை ரவையில் செய்வார்கள். அதே போல் சீக்கியர்களின் குருத்வாராவிலும் இது தான் பிரசாதமமகக் கொடுக்கப்படும். இரு கைகளையும் ஏந்திக் கொண்டு வாங்கிக்கணும்.கடவுளின் முன்னால் நாம் அனைவரும் பிச்சைக்காரர்களே என்பதை நினைவூட்டுவதற்காக. பொதுவாகக் கடவுள் பிரசாதங்களையே அது விபூதியாக இருந்தாலும் குங்குமமாக இருந்தாலும் இரு கைகளாலும் தான் வாங்கணும் என்பார்கள் இல்லையா?

  ReplyDelete
  Replies
  1. //Geetha Sambasivam has left a new comment on the post "இனிய அனுபவங்கள். ":

   //நீங்க வெல்லத்தில் பண்ணி இருப்பது பாம்பே ரவையிலா? கீழே உள்ள சர்க்கரைக் கேசரியும் நன்றாகவே இருக்கு. முன்னெல்லாம் சர்க்கரை சேர்த்த பண்டங்களை சுவாமிக்கு நிவேதனம் செய்வது இல்லை. பின்னாட்களில் எல்லோருக்குமே பழகிவிட்டது. சுவையான கேசரியோடு அருமையான கட்டுரையையும் கொடுத்த உங்களுக்கு என் நன்றி. இதில் எத்தனை கருத்துகள் தெரியப் போகிறதோ! பின்னர் வந்து பார்க்கணும்.// தேடிப்பிடிச்சுக் கொண்டு வந்து சேர்த்திருக்கேன். :(
   //

   Delete
  2. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

   மஹாராஷ்டிரா, சீக்கியர்களின் குருத்வார் போன்ற கோவில்களின் பிரசாதங்கள் செய்முறை பற்றி தெரிந்து கொண்டேன்.

   /இரு. கைகளையும் ஏந்திக் கொண்டு வாங்கிக்கணும்.கடவுளின் முன்னால் நாம் அனைவரும் பிச்சைக்காரர்களே என்பதை நினைவூட்டுவதற்காக. பொதுவாகக் கடவுள் பிரசாதங்களையே அது விபூதியாக இருந்தாலும் குங்குமமாக இருந்தாலும் இரு கைகளாலும் தான் வாங்கணும் என்பார்கள் இல்லையா?/

   ஆம். தெய்வ சன்னிதானத்தில் பணிவு அவசியந்தானே...! விபூதி குங்கும பிரசாதங்களையும் அப்பிடித்தானே வாங்கிக் கொள்வோம். பெருமாள் கோவிலில் தீர்த்தம் வாங்கும் போதும் இரு கைகளை ஒன்றின் மேலாக வைத்து, கைகளுக்கு அடியில் புடவை தலைப்பை பிடித்தபடிதான் வாங்கிக் கொள்வோம். அந்த புனித நீர் கீழே சிந்தி நம் கால்களில் மிதிபட கூடாதென்பதற்காக இந்த முறை. இத்தகைய நல்ல பழக்க வழக்கங்கள் நம்மிடையே இப்படி வருவது நல்லதுதானே..! தகவலுக்கு மிக்க நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
  3. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   /நீங்க வெல்லத்தில் பண்ணி இருப்பது பாம்பே ரவையிலா? /

   ஆம். பாம்பே ரவையில்தான்.. வீட்டில் வரும் விஷேடங்களுக்கு முக்கால்வாசி இறைவனுக்கு நிவேதனம் செய்ய வெல்லத்தில் செய்தவைகளை செய்து விடுவேன். சில சமயம் ஜீனி சேர்ந்தவைகளும் வேறு வழியில்லாத பட்சத்தில் இறைவனுக்கு சமர்ப்பிக்கப்படும். (மைசூர் பாகு, மாலாடு போன்றவை)

   பதிவும், கேசரியும் நன்றாக உள்ளதென கூறியமைக்கு மிக்க மகிழ்வுடன் கூடிய நன்றி சகோதரி.

   இதுவரை தாங்கள் தந்த கருத்துக்கள் வந்து விட்டன என நினைக்கிறேன். வேறு எங்காவது சிக்கி உள்ளனவா என தாங்கள் வந்து பார்த்தால்தான் தெரியும். தங்களது அன்பான கருத்துகளுக்கு மிக்க நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 7. இதை திங்கக்கிழமை பதிவாக எ பி க்கு அனுப்பியிருக்கலாம். வெல்லக்கேசரி புதிய செய்முறை. 
  Jayakumar

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   பதிவை ரசித்து நல்லதொரு கருத்து தந்திருப்பதற்கு மிக்க மன மகிழ்வுடன் கூடிய நன்றி சகோதரரே.

   எ. பிக்கு அனுப்பியிருக்கலாம். ஆனால் கூடவே கட்டுரை ஒன்றும் கேசரியுடன் பின்பற்றி விட்டதால் அனுப்ப முடியாமல் போயிற்று. வேறு எழுதி அனுப்புகிறேன். தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 8. ரவா கேசரியோடு பழைய சம்பவங்களை கோர்வையாக சொன்னது அருமை சகோ.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.

   கேசரியோடு பதிவை ரசித்து, தாங்கள் தந்த அன்பான கருத்துரை என் மனதையும் மகிழ்வடையச் செய்தது. தங்களின் பாராட்டிற்கும், கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரரே.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 9. சொல்லிய விதமும், செய்த விதமும் அருமை...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   /சொல்லிய விதமும், செய்த விதமும் அருமை.../

   இனிப்பும், பதிவையும் ரசித்து தாங்கள் தந்த கருத்துரை கண்டு மிக்க மகிழ்சச்சியடைந்தேன். தங்களது ஊக்கம் தரும் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 10. அட கமலாக்கா வெல்லக் கேசரி இங்கு செய்வதுண்டு சர்க்கரையைத் தவிர்க்கலாம் என்று ஆரம்பித்த போது....சூப்பராக வந்திருக்கு.

  அது போல கோதுமை பெரிய ரவை, வெல்லம் போட்டு அதுவும் பாகு பதத்தில், நெய் எல்லாம் சேர்த்துச் செய்யும் அன்னவரம் பங்கி பிரசாதம் செமையா இருக்கும் வீட்டிலும் செய்வதுண்டு...முடிந்தால் அடுத்த் அமுறை செய்யும் போது படம் எடுத்து எபிக்கு அனுப்ப வேண்டும் ....பார்ப்போம்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. முன்னபின்ன எபிக்கு வந்திருந்தால்தானே. அன்னவரம் பிரசாதம் நான் எழுதி எப்பவோ எபி தி பதிவுல வந்துடுச்சு. பேசாமல் கல்கண்டு போட்டு கேசரி செய்து, அக்காவரம் பிரசாதம் என்று வேணும்னா எழுதுங்க

   Delete
  2. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

   நீங்களும் வெல்லம் கலந்து செய்வதறிந்து மிக்க மகிழ்ச்சி.

   /சூப்பராக வந்திருக்கு./

   தங்கள் பாராட்டுக்கு ரொம்ப நன்றி சகோதரி நீங்கள் உங்கள் பக்குவ பிரகாரம் கோதுமை ரவை வைத்து கேசரி செய்து எ.பிக்கு பதிவாக அனுப்புங்கள்.பார்க்க ஆவலாக உள்ளேன் தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
  3. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   ஹா ஹா ஹா.
   /கல்கண்டு போட்டு கேசரி/ கல்கண்டு பாத்தும் (சாதம் குழைய வடித்து) நன்றாக இருக்கும். தங்கள் சொல்படி கல்கண்டு கேசரி சகோதரி கீதாரெங்கன் மட்டுமின்றி, நானும் ஒரு நாள் செய்து பார்க்க வேண்டும். நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 11. பெண் பார்க்கும் படலத்தில் அப்போதெல்லாம் கேசரி இல்லாமல் இருக்காது...உங்க அம்மாவும் பாட்டியும் உறுதியாக இருந்தது ஆச்சரிய்மோ ஆச்சரியம்.

  நான் ரொம்ப முற்போக்கு அப்போதே... என் விஷ்யத்தில் கடைசியாக வந்த வரன் இப்படியான சம்பிரதாயங்கள் இல்லாமல் முடிந்தது.

  எனக்கும் பிடிப்பதில்லை. பெண் பார்க்கும் படலம். சுத்தமாகப் பிடிப்பதில்லை. நன்றாகத் தின்றுவிட்டு வேண்டாம் என்று சொல்வது....அதற்குப் பார்த்து சம்பந்தம் முடியப் போகிறது என்றால் மட்டும் இப்படிச் செய்யலாம்.

  என் கணவரின் பெற்றோர் சும்மா ஃபார்மாலிட்டிக்குத்தான் பார்த்தாங்க....முடிவாகும் வரை கை நனைக்கமாட்டோமென்று சொல்லிவிட்டாங்க. எனக்கும் அது பிடித்தது, நான் ரொம்பவே பெண்கள் சுதந்திரம், இப்படியான சம்பிரதாயங்கள் பற்றி மேடை மேடையாகக் போட்டிகளில் முழங்கிய காலம்.. !!!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. //நன்றாகத் தின்றுவிட்டு வேண்டாம் என்று சொல்வது....// இது தவறான எண்ணம். உங்க வீட்டுக்கு வந்தால் காபி டீ தருவது போலத்தான். அவங்க என்ன உள்ளூரா? அவங்களும் செலவழித்துக்கொண்டுதானே வர்றாங்க. 100 ரூபாய்ல கிடைக்கும் கேசரிக்காக யாரேனும் 1000 ரூபாய் செலவழித்துக்கொண்டு வருவாங்களா?

   பொதுவாக பெண் பார்க்கப்போகும்போது மனதளவில் சரிப்பட்டு வரும் என்று தோன்றினாலொழிய கை நனைக்காமல் இருப்பது நல்லது.

   அது சரி... புது உடை போட்டுக்கொண்டு மேக்கப் போட்டுக்கொண்டு ஒவ்வொருவர் முன்னாலும் வரவேண்டியிருக்கே என்று வந்தவர்களிடம் வசூலிக்காமல் இருந்தால் சரிதான்

   Delete
  2. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

   ஆம். சகோதரி. அப்போதெல்லாம் இந்த கேசரி யும், பஜ்ஜி யுந்தான் பெண் பார்க்கும் படலங்களில் முக்கிய கதா பாத்திரங்கள். அப்புறம் நிச்சயதார்த்திற்கு சபையில் பட்சணங்கள் வைப்பது. எங்கள் வீட்டில் நிச்சயதார்த்தம் என்ற ஒன்று நிச்சயக்கப்படாத அந்த நேரத்திலும் அம்மாவும், பாட்டியும் தயாராகி இருந்ததுதான் எனக்கு இப்போதும் ஆச்சரியமாக இருந்தது. அதைதான் குறிப்பிட்டேன்.

   /என் கணவரின் பெற்றோர் சும்மா ஃபார்மாலிட்டிக்குத்தான் பார்த்தாங்க....முடிவாகும் வரை கை நனைக்கமாட்டோமென்று சொல்லிவிட்டாங்க. எனக்கும் அது பிடித்தது,/

   எனக்கும் அது பிடிக்கிறது. நீங்கள் அப்போதே முற்போக்குவாதியாக இருப்பது மகிழ்வாகத்தான் இருந்தது. வாழ்த்துக்கள்.

   உங்கள்ளுக்கு தாமதமாக பதில் தருவதற்கு மன்னிக்கவும். நேற்றெல்லாம் நீ்ண்ட நேரம் கைப்பேசியில்சேர்ந்தாற் போல பதில் தர இயலவில்லை. அதனால் இரவு தூக்கம் வந்து விட டது. பிறகு இன்று ஏதேதோ வேலைகள். மன்னிக்கவும் சகோதரி. தாங்கள் அன்பாக ஊக்கம் அளிக்கும் வகையில் தந்த கருத்துகளுக்கு மிக்க நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 12. உங்கள் அனுபவங்கள் சுவாரசியம் கமலாக்கா...ரவை வெல்லம் கேசரி பற்றி நான் சொல்ல நினைத்ததை கீதாக்கா சொல்லிட்டாங்க...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   பதிவு சுவாரஸ்யமாக இருந்தது என நீங்கள் சொன்னதற்கு என் மன மகிழ்வுடன் கூடிய நன்றி சகோதரி.

   ஆம் அதன்பின் வந்த காலங்களில், கேசரிக்கு பதிலாக வேறு இனிப்புக்கள் கார வகைகள் கொடுக்கலாம் என வந்து விட்டது. அதைத்தான் நானும் பதிவில் குறிப்பிட்டிருந்தேன். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 13. இப்போதைய ட்ரென்ட் அதாவது ஆணும் பெண்ணும் தனியாகச் சந்தித்துப் பேசிக் கொண்டு முடிவு செய்வது பிடித்திருக்கிறது. அதுவும் பொது இடத்தில்....அதன் பின் பெரியவர்கள் பேசலாமே.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி.

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   ஆம்.. இப்போது இளைய தலைமுறைகளின் முடிவாகத்தான் உள்ளது. பெரியவர் முதலில் முடிவெடுப்பது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. பெண் பார்த்தவுடன் பெண்ணும், மாப்பிள்ளையும் சேர்ந்து பேசிக் கொள்வதெல்லாம் அந்தக் காலத்தில் கிடையாதே..! எப்படியோ நல்லவிதமாக திருமணம் நடந்து அனைவரும் வளமாக வாழ்ந்தால் சரி...! தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 14. இப்போதும் அபப்டித் தனியாகப் பேசினாலும் நிராகரிப்பும் அதிகமாக இருக்கிறது. இன்னார்க்கு இனாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

   ஆம்.. நிச்சயதார்த்தம் வரை வந்து நின்று போகும் திருமணங்களும் உண்டு. எல்லாம் இறைவனின் செயல்.. அவன்தான் பிறக்கும் போதே இப்படித்தான் வாழ்க்கைப் பயணம் என்பதையும், இவர்களுக்கு இவர்கள்தான் என்பதையும் எழுதி வைத்து விடுகிறானே ....! இடையில் நாம்தான் நம் முயற்சியென்று பெருமிதப்பட்டுக் கொள்கிறோம். அந்த முயற்சிக்கும் இறைவன் துணை புரிந்தால்தான் உண்டு. அவனன்றி ஓர் அணுவும் அசையாது.. தாங்கள் பதிவுக்கு வந்து தந்த அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 15. //அதிலும் ஒரு ஆண், பெண் வாழ்க்கைப் பயணத்தில் அறிமுகமாகும் ஒரு நன்னாளில், // - எங்கத்த.... பெண் பார்க்கும் படலமே எனக்கு நடக்கலையே

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   /எங்கத்த.... பெண் பார்க்கும் படலமே எனக்கு நடக்கலையே.. /

   அடாடா ஏன் அப்படி? தங்களின் மனைவி ஏற்கனவே பார்த்துப் பழகிய உறவினர்களின் பெண்ணாக அமைந்து விட்டார்களா? அதுவும் நல்லதுதானே..! அப்போதும் சரி..! இப்போதுத சரி..! நல்ல புரிந்துணர்வு இருந்திருக்கும்./ இருக்கும். உங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 16. //பொருத்தமும் பஜ்ஜி ஜொஜ்ஜி என இணையாகவும், பொருத்தமாகவும்// - அவங்க தலையைப் பார்த்ததும் ஒரு ஸ்வீட் காரம் பண்ணணும்னா, இதுதானே சாத்தியம். இல்லையா?

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   /அவங்க தலையைப் பார்த்ததும் ஒரு ஸ்வீட் காரம் பண்ணணும்னா, இதுதானே சாத்தியம். இல்லையா?/

   ஹா ஹா ஹா.. இல்லையே..! இதுதான் ஒரு சம்பிரதாயமென அந்தக் காலத்தில் இந்தப் பழக்கம் இருந்தது. பெண் வீட்டார்கள் அவர்கள் வரும் முன்னேயே இதை செய்து முடித்து விட்டு வரவேற்க வாசலுக்கு வந்து நிற்பார்கள்.

   மாப்பிள்ளையின் நண்பர்கள் "பெண் பார்க்கப் போகிறாயா என்று கூட கேட்காமல், பஜ்ஜி ஜொஜ்ஜி சாப்பிடப் போகிறாயா?" என கிண்டலாக கேட்கும் காலங்கள் அவை.. இன்று மாறி விட்டது. தங்களின் அன்பான கருத்துகளுக்கு மிக்க நன்றி சகோதரரே

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 17. அருமையான பதிவு.
  நேற்று வர முடியவில்லை. என் கணவரின் நினைவு நாள்.
  உங்கள் பதிவு பெண்பார்க்கும் படலத்தில் செய்யபடும் கேசரி, பஜ்ஜி பற்றி இருந்தது. என் நினைவுகள் பின்னோக்கி போனது. என் அக்காவிற்குதான் அப்படி எல்லாம் நடந்தது.
  எனக்கு நேரடியாக நிச்சியதார்த்தம் தான். என் கணவரின் தம்பி என்பதால் . நான் தான் முன்பே அவருக்கு என்று பெரியவர்கள் பேசி வைத்து விட்டார்கள். என் கணவரின் இன்னும் இரண்டு அண்ணா திருமணம் முடிந்த பின் எங்கள் திருமணம்.

  //"என்னம்மா இது இன்னும் முதல்படியிலேயே கால் பதியவில்லை... அதற்குள் இரண்டாவது படி மேல் காலை வைக்க முயற்சி செய்கிறாயே" என நாங்கள் கேட்டும், அம்மாவுக்கு என்னவொரு அசைக்க முடியாத நம்பிக்கை....!! "சுபமஸ்து எல்லாம் நல்லபடியாக நடந்து விடும்.. அப்படியில்லையென்றால், நமக்கு இதையெல்லாம் சாப்பிட வாய் இல்லையா என்ன?" என்று உறுதியுடன் பதிலளித்து விட்டு மாலாடு, ரவாலாடு, தேன்குழல், திரட்டுப்பால் என எல்லாம் வகையாக செய்து விட்டார்.) தயார் நிலையில் இருந்தன. //

  அம்மாவின் நம்பிக்கை, எதையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எல்லாம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது.

  //குழந்தைகளுக்கு மு. ப. உடைத்து வறுத்துப் போட்டால் அது அவ்வளவாக அவர்களுக்கு பிடிக்கவில்லை. தனியே எடுத்து வைத்து விடுகின்றனர். அதனால் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி வறுத்து இறுதியில் ஏலக்காய் பொடியுடன் சேர்த்து இதையும் கேசரியுடன் கலக்க வைத்திருக்கிறேன். //

  இது நல்ல யோசனை. என் தங்கை பெண் ஒருத்திக்கு முந்திரியை பாயாசம், இனிப்புகளில் போடுவது பிடிக்காது. வறுத்து வைத்தால் சாப்பிடுவாள்.

  என் மாமியார் அடிக்கடி கேசரி செய்வார்கள். யாராவது வந்து விட்டால் கடைக்கு போய் இனிப்பு பண்டம் வாங்க வேண்டாம். எளிதாக செய்வது என்பார்கள்.பொட்டுக்கடலை நெய் உருண்டை உடனே செய்து விடுவார்கள். திடீர் விருந்தாளிகளுக்கு. அவலை பாலில் நனைத்து தேங்காய்பூ போட்டு இனிப்பு செய்து விடுவார். பஜ்ஜிக்கும் கடலை மாவு, அரிசிமாவு இருக்கும் உருளை, பெரிய வெங்காயம் இருக்கும் எப்போதும் வீட்டில்
  காரத்திற்கு பஜ்ஜி செய்து விடுவார்கள்.
  முன்பே சொல்லி வருபவர்களுக்கு வேறு இனிப்புகள், காரம் செய்வார்கள்.

  அம்மாவும் அப்படித்தான். அப்போது கடையில் வாங்குவது என்பதே கிடையாது.
  பதிவும் படங்களும் மிக அருமை.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

   /நேற்று வர முடியவில்லை. என் கணவரின் நினைவு நாள்./

   நானும் அதைத்தான் நினைத்துக் கொண்டே இருக்கிறேன் சகோதரி. நவம்பர் மாதம் தீபத்திருநாள் வந்து விட்டால் தங்கள் நினைவும், தங்கள் கணவரின் நினைவுகளும் தவறாது வந்து விடும். காலங்கள் அரக்கப் பரக்க ஓடி விடுகிறது. ஆனால் நம் நினைவுகள் நம்மை விட்டு என்றும் ஓடுவதில்லை. தாங்கள் தைரியமாக இருக்க தங்கள் கணவரின் அன்பும், ஆசியும் உங்களுக்கு எப்போதும் உங்களுடன் இருந்து கொண்டேயிருக்கும்.

   பதிவை ரசித்து விளக்கமான கருத்துக்கள் தந்தமை கண்டு மிக்க மகிழ்வடைந்தேன் சகோதரி.
   உங்கள் அக்காவிற்கும் அன்றே நிச்சயதார்த்தம் நடந்தேறியது குறித்து மகிழ்ச்சி.

   உங்கள் திருமணம் பற்றியும், உங்கள் கணவர் ஏற்கனவே அறிமுகமான உறவினர் என்பது பற்றியும் நீங்கள் ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்ததை படித்துள்ளேன். நேரடியாக நிச்சயதார்த்தம் என்பதும் சந்தோஷமான விஷயந்தான்...!

   எங்கள் அம்மாவின் மனப்பக்குவத்தை பாராட்டியது குறித்து மிகுந்தமகிழ்ச்சி.. பொதுவாக அந்த காலத்தில் நம் பெற்றோர்கள் நல்ல உழைப்பாளிகள். எதையும் திறம்பட செய்வதில் வல்லவர்கள். உண்மைதான்.. அவர்களிடம் நாம் இன்னமும் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.

   தங்கள் வீட்டிலும் பெரியவர்கள் சுவையாக அனைத்து வேலைகளையும் அவர்களாகவே செய்து முடிப்பதறிந்து மகிழ்ச்சியடைகிறேன்.

   ஆம்.. அப்போது நம் வீட்டிலும் இந்த மாதிரி தீடிரென வரும் விருந்தாளிகளுக்காக அனைத்து சாமான்களும் குறையாது வாங்கி வைத்துக் கொள்வார்கள்.

   பதிவை குறித்த தங்களது பாராட்டிற்கும், அன்பான கருத்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 18. //அம்மாவின் நம்பிக்கை, எதையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எல்லாம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது..//

  சிறப்பான வரிகள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   பதிவை ரசித்து நல்லதொரு கருத்துக்கள் தந்தமைக்கு உங்களுக்கு என் மனம நிறைந்த மகிழ்வுடன் கூடிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 19. இந்தப் பதிவு எப்படி தப்பியது!.. ஆச்சரியம்..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   உங்களைத்தான் இந்தப் பதிவுக்கு இன்னமும் காணவில்லையே என நினைத்துக் கொண்டடேயிருந்தேன். தங்களுக்கு இருக்கும் எத்தனையோ வேலைகளுக்கு நடுவிலும், இன்று தாங்கள் நினைவாக வந்து நல்ல கருத்துக்களை தந்திருப்பது எனக்கு மிகவும் மன மகிழ்வை தருகிறது. மிக்க நன்றி சகோதரரே.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 20. பதிவின் தரத்தை வந்திருக்கும் பிரம்மாண்டமான கருத்துகளே பறை சாற்றுகின்றன..

  நானெல்லாம் என்னவென்று சொல்வது..

  அசாத்தியமான எழுத்து தங்களது..

  வாழ்க.. வாழ்க..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   /நானெல்லாம் என்னவென்று சொல்வது../

   அடாடா..! எல்லாம் தங்களைப்போன்ற சிறப்பான பதிவர்களையும், நீங்கள் தரும் சிறப்பான பதிவுகளையும் கண்டு "ஏழைக்கேற்ற எள்ளுருண்டை" என எனக்குள் வரும் எழுத்துக்கள்தான். என்னையும் நீங்கள் புகழ்ந்து, என் எழுத்துக்களுக்கு உரமாக ஊக்கம் மிகுந்த நல்ல கருத்துக்களை தந்திருப்பது தங்கள் பெருந்தன்மையை பரிபூரணமாக விளக்குகிறது. உங்கள் அன்பிற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் சகோதரரே.

   இத்துடன் தாங்கள் தொடர்ந்து என் பதிவுகளுக்கு வந்து ஊக்கம் தரும் வார்த்தைகளால் கருத்துரைக்குமாறு விண்ணப்பித்தும் கொள்கிறேன்.

   தாங்கள் மனமுவந்து தந்த உங்கள் அன்பான பாராட்டிற்கும் மிக்க நன்றி சகோதரரே.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன். .

   Delete
 21. Salt & Sweet
  Salt & Pepper
  என்றெல்லாம்
  Biscuit வகைகள் இருக்கின்றன..

  இந்தப் பதிவு -
  இனிப்பும் இனிப்பும் என்ற வகையைச் சேர்ந்தது..

  இருவேறு இழைகளை ஒற்றையாய் இணைத்துத் தரும் சாமர்த்தியம் தங்களுடையது..

  அருமையான பதிவு.. வாழ்த்துகள்..

  ReplyDelete
 22. வணக்கம் சகோதரரே

  தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  /Salt & Sweet
  Salt & Pepper
  என்றெல்லாம்
  Biscuit வகைகள் இருக்கின்றன..

  இந்தப் பதிவு -
  இனிப்பும் இனிப்பும் என்ற வகையைச் சேர்ந்தது../

  ஆஹா அருமையான விளக்கம். தங்களின் அற்புதமான எழுத்து வன்மையில் பிறந்த கருத்துக்கள் என் மனதை மகிழ வைக்கின்றன. நன்றி.. நன்றி.

  தங்களின் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி சகோதரரே.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்

  ReplyDelete