Wednesday, May 1, 2019

உழைப்பாளர் தினம் – சிறுகதை 1)

வலையுலக  சகோதர சகோதரிகள் அனைவருக்கும் வணக்கம்.
அனைவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்.

18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது
அனைத்து நாடுகளிலும் பல் வேறு இயக்கங்கள் தோன்றி தொழிலாளர்களின் வேலை நேரத்தை குறைக்க பெரும்பாடுபட்டது

இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது
இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து போரட்டங்களை நடத்தியது. அத்தோடு மே 11886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.

நன்றி விக்கிப்பீடியா.... 

இன்றும் ஓய்வில்லாமல் உழைக்கும் ஒரு இனத்தின் நிலை.. ஆனாலும் உழைப்புக்கு உதாரணமாய் சுட்டிக் காட்டப்படுபவர்கள்..  இது பழைய பதிவெனினும், இன்றைய தினத்திற்கானது. அதனால் மீண்டும் ஒருமுறை அனைவரின் பார்வைக்காகவும், சில திருத்தங்களுடன் பகிர்கிறேன். இதை "மீண்டும் ஒருமுறையா" என சோர்வில்லாமல் படிக்கும் அனைவருக்கும்  மிகுந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

உழைப்பின் கதை... 

"என்னங்க  இன்னைக்கு  பாட்டுக்கு உழைக்கப் போகலையாவாசலில் சோர்வாக அமர்ந்திருந்த கணவனைப் பார்த்து கேட்டாள் மனைவி. 

     உம்ம்ம்... போகணும். என்னவோ காலையிலேயே சோம்பலா இருக்கு! இன்றைக்கு என்னவோ உழைப்பாளர் தினமாம்! என்றவனை இடைமறித்த அவன் மனைவி அப்படியெல்லாம் நாம இருந்தா எப்படிநம்ப வயிற்றுப் பாட்டுக்கு எங்க போறதுதினமும் சுறுசுறுப்பா அங்கே இங்கே அலஞ்சா தானே நமக்கு வேண்டியது கிடைக்கும் என்று கனிவுடன் உபதேசித்தாள் மனைவி.

     "உம்ம்ம்... புரியுது அந்த காலத்திலேயே இருந்து நாம ஓடியாடி வேலை செஞ்சவங்கதானே! (பெருமூச்சுடன்) ம்ம்..இதோ கிளம்பறேன். நீ புள்ளைங்களை பாத்துக்கோ.! "என்றபடி கிளம்ப எத்தனித்தான் அவன்.

   " பாத்து போயிட்டு வாங்க! வழியிலே ஓரமாவே நடந்து போயிட்டு வாங்க! இப்ப நீங்க புறப்பட்டு போன தான் பொழுது போறதுக்குள்ள வீடு திரும்ப முடியும். வானம் வேற கறுத்து கிடக்கு! இந்த மழை வேற வந்துடாமே இருக்கனும்.!" என்று அவன் மேல் அக்கறையுடன் பேசினாள் அவள்.

    "மழையாஅது எங்கே இப்பெல்லாம் ஒழுங்கா பெய்யுதுஅந்த காலமெல்லாம் போயாச்சு! இப்பெல்லாம் முந்தி மாதிரி எதுவுமில்லை! இந்தோபார்..! ஏதோ புயல் வந்து ஊரெல்லாம் ஒரே மழைவரப் போகுதூன்னு என அன்னைக்கு  பேசிகிட்டாங்க.! இப்ப இரண்டு நாளா அதுவும் இல்லைன்னு வேறே சொல்றாங்க.! ஒன்னும் புரியலே போ.! 

நமக்கும் ஒரு இடத்திலேயும் ஒழுங்கா முந்தி மாதிரி உழைக்க முடியலே! நேத்திக்கு ௯ட ஒரு இடத்துலேஅரிசி பருப்புன்னு மூட்டை மூட்டையா சாமான்களைஏத்திகிட்டும்இறக்கிட்டும் இருந்தாங்க! சரி! நமக்கு ஏதாவது உழைப்புக்கு ஒரு வேலை இருக்குமான்னு போனேன். அங்கிருந்த எல்லாரும் விரட்ட மிதி படாத குறையாக ஓடி வந்துட்டேன். அதேமாதிரி அவங்கவங்க வீட்டிலேயும் அவங்களுக்கு பிடிச்ச வேலைகாரங்களை வச்சுகிட்டு சுத்தபத்தமா இருக்கனும்’னு விரும்புறாங்க! நம்ம தேவையை புரிஞ்கிட்டு  நம்ப உழைப்புக்கேத்த மாதிரி நாம செய்ற வேலையை எங்கே மதிக்கிறாங்க? என்றான் சலிப்புடன் அவன்.

   "புள்ளைங்களும் பாவம்! நேத்து அப்பா என்ன கொண்டு வந்திருக்காருனு ஆசையா கேட்டதுங்க! வீட்லே ஒரு குந்துமணி அரிசி ௯ட இல்லைன்னு நான் எப்படி சொல்ல முடியும்நேத்து சின்னவன் ரொம்ப பசிக்கிதுன்னு என் காலை சுத்தி சுத்தி வந்தான். உங்களையும் காணமா! அதனாலே அவனுக்கு ஏதாவது சாப்பாட்டுக்கு வழிபண்ணலாம்னு போயி அலைஞ்சதுதான் மிச்சம்...." என தன் அனுபவத்தை சோகத்துடன் ௯றினாள் அவள்.

  " அப்படியெல்லாம் சின்னபுள்ளைங்கள தனியா வீட்டுல விட்டுட்டு போவாதே.! உனக்கும் முந்தி மாதிரி இப்பெல்லாம் முடியலை! அப்படியிருக்கும் போது ஏன் வெளியில போற? நான் போய் என்னாலே ஆனதை வீட்டுக்கு கொண்டு வரேனில்லியா? "அவன் சற்று கோபமாக கேட்டான்.

   "இல்லே! நேத்து புள்ள ரொம்ப பசின்னு சொன்னதினாலே தான் போனேன். இல்லாட்டி நீங்க தினமும் சம்பாரிச்சு கொண்டு வர்றது நமக்கு வயித்துக்கும்பாடுக்கும் சரியாதானே போறது! மத்தபடி முந்தி மாதிரி நாளைக்குனு எங்கே வச்சுக்க முடியுது? ம்ம்... நீங்க இப்படி சிரமபடுறதை பாக்கும் போதுதான் எனக்கு மனசு தாங்கல!" என்று அவனை சமாதான படுத்தியவள், “ஆமாம் அப்பவே என்னமோ சொல்ல வந்தீங்களே?” என்று ஞாபகபடுத்தினாள்.

  " ஆமாம்! அதாவது இன்றைக்கு உழைப்பாளர் தினமாம்! நேத்திக்கு வேலைய தேட போகும் போது நாலுபேர் சொல்லிகிட்டிருந்தது காதிலே விழுந்திச்சு! அந்தகாலத்துலே, "உழைப்புக்குன்னா இவர்கள்தான்னு" நம்மளை சுட்டிக்காட்டி பேசிட்டு இன்னைக்கு அவங்களை அவங்களே பெருமைபடுத்திக்கிறாங்க! ஏன் நாமெல்லாம் உழைக்கிற வர்க்கம் இல்லையா? எப்படியோ போகட்டும்! இந்த மட்டுக்காவது, எங்கோ ஒரு இடத்துல, எப்பவாச்சுமாவது  உழைப்புக்கும், சுறுசுறுப்புக்கும் ஒரு உதாரணமா நம்மளை காட்டாறாங்களே!!


""இப்படி ஒரு தினத்தை வச்சு கொண்டாடுறாங்களே! அன்னிக்காவது நமக்கெல்லாம் ஒரு இனிப்பு, ஹும்.. ஹும்.. வேண்டாம்மா, ஒரு சின்னமிட்டாயாவது கொடுக்கலாம்ன்னு அவங்களுக்கு தோண்றதா? போகட்டும்! அவங்க நல்லா வாழ்ந்துட்டு போகட்டும்! நாமதான் அன்னியிலேருந்து இன்னைய வரைக்கும், உதைபட்டும் மிதிபட்டும் சாவறோம். ஒருநாள் வெளியிலே போயிட்டு வர்றதுக்குள்ளே அன்னைக்கு உசிரு நம்மகிட்டே இருக்குமான்னு தெரியலே! நம்ம பொழைப்பு அப்படி! படைச்சவன் அவங்களையும் நம்மளையும் அப்படி படைச்சிட்டான்! இரண்டாவது நாம் வாங்கி வந்த வரம் ( இதைச் சுட்டினால், இதன் இரண்டாவது கதையும்  இத்துடன் இணைக்கப்பட்டிருப்பதை காணலாம்.) அப்படி! சரி! நான் புறப்படறேன். நீ பத்திரமா இருந்துக்கோ!! "என்றபடி மனைவியிடம் விடைபெற்று வெளியில் வந்தவன் அருகிலிருக்கும் ஒரு  வீட்டின் கதவு  மூடியிருப்பினும், படிகளின் ஒரமாக உள்நுழைந்து தனக்கும், தன் குடும்பத்துக்கும் உணவு தேடுவதற்கான வேலையை கவனிக்க வேண்டி , உழைப்பாளியான அந்த கடமை தவறாத கணவனான அந்த எறும்பினம் அந்த வீட்டினுள் மெள்ள பயணித்தது.

22 comments:

  1. இனிய மே தின வாழ்த்துகள்

    முடிவில் அது எறும்பினம் என்று முடித்த விதம் அருமை சகோ

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரரே

    தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    தங்களுக்கும் இனிய மே தின வாழ்த்துக்கள். தங்களின் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி.
    இத்துடன் இணைத்திருக்கும் மற்றொரு "உட்கதையை" இந்த பகுதியிலிருக்கும் கடைசி பாராவில் இருக்கும் "சுட்டியை" சொடுக்கி படிக்கவில்லையா சகோதரரே ? அதையும் படித்து விட்டு கருத்துக்கள் தந்தால் மகிழ்ச்சி அடைவேன். மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. படித்துக்கொண்டு இருக்கிறேன்.

      Delete
    2. வணக்கம் சகோதரரே

      என் வேண்டுகோளுக்கிணங்கி மற்றொரு கதையையும் படித்துக் கொண்டிருப்பதற்கு மிகவும் நன்றி சகோ. சென்ற முறை பதிவிட்டிருந்த போது ஒரு கருத்துப் மட்டும் பெற்று வேறு கருத்தில்லாமல் தனித்திருந்த பதிவிது. அதனால்தான் தங்களிடம் வேண்டுகோளுடன் கேட்டுக்கொண்டேன். ஆனால் இதை வெளியிட்ட சமயம் இந்த இரு பதிவுகளுக்கும் வந்து கருத்திட்டு பதிவுகளை பெருமைபடுத்திய சகோதரர் திரு. வை கோபால கிருஷ்ணன் அவர்களுக்கு இச்சமயம் மிகுந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுக்கும் மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. எறும்புனு எதிர்பார்க்காட்டியும் தேனீயாக இருக்குமோனு நினைச்சேன். தேனீயும் உழைக்கும் ரகம் தானே! நல்ல கருத்துள்ள கதை! சுட்டியிலிருந்து இன்னொன்றையும் படிச்சுட்டு வரேன். நல்லா கோர்வையா எழுதறீங்க!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /எறும்புனு எதிர்பார்க்காட்டியும் தேனீயாக இருக்குமோனு நினைச்சேன். தேனீயும் உழைக்கும் ரகம் தானே/

      ஆமாம் சகோதரி.. தேனீயும் உழைப்புக்கு பெயர் போன ரகந்தான். இது எப்போதோ எழுதியது. அவசரத்துக்கு இதை பயன்படுத்திக் கொண்டேன். இன்றைய தேதியை விட்டால் மறுபடியும் அடுத்த வருடம் "மே"யில்தான் இதை புரட்ட முடியும். பழையதானாலும்,பதிவை பார்த்து ரசித்து பாராட்டியிருப்பதற்கு மிக்க நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. இரண்டையும் படித்தேன். கருத்துச் சொல்லி இருக்கேன். அடிக்கடி எழுதுங்கள். உங்கள் மனச் சோர்வுக்கு ஓர் வடிகால் கிடைக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      இரண்டையும் படித்து அருமையான கருத்துகள் சொன்னதற்கு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். தங்களது ஊக்க மிகும் கருத்துக்கும் நன்றி.

      ஒரு காலத்தில் எழுதும் ஆசை நிறைய இருந்தது. எழுதியும் வந்தேன். திருமணத்துக்கு பின் கடமைகளில் அந்த ஆசை நிராசையாக போயிருந்தது. கடந்த ஏழு வருடங்களாக அவ்வப்போது தொடர்ந்த இந்த எழுதுதலை இப்போது ஒரு வடிகாலாக நினைத்துதான் எழுதிவருகிறேன். பதிவுகள் எழுதும் போதும். தங்களிடமெல்லாம் எழுத்தால் இணையும் போதும் சற்று மனமாற்றம் கிடைக்கிறது. அது உடம்புக்கும் மனதிற்கும் கொஞ்சம் உற்சாகம் தருகிறது. ஆததால் தொடர்கிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. அருமை...

    http://dindiguldhanabalan.blogspot.com/2013/05/Pain-Gain.html

    தொழிலாளிதின வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்கள் ஊக்க மிகும் பாராட்டுகளுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள். நான் இந்த பதிவில் கொடுத்துள்ள "சுட்டிக்கும்" சென்று மற்றொரு கதையையும் ரசித்து கருத்திட்டால் மகிழ்வடைவேன். நன்றி.

      தாங்கள் கொடுத்த சுட்டிக்கும் சென்று படித்துப் பார்க்கிறேன்.

      தொழிலாளி தின வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. உழைப்பாளர் தினம் பிறந்த வரலாறு , மற்றும் எல்லா ஜீவனும் உணவுக்கு உழைத்து ஆக வேண்டி உள்ளது.

    இன்றையபாட்டுக்கு உழைக்க போகவில்லையா? என்ற கேள்வி அருமை.

    தினம் உழைத்து சேமித்து வாழும் உயிர் இவைகள்.
    மழை வருவது இவைகளுக்குதான் தெரியும். "எறும்பு முட்டைக் கொண்டு திட்டை ஏறினால் மழை பெய்யும்" என்பார்கள்.

    உரையாடல் அருமை.

    தொழிலாளர் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /தினம் உழைத்து சேமித்து வாழும் உயிர் இவைகள்.
      மழை வருவது இவைகளுக்குதான் தெரியும். "எறும்பு முட்டைக் கொண்டு திட்டை ஏறினால் மழை பெய்யும்" என்பார்கள்./

      ஆமாம் சகோதரி..உண்மையான கருத்துக்கள். பழமோழியும் கேள்வி பட்டுள்ளேன். தினம் உழைத்து சேமித்து வாழும் உயிரினம் இவை மட்டுமல்ல.! தேனீக்களும் அப்படித்தான்..! அவற்றிடமிருந்து மனிதன் தன் ஈன செயலால் தேனை தட்டிப் பறிக்கிறான். எறும்புகளுக்கு மழைகாலம் தெரியுமாகையால். வெய்யில் காலத்திலேயே கிடைத்ததை சேமித்து வைக்கும் குணமுடையவை.. நல்ல பண்பு.. அவற்றிடமிருந்து கற்றுக்கொள்ள ஏராளமானவை இருக்கின்றன.

      தங்களின் பாராட்டுதல்களுக்கும், தொழிலாளர் தின வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.
      தங்களுடைய ஊக்கமிகு கருத்துக்கள் என்னை உற்சாகப்படுத்துகின்றன.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. மேதினம் பிறக்கக் காரணம் அறிந்திருந்தாலும் மறுபடி படித்துக் கொண்டேன்.

    "அவங்கவங்க பிடிச்ச வேலைக்காரர்களை வச்சுக்கிட்டு சுத்தபத்தமா இருக்க விரும்பு"வதைவிட தெரிந்த வேலைக்காரர்களை வைத்துக்கொண்டு பாதுகாப்பாய் இருக்க விரும்புகிறார்கள் என்று சொல்லலாம்! [புதிய வேலைக்காரர்கள் அதிக கூலி கேட்கலாம், ஏதாவது திருடு போகலாம் என்கிற பயம் அவர்களுக்கு இருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      மேதினம் பிறக்க காரணத்தை மறுபடியும் படித்தமைக்கு நன்றிகள்.

      /தெரிந்த வேலைக்காரர்களை வைத்துக்கொண்டு பாதுகாப்பாய் இருக்க விரும்புகிறார்கள் என்று சொல்லலாம்! [புதிய வேலைக்காரர்கள் அதிக கூலி கேட்கலாம், ஏதாவது திருடு போகலாம் என்கிற பயம் அவர்களுக்கு இருக்கும்!/

      அப்படியும் சொல்லலாம்...ஆமாம்.. கூலி அதிகமாக கொடுப்பது மட்டுமில்லாமல், அறியாதவர்களை வைத்துக் கொண்டால் திருடு. மற்றும் சிலசமயம் ஆபத்தாக வேறு ஆகி விடுகிறதே.! ஆனால்.,நான் "சுத்தபத்தம்" என்ற போது எறும்பிற்கு தீனி ஏதும் இல்லாது போவதை (அதுவே சொல்கிற பாணியில்) குறிப்பிட்டேன்.

      ஏற்றம் இறைத்தால் பயிருக்கு உணவு.. வீட்டில்
      எஞ்சியதை இறைத்தால் எறும்புக்கு உணவு..
      புது மொழி..

      தங்களது அருமையான கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. உழைப்பாளர்கள் தினத்துக்கு விடுமுறை என்பது நகைமுரண்தான்! இது மாதிரி அடித்தட்டு உழைப்பாளிகளை நாம் கண்டுகொள்வதில்லை. நம்மை நாமே தட்டிக்கொடுத்துக் கொள்கிறோம். அவர்களுக்கு அன்றும் உழைத்தால்தான் கால் வயிறாவது நிரம்பும். நல்ல கதை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      உண்மைதான்.. 18 மணி நேரத்திற்கு
      மேலாக கட்டாயமாக உழைத்தவர்களை 8 மணி நேரம் உழைப்பு போதும் என்ற நிலைக்கு கொண்டு வந்து, அந்த புரட்சி நாளை நினைவு கூறும் வண்ணம் அன்றைய தினத்தை அனைத்து இடங்களிலும் விடுமுறை தினமாக அறிவித்தது ஆச்சரியம்தான். ஆனால் அடித்தட்டு மக்களுக்கு தினசரி உழைப்பென்பது அன்றாடம் அவசியமானதொன்று.. அவர்களுக்கு ஓய்வென்பதேது?.தினமும் பகல் முழுவதும் உழைத்தால் இரவிலோ, இல்லை இரவில் கண் விழித்து உழைத்தால் பகலிலோதான்.!

      தங்களது கருத்துகளுக்கும், பாராட்டுகளுக்கும் மிக்க நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. கமலா அக்கா நலம்தானே.. உங்கள் மயில் போஸ்ட் பார்த்ததுக்கு, இப்போ ஒரு பேப்பர் ரிப்போர்ட்டர் ரேஞ்சில பார்க்கிறேன் உங்களை இப்போஸ்ட்டில்:).

    என்னைப்பொறுத்து உழைப்பாளர் தினத்துக்கு வாழ்த்துச் சொல்லாட்டிலும் பறவாயில்லை, காய்கறி, கிரை , பழங்கள் விற்கும் ஆச்சிமாருடன் மல்லுக்கட்டாமல், சொல்லும் விலையைக் கொடுத்துவிட்டு பொருட்கள் வாங்கினாலே போதும்... அவர்கள் வாழ்வு நிறையும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சகோதரி

      நலமா? தங்களை கண்டு நிரம்ப நாளாகி விட்டது. எப்படி இருக்கிறீர்கள்? நான் நலந்தான்.. (உங்கள் மயில் போஸ்ட் பார்த்ததுக்கு, இப்போ ஒரு பேப்பர் ரிப்போர்ட்டர் ரேஞ்சில பார்க்கிறேன் உங்களை இப்போஸ்ட்டில்:).)

      ஹா ஹா ஹா. நன்றி சகோதரி இப்போஸ்ட்டில், என் போஸ்ட்டும் கூடி விட்டது போலும்.. நன்றி.

      /என்னைப்பொறுத்து உழைப்பாளர் தினத்துக்கு வாழ்த்துச் சொல்லாட்டிலும் பறவாயில்லை, காய்கறி, கிரை , பழங்கள் விற்கும் ஆச்சிமாருடன் மல்லுக்கட்டாமல், சொல்லும் விலையைக் கொடுத்துவிட்டு பொருட்கள் வாங்கினாலே போதும்... அவர்கள் வாழ்வு நிறையும்./

      உண்மைதான் சகோதரி. ஆனால் பெரிய பெரிய கடைகளில் பேக் செய்து வைத்திருப்பதை அதில் போட்ட விலையை கொடுத்து பேசாமல் வாங்கி வரும் நம் மக்கள் இப்படிபட்ட சிறு தொழிளார்களிடம் பேரம் பேசி வாங்குவதை பெரிய இமாலயசாதனை செய்வதாக நினைத்து பேசுகிறார்கள். அவர்களும் எப்படியாவது நம்மை நாடி வருகிறார்களே என்ற எண்ணத்தில் குறைந்த விலைக்கு தருகிறார்கள். அவர்களை மகிழ்விப்பதே உழைப்பாளர் தினத்திற்கு வாழ்த்து சொல்வதற்கு சமம். அருமையான கருத்தைச் சொன்ன தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. //இன்றைக்கு என்னவோ உழைப்பாளர் தினமாம்! என்றவனை இடைமறித்த அவன் மனைவி அப்படியெல்லாம் நாம இருந்தா எப்படி? நம்ப வயிற்றுப் பாட்டுக்கு எங்க போறது? தினமும் சுறுசுறுப்பா அங்கே இங்கே அலஞ்சா தானே நமக்கு வேண்டியது கிடைக்கும் என்று கனிவுடன் உபதேசித்தாள் மனைவி.///

    உண்மைதான், வீட்டில் எதுவுமில்லை எனில் கஸ்டம்தான், இருப்பினும் இந்த வசனம் படிக்கும்போது கஸ்டமாக இருந்தது, பாவம்தானே அந்தக் கூலித்தொழிலாளிக் கணவரும்.. அவருக்கென ஒருநாள் ஒய்வாவது தேவையெல்லோ.. ஒரு மாறுதலுக்காக அன்று மனைவிமார் போகலாம் வேலைக்கு என நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /இந்த வசனம் படிக்கும்போது கஸ்டமாக இருந்தது, பாவம்தானே அந்தக் கூலித்தொழிலாளிக் கணவரும்.. அவருக்கென ஒருநாள் ஒய்வாவது தேவையெல்லோ.. ஒரு மாறுதலுக்காக அன்று மனைவிமார் போகலாம் வேலைக்கு என நினைக்கிறேன்./

      தொழிலாளி என்ற முறையில் நீங்கள் கூறியிருப்பது உண்மைதான்.. அவரும் மனிதர்தானே.! அவருக்கும் ஓய்வென்பது மிக மிக அவசியம்தான்..அந்த இடத்தில் அவர் மனைவியும் தன்னால் முடிந்த வேலைக்குச் சென்று உழைத்து காப்பதில் தவறில்லை.. தங்கள் கருத்தை ஏற்கிறேன்.

      நீங்கள் கதை முழுவதும் படித்து விட்டீர்களா? இதனுடன் இணைந்திருக்கும் மற்றொரு சிறு கதையையும் நான் கொடுத்திருக்கும "சுட்டி" யை சொடுக்கி படிக்க வேண்டுகிறேன். அதற்கும் கருத்து தெரிவித்தால் மகிழ்வடைவேன். மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்

      Delete
  11. முதல் தகவல் அறிந்ததென்றாலும் உங்கள் தகவலும் வாசித்துவிட்டோம்.

    இக்கதையையும் யூகித்துவிட முடிந்தது. உழைப்பு என்றாலே எறும்புதானே!

    மிக மிக நன்றாக எழுதியிருக்கின்றீர்கள் சகோதரி/ கமலா அக்கா

    எறும்புகள் தானே சேமித்து வைக்கும் மழை வரும் முன். உங்கள் கற்பனையை மிகவும் ரசித்தோம்.

    துளசிதரன், கீதா

    கீதஆ: கமலா அக்கா பொதுவாகவே பாட்டிமார்கள் நடைபாதை யில் கீரை விற்கும் பெண்கள் கூலித் தொழிலாளிகள் இவர்களிடம் அதிகம் பேரம் பேசாமல் வர்களின் உழைப்பிற்கு மதிப்பு கொடுத்து வாங்க வேண்டும் என்று நினைப்பதுண்டு. அவர்களும் வாழ வேண்டுமே இல்லையா. அவர்களுக்குத் தினமுமே உழைப்பாளர் தினம் தானே.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே/சகோதரி

      தங்கள் இருவரின் வருகைக்கும், கருத்துகளுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.

      உழைக்கும் வர்க்கத்திற்கு சட்டென எறும்பைத்தான் உதாரணமாகச் சொல்வார்கள். ஆகையால், எறும்பை வைத்தே ஒருகதை. படிப்பவர்களுக்கு அது எறும்பினம் என முடிவில் தெரிவதாக.. உணர்த்தும் ஒரு கதை. அதை முதலிலேயே யூகித்து கருத்துரை தந்தமைக்கு நன்றிகள்.

      தாங்கள் சொல்வதும் உண்மைதான் சகோதரி. சிறு தொழிலாளிகள், கூலி தொழிலாளிகள் இவர்களிடம் பேரம் பேசாமல் பொருட்களை வாங்க வேண்டும். அவர்களுக்கு அன்றாடம் இப்படி உழைப்பினால் வரும் பணந்தானே நித்திய வரும்படி. அவர்களும் வாழ வேண்டாமா? நல்ல பதில்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete