Monday, January 2, 2012

"தானே".......... "தானே" ...........



காலைக் கதிரவனை துணைக்கழைக்காமல்,
காலை நனைத்து விட்டு ஓடும்,
கடல் அலைகளை கட்டவிழ்த்து,
சாலை வரை ஓட விட்டு,
சாலையோர மரங்களுக்கு,
சடுதியில் சாவை தந்தபடி,
சாலையை சகதியாக்கி,
சாலையோரத்தை கசடாக்கி,
விரையும் வாகனங்களை முடக்கி,
விரையத்தை உண்டாக்கி,
இன்னும் பல அழிவுகளை,
இயன்ற வரை  பரிசளித்து விட்டு,,
"தானே" வந்து  "தானே" சென்ற புயலே, "நீ"
நீடித்து ஓரிடத்தில் நிலைகொண்டிருந்த போது, உன்,

நிலை கண்டு பரிதவித்து,
இடிந்து போகாமல் எங்கள்,
இயல்பான பாசத்தில், உனக்கொரு,
பெயரை தோ்ந்தெடுக்க,
பெயர் கிடைத்த பேரின்பத்தில் , "நீ"
பயணச்சீட்டு எதுவுமின்றி உன் வேகமான
பயணத்தை துவக்கி விட்டாய்...
அவசரமான உன் பயணத்தில், எங்கள்
அத்தியாவசிங்கள் தொலைந்து போக,
வெற்றியுடன் முடிந்த உன் பயணத்தால்,
வெற்றிடமானது நீ நடந்து சென்ற பாதைகள்.
வேறிடமானது எங்கள் ஐாகைகள்..

அழிவுகள் ஆயிரத்தோடு நீ..
அமைதிப் புயலாகி போனாலும்,
விவேகமற்ற உன் வேகத்தில் நீ,
விட்டுச் சென்றது எங்களின் பரிசான,
உன் பெயரையுந்தான்......இனி,
தரணி உள்ள வரைக்கும்,
"தானே" யின் தனித்துவம்
தானே நிலைத்திருக்கும்......

No comments:

Post a Comment