Wednesday, July 20, 2022

டாக்டரும், நோயாளியும்.

வணக்கம் அனைவருக்கும். 

எவ்வளவு செலவு செய்து கொண்டு 

"காசிக்குப் போனாலும் கர்மம் தொலைவதில்லை என்பது போல்....

எவ்வளவு செலவு செய்து படித்து

"நல்ல டாக்டராக பரிமளித்தாலும், நகைச்சுவை பேச்சுக்களுக்கு குறைவில்லை போலும்..." என்றுதான் என்னை எண்ண வைத்தது. . 

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். அப்படியே சில சமயங்களில் நோய்கள் ஏதும் ஏற்பட்டாலும், 

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் இல்லையா? ஆக படுத்தும் உபாதைகளுக்கு  நிர்மலமான சிரிப்பே  சிறந்த ஒரு நிவாரண மருந்து. 

இது எனது கைப்பேசியில் வாட்சப்பில் பலவிடங்களிலிருந்து சுற்றி வந்த டாக்டர் ஜோக்குகள். இது ஏற்கனவே உங்களுடனும் சுற்றி வந்து நீங்கள் அனைவரும் படித்திருக்கலாம். இருப்பினும் ஒரு மாறுதலுக்காக இன்று இங்கு இதை பதிவிடுகிறேன்.  இங்கும் வந்து படிப்பதற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி. 🙏. 


1.) நோயாளி.. டாக்டர்! எனக்கு பல் ஆடுது!

டாக்டர்... எந்த பாட்டுக்கு?


2.) இரண்டு இட்லியைக் கூட முழுசா என்னாலே சாப்பிட முடியல டாக்டர்..?

என்னாலையும் முழுசா இரண்டு இட்லி சாப்பிட முடியாது, புட்டு புட்டுதான் சாப்பிடனும்


3.)நோயாளி; "கசப்பான மருந்து கூட உங்க கையால கொடுக்கிறப்போ ஸ்வீட்டா இருக்கு..SISTER

நர்ஸ் : "கர்மம்.."கர்மம். நான் உண்மையிலேயே 'ஸ்வீட்'..தான் குடுத்தேன்,இன்னிக்கு எனக்கு 'பர்த்டே'...."


4.)டாக்டர் : எங்க ஹாஸ்பிடல் விளம்பரத்துக்கு ஒரு பன்ச் டயலாக் சொல்லுங்க..

விளம்பரதாரர்: கூட்டிட்டு வாங்க!! தூக்கிட்டு போங்க!!


5.) மருத்துவர்: “ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்.”

நோயாளி : “ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?”


6.)டாக்டர் கிட்டேயும் கடவுள் கிட்டேயும் வம்பு பண்ண கூடாது.. ஏன்னா.. ??

கடவுளுக்கு கோபம் வந்தா டாக்டர் கிட்ட அனுப்பிடுவாரு...

டாக்டருக்கு கோபம் வந்தா கடவுள் கிட்டேயே அனுப்பிடுவாரு...


7.)நோயாளி - பத்தடி நடந்தாலே மூச்சு வாங்குது டாக்டர்

டாக்டர் :- அப்ப ஒன்பது அடிக்கு மேல நடக்காதீங்க


8.) டாக்டர்! நான்தான் பிழைத்து விட்டேனே? பின்ன எதுக்கு ஸ்கேன் எடுக்க சொல்றீங்க?

நீங்க பிழைச்சா போதுமா? ஸ்கேன் சென்டெர் வச்சுருகிற என் மச்சான் பிழைக்க வேண்டாமா?


9.) "டாக்டர் எனக்கு தற்கொலை பண்ணிக்கணும் போல இருக்கு."

"அதெல்லாம் கூடாது.. ரொம்ப தப்பு. அப்புறம் நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம்?"


10.) நோயாளி : டாக்டர்! என் மனைவிக்கு 2 நாளா பேசவே முடியலை.

டாக்டர் : 2 நாள் முன்னே அவங்க என்ன சாப்பிட்டாங்கன்னு கேட்டு சொல்லுங்க.என் மனைவிக்கும் வாங்கி கொடுக்கணும்.


11.) அதோ போறாரே.. அவர் ஒரு "சைல்ட் ஸ்பெஷலிஸ்ட்.."..!

குழந்தைகளுக்கு நல்லா வைத்தியம் பார்ப்பாரா..?

இல்லே.. அவருக்கு 17 குழந்தைகள்..!


12.) "டாக்டர் எனக்கு கோபமே வர மாட்டேங்குது. யாரைப் பாத்தாலும், எதைப் பாத்தாலும் சிரிச்ச மொகமாவே இருக்கேன்.அதுக்கு ஏதாவது மருந்து குடுங்களேன்."

"கவலைப்படாதீங்க.. அதுக்கு நான் என்னோட பில் தர்றேன்."


13.) டாக்டருக்கும் ஆக்டருக்கும் உள்ள ஒற்றுமை என்ன?

இரண்டு பேரும் தியேட்டருக்கு வரவழைச்சுதான் கொல்லுவாங்க!


மீண்டும் அனைத்தையும் படித்து சிரித்த அனைவருக்கும், இதை அனுப்பி பகிர்ந்தவர்களுக்கும் என் நன்றிகள்.🙏. 

41 comments:

  1. எல்லாம் மனம் விட்டு சிரிக்க வைத்தது சகோ பகிர்வுக்கு நன்றி.

    நான்காவது மருத்துவமனைக்கு பஞ்ச் டயலாக் மிகவும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தாங்கள் முதலில் வருகை தந்து பதிவை படித்து ரசித்தமைக்கும் கருத்து தந்தமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      எனக்கும் படித்தவுடன் எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் என்று தோன்றியது. தாங்களும் குறிப்பிட்டு அருமையென கூறியமைக்கும் மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. அருமை..குறிப்பாக ஆறாவது..வாழ்த்துகளுடன்..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீண்ட நாட்கள் கழித்து தாங்கள் வந்து கருத்து சொல்லியிருப்பதற்கு மகிழ்கிறேன். நான் வலைத்தளம் ஆரம்பித்த புதிதில் என் ஆரம்ப பதிவுகளுக்கெல்லாம் தாங்கள் அளித்த ஊக்கமிக்க உற்சாகம் தரும் கருத்துரைகள்தாம் என்னை இன்னமும் வலைத்தளத்தில் ஒரளவு எழுத வைத்துக் கொண்டிருக்கிறது. தங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. ஏற்கெனவே ரசித்த ஜோக்ஸ் என்றாலும் மறுபடியும் ரசிக்க வைப்பவை.​

    5 தான் டாப்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீங்கள் அனைவருமே இந்த நகைச்சுவைகளை வாட்சப்பில் சுற்றி வந்து முன்பே படித்து ரசித்திருப்பீர்கள் எனத் தெரியும். இருப்பினும் என் தளத்திலும் பதிந்தேன். குறிப்பிட்டு படித்து ரசித்தமைக்கும் மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. என் பங்குக்கு நான் ஒன்று சொல்கிறேன்...

    சினிமாத் தியேட்டருக்கும் ஆபரேஷன் தியேட்டருக்கும் என்னங்க வித்தியாசம்?

    எதோட எதை கம்பேர் பண்றதுன்னு விவஸ்தையே இல்லையா? தெரில... நீங்களே சொல்லுங்க!

    முன்னதுல டிக்கெட் வாங்கிகிட்டு உள்ள போகணும். ரெண்டாவதுல உள்ள போனதும் டிக்கெட் வாங்கணும்!​

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா ஸ்ரீராம் 13 வதின் இன்னொரு வெர்ஷன்!!!

      கீதா

      Delete
    2. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆகா.. தங்கள் ஜோக்கையும் ரசித்தேன். ஹா.ஹா.ஹா. அருமை.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. ஏழாவதில் வரும் டாக்டருக்கு சிறந்த டாக்டர் என்று பட்டம் கொடுக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஹா.ஹா.ஹா. அவர் படித்து கிடைத்த டாக்டர் பட்டத்தை விட இது சிறந்த பட்டந்தான். :))) தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. நகைச்சுவை துணுக்குகள் அனைத்திற்கும் சிரித்துவிட்டேன்.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தாங்கள் நகைச்சுவைகள் அனைத்தையும் படித்து சிரித்து மகிழ்ந்தது கண்டு நானும் மகிழ்வுற்றேன். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. ஹஹாஹாஹாஹா...ஹையோ கமலாக்கா சிரித்து முடியவில்லை. நர்ஸ், விளம்பர பஞ்ச், 5 வது, செம...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தாங்கள் ஜோக்குகள் அனைத்தையும் படித்து ரசித்ததற்கு நானும் மகிழ்வடைந்தேன். படித்ததில் குறிப்பிட்டு சொன்னமைக்கும் மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. 12 வது ரொம்பவே யதார்த்தம்தான்...ஹாஹாஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      ஆமாம்... எப்போதுமே அந்த பில்தானே நம்மை நோயை விட அதிகமாக தாக்குவது. ஹா ஹா. அதற்குப்பின் சிரித்த முகம் நமக்கு ஏது. :)))) தங்கள் உற்சாகமான கருத்துகளுக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. வணக்கம் அன்பான உறவுகள் அனைவருக்கும்.

    இன்று இங்கு வந்து கருத்துக்கள் சொன்னவர்களுக்கும், சொல்லப் போகிறவர்கள் அனைவருக்கும் என் பணிவான நன்றிகள். கொஞ்சம் காலை வேளைகள் அழைப்பதால், (குழந்தை(பேத்தி) பள்ளிச்செல்லும் ஏற்பாடுகள் செய்து விட்டு வருகிறேன்) பிறகு வந்து அனைவருக்கும் தனித்தனியாக நன்றி கருத்து தருகிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  10. அனைத்தும் அருமை. வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் தான். சிரிப்பு அருமருந்து.
    நானும் ஒரு மருத்துவ சிரிப்பு சொல்கிறேன் வடுவூர் சிவ. முரள் சொன்னது:-
    "சிஸ்டர் , ஆபரேஷனுக்கு எல்லாம் ரெடியா?
    " எல்லாம் ரெடி டாக்டர்! யாராவது ஒரு பேஷண்ட் கிடைச்சா உடனே ஆரம்பிச்சுடலாம்.!"
    " என்ன சார் , நேத்துதானே நாய்
    கடிச்சுட்டுதுன்னு வந்து ஊசி போட்டு போனீங்க?
    இன்னிக்கு மறுபடியும் நாய் கடிச்சுட்டுதுன்னு வந்து
    நிக்கிறீங்களே!"
    நீங்கதானே அந்த நாய் உயிரோட இருக்கான்னு போய்ப் பார்க்க சொன்னீங்க!"
    நன்றி - விகடன் ஜோக்ஸ் 50.
    ஸ்ரீராம் பகிர்ந்த சினிமா, தியேட்டர், ஆப்ரேஷன் ஜோக்ஸ் அதில் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      உண்மைதான்.. சிரிப்பு ஒரு அருமருந்துதான். ஒரளவு மன இறுக்கத்தை குறைக்க உதவும் மருந்திது.

      தாங்கள் பகிர்ந்த இரு நகைச்சுவை துணுக்குகள் நன்றாக உள்ளன. பேஷண்ட் இல்லாமலே அறுவை சிகிச்சைக்கு தயாராகும் டாக்டரை இங்குதான் பார்க்கிறேன். ஹா ஹா ஹா.

      நாயை திரும்பவும் சென்று பார்த்தால், அது மீண்டும் தன்னை தாக்க வந்து விட்டாரோவென தற்காப்புக்கு மீண்டும் கடிக்கத்தானே செய்யும்.:)
      இரண்டுமே சிரிக்க வைத்தது. சகோ ஸ்ரீராம் அவர்கள் சொன்னதும் நன்றாக உள்ளது. தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. சிரித்தேன்... ரசித்தேன்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தாங்கள்நகைச்சுவை துணுக்குகளை படித்து ரசித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி. தாங்கள் பதிவுகளுக்கு தொடர்ந்து வந்து தரும் ஊக்கம் மிகுந்த கருத்துக்களுக்கு மகிழ்வுடன் கூடிய நன்றி.🙏.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. முதியவர் ஒருவர் மருத்துவரிடம் சென்றார்..

    டாக்டர்.. இந்த முழங்கால் ரெண்டு நாளா வலிக்குது..

    வயதாகி விட்டதல்லவா.. அதான்..

    இந்த முழங்காலுக்கும் அதே வயசு தானே ஆகுது!..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஹா.ஹா.ஹா. தாங்கள் பகிர்ந்த ஜோக்கும் அருமை. ரசித்தேன். தங்களது அன்பான கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  13. வாய் விட்டுச் சிரித்தால்
    நோய் விட்டுப் போகும்..
    நல்லது தான்.. அப்படி நோய் விட்டுப் போனவர்கள் எத்தனை பேர்?.. தகவல் ஏதும் இல்லை.. மன இறுக்கம் தீர்வதற்காக சொல்லப்பட்டது என்றாலும் உணவுப் பழக்கம் மாறியாக வேண்டும்.. வாய் விட்டு சிரித்து விட்டு பிட்ஸா பர்ஹர் வாங்கித் தின்றால் என்னதுக்கு ஆகும்?..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /நல்லது தான்.. அப்படி நோய் விட்டுப் போனவர்கள் எத்தனை பேர்?./

      உண்மை. இது தாங்கள் சொல்வது போல் மன இறுக்கத்தை குறைப்பதற்காக சொல்லப்படுவதுதான்... இப்போது அப்பேற்பட்ட மன இறுக்கம் எதனால் வருகிறது.? வழிவழியாக வரும் நம் வீட்டு பெரியவர்களையும், அவர்களின் பாரம்பரியமான உணவு பழக்க வழக்கங்களையும் ஒதுக்கி, நாகரீக பாதையில் உணவுகளை தேடிப் போவதால்தான்.

      "வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்." இது அந்த காலத்தவர்களால், அந்த காலத்தவர்களுக்கு மட்டுமே சொல்லப்பட்டதுதான். தாங்கள் சொல்வதும் மறுக்க முடியாத உண்மைதான் நல்லதொரு கருத்துக்கு நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  14. நல்ல தொகுப்பு..
    மகிழ்ச்சி..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை ரசித்து படித்து நல்லதொரு கருத்துகள் தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  15. படித்தவைகள்தாம். ஆனால் மீண்டும் ரசித்துச் சிரிக்க முடிந்தது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீங்களும் இந்த ஜோக்குகள் ஏற்கனவே படித்திருப்பீர்கள் என நினைத்தேன். ஆனாலும் இங்கு வந்து படித்தமைக்கும் ரசித்து கருத்துக்கள் தந்தமைக்கும் மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  16. வாய் விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகுமோ என்னவோ தெரியாது... ஆனால் பல்செட் மாட்டிக்கொண்டிருப்பவர்களுக்கு ஒருவேளை பல் செட் தெறித்து விழுந்துவிடலாம்.

    சீரியசாக..... ஐந்து கோடி முதலீட்டில் படித்துவிட்டு வருபவர்கள், வாழ்க்கையைத் தியாகம் செய்யணும், ஓசிக்கு மருத்துவம் பார்க்கணும், நேர்மையாக இருக்கணும் என்றெல்லாம் எதிர்பார்ப்பது ரொம்ப டூ டூ மச் இல்லையோ?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஹா.ஹா.ஹா. வாய் விட்டு சிரிப்பதில் இவ்வளவு சோதனைகள் உள்ளதா..?

      /ஐந்து கோடி முதலீட்டில் படித்துவிட்டு வருபவர்கள், வாழ்க்கையைத் தியாகம் செய்யணும்... /

      அட ராமா.. லகரங்களில் இருந்து ஐந்து கோடி ஆகிவிட்டதா? உண்மைதான்.. செலவழித்த பணத்தை பின் எப்படித்தான் எடுப்பது? அதற்கும் ஒவ்வொருவருக்கும் அதிர்ஷ்டம் வேறு துணையாக இருக்க வேண்டுமே..... எல்லா படிப்பும் சிரமந்தான்... தங்கள் கருத்துக்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  17. நர்ஸ் படிப்பு படிச்சவங்களை வெளிநாட்டில் வேலை பார்க்கும் இந்தியர்கள் உடனே திருமணம் செய்துகொள்வார்கள். மனைவிக்கு எப்படியும் வேலை கிடைத்துவிடும் என்பதால். இதில் மலையாளிகள் மிக மிக அதிகம். (ஆம்பளை நர்ஸுக்கு டிமாண்ட் கம்மி)

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்களின் கருத்துகளுக்கும், மேலதிக தகவல்களுக்கும் நன்றி. எங்கள் புகுந்த வீட்டு ஒரு உறவினரும் இந்தியாவில் படித்த நர்ஸ் ஒருவருக்கு மலேஷியாவில்தான் வேலை என அங்கேயே போய் செட்டில் ஆகி விட்டார். இங்கே அப்பா, அம்மா தனியே வசித்தார்கள். நம்மூர் பக்கம்தான்... தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      Delete
    2. நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  18. டாக்டர் ஜோக்ஸ் அருமை.

    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தாங்கள் ஜோக்குகள் ரசித்துப் படித்து தந்த பாராட்டுகளுக்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  19. அனைத்தும் மிக அருமை ..ரசித்தேன் கமலா அக்கா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      நலமா? எப்படியிருக்கிறீர்கள்? நீண்ட நாட்கள் கழித்து இன்று என் தளத்தில் உங்களைக் கண்டதும் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பதிவை ரசித்து படித்ததற்கு மகிழ்ச்சி அடைந்தேன். மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  20. என்னோட கருத்துரை எங்கே? 2 நாட்கள் ஆகிவிட்டபடியால் நினைவில் இல்லை. :( இந்த ப்ளாகர் கருத்துப் பெட்டியை மாற்றின பிறகு கருத்துகள் சரியாகவே போய்ச் சேருவதில்லை. :( ஆனால் பின் தொடரும் கருத்துகள் மட்டும் சரியாக மெயில் பாக்ஸுக்கு வருகின்றன. :(

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      அடாடா... நீங்கள் இரண்டு தினங்களுக்கு முன் தந்திருந்த கருத்துக்கள் காணாது போய் விட்டனவா? எங்கிருக்கிறது? என் மெயிலிலும் இல்லை. போகட்டும்... இப்போது நீங்கள் மறுபடி வந்து அது பற்றி தகவல் தந்ததே சந்தோஷமாக உள்ளது. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete