Tuesday, June 25, 2019

கதம்ப புகைப்படங்கள்..

சூரியனின் விண்ணப்பம்.... 


மழை வருது.. மழை வருது... குடை கொண்டு வா..! வெண்மேகமே..


இதோ.. இதோ.. நீ சொல்லி நான் மறுத்திருக்கிறேனா? காற்றுக்கும் தூது சொல்லி விரைவுபடுத்தி விட்டு குடையுடன் வருகிறேன். ஆனால், அதற்குள் மழை மேகங்களின் அன்பு பிடிக்குள் காணாமல் போய் விடாதே.!


 அட..! நீ சொன்னவுடனே மழை மேகமும்  என்னுடன் உடனே ஆஜர் ஆகி விட்டதே.! ஐயோ பாவம்.! இந்த குருவியாரும் நனைந்திட போறாரே.! " குருவியாரே, மழை வருவதற்குள் பத்திரமான இடத்தை தேடு  போ.. போ.. உம் சீக்கரம்.."


மழை, மழை...எங்கும் சூழ்ந்த மழை.! சூரியனின் கட்டளைப்படி அவனுக்காக குடை கொண்டு வந்து தந்தாலும், கரு மேகங்களுடன் நானும் ஐக்கியமானதில், குடைகள் கை தவறி காற்றுடன் கலக்கின்றனவே.! என்ன செய்வேன்?


மழை வருவதை எச்சரித்து விட்டுப்போன வெண்மேகத்திற்கு நன்றி சொல்ல வேண்டும். ஆனால் உன்னை எங்கே தேடுவேன்? மழை வந்தால், எங்களுக்கும் சந்தோஷந்தான்.! நீ சொன்னவுடனே விரைவாக வந்த மழைக்கு ஒதுங்க எங்களுக்கு இப்போதைக்கு இந்த வீட்டு கம்பிகள்தான் அடைக்கலம்.


வரும் மழைக்கு குடை பிடிக்க வேண்டி சூரியன் வெண் மேகத்தை கேட்டான். வந்த மழை  பெய்து முடிக்கும் வரை எங்களை விரட்டாதே இருக்கும் இவ்வீட்டவர்களின்  கொடை மனந்தான் எங்களுக்கு குடை.


மழை வந்ததும்,  ஓட்டை குடை கொண்டு வந்து தந்த வெண்மேகங்களும், கரு மேகங்களாக மாறி, குடையும் பலவீனமாகி தாங்காது  காற்றரசன் கொண்டு போனதும் நல்லதற்கே..! கழுவிய பித்தளை தாம்பாளமாய் எப்படி ஜொலிக்கிறேன். இந்த ஆறும் அதற்கு சாட்சி. .!( அட.! நீங்களும்  அதனிடம் கேட்டுத்தான் பாருங்களேன்..!)


மழை பெய்தாலும், பெய்து நின்றாலும்,  இரவில் எங்களுக்கும்  ஒடுங்கிக் கொள்ள குருவி விட்டுச் சென்ற இந்த ஜன்னல் கம்பிகள்தான்.


ஏய்.! இந்த இருட்டிலே என்னை தனியா விட்டுட்டு எங்கே போனாய்? எனக்கு பயமாயிருக்கிறது என்பது ஒரு பக்கமிருந்தாலும், உனக்குத்தான் இருட்டிலே தனியா போக கொஞ்சமாவது தைரியமிருக்கா?


ஹப்பாடா.! ஒரு வழியா வந்திட்டியா? இப்ப இந்த இருட்டிலே நாம் இருவர்தான் ஒருவருக்கொருவர் துணை. நாளை காலை மழையின் விடாப்பிடியான பிடியில் மறைந்திருக்கும் சூரியன் களைப்புத்தீர வெளி வந்ததும், நீ யாரோ.! நான் யாரோன்னு பறந்து போயிடுவோமோ...! அப்படி போக மாட்டோம்னுதான் நம்புகிறேன். நாளையும் என்னுடன் துணையாக இருப்பாயா ?

மலர்களின் ரசனை...


வானம் நமக்கு தோழன்.. காற்றும், மழையும் நண்பன். காற்றில் பொன்னூஞ்சல் ஆடி இலை மெத்தை தேடி நாம் வந்த வேளை இது..!


ஆகா.. இந்த பாட்டை  முன்பே எங்கேயோ.....எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே.!  சரி.! சரி.! எங்கே கேட்டாலும், அந்த வானமும், காற்றும். மழையுந்தான் நமக்கும் தோழன், நண்பன் எல்லாமும்.. நாமும் அந்த பெருசின் உடன் பிறப்புகள்தானே! இதோ இந்தப் பாட்டையும் கொஞ்சம் கேளு...


மலர்களிலே பல நிறம் கண்டேன்.. திரு மாலவன் வடிவம் அதில் கண்டேன்.


பச்சை நிறம் அவன் திருமேனி....


பவள நிறம் அவன் செவ்விதழே....


மஞ்சள் நிறம் அவன் தேவி முகம்....


வெண்மை நிறம் அவன் திருவுள்ளம்....


மலர்களிலே பல மணம் கண்டேன்.  திரு மாலவன் கருணை மனம் கண்டேன். 


பாடல் எல்லாவற்றையும் கேட்டாயா? என்னவொரு ரசனை இந்த மலர்களுக்கு. நாம்தான் கொஞ்சமும் எவ்வித ரசனையுமின்றி நெடிதுயர்ந்து வளர்வதிலேயே கவனமாக இருந்து விட்டோமோ ?


அப்படியெல்லாம் ஒன்றுமில்லை... நம்மை படைத்தவன் சொல்கிற கடமையைதான் செய்கிறோம். சூரியன் தன் பாதுகாப்புக்கு "குடை கொண்டு வா" எனச் சொல்வதற்கு காரணமாயிருந்த மழையையே நாம்தான் தோற்றுவிக்கிறோம். அந்த பெருமையொன்றே  நமக்கு போதாதா? மேலும் நம்மிடையே மலர்களையும், காய் கனிகளையும் உண்டாக்கும், மரங்கள் இல்லையா? யாருக்கு எது கிடைக்கிறதோ அது தப்பாமல் அவர்களுக்கு கிடைக்கும்.


 உண்மையான பேச்சு.! இப்படி பூங்காவில்,


கண்களுக்கு விருந்தாக, சோர்வுறும் ஒரு மனதிற்கு இதமளிக்கும் விதமாக,


பார்க்க வரும் அனைவருக்கும், பார்வையாளர்களாக நாங்கள் வளர்ந்து நிற்கவில்லையா ?


பூவும், காயுமாக பலனளிக்கும் விதமாக நாங்களில்லையா? ஒவ்வொருவருக்கும் ரசனைகள் மாறுபடும். இந்த உலகத்தில் நம்மை ரசிப்பவர்களும் இருக்கிறீர்கள். அந்த திருப்தி போதும் நமக்கு...
ஆவ்... என்ன விவாதமிங்கே.! பொல்லாத ரசிப்புக்கு பெயர் போனவர்கள் இவர்கள்... காட்டின் ராஜாவாக கவலைகள் ஏதுமின்றி உலாத்திய  என்னை வலுக்கட்டாயமாக கொண்டு வந்து  இந்த சிறு இடத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடக்க வைத்து வேடிக்கை பார்க்கிறார்கள். கூண்டுக்குள் நடமாடும் இவர்களை நான் கூட்டின் வெளியிலிருந்து பார்ப்பதாக அவ்வப்போது கற்பனை செய்து கொள்கிறேன். இல்லையென்றால், என் ஒரு உறுமலுக்கு இவர்கள் அந்த கூண்டிலிருந்து வெளியே ஓடி விடுவார்கள். எங்கே...!.!.! கூண்டை திறந்து ஒரு நடை உள்ளை வந்து என்னைத் தொட்டு, என்னுடன் பேசி ரசிக்கத் சொல்லுங்கள் பார்க்கலாம்.... தினமும் ஓராயிரம் பார்வைகளை சந்திக்கிறேன். ஒன்றிலும் ரசிப்புத் தன்மையே இல்லை....அதென்னவோஉண்மைதான்..  நான் நடந்து வரும்போதெல்லாம் என்னைப் பார்த்து, என் நடையை பார்த்து ரசிக்காது, கையிலிருக்கும் சின்ன ஒளிப் பெட்டியை இயக்கி, அதில் என்னை அவர்களுடன் இணைத்துக் கொள்வதிலேயே நாட்டமாக இருக்கிறார்கள். என்னவோ போ. ! இந்த நடையில் கால் ஓய்ந்ததும் படுக்க இடம் போட வேண்டியதுதான்!....

ஆங்காங்கே எடுத்த படங்களை இணைத்து ஒரு கதம்பமாய்... ரசித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். 🙏

30 comments:

 1. கழுவிய பித்தளைத் தாம்பாளமாய்..

  ஹா...ஹா... ஹா.. பீதாம்பரி போட்டு விளக்கி இருப்பார்களோ!!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் உடனடி வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   /பீதாம்பரி போட்டு விளக்கி இருப்பார்களோ!!/

   ஹா.. ஹா. ஹா.. பித்தளை போல், பளபளப்பாக செய்தவர்கள் யார்? மழை, மின்னல், இடி இவர்களின் கடும் உழைப்பாகத்தான் இருக்கும். அடுத்த முறை இவர்களிடமே கேட்டு விட்டால் போச்சு..ஹா..ஹா ஹா.நன்கு ரசித்து கருத்திட்டதற்கு மகிழ்ச்சி சகோதரரே
   தங்கள் ஊக்கமிகும் கருத்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 2. இவ்வளவு மழையை நீங்கள் சொல்லுவதால் நீங்கள் இப்போது தமிழ்நாட்டில் இல்லை. சரியா?

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   இல்லை.. நான் பெங்களூரில்தான் உள்ளேன். இங்கும் மழை குறைவுதான். ஆனால் சென்னை தூறலை விட கொஞ்சம் அதிகந்தான். இது எப்போதோ என் செல்லில் எடுத்த படங்கள். இன்றுதான் தகுந்த வசனம் பெற்று திரைப்படமாகி உள்ளது. முதலில் பார்வையிட்டு பாராட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 3. காலம் நமக்குத் தோழன் பாட்டின் உல்டா ரசிக்க வைக்கிறது! படம் "பெத்த மனம் பித்து. பாடியவர்கள் டி எம் எஸ்- சுசீலா. இசை எம் எஸ் வி! சரியா?!!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   பாடல் தேர்வில், நினைவில், தங்களை வெல்ல முடியுமா?நீங்கள் கேட்டதும், படம் அதுதானா என எனக்கு லேசாக சந்தேகம் வந்து கூகுளை நாட வெள்ளி பாடலில்...தாங்கள் தந்த படம் சரியே.! தாங்கள் வெள்ளி பாட்டில் எங்களுக்காக பதிந்து அன்றைய தினம் நானும் வந்து கருத்துக்கள் கூறியுள்ளதை பார்த்தேன்.

   நீங்கள் கேட்டவுடன் இந்த பாடலும் நினைவுக்கு வந்தது. "பாட்டுடை தலைவன் என்று" என்ற சீர்காழி பாடல். ஹா. ஹா. ஹா. கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 4. சிறைப்பட்டுள்ள செய்ங்க ராஜாவைப் பார்தாலேபாவமாக இருக்கிறது! ஆங்காங்கே அவ்வப்போது எடுத்த படங்கள் எல்லாமே ஜோர்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
   /
   சிறைப்பட்டுள்ள செய்ங்க ராஜாவைப் பார்தாலேபாவமாக இருக்கிறது/

   ஆமாம்.. அன்று மிருக காட்சி சாலையில் புகைப்படம் எடுக்கும் போது எனக்கும் பாவமாக இருந்தது. ஒரு சுறுசுறுப்பே இல்லாத மாதிரி நடந்து வந்து போய்க் கொண்டிருந்தது. இதுவும் போன வருடம் எடுத்த புகைப்படங்கள். ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் எடுத்தது. இன்று தேர்வு செய்து சம்பந்தப்படுத்தினேன்.பாராட்டுகள் மகிழ்ச்சியை தருகின்றன. பாராட்டியமைக்கு மிக்க நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 5. படங்கள் எல்லாம் மிக அழகு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை சொல்லியதே!

  புள்ளி சில்லை குருவி உங்கள் வீட்டு ஜன்னலுக்கு வந்ததா?
  புறாக்களும் வந்து இருக்கே!

  மலர்களிலே பல நிறம் கண்டேன்.. திரு மாலவன் வடிவம் அதில் கண்டேன் பாடல் பிடித்த பாடல் அதற்கு பொருத்தமான காட்சிகள் அருமை.

  //வானம் நமக்கு தோழன்.. காற்றும், மழையும் நண்பன். காற்றில் பொன்னூஞ்சல் ஆடி இலை மெத்தை தேடி நாம் வந்த வேளை இது..//

  இலை மெத்தையில் செண்டு போல் மலர்ந்து இருக்கும் பூ அழகு.

  பதிவு அருமை. படங்களுக்கு கீழ கொடுத்த அனைத்து வரிகளும் அருமை.
  கதம்பம் அருமை.

  நேற்று இங்கும் நல்ல மழை. ஆனால் மழையை ரசிக்க முடியாமல் மனதில் சஞ்சலம், தம்பிமகள் இரு சக்கர வாகனத்தில் போகும் போது காரில் வந்தவர் இடித்து விட்டார். கால் விரலில் சின்ன அறுவை சிகிட்சை, முட்டியிலிருந்து மாவு கட்டு வேறு காலை அங்கு அவளை பார்க்க ஆஸ்பத்திரி போய் விட்டு மாலை வரும் போது நல்ல மழை.
  ரசிக்க முடியவில்லை.

  இன்று இடியும், மின்னலும் இருக்கு, கருமேகம் இருக்கிறது ஆனால் மழை இல்லை.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் உடனடி வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   படங்கள் ஒவ்வொரு கதைகளை சொல்லியதை பார்த்து,கேட்டு, ரசித்தமைக்கு ரொம்ப சந்தோஷம் சகோதரி.தங்களது ஊக்கமிக்க கருத்துக்கள் என்னை மிகவும் உற்சாகம் கொள்ளச் செய்கின்றன.

   குருவி அன்று வந்து ஒடுங்கி அமர்ந்து கொண்டது. நிறைய படம் எடுத்தால் பறந்து விடும் என்ற எண்ணத்தில் எடுக்கவில்லை. புறாகள் தினமும் இரவு நேரத்தில், எங்கள் வீட்டு பாத்ரூம் ஜன்னலில்தான் வந்து உறங்குகின்றன. அதையும் வெளிச்சம் போட்டு படமெடுத்தால், பயந்து பறந்து விடுமே என்ற காரணத்தால் இருட்டிலேயே க்ளிக்கினேன்.

   மலர்களையும், அதற்கேற்ற பாடல்களையும் ரசித்தமைக்கு மிக்க நன்றிகள்.

   இது எப்போதோ எடுத்த மழை படங்கள். அங்கு நேற்று மழை பெய்ததா? மிகவும் சந்தோஷம். ஆனால் தங்களது தம்பி மகளுக்கு ஏற்பட்ட விபத்து மனதை கவலைகொள்ளச் செய்தது. இப்போது எப்படி இருக்கிறார்? அவர் நல்லபடியாக குணமாக நானும் இறைவனை பிரார்த்திக்கிறேன்.

   இத்தனை மன சஞ்சலத்திலும், என பதிவுக்கு உடனடியாக வந்து கருத்துக்கள் தந்திருப்பதற்கு மிக்க நன்றிகள் சகோதரி.

   Delete
 6. // தினமும் ஓராயிரம் பார்வைகளை சந்திக்கிறேன். ஒன்றிலும் ரசிப்புத் தன்மையே இல்லை....//

  சிங்க ராஜா சொல்வது அருமை.

  கூண்டில் அடைத்து என்ன பார்வை திறந்து விட்டு ரசிக்க சொல்கிறதா?
  நல்ல ஆசைதான்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   /கூண்டில் அடைத்து என்ன பார்வை திறந்து விட்டு ரசிக்க சொல்கிறதா?
   நல்ல ஆசைதான். /

   ஹா.. ஹா. ஹா. சும்மா ஒரு கற்பனைக்குதான் அப்படி எழுதினேன் சகோதரி. கூண்டை அடைத்து விட்டு என்ன பார்வை என்கிறதோ? திறந்தால் நம் கதி அதோகதிதான்.. சுறுசுறுப்பில்லாமல் நடை பயிலும் சிங்கராஜா கூண்டிலிருந்து வெளிவந்ததும், நம்மைக் கண்டால் பயங்கர சுறுசுறுப்பாகி விடுவார். அப்பறம் நாம் தப்பிக்கும் சுறுசுறுப்பை எப்படி விவரிப்பது.? நல்லதொரு கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 7. அழகிய படங்களும், அதன் வர்ணனைகளும் ஸூப்பர் சகோ.

  காணொளியில் சிங்கராஜாவையும் கண்டேன்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் உடனடி வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   படங்கள் அழகானவை எனப் பாராட்டி, வர்ணனைகளை மனம் விட்டு ரசித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது சகோ.

   காணொளி கண்டதற்கும் மிக்க சந்தோஷமாக உள்ளது. தங்களைப் போன்றோரின் ஊக்கமிகு கருத்துக்கள் என்னை இன்னமும் எழுத வைக்கும் என நம்புகிறேன். தங்களுடைய பாராட்டுகளுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 8. இரண்டாவது மற்றும் ஏழாவது படங்கள் மிக அருமையா இருக்கு.

  வெண்மை நிறம் அவன் திருவுள்ளம் - சிற்பமும் ரசிக்கும்படி இருந்தது.

  ReplyDelete
 9. வணக்கம் சகோதரரே

  தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  படங்களை ரசித்து குறிப்பிட்டிருப்பதற்கு மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்.

  இரண்டாவது இங்குதான் எடுத்தேன். ஏழாவது (அதாவது பித்தளை தாம்பாளச் சூரியன்) நம் நெல்லையில் தாம்பிரவருணி ஆற்றங்கரையில் எடுத்தது. அங்கு இயற்கை கொஞ்சும் இடங்கள் நிறைய உள்ளன.(தாங்கள் அறியாததா.!)

  வெண்மை நிறம் சிற்பமும் இங்குதான் எடுத்தேன். மலர்களை விட அந்த இடத்தில், "அவன்" திருவுள்ளத்தை பிரதிபலிக்க அந்த சிற்பத்தை வைத்தேன். தங்களது சிறப்பான ஊக்கமிகு கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரரே.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
 10. ரசனையான, கண்ணைக்கவர்கின்ற புகைப்படங்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   புகைப்படங்களை ரசித்து நல்லதொரு கருத்தை தந்தமை கண்டு மிகுந்த மகிழ்வடைகிறேன். தங்களுடைய ஊக்கம் மிக்க கருத்துரைகள் என் எழுத்தார்வத்தை என்றுமே தக்க வைக்கும் என நம்புகிறேன். தங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 11. படங்கள் மனதை கவர்ந்தன...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   பதிவின் படங்கள் மனதை கவர்ந்தன என்ற ஊக்கம் மிகுந்த கருத்துக்கள் கண்டு மகிழ்ச்சியடைந்தேன். மிக்க நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 12. அழகியபடங்களும் வர்ணனைகளும்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் முதல் வரவுக்கு மிக்க மகிழ்ச்சி.
   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   தங்களுடைய பாராட்டுதலுக்கு மிக்வும் சந்தோஷம் அடைகிறேன். எனது பதிவுகளுக்கு தொடர்ந்து வந்து ஆதரவு தரவும் வேண்டுகிறேன்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 13. மிக அருமையான காட்சிகள் மா..

  நீல வண்ண வான் கடலில்
  வெண் படகாய் மேகங்கள் ...


  சூரியனும் , தென்னை மரங்களும்,
  நீரும் எற்றும் அலுக்காத
  இயற்கையின் கொடை...

  வண்ண வண்ண பூக்கள்
  மனதிற்கு இதமாக ...

  மூங்கில் மரங்கள்
  கப்பன் பார்க்கின் வழித்தடங்கள் ..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

   ஆகா.. அருமையான கவிதைகளாக தந்த கருத்துரைகளை கண்டு மகிழ்ச்சியடைந்தேன்.என் பதிவுகளுக்கு தொடர்ந்து வந்து ஆதரவு தந்திடும் வேண்டுகின்றேன்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 14. படங்கள் அனைத்தும் மிக அழகாக இருக்கின்றன அதற்கான உங்கள் கற்பனை வரிகளும் சிறப்பு.

  துளசிதரன்

  கமலாக்கா எல்லாப் படங்களுமே அட்டகாசம். எனக்கு சூரியன் பற்றிய படங்களிம் மனதை மிகவும் கவர்ந்த படம் அந்த தூரத்தில் தெரியும் மரங்கள் அழகான வர்ணத்தில் வானம் ஏரித் தண்ணீர் என்ற //கழுவிய பித்தளைத் தாம்பாளமாய்// ஹா ஹா அந்தப் படம்...

  அப்புறம் பூக்கள் எல்லாமே அழகு அந்தப் பச்சைத் திருமேனி வாவ் போட வைத்தது!!!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோக்கள் இருவருக்கும்

   தங்கள் இருவரின் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   படங்கள் அழகாக இருக்கின்றன என்று ரசித்ததற்கு மிகவும் மகிழ்ச்சி சகோதரரே.

   கழுவிய பித்தளை தாம்பாளமாய் ஜொலிக்கும் சூரியனையும், பூக்கள் அத்தனையையும், பச்சை நிறத்திருமேனியையும் ரசித்தமைக்கு மிக்க மகிழ்ச்சியும், நன்றியும் சகோதரி.

   தங்கள் இருவரின் வருகையும், அருமையான கருத்துக்களும் எனக்கு மிகவும் மகிழ்வை தந்தது. நான் பதில் தாமதமாக தந்தமைக்கு மன்னிக்கவும்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 15. அந்த நீல வானில் ஓடையில் தவழ்ந்து செல்லும் பஞ்சுப் பொதிகள் அட்டகாசம்!

  சிங்க நடை வீடியோ சூப்பர் என்றாலும் ராஜா பாவம் இப்படிக் கூண்டிற்குள்...

  பனேர்கட்டாவா அக்கா? அங்கு லயன் சஃபாரி உண்டே...போனீங்களா நன்றாக இருக்கும்.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

   பஞ்சுப் பொதிகளென மேகங்களை ரசித்தமைக்கு மகிழ்ச்சி சகோதரி.

   சிங்க நடை போடு என்றாலும், அது சிகரத்தில் இல்லாமல் கூண்டுக்குள் எண்ணி நாலடி.. திருப்பி நாலடி.. பாவந்தான் சிங்கராஜா இல்லையா?

   ஆம் பனேர்கட்டாதான்.. அங்கு முதலில் போனது லயன் சஃபாரிதான். நன்றாகத்தான் இருந்தது. ஆனால் நாங்க போன நேரம் மிருகங்கள் அவ்வளவாக எதுவும் கண்ணில் படவில்லை. அவை ஓய்வு எடுத்துக் கொண்டிருந்ததோ என்னவோ.! ஒவ்வொரு இடத்திலும் நிறுத்தி தூரத்திலிருக்கும் அவைகளை காட்டி அழைத்து சென்றார்கள். அப்புறம் உள்ளேயே இந்த மாதிரி கூண்டுக்குள் நிறைய மிருகங்களை நடந்து சுற்றிப் பார்த்தாகி விட்டது. வீட்டிலிருந்து அந்த இடத்திற்கு போனதை விட அதிகம் பணம் கொடுத்து உள்ளே பஸ்ஸில் சஃபாரி என்ற பெயரில் ஒரு சுற்று சுற்றினோம். அவ்வளவுதான்.! தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 16. நீலவானமும்,மழையும்,ஒதுங்கும் புள்ளினங்கள்,சிங்கராஜாவின் ஏக்கம்,எனவிரிந்து ,'இயற்கையின் அழகிய காட்சிகள் நிறைந்து நிற்தின்றன.ரன

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   பதிவில் ஒவ்வொன்றையும் ரசித்து இயற்கையின் அழகிய காட்சிகளிது என்று பாராட்டி கருத்து தந்திருப்பதற்கு மிக்க நன்றி சகோதரி. தாங்கள் என் தளத்திற்கு வருகை தந்து கருத்துப்பதிந்திருப்பது என்னை மிகவும் மகிழ்வடையச் வைக்கிறது. நான் சற்று தாமதமாக பதில் தந்தமைக்கு மன்னிக்கவும். மிக்க நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete