மலர்களில் ராஜா
அழகிய ரோஜா
மலர்களில் ராஜா
அழகிய ரோஜா
இளமங்கை வாழ்வில்
தங்க ராஜா ராஜா ராஜா மகராஜா
காதலின் ராணி
கலை தரும் வாணி
காதலின் ராணி
கலை தரும் வாணி
என் இதய வானில்
இன்ப ராணி, ராணி ராணி மகராணி
ஊரினில் உறவை தேடிடும் நினைவு
பருவ தேரினில் ஆடும்
தெய்வத்தின் கனவு
ஊரினில் உறவை தேடிடும் நினைவு
பருவ தேரினில் ஆடும்
தெய்வத்தின் கனவு
ஆசையின் பாசம்
பேசிடும் உரிமை
தன்மானத்தில் விளையும்
உலகினில் பெருமை
காதலின் ராணி
கலை தரும் வாணி
காதலின் ராணி
பூங்கொடி முகத்தில்
புன்னகை வெள்ளம்
அமுத தமிழிசை பாடும்
கவிதைகள் சொல்லும்
தலைமுறை புகழின்
குல நலம் காப்போம்
ஓராயிரம் காலத்து பயிர் வளம் சேர்ப்போம்
மலர்களில் ராஜா
அழகிய ரோஜா
மலர்களில் ராஜா
அழகிய ரோஜா
பாரத வீரர் மார்பினில் இணையும்
பாவையின் மனமே கனிபோல் கனியும்
வேதங்கள் ஓதி வளர்ந்திடும் பேதம்
அதை வென்றிட வேண்டும் தேசிய கீதம்
மலர்களில் ராஜா
அழகிய ரோஜா.
இப்பாடலின் வரிகளை படிக்கும் போதே எங்கோ எப்போதோ கேட்டு ரசித்த நினைவு உங்களுக்கும் வருமென நினைக்கிறேன்.
இநதப்பாடல் இடம் பெற்ற திரைப்படம்.. வள்ளி தெய்வானை இது 1973 ல் வெளிவந்த திரைப்படமாம்.முக்கிய கதாபாத்திரத்தில் ரவிசந்திரன், பிரமிளா நடித்துள்ளனர். இந்தப்படத்திற்கு இசையமைத்தவர் : என். எஸ் தியாகராஜன் பாடியவர்கள்: தனசேகர், மல்லிகா இந்தப்பபாடலை எழுதியவர் : தேன்கட்சி பாரதிசாமி. இந்த பாடலுக்கு ஏற்றபடி ஆடிப்பாடி நடித்திருப்பவர்கள் நடிகர் சசிக்குமார், மற்றும் நடிகை எம் பானுமதி.
எங்கள் வீட்டு மாடியில் இங்கு குடியிருக்கும் ஒருவர் மாடித்தோட்டம் மாதிரி மொட்டைமாடியில் ஒரு பகுதியில் அமைத்திருக்கிறார். அதில் அழகான மலர்கள், காய்கள் எனப் பூத்து காய்த்திருந்தது. எனக்குத்தான் இதைப்பார்த்ததும் புகைப்படங்கள் எடுக்க ஆசை வருமே. அதன்படி அதையெல்லாம் எடுத்ததும் இந்தப்பாடல் (மலர்களில் ராஜா) எப்போதோ சிலோன் வானொலியில் அடிக்கடி கேட்டு ரசித்ததுதான். (கருப்பு வெள்ளை படந்தான்) மனதுக்குள் ஒலித்துக் கொண்டேயிருந்தது. உடனே பாடல், மற்றும் இந்தப் படத்தைப் பற்றிய விபரம் அறிய கூகுளில் முயன்றேன். அங்கு கிடைத்ததை பதிவாகவும் பதிந்திருக்கிறேன். இந்தப்பாடலில் இறுதி வரிகள் நம்தேசம் சம்பந்தபட்டதாக வருகிறது. படம் பார்த்தால்,அந்த வரிகளுக்கு என்ன சம்பந்தம் என்பது புரியுமோ என்னவோ..! எனக்கு இந்த பாடல் காட்சிகள் அன்றி பாடலை முழுதாக கேட்க பிடித்திருந்தது. (ஆனாலும், பாடலை காட்சிகளுடன் கீழே பதிவின் கடைசியில் பகிர்ந்திருக்கிறேன். அனைவரும் கேட்டு ரசிக்கவும்.) அதனால் இங்கு பகிர்கிறேன். நீங்களும் இதை ஏற்கனவே கேட்டிருப்பீர்களோ என்னவோ..! ஒருவேளை நம் ஸ்ரீராம் சகோதரர் கண்டிப்பாக கேட்டு ரசித்ததிருப்பார் என நினைக்(நம்பு)கிறேன்.
இதில் தேசிய கொடிப்படம் மட்டும் கூகுளிலிருந்துதான் (பாடல், அதன் விபரங்களுக்கும் கூகுளுக்கு நன்றி. ) எடுத்தேன் மற்றபடி நான் மொட்டை மாடி தோட்டத்தில் எடுத்த அழகான மலர்களின் (சில படங்கள் என் ரசனைக்கேற்ப ஏற்கனவே என் கைப்பேசியில் எடுத்ததையும் சேர்த்திருக்கிறேன் . ) படங்களுக்குப் பொருத்தமாக இந்தப் பாடல் வரிகளை இணைத்து ஒரு புது முயற்சியாக இந்தப்பதிவு.
மலர்களில் ராஜா
அழகிய ரோஜா

மலர்களில் ராஜா
No comments:
Post a Comment