Monday, November 1, 2021

பட்டறிவு..

வாழ்க்கையில் ஒரு மனிதர் முன்னேற பல துணைகளுடன் (பணம், அதிர்ஷ்டம், குடும்ப சூழல்கள், இத்யாதி. .. இத்யாதி.. ) சுயஅறிவின் துணையும் வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே. இதன்படி படிப்பறிவு, கேள்வியறிவு என்பனவற்றின் மூலம்  நாம் சிறு வயதிலிருந்தே படிப்படியாக கற்கிறோம். அது போக அனுபவ அறிவு  (பட்டறிவு) என்பதும், அதனுள் முக்கியமான ஒன்று.  இந்த மாதிரியான  அனுபவங்களை நாம் அந்த சிறு வயதில் பெற முடியாவிட்டாலும்,நம் குடுபத்திலிருக்கும் பெரியவர்களின் வாயிலாக கேட்டு அறிந்து தெளிந்திருக்கிறோம்.  ஆனால்,  "மூத்தோர் சொல் அமிர்தம்" என்று மரியாதை, இனம்புரியாத ஒரு அன்பு, பாசம் நிமித்தம் கேட்டுக் கொண்டிருந்த அந்த அனுபவ அறிவுகள் நாளடைவில்  தேய் பிறை நிலவாக   தேய ஆரம்பித்து விட்டன. 

இப்போதும் அவைகளில் சிலவற்றை பேணி விரும்பும் போதும், சில வகைகள் நிர்தாட்சண்யமாக புறக்கணிக்கவும் படுகிறது. காரணம் மாறி வரும் கலாச்சாரங்களும், "நாம்தான் கற்று தெரிந்து  கொண்டிருக்கிறோமே... இதைவிடவா இந்த அனுபவ அறிவுகள் கைக் கொடுக்கப் போகிறது" என்ற அலட்சிய மனப்பான்மைகளுந்தான்... என நினைக்கத் தோன்றுகிறது. 

இப்படியான அனுபவ அறிவை அந்த காலத்திலிருந்தே சாதாரணமாகச் சொல்லி, அறிவுறுத்துபவர்கள் இருந்தார்கள். / இருக்கிறார்கள்.  அதை அதிகப்படியாக வலியுறுத்தி, கூடவே நிறைய அறிவுரைகளை கூறுபவர்களும் உண்டு.  ஆனால், இந்த பிறர் கூறும் அறிவுரை (சொல்பவர்  யாராக இருந்தாலும்) என்பது பொதுவாக ஒரு மனிதருக்கு பிறந்ததிலிருந்தே கசக்கும் மருந்தாயிற்றே...!  (அதிலிருந்துதான் நம்மை ஆளுமை செய்யும் ஒரு நோய்க்கு எதிரியாக கசப்பு மருந்தை கண்டு பிடித்தார்களோ என்னவோ...?) அதுவும் இந்த அனுபவ அறிவை ஒதுக்கித் தள்ள ஒரு காரணமாக இருந்திருக்கலாம். 

வாழ்க்கை நாளும் நகரும் காலத்தில் இந்த அனுபவங்கள் வெவ்வேறு வகையில் ஒவ்வொருவரும் விதவிதமாக பட்டு தெரிந்து கொள்வதுதான். ஆனால்,அப்படி பட்டு தெரிந்து கொள்ளும் போது, நம்முடைய வாழ்க்கையின் அனுபவ துவக்கத்தில் பலமுறைகள் சொல்லி அறிவுறுத்தியவர்களின் சிரமங்கள், மற்றும் சுலபமான முறைகளையும், மேலும் இன்ப துன்பங்களையும், இப்போது புரிந்தவர்களாய், அதையும் சேர்த்து, பிறரிடம் பகிர நினைக்கிறோம். அதை விரும்பத் தகாததுவாக விடுவதும், விருப்பமுடன் ஏற்றுக்கொள்வதும், நம்மிடம் கேட்பவர்களின் அதிர்ஷ்டங்களுடன், நம் குருட்டு அதிர்ஷ்டமும் இணைந்துள்ளதை காட்டுகிறது. . 

பொதுவாக வாழ்க்கையே ஒரு அனுபவ  கல்விதானே.... ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாடங்களில்  தேர்ந்து சிறந்த முறையில் வல்லவராகிறோம். சிலவற்றை சரிவர கற்றுத் தேறாமல் மனவுளைச்சலுக்கு ஆளாகிறோம். ஆனால், இதை கற்றுத் தருபவன் (கடவுள்) நம் அறியாமைகளை கண்டு, தன் எழுதுகோல் ( விதி) கொண்டு  திருத்துகிறான். திருத்த முற்படுகிறான். திருத்துவான். ஏனென்றால் "அவன்" அனைவருக்கும் நல்லதையே கற்பிக்கும் ஆசான். "அவன்" கடமையை "அவன்" மெளனமாக செய்து கொண்டேதான் இருப்பான் என்ற நம்பிக்கைதானே இந்த மனித உள்ளங்களில், "அவனால்" தோற்றுவிக்கப்பட்ட அச்சாணி வேர்.... அந்த வேர்கள் பட்டு உளுத்துப் போகாமல் இருக்க "அவன்" அருளை வேண்டி நாளும் பிராத்திப்போமாக...  

வாழ்க நலம்.... 

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்..🙏. 

என் சிந்தனைகளின் இறுதியில் முத்தாய்ப்பாக நான் படித்த கதை ஒன்றையும் (நீங்களும் ஏற்கனவே  படித்திருக்கலாம்.)  பதிவின் தொடர்புடையதாய் இருக்கவே அதையும் பகிர்ந்திருக்கிறேன். 

இதோ அந்த ப(பி)டித்த கதை:-

ஒரு பெரிய கார் கம்பெனியில் ஒரு இளைஞன் வேலைக்கு சேர்ந்தான். படுசுட்டி மட்டுமல்ல புத்திசாலியும் கூட..

சில காலம் கழித்து அவன் தானே ஒரு காரை வடிவமைத்தான்.. அதை அவனின் மேலாளரிடம் காண்பித்தான்..

அற்புதம் என்றார் மேலாளர்.. 

இது போல் எந்த கம்பெனியும் தயாரிக்கவில்லை.. உடனே காரை உருவாக்குவோம் என்று அந்த கம்பெனி முதலாளியின் அனுமதியோடு காரை தயாரித்தனர்..

முதலாளிக்கு மிகுந்த சந்தோஷம்.. முதல்கார் கண்ணை கொள்ளை கொண்டது.. அனைவருக்கும் மகிழ்ச்சி.. 

காரை மார்க்கெட்டிங் பிரிவுக்கு எடுத்து செல்ல முற்படும் போது தான் தெரிந்தது..

காரின் உயரம் வாயிலின் உயரத்தைவிட ஒரு இன்ச் அதிகம்..  ஆஹாவென

இளைஞன் சோர்ந்தான்.. தன்னையே நொந்து கொண்டான்..

ஆளாளுக்கு ஐடியா கொடுக்க ஆரம்பித்தனர்..

வாயிலின் மேற்பகுதியை உடைத்துவிட்டு காரை வெளியே எடுத்துவிடலாம்.. பின்னர் சரிசெய்யலாம் என்றார் மேலாளர்..

காரை கஷ்டப்பட்டு இருக்கும் வாயில் வழியே எடுத்து செல்லலாம்.. மேற்பகுதியில் கீறல்கள் ஆகும்.. அதை பெயிண்டிங் மூலம் சரிசெய்யலாம் என்றார் பெயிண்டர்..

முதலாளிக்கு மனது ஒப்பவில்லை.. புது காரின் மீது கீறல்களை நினைக்கவே அவருக்கு முடியலை..

அனைவருக்கும் குழப்பம்.. முகத்தில் ஏமாற்றமும் வெறுமையும் ..

இவ்வளவு அழகான புது வடிவமைப்புடன் உருவாக்கிய காரை வெளியே கொண்டு செல்ல முடியலையே....! 

இதை அனைத்தையும் கவனித்து கொண்டு இருந்த வயதான வாட்ச்மேன் தயங்கி தயங்கி முதலாளியிடம் "ஐயா.. நான் ஒன்று சொன்னால் கேட்பீர்களா? அனுமதி உண்டா?" என்றார்..

அனைவருக்கும் ஆச்சரியம்.. இந்த கிழவன் என்ன சொல்லப்போகிறான் என்று..

ம்..ம்..ம்.. சொல்லு.. சொல்லு..

வாயிலின் உயரத்தைவிட ஒரு இன்ச் தான் கார் உயரம் அதிகம்.. காரின் நான்கு டயர்களின் காற்றை இறக்கி விட்டால் காரை சுலபமாக வெளியே எடுத்துவிடலாம்.. பின்பு காற்றை நிரப்பிக்கொள்ளலாம்..

அடடே.. இது எவ்வளவு சுலபமான வழி.. எந்த சேதமும் இன்றி..

வாழ்க்கை மிக சுலபமானது.. வாழ்வது ஒரு முறை.. அதை அனுபவியுங்கள்..

ஒரு இன்ச் உயரம் போலவே ஒரு இன்ச் ஈகோ & ஒரு இன்ச் கோபம் என எல்லாவற்றையும் டயரிலிருந்து காற்றை கழட்டி விடுவதைப் போல் கழட்டி எறியலாம்தானே..

இப்படி செய்தால் வாழும் வரை நாட்களும் ஒரளவு இனியதாக கழிய வாய்ப்பிருக்கிறது  அல்லவா..? வாட்சப்பில் வந்த இந்த கதைச் செய்தி எனக்கு படிக்கையில் பிடித்தது. இதைப் பகிரும் போது என் எண்ணங்களாக ஒரு சிறு பதிவையும் மேலே எழுதி சேர்த்து பதிந்தேன். என் எண்ணங்களை படிப்பவர்களுக்கும் இந்தக்கதையை படிப்பவர்களுக்கும், ஏற்கனவே இதை படித்தவர்களுக்கும் என் பணிவான நன்றிகள்.

அனைவருக்கும் என் அன்பான அட்வான்ஸ் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். 

33 comments:

 1. ஆஹா! இந்தக் கதையை இதுவரை படிக்கலை கமலா. நல்லதொரு படிப்பினை. காவலாளியாக இருந்தாலும் தக்க சமயத்தில் நல்லதொரு ஆலோசனையைச் சொல்லி இருக்கிறார். கதைக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

   ஆமாம்.. இந்த கதை எனக்கும் பிடித்தது.சிக்கலான எந்த பிரச்சனைக்கும் தீர்வு என்றொன்று உள்ளதே... ஆனால், அது உதிக்கும் நேரத்தில்தான் உதிக்கும். கதையையும் பதிவையும் ரசித்துப்படித்து தந்த தங்களது நல்லதொரு கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
  2. இந்தக் கதையை இதுவரை படிக்கலை கமலா. // கீதா அக்கா இந்தக் கதையை படித்ததில்லையா?ஆச்சர்யமாக இருக்கிறது. இந்த கதையை சுஜாதா கூட அவருடைய ஒரு கதையில் பயன் படுத்தி இருப்பார்.

   Delete
 2. அட? நான் தான் ஃபர்ஷ்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு! :)

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   ஆமாம்.. நீங்கள்தான் முதலாவதாக வந்து கருத்துகள் தந்துள்ளீர்கள். இங்கு மட்டுமின்றி, சென்ற பதிவுக்கும் வந்து நீங்கள் தந்த கருத்துரைகளுக்கும் என் மன மகிழ்வுடன் கூடிய நன்றிகள் சகோதரி. அதற்கும் பதில் கருத்துகள் தருகிறேன்.

   மற்றும் இந்தப் பதிவுக்கு வந்து படித்து கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் என் அன்பான நன்றிகள். எனக்குத்தான் பதில் தர கொஞ்சம் வேலைகளினால் தாமதமாகிறது. அனைவரும் பொறுத்துக் கொள்ளவும். நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 3. அனுபவ அறிவுக்கு ஈடு இல்லை.

  இருந்தாலும் பெரியவர்கள் தாங்கள் கடைபிடிக்காமல் அறிவுரைகளை அள்ளித் தெளிப்பது யாருக்குமே பிடிக்காது. அதுபோல நாம் கடைபிடிக்கும்போது இப்போது இல்லாவிட்டாலும் நம் குழந்தைகள் பிறகு கடைபிடிப்பாங்க.

  கதையை மீண்டும் படித்தேன்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   /அனுபவ அறிவுக்கு ஈடு இல்லை./
   நல்லதொரு கருத்துக்கு நன்றி.

   ஆமாம்.. அறிவுரை என்ற பெயரில் அதிகமாக கூறினால், எவருக்குமே கேட்பது பிடிக்காமல் போய் விடும். சரியாக சொன்னீர்கள். நானும் பதிவில் அதைதான் குறிப்பிட்டுள்ளேன்.
   அதுபோல் நம்முடைய பழக்கங்கள் என்றும் குழந்தைகள் மனதில் நாளாவட்டத்தில் நிற்குமில்லையா... அவர்களும் நல்லதை கடைப்பிடித்தால் நல்லதுதான்...

   கதையை மீண்டும் படித்ததற்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 4. பதிவு மிக அருமை.

  //அது போக அனுபவ அறிவு (பட்டறிவு) என்பதும், அதனுள் முக்கியமான ஒன்று.//

  உண்மை. அனுபவ அறிவு மிகவும் முக்கியம்.

  வாழ்க்கையில் நாள்தோறும் கற்றுக் கொண்டுதான் இருக்கிறோம்.
  வாழ்க்கை கற்று கொடுத்து கொண்டே இருக்கிறது. கவனமாக படிக்கவில்லை என்றால் கஷ்டம்தான்.

  // "அவன்" கடமையை "அவன்" மெளனமாக செய்து கொண்டேதான் இருப்பான் என்ற நம்பிக்கைதானே இந்த மனித உள்ளங்களில், "அவனால்" தோற்றுவிக்கப்பட்ட அச்சாணி வேர்.... அந்த வேர்கள் பட்டு உளுத்துப் போகாமல் இருக்க "அவன்" அருளை வேண்டி நாளும் பிராத்திப்போமாக... //
  அவன் அருள் வேண்டும், அவன் வழிநடத்தி செல்ல வேண்டும் நாளும்.
  பிரார்த்தனை செய்வோம்.


  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   அனுபவ அறிவு மிக முக்கியம் என்ற தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

   /வாழ்க்கையில் நாள்தோறும் கற்றுக் கொண்டுதான் இருக்கிறோம்.
   வாழ்க்கை கற்று கொடுத்து கொண்டே இருக்கிறது. கவனமாக படிக்கவில்லை என்றால் கஷ்டம்தான்./

   உண்மைதான். என்னதான் உயர்கல்விகள் படித்து சிறந்திருந்தாலும், வாழ்க்கை பாடங்களில் கவனமாக படிக்கவில்லை என்றால் சிரமந்தான். நன்றாகச் சொன்னீர்கள்.

   பதிவை ரசித்துப் படித்து தந்த பாராட்டுகளுக்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.
   நானும் அனைத்திற்கும் இறைவனை பிரார்த்தனை செய்தபடி உள்ளேன். நல்லபடியாக அனைவரின் வாழ்வையும் நடத்தி வைக்க அவன் அருளை வேண்டி பிரார்த்திப்போம். அருமையான கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 5. படித்த பிடித்த கதை மிக அருமை. உங்கள் எண்ணங்களில் உருவான பதிவும் வாட்சப்பில் வந்த கதையும் மிக அருமை.
  இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   படித்த கதைப்பகிர்வு தங்களுக்கும் பிடித்திருந்ததற்கு மிக்க மகிழ்ச்சி. கூடவே பதிவையும் ரசித்துப்படித்து தந்த கருத்துரைகளுக்கு மிக்க நன்றிகள்.
   தங்களின் அன்பான தீபாவளி வாழ்த்துகளுக்கும் நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 6. பட்டறிவு knowledge என்றால் அதை உபயோகிக்கும் முறை intelligence ஆகும். Artificial intelligence அதிகமாக புழங்கும் இந்த காலத்தில் Human intelligence இன்றும் சாகவில்லை. இதுவே எனது படிப்பறிவு. 

  Jayakumar

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   தங்கள் கருத்து உண்மைதான்.. தங்களின் நல்லதொரு கருத்துகள் கண்டு மன மகிழ்ச்சி அடைந்தேன்.தாங்கள் பதிவுக்கு வருகை தந்து பதிவை படித்து உங்களின் அன்பான கருத்துகளை பதிந்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 7. Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   தாங்கள் பதிவுக்கு வந்து கதையை ரசித்துப் படித்து தந்த கருத்துகளுக்கு மன மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 8. பட்டறிவு குறித்த பதிவும், கதையும் சிறப்பு. சின்னச் சின்ன விஷயங்களைக் கூட இப்படிச் சொல்வது பட்டறிவால் மட்டுமே சாத்தியம்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   /சின்னச் சின்ன விஷயங்களைக் கூட இப்படிச் சொல்வது பட்டறிவால் மட்டுமே சாத்தியம்./

   தாங்கள் பதிவுக்கு வந்து ரசித்துப்படித்து தந்த நல்லதொரு கருத்துக்களுக்கும், பாராட்டிற்கும் மன மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 9. இந்தக் கதை ஏற்கெனவே படித்திருந்தாலும் மறுபடி   .பட்டறிவை விட பல சமயங்களில் அனுபவ அறிவு உயர்ந்தது.  ஏட்டுச்சுரைக்காய் தான் படிப்பு தரும் அறிவு.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   நலமா? இப்போது எப்படி உள்ளீர்கள்.? இருமல் படிப்படியாக குணமாகி வருகிறதா?

   ஆமாம்... அனுபவ அறிவு என்றுமே சிறந்ததுதான். ஒவ்வொரு மனிதருக்கும், ஒவ்வொரு அனுபவங்களும், சிறந்த படிப்பினை தரும். வீட்டின் பெரியவர்கள் சொல்வதையும் கூடுமான வரை கேட்டு அதன்படி நடந்தால் நல்லதுதான் கிடைக்கும். அதன்பின் நடப்பது அவரவர் விதிவசம். தங்கள் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரரே.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 10. திருத்தம்  :  இந்தக் கதை ஏற்கெனவே படித்திருந்தாலும் மறுபடி படித்து ரசித்தேன்.   .பட்டறிவை விட பல சமயங்களில் அனுபவ அறிவு உயர்ந்தது.  ஏட்டுச்சுரைக்காய் தான் படிப்பு தரும் அறிவு.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   புரிந்து கொண்டேன். ஏற்கனவே படித்த கதையாக இருந்தாலும், மீண்டும் படித்து ரசித்தமைக்கு மிக்க நன்றிகள்.
   மேலும் அனுபவ அறிவு சிறந்ததென கூறிய கருத்துகளுக்கு என் மன மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 11. தங்களது எண்ணங்களும் குட்டிக்கதையும் மிகவும் அருமை சகோ.

  ReplyDelete
 12. வணக்கம் சகோதரரே

  தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  நலமா? உங்களைத்தான் காணவில்லையே என நினைத்தேன். நீங்களும் வந்து பதிவை படித்து,கதையையும் ரசித்து தந்த கருத்துரைகள் மனதிற்கு மகிழ்ச்சியை தருகிறது உங்கள் நல்லதொரு கருத்துகளுக்கு என மனம் நிறைந்த நன்றிகள் சகோ.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
 13. அன்பின் கமலாமா,
  என்றும் நலமுடன் இருங்கள்.
  நமக்குப் பட்டறிவு இருந்தாலும் பகிர்ந்து கொள்ள யோசிக்க வேண்டி இருக்கிறது.
  கேட்பவர்களுக்கு அதிகம் ரசிக்க முடியாதது
  அறிவுரை தான். மிகச் சரியாகச் சொன்னீர்கள்.
  வெகு நாட்கள் பேசிவிட்டு இப்போது மௌனமாயிருக்கக் கற்று வருகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   உண்மைதான் சகோதரி. சரியாக சொல்லியிருக்கிறீர்கள். பேசுவதை கூட எண்ணி கணக்காக பேச வேண்டும். இல்லாவிடில் எங்கும் பிரச்சனைதான்.பொதுவாக மெளனமாயிருத்தல் நல்லதுதான். நமக்கோ இல்லையோ.. கேட்பவர்களுக்கு..:) கேட்பவர்களுக்கு அவ்விதமே விரும்புகிறார்கள். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள் சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 14. மிக மிக அருமை.அன்பின் கமலாமா.
  சிறுகதை என்னைத் திகைக்க வைத்தது.

  எங்கள் சிங்கம் இது போல சிறு கார் செய்திருக்கிறார். 1977இல்.
  தில்லியிலிருந்து அனுமதி கிடைக்கவில்லை.
  பின்னர் மாருதி வந்தது.
  பழைய கதை இது தான்.

  உங்கள் பதிவின் கதை மிக அருமை. ஈகோ நம்மை விட்டு
  சென்றால் மட்டுமே வாழ்வின் வண்டி நகரும். மிக மிக அருமை அன்பின் கமலா.


  தீப ஒளி நிறைந்து அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சி
  ஓங்க வேண்டும்.
  நல் வாழ்த்துகள் உங்களுக்கும் குழந்தைகளுக்கும்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   /எங்கள் சிங்கம் இது போல சிறு கார் செய்திருக்கிறார். 1977இல்.
   தில்லியிலிருந்து அனுமதி கிடைக்கவில்லை.
   பின்னர் மாருதி வந்தது./

   அப்படியா சகோதரி.. தங்கள் கணவரின் திறமைகள் வியக்க வைக்கின்றன. இன்னமும் கொஞ்சம் போராடி அவர் திறமையை உலகிற்கு பறைசாற்றி இருக்கலாமோ.? எது எப்படியாயினும் அவர் திறமைக்கு நான் தலை வணங்குகிறேன்.

   ஆம் சகோதரி நம் கோபம், ஈகோ நம்மை விட்டு முற்றிலும் அகல வேண்டுமென்றுதான் நானும் விரும்புகிறேன்.

   பதிவையும் கதையையும் ரசித்துப்படித்து தந்த தங்களது நல்ல கருத்துக்களுக்கு என் மன மகிழ்வுடன் கூடிய நன்றிகள் சகோதரி.

   தீப ஒளி திருநாளுக்கு தாங்கள் தந்த வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. உங்களுக்கு இனிய தீபாவளி பண்டிகை நல்வாழ்த்துக்கள். நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 15. இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   நலமா? மீள் வருகை தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி. தங்களின் இனிய வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிகள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்களுடைய இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். நன்றி சகோ.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 16. //இப்போதும் அவைகளில் சிலவற்றை பேணி விரும்பும் போதும், சில வகைகள் நிர்தாட்சண்யமாக புறக்கணிக்கவும் படுகிறது. காரணம் மாறி வரும் கலாச்சாரங்களும், "நாம்தான் கற்று தெரிந்து கொண்டிருக்கிறோமே... இதைவிடவா இந்த அனுபவ அறிவுகள் கைக் கொடுக்கப் போகிறது" என்ற அலட்சிய மனப்பான்மைகளுந்தான்... என நினைக்கத் தோன்றுகிறது. // உண்மை. உங்கள் பட்டறிவு இவ்வரிகளில் புலனாகிறது.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   உண்மை.. பதிவை ரசித்துப் படித்து தந்த நல்லதொரு கருத்துரைக்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள் சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 17. பதிவு அற்புதம்...

  முற்பகுதியில் தங்களது கை வண்ணம் அருமை.. மிக அருமை..

  எண்ணம் எனும் வண்ணக் களஞ்சியம்..

  பிற்பகுதியில் இடம் பெற்றுள்ளன கதையும் அழகு.. இப்போது தான்
  இதனைப் படிக்கின்றேன்...

  பதிவுக்கு மகுடம் போல் திகழ்கின்ற்து..

  வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   தாங்கள் பதிவை படித்து ரசித்தமைக்கும், தொடர்ந்து வந்த அனுபவ கதையையும் ரசித்துப் படித்தமைக்கும் என் மன மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

   தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete