Monday, March 2, 2020

சண்டைக் கோழிகள்..


இன்றைக்கென்னவோ ஆழ்ந்த தூக்கம் சற்றேனும் பிடிபட்டு வரவேயில்லை. கண்ணிமைகள் சற்று அலுப்பில் அசந்தாலும், "உன் இரவு தூக்கத்திற்கு இன்று விடுப்புதான்.. " என கொக்கரித்தபடி  அந்த  அக்கம்பக்க சச்சரவு சத்தங்கள் ஒன்று கூடி  அமளி செய்தன.

இந்த சண்டைகள் சச்சரவுகள் ஒன்றும் புதிதல்ல.. கடந்த பத்து வருடங்களாக அவ்வப்போது வருபவைதான். சுருங்க கூறினால், கேட்டு கேட்டு அலுத்தே விட்டது. இருந்தாலும், இரவு தூக்கங்களை புரட்டிப் போடுமளவுக்கு இப்போதெல்லாம்  சற்று அளவுக்கதிகமாக  உள்ளது என்ற சந்தேகம் எனக்குள் வந்(லுத்)தது.

"ஏன் இப்படி கொஞ்ச நாளா தினமும்  படுத்துறே.? உன்னையெல்லாம்  இரக்கம் பார்க்காமல் பல்லு பிடுங்கிய பாம்பாக ஆக்கினால்தான் உனக்கு புத்தி வரும்." 

"ஆக்குவே. .. ஆக்குவே.. எங்கே அப்படி ஆக்கு பார்க்கலாம்..... அப்போ உன் நிலைமை எப்படின்னு உனக்கு தெரியுமா? தவிச்ச வாய்க்கு  தண்ணி கூட இல்லாத நிலைமை உனக்கு வந்திடும்.." 

"அப்படியானாலும் பரவாயில்லை. நீ  முந்தி மாதிரி பல்லை இளிச்சிகிட்டு யாரோடையும் பேச முடியாது. அதைப் பார்த்து முதல்லே சந்தோஷபடுறது நான்தான்." 

" இப்படி நாக்கு மேலே பல்லை போட்டு திமிரா  பேசற மாதிரி  பேச உனக்கு எப்படி மனசு வருது.? நாம் முந்தியெல்லாம் அக்கம் பக்கமாய் கூடி  சேர்ந்து பாசத்துடன் ஒற்றுமையா  வாழ்ந்த காலத்தையெல்லாம் மறந்து விட்டாயா?" 

"பல்லை பிடுங்கனும்னு சொன்னவுடன் பாசம் அங்கு பொங்கி வழிகிறதோ ?" என நினைத்த எனக்கு காதை கிழிக்கும் அத்தனை காரசாரமான பேச்சுக்களை கேட்டு கொண்டிருக்கும் அவஸ்தையின் இடையிலும், கடைவாயில் ஒரு  சிறு புன்னகை எட்டிப் பார்த்து மறைந்தது. 

"எல்லாம்  உன்னால்தான்..! தேவையான  நேரங்களில் பல்லை கடித்துக் கொண்டு பேசாமல் இருக்காமல், முந்திரி கொட்டையாய் போய் பேசி  ஏச்சும் பேச்சும் வாங்கி, அப்புறம் அதற்காக பின்பு  பல்லை கடித்து உணர்ச்சிவசப்பட்டு உன் உடம்பை நீயே கெடுத்துக் கொண்டாய்...!  

அப்போதெல்லாம் உன் மேல் உள்ள பாசத்தில் உன்னை தடுக்க வந்த என்னையும் உன் ஆவேசமான வார்த்தைகளால் கடித்து துன்புறுத்தி  என்ன பாடு படுத்தியிருக்கிறாய் ? இப்போ கொஞ்ச நாளா இதே பழக்க தோஷத்தில் என்கிட்டேயே மோதிப் பார்க்கிறே ...! "

" என்னது.. நானா காரணம்? நீதான் மறுபடி மறுபடி கொஞ்ச நாளா என்கிட்டே மோதி வம்பு வளர்க்க பார்க்கிறே... இதோ பாரு....! என் கிட்டேயே,.... என் கிட்டேயே மோதி பாக்கிறியா?  நான் பார்வைக்கு இப்பவும் சுமாராகத்தான் இருக்கேன். ஆனா... "

காரசாரம் மறுபடி காட்டமாக உதயமாக  எனக்குள்  "திருவிளையாடல்" பட வசனங்கள் வந்து போனதில், புன்னகை சற்றே என்னையறியாமல் சத்தமான இளநகையானது கண்டு,  அங்கே சட்டென பேச்சுக்கள் குறைந்து அந்த இருவரும் வாய்க்குள் சத்தம் குறைத்து ஏதோ முணுணுக்கலாயினர். 

நான் நிலை உணர்ந்து என் பல் கொண்டு நாக்கு கடித்து "ஸாரி" என்றதும், மெளனத்தில் தாமதித்த  விவாத மேடை சிறு சலசலப்புடன் மறுபடியும் களைகட்ட ஆரம்பித்தது. 

"பாரு.... தினமும் நம்ப சண்டையாலே அந்த மனுஷன் நிம்மதியாய் சாப்பிட முடியாம, தூங்க முடியாமே அவஸ்தைபடுகிறார் பாரு.....இப்படி அண்டை அசலாரை துன்புறுத்துற மாதிரி குணம் உனக்கு எப்படி வந்தது .? இப்ப உனக்கு திருப்தியா?" 

"அது சரி..! ஏதோ நான் மட்டுந்தான் காரணம் மாதிரி பேசறியே... ! பிறந்ததிலிருந்தே உன்னோடு  பிறந்த மோசம் கொண்ட அந்த ஆசை குணங்கள்தான்  அவரை இந்த பாடு படுத்துகிறது. இதனால் தினமும் இப்படி ஒரு  சண்டை... சே..! 

"ஆசை எனக்கு மட்டுமா? நீயுந்தான்.... ஏன் அவருந்தான்... இந்த ஆசைக்கெல்லாம்" ஆமாம் சாமி" போட்டு ஆரம்பத்திலிருந்தே ஒத்துழைச்சார்.. இதிலே என்னை மட்டுமே குத்தம் சொல்லாதே..! எனக்கு வர்ற கோவத்துக்கு .. உன்னை என்ன பண்ணுவேன்னு தெரியாது..!" 

"உன்னாலே என்ன பண்ண முடியும்..? சின்ன சின்ன  ரணங்களையும், தோண்டித்  துருவி பெரிதாக்கும் வானர புத்திதான் உனக்கும் எப்பவும் இருக்கு...!   நீ என்னை விட வயசுலே  பெருசேன்னு பார்க்கிறேன். இல்லாட்டி எனக்கும் வர்ற  கோவத்துக்கு "உன்னை இழுத்து வச்சு "பளார்" னு ஒர் அறை கொடுக்கலாம்ன்னு" தோணுது." 

" எங்கே கொடு பாக்கலாம்..! ஆனா அதுக்கு முன்னாடி நான் கொடுக்கிற அறையிலே கன்னம் பழுத்துடும்.  தெரிஞ்சுக்கோ...! 

"ஐயோ"! போதும்..! போதும்... ! உங்கள் சண்டை... உயிர் போகாமல் "போகவா" என்கிறது.. " என்றபடி ஏற்கனவே வலியில்  என் வீங்கிய கன்னத்தை பிடித்தபடி எழுந்து அமர்ந்தேன். ஆழ்ந்த உறக்கம் வராமல் போனாலும், குட்டியாய் மயக்கும் தூக்கங்கள் அவ்வப்போது வரப்பார்த்து வலியின் வீச்சுக்கள் வலிமை பெற்றதில்  வராமல் சென்றதில், தலையில் ஆங்காங்கே மழை இல்லா இடி இடித்து மின்னல்களும் ஊடுருவும் வெளிச்சமாக கண்களுக்குள் வெட்டியது. மேலும்   இரவு உறக்கம் முழுமையாக போனதை உணரும் போது மணி சந்தோஷமாக நான்கை காட்டியது. 

இத்தனை நாளாய்  இல்லை.. இல்லை.. இத்தனை வருடங்களாய் அதீத பயத்தினால் அருகிலிருக்கும் "dentist பரந்தாமனை"  😬 காண பயங்கொண்டிருந்த  நான் பகலவன் உதித்ததும் அந்த உண்மையான பரந்தாமனின் அருளால்,  "dentist பரந்தாமனை" 😂  தைரியமாக சென்று கண்டு வர வேண்டுமென முடிவு செய்தேன். ஆனால் "முடிவுகள் என்றும் உன் கையில் இல்லையே..!" என  சச்சரவிட்டவர்கள் மறுபடி சச்சரவிட நெருங்கி வர ஆரம்பிப்பது அரைகுறையான தூக்க கலக்கத்தில் மங்கலாக தெரிந்தது. 

வேறு வழி..! மணி நான்கிலிருந்து ஆறு வரை  அந்த சந்தடிகள் தொடர்ந்தன. 



ஆறுமணிக்கு ஆதவன் உதித்ததும், அன்றைய கடமைகள் அழைக்க" "கதிரவன் மறையும் வரை கொஞ்சம் பொறுத்திருந்துதான் பாரேன்... தானாகவே  குணமாகும்...! இல்லையெனில் பார்க்கலாம்..! என எப்போதும் போல் என் பயங்கள் சொல்லிச் சென்றது. இன்றிரவும் சண்டை கோழிகள் வருமோ என்னவோ..? பார்க்கலாம்...!

எங்கும் / எப்போதும்
எதற்கும் / எதையும் 
படைத்தவன் / படைப்பவன் பரந்தாமந்தானே...! 

படம்.  நன்றி கூகிள்.. 

நன்றி.. பரந்தாமன் அருளினால் இதைப் படிக்கும் அனைவருக்கும். 🙏. 

39 comments:

  1. கோழிகளின் பாஷை அறிந்த தோழி என்று தலைப்புக் கொடுத்து விடலாம்! ஆனால்சிபப்டி சளைக்காமல் பேசும் ஜோடிக்கோழிகள் இருக்கின்றதா? எனக்கு சாமக்கோழி... ஏய்...  கூவுதம்மா..." பாடல் நினைவுக்கு வருகிறது!

    ReplyDelete
    Replies
    1. காலை வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /கோழிகளின் பாஷை அறிந்த தோழி/

      ஹா. ஹா. ஹா. தங்கள் கற்பனையை ரசித்தேன். இப்படி அதன் தோழியாக இருந்து கற்பனை செய்தால்தான் எனக்கும் அந்த நேரத்து வலிகளை மறக்க முடிகிறது.

      /சாமக்கோழி... ஏய்... கூவுதம்மா..."/
      பாடல் நன்றாக உள்ளது. ஆனால் இந்த கோழிகள் ஒவ்வொரு சாமத்திலும் கூவுகிறது. ஹா. ஹா. ஹா.

      வலிகளின் வருத்தத்தை பகிர்வாக்கினால் வரும் ஆறுதல்கள், வலியை குறைக்கும் மருந்தாக இருந்து செயல்படும் என்ற நம்பிக்கையில் வந்த பதிவு. கருத்துகளுக்கு மிக்க நன்றி சகோ.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. தங்கள் கருத்துக்கு என் பதிலில் வலிகளின் இரவு நேரத்தில் "ஒரு கோழித்தூக்கம் கூட போட முடியவில்லை" என்பதையும் சேர்த்துக் கொள்ளவும். அதனால்தான் தலைப்பும் அவ்விதமே அமைந்து விட்டது. பல் வலிகளே இரவில்தான் அதிகமாகும் போலும்.. நன்றி பதிவை உண்டாக்கிய பல் வலிக்கும் சேர்த்து.. ஹா. ஹா. ஹா.
      இப்படி வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பதையும் "எங்கள் ப்ளாக்" வந்த பின்தான் கற்றுகொண்டேன். எனவே நன்றி எ. பிக்கும், உங்களுக்கும், வந்து கருத்திடும் அனைவருக்கும்.

      Delete
  2. பல்வலியா?  நானும் பயந்து பலவருஷங்கள் இருந்து சென்ற வருடம்தான் பல்கடமைகளை முடித்தேன்!  இப்பது மறுபடியும் போகவேண்டிய எல்லாம் வந்துளளது.  பயமில்லை, எனினும் நேரமில்லாததே தாமதம் ஆகிறது. 

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      ஆமாம். பல் வலிதான். வீட்டில் எல்லோரும் மருத்துவரிடம் சென்று வா என நச்சரிக்கிறார்கள். எனக்குதான் பயமாயிற்றே... கீழே விழுந்து கால் வீங்கிய வலியையே ஒரு மாதத்திற்கு மேலாக அயோடக்ஸ் தடவியே குணப்படுத்தினேன். (அது இன்னமும் குணமாக அடம் பிடிப்பது வேறு விஷயம்.) பல் வலிக்கும் பல வருடங்களாக பாட்டி வைத்தியந்தான் பார்த்து வருகிறேன்.

      சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை.. என்ற சொல் வழக்கின் படி (சுக்கையும். சுப்பரமணியனையும் சரணடைகிறேன்.) பூசியவுடன் வலி கேட்கிறது. மறுபடி ஒரு மாதத்தில் உதயமாகும்.

      உங்கள் அனுபவங்க(பல்கடமைகள்) தெரிந்து கொண்டேன். எனக்கு எப்போது பயம் போகப் போகிறதோ தெரியவில்லை.

      தங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. பல்லுக்குக்கு போக பயந்து கிடந்த நான் கடைசியில் துணிந்து சென்றபோது ஹோட்டலில் மெனு கார்டில் இருப்பதை எல்லாம் சாப்பிட்டுப் பார்ப்பதுபோல அவர்கள் விலைப் பட்டியலில் வைத்திருந்த எல்லாவற்றையும் செய்துகொண்டேன்!  தாமதமாகப் போனதால் நேர்ந்த கஷ்டம்.  ஆரம்ப நிலையிலேயே போனால் கம்மியான சிரமங்களுடன் தப்பித்திருக்கலாம்.  கம்மியான காசும்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      பற்களை எடுக்க நிறைய செலவாகும் என அறிந்திருக்கிறேன். பற்களை எடுத்தால் வேறு சில பாதிப்புகள் சிலருக்கு வருமெனவும் கேள்வி பட்டுள்ளேன். நான் டாக்டரிடம் போகாதிருக்க அது ஒரு காரணம்.. எனக்கு ஆங்கில மருந்துக்கள் ஒத்து வராமல் போய் விடும். அது ஒரு காரணம்.. இதையெல்லாம் பார்க்கும் போது ஒரு சமயம் அவ்வப்போது வரும் வலிகளே பரவாயில்லை எனத் தோன்றுகிறது. என்ன செய்யப் போகிறேனோ. .? தெரியவில்லை.. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. உங்கள் பல் பிரச்னை சரியாக பிரார்த்தனைகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களது அன்பான விரைவில் நலமாக வேண்டும் என்ற பிரார்த்தனைகளுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. என்னோட பற்களை எல்லாம் காட்டிச் சிரித்தேன். ரொம்பவே நன்றாக அனுபவித்து எழுதுகிறீர்கள். அதிலும் நகைச்சுவை மட்டுமின்றி அறுசுவைகளும் உங்களுக்கு அநாயாசமாக எழுதும்போது கைகளில் வந்து விடுகிறது. அந்த வகையில் உங்கள் மூளையும், (நம்ம அதிரடி அதிராவின் தமிழில் கிட்னி)கைகளும் ஒருசேர ஒத்துழைக்கின்றன பாருங்க, அதுக்கே நீங்க இறைவனுக்கு நன்றி சொல்லணும். :)))))

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை படித்து ரசித்ததற்கு மிகவும் சந்தோஷமடைகிறேன். இந்த சந்தோஷமே என் வலிகளை சற்று குணமாக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

      தங்கள் (பல்வலி) அனுபவங்களையும் தெரிந்து கொண்டேன். இவை எனக்கு தைரியத்தை கொடுக்கும் என நினைக்கிறேன். வீட்டில் அனைவரிடமும் சொன்னால் "அந்த பொற்காலம் எபபோது" என ஆவலாக கேட்பார்கள். எனக்கு டாக்டரிடம் செல்வதன் ரொம்ப பயம். அதிலும் பல் டாக்டர் நினைத்துப் பார்க்கவே இயலவில்லை.

      தங்கள் கருத்துகளுக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. சின்ன வயசில் இருந்து பயோரியா என்னும் நோயால் மிகுந்த அவதிப்பட்டிருக்கேன். நினைச்சால் பல்வலி, ஈறு வீக்கம் வந்துடும். வாயெல்லாம் புண்களாக வந்து தண்ணீர் கூடக் குடிக்க முடியாமல் போய்விடும். பின்னர் திருமணம் ஆனதும் கொஞ்சம் சரியானது என்றாலும் இந்த விஸ்டம் பற்கள் என்னும் ஞானப் பற்கள் முளைத்தப்போப் பட்ட அவதி இருக்கே! சொல்லி முடியாது. அதன் பின்னர் பல வருடங்கள் பேசாமல் இருந்த பற்கள் மறுபடி மறுபடி தொந்திரவு கொடுக்க எங்க வீட்டில் முதல் முதலாகப் பல்லுக்கு எக்ஸ்ரே எடுத்துக்கொண்ட பெரும்பேற்றையும் பெற்றுக் கடைவாயில் இரண்டு பற்களையும் இழந்தேன். ஆனால் அப்போ மருத்துவர் சொன்ன ஒரு விஷயம் மனதில் பதியவே இனிமேல் பற்களை இழக்கக் கூடாது என்னும் எண்ணம் மனதில் ஆழமாகப் பதிந்து கொள்ள ஈறுகளை நன்றாகப் பராமரிக்கவும் ஆரம்பித்தேன். அதற்கு அம்பத்தூரில் இருந்த ஓர் இளம் பல் மருத்துவர் பெரிதும் உதவினார். அவர் சொன்னபடி இப்போதும் பற்களைப் பராமரித்து வருகிறேன். பொதுவாகப் பற்களுக்கு நாம் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால் பல் மருத்துவர்கள் சொல்வது என்னவெனில் இரண்டு மாசத்துக்கு ஒருதரம் ஈறுகளையும், பற்களையும் மருத்துவரிடம் போய்ச் சுத்தம் செய்து கொண்டால் பற்கூச்சம் கூட நாளடைவில் குறையும் என்பதே. இது என் சொந்த அனுபவத்திலும் சரியாகவே இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்கள் அனுபவங்களை படித்துணர்ந்தேன். பல் பிரச்சனை என்பது மிகவும் கஸ்டந்தான். எனக்கு இப்போது சில வருடங்களாகத்தான் பல் பிரச்சனை தோன்றியுள்ளது. இப்போது பற்கள் முழுதாக விழாமல் பாதியாக சட்டென உடைந்து விடுகின்றன. நானும் கடைவாயில் ஒரிரு பற்களை இழந்து விட்டேன். பல் டாக்டரிடம் செல்ல பல்லை சோதனைகள் செய்யும் பொழுது ரொம்ப வலிகள் வருமோ என பயமாக உள்ளது."இவ்வளவு வலிகளை தாங்கி கொள்ளும் நீ அந்த வலியை தாங்க மாட்டாயா. ?" என வீட்டிலும் குழந்தைகள் அறிவுறுத்துகின்றனர். பார்க்கலாம் எப்போது விடிவு வருமோ தெரியவில்லை.

      தங்கள் அனைத்து கருத்துகளுக்கும் மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. https://www.dinamalar.com/news_detail.asp?id=1934228&Print=1

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      நீங்கள் குறிப்பிட்டுள்ள பகுதிக்கு சென்று விபரம் படித்து அறிந்து கொண்டேன். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. சண்டை கோழிகள்....

    இதே கோழிகள் என் வீட்டிலும் ஒரே அமர்க்களம்....🐓🐔🐓🐔🐓🐔🐓🐔

    அவற்றின் சண்டைகள் பொறுக்காமல் 3 மாதமாக மருத்துவர் வசம்...அவ்வோளோ தான் இன்னும் ஒரு வாரத்தில் முடிந்து விடும் என்னும் கொண்டாட்டத்தில் எங்கள் வீட்டு கோழிகளும் நானும்....😊😊😊

    சிறு வயத்திலேந்தே பல்லில் சில பிரச்சனைகள்....கடந்த பலவருடங்களாக அமைதியாக சென்று ..கடந்த மாதங்களில் பெரும் துன்பம்....

    அப்படா மருத்துவம் பெரும்பாலும் முடிந்து....இனி தொந்தரவு இருக்காது என்னும் நம்பிக்கை😁😁😁😁😁😁..

    ஸ்ரீராம் சார் சொன்னது போல மருத்துவ ரிடம் உடனே சென்று வந்தால் பிரச்சனையை முளையிலையே கிள்ளி எறியலாம் கமலா அக்கா...


    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /இதே கோழிகள் என் வீட்டிலும் ஒரே அமர்க்களம்....🐓🐔🐓🐔🐓🐔🐓🐔/

      ஆகா உங்கள் வீட்டிலுமா? ஆனால் உங்கள் திண்டாட்டங்கள் ஒரு முடிவுக்கு வந்து கொண்டாடும் வகைக்கு வந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. உங்களுக்கும் இந்த சின்ன வயதிலேயே பல் பிரச்சனை வந்து விட்டதே..

      /அப்படா மருத்துவம் பெரும்பாலும் முடிந்து....இனி தொந்தரவு இருக்காது என்னும் நம்பிக்கை😁😁😁😁😁😁../

      தாங்கள் தைரியமாக மருத்துவரை சந்தித்து வெற்றிகரமாக மருத்துவம் பார்த்திருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம். அந்த தைரியந்தான் எனக்கு மைனஸ். அதுதான் ஒவ்வொரு வருடமாக பல வருடங்களை தன்னி விடுகிறது.

      தங்களது அறிவுரைகளுக்கு மிக்க நன்றி சகோதரி. மருத்துவரை சந்திக்க முயற்சி செய்கிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. ஸ்ரீராம்ஜி கொடுத்த பட்டம (தலைப்பு) ஸூப்பர் பதிவை ரசித்தேன் சகோ.

    அதிரா இதைப் படித்தால் பூனையோடு பேசுவதுபோல் பதிவிடுவார்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /ஸ்ரீராம்ஜி கொடுத்த பட்டம (தலைப்பு) ஸூப்பர் பதிவை ரசித்தேன் சகோ./

      தாங்கள் பதிவையும், சகோதரர் ஸ்ரீராம் அவர்கள் கொடுத்த தலைப்பையும் ரசித்தமைக்கு மிக்க நன்றிகள் சகோ.

      /அதிரா இதைப் படித்தால் பூனையோடு பேசுவதுபோல் பதிவிடுவார்./

      நான் கோழியென்றால், அவர் பூனையா? அவரும் எழுதட்டும். நாம் அனைவரும் ரசித்துப் படிக்கலாம். தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. ஓஓ இது இப்போதான் என் கண்ணில் பட்டுது... ஹா ஹா ஹா

      Delete
    3. வாங்க அதிரா சகோதரி

      ஓ.. நீங்கள் இதை இப்பத்தான் பார்க்கிறீர்களா? நான் உங்கள் அடுத்த பதிவாக இங்குள்ள சப்ஜெக்டை வைத்துத்தான் எதிர்பார்க்கலாம் என்றிருந்தேன். "பூனையாருடன் சந்திப்பு" என்ற தலைப்பில் எழுத ஆரம்பித்து விடுங்கள்.. (அவ்வண்ணமே கோறுகிறார் சகோதரர் கில்லர்ஜி அவர்களும்.) ஹா.ஹா.ஹா.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. நல்ல பதிவு. சிறப்பு. தொடருங்கள், தொடர்வோம்...!

    தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
    இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக ஒன்பது வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது வலைத் தளத்தில் இறுதியாக வெளியான ஐந்து பதிவுகள் ஐந்தும் ஐந்தும் – 03.03.2020 எனும் தலைப்பில் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      என் பதிவும் தங்கள் வலை ஓலை தளத்தில் இணைத்திருப்பதற்கு மிக்க நன்றிகள். மற்றைய தகவல்களும் அறிந்து கொண்டேன். என்னைப்பற்றி நானும் விரைவில் எழுதி அனுப்புகிறேன்.

      தங்களது வருகையும் கருத்துக்களும் மகிழ்ச்சி அளிக்கிறது. மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. வித்தியாசமான சிந்தனை...

    அனைத்தும் நலமாக அமையும்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      வித்தியாசமான சிந்தனை என கூறி பதிவை ரசித்தமைக்கும், அனைத்தும் நலமாக அமையட்டும் என்ற பிரார்த்தனைகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. பல்வலி வந்தால் தூங்கவிடாது.
    'இடுக்கண் வந்தால் நகுக" பல்வலியை நல்ல நகைச்சுவையாக பதிவு செய்து விட்டீர்கள்.
    அருமை.
    டாகடரிடம் சீக்கீரம் போனால் பல் தப்பிக்கும்.
    உடல் நலத்தில் கவனமாய் இருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /இடுக்கண் வந்தால் நகுக" பல்வலியை நல்ல நகைச்சுவையாக பதிவு செய்து விட்டீர்கள்./

      ஆம் சகோதரி.. பல் வலி தூங்கவே விடாது. நிறைய தடவைகள் அவஸ்த்தை பட்டு இரவு முழுவதும் விழித்தபடி இருந்திருக்கிறேன். அப்போது இந்த மாதிரி நகைச்சுவையாக ஏதாவது யோசித்து எழுதினால் வலியின் போக்கு மாறுபடுகிறது. அதனால் இப்படியும் ஒரு பதிவு.

      ஒரு பல்லாக இருந்தால் தப்பிக்க வைக்கலாம்.. ஹா. ஹா.

      எனக்கான தங்களது அன்பான அறிவுரைகளுக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  13. ஆஆஆ ஜண்டையோ மீ தான் லாஸ்ட்டூஊஊ:)... நைட்டுக்கு வாறேன் கமலாக்கா...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      வாங்க... வாங்க.. நீங்களும் சாமத்தில் வந்து அதுக சண்டை போடறதை வந்து பார்க்கப் போறீங்களான்னு நான் கேக்கறதுக்குள்ளே இரண்டாம் சாமமே
      வந்துடுத்து....ஹா. ஹா. ஹா. நீங்களும் வந்து பதிவை பாத்துட்டு போயிட்டீங்க....
      லாஸ்ட்தான் என்னைப் பொறுத்த வரை என்னைக்குமே பர்ஸ்ட்.. கவலையேபடாதீங்க. நீங்க எப்ப உங்களுக்கு சௌகரியமா இருக்கும் போது வந்து தந்த கருத்துக்கள் எனக்கு மிக மகிழ்ச்சியை கொடுக்குறதாலே அதுதான் பர்ஸ்ட்... மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. அப்படி இல்லை கமலாக்கா இப்போ திங்களிலிருந்து புதனும் வேர்க் பண்ணுகிறேன், அதனால நாட்டில என்ன நடக்குதென்றே தெரியாமல் போயிடுது, அதிலும் இந்த தடவை குளிர் அதிகம் எனக்கு தலையிடி, கண் திறக்க முடியாமல் ஆகிட்டுது 2, 3 நாட்கள், அதனால ஆர் குறை நினைச்சாலும் பறவாயில்லை என, ஒழுங்கா எங்கும் போகாமல் விட்டு விட்டேன்... படு பிசியாக போகுது வாழ்க்கை.

      Delete
    3. வணக்கம் அதிரா சகோதரி

      தங்கள் மீள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.

      நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் என எனக்கு தெரியாது..நீங்கள் பள்ளி ஆசிரியையா? ஒரு ஊகத்தில் கேட்கிறேன். தெரியாமல் கேட்டிருப்பதால் சிரிக்காதீர்கள்...

      அங்கெல்லாம் இப்போது குளிர் அதிகந்தானே...அதிலும் இந்த தடவை மிக அதிகமோ? அவ்வப்போது பனிமழை பெய்கிறது எனவும் கேள்விப்பட்டேன். அதனால்தான் உங்களுக்கு தலைவலி வருகிறதா?

      தலைவலிக்கு என்ன மருந்து உபயோகிக்கிறீர்கள். நான் ஓயாது தலைவலித்தால், இஞ்சி சாறு எடுத்து நெற்றியில் பூசிக் கொள்வேன். இல்லையெனில், சுக்கு அரைத்து பூசிக் கொள்வேன். இவை இரண்டிற்கும் தலைவலி சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விடும்.

      படு பிஸியாக வாழ்க்கை நகர்வதும் ஒரு சுவாரஸ்யமானதுதான். தங்கள் அன்பான கருத்துகளுக்கு மிக்க நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    4. யேஸ் கமலாக்கா:)... குட்டீசுக்கெல்லாம் நல்ல அடி கொடுக்கிறேன் ஸ்கூலில்:) ஹா ஹா ஹா

      Delete
    5. வாங்க அதிரா சகோதரி

      நான் கேட்டவுடன் வந்து பதில் சொன்னதற்கு மகிழ்ச்சி. ஓஓஓ.. குட்டிஸெல்லாம் ஜாலியா அடி வாங்குறாங்க உங்ககிட்டே.. ஆனால் அது அவர்களுக்கு கண்டிப்பாக செல்ல அடிகள்தான்.. இல்லையா? ஹா.ஹா.ஹா.

      Delete
  14. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர் படத்தையும் தலைப்பையும் பார்த்து, என்னமோ ஏதோ நினைச்சிட்டேன்ன்ன்ன்...
    சம்பாசனைகள் அருமை.
    அதுசரி டென்ரிஸ்ட் இடம் போனீங்களோ? பல்லைப் பிடிங்கிட்டாரோ?:) ஹா ஹா இதுவரை கடவுள் அருளால் எனக்கு எந்த பல் நோயும் இல்லை... பில்லிங் மட்டும் செய்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      சண்டைகள் என்றவுடன் என்னவோ ஏதோன்னு ஓடி வந்து பார்த்து ஆடிப் (வெறும் பல்களின் ஆடல்தானா இது என்று) போயிட்டீங்களா? ஹா. ஹா. ஹா.

      நான் டாக்டரிடம் போகவில்லை. எங்கே பல் பிடுங்கிடுவாரோ என்ற பயத்தினால் போகவில்லை.

      /இதுவரை கடவுள் அருளால் எனக்கு எந்த பல் நோயும் இல்லை... பில்லிங் மட்டும் செய்திருக்கிறேன்./

      பில்லிங் என்றால்? ரொம்ப சந்தோஷம். இன்னும் நூறாண்டுகள் இந்த கடவுள் அருள் தங்களுக்கு நீடித்திருக்க பிரார்த்தித்துக் கொள்கிறேன். அதே கடவுள் எனக்கும் அவ்வப்போது வரும் இந்த வலிகளைப் போக்கி பல் திடத்தை இன்னும் பல வருடங்கள் கொடுத்தருள வேண்டிக் கொள்கிறேன். உங்கள் கருத்துக்கள் கண்டு மகிழ்ச்சியுடன் நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. பல்லில் அடைப்பது.. என்னில ஒரு குணம், கல்லு, மண் போன்றவற்றை போட்டு அரைப்பேன் அதனால பல்லில ஓட்டை வந்திருக்குது ஹா ஹா ஹா.. நல்ல ஹார்ட் ஆன பயறு, கடலை எல்லாம் வறுத்து அல்லது ரோஸ்ட் பண்ணிச் சாப்பிடுவேன்..

      Delete
    3. வணக்கம் அதிரா சகோதரி

      தாங்கள் மீள் வருகை தந்து பதிலளித்திருப்பது மிகவும் சந்தோஷம் தருகிறது.

      பல்லில் சிமெண்ட் மாதிரி பூசி அடைப்பதா..? ஹா.ஹா.ஹா. நானும் சிறுவயதில் ஏதாவதை அரைத்துக் கொண்டேதான் இருப்பேன். ஆனால் மணமான பின் அந்த சந்தர்ப்பங்கள் குறைந்தது. இப்போது என் பற்கள் மிகவும் பலமிழந்து விட்டதை நன்கு உணர்கிறேன். அதுதான் என் பல் பிரச்சனையே...! ஆனாலும் டாக்டரிடம் போக ஒரு பயம் தடுக்கிறது. பார்க்கலாம் நல்லபடியாக பற்கள் எல்லாம் தானே விழுந்து விட்டால் கூட பொக்கை வாய் கிய்வியாக வாழ்நாளை கழித்து விடலாம் எனத் தோன்றுகிறது. ஹா.ஹா.ஹா. தங்கள் வருகை, கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  15. சண்டைக் கோழிகளுடன்......ரசனை.
    மீண்டும் சண்டைக் கோழிகள் தலைதூக்காமல் டொக்டரிடம் செல்வதே மேல்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ரசனையுடன் சண்டைக் கோழிகள் பதிவை படித்து கருத்துக்கள் இட்டிருப்பதற்கு என் மன மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

      மேலும் தங்கள் அன்பான ஆலோசனைகளுக்கு மிக்க நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete