Thursday, December 5, 2019

நான் ரசித்த அழகிய காட்சிகள்.


அழகானர்ள்.

கதிரவனால் களையான வானம்.
 என் கைபேசியில் சிறைப்பட்டது போதாதென்று "வலை" க்குள் வேறு  மேகப் பொதிகளை  தன்னுடன் துணைக்கழைத்துக் கொண்டு சிறைப்பட்ட அழகான வானம்.

"இதற்கு மேல் இடமில்லை. இனியும் பிடி"வாதம்"பிடித்தால் உனக்குத்தான் சேதம்...!" என்று எச்சரிக்கிறதோ இந்த பாத்திரம்.


நீர் ததும்ப ததும்ப இருந்த இந்த தூக்கு வாளியைப் பார்த்ததும், தண்ணீரை லாரியில் கொண்டு வந்து விடும் போது காசு கொடுத்து வாங்கி பிடித்து சேமித்து வைத்துக் கொண்டு பயன்படுத்திய தண்ணீர் கஸ்டங்கள் நினைவுக்கு வரவே அது எச்சரிப்பது போல் ஒரு புகைப்படம்.


பொதுவாக மூன்றாம் பிறை பார்ப்பது நல்லதென்று கூறுவர். (அரிதானதும் கூட..  ஆனால் நாலாம் பிறை நம் கண்களுக்கு பளிச்சென்று தெரியும். (நாலாம் பிறையை பார்த்தால் நாய் படும் பாடு என்பது ஒரு பழமொழி..) இந்த தடவை கார்த்திகை மூன்றாம் பிறையன்று கொஞ்சம் மேகங்கள் கலைந்து, கலைந்து இடம் விலகி "பிறை என்னை சீக்கிரம் படம் எடுத்துக் கொள்" என்றது.

அதுவும் இந்த கார்த்திகை மாதம்  சகோதரி அதிரா அவர்கள்"கார்த்திகைப் பிறை" என்ற பட்டத்தை சுமந்து கொண்டு "கார்த்திகை பிறையை" அடிக்கடி நினைவூட்டவே, அவசரமாக எடுத்த படங்கள் இது.. அன்று அந்த நேரத்தில் இந்த "பிறை" படங்களை நான் வளைத்து வளைத்து எடுக்கும் போது சகோதரி அதிரா அவர்களுக்கு கண்டிப்பாக  "பொறை" ஏறியிருக்கும்..( உண்மைதானே சகோதரி..!)

இதை எழுதி வைத்து மூன்று தினங்களுக்கு மேல் ஆகி விட்டது. ஏதோ நேரமின்மைகள் காரணமாக வெளியிடவில்லை. ஆனால், அதற்குள் நான் நினைத்தது போல், அழகிய பிறையாக இருந்தவர், அன்னக்கிளியாக மாறி விட்டார். ஹா. ஹா. ஹா.
"இது ஒரு பொன் மாலைப்பொழுது.."
வானமகள் நாணுகிறாள்..
வேறு உடை பூணுகிறாள்..
வானம் எனக்கொரு போதி மரம்..
நாளும் எனக்கது சேதி தரும்."  என்ற அருமையான பாடல் என் மனதிற்குள் ஓடுகிறது.

ஒரு மாறுதலுக்காக நான் பகிர்ந்த எல்லாவற்றையும் நீங்களும் ரசிப்பீர்கள் என நம்புகிறேன்.
ரசித்த/ரசிக்கும் உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.... 🙏....


49 comments:

 1. அனைத்தும் அருமை. மேகக்கூட்டங்களும் வலைக்குள் சிறைப்பட்ட மேகங்களும் அழகாக ரசனையுடன் எடுத்திருக்கிறீர்கள். மூன்றாம்பிறையை இந்தத் தரம் நாங்களும் பார்த்தோம். கொஞ்சம் வெளியே போய்விட்டு வீடு திரும்புகையில் கூடவே வந்து கொண்டிருந்தது. ஆனால் நான் படமெல்லாம் எடுக்கவில்லை.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தாங்கள் முதலில் வந்து தந்த கருத்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

   மூன்றாம் பிறை இந்த தடவை எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது போலும். அதன் பின்புதான் இங்கும் கொஞ்சம் மழை. வானம் எப்போதும் இருண்டு கிடந்தது. வருகைக்கும், பாராட்டிற்கும் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 2. தூக்கில் தண்ணீர் பிடித்திருப்பதைப் பார்த்ததும் கல்யாணத்துக்கு முன்னால் அம்மா வீட்டில் தண்ணீர் பிடித்து வைத்துக்கொண்ட நாட்கள் நினைவில் வந்தன. ஆனால் அவையும் எப்போவோ தான். மழைநாட்களில் மழைத்தண்ணீரையும் சேமித்து வைத்துக் குளித்துத் துவைத்துச் சமைத்துச் சாப்பிட்டது உண்டு. வெள்ளை வெளேர் எனப் பொலபொலவென வரும் சாதம். தண்ணீர் குறிப்பிட்ட நேரம் தான் வரும் என்பதால் பிடித்து வைத்துக்கொள்வார்கள். ஆனால் அதே மதுரையில் இருந்து சென்னை வந்து ஆழ்வார்ப்பேட்டையில் இருக்கும்போது நடு ராத்திரி எல்லாம் தண்ணீர் பிடிப்பார்களாம். சொல்லுவாங்க. என் வரையில் அந்தக் கஷ்டம் பட்டதே இல்லை கடவுள் அனுகிரஹத்தால்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   அம்மா வீட்டில் இருக்கும் போது தண்ணீர் பிடித்து வைத்து உபயோகிக்கும் பழக்கம் இருந்தது. அருகிலேயே வாய்கால் ஓடியது. குளியல் துவையல் என பல வேலைகள் முடிந்து விடும். பிற உபயோகங்களுக்கு வீட்டிற்கு அருகே பொதுக்கிணறு வேறு இருந்தது. ஆகவே பிடித்து வைத்துத்தான் உபயோகம். ஆனால் தண்ணீர் கஸ்டம் என எப்போதாவது கடும் கோடையை தவிர அவ்வளவாக வந்ததில்லை. அதன் பின் என் திருமணத்திற்கு பின் சென்னை, மதுரையில் தண்ணீர் பிரச்சனை கோடையில் அவ்வப்போது தலை காட்டியபடிதான் இருந்தது. இங்கு வந்த பின்தான் பரவாயில்லை. ஆனால் இப்போது இருக்கும் அப்பார்ட்மெண்டிலேயே போன கோடைக்கு ஒருதடவை தான் தண்ணீர் டேங்கில் ஏற்றுவோம். எனவே சிக்கனம், மற்றும் தண்ணீர் பிடித்து வைத்துக் கொண்டு உபயோகிக்கும்படி அறிக்கை வந்தது. அப்போது எடுத்த அந்த படந்தான் அது..

   தாங்கள் சொல்வது போல் அம்மா வீட்டில் மழை நீரை வைத்து உணவு செய்வார்கள். சாதம் நன்றாக வெள்ளை வெளேர் என இருக்கும். துணிகள் துவைத்தால் சாதாரண சோப்பிற்கே பளிச்சென்று மின்னும். பாத்திரங்கள் தேய்க்கும் போதும் அப்படித்தான்.. நன்றாக பளபளவென இருக்கும். இயற்கைக்கு மிஞ்சிய சக்தி ஏது? அந்த மழை நீரின் தன்மை அது. எல்லாமே ஒரு அனுபவம்தான். தங்கள் அனுபவங்களையும், பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 3. முதல் படங்களில் உள்ள செம்பருத்திப்பூக்களில் மஞ்சள் தவிர்த்து மற்ற நிறங்களில் எங்க வீட்டிலும் பூத்திருக்கின்றன. போகன்வில்லாவும் வாசல் சுற்றுச்சுவர்ப் பக்கம் போட்டிருந்தோம், வெள்ளை, ஊதா, பிங்க், ஆரஞ்சுக்கலர்களில் வந்திருந்தன. படங்கள் உண்டு. தேடிப் பார்க்கணும். தோட்டமும், துரவுமாய் என்பார்கள். அது போல் இருந்தாச்சு. கிளி கொஞ்சும் வீடு என்றும் சொல்வார்கள். உண்மையிலேயே மாமரங்களுக்கும், வேப்பமரத்துக்கும் கிளிகள் கொத்துக்கொத்தாய் வரும்! அணில்கள் துள்ளி விளையாடும். எல்லாம் கனவாய்ப் போயாச்சு! :)))) இங்கேயும் தோட்டம் இருந்தாலும் இப்போக் குளிருக்குப் பறவைகள் அதிகமாய் வரதில்லை.

  ReplyDelete
  Replies
  1. /எங்க வீட்டிலும் பூத்திருக்கின்றன. //

   இது எந்த வீடு? அம்பத்தூர் வீடு என்று சொல்லி, தற்போது அந்த வீட்டை வாங்கிக் குடியிருப்பவர்களின் வயிற்றில் புளியைக் கரைக்காதீர்கள். ஹா ஹா

   Delete
  2. அங்கே இப்போது யாரும் குடி இருக்கவில்லை. கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

   Delete
  3. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   இவையெல்லாம் எங்கள் வீட்டு வாசலில் பூத்திருந்த செம்பருத்தி பூக்கள். எல்லா கலரிலும் இருந்ததால் எல்லவற்றையும் புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.

   தங்கள வீட்டிலும் நிறைய செம்பருத்தி பூக்கள், மரங்கள், மரங்களை தேடி வரும் பறவைகள், அணில்கள் என பசுமை பொங்க இருந்தது என மனதின் கற்பனைக்கே மகிழ்வாக இருக்கும் போது,கண்ணால் பார்த்து அனுபவித்த தங்களுக்கு எப்படி இருந்திருக்கும் என என்னால் உணர முடிகிறது.

   எங்கள் அம்மா வீட்டில் நான் இந்த அனுபவத்தை உணர்ந்துள்ளேன். வேப்பமரங்களும். தென்னை,பனை முருங்கை மங்களுமாக பசுமை பொங்க தோட்டமும், துறவுமாக இருந்தோம். அந்த நாட்கள் நம் கற்பனையில்தான் இப்போதெல்லாம் உலா வருகிறது.
   நகர வாழ்க்கையில் இதையெல்லாம் தொலைத்து விட்டோம் எனத்தான் தோன்றுகிறது. தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கும் என் மனம் நிறைந்த மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

   ஏதோ கோணாமாணாவென்று நான் எடுத்த படங்களுக்கு நீங்கள் அனைவரும் வந்து கருத்துக்கள் தந்து ஊக்கமளித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்

   Delete
 4. வண்ணமலர்களின் படங்கள் ரசிக்க வைத்தன.  ஆனால் அந்த மலர்கள் தனியாக இருக்கின்றன.   சில வரிகளை அதன் துணைக்குச் சேர்த்திருக்கலாம்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   வண்ணமலர்களின் படங்களை ரசித்தமைக்கு மகிழ்ச்சி.

   /அந்த மலர்கள் தனியாக இருக்கின்றன. சில வரிகளை அதன் துணைக்குச் சேர்த்திருக்கலாம்!/

   உண்மைதான்! தனியே இருக்கும் மலர்களுக்கு துணை சேர்க்கலாம் என நினைத்தேன். மலர்களும் அதை ஆசையாக வலியுறுத்தின. ஆனால் பதிவின் நீளத்தை மற்ற படங்கள் ஆட்சேபித்து கூக்குரலிட வேறுவழியின்றி, மலர்களோடு நானும் மெளனமாகிப் போனேன். ஹா. ஹா. ஹா.

   தங்கள் அர்மையான கருத்துக்கு என் பணிவான நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 5. மேகங்களின் படங்கள் எப்போதுமே ரசனைக்குரியவை. அவரவர் மனோபாவத்திற்கேற்ப காட்சிகளை மனதில் உண்டாக்கும். நானும் அதிகாலைச் சூரியனை அடிக்கடி படம்பிடித்து வைத்துக் கொள்வேன்.  அந்த மன உந்துதலைத் தவிர்க்க முடியாது!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   /மேகங்களின் படங்கள் எப்போதுமே ரசனைக்குரியவை./

   உண்மைதான். விதவிதமான உருவங்களை பார்க்க முடியும். பார்த்துக் கொண்டிருக்கையிலேயே மற்றொரு பிம்பம் வந்து ரசனையை உண்டாக்கிச் செல்லும். என்னிடமும் அதிகாலைப் சூரியன் படங்கள் உள்ளன. ஏதோ ஆர்வம்.. இதையெல்லாம் எடுக்கும் சமயங்களில் நான் என்னவோ புகைப்பட கலைஞர் என்ற மாதிரி எண்ணங்கள் வருவதை தவிர்க்க இயலவில்லை.

   நல்லதொரு கருத்துக்கள் கூறி தாங்கள் தந்த உறசாகத்திற்கு மிகவும் நன்றி சகோ.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 6. தண்ணீர்ப் பாத்திரம் குறித்து நீங்கள் சொல்லி இருக்கும் பழைய நினைவுகள் எனக்கும் உண்டு என்று சொல்லிக்கொள்ள முடியாது என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்!   ஹா...  ஹா..ஹா...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   /தண்ணீர்ப் பாத்திரம் குறித்து நீங்கள் சொல்லி இருக்கும் பழைய நினைவுகள் எனக்கும் உண்டு என்று சொல்லிக்கொள்ள முடியாது என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்! ஹா... ஹா..ஹா.../

   கொடுத்து வைத்தவர்தான் தாங்கள்.."நீரின்றி அமையாது இவ்வுலகு. ஆனால் நீரின்றி அலையாதிருக்க அமைவதும்" ஒரு வித கொடுப்பினை தான்.. ஹா. ஹா. ஹா. நீங்கள் சென்னையில் வசிப்பது தண்ணீர் பிரச்சனை இல்லாத இடம் போலிருக்கிறது. நாங்கள் சென்னையிலும் சரி, மதுரையிலும் சரி, பல சமயங்களில் தண்ணீர் தட்டுப்பாடுகளை அனுபவித்து வந்துள்ளோம். அதன் நினைவுகள் நீங்காத சுவடுகளாய் மனதுள் இருக்கின்றன. இப்போதும் நீரை அதிகமாக செலவழிக்கும் போது வீட்டிலுள்ளவர்களை கவனமாக இருக்கச் சொல்வேன்.தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
  2. //தண்ணீர்ப் பாத்திரம் குறித்து நீங்கள் சொல்லி இருக்கும் பழைய நினைவுகள் எனக்கும் உண்டு என்று சொல்லிக்கொள்ள முடியாது என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்!//

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..

   Delete
 7. மூன்றாம் பிறையைப் படம் பிடித்தேன், படம் பிடித்தேன் என்கிறீர்களே என்று தேடிப்பார்த்து.....    ஆ...  அதோ மூன்றாவது படத்தில் கொஞ்சம் தெரிகிறது..  ஏற்கெனவே சிலமுறை சொல்லி இருக்கும் என் பழைய நினைவு ஒன்றைச் சொல்கிறேன்.  பள்ளிக்காலத்தில் எனக்கு புகழேந்தி என்று ஒரு நண்பன் இருந்தான்.  அவன் நோட்டில் அவன் எழுதியதாய் இரண்டு வரிகளைக்காட்டினான். அது அவன் எழுதியதாயென்று எனக்குத் தெரியாது. (அப்போது நாங்கள் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தோம்!)  "பிடியிழந்த அரிவாள் போல பிறை நிலவு தோன்றுதம்மா"   என்பதே அந்த வரிகள்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..

   மூன்றாம் பிறை முதல் படத்தில் கொஞ்சம் விரிவுபடுத்தி பார்த்தால் நன்றாக தெரிகிறதே என்ற நம்பிக்கையில்தான் முதல் படமாக பகிர்ந்தேன். தெரியவில்லையா? ஹா. ஹா. ஹா.

   தங்கள் நண்பர் எழுதிய கவிதை நன்றாக இருந்தது. பழைய நினைவுகளை என் பதிவு தங்களுக்கு தந்திருக்கிறது என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி. ஆனால் நான் எடுத்த முதல் படத்திலும் ஒரு வேளை "பிடியை இழந்ததால் அரிவாள்" கண்ணுக்குத் தெரியாமல் கீழேயே விழுந்து விட்டதோ எனவும் நினைக்கிறேன். ஹா.ஹா.ஹா.

   தங்கள் அன்பான வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

   பாக்கி கருத்துக்களுக்கும் கொஞ்சம் நிதானமாக பதிலளிக்கிறேன் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
  2. //"பிடியிழந்த அரிவாள் போல பிறை நிலவு தோன்றுதம்மா"//

   சூப்பர்.. இப்பூடி எல்லாம் எழுத ஸ்ரீராமுக்கு வருகுதில்லையே:)) ஹா ஹா ஹா ஹையோ மீ ஊரில் இல்லை:))

   Delete
 8. ஆகா... மிகவும் ரசித்தேன்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   படங்களுடன் இருந்த பதிவை மிகவும் ரசித்து பாராட்டியிருபபதற்கு மகிழ்ச்சி அடைந்தேன். தங்களின் அன்பான கருத்துக்கள்தான் என் எழுத்துக்கும், பதிவுகளுக்கும் பலம். என்னுடைய பதிவுகளுக்கு தொடர்ந்து வந்து கருத்துக்கள் அளித்து ஊக்கம் தருவதற்கு சந்தோஷத்துடன் கூடிய, மிகுந்த நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 9. மூன்றாம் பிறையை நாலாம் முறையாகப் பார்த்தேன். ஒன்றும் பிரச்சனை வராதே...

  நீங்கள் இருப்பது பெங்களூர் புறநகர் பகுதியா? வானளாவிய அடுக்கு மாடிக் குடியிருப்புகளைக் காணோமே

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   /மூன்றாம் பிறையை நாலாம் முறையாகப் பார்த்தேன். ஒன்றும் பிரச்சனை வராதே.../

   ஹா. ஹா. ஹா. வராது என்றுதான் நினைக்கிறேன். இருப்பினும் வர்ணம் மூன்றாம் பிறையிடம் (அது பார்வைக்கு நன்றாக தெரிந்தால்) நான்கு முறை கேட்டு உறுதிப்படுத்திக் கொண்ட பின் சொல்கிறேன். ஹா. ஹா. ஹா.

   நாங்கள் இருப்பது புறநகர் என்பதால்தான் இயற்கை இன்னமும் சற்று மாறாமல் உள்ளது. எங்கள் அப்பார்ட்மெண்ட் வாசலில் வளரும் பூக்கள்தான் இவைகள். வானளாவிய அடுக்கு மாடி குடியிருப்புகள் இங்கும் ஆங்காங்கே உருவாகி கொண்டுதான் வருகிறது.

   தங்கள் அன்பான கருத்துக்களுக்கு என் பணிவான நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
  2. இருப்பினும் வரும் மூன்றாம் பிறையிடம் என்று படிக்கவும். தட்டச்சுப்பிழை வந்து விட்டது.

   Delete
  3. //மூன்றாம் பிறையை நாலாம் முறையாகப் பார்த்தேன்//

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) 3ம் பிறை என நினைச்சு 4ம் பிறையைப் பார்த்திட்டேன் என ப்படிச்சு:) அவசரப்பட்டு சந்தோசமாகிக் குதிச்சிட்டேன்:) பிக்கோஸ் 4 ம் பிறை நாய் அலைல்லசல் என்பதால:)).. சே..சே.. இதுக்குத்தான் அவசரப்படக்கூடாதென அம்மம்மா சொல்லுவா:).

   Delete
  4. அதிராவுக்குத்தான் என்மேல் எவ்வளவு அன்பு.... காத்திருக்கிறேன் அதிராவின் அடுத்த இடுகைக்கு.... ஹா ஹா

   Delete
 10. செம்பருத்தி வித வித நிறங்களில் அழகான படங்கள். மற்ற படங்களும் நன்றாகத்தான் இருந்தன.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   செம்பருத்தி மலர்களை ரசித்து நல்லதொரு கருத்துக்கள் தந்தமை கண்டு மனம் மகிழ்கிறேன்.எனக்கு பூக்கள், மரங்கள், மற்றும் இயற்கை தந்த வனப்புகளை கண்டவுடன் படமெடுத்து கொள்ள ஆசை வந்து விடும், மற்றபடி அது அதிர்வுகள் இல்லாது அழகாக அமைந்துள்ளதா என என் குழந்தைகள் விமர்சிப்பார்கள்.இந்த படங்கள் கூட ஒரு சில அப்படித்தான். அதையும் அழகாக உள்ளதென கூறிய தங்கள் பெருந்தன்மைக்கு தலை வணங்குகிறேன். தங்கள் கருத்துக்கு மன மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 11. செம்பருத்தி பூக்கள் அழகு.கதிரவனால் களையான வானமும் அழகு.

  மேகப் பொதிகளை தன்னுடன் துணைக்கழைத்துக் கொண்டு சிறைப்பட்ட அழகான வானம் அழகு.
  நீலவானம், கருமேகம் சூழ்ந்த வானம், மூன்றாம் பிறை அழகாய் காட்சி அளிக்கும் வானம் எல்லாம் அழகு.

  தண்ணீர் பாத்திரம் சொல்வதும் அழகு.
  அழகு அழகு ! பாடல் நினைவுக்கு வருது.

  பூக்கள் நான் தலை அசைத்தால் அழகு என்றும், சூரியன் நான் வந்தால் வானம் அழகு என்றும், மூன்றாம் பிறை என்னைப்பார்,என் அழகை பார் என்னால் உனக்கு கிடைக்கும் நல்லபலனைப் பார் என்கிறதோ!

  நீங்கள் ரசித்த காட்சியை நானும் ரசித்தேன் கமலா.


  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   அத்தனைப் படங்களையும் கண்டு ரசித்து அழகு என தாங்கள் பாராட்டியமை கண்டு என் மனம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறது சகோதரி.

   /தண்ணீர் பாத்திரம் சொல்வதும் அழகு.
   அழகு அழகு ! பாடல் நினைவுக்கு வருது. /

   ஹா. ஹா. ஹா. தங்களுக்கும் அழகான அந்தப் பாடல் நினைவுக்கு வந்து விட்டதா? அந்த பாடலும் நன்றாகத்தான் இருக்கும். பாடலை அழகாய் நினைவு கூர்ந்து அத்தனையும் அழகாக இருப்பதாக சொன்னதற்கு மிகவும் சந்தோஷம்.

   /பூக்கள் நான் தலை அசைத்தால் அழகு என்றும், சூரியன் நான் வந்தால் வானம் அழகு என்றும், மூன்றாம் பிறை என்னைப்பார்,என் அழகை பார் என்னால் உனக்கு கிடைக்கும் நல்லபலனைப் பார் என்கிறதோ! /

   பதிவுக்கு நான் வெறும் படங்களாக பதிந்திருக்கிறேன் என்றால், தாங்கள் அதற்கு விளக்கமாக வர்ணித்து எழுதி அமர்க்களப்படுத்தி விட்டீர்கள். மிகவும் நன்றி சகோதரி.

   நான் ரசித்தவற்றை நீங்களும் ரசித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. தங்களுக்கு இந்த இயற்கையெல்லாம் மிகவும் பிடிக்கும் என்று எனக்குத் தெரியும்.. அதுபடியே என் பதிவுக்கு தங்கள் வருகையும், வந்து ரசித்து தந்த கருத்துக்களும் என்னை மேலும் உற்சாகப்படுத்துகிறது. மிக்க நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 12. ஆஆஆஆ யூரியன் ஜந்திரன் எல்லோரும் கமலாக்காவின் கைக்குள்:).. வருகிறேன்ன் யோகாவுக்குப் போயிட்டு இல்லை எனில் ரீச்சர் தேடுவா என்னை:)...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அதிரா சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   /ஆஆஆஆ யூரியன் ஜந்திரன் எல்லோரும் கமலாக்காவின் கைக்குள்:)../

   ஹா. ஹா. ஹா. என் கைக்குள் இல்லை.. என் கைப் பேசிக்குள் ஒன்று கூடி பேசிக் கொண்டிருக்கின்றன. சூரியர், சந்திரர் மலர்வித்த மலர்களும் இதற்குள் மனம் மகிழ்ந்து கூடிப் பாடிய வண்ணம் இருக்கின்றன.

   நான் தங்களுக்காகத்தான் மூன்றாம் பிறையை வானத்தோடு வசமாக்கி அழைத்து வந்து என் வலைக்குள் சிறைப்பிடித்து வைத்திருக்கிறேன். வாங்க.. வாங்க.. அவசரமேயில்லை. நிதானமாக வந்து பாருங்கள்.

   /யோகாவுக்குப் போயிட்டு இல்லை எனில் ரீச்சர் தேடுவா என்னை:)... /

   கண்டிப்பாக.. யோகா பயிற்சிக்கு முறையாக சென்று பிறைபோல் அழகாக மெலிந்து வளமாக வாழுங்கள்.

   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
  2. க்ஹ் மேடம்... யோகா போய் மூணாம் பிறைபோல மெலியணும்னு வாழ்த்தியிருக்கீங்களே.. அப்படீன்னா, மெதுவாக வளர்ந்து பௌர்ணமி சைசுக்கு மீண்டும் வரணும்னு அர்த்தமா?

   Delete
  3. வணக்கம் நெ. தமிழர் சகோதரரே

   /அப்படீன்னா, மெதுவாக வளர்ந்து பௌர்ணமி சைசுக்கு மீண்டும் வரணும்னு அர்த்தமா?/

   ஹா. ஹா. ஹா. நான் இந்த இடத்தில் "மூன்றாம் பிறை போல்" மெலிந்து என்று மட்டுந்தான் குறிப்பிட்டுள்ளேன். முழுமதியை சற்றேனும் இடம் பொருள் ஏவல் புரிந்து இங்கு இந்த இடத்தில் குறிப்பிடவில்லையென தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.( ஹா. ஹா. ஹா. இந்தப்பதிவுக்கு சகோதரர் ஸ்ரீராம் அவர்கள் தந்த கருத்துரை நினைவுக்கு வந்தது. (காப்பி அடித்தமைக்கு மன்னிக்கவும் ஸ்ரீராம் சகோ..) தங்கள் கருத்துக்கு சகோதரி அதிரா வந்து என்ன சொல்ல போகிறார்கள் என நானும் ஆ(அ)வலோடு காத்திருக்கிறேன்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 13. சூரியனைப் படம் பிடிச்ச விதங்கள் அழகு.

  செம்பருத்தியில் விதம் விதமான கலர்த் தொகுப்பு நன்றாக இருக்குது. கிரிஸ்மஸ் ட்ரீ தானே அது அதுவும் சுவப்பும் வெள்ளையுமாக அழகு.

  அதுசரி உண்மையில் அது 3ம் பிறைதானோ? இவ்ளோ பெரிசாக இருக்குதே.. ஒரு நூல்போலத்தானே தெரியும்?
  பார்க்கும்போது என்னை நினைச்சீங்களோ?:).

  நான் இங்கு ஒருக்கால் கேர்டினைத்திறந்து எட்டிப் பார்த்தேன் தெரியவில்லை, பின்பு பார்க்க மறந்துவிட்டேன்.

  கமலாக்காவுக்கு லக் அடிக்கப்போகுது:) லொட்றி வாங்குங்கோ:).

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அதிரா சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   சூரியன் படங்கள், மலர்கள் படங்கள் அத்தனையும் அழகென்று கூறி பாராட்டியமைக்கு மிக்க மகிழ்ச்சி.

   /கிரிஸ்மஸ் ட்ரீ தானே அது அதுவும் சுவப்பும் வெள்ளையுமாக அழகு./

   எனக்கு அதன் பெயர் தெரியவில்லை. ஆனால் செம்பருத்தி பூக்களை எடுக்கும் போது அவற்றையும் கலருக்காக எடுத்தேன். தொட்டுப் பார்த்தால் அந்த மலர் மிகவும் மிருதுவாக இருந்தது.

   /அதுசரி உண்மையில் அது 3ம் பிறைதானோ? இவ்ளோ பெரிசாக இருக்குதே.. ஒரு நூல்போலத்தானே தெரியும்?/

   அச்சச்சோ.. நீங்கள் இப்படி சந்தேகப் படலாமோ..! உங்களை நினைத்துக் கொண்டேதான் அன்று பகல் முழுவதும் காத்திருந்து மாலை வந்ததும் படம் எடுத்தேன் எங்கள் வீட்டு பால்கனியிலிருந்து நன்றாக தெரிய வேண்டுமே என்பதற்காக காட்சியை விரிவுபடுத்திக் கொண்டு எடுத்தேன். அதுதான் நூல் போல் தெரிய வேண்டியது பருமனான கயிறாக தெரிகிறது. ஹா. ஹா. ஹா.

   /கமலாக்காவுக்கு லக் அடிக்கப்போகுது:) லொட்றி வாங்குங்கோ:)./

   ஹா. ஹா. ஹா. இருக்கிற லக்கும் லீக்காகி பக்கென்று மாயமாகமல் இருந்தால் சரிதான். ஏற்கனவே இங்கு குளிர் மழையில் லொக், லொக்கெனெறு இருமிக் கொண்டேதான் உள்ளேன்.ஹா. ஹா.ஹா.

   கருத்துகளுக்கு மிக்க நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 14. //அதிரா அவர்களுக்கு கண்டிப்பாக "பொறை" ஏறியிருக்கும்..(//

  அது பொறை இல்லை புரை:)).. நெல்லைத்தமிழன் மேடைக்கு வரவும்:)) இதை எல்லாம் கவனிக்க மாட்டாரேஎ:)) ஹா ஹா ஹா.. நான் எல்லோரையும் அன்று நினைச்சேன்ன். முகியமாக இந்தியாவில் இருக்கும் நீங்கள் எல்லோரும் பார்ப்பீங்களென நினைச்சேன்.

  அடுத்த வருடம் 3ம் பிறை பார்க்க டெல்லிக்கு வருவேன்:)).. மோடி அங்கிளுக்கும் காட்டிப் பார்ப்பேன்ன்.. இது அந்த வெள்ளைச் செம்பருத்தி மேல் ஜத்தியம்:))

  ReplyDelete
 15. வணக்கம் அதிரா சகோதரி

  தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  /அது பொறை இல்லை புரை:)).. நெல்லைத்தமிழன் மேடைக்கு வரவும்:)) இதை எல்லாம் கவனிக்க மாட்டாரேஎ:)) ஹா ஹா ஹா.. நான் எல்லோரையும் அன்று நினைச்சேன்ன். முகியமாக இந்தியாவில் இருக்கும் நீங்கள் எல்லோரும் பார்ப்பீங்களென நினைச்சேன்./

  ஆகா.. பேச்சு வழக்கில் பொறை என எழுதி விட்டேன். தாங்கள் உதவிக்கு அழைத்த சகோதரர் நெல்லைத்தமிழர் அவர்கள் அப்போதே மேடையேறி வந்து விட்டு இறங்கிச் சென்று விட்டார். ஹா.ஹா.ஹா. ஆனால், தமிழில் புலமை வாங்கிய தங்களிடமிருந்து தப்ப முடியுமா? கண்டு பிடித்து விட்டீர்களே.! பாராட்டுக்கள். அன்றைய தினம் நீங்கள் எங்கள் அனைவரையும் சேர்ந்தாற்போல நினைத்தது குறித்து மிக்க சந்தோஷம்.

  /அடுத்த வருடம் 3ம் பிறை பார்க்க டெல்லிக்கு வருவேன்:)).. மோடி அங்கிளுக்கும் காட்டிப் பார்ப்பேன்ன்.. இது அந்த வெள்ளைச் செம்பருத்தி மேல் ஜத்தியம்:)) /

  ஹா.ஹா.ஹா. அடுத்த வருடம் மோடி அங்கிளுடன் பிறை பார்க்கும் திட்டமா? அவர் அப்போது வேறு எங்காவது (நிலவுக்கே) பயணத்திற்கு திட்டமிடாமல் இருக்க வேண்டும். வெள்ளைச் செம்பருத்தியும் சத்தியத்தை நினைவு வைத்துக் கொண்டு உங்களுடன் ஒத்துழைக்கட்டும்.

  அன்பான வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
 16. செம்பருத்தி மலர்களும் நீலவானமும் மிக அழகு!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   பதிவை ரசித்து படங்கள் மிக அழகு என்று நல்லதொரு கருத்தை தந்தமை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். தங்களைப் போன்ற பதிவர்கள் என் தளம் வந்து பாராட்டுவதற்கு நான் மிகவு‌ம் பெருமையடைகிறேன். வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 17. பூக்களின் படங்கள் அழகு என்பதைவிட எடுத்த விதம் அதைவிட அழகு.

  வலைக்குள் சிறைபட்ட மேகங்கள் அருமையான கோணம் வாழ்த்துகள்.

  இப்பதிவு எனது டேஷ்போர்டுக்கு வரவேயில்லை தாங்கள் கருத்துரையில் சொல்லா விட்டால் தெரிந்து இருக்காது.

  தகவலுக்கு நன்றி சகோ.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
   அழைத்தவுடன் உடனடியாக வந்து படங்கள் அழகாக உள்ளதென கூறி பாராட்டியமைக்கு மிக்க மகிழ்ச்சி சகோதரரே...

   இப்பதிவு தங்களுக்கு தெரியவில்லை என்பதால்தான் நீங்கள் என் பதிவுக்கு வரவில்லை என நான் ஐயப்பட்டேன். இல்லாவிடில் தாங்கள் என் பதிவுக்கு வராமல் இருந்ததில்லை என்பதை நான் அறியாதவளா? அதனால்தான் உங்கள் பதிவின் கருத்துரையோடு என் பதிவைப் பற்றியும் குறிப்பிட்டேன். குறிப்பிட்டவுடனே உடனடியாக வந்து தந்த நல்லதொரு கருத்துக்களுக்கு என் மகிழ்ச்சியோடு மனம் நிறைந்த நன்றிகளும் சகோ. தங்களைப் போன்றோரின் கருத்துக்கள் என் எழுத்தை மேம்படுத்திக் கொள்ள உற்சாசாங்களை தருமென பரிபூரணமாக நம்புகிறேன். மிக்க நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 18. வானம் நமக்கொரு போதி மரம்தான். வலைக்குள் சிறை பட்ட மேகங்கள் அழகு! உங்கள் தயவால் கார்த்திகை மாதத்தில் மூன்றாம் பிறையை பார்த்தேன். மிக்க நன்றி. எங்கள் ஏரியாவில் ஒரே மேக மூட்டம். அதனால் பிறை கண்ணுக்குத் தெரியவில்லை. 

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   /எங்கள் ஏரியாவில் ஒரே மேக மூட்டம். அதனால் பிறை கண்ணுக்குத் தெரியவில்லை. /

   அப்படியா? இங்கு நாங்கள் இருக்கும் இடத்தில் ஒரளவு மேகங்கள் கலைந்து கலைந்து சற்று நேரப் பிறையை பார்க்க விட்டன. சகோதரி அதிரா அவர்களின் நினைவுடன் படம் எடுத்து விட்டேன்.

   பதிவை வந்து பார்த்து பாராட்டுடன் அருமையான கருத்துக்களை தந்த தங்களுக்கு என்மனம் நிறைந்த நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 19. மிக அருமை..மிகுந்த ரசனை தங்களுக்கு அற்புதமான எழுத்துக்கள் அம்மா..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் பதிவை குறித்த பாராட்டுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 20. உங்களின் ரசனையை, நாங்களும் ரசித்தோம். அருமை.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   என்னைப் போல் பதிவை தாங்களும் ரசனையுடன் ரசித்தமைக்கு மனம் நிறைந்த மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 21. பல வண்ணங்களில் சிரிக்கும் மலர் கண்டேன் ..

  உள்ளம் மகிழ்ச்சியில் துள்ள கண்டேன் ...

  நீல வானில் ஒளி வண்ணம் கண்டேன் ...

  உள்ளம் மகிழ்ச்சியில் மகிழ கண்டேன் ...


  என்றும் என்றும் அலுக்காத காட்சிகள் இந்த வான் வெளி காட்சிகள் ...அனைத்தும் அழகு ...


  மூன்றாம் பிறை ..ஆஹா

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   படங்களை கண்டு கவிதையாய் பாடி பாராட்டியமைக்கு என் மனம் நிறைந்த மகிழ்வுடன் கூடிய நன்றிகள். தங்களின் கவிதை அழகாக உள்ளது.

   ஆமாம்.. உண்மையே.. என்றும் அலுக்காத. காட்சிகள்
   மூன்றாம் பிறையையும் கண்டு ரசித்தமைக்கு நன்றிகள். தங்களின் வருகையும், சிறப்பான கருத்துரையும் என்னை பெருமகிழ்ச்சி அடைய வைத்தது.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete