Sunday, March 18, 2018

படித்ததில் பிடித்தது.

சில வரிகள் கேட்கும் போது மனதில் பதிந்து விடும்.
சில வரிகள்படிக்கும் போது மனதில்  தங்கி விடும். அவ்வகையான வரிகளை படித்ததில் பிடித்ததினால் பதிந்திருக்கிறேன். உங்களுக்கும் இந்தப் பதிவில் படிப்பதனைத்தும் பிடிக்குமென நம்புகிறேன்.

படித்ததற்கு நன்றி.

தெரிந்து மிதித்தாலும்  தெரியாமல் மிதித்தாலும்

மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்...!!


========================================================================

நினைப்பது போல் வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை

அழகாய் அமைந்த வாழ்க்கையைக் கூட  சிலருக்கு வாழத் தெரிவதும் இல்லை..! 

========================================================================
'சந்தோஷமா வாழறேன்' னு காட்டிக்கொள்ள தான் பணம் தேவைப்படுகிறது 

உண்மையில், சந்தோஷமா வாழ பணம் ஒரு பொருட்டே இல்லை வாழறேன்' னு காட்டிக்கொள்ள தான் பணம் தேவைப்படுகிறது

உண்மையில், சந்தோஷமா வாழ பணம் ஒரு பொருட்டே இல்லை


========================================================================

நோய் வரும் வரை உண்பவன்,

உடல் நலமாகும் வரை உண்ணாதிருக்க வேண்டி வரும்!


========================================================================

பணம் சம்பாதிப்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல

ஆனால் செலவழிப்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல..!


========================================================================

பணத்தின் மதிப்பு தெரியவேண்டுமா?  செலவு செய்யுங்க.....!

உங்களின் மதிப்பு தெரியவேண்டுமா?.. கடன் கேளுங்க.!


========================================================================

பிச்சை போடுவது கூட சுயநலமே...

புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்தால்...


========================================================================

அனுபவத்தால் உணரவேண்டிய ஒன்றை

ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது.


========================================================================

வாழ்க்கையில் கற்றுக்கொள்வதில் குழந்தை போல் இரு 

அதற்கு அவமானம் தெரியாது 

விழுந்தவுடன் அழுது முடித்து திரும்பவும் எழுந்து நடக்கும்..!!


========================================================================

வெட்டாதீர்கள் - மழை தருவேன் என்கிறது "மரம்".

வெட்டுங்கள் - மழை நீரைசேமிப்பேன் என்கிறது "குளம்" 

========================================================================
திருமணம்

ஒரு ஆண் நல்ல கடந்தகாலம் கொண்ட பெண்ணையும்

ஒரு பெண் நல்ல எதிர்காலம் கொண்ட ஆணையும் தேடுவது.!!


========================================================================

முன்னே செல்பவனை விட்டுவிடுங்கள்

பின்னால் வருபவனிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள்

அவனால்தான் உங்களை முந்திச்செல்ல முடியும். 

========================================================================
மீண்டும் ஒரு முறை முகம் பார்த்து பேசவேண்டியிருக்கும் 

என்ற ஒரு காரணத்திற்காகவே 

நம்முடைய பல கோபங்கள் தற்கொலை செய்துகொள்கின்றன


========================================================================  
நேர்மையாக சம்பாதித்த பணம் பெரும்பாலும் கோயில் உண்டியல்களுக்கு வருவதில்லை. 

========================================================================
இவ்வுலகில் வாழ கற்றுக் கொண்டதை விட

வலிகளை மறைத்து சிரிக்க கற்றுக் கொண்டதே அதிகம்..............!


========================================================================

பகலில் தூக்கம் வந்தால், 

உடம்பு பலவீனமா இருக்குனு அர்த்தம்..!! 

இரவு தூக்கம் வரலைனா மனசு பலவீனமா இருக்குனு அர்த்தம்...........!


========================================================================

துரோகிகளிடம் 'கோபம்' இருக்காது

கோபப்படுபவர்களிடம் 'துரோகம்' நிச்சயமாக இருக்காது..  


========================================================================

தன்னை நல்லவராக காட்டிக் கொள்ள அடுத்தவரை கெட்டவராகச் சித்தரிக்கும்

எவரும் நீண்ட நாள் நல்லவர் வேடத்தில் சுற்ற முடியாது

========================================================================
#அழகான வரிகள் பிடித்திருந்தால் பகிரவும்...

10 comments:

  1. அனைத்துமே வாழ்வியல் உண்மைகளை அழகாக சொல்கிறது.

    ஒன்றுக்கொன்று குறை காண இயலாத அற்புதமான வார்த்தைகள்.

    பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரே

      தங்களின் வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மனம் நிறைந்த பாராட்டுதலுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள் சகோ.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் வருகைக்கும் அருமை என பாராட்டுடன் தந்த கருத்துப்பகிர்வுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள் சகோ. தொடர்ந்து என்தளம் வந்து கருத்துக்கள் தருவது கண்டு மிகுந்த மன மகிழ்ச்சியடைகிறேன்.மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. சுருக்கமாக அதே சமயம் பொருள் பொதிந்த வார்த்தைகளைக் கொண்ட ஆழமான வரிகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கள் தந்தமைக்கும் மனம் நிறைந்த பாராட்டுதலுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. வெட்டாதீர்கள் - மழை தருவேன் என்கிறது "மரம்".

    வெட்டுங்கள் - மழை நீரைசேமிப்பேன் என்கிறது "குளம்"''
    அனைத்தும் அருமை இது மிகவும் பிடித்தது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் மனம் நிறைந்த பாராட்டுதலுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      குறிப்பிட்டு கூறி ரசித்தமைக்கு மிக்க நன்றி. என் பதிவுகளை தொடர்ந்து வந்து கருத்திடுவது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. உண்மையில், சந்தோஷமா வாழ பணம் ஒரு பொருட்டே இல்லை வாழறேன்' னு காட்டிக்கொள்ள தான் பணம் தேவைப்படுகிறது// உண்மை உண்மை உண்மை....

    வெட்டுதல் பற்றியதும் அருமை...அனைத்தும் ரொம்ப நன்றாக இருக்கிறது....

    இனி தொடர்கிறோம்..

    எங்கள் தளத்தில் நாங்கள் இருவர் எழுதி வருகிறோம்...நானும் எனது நண்பர் துளசிதரனும்...இப்போது அவர் பணி ஓய்வு பெறுவதால் கொஞ்சம் வேலைப்பளுவில் இருப்பதால் வரவில்லை...அதனால் நான் மட்டும் வந்து கொண்டிருக்கிறேன்....சில நாட்களில் அவரும் கருத்திடுவார்...

    மிக்க நன்றி உங்கள் தளம் எபி வழியாக வருகிறேன் சகோதரி...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகையும் விளக்கமான கருத்துரைகளும் மனதுக்கு மிகவும் மகிழ்வாக உள்ளது. பதிவின் செய்திகளுக்கு கருத்திட்டு பாராட்டியிருப்பதற்கும் மன உவகையுடன் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

      நானும் எ.பியில் வரும் உங்கள் பதிவுகளை மிகவும் ரசித்திருக்கிறேன். ஒன்றிரண்டுக்கு கருத்தும் இட்டிருக்கிறேன்.
      நானும் இனி உங்கள் தளத்திற்கும் வந்து பதிவுகளை
      பார்ககிறேன். நீங்களும் வருவதாக கூறியிருப்பதற்கு என் மனமார்ந்த நன்றிகள். இனி தொடர்வோம்.மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete