Thursday, September 5, 2024

காஃபியின் வழி முறைகள்.

 இந்த காஃபி குடிப்பது கெடுதல் என்ற பழக்கம் இப்போதுதான்  வந்ததா? இல்லை, காஃபி குடிப்பது என்ற வழக்கம் வந்த  ஆரம்பத்திலிருந்தே வந்ததா? என்றிலிருந்து வந்தது எனத் தெரியவிலலை. ஆனாலும் காஃபியில் இருக்கும் காஃபின் என்ற பொருள், நமது உடலை சுறுசுறுப்பாக வைக்கும், எண்ணங்களை தோற்றுவிக்கும் நமது மூளைக்கு நல்லதொரு செயல்பாட்டை தருமென்பது ஒரு கருத்து. 

காஃபின் என்றால் என்ன?

இது ஒரு இயற்கை தூண்டுதலாகக் கருதப்படுகிறது. இது உலகளவில் பரவலாக நுகரப்படும் பானங்களில் ஒன்றாகும். இது பொதுவாக தேயிலை, காபி மற்றும் கொக்கோ செடிகளில் காணப்படுகிறது. காஃபின் உட்கொள்வது உடலுக்கு சில வழிகளில் நன்மைகளைத் தருகிறது. சோர்வு ஏற்படும் போது காஃபின் எடுத்துக் கொள்வது சுறுசுறுப்பைத் தருகிறது. இது மூளை மற்றும் மத்திய நரம்பு மண்டலத்தை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும், விழிப்புடன் இருக்க வைக்கவும் உதவுகிறது.

காஃபின் உட்கொண்ட பிறகு, அது குடலில் இருந்து இரத்த ஓட்டத்தில் உறிஞ்சப்படுகிறது. அதன் பிறகு இது கல்லீரலுக்குச் செல்கிறது. கல்லீரலிலிருந்து இது பல்வேறு கலவைகளாக உடைந்து, பல்வேறு உறுப்புகளின் செயல்பாட்டை பாதிக்கிறது. காஃபின் முக்கியமாக மூளை செயல்பாட்டில் வேலை செய்கிறது. அதாவது அடினோசினின் விளைவுகள், மூளையைத் தளர்த்தி சோர்வடையச் செய்யும் நரம்பியல் கடத்தியாக அமைகிறது. ஆனால் காஃபின் உட்கொள்ளல் அடினோசின் வேலை செய்வதைத் தடுத்து சோர்வு மற்றும் மந்தத்தன்மையைத் தவிர்க்க உதவுகிறது.

இதனால் பல தீமைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. 

பொதுவாக காஃபின் உட்கொள்வது உடலில் நீரிழப்பை ஏற்படுத்தும் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். காஃபின் ஒரு டையூரிடிக் அமிலமாக இருப்பதால், இவை உடலில் இருந்து அதிக சிறுநீர் உற்பத்தியைத் தூண்டுகிறது. இது உடலில் நீரிழப்புக்கு வழிவகுக்கும். அதே சமயம், சர்க்கரையுடன் கூடிய காபி மற்றொரு மோசமான கலவையாக அமைகிறது. இது கோடை வெப்பத்தில் நீரிழப்பை ஏற்படுத்துவதாக அமைகிறது.

மற்றும், கோடைக்காலங்களில் உடல் வெப்பம் அதிகமாக இருக்கும் போது, அது தூக்க முறைகளை சீர்குலைத்து விடலாம். மேலும், கோடையில் அறையின் வெப்பநிலையும் அதிகமாக இருப்பதால் தூங்குவது கடினம். இந்த நேரத்தில், காஃபின் எடுத்துக் கொள்வது அது உடல் வெப்பத்தை மேலும் அதிகரிக்கும். இது தூக்கமின்மையை ஏற்படுத்தும். இதனால், எரிச்சல் மற்றும் சோர்வு ஏற்படும்.

அதிகளவிலான காஃபின் உட்கொள்ளலால் இதயத்துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் இரண்டும் அதிகரிக்கப்படும். குறிப்பாக, கோடையில் காஃபின் உட்கொள்வது இருதய அமைப்பில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தலாம். இதனால் இதய பாதிப்பை ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இது உடல் அசௌகரியம் அல்லது பிற உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது  

ன்றி கூகுள்.

காஃபி குடிப்பது கெடுதலா , நன்மையா என்பது ஒரு பக்கமிருக்கட்டும். காஃபி போடுவதே ஒரு கலை என வாதிடுபவர்கள்தான் எனக்குத் தெரிந்த வரை நிறைய பேர்  (உறவுகள்) இருக்கிறார்கள். காஃபி பில்டரில் புது டிகாஷன் இறக்குவதிலிருந்து, பாலை காய்ச்சி, அதற்கு தகுந்த சர்க்கரை சேர்த்து, (அல்லது சர்க்கரை இல்லாமலோ) நல்ல சூட்டில் (கவனிக்கவும். நல்ல சூட்டில்..) கலந்து தருவதை ஒரு அசுவமேத யாகத்தை எவ்வித குறையுமின்றி, தான் பூரணமாக செய்து முடித்த அளவுக்கு திருப்தியடைபவர்கள் நிறைய பேர். சரி..! இவர்கள் எப்போதும் ஒரே மாதிரி இவ்விதம் செய்து அனைவருக்கும்.  (இங்கும் கவனிக்கவும்... தினமும் வீட்டிலிருக்கும் அனைவருக்கும், தவிர எப்போதாவது வெளியிலிருந்து வரும் விருந்தாளிகளுக்கும் இப்படி காலை, மாலை, இடையில் அவர்கள் காஃபி என கேட்கும் போது என்று அவர்களுக்கு கலந்து தரும் அளவுக்கு  பொறுமை உள்ளதா என்றால், அங்கு அதுதான் மிஸ்ஸிங்.)

சிலர் இந்த டிகாஷன் நன்றாக அமைந்தால்தான், காஃபி நன்றாக இருக்குமெனவும், சிலர் பாலின் தரம் சிறப்பாக இருந்தால்தான் காஃபி சுவையாக இருக்குமெனவும், வாதிடுவார்கள். மேலும், காஃபி பில்டரில் உள்ளிருக்கும் காஃபி பொடியில் கொதிக்கும் வென்னீர் மழை விடும் போது அதற்கு குடை வைப்பவர்களும் , குடையை ஒதுக்கி அது நன்றாக மழையில் நனையட்டுமென விடுபவர்களும் உண்டு. இதிலும், குடை தேவையா, இல்லை அவசியமில்லையா என்ற இருவகை கருத்துக்கள் வாதிடுபவர்களுக்குள் எழுவதுண்டு. 

சிலர் அந்தக்காஃபி பொடி சரியில்லை, இதில் காஃபித் தூளில் கலக்கும் சிக்கரி நிறைய வந்து விட்டது எனவும், காஃபி கொட்டையாக கடையில் வாங்கி வீட்டில் அரைத்து நாமே தேவையான அளவு சிக்கரி  கலந்து போட்டால்தான் நன்றாக இருக்குமெனவும், சிலர் சிக்கரி இல்லாமல் காஃபித்தூளை முறையான அளவில் கலந்து உபயோகித்தால் மட்டுமே காஃபியின்  சுவை நன்றாக இருக்குமெனவும், சிலர் பசும்பாலை விட எருமைப்பாலில்  காஃபி திக்காக நன்றாக வருமெனவும், சிலர் பசும்பால்தான் நல்லது எனவும், அவரவர் கருத்துகளை முன்னிறுத்தி, இறுதியில் அதைதான் ஸ்திரமான ஆணித்தரமான உறுதியும் ஆக்குவார்கள்.

காஃபி போடுவதையே விதவிதமாக பழக்கம் வைத்திருப்பவர்களும் உண்டு. சிலர் பில்டர் காஃபியை தவிர்த்து வேறு எந்த முறையிலும் போட முயல கூட  மாட்டார்கள். சிலர் ஒரு பாத்திரத்தில் காஃபித்தூளை போட்டு வென்னீர் கொதிக்க வைத்து அந்த காஃபி பொடியில் ஊற்றி நன்கு கலந்து அதில் சிறிது தண்ணீர் தெளித்த பின் கெட்டியான காடா துணி உதவி கொண்டு மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டி காஃபி தயாரிப்பார்கள், அவர்களுக்கு இந்த பில்டர் தேவையேயில்லை. சிலர் இப்போது ஏராளமாக வந்திருக்கும் "தீடிர் காஃபி" பொடியில் காஃபி கலந்து குடித்து விட்டு, வீட்டுக்கு வருபவர்களுக்கும் தந்து விட்டு எதைப்பற்றியும் கவலைபடாமல் "அக்காடா" என்றிருப்பார்கள். சிலர் காஃபி குடிக்கிறீர்களா என வீட்டுக்கு  வந்தவர்களை ஒரு உபசாரத்திற்கு கூட கேட்க மாட்டார்கள். (கேட்டால்தானே இந்த வம்புபெல்லாம்.?:)) ) சிலர் அந்தப் பழக்கத்தை சிறு வயதிலிருந்தே ஏற்படுத்திக் கொள்ளாமல், அல்லது நடுவில் விட்டவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு எங்கு சென்றாலும், எந்த பிரச்சனையுமில்லை. (அவர்களால் பிறருக்கும் பிரச்சனைகள் இல்லை.) 

சில பேர்கள் இப்படி திக்காக ஒரே சகதி மாதிரி சிலர் வீட்டில் தருகிறார்கள் எனவும், டிகாஷன் அதிகம் கலக்காமல் பால் நிறைய கலந்து கொடுப்பவர்களை காயத்தால் கால் வீங்கியவர் கால்களை போன்ற மாதிரி வெள்ளையாக அவர்கள் வீட்டில் காஃபி இருக்கிறது எனவும் கிண்டல் செய்வார்கள். 

 (ஆக மொத்தம் நாம் அருந்தும் ஒரு குவளை காஃபியில்தான் எத்தனை வேறுபாடான கருத்துக்கள்? இந்தக் காஃபி அளவுக்கு அதிகமாக அதாவது தினமும் ஓரிரு தடவைகளுக்கு மேலாக குடித்தால் சிலருக்கு தலைச்சுற்றல் வரலாம். சிலருக்கு பழக்கத்தினால் வராமலும்  இருக்கலாம். இது அவரவர் உடல் வாக்கைப் பொறுத்தது. ஆனால், எனக்குத் தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் பாணிகளில், இந்த காஃபி போடும் விபரங்களை பல விதங்களில் ஒரு குற்றப் பத்திரிக்கையாக என் முன்னே வைத்து பரிசீலனை செய்யும் போது நிஜமாகவே எனக்கு தலைச் சுற்றத்தான் செய்கிறது.:)) )

நாங்கள் பிறந்து வளர்ந்த  அந்தக்காலத்தில் காஃபியுடன் வேறு பல சத்துள்ள பானங்கள் என வரிசையாக வந்து விட்டாலும், பொருளாதார வசதி காரணமாக, எங்கள் அம்மா வீட்டில் எங்களுக்கு காஃபி குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி விட்டார்கள். அது இத்தனை ஆண்டுகளாக தொடர்வதால், அதை முற்றிலும் நிறுத்தவும் இயலவில்லை. இன்று வரை ஒரு நாளைக்கு சில சமயம் காலை மட்டுமாவது ஒரு தடவையேனும் இந்தக் காஃபிக்கு அடிமையாகிறேன்.

திருமணமானவுடன், புகுந்த வீட்டில்,எல்லோரும் சேர்ந்திருக்கையில் (கூட்டுக் குடும்பம்) எனக்கு மட்டும் மூன்றாம், நான்காம் தடவையாக பில்டரில் விட்டு இறக்கிய காஃபி காலை, மாலை என முதல் தடவையாக கிடைத்தது. (முதல், இரண்டாவது எல்லாம்  பெரியவர்கள்தான் குடிக்க வேண்டும் என்ற தீர்மானம் அந்த வீட்டில் இருந்ததும், நான் அப்போது அவர்களை விட மிக,மிகச்சிறியவள் என்பதும் அந்தப் 19 ஆவது வயதில் அப்போதுதான் எனக்குப் புரிந்தது. :)) ) அப்போதாவது இந்த மேற்படி பானத்தை ஒரேடியாக வெறுத்து ஒதுக்கி கை கழுவி விட்டிருக்கலாம். (அந்த காஃபியே ஒரு கை கழுவும் தண்ணீராகத்தான் இருந்தது. ஹா ஹா ஹா.) விபரம் தெரிந்த நாளிலிருந்து அம்மா வீட்டில் நல்ல காஃபியை குடித்து விட்டு இங்கு மாறுபடும் போது நாக்கு வித்தியாசத்தை காட்டியது. ஆனால், ஒருவரின் மனது நோக ஒரு சொல் சொல்வதும், ஒரு உணவுப் பொருளை வேண்டாமென்று மறுக்கவும், ஒதுக்கவும் தெரியாத மனது என்னுடையது. இதுவரை அப்படியேதான் இருக்கிறேன். தொட்டில் பழக்கம் கட்டை வேகும் வரை மாறாதது என்பது உண்மைதானே..!

அது என்னவோ காஃபியைப்பற்றி கூறும் போது இந்தப்பாடலும் நினைவுக்குள் வந்து விடுகிறது. 

"காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி. அது கையில் கிடைத்த பின்னும் துடிக்கிது ஆவி." என்ற பாடலை மறக்க முடியுமா? 



(என்னவோ போங்கள்.. இந்த காஃபியைப்பற்றி இப்படி அலச வேண்டுமென ஒரு காஃபி அருந்தும் வேளையில் எனக்கு தோன்றியது பாருங்கள். இது அந்த காஃபிக்கு வந்த சோதனையா? இல்லை பெருமையா?தெரியவில்லை. ஆனால், காஃபி அருந்துபவர்களின் மனதில் வரும் கருத்துக்களுக்கும், இல்லை அருந்தாதவர்களின் உள்ளத்தில் உதிக்கும் எண்ணங்களுக்கும், இந்தப் பதிவு ஒரு பாலமாக இருக்கும்.:))  ) 

உங்கள் அன்பான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.அதற்கு நான் என்  கைப்பேசியிலேயே பதில் கருத்துக்கள் தருவதால் கொஞ்சம் தாமதமாகிறது. அதற்காக அனைவரும் மன்னிக்கவும் இருப்பினும் அன்புடன் உடனே வந்து கருத்துக்கள் பகிர்வோர்க்கு என் பணிவான நன்றிகள் . 🙏. 

32 comments:

  1. காஃபி குடித்தால் தப்பு, கேன்சர் வரும் என்றெல்லாம் சில காலம் முன்பு பயமுறுத்தினார்கள்.  அப்புறம் அதே விஞ்ஞானிகளே இல்லை, இல்லை, காஃபி உடம்புக்கு ரொம்ப நல்லதாகும்.  அது சாப்பிட்டால் கேன்சர் செல்லெல்லாம் செத்துடும், என்று சொல்லி இருந்தார்கள், சில வருடம் முன்பு.  இவர்களை எல்லாம் நம்ப முடியாது.  நமக்கு பிடிக்கிறதா, குடித்து விட்டு போயிட்டே இருக்கணும் - ரஜினி சொல்ற மாதிரி!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களது அன்பான உடனடி வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /காஃபி குடித்தால் தப்பு, கேன்சர் வரும் என்றெல்லாம் சில காலம் முன்பு பயமுறுத்தினார்கள். அப்புறம் அதே விஞ்ஞானிகளே இல்லை, இல்லை, காஃபி உடம்புக்கு ரொம்ப நல்லதாகும். அது சாப்பிட்டால் கேன்சர் செல்லெல்லாம் செத்துடும், என்று சொல்லி இருந்தார்கள்,/

      ஆம். தொடர்ந்து காஃபி குடித்தால் வியாதிகள் பல வந்து விடுமென பயமுறுத்தினார்கள். பிறகு மறுத்தார்கள். நானும் கேள்விபட்டுள்ளேன்.

      /நமக்கு பிடிக்கிறதா, குடித்து விட்டு போயிட்டே இருக்கணும் - ரஜினி சொல்ற மாதிரி!/

      ஹா ஹா ஹா உண்மை. வருவது எப்படியானாலும் வந்தே தீரும். காஃபி குடிப்பதால் மட்டுந்தானா இவைகள் வரும். தாங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. நான் காஃபியின் ரசிகன்.  எங்கள் வீட்டில் ஸ்மால் டோஸ் என்று கேட்டு அப்பா அடிக்கடி காஃபி குடிப்பார்.  புல்லுக்கும் ஆங்கே பொசியும்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரரே.

      எங்கள் வீட்டில் என் மைத்துனரும் (கணவரின் அண்ணா) காஃபி பிரியர். நீங்கள் சொல்வது போல் ஸ்மால் டோஸ் என அடிக்கடி கேட்ட வண்ணம் இருப்பார். கொஞ்சம் நிறைய அளவு (கால் கப்புக்கு மேல்) கொடுத்து விட்டால் கோபப்படுவார். (இவ்வளவுவா கொடுப்பார்கள்.? காஃபி கலக்கத் தெரியாதா என) அவருக்கு காஃபி கலந்து கொடுப்பதே ஒரு கலை.:))

      தங்கள் அப்பா அவ்விதம் காஃபி குடிக்கும் போது புல்லுக்கும் பொசிந்தது உங்கள் அதிர்ஷ்டம்.:)) தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. எனக்கு நினைவு தெரிந்த நாளில் நரசுஸ் வாங்கி கொண்டிருந்தோம்.  பின்னர் இந்தியா, லியோ, கும்பகோணம், சிவன், லிங்கம் என்றெல்லாம் மாறி தற்சமயம் சுந்தரம் காபியில் நிற்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      த.ங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      நாங்களும் சென்னை வாழ்வில் நரசுஸ்தான். லியோவும் சமயத்தில் வாங்குவோம். காஃபி டிப்பார்மென்ட எங்கள் மாமியாரிடந்தான் இருந்தது. அவர்கள் விருப்பப்படி வாங்குவார்கள். பிறகு ஒருமட்டும் காஃபி டேக்கு மாறி அது இருபது, வருடங்களுக்கு மேலாக நீடித்து இருந்தது. இப்போது வேறு.

      நீங்கள் பல தெய்வங்கள் எல்லாவற்றையும் சுற்றி வந்து விட்டீர்கள். தற்போது உள்ளதும் என்றாவது மாறும் நம் நாவின் சுவைக்கேற்ப இல்லையா? தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. பகிர்ந்துள்ள பாட்டு செம பாட்டு. 

    கண்ணதாசனைச் சொல்வதா?  MSV யைச் சொல்வதா?  வாணி ஜெயராம் குரலைச் சொல்வதா?  இல்லை ஸ்ரீவித்யாவின் அழகை, நடிப்பைதான் சொல்வதா?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      பகிர்ந்த பாட்டு அனைவருக்கும் பிடித்தமானதுதானே.. இந்தப் பாடலை அப்போது ஒலிபரப்பாத வானொலி ஏது.? ரசிக்காத உள்ளங்கள் ஏது.?

      /கண்ணதாசனைச் சொல்வதா? MSV யைச் சொல்வதா? வாணி ஜெயராம் குரலைச் சொல்வதா? இல்லை ஸ்ரீவித்யாவின் அழகை, நடிப்பைதான் சொல்வதா?/

      எல்லோரையும் சொல்வதா என கேட்டு விட்டீர்கள். பதிவின் எழுத்தைப்பற்றிய கருத்தாக நீங்கள் ஒன்றும் சொல்லவில்லையே? ஹா ஹா ஹா. சும்மா விளையாட்டுக்கு கேட்டேன். தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். ஒரு வேளை அந்த ஐந்தாவது கருத்தில் அது இருக்கிறதோ ? அதை தேடிக் கூட என் கைப்பேசியில் முடியாது. ஏனெனில், நிறைய படங்களை வீடியோக்களை டெலிட் செய்தால்தான் உங்களுக்கு வரும் இமெயில்கள் தெரியுமென இணையத்திலிருந்து எச்சரிக்கை வந்தாகி விட்டதென மகள் கூறினார். எனக்குதான் சரவணா ஸ்டோரின் தவிப்பு மாதிரி வேண்டாததை நீக்கத் தெரியவில்லை.

      தங்களது அன்பான கருத்துகளுக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. காஃபி எங்கள் பெற்றோர் வீட்டில் வழக்கமில்லை. (அம்மாவுக்கு மாத்திரம்). காஃபி குடிக்கும் குடும்பத்திலிருந்து வந்த என் மனைவிக்கும் அந்த வழக்கம் இல்லை. அதனால் எங்கள் வீட்டில் காஃபி கிடையாது.

    என் அம்மாவின் பெற்றோர் வீட்டில் அது ஒரு சடங்கு. அங்கிருந்து கிளை பிரிந்த குழந்தைகள் வீட்டிலும் அது சடங்காக ஆகிவிட்டது. காபி அரைக்கும் மெஷின்... இந்த நேரத்துக்கு காஃபி என்று அல்லோலகல்லோகப்படும். தலைவலி வருகிறது என்று அம்மா சொன்னதால் அவருக்கு மட்டும் என் அப்பா காஃபிக்கு அனுமதி கொடுத்திருந்தார்.

    ReplyDelete
    Replies

    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் அன்பான வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /காஃபி எங்கள் பெற்றோர் வீட்டில் வழக்கமில்லை. (அம்மாவுக்கு மாத்திரம்). காஃபி குடிக்கும் குடும்பத்திலிருந்து வந்த என் மனைவிக்கும் அந்த வழக்கம் இல்லை. அதனால் எங்கள் வீட்டில் காஃபி கிடையாது./

      ஆச்சரியமான தகவல். ஆனால், பல வீட்டிலும் இந்தப் பழக்கங்களை விட்டு, விட்டு நிம்மதியாக இருக்கின்றனர் என்பது உண்மை. பழக்கப்படுத்தி விட்டால் அந்த பொழுதுக்குள் காஃபி அருந்தவில்லையென்றால் சற்று தலைவலி வருவதும் உண்மை. அது எந்த மருந்து மாத்திரைக்கு கட்டுப்படாமல் ஒரு கப் காபிக்கு கட்டுப்படுவதும் விந்தை. நாங்கள் பழக்கப்படுத்தி கொண்டு அவதியுறுகிறோம். மாலையில் கூட பல நாட்கள் காஃபி குடிப்பதை தவிர்த்துள்ளோம். காலையில் அப்படியிருக்க இயலவில்லை. தங்களின் தகவல்களுக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. நல்ல டிஃபனுக்குப் பிறகு டீ சுகமாக இருப்பதை நான் பள்ளி/கல்லூரி காலத்தில் ஹாஸ்டலில் உணர்ந்திருக்கிறேன். ஆனாலும் எனக்குப் பழக்கம் ஆகவில்லை. பெங்களூரில் நல்ல காஃபி கிடைப்பதால் அவ்வப்போது சாப்பிடுவேன். அதுவும் அபூர்வம்தான். காரணம் எனக்கு பெங்களூர் உணவகங்களில் சாப்பிடப் பிடிப்பதில்லை. தமிழக சாம்பார்தான் எனக்குப் பிடிக்கும். அதனால் தமிழகம் வந்தால் யார் வீட்டிலும் சாப்பிடமாட்டேன், ஹோட்டல்தான்.

    காஃபி பழக்கம் நல்லதா கெடுதலா என்று தெரியவில்லை. ஆனாலும் பலரும் அதற்கு அடிமை ஆகிவிடுவதால் நல்லதில்லை என்றே நான் நினைக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      உண்மை. காலை டிஃபனுக்குப் பின் டீ குடிப்பதை பழக்கமாக வைத்திருப்பவர்கள் உண்டு. என் கணவர் காஃபியை விட டீதான் அதிகம் விரும்பி குடிப்பார். . சனி ஞாயறு அவர் வீட்டிலிருக்கும் போது டீதான் போட சொல்வார்.

      பெங்களூர் சாம்பார் இனிப்புத்தான். அதனால் காஃபியின் தேவை அதிகமிருக்காது. தமிழ்நாட்டில் சாம்பார் விட்டு இட்லி, தோசை வகையறா சாப்பிட்டால் கண்டிப்பாக ஒரு காஃபி, டீ குடித்தாக வேண்டும்.

      காஃபிக்கு அடிமையாகாமல் இருக்க வேண்டும்தான். ஆனால், என்ன செய்வது காலை மட்டுமாவது வேண்டியுள்ளது. தாங்கள் அதற்கு அடிமையாகாமல் இருப்பதற்கு மகிழ்ச்சி. தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. காஃபி முன்பு நிறைய அருந்திக் கொண்டிருந்தேன். இப்போது அருந்துவதே இல்லை. காலையில் எழுந்தவுடன் ஏதோ ஒரு பானம் என்கிற அவஸ்தை எனக்கில்லை. பெரும்பாலும் காலை நேரத்தில் எழுந்த உடன் காஃபி, தேநீர் என எதுவும் அருந்துவதில்லை. காஃபி குறித்த உங்கள் பதிவு சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரரே

      தாங்கள் காஃபி அருந்தும் பழக்கத்தை விட்டு விட்டது மகிழ்ச்சி தான். ஆனால், நிறைய தடவைகள் அருந்தி கொண்டிருந்தவர் எப்படி அவ்வளவு சட்டென விட்டு விட்டீர்கள் என நினைக்கும் போது வியப்பாக உள்ளது. தங்களின் மன உறுதிக்கு பாராட்டுக்கள்.

      பதிவை ரசித்து தந்த தங்களின் பாராட்டிற்கு என் அன்பான நன்றி சகோதரரே. .

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. கட்டுரைகள் விவரமாக எழுவதில் நீங்கள் முன்னோடியாகி விட்டீர்கள். காபி கட்டுரை கூகிள் சொல்லியதையும் மற்றும் உங்கள் எண்ணங்களையும் சேர்த்து விரிவாக எழுதியுள்ளதை காபி குடித்துக்கொண்டே பார்த்து பின்னூட்டம் எழுதுகிறேன்.

    கட்டுரை வேறுவிதமாக காபி, பலவகைகள், தயாரிக்கும் முறைகள் (capucino expresso ) என்ற செய்திகளையும் சேர்த்திருக்கலாம். கட்டுரை சிறப்பாக உள்ளது நான் தற்போது குடித்து முடித்த காபியைப் போல.

    தேங்காய், காபி, அடுத்து என்ன? கூல் ட்ரிங்க்?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /கட்டுரைகள் விவரமாக எழுவதில் நீங்கள் முன்னோடியாகி விட்டீர்கள். காபி கட்டுரை கூகிள் சொல்லியதையும் மற்றும் உங்கள் எண்ணங்களையும் சேர்த்து விரிவாக எழுதியுள்ளதை காபி குடித்துக்கொண்டே பார்த்து பின்னூட்டம் எழுதுகிறேன்./

      தங்களின் மனம் நிறைந்த பாராட்டுதலுக்கு மிக்க நன்றி சகோதரரே. ஒரு நல்ல எழுத்தாளரிமிருந்து இப்படி ஒரு பாராட்டைப் பெறும் போது, சகோதரர் ஸ்ரீராம் அவர்கள் சொல்வது போல் "தன்யனானேன்" எனச் சொல்லத் தோன்றுகிறது. அப்படிச் சொல்லக் கூடாது என்பதினால், என் பணிவான நன்றிகளை உங்களுக்கு சமர்பித்துக் கொள்கிறேன். உங்கள் ஊக்கம் நிறைந்த கருத்துக்கள் என் எழுத்தை மேம்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இன்னமும் இதுபோல் நிறைய ஊக்கம் தரும் கருத்துக்களை என் பதிவுக்கு வந்து நான் இறைவனருளால் எழுதும் எழுத்துக்களுக்கு தாருங்கள் எனவும் வேண்டிக் கொள்கிறேன்.

      காஃபி அருந்திக் கொண்டே நீங்கள் பதிவை படித்து கருத்துச் சொன்னதற்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். ஆஹா. என்ன ஒரு பொருத்தம்.!

      பதிவில் இன்னமும் நிறைய எழுத வேண்டுமென்றுதான் தோன்றியது ஏற்கனவே என் பதிவுகள் சற்று நீளமாக வடிவமைக்கப்பட்டு விடும். அதனால் இத்துடன் நிறுத்தினேன்.

      /தேங்காய், காபி, அடுத்து என்ன? கூல் ட்ரிங்க்?/

      ஹா ஹா ஹா. இறைவன்தான் என்னை எழுத வைக்கிறான். அடுத்து என்னவென்று அவனே அறிவான். தங்களின் அன்பான பாராட்டிற்கும், கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. காஃபி புராணம் நிறைய விடயங்கள் சுவாரஸ்யமாக இருந்தது சகோ.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரரே.

      பதிவை ரசித்துப்படித்து தந்த பாராட்டிற்கு என் அன்பான நன்றி சகோ. தொடர்ந்து என் பதிவுகளுக்கு வந்து ஊக்கம் நிறைந்த கருத்துக்களைத் தாருங்கள்.

      சென்ற பதிவுக்கும் உங்களை எதிர்பார்த்தேன். தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. காபியில் தான் என் ஒவ்வொரு நாளும் விடியும்!!!

    காஃபி நல்லதில்லை என்று அந்தக் காலத்திலேயே பாட்டிகள், அதை கேலி செய்து, கல்யாணத்தில் நலுங்கின் போது பாடுவதுண்டு என்று என் மாமியின் அம்மா சொல்லுவார். என் மாமி அவரிடம் கற்றதை எனக்கும் சொல்லிக் கொடுக்கப் பாடிக்காட்டினார். காபி மட்டுமல்ல நிறைய பாடல்கள் சுதந்திரப் போராட்டம் நேரத்தில் அந்நிய உடைகள் அணிவதைக் கூட கேலி செய்து என்று... நான் அந்தப் பாடல்கள் அனைத்தையும் எங்கள் தளத்தில் போட்டு வைக்க வேண்டும் என்று எழுதி வைத்திருந்தேன் கொரோனா சமயத்தில்....ஆனால் பதிவு போடவில்லை வழக்கம் போல!

    இவ்வளவு நேரம் தேடினேன் அந்த டாக்குமென்டை அது எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்கில் இருக்கு. எக்ஸ்டர்னல் ஹார்டிஸ்கை கணினி recognize பண்ணுவதில் டைம் எடுக்கிறது.

    வரிகள் நினைவுக்கு வந்ததும் சொல்கிறேன், கமலாக்கா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      உங்களுக்கும் காஃபி அருந்துவது பிடிக்குமென்று அறிந்து மகிழ்ச்சி. காலை காஃபி கொஞ்சம் உடலுக்கும் மனதுக்கும் சுறுசறுப்பைத் தருகிறது. வேறு ஒன்றுமில்லை.

      /காஃபி நல்லதில்லை என்று அந்தக் காலத்திலேயே பாட்டிகள், அதை கேலி செய்து, கல்யாணத்தில் நலுங்கின் போது பாடுவதுண்டு என்று என் மாமியின் அம்மா சொல்லுவார். என் மாமி அவரிடம் கற்றதை எனக்கும் சொல்லிக் கொடுக்கப் பாடிக்காட்டினார். காபி மட்டுமல்ல நிறைய பாடல்கள் சுதந்திரப் போராட்டம் நேரத்தில் அந்நிய உடைகள் அணிவதைக் கூட கேலி செய்து என்று... நான் அந்தப் பாடல்கள் அனைத்தையும் எங்கள் தளத்தில் போட்டு வைக்க வேண்டும் என்று எழுதி வைத்திருந்தேன் கொரோனா சமயத்தில்....ஆனால் பதிவு போடவில்லை வழக்கம் போல!/

      அத்தனையும் நல்ல பாடல்கள். பதிவில் போட்டிருக்கலாம். நாங்களும் படித்துப் பாடி தெரிந்து கொண்டிருப்போம். எங்கள் அம்மாவும் எனக்கு நலுக்குப்பாடல்கள் சொல்லித் தந்தார். நான்தான் வெட்கப்பட்டு கொண்டு பாட இயலாமல் தவித்தேன். இப்போது திருமணங்களில், நலுங்கு வைக்கும் சடங்கைக் கூட சில வீடுகளில் விட்டு விட்டார்கள்.

      தங்கள் கணினி சரியானதும்பாடல்கள் கிடைத்ததும் பகிருங்கள். தங்களின் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. அரைக் காசுக்கு காபி அரை லோட்டா, பித்தளை லோட்டா, வெண்கல லோட்டா, வெள்ளி லோட்டா....ஜீனியும் பாலும் ரவையும் சேர்த்து கஞ்சி உமக்கொரு லோட்டா...ஜவ்வர்சியும் பாலும் சேர்த்து கஞ்சி உமக்கொரு லோட்டா...இப்படியே போய் கொட்டை அரைத்து அது ஒரு கழுனீர் போலன்னு எல்லாம் வரும்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      பாடல் நன்றாக உள்ளது. சிறுவயதிலேயே நீங்கள் கற்றிருப்பதால் ஒருநாள் முயற்சித்தால் அவ்வளவும் கொஞ்சம் சொஞ்சமாக நினைவுக்கு வந்து விடும். உடனே எழுதி வைத்துக் கொள்ளுங்கள். பின் கணினியில் பேஸ்ட் செய்து பதிவாக்கி விடலாம். தங்களின் வேலை பளுவில் நான் அழைத்தவுடன் வந்து கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. காஃபி போடுவதே ஒரு கலை என வாதிடுபவர்கள்தான் எனக்குத் தெரிந்த வரை நிறைய பேர் (உறவுகள்) இருக்கிறார்கள்.//

    ஆமாம் அக்கா அதை ஏன் கேக்கறீங்க!! ஆனா காஃபி குறித்து சில நல்ல கட்டுரைகளும் இருக்கின்றன. இந்த ஆய்வுகள் ஒவ்வொரு காலத்திலும் மாற்றிக் கொண்டே இருப்பதாகத்தான் படுகிறது.

    என் பிறந்த வீட்டில் சிக்கரி கலந்த காஃபிதான் பயன்படுத்துவாக ஏன்னா, அப்பதான் பெரிய குடும்பத்துக்குக் கணிசமாக வரும். கட்டுப்படியாகும்னு. ஆனால் புகுந்த வீட்டில் சிக்கரி சேர்க்காத காஃபிதான். என்பதால் எனக்கும் அப்படிப் போட்டு பழகிவிட்டது. இந்தச் சிக்கரி குறித்தும் நல்லதும் உண்டு நல்லதல்லாததும் சொல்லப்படுகிறது.

    ஆனால் வெளிநாட்டில் காஃபி என்பது பெரும்பாலும் பால் சேர்க்காத காஃபி இல்லைனா சும்மா க்ரீமர் என்று கொஞ்சமே கொஞ்சம் க்ரீம் சேர்த்துக் குடிப்பதுதான் காஃபி!

    அது நல்லதாம். ஏதோ சொல்லட்டும். குடிக்கப் பிடிச்சா குடிக்கிறோம் இல்லைனா இல்லை அம்புட்டுத்தான். ரொம்ப ஆராய்ந்தால் மூளை கலங்கிப் போகும் குழப்பம் வரும்!!! ஹாஹாஹாஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி

      தங்களது விரிவான கருத்துக்கள் எனக்கு மகிழ்வை தருகின்றன. நிறைய விஷயங்களை தங்கள் கருத்தில் தெரிந்து கொள்ள முடிகிறது.

      இதோ..! பழைய காலத் திருமணங்களில் வரும் நலுங்கு பாடல்கள் பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள. நானும் கலைவாணர் பாடிய பழைய பாடல், காஃபி குடிப்பது, (அப்போது காஃபி குடிப்பதே ஒரு நாகரீகமான செயல்தான்) நாகரீகமாக இருப்பது பற்றி கேலி செய்யும் பாடல்கள் பற்றி சொல்ல நினைத்தேன். அதற்குள் நம் சகோதரி கோமதி அரசு அவர்களும் தன் கருத்துரையில் அந்தப் பாடல்களை குறிப்பிட்டு கருத்துக்கள் தந்துள்ளார். அவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

      காஃபி மேன்நாட்டிலிருந்து வந்த பானமென அக்காலத்தவர் கேலி செய்ததும் படித்தும், கேட்டும் அறிவோம். இப்போது வீட்டுக்கு வீடு அது இல்லாத நாட்களில்லை. டிகாஷனில் பால் ஊற்றாமல் குடிப்பதும் ஒரு அக்கால வெளிநாட்டவர் பழக்கங்கள்தாம். ஆனால், அவர்கள் இப்போதும் அந்த வழி முறைகளைத்தான் பின்பற்றுகின்றனர்.

      /ரொம்ப ஆராய்ந்தால் மூளை கலங்கிப் போகும் குழப்பம் வரும்!!! ஹாஹாஹாஹா/

      ஹா ஹா ஹா உண்மை. எதையும் ரொம்ப ஆராய கூடாது. தங்களின் அன்பான பல கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  13. காஃபி போடும் முறையிலிருந்து பால், டிகாக்ஷன், இன்ஸ்டன்ட் என்று பல விவாதங்கள் உண்டு.

    எனக்கும் எங்கு சென்றாலும் காஃபி தான் வேண்டும் என்று இல்லை, டீ கொடுத்தாலும் ஓகே இல்லை வெந்நீர் என்றாலும் ஓகேதான். இப்படிக் கட்டுப்பாடுகள் இல்லை விருப்பங்கள் வைத்துக் கொண்டால் பயணமோ, இல்லை உறவினர் நட்பு வீடுகளுக்குச் செல்வதோ ஒரு discomfort ஏற்படும் அவர்களுக்குக் குறிப்பாக... குறைகளும் சொல்லப்படும் இந்த இடத்தில் அன்பு அடிபட்டுப் போகும். எனவே நமக்கு முக்கியம் நட்பு, உறவு அன்பு....அவ்வளவே!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      /காஃபி போடும் முறையிலிருந்து பால், டிகாக்ஷன், இன்ஸ்டன்ட் என்று பல விவாதங்கள் உண்டு./

      ஆம் அதைத்தான் தீடிர் காஃபி என குறிப்பிட்டுள்ளேன்.

      /எனக்கும் எங்கு சென்றாலும் காஃபி தான் வேண்டும் என்று இல்லை, டீ கொடுத்தாலும் ஓகே இல்லை வெந்நீர் என்றாலும் ஓகேதான். இப்படிக் கட்டுப்பாடுகள் இல்லை விருப்பங்கள் வைத்துக் கொண்டால் பயணமோ, இல்லை உறவினர் நட்பு வீடுகளுக்குச் செல்வதோ ஒரு discomfort ஏற்படும் அவர்களுக்குக் குறிப்பாக... குறைகளும் சொல்லப்படும் இந்த இடத்தில் அன்பு அடிபட்டுப் போகும். எனவே நமக்கு முக்கியம் நட்பு, உறவு அன்பு....அவ்வளவே!/

      சரியாகச் சொன்னீர்கள். எனக்கும் அப்படித்தான் வெறுந்தண்ணீர் குடுத்தாலும் சரி. இல்லையெனினும் சரி அவர்கள் வீட்டில் என்ன உள்ளது அதைத்தானே தருவார்கள். ஏதாவது குடிக்கிறார்கள் என்று கேட்டால் கூட உடனே என் பதில் வேண்டாம் என்பதுதான். அவர்களாக விருப்பப்பட்டு கம்பெல் பண்ணி கொடுத்தால் வேண்டாமென மறுக்காமல் சரி நீங்கள் காஃபி, டீயோ தந்தாலும் குடிக்கிறேன் என்பேன். என் இஷ்டத்தை சொல்வதில்லை. நீங்கள் சொன்ன மாதிரி அன்பு ஒன்றுதான் என்றும் மாறாதது. நல்லதொரு பதிலை தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி. தங்களுக்கு இந்த கருத்துக்கு பதில் தர தாமதமாகி விட்டது. மன்னிக்கவும். நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  14. அருமையான அலசல். என்னதான் ஒரே பிராண்ட் பால், ஒரே பிராண்ட் காபி பொடி, சர்க்கரை பயன்படுத்தினாலும், சுவையான, காபி தினமும் கிடைப்பதில்லை என்பது வருத்தமான புதிர்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      /என்னதான் ஒரே பிராண்ட் பால், ஒரே பிராண்ட் காபி பொடி, சர்க்கரை பயன்படுத்தினாலும், சுவையான, காபி தினமும் கிடைப்பதில்லை என்பது வருத்தமான புதிர்./

      ஹா ஹா ஹா. உண்மை. அதைச் சொல்லுங்கள். ஒவ்வொரு நாளும் நாம் அருந்தும் காஃபியின் தரம் சற்று வித்தியாசங்களுடன் மாறுபடும் போது புதிராகத்தான் உள்ளது.

      தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்

      Delete
  15. காஃபியை பற்றிய செய்திகள் அருமை.
    பிறந்தவீட்டு காஃபி, புகுந்தவீட்டு காஃபி பற்றி எல்லாம் சொன்னதும் பழைய முறையில் காஃபி தயாரிக்கும் முறை பற்றி சொன்னதும் அருமை.

    எங்கள் குடும்பத்தில் என் கணவர் மட்டுமே காஃபி பழகி கொண்டார்கள். அதுவும் வேலைக்கு வந்த பின் பேப்பர் திருத்த போன போதுதான். என் அத்தை குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் பால் கொடுக்காமல் கடுங்காஃபி (பால் இல்லா காஃபி) கொடுப்பார்களாம்.
    இப்போது பிளாக் காபி நல்லது என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

    எதுவும் அளவாக இருந்தால் நல்லது, அளவுக்கு மிஞ்சினால் விஷம்.

    கலைவாணர் பாட்டு நினைவுக்கு வந்து.50 ரூபாய் சம்பளம் வாங்குபவர் மனைவி 9 தடவை காபி குடிப்பது அநீதி என்பார்.
    விஞ்ஞானத்தை வளர்க்க போறேண்டி பாடலில் நாகரீக பெண்மணியை காரிலே போவாள், காப்பி குடிப்பாள் என்று முடிப்பார்.

    மாப்பிள்ளை டோய் ,மாப்பிள்ளைடோய் மணியான மகராஜன் மாபிள்ளைடோய் எனற பரிகாச பாடலில்

    காஃபியிலே பல்லு தேய்கிறார், கோப்பையில் தீனி தின்கிறார். என்ற பழைய பாடலும் நினைவுக்கு வந்தது.

    https://www.youtube.com/watch?v=cStMKkoGOcc கேட்டு பாருங்கள் பாட்டு உங்களுக்கு பிடிக்கும். ஏ,எம் ராஜா, பி. லீலா பாடியது.

    நீங்கள் பகிர்ந்த பாடலும் கேட்டேன், மிகவும் பிடித்த பாடல்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      /காஃபியை பற்றிய செய்திகள் அருமை.
      பிறந்தவீட்டு காஃபி, புகுந்தவீட்டு காஃபி பற்றி எல்லாம் சொன்னதும் பழைய முறையில் காஃபி தயாரிக்கும் முறை பற்றி சொன்னதும் அருமை./

      பதிவை படித்து ரசித்து நல்லதொரு கருத்துக்கள் தந்திருப்பதற்கு மிக்க நன்றி சகோதரி.

      ஆம். வெறும் டிகாஷன் மட்டும் ஜீனி கலந்து பால் சேர்க்காமல் கடுங்காபி என குடிப்போம். மேல்நாட்டினர் இப்படித்தான் பிளாக் காஃபி என்ற பெயரில் இதனை அறிமுகப்படுத்தினர். நம்மவர்களில் சில இடங்களில் இப்பவும் இதை விருப்பமாக குடிக்கின்றனர்.நான் பதிவில் இதை சேர்த்து எழுத மறந்து விட்டேன் நீங்கள் நினைவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி சகோதரி.

      நீங்கள் பகிர்ந்த பாடல்கள் மிக அருமையானவை. எனக்கும் சகோதரி கீதாரெங்கன் அவர்கள் தன் கருத்தில் அவர் வீட்டில் கற்ற நலுங்கு பாடல்களை பற்றி சொன்னவுடன் இந்த கேலி திரைப்பட பாடல்கள்தாம் நினைவுக்கு வந்தன. அதற்குள் நீங்களும் அதை உங்கள் கருத்தில் குறிப்பிட்டு விட்டீர்கள். "என்னப் பொருத்தம் நமக்குள்" என்று நினைத்துக் கொண்டேன். அவருக்குப் பதிலாக நீங்கள் பகிர்ந்த பாடல்களை சொல்லியுள்ளேன்.

      நீங்களும் பதிவின் பாடலை ரசித்தமைக்கு மிக்க நன்றி சகோதரி. இந்த கர்த்துக்கு பதிலளிக்க கொஞ்சம் தாமதமாகி விட்டது. மன்னிக்கவும். தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  16. //ஒருவரின் மனது நோக ஒரு சொல் சொல்வதும், ஒரு உணவுப் பொருளை வேண்டாமென்று மறுக்கவும், ஒதுக்கவும் தெரியாத மனது என்னுடையது. இதுவரை அப்படியேதான் இருக்கிறேன். தொட்டில் பழக்கம் கட்டை வேகும் வரை மாறாதது என்பது உண்மைதானே..!//

    நல்ல குணங்களை ஒரு போதும் கைவிடக் கூடாது. அப்படியே இருங்கள் நல்ல குணங்களுடன்.

    இப்படி உங்களை போல நல்ல குணம் இல்லாத சில உறவுகள் இருக்கிறார்கள்.


    உறவினர்கள் மற்றவர்கள் வீட்டு காபியை குறை சொல்வதும் அது எப்படி பட்ட சூழ்நிலையில் கொடுக்கப்பட்டது என்பதை பற்றி எல்லாம் சிந்திக்காமல் பேசினார்கள்.

    சின்ன வயதில் மனைவி, குழந்தைகளை விட்டு இறந்தவர் வீட்டில் வம்பு பேசினார்கள், இறந்தவர் வீட்டில் அடுப்பு பற்ற வைக்க கூடாது என்று கடையில் வாங்கி வைத்து இருந்த காபியை குறை கூறினார்கள். தங்கள் வீட்டு காபியை பற்றி பெருமை பேசினார்கள். இப்படியும் மனிதர்களா?

    அதை கேட்டு அன்று விட்டவள் தான் காபியை.

    //விருப்பங்கள் வைத்துக் கொண்டால் பயணமோ, இல்லை உறவினர் நட்பு வீடுகளுக்குச் செல்வதோ ஒரு discomfort ஏற்படும் அவர்களுக்குக் குறிப்பாக... குறைகளும் சொல்லப்படும் இந்த இடத்தில் அன்பு அடிபட்டுப் போகும். எனவே நமக்கு முக்கியம் நட்பு, உறவு அன்பு....அவ்வளவே!//

    கீதா சொன்னது போல நட்பு, உறவு, அன்பு தான் முக்கியம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      நீங்கள் கூறிய அறிவுரைகளை கண்டு நெகிழ்ந்து போனேன். நம் உறவுகள், நட்புகள் அனைவரிடமும் விட்டுக் கொடுத்து அன்பாக இருக்க வேண்டும். அதுதான் என் விருப்பமும். வேறு என்ன கொண்டு வந்தோம் இவ்வுலகிற்கு வரும் போது? வந்ததும் அன்பை சம்பாதித்தோம். அதைதான் அனைவருக்கும் தந்து விட்டுப் போக வேண்டும். உங்களின் வார்த்தைகளும், உங்களின் நல்ல மனதிலிருந்து வரும் எண்ணங்களும் அதையே உறுதிப்படுத்துகின்றன. தங்களின் அன்பான உள்ளம் கண்டு நெகிழ்ந்து போனேன். கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete