ஸ்ரீ ராம ஜெயம்.
அயோத்தி அன்று விழாக் கோலம் கொண்டது. மன்னன் தசரதன் மகிழ்ச்சியின் எல்லை தாண்டி சென்று விட்டார்.. இருக்காதா பின்னே? குல குருவின் அனுக்ரஹத்துடன், ஏனைய முனி ச்ரேஷ்டர்கள முன்னிலையிலும் புத்திர காமேஷ்டி யாகத்தை முடித்ததின் விளைவாய் தன் மூன்று பட்டமகிஷிகளின் வயிற்றில் நான்கு புத்திரர்கள் ஜனனமெடுத்திருக்கிறார்களே, அந்த மகிழ்வில் அவருக்கு தலை கால் புரியவில்லை. பிறந்த குழந்தைகளுக்கு அன்று பெயர் சூட்டும் விழா. அயோத்தியின்கொண்டாட்டதிற்கு கேட்கவா வேண்டும்.
மூத்த பட்டமகிஷி கெளசல்யா தேவிக்கு பிறந்த குழந்தைக்கு, ஸ்ரீ ராமன் எனவும், ஏனைய மனைவிகள் சுமத்திரை, கைகேயிக்கு பிறந்த குழந்தைகளுக்கு முறையே, லட்சுமணன் சத்ருக்கணன் பரதன் எனவும் பெயர்கள் சூட்டியாகி விட்டது. மூன்று மனைவிகளை மணம் புரிந்து நல்ல நீதி தவறாது, மக்களின் மனம் குளிர்ந்த மன்னனாக ஆட்சி செய்து வந்தும், நீண்ட வருடங்களாய் குழந்தை பாக்கியமே இல்லையென்ற நிலையில் வருத்தம் தீரும்படியாக, ஒரே பொழுதில் இப்போது நான்கு குமாரர்கள். இளைய மனைவி சுமத்திரைக்கு லட்சுமணன் சத்ருக்கணன் என்ற இரு செல்வங்கள். ஒரு சேர மூன்று மனைவிகளும் கருத்தரித்து வாரிசாக நான்கு செல்வங்களை தந்ததால், தசரதர் மகிழ்ச்சியில் மிதந்தார் என்றே சொல்ல வேண்டும்.
இராவணன் இந்திரஜித்து போன்ற அரக்கர்கள் வம்சத்தை அழிக்கவும், இப்பூலகில் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டவும் மஹா விஷ்ணு எடுத்த ஏழாவது அவதாரம் ராமாவதாரம் என்பது யாவரும் அறிந்ததே, மஹா விஷ்ணு மனிதனாக அவதாரம் எடுத்து ஒரு மனிதன் எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்று தானே முன்னின்று வாழ்ந்து காட்டிய அவதாரம் ராமாவதாரம். தாய் தந்தை பற்று, பெற்றோர் பேச்சை மதித்து நடப்பது, சகோதர வாஞ்சை, குருவை வணங்கும் பண்பு, மூத்தோரை மதித்து போற்றுவது, நட்புக்கு இலக்கணமாக நண்பர்களை அன்பினால் அணைத்து செல்வது, ஒரு தாரம், ஒர் பாணம், ஒரு பேச்சு என அனைத்திலும் உறுதியாய், இருந்து நல்ல மனிதர்கள் இப்படித்தான் வாழ வேண்டுமென வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீ ராம பிரான்.
சோதனைகளும் அதன் தொடர்ச்சியாக வேதனைகளும், இன்பங்களும் அதன் பின்னணியாக சோகங்களும் மாறி மாறி வந்தாலும், மனித வாழ்வில் இது விதியின் சுழற்சிக்கு கட்டுப்பட்டு வருகிறது என்பதில் உறுதியாக இருந்து மனம் தளராமல், அனைத்தையும் பக்குவமாக ஏற்றுக் கொண்டபடி பொறுமையாக இருக்க வேண்டும் என்பதை மனிதர்களாகிய அனைவருக்கும் உணர்த்த வேண்டி, அரச வம்சத்தில் தோன்றினும் விதியின் வளைவுக்கெல்லாம் வளைந்து கொடுத்து வாழ்வின் சாரம்சங்களை நமக்கு கற்று தந்த தெய்வப் பிறவி ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி.
பிறப்பிலிருந்து சில காலம் அன்னை தந்தை அரவணைப்போடு அரச போகத்துடன் வாழ்ந்தோடு சரி. அதன் பின்னர் குரு குல வாசம், பின்னர் இளவரசுனுக்கே உரிய வில் வித்தை போன்ற வீரம் மிகும் கலைகளை கற்பது, பின் அன்னை தந்தையின் பேச்சுக்கு கட்டுப்பட்டு அவர்தம் பெருமையை பறைசாற்றுவதற்காக முனிவர்கள் நலம் காக்க அவர்களுக்கு உதவியாய் உறு துணையாக செல்வது, தன் குலத்திற்கேற்ற குணக்குன்றாம் சீதையை வீர மரபுடன் மணப்பது, மனைவியுடன் வாழும் சில பொழுதினிலே தந்தை சொல் மதித்து சிற்றன்னையாயினும், கைகேயி தாயின் கட்டளையை ஏற்று மரவுரி தரித்து ஆடம்பரம் துறந்து ஆசைகளுக்கு அடிமையாகாது, கானகம் செல்வது, சான்றோர்களை சந்தித்து சத்சங்கம் பெறுவது, எளிய உணவுடன் எளிமையான துறவி வாழ்வுடனிருபபது, எத்தனை இடர் வரினும் ஏக பத்தினி விரதனாக இருந்து தனக்காக தன் நிழலாய் வரும் சீதையின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வது, அரக்க குலத்தின் அட்டுழியங்களாலும், விதியின் பயனாலும், தன் நிழலை தொலைத்து வருந்துவது, அரக்க குலத்தை முற்றிலும் அழிக்க பக்தியுடன் பரவசமாய் வந்த நண்பர்களின் உதவியை பணிவாய் ஏற்பது அவர் தம் செயல்களுடன் தம் அவதாரத்தின் நோக்கத்தை பூர்த்தி செய்து, அதர்மத்தை வெல்வது, சத்தியத்தின் உண்மை தரிசனங்களை மக்களுக்கு மெய்பித்துக் காட்டுவது என்று அடுக்கடுக்காக ராம பிரான் வாழ்வில் சோதனைகளும், வேதனைகளுந்தான் சூழ்ந்தது. அத்தனைக்கும் அவர் கையாண்ட ஒரே ஆயுதம் அன்பெனும் சொற்கள் கொண்டு பேசி பொறுமையெனும் புன்னகையோடு பகைவனையும் தன்னுடைய நண்பனாக பாவித்ததுதான்.
அத்தகைய பரந்தாமன் பங்குனியில் நவமி திதியன்று புனர்பூச நட்சத்திரத்தில் பகலில் பூலோகத்தில் வாழும் மனிதர்களுக்கு உதாரணபுருஷனாய் ஜனித்தார். இன்று அந்த இனிய நாள் தசரத மகாராஜா அக மகிழ்ந்த நன்னாள் ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் பிறந்த நாளான இன்று ராமா, ராமா என்று அவரை நினைத்தபடி நம் அகமும் மகிழ்ந்தபடி இனிப்புகளை செய்து அவருக்கு நேவேத்தியம் செய்து அவருக்கு பிடித்தமான பானகம், நீர் மோர் கரைத்து, அவருக்கு சமர்பித்தபடி அவர் பொன்னான பாதரவிந்தங்களை மனதாற நினைத்து தியானம் செய்தபடி, மனித குலத்துக்கு நல்லெண்ணங்களை பூரணமாக விதைத்து ஒவ்வொரு மனித உள்ளத்திலும் நீ இருந்து அருள வேண்டும் என மனமுருகி பிரார்த்தனை செய்வோமா. !!!!
அயோத்தி வரலாற்று நிகழ்வுகளை பகிர்ந்தமைக்கு நன்றி சகோ.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதாங்கள் உடனடியாக வருகை தந்து நல்லதோர் கருத்துக்களைச் சொல்லி பாராட்டியமைக்கு என் மனம் நிறைந்த நன்றிகள் சகோ.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நல்ல பதிவு சகோதரி. ராமரின் வரலாறு சொல்லிய விதம் அருமை
ReplyDeleteகீதா
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள் சகோ.
/ராமரின் வரலாறு சொல்லிய விதம் அருமை/ மனமுவந்து தந்த பாராட்டுக்கு மிக்க நன்றிகள் சகோ.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
//சோதனைகளும் அதன் தொடர்ச்சியாக வேதனைகளும், இன்பங்களும் அதன் பின்னணியாக சோகங்களும் மாறி மாறி வந்தாலும், மனித வாழ்வில் இது விதியின் சுழற்சிக்கு கட்டுப்பட்டு வருகிறது என்பதில் உறுதியாக இருந்து மனம் தளராமல், அனைத்தையும் பக்குவமாக ஏற்றுக் கொண்டபடி பொறுமையாக இருக்க வேண்டும் என்பதை மனிதர்களாகிய அனைவருக்கும் உணர்த்த வேண்டி, அரச வம்சத்தில் தோன்றினும் விதியின் வளைவுக்கெல்லாம் வளைந்து கொடுத்து வாழ்வின் சாரம்சங்களை நமக்கு கற்று தந்த தெய்வப் பிறவி ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி.//
ReplyDeleteஆமாம், சகோதரி.
அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்.
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.
மேலும், மேற்கோள் காட்டி பதிவினை ரசித்து வாழ்த்துக்கள் தந்தமைக்கு என் மனம் நிறைந்த நன்றிகள் சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரரே
ReplyDeleteதாங்கள் உடனடியாக வருகை தந்தமைக்கும் கருத்துக்கள் கூறி பாராட்டியமைக்கு என் மனம் நிறைந்த நன்றிகள் சகோ.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ராம நவமி அன்று பொருத்தமான அருமையான பதிவு. ராம நவமி என்றால் எங்களுக்கு கும்பகோணத்திலிருந்தபோது ராமசாமி கோயில் தேர் பார்க்கச் சென்ற நாள்களே நினைவுக்கு வரும்.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும், கருத்துக்கள் கூறி பாராட்டியமைக்கும், என் மனம் நிறைந்த நன்றிகள்.
என் பதிவு தங்கள் மலரும் நினைவுகளை மலர வைத்து மகிழ்ச்சியடைய செய்ததற்கு நான் மிகவும் சந்தோஷடைகிறேன் சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ராம நவமி சிறப்புப் பகிர்வு வெகு சிறப்பு.
ReplyDeleteஉங்கள் பதிவுகள் மட்டுமல்ல, நண்பர்களின் பதிவுகள் பலவும் படிக்க முடியாமல் வேலைப் பளு. இனிமேல் தொடர்ந்து படிக்க முயற்சிக்கிறேன்.
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வினுக்கும் பாராட்டியமைக்கும், என் மகிழ்ச்சியுடன் கூடிய மனம் நிறைந்த நன்றிகள். சகோதரரே
தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது வந்து கருத்துக்களை தாருங்கள். அவசரமில்லை. தற்சமயம் உடன் வந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்
ஸ்ரீ ராம நவமி பதிவு மிக அருமை சகோதரி.
ReplyDeleteவணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.
உடனடியாக வந்து கருத்திட்டு பாராட்டியமைக்கு நன்றிகள் சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இன்று தங்கள் வலைத்தளத்திற்கு வந்துள்ளேன். ஸ்ரீ ராம நவமி பற்றிய சிறப்பான பதிவினைக் கண்டேன். மிக்க நன்றி. ஒரு சிறிய சுலோகத்தை தங்கள் அனுமதியுடன் இங்கு பகிர்ந்து கொள்ள விழைகிறேன்:
ReplyDelete"ஸ்ரீ ராம ராமேதி
ரமே ரமே மனோரமே
சகஸ்ர நாம தத்துல்யம்
ராம நாம வரானனே''
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வினுக்கும் பாராட்டியமைக்கும், என் மனம் நிறைந்த நன்றிகள். சகோதரரே
அருமையான சுலோகம். அடிக்கடி நானும் சொல்வதுண்டு. இதற்கு என் அனுமதியெல்லாம் எதற்கு? ராம பிரானின் நல்லதொரு சுலோகத்தை இங்கு பகிர்ந்து கொண்டதற்கு என் மன மகிழ்வுடன் கூடிய மனமார்ந்த நன்றிகள் சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.