Thursday, September 11, 2014

நல்லதாய் நாலு எழுத்து, பா..ரா..ட்..டு, வா..ழ்..த்..து… என்பது மாதிரி…..! ஏதாவது, சொல்லுங்களேன்…!

டித்ல்… (இது “கற்பது” எனவும் பொருள்படும்) என்பது ஐந்து எழுத்து வார்த்தை..! எ….ழு…து….த…ல்.. என்பதும் ஐந்து எழுத்து வார்த்தை..! இதில் இந்த படிப்பதற்கும், கற்பதற்கும், நேரம், காலம், வயது, வரம்பு, என்று எந்த விதிமுறையும் கிடையாது. “கல்வி ஒரு பெருங்கடல்.!” “அள்ள அள்ள குறையாத செல்வம்..!” “திகட்டாத தித்திப்பு” என எத்தனையோ உவமானம் ௬றலாம்.! எனவே,“கற்றது என்றும் கைமண் அளவுதான்” என்ற கணக்கில், என்றுமே நம் காலம் உள்ள வரை கற்றுக் கொண்டே இருக்கலாம். அதற்கு அளவு கோலே கிடையாது…! படிக்க, படிக்க அனைத்துமே என்றுமே புதிதாய்தான் இருக்கும்..
      
        எழுதுவதும் அவ்விதந்தான்.! ஒவ்வொருவரும் தத்தம் திறமைக்கு ஏற்றவாறு எழுத்து ஆற்றைலையும், வயது வரம்பில்லாமல், பெருக்கிக் கொள்ளலாம். அந்தக் காலத்தில் உறவுகளுக்கிடையே, கடிதங்கள் எழுதும் முறை இத்தகைய ஆற்றலை பெரிதும் வளர்த்துக் கொடுத்தது.! பிறர் மனம் வருந்தாது,  அவசியமானதை மட்டும் எடுத்துணர்த்தி, உறவின் நலம் விசாரித்தல். வீட்டின் தேவைகள், விஷேடங்கள், மற்றும் பல நிகழ்வுகள், சுகங்கள், மனச்சுமைகள், சோகங்கள், என்று அனைத்தையுமே, ஒருவர், தொலைத்தூரத்தில் வசிக்கும் தமைசார்ந்த உறவுகளுக்கு எடுத்தியம்ப, இந்த கடிதங்கள் எழுதும் முறை பெரும் உதவியாக இருந்ததோடு மட்டுமின்றி எழுத்தாற்றலையும் வளர்த்து தந்தது..! (இன்று காலத்தின் முன்னேற்றம் காரணமாக கைபேசியில் ஒருமணி நேரத்திற்கும், மேலாக பேசி, பேசி, பேச்சுத் திறமையை,  வளர்க்கிறோம்.) (அல்லது வளர்ப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறோம்..!)
             
        அது மட்டுமின்றி, கதைகள், கவிதைகள், காப்பியங்கள், காவியங்கள் என பன்முகம் கொண்டு எழுதுவோரின், திறமைகளுக்கு ஏற்ப எழுத்துலகம், வீறு நடை கொண்டு வளர்ந்து, இன்று வானுயர்ந்து நிற்கிறது. ப..டி..ப்..பு.. என்ற நான்கு எழுத்தின் வாயிலாக, க..ற்.ப..னை., சி..ந்..த..னை., (இவை எழுதுவதின் அஸ்திவாரம்.) இந்த நான்கு எழுத்துக்கள், “எழுதுதல்,” என்ற திறனை வளர்த்து விடுகின்றன..! இப்படி எழுதி உருவான தரமான நூல்கள், புத்தகங்கள், மீண்டும் “படித்தலுக்கு” உதவுகின்றன..! இந்த சக்கர சுழற்சியுடன், படித்தலும், எழுதுதலும், இருவளையங்களாக நம்மைச் சுற்றி காலங்காலமாய் சங்கிலியாய் பிணைந்துள்ளது..!
                
        இத்தனை விஷயங்களை, நான் யோசிப்பதற்கும், எழுதுவதற்கும் ஒரு காரணம் உள்ளது. (“முத்தி விட்டதோ..?” என அவசரப்பட்டு நீங்கள் முத்திரை குத்துவதற்குள் காரணத்தை ௬றிவிடுகிறேன்..!) அதைச் சொல்லத்தான் இந்த பதிவு..! 
                    
        ஒரு குழந்தை பிறந்து, எழுந்து நடமாடி வளர்ந்து வாலிபத்தை அடைந்து, தன் வாழ்க்கையை பிடித்து கொண்டு சிறப்பாக வாழ்வதற்கு, காரணம், மாபெரும் அந்த பெரும்பங்கு, அந்த குழந்தையை ஈன்றெடுத்து, வளர்த்து ஆளாக்கிய, அந்தக் குழந்தையின் பெற்றோர்களையே சாரும்..! அது போல், புதியவர்கள் பதிவுலகில், எழுதும் திறமை வளர்ந்து முன்னேறி வருவதற்கு, பெரும்பங்கு அவர்களை ஊக்கப்படுத்தி, வளர்த்து விடும் மூத்த பதிவர்களையே (பெற்றோர்களின் அன்பை போல்…) சாரும்..! அது போல் என்னை வளர்த்து விட்ட அன்புள்ளங்களுக்கு நன்றி..! 
                  
        எதற்காக இந்த நன்றி நவின்றல்…? (கண்டிப்பாக இது முத்தின கேஸ்தான் என்ற முடிவுக்கு நீங்கள் வருவதற்குள் சொல்லி விடுகிறேன்..!) சொல்கிறேன்..!
           
        கிரிக்கெட்டில், தம் மனதுக்கு பிடித்த ஆட்டக்காரர் பேட்டிங்கில் முதலில் வந்து விட்டால், அவர் சதம் எடுப்பதற்குள், டி.வி முன் அமர்ந்து ஆட்டத்தைப் பார்த்து ரசிக்கும், ஒரு கிரிக்கெட் ரசிகர் படும் அவஸ்தை அவருக்கும், அவரை படைத்த அந்த கடவுளுக்கும் தான் தெரியும்….!  ஒவ்வொரு ஓவருக்கும், ஒவ்வொரு பிரார்த்தனைகளுடன், அன்றைய வேலைகளை மறந்து (ஏன் தன்னையே மறந்து) அவர் அரைச்சதம் அடித்து முடித்தவுடன், ஒரே சந்தோசம்…! மேலும் முன்னேறி முழு சதத்தையும் தாண்ட ஆவல்…! பல எதிர்பார்ப்புகள்…! இப்படிபட்ட நேரத்தில் அந்த அரை சதத்தை (புதியவர் என்றால்,) ஆடியவர் எடுப்பதற்குள் அவரின் பிரயாசைகள், சிரமங்கள், அவருக்குத்தான் தெரியும்…! ஆனால் ஆட்டத்தில் அனாசயமாக முன்னேறிய பின் ஒவ்வொரு ஆட்டத்திலும் சதங்கள் அவருக்கு புதிதல்ல…!  அது பழகிப்போன ஒன்று..! அவரின் ஆட்டத்தை பார்த்து ரசிக்கும் ரசிகருக்கும், “இவர் வந்தால் வெற்றிதான்! என்ற நம்பிக்கை…! “சதங்களின்றி இவர் களத்திலிருந்து செல்ல மாட்டார்” என்ற பரிபூரண எதிர்பார்ப்பு…! இப்படி ஒரு சூழல், கிரிக்கெட் உலகத்தில்…!
                  
        அப்பாடா…! இப்போது ஒரு வழியாக நான் என் விஷயத்துக்கு வருகிறேன். (இல்லையென்றால், முத்தியதை குணமாக்கும் சில வைத்திய நிலையங்கள் எனக்கு பரிந்துரைக்க படலாம்..! அதற்குள் விளக்கி விட்டு அகன்று விடுகிறேன்..!) (ஒரு சிலர் தரையில் ஏதோ தேடி எடுக்க முயற்சிப்பது தெரிகிறது..!) கொஞ்சம் இருங்க..! இருங்க…! உங்களுக்கே புரிந்திருக்கும் என நினைத்தேன்..! புரியவில்லையா..? நானும் அந்த “புதிய கிரிக்கெட் ஆட்டகாரர்” மாதிரி சிரமப்பட்டு, கஷ்டப்பட்டு ஒரு வழியாக இந்த பதிவுடன் “அரைச்சதம்” அடித்து விட்டேன். இன்னும் முழுச்சதத்திற்கு எத்தனை முயற்சிகளோ.! எத்தனை ஆட்டங்களோ..! எத்தனை நாட்களோ..! ஆனால் “அதுவும் பெற வேண்டும்,” என பிரார்த்திக்கும் பதிவுலக ரசிகர்களின் நல்ல உள்ளங்களுக்கு எனது அன்பான நன்றிகள்..!
   
        எனது நன்றி நவின்றலுக்கு ஒரு வழியாக அர்த்தம் விளங்கி விட்டதா..? இப்போது தலைப்பிற்கு ஏற்றால் போல், ஏதாவது சொல்லுவீர்கள் என்று நிச்சயமாக, ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்…!  
       
                        நன்றிகள் கலந்த
                      கமலா ஹரிஹரனின்
 

9 comments:

 1. வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்க

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே.!

   தங்கள் முதல் வருகைக்கும், பின்னூட்டங்களுடன் ௬டிய வாழ்த்துக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.

   நன்றியுடன்,
   கமலா ஹரிஹரன்.

   Delete
 2. தொடர்ந்து எழுதுங்கள் சகோதரி துவண்டு விடவேண்டாம் 50 என்ன 500 றே நம்மால் எழுதமுடியும் என்ற நம்பிக்கை வையுங்கள்... அடுத்த 450 க்கும் நான் கருத்துரையிட வருவேன் நிச்சயமாக... தொடருங்கள்.
  அன்புடன் கில்லர்ஜி

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே.!

   தொடர்ந்து எழுத வாழ்த்தும் உங்கள் நல்ல உள்ளத்துக்கு நன்றிகள் சகோதரரே..! இன்னும் 450 பதிவா.? கடவுளின், அருளும், தங்களை போல உற்சாகபடுத்தும் நல்லுள்ளங்களும், தொடர்ந்தால், 500 ஐ எட்ட வாய்ப்பு உள்ளது..! பார்க்கலாம்..! நடப்பவை அனைத்தும் ஆண்டவனின் கையில் உள்ளது..!

   நன்றியுடன்,
   கமலா ஹரிஹரன்.

   Delete
 3. மேலும் பல பதிவுகள் எழுதிட வாழ்த்துகள்......

  இது ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கட்டும்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே.!

   தங்கள் வருகையும், கருத்துக்களும், வாழ்த்துக்களும், என் எழுத்தை இன்னமும் மேம்பட செய்வதற்கு உதவியாக இருக்கும் சகோதரரே..! என் பதிவுகள் சிறக்க, இது ஒரு நல்ல ஆரம்பமாக அமையட்டும் என, நீங்கள் மனமாற வாழ்த்தியமைக்கு என் மனப்பூர்வமான நன்றிகள்..!

   நன்றியுடன்,
   கமலா ஹரிஹரன்.

   Delete
 4. ‘’அன்பு நண்பியே வணக்கம், விருது ஒன்றினைத் தங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்’’ பெற்றுக்கொள்ளவும்.
  அன்புடன்
  கில்லர்ஜி.

  ReplyDelete
 5. வணக்கம் சகோதரரே!

  தங்களுக்கு கிடைத்த விருதினை எனக்கும் பகிரந்தளித்த தங்கள் பெருந்தன்மைக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்.! விருதினை பெற்றமைக்கு மிகவும் மகிழ்வடைகிறேன்..!

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்..

  ReplyDelete