Monday, September 1, 2014

குறும் (ஹைக்கூ.) கவிதைகள்...


இரவில் பேய் மழை
_________________________________



கலின் படாடோபத்தை, மதிக்கும் அனைவரும்,
“இரவாகிய தன்னை யாரும் மதிப்பதில்லையென்று,”
இருட்டுப் போர்வையில் முகம் புதைத்துக்கொண்டு,
இரவு முழுதும் மனம் விட்டு அழுதது…! 




நறுமண மலர்…!
_________________________
 
வாடி கிடந்த மலரிடம், அன்றலர்ந்த மலர்,
“நறுமணத்துடன் நானிருக்க, நலம் குலையும்படி
நேற்றே ஏன் மலர்ந்தாய்..? என்ன அவசரம்..?” என்று
அதிகாரமாய் வினவ, “கவலைபடாதே..! நாளை நீயும்
என்னருகில்…!”என்றது வாடிய மலர் அலட்சியமாய்…!



பூங்காவின் புற்கள்….!
_________________________________
 
நாங்கள் இனி, எந்நாளும் எவர் கால்களிலும்
மிதிபட்டு நசுங்காமல், தலைநிமிர்ந்து நலமுடன்
நிற்போம் என்று, வெளியிருந்த மற்ற புற்களிடம்,
தன்னம்பிக்கையுடன்” சொல்லிக்கொண்டது…..!   
   

சூறாவெளியின் போட்டி அழைப்பு…! 
_________________________________________________________  
      
ன்னைப்போல் உன்னால் பயணிக்க முடியுமா..?”
ஆக்ரோசமாக சுழன்றடித்து ஆவேசபட்ட சூறாவளியிடம்,
“உன் ஆரம்பமே நான்தான்..!” என்று தன்னடக்கத்துடன்,
பதில் ௬றி அமைதியுடன் நகர்ந்தது தென்றல்….!



கற்றவர்களின் பெருமை..!
_________________________________________
 
ன்னால்தான் உனக்குப்பெருமை..!” என்றது காகிதம்
எழுத்திடம்..! அவசரமாய் அங்கு வந்து “இல்லவே இல்லை! என்னால்தான்!” என்றது எழுதுகோல்.! எழுந்து நின்ற
எழுத்துக்கள் “நம்மால் எதுவுமில்லை, கற்றவர்களால்தான்
நமக்கு என்றும் பெருமை..!” என்றது அமைதியுடன்..!



இன்னும் வளரும்...
 

 

8 comments:

  1. 01. இரவு மழை, அழும்போது யாரும் காணாமல் தனிமையில் அழு அதுதான் நடிப்பில்லாத உண்மை என்ற கருத்தை கொடுத்தது.

    02. நறுமண மலர் முதியோரை மதிக்க கற்றுக்கொடுத்தது.

    03. பூங்காவின் புற்கள், இறைவன் எமக்கு நல்ல வாழ்க்கைதான் கொடுத்து இருக்கிறான் என சிறுமையிலும் திருப்தி கொள்ள கற்றுக் கொடுத்தது.

    04. சூறாவளி, அகம்பாவமின்றி தன்னடக்கமாய் பேசு என்ற தத்துவத்தை கற்றுக் கொடுத்தது.

    05. கற்றவர்களின் பெருமை, நானே சிறந்தவன் என்ற கர்வத்தை கைவிடு என்ற அறிவைக் கற்றுக் கொடுத்தது.

    இன்னும் வளரும், ஆஹா வளரட்டும் இதன் மூலம் நானும் வாழ்க்கைப்பாடம் படித்துக் கொள்கிறேன். இந்தப்பதிவின் மூலம் உதவிய தங்களுக்கு நன்றி, நன்றி, நன்றி.

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரரே!

    தங்கள் வருகைக்கு முதற்க்கண் என் நனறி!
    என் குறும் கவிதைகளை, நன்கு பொருள் புரியும்படி ஆழ்ந்து படித்து, நான் எழுதியவற்றிக்கும் மேலான வகையில், கவிதையின் பொருளுணர்த்திய தங்களின் எழுத்தாற்றல், என்னை வியக்க வைக்கிறது.!!! என் எழுத்துக்கள் மேன்மேலும் வளர்வது தங்களைப் போன்ற சிறந்த விமர்சகரின் விமசனத்தில்தான்.! என்னை ஊக்கபடுத்தியமைக்கு நன்றி சகோதரரே!

    மீண்டும் நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  3. ''அவரும் நானும்'' கருத்துரை கொடுத்துள்ளேன் சகோதரி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே!

      படித்தவுடன் வந்த வருகைக்கும் தங்கள் கருத்துடன் கூடிய பாராட்டுக்கும் நன்றி. உங்கள் நீண்ட கருத்துரைக்கு நன்றிகள் கலந்த பதில் கருத்துரை இட்டுள்ளேன்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. Replies
    1. வணக்கம் சகோதரரே!

      தங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. இன்றைய 04.09.2014 வலைச்சரத்தில் தாங்கள் வாழ்த்துக்கள் சகோதரி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே!

      வலைச்சரத்தில் என் வலைத்தள அறிமுகத்தை அறியச்செய்தமைக்கு என் மனப்பூர்வமான நன்றிகள் சகோதரரே..!

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete