பாதையை காட்டி பயணிகளை
பயணிக்க பணித்தான் ;
படைத்தல் ஒன்றையே ” விதியிடம் ”
பரிசாக பெற்ற ” படைத்தவன் ”
அண்டத்தையும், அகிலத்தையும்,
அழகாக, அற்புதமாக்கினான்.
கோடி ஜீவ ராசிகளுக்கும் உயிர்,
தேடி கொடுத்து உலாவச் செய்தான்.
பிழைப்பதற்கும் வழி காட்டினான், மனம்
பேதலிக்கவும், வழி வகுத்தான்.
பந்தத்தையும், பாசத்தையும், இரண்டு
பகடை காய்களாக்கி,
பாழும் பிறவிகள், உருட்டி சூதாடுவதை
பார்த்து, பார்த்து ரசித்தான்.
இருப்பினும், இறுதியில்
இறப்பெனும், நிதர்சனத்தை,
விதியிடம், கொடுத்து விட்டு
வேதனையின்றி விலகி நின்றான்.
விதி அவனை படைத்ததா? அல்லது
விதியை அவன் வகுத்தானா?
விளங்காத கேள்விகளில்,
விடை தெரியாத, ( புரியாத ) பதில்களில்,
தலைவிதியை ச ( பி )கித்து கொண்டு,
தடுமாறி, தத்தளித்து, தவித்து கொண்டு,
படைத்தவன் காட்டிய வழியில், கண் மூடி,
கட்டளைக்கு பணி ( ய )ந்து, கடமை தவறாது,
அப்பாதையில், பயணிக்கும்
அப்பாவி பா ( தை ) த சாரிகள்,
இன்னல்கள் பல பட்டாலும்,
இவர்களின் பிரிவுகள் இருவிதம்.
விதியிடம் அடி வாங்கி வெந்து ( நொந்து ) எழுந்தவர்களுக்கு,
விளங்காத கேள்வி….. இந்த விநோதங்களையெல்லாம்,
விளைவிப்பவன் யார், அவன்
விரோதியா, இல்லை.. நண்பனா?? நண்பனானல், ஏன்
விரோதிபோல் விலகி நிற்க வேண்டும்.
நண்பனல்லாதவனை, நன்மை நினைக்காதவனை, எவ்விதம்
நட்புடன், நினைக்க தோன்றும். ( இப்படி ஒரு சாரார் )
அத்தனை இன்பங்களையும்
அள்ளி பருகுபவர்களுக்கு
:: ஆண்டவன்:: ஒரு அரிய வரப்பிரசாதம்’
அவனன்றி ஒர் அணுவும் அசையாது,
அவனன்றி எதுவும் நடக்காது என்று, அவன்பால்,
அசைக்க முடியாத நம்பிக்கை. ( இப்படி ஒரு சாரார் )
இவ்விதம் பிரிவுகள் இரண்டாயினும்,
இன்னல்களை பல அருளும் அந்த,
இறைவனின் இருப்பிடத்தை அறிய பல ,
புராணங்களை புரட்டி பார்த்தால்,
புரண்டிருக்கிறான், அவனும் விதியிடம்.
சாபங்களையும் பல பாபங்களையும்
சகித்திருக்கிறான், சந்தித்திருக்கிறான்,
விதைத்தலை ,விதியிடம் விரும்பி பெற்றவன்,
விசுவாசத்திற்க்கு ,பிரதிபலனாக,
பரிசாக பெற்ற பாவத்திற்காக,,
அறுவடை அத்தனையையும் மொத்தமாக,
அதற்கே அள்ளி கொடுத்து விட்டான் போலும்.
விதியின் வஞ்சனையின்,
விளைவால், அந்த விதியிடம்,
அத்தனை மனித ப (உ) யிர்களும் ஒருநாள்
சென்றடைந்து மடியத்தான் போகிறது.
படைத்தவனையே தொடரும் அந்த விதி.
படரவிட்டவனால், படர்ந்திருப்பவைகளை,
படராமல் விட்டு விடுமா என்ன,,,,,,
விதிக்கு முன்னால் யாருமே விதி விலக்கல்ல……….
ஆழமான சிந்தனையுடன் கூடிய
ReplyDeleteஅற்புதமான கவிதை
மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்
சிந்தனைச் செறிவும் மொழி லாவகமும்
இயல்பாக வாய்க்கபெற்ற நீங்கள்
மிகக் குறைவாக எழுதுவது ஆச்சரியமளிக்கிறது
பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
இந்த பதிவினையும் படித்து பார்த்து வாழ்த்து சொன்னமைக்கு மிகவும் நன்றி!!!
DeleteThank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
ReplyDeleteCorporate English classes in Chennai
Communicative English training center
English training for corporates
Spoken English training
Workplace Business English training institute
Workplace English training for corporates
Workplace soft skills training institutes
Corporate language classes
Business English training for Workplace