Sunday, January 23, 2022

முரண்பாடுகள் .

எப்போதும் இந்த சண்டைதானா ....? வர வர இதற்கு ஒரு முடிவு காணவே இயலவில்லையே.. ?" காலையில் எழுந்ததுமே மனம் புழுங்கியபடி ஆழ்ந்த யோசனையில் இருந்தாள் தேன்மொழி.

கண்ணாடியில் தன் முகம்  பார்த்துக் கொண்டிருந்த முத்தரசனின் மனமும் இதே யோசனையுடன் கூடிய  வேதனையில்தான் இருந்தது. 

"அழகாய் அதிலும் அருமையாய்  இருந்த அந்த இளமை காலம் இனி வரவே வராதோ...?"  என ஒரு நொடி தோன்றியதும் , கண்ணாடியில் தன் முகம் பார்க்கப் பிடிக்காமல், மனது வெறுப்பில் சுடு தணலில் நின்ற மாதிரி சுணங்கி கொண்டது. 

"என்ன பேசாமல் காலையிலிருந்து இப்படியே கண்ணாடியை பார்த்தபடி இருந்தால்,  பொழுதுக்கென்று சாப்பிடும் வயிற்று பாட்டுக்கு ஏதாவது வழி செய்ய வேண்டாமா?சமைத்து வைத்ததெல்லாம் ஆறி அவலாக வேறு போகிறது...." முணுமுணுப்பது போல் சொன்னாலும், தேன்மொழியின்  பேச்சு  மாறி சற்றே கோபக் கூக்குரலாய் கேட்டது முத்தரசனின் காதுகளில். 

"என்னை என்ன பண்ணச் சொல்கிறாய்? தினசரி நானுந்தான் நாள் தவறாது உழைக்கிறேன். நம் உடம்பு  சிறிதளவாவது பலமாக இருக்க உன் வாயையும் நீ சிறிது கட்டிக் கொள்ள வேண்டும்...! காலையிலேயே இப்படி நாவுக்கு ருசிக்க செய்ததை சாப்பிடுவதா? அது மட்டுமின்றி பிறகு வேண்டுமென்றே என்னையும், வசை பாடும் வார்த்தைகளால் தோண்டித் துருவி ஆயிரம் ரணமாக்கி, நீயும் உன்னை வீணில் காயப்படுத்தி கொள்கிறாய்.... பிறகு  எதுவுமே அடிக்கடி முடியவில்லையே என்ற புலம்பல் வேறு..! " கொஞ்சம் கோபம் வரப்பார்த்தது முத்தரசனின் வார்த்தைகளில். 

" ஆமாம்... என்னவோ... உன்னைத்தான் நான் எப்போதும் குறை சொல்வதாய்  நீயாக கற்பனைச் செய்து கொள்கிறாய்...! எனக்கென்று வரும் என் வேதனைகளை நான் வேறு யாரிடம் புலம்பி தீர்த்துக் கொள்வதாம்....? " தேன்மொழியின் வார்த்தைகளில் சற்று வேகம் தெறித்ததும், முத்தரசன் வேறு வழியின்றி அடங்கிப் போக ஆரம்பித்தான். 

பதிலுக்குப் பேசப்பேச இப்போதெல்லாம் அது வீண் சண்டையில்தான் முடிகிறது. இறுதியில் வேதனையும் வருத்தமுந்தான் முத்தரசனுக்கு பரிசாக கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. 

  "சரி.. சரி நம்மிருவருக்குள் இப்போதே சண்டை வேண்டாம். இப்போதைக்கு உன்  வாயாற வேண்டியதை  திருப்தியாக  நீ உண்டு கொள். என்னை மட்டும் தொந்தரவு செய்யாதே...! "

" எப்படி நீயும் என் அருகில் இருக்கும் போது உன்னை மட்டும் விட்டு, விட்டு நான் எப்படி எனக்கு வேண்டியதை சாப்பிடவாம்....? அதுதான் எனக்கும் உனக்கும் கட்டிப் போட்ட வாழ்நாள் பந்தமென்ற ஒன்று இருக்கிறதே...! என்றாள் கடுப்பான தேன்மொழி. 

" அதை நினைத்துத்தான் எனக்கும்  எப்போதும் சங்கடமாக உள்ளது. அன்பான உறவாகவும் இருக்க முடியவில்லை. சட்டென உதறி விட்டும் போகவும்  முடியவில்லை. " அவனின் பதிலாக வார்த்தைகளின் முணுமுணுப்பை கேட்டதும், 

"என்ன சொல்கிறாய் ? சரியாக கேட்கவில்லை. ஏன் இப்படி பல்லை கடித்துக் கொண்டு பேசுவது போல் பேசுகிறாய்..? சொல்வதை சத்தமாகத்தான் சொல்லேன். ..! " என  தேன் மொழி புலுபுலுவென பிடித்துக் கொண்டாள். 

" ஒன்றுமில்லை... ஏதோ என் மனக்குறையை சொன்னேன்... சரி வா.. இருப்பதை, வாய்க்கு ருசிப்பதை சாப்பிடலாம். .. ! என்றபடி, கண்ணாடியை விட்டு நகர முற்பட்டான் . 

"ஆமாம்... இந்தக் மனக்குறைவுக்கொன்றும் தினசரி குறைவில்லை." முகம் வளைத்து சுற்றி முணங்கி கொண்டாள் தேன்மொழி. 

இரவு. ... வீட்டில் அனைவரும் படுக்கையை விரித்து துயல துவங்கி விட்டனர். அமைதியான  அந்த பொழுதில், தேன்மொழி அவன்  உள்ளத்தின் வேதனை முனகல் கண்டு மறுபடி ஆரம்பித்தாள்.  "என்னவாயிற்று? ஏன் இப்படி அமைதியாக தூங்காமல், என்னையும் படுத்துகிறாய் ?" 

"ஒன்றுமில்லை..  காலை, மதிய உணவுகள் கொஞ்சம் ஒத்துக்கல்லை.." 

"ஏன் நன்றாய்தானே இருந்தது. அதில் என்ன பிரச்சனை உனக்கு....? என் நாவுக்கு எல்லாமே சுவையாகத்தான் இருந்தது... எனக்காக எதையும் விட்டுத் தந்துப் போகும் சுபாவம் உனக்கு இப்போதெல்லாம் வருவதேயில்லை..." என்றவள் தன் மனதில் அதன் ருசியை நினைத்தபடி அதில் திளைத்தாள்.  

"என்னையும் சாப்பிட வேண்டுமென்று தொந்தரவு செய்கிறாய்.... உன் ருசி வேறு..... உன் ரசனை வேறு.... உன் ஆரோக்கியமும் வேறு.... உன்னளவுக்கு என்னால் ஒத்துப் போக முடியுமா . என்பதை யோசிக்கவே மாட்டேன் என்கிறாய்...!" என்றான் சிறிது வலி தந்த கடுகடுப்புடன். 

"சரி... சரி.. பேசிப் பேசி உள்ளே அமைதியாய் தூங்கும் நம் குழந்தை மெளனமொழியை எழுப்பி விடாதே.  .. உன்னால் எனக்கும் அவளுக்கும்  இப்போதெல்லாம் தினமும் ஏதோவொரு  பிரச்சனை.... அவள் சின்னவள்தானே என்ற அலட்சியம் உனக்கு என்றுமே அதிகம்.... பேசாமல் வலிகளை பொறுத்துக் கொண்டு தூங்க முயற்சி செய்...!! நாளைக் காலையில் உன் பிரச்சனை எல்லாம்  சரியாகி விடும்..... " என்று உணவின் ருசியோடு ஒன்றியிருந்த தன் நினைவுகளை  கெடுத்து விட்டானே  என்ற கோபம் தலைக்கேற கடுகடுத்தாள் அவள். 

" ஏன் இப்படி கோபப்படுகிறாய்.. ? உனக்கு கொஞ்சமும் ஆறுதலாக பேசத் தெரியாதா? நீ இப்படி இப்போதெல்லாம், தினமும் வெறுப்போடு  பேசியே என் நிம்மதி போய் விட்டது. நம் இளமை கால  ஆரம்பத்தில், நான் பிறரிடம் பேசும் போதெல்லாம்  அடக்கவொடுக்கமாய் என் பின்னால் நின்றபடி அவரவருக்கு தக்கபடி பதில் சொல்வாய்....! அப்போது எனக்குப் பெருமையாயிருக்கும்....ஆனால், வரவர உன் பேச்சுகளில், என் உறவையே விரும்பாதவள் போல் அவ்வப்போது என்னையே ஒதுக்குகிறாய்...!  நான் என்ன சொன்னாலும், என் செயல்களில் ஏதோவோரு குற்றம் காணுகிறாய்..   காரணம்...! இப்போது கொஞ்ச நாட்களாக நான் உன் கண்களுக்கு  முன்பு இருந்ததை விட  அழகற்றவனாகி விட்டேன். இல்லையா..? அதனால்தான் இப்படி.. என்னை அவமதிக்கிறாய்.. இல்லையா... " படபடவென்று சொன்ன அவன் வார்த்தை அழுத்தங்களில், அவன் மனவலி, உடல் வலி இன்னமும் அதிகமானது அவனுக்கு தெரிந்தது. 

" இதற்குத்தான் எவ்வளவு  அழகாக இருந்தாலும், ஆரோக்கியமாகவும்  இருக்க வேண்டுமென்பது.... புரிகிறதா..? அழகாக இருக்கிறோம் என்ற எண்ணத்தில், அப்போது என்னைப்பற்றி சிறிதேனும் கவலைப்படாமல் எல்லோரிடமும் வலிய போய் சிரித்து, சிரித்துப் பேசினாய்..... அப்போது எனக்கு எப்படி வலித்திருக்கும்....?" அவளின் பழைய நினைவை அவன் மீட்டெடுத்து தந்த நினைவலைகளுக்குள் வந்து கோபமாய் சிடுசிடுத்தாள். 

" ஆமாம்.. ஆரோக்கியதிற்கு என்ன குறைச்சல்... உன்னுடன் வந்து வாழ ஆரம்பித்த போது, எனக்கு உன்னை விட ஒரு வயது குறைவு வேறு...!!!! ஆனால், அதற்காக நீயோ, நானோ அன்று குறையேதும் பட்டுக் கொள்ளவில்லை. அழகான திடமான ஆரோக்கியத்துடன்தான்  நம் ஆரம்பகால உறவு தொடர்ந்தது.. . அப்போதெல்லாம்  உன்னுடன் நான் ஒற்றுமையாக வாழவில்லையா?  நம் ஒற்றுமையை பார்த்து நம் குடும்ப உறவுகளும், நம்மை சுற்றியுள்ளவர்களும் புகழவில்லையா? எல்லாம் இத்தனை காலம் நல்லபடியாகத்தான் போயிற்று. ...! ஏதோ.. என் போதாத நேரம்....!! இப்போதெல்லாம்  உன்னிடம் அன்பை இழந்து வெறும் வசவுகளை மட்டுந்தான்  கேட்க வேண்டுமென்ற சாபங்கள் பெற்று வந்து விட்டேன்  போலும்.....!!!!"அவன் தனக்கும் கோபம் எப்போதேனும் இப்படி வருமென நிரூபித்தான்.

" சரி... இப்போது என்ன செய்ய வேண்டுமென்கிறாய்..? உனக்கு என்னுடன் வாழ பிடிக்கவில்லையென்றால், அன்றைக்கு நம் உறவுகள்  சொல்லியபடி,  உன் விருப்பப்படி பிரிந்து என்னை விட்டு வாழ வகை செய்து கொள்... அதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபனையில்லை...." அவள் சட்டென்று சற்று விட்டேத்தியாக கூறியதும் அவன் ஒரு நிமிடம் தன்  வலி மறந்து அதிர்ந்துப் போனான். 

" என்ன இப்படி பட்டென்று  சொல்லி விட்டாய்.... .? இதுதான் இத்தனை நாள் நாம் வயது வித்தியாசத்தை பொருட்படுத்தாது சேர்ந்து வாழ்ந்தற்கு அடையாளமா.. .? அதை நினைவில் கொண்டு நீ இத்தனை நாள், வாழ்க்கையில், உன் கோபங்களுக்கிடையே  எத்தனையோ தடவைகள் மரியாதை குறைவாக என்னை அதட்டி பேசிய  போதெல்லாம் கூட நான் இப்படி வருத்தப்பட்டதில்லையே. .. இன்று என்னை கொஞ்சமும் அன்பின்றி, உன் விருப்பப்படி பிரிந்து போவதானால் போ.. என்கிறாயே....நான் விரும்பி வேண்டும் விருப்பமா இது..? " அவன் குரல் உடைந்து அழாத குரலில் குமுறினான். 

" பின்னே என்ன செய்வதாம் ? எப்படியும் ஆயுசு பரியந்தம் நாம் இணையாக சேர்ந்து வாழப் போவதில்லை....இதுவரை நாம், நீ சொல்கிறபடி, ஒற்றுமையுடனும், பிறர் கண்டு பொறாமைபடும்படிக்கும் நல்லபடியாக வாழ்ந்தாகி விட்டோம். எனக்கு மட்டும் உன்னைப் பிரிய ஆசையா? இல்லை, நீ இல்லாமல் சந்தோஷமாக இருப்பேன் என்று நினைத்தாயா.... ? நானும் நிலை குலைந்துதான் போவேன்.. நீயும் முன்னைப் போலில்லாமல், என்னையும், நான் சங்கடமில்லாமல் உண்டு உடுப்பதையும் எப்போதும் குறை கூறிக் கொண்டேயிருக்கிறாய்.... நான் பிறப்பிலிருந்தே இறைவன் எனக்களித்த என் கடமையைத்தான் செய்கிறேன்.  உனக்கு என்னுடன் இருந்து ஒத்துழைத்து வாழ முடியாவிடில், அல்லது, விருப்பமில்லாவிட்டால், இல்லை, உன் வலிகளும், உன் ஆசைகளுந்தான்  பெரிதாக தோன்றும் போது, நம் குடும்ப உறவுகள் சொல்படி கேட்டு அவர்களின்  குடும்ப மருத்துவரை சென்று பார்த்து நாம்  நிரந்தரமாக பிரிவதற்கு ஏற்பாடு செய்து கொள்... என்றேன்...  நான் கூறுவது சரியா, தவறா. . என நீயே இன்று இரவு முழுவதும் விழித்திருந்து யோசித்துப் பார்த்துக் கொள்.." என்று மடமடவென முடிவெடுத்தது போல  பேசிய தேன்மொழி" எனக்கு தூக்கம் வருகிறது.. . .." என்றபடி மெளனமானாள். 

ஒரு நிமிடம் தெறிக்கும் வலிகளையும் பொருட்படுத்தாது திகைத்து நின்றான் முத்தரசன். 

" இவள் பேசுவதும் நியாந்தானே.....!!  உலகில்  வாழும் அனைவரைப் போலவும் தனியாகத்தான் பிறந்தோம்.... தனியாகத்தான் பிரியப் போகிறோம்....உறவுகள் என்றும் நிரந்தரமல்ல.. ..!!! இடையில் வரும் உறவுகளால் பிரிவையும், பாசத்தையும் அதையும் தங்கள் சுயநலங்களுக்காக காட்ட முடியுமே தவிர்த்து நம் தலைவிதியை அவர்களால்  மாற்ற முடியுமோ...? " என்ற வேதாந்த தத்துவத்தில் ஆழ்ந்த முத்தரசன் "கோபத்துடன் பேசினாலும் அவள் பேச்சில் வெளிப்பட்ட உண்மையை உணர்ந்தவனாய், "இனி தன் வலிகளை பெரிதுபடுத்தி, இல்லை, தன் உயிரே கூட போனாலும், அவள் விருப்பத்திற்கு தடைகளை போடக் கூடாதென்ற" உறுதியை எடுத்தபடி, நாளைப் பொழுதில் விடியும் நல்லதொரு விடியலை எதிர்பார்த்து வேறு வழியில்லாமல் வலியுடன் தூங்க முயற்சித்தான். 

வணக்கம் சகோதர சகோதரிகளே. ..

கதையை புரிந்து கொள்ள முடிந்ததோ ..? ஒன்றுமில்லை....!! இப்படி வலிகளுடன் வேதாந்தமும், தத்துவங்களும் சேர்ந்து  இணைந்து நம் மனதில் தோன்றி விட்டால், நம்மால் பொறுக்க  முடியாத வலிகளைக் கூட ஒரளவு பொறுத்தபடி சமாளித்து விடலாம் என்பது என்னை ஆண்டு வரும்  தற்போதைய  காலமாகிய இந்த "பல்லவர்களின் ஆட்சியில்" நான் பெறும்/பெற்று வரும் கீதோபதேசங்கள். அதன்படி  தூங்காத இரவுகளில்,  என் கற்பனை குதிரையுடன் கடிவாளம் ஏதுமின்றி பயணித்ததில் சேர்ந்து  எழுந்த கதை   இவை. ..  .:))  புரிந்து கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். புரிந்து படித்ததற்கு சகோதர சகோதரிகளுக்கு மிக்க நன்றிகள். 🙏. 

இது போன வருடமே என் ப(ல்)ல தொந்தரவுகளின் காரணத்தால் பிறந்த கதை. இந்த கதையை படிக்கும் பொறுமை அப்போது அனைவருக்கும் இருக்க சாத்தியமில்லை. ஏனெனில் அப்போது அனைவருக்குமே ஏதோ ஒரு வகையில் ஏகப்பட்ட தொந்தரவுகள் இருந்து கொண்டேதான் இருந்தன. சரி.. நாமும் இதைப் படிக்கச் சொல்லி தொந்தரவு தர வேண்டாமென இதை தூக்கி கிடப்பில் போட்டு விட்டேன். இப்போது மறுபடியும் பத்து நாட்களாக என்னை மிகவும் இந்த கதையின் விஷயங்கள் தொந்தரவிப்பதால், எங்கோ மறைவில்  கிடந்த  இந்தக்கதையை  அது நினைக்க வைத்து விட்டது. :)))) 

இடுக்கண் வருங்கால் நகைத்துதானே ஆக வேண்டும். அதுவும் நட்புகளோடு சொல்லி மனம் விட்டு சிரிக்கும் போது  வலி தரும் வேதனைகள் குறைந்து விடும் அல்லவா...!! ஆனால் இப்போதும் உங்கள் அனைவருக்கும் தொந்தரவு தருவதற்கு பொறுத்துக் கொள்ளவும். அதெல்லாம் ஒன்றுமில்லையென ஆர்வத்துடன் படித்தவர்களுக்கு என் பணிவான நன்றிகள் . 🙏. 

41 comments:

  1. முத்தரசன் பல்.   தேன்மொழி நாக்கு!  பல்வலி பிரச்னை.  பேசமுடியாத நிலையால் பிறந்தது மௌனமொழி!

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம் வாவ்!!! ரொம்ப ரசித்தேன்!! சூப்பர்! ஆப்ட்!

      கீதா

      Delete
    2. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆமாம்.. தாங்கள் கணித்து சரிதான். முத்துப்போன்ற பல் வரிசைக்கு முத்தரசன். தேன் (அதில் சமயத்தில் விஷமும் கலந்திருப்பது இயற்கை.) போல பேசும் நாக்கிற்கு தேன்மொழி, உறங்கி கொண்டிருக்கும் குழந்தை உள நாக்கு. இதுவும் இவர்களின் கலாட்டாவில் சமயத்தில் அதன் பிரச்சனையை அது தரும். இப்படியாக அதற்கு பெயர் சூட்டி விட்டேன். என் வலிகள் தந்த பிரச்சனையில் இப்படியெல்லாம் யோசித்தால் கொஞ்சம் வலி தெரியாமல் இதமாக இருக்கும். இதோ மீண்டும் இப்போது பத்து நாட்களாக அவதி. அதிலும் மூன்று நாட்களாக அவஸ்தை. இன்று உங்களுக்கெல்லாம் பதில் தர தாமதமாவதற்கு அதுவும் ஒரு காரணம். மன்னிக்கவும்.

      தாங்கள் அன்புடன் வந்து தந்த கருத்துரைக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    3. வணக்கம் சகோதரி

      ஆமாம்.. சகோதரர் ஸ்ரீராம் அவர்கள். சரியாக சொல்லி விட்டார். முத்துப் போன்ற பற்கள் முத்தரசன். தேன் போன்ற மொழியுடையவள் நாக்கு. உள்ளே உறங்கிக் கொண்டிருக்கும் உள்நாக்கு குழந்தை மெளன மொழி.

      என்னவோ போங்க....! இப்படி அசட்டுத்தனமாய் சிந்திப்பதில் அப்போதைய வலிகள் சற்று மறக்கப்படுகிறது.நீங்களும் அதை பொருட்படுத்தாமல் ரசித்து பாராட்டி தட்டிக் கொடுப்பது போல கருத்திடுவதில் வலிகள் முற்றிலும் பறந்துப் போகின்றன. இப்போதும் இத்தகைய வலிகள் சரியாக போக வேண்டுமென வேண்டிக் கொண்டேயிருக்கிறேன்.நன்றி சகோத.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. படிக்க ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் பெயர்களுக்கு காரணம் இருக்கவேண்டும் என்று தோன்றியது.  உரையாடல்கள் கொஞ்சம் மறைபொருளாகவே வந்து கொண்டிருப்பது போலவும் தோன்றியது.  உங்கள் விளக்கம் தெளிவு படுத்தியது!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தாங்கள் பதிவை ரசித்துப் தந்த கருத்துரைகள் மனதிற்கு மகிழ்ச்சியை தருகிறது.

      /உரையாடல்கள் கொஞ்சம் மறைபொருளாகவே வந்து கொண்டிருப்பது போலவும் தோன்றியது. உங்கள் விளக்கம் தெளிவு படுத்தியது!/

      ஹா.ஹா.ஹா. நிறையவே குழப்பி விட்டேனா? நான் வளவளவென்று எழுதினாலும், எல்லோருக்கும் எளிதில் புரிந்து விடும். எனினும் ஒருவேளை கடைசியில் யாருக்கும் புரியாமல் போய் விடுமோ "ஏதோ ஒரு மாதிரியாக எழுதி இருக்கிறாரே என"தவறாக" நினைத்து விட்டால் என்ன செய்வதென்று" அதற்கு என் விளக்கத்தையும் சற்றே குழப்பமாகத்தான் தந்திருக்கிறேன். அழகாக புரிந்துக் கொண்டு நல்லதொரு கருத்துக்கள் தந்தமைக்கு உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. மிகவும் சரியாகத்தான் சொல்லி இருக்கிறேனா என்பதும் தெரியாது. ஆனால் நல்ல கற்பனை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும்,கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நான் கற்பனையாக நினைத்து எழுதியதை அப்படியே சரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள். மெளன மொழி என்பதை உள்நாக்கு என்று மட்டும் குறிப்பிட்டேன். பைத்தியகாரத்தனமான சிந்தனை என எண்ணாமல், நல்ல கற்பனை என்று உளமாற பாராட்டியமைக்கு மிக்க மகிழ்ச்சி. தங்களது ஊக்கம் தரும் கருத்துகள் என் எழுத்துகளுக்கு ஒரு பரிசு. மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. ஆரம்பத்தில் படிக்கும்போதே எனக்கு உடலுறுப்புகளுக்குள்ளான பேச்சு என்பது தோன்றிவிட்டது. அது எவை என மட்டும் யோசிக்கவில்லை.

    கணவன் உழைப்பு, மனைவியின் ரசனையான சாப்பாட்டிற்காக என்பது இயல்பாக உள்ளது இல்லையல்லவா?

    ஒருசில வாரங்கள் முன்பு இனிப்பு நேந்திரன் சிப்ஸ் பாக்கெட் காலி செய்தபோது ஆசை இருந்தாலும் எல்லாத்தையும் கடித்துச் சாப்பிட கஷ்டமாயிருக்கிறதே என நினைத்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ஹையோ நெல்லை எனக்குப் பிடித்த சிப்ஸ்!! அது சரி எப்படி அனுமதி கிடைத்தது? ஒவ்வொரு மாதத்தின் அலல்து இரண்டு மாதங்களுக்கிடையில் போனா போகிறது என்று கிடைக்கும் சலுகையா!??? ஹாஹாஹாஹா

      கீதா

      Delete
    2. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும்,கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கதையின் ஆரம்பத்திலேயே புரிந்து படிக்க ஆரம்பித்ததற்கு மகிழ்ச்சி.

      நான் கணவரின் உழைப்பு என்று கூறியது அந்த நாவின் ருசிக்காக பல் தினமும் அனுசரித்து போவதை குறிப்பிட வேண்டி,அவ்வாறு எழுதினேன்.

      நேத்திரம் உப்பு சிப்ஸ் எப்போதும் கடினமாகத்தான் இருக்கும். அதில் இனிப்பு வேறு உள்ளதை நான் அறியேன். சிப்ஸ... அதையெல்லாம் சாப்பிட்டு நாளாகி விட்டது. பற்களுக்காக நானும் கட்டுப்பாடுடன் இருக்க முயல்கிறேன். ஆனால் நாவு என்ற ஆசை (தேவதை என்பதா? அரக்கி என்பதா?) சமயத்தில் சாப்பிடு என்று அன்போடு ஆணையிட்டு விட்டால் தொலைந்தான் முத்தரசன்.:)). உங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரரே.

      @ கீதாரெங்கன் சகோதரி, இதையெல்லாம் சாப்பிட யார் அனுமதி தர வேண்டும்? சகோதரர் நெல்லைத்தமிழரரே அவருக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்வாரே.நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. கற்பனையும், எழுத்தும் நன்று

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /கற்பனையும், எழுத்தும் நன்று/

      தங்கள் அன்பான ஊக்கம் மிகுந்த பாராட்டுரைகளுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /அவ்வளவே - வாழ்க்கை.../

      உண்மை.. வாழ்க்கையில் இதையெல்லாம் கடந்துதான் வர வேண்டியுள்ளது. ஒவ்வொன்றையும் கடப்பதற்குள். இவ்வளவுதான் வாழ்க்கையா என மனது பக்குவமடைந்து விடும். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. அக்கா கதை நன்றாகவே புரிந்தது. உங்கள் கற்பனை அபாரம். மறைமுகமாகச் சொல்லி வந்தாலும் நன்றாகவே புரிந்தது.

    //" அதை நினைத்துத்தான் எனக்கும் எப்போதும் சங்கடமாக உள்ளது. அன்பான உறவாகவும் இருக்க முடியவில்லை. சட்டென உதறி விட்டும் போகவும் முடியவில்லை. " //

    யதார்த்தமான வரிகள் கமலாக்கா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கதையை புரிந்து ரசித்துப் படித்து தந்த பாராட்டுகளுக்கு மிக்க மகிழ்ச்சி சகோதரி.

      அதுதான் பதிவின் முடிவில், சென்ற வருடத்தில் எழுதியதோடு, இப்போது பகிரும் போதும் சில வரிகள் புரிவதற்காக எழுதி சேர்த்தேன். மேலே நான் கூறியபடி, வலி மிகுந்த இவ் வேளைகளில் இப்படி யோசித்தான் வலியின் தன்மை தெரியவில்லை. ஏதோ என் இடர்களை நகைச்சுவையாக எழுதி பகிர்ந்ததை நீங்கள் அனைவரும் வந்து படித்து கருத்துகள் இட்டிருப்பது இப்போது மீண்டும் வந்திருக்கும் பல் வலியை குணப்படுத்துகிறது. அதற்காக உங்கள் அனைவருக்குமே மனமார்ந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன். .

      Delete
  8. மௌனமொழி - இது இப்பெயர் கதையின் உணர்வுகளை நன்றாகவே சொல்லிவிட்டது!!!

    பெயர் செலக்ஷன் சொன்ன விதம் எல்லாமே அருமை கமலாக்கா. உங்கள் கற்ப்னைத்திறன் வியக்க வைக்கிறது.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /மௌனமொழி - இது இப்பெயர் கதையின் உணர்வுகளை நன்றாகவே சொல்லிவிட்டது!!!/

      நான் உள்நாக்கிற்கு மெளனமொழி எனப் பெயரிட்டு அதை குழந்தை வடிவத்தில் சித்தரிந்திருந்தேன். கதையின் உணர்வுக்கும் மெளன மொழிகள் பக்கபலமாக இருப்பதாக நீங்கள் குறிப்பிடுவதும் பொருந்தும்.

      பெயர் தெரிவுக்கள் நன்றாக உள்ளதாக கூறியது மகிழ்ச்சியை தருகிறது. உங்கள் அனைவரிடமிருந்தும் நான் இப்போதுதான் அனைத்தையும் கற்றுக் கொள்கிறேன். எனினும் உங்கள் பாராட்டுகள் எனக்கு உடல் நலம்/பலம் பெற டானிக்காக இருந்து செயலாற்றும் என நம்புகிறேன். தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. 'பல்'லவர்களின் ஆட்சி என்பதால் உரையாடல்களும் செந்தமிழாய்!!!!!! ஹாஹாஹாஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      குறிப்பாக குழப்பியடித்த பதிவைப் பற்றி அனைவரும் குழம்பாமல் இருக்க பல்லவர்களையும் துணைக்கழைத்து கொண்டேன்.ஹா. ஹா. அதன விளைவே பெயர்களும் அரச குடும்பத்தை சார்ந்ததாக அமைந்தது.

      பதிவை ரசித்து தந்த கருத்துரைகளுக்கு மிக்க நன்றிகள் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. குடும்ப மருத்துவரை என்ற இடத்தில் அழுத்தம் கொடுத்து இருப்பது சிறப்பு.

    மனசாட்சியோடு உறவாடுவது போலவும் இருந்தது சகோ அருமை.

    தங்களது கற்பனை முயற்சிக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை ரசித்துப் படித்து தந்த நல்லதொரு கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

      தங்களது ஆதரவான கருத்துகளும், வாழ்த்துகளும் ரொம்ப மகிழ்வாக உளளது. மிக்க நன்றி சகோ.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. கதை வெளியான போதே வாசித்து விட்டேன்.. சளித் தொல்லை, மூக்கடைப்பு பிரச்னைகளால் உடனடியாக கருத்தைப் பதிவு செய்ய இயல வில்லை..

    நல்ல பதிவு..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீங்கள் நேற்றே படித்து விட்டேன் என்று அறிந்ததும் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

      இப்போது தங்கள் உடல்நலக்குறைவு எப்படி உள்ளது..? இங்கும் மகன் மருமகள், குழந்தைகள் என அனைவருக்கும் சளி, ஜுரம் என மாற்றி மாற்றி வந்து போய் கொண்டு உள்ளது.கால நிலை சரியில்லை. தங்கள் உடல்நிலையை கவனித்துக் கொள்ளவும்.

      நல்ல பதிவு என்றதற்கு மனமார்ந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. மற்ற நண்பர்களுக்கு உடனே விளங்கியது அவர்களது அதிர்ஷ்டம்... பல்லவர் என்று வந்தபோது தான் சுதாரித்துக் கொண்டேன்...

    அரச முத்தாக இருந்தாலும் மொழித் தேனாக இருந்தாலும்
    எல்லாம் விதித்த விதியின் படியே!..

    தாங்களும் தொப்பி கறுப்புக் கண்ணாடியுடன் மர்மக் கதை எழுத ஆரம்பிக்கலாம்..

    நலம் வாழ்க..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /பல்லவர் என்று வந்தபோது தான் சுதாரித்துக் கொண்டேன்./

      ஹா ஹா. பதிவை ரசித்து படித்ததற்கு மகிழ்ச்சி அடைந்தேன் சகோதரரே.

      /அரச முத்தாக இருந்தாலும் மொழித் தேனாக இருந்தாலும்
      எல்லாம் விதித்த விதியின் படியே!../

      உண்மையான கருத்து. விதி வழிதான் வாழ்க்கை. வருவதை அன்போடு வரவேற்றபடி வாழ்ந்துதான் ஆக வேண்டும்.

      /தாங்களும் தொப்பி கறுப்புக் கண்ணாடியுடன் மர்மக் கதை எழுத ஆரம்பிக்கலாம்../

      ஹா.ஹா.ஹா. நன்றி. நன்றி. ஆனால், தங்களை விடவா என்னால் மர்ம கதைகளை எழுத முடியும்.? நாளை தொடர்ந்து இன்னமும் நான்கு வாரங்களுக்கு செவ்வாயை எதிர்பார்த்து நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோமே...!!

      தங்கள் பிரார்த்தனைகளுக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  13. மிக அருமையாக இருக்கிறது முத்தரசன், தேன்மொழி கதை.
    கதையை படித்து கொண்டு வரும் போதே புரிந்து விட்டது. கடைசியில் நீங்கள் சொன்னதும் அருமை.
    மெளன மொழி எப்போதும் நல்லது. உறவுகளுடன் உறவாடும் போது சில நேரம் மெளனம் நல்லதுதான்.


    //" இவள் பேசுவதும் நியாந்தானே.....!! உலகில் வாழும் அனைவரைப் போலவும் தனியாகத்தான் பிறந்தோம்.... தனியாகத்தான் பிரியப் போகிறோம்....உறவுகள் என்றும் நிரந்தரமல்ல.. ..!!! இடையில் வரும் உறவுகளால் பிரிவையும், பாசத்தையும் அதையும் தங்கள் சுயநலங்களுக்காக காட்ட முடியுமே தவிர்த்து நம் தலைவிதியை அவர்களால் மாற்ற முடியுமோ...? //

    தலைவிதியை மாற்ற முடியாது என்பது உண்மை தான்.

    கற்பனை உரையாடல் மிக அருமை. வலிகளுடன் வாழ கற்றுக் கொள்ள வேண்டும்தான் போலும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      நலமா? தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கற்பனைக் கதை நன்றாக உள்ளதென நீங்கள் கூறியமைக்கு மிக்க மன மகிழ்ச்சியடைந்தேன் சகோதரி.

      கதையை படித்து வரும் போதே புரிந்து கொண்டு படித்ததற்கு மிக்க நன்றி.

      /மெளன மொழி எப்போதும் நல்லது. உறவுகளுடன் உறவாடும் போது சில நேரம் மெளனம் நல்லதுதான்./

      ஆம். மெளனம் எப்போதுமே சிறந்தது. நான் எழுதியதில் மெளனமொழி குழந்தை எனக் குறிப்பிட்டது உள் நாக்கு. நீங்கள் சொல்வதும் நன்றாகத்தான் உள்ளது. இந்த மெளன மொழி வீண் சண்டைகள் வாராது சுமூகத்தை நிலைநாட்டி விடும்.

      /கற்பனை உரையாடல் மிக அருமை. வலிகளுடன் வாழ கற்றுக் கொள்ள வேண்டும்தான் போலும்./

      தங்கள் அன்பான பாராட்டுரைகளுக்கு மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      இறைவனிடம் பிராத்தனைகள் செய்தபடி அவ்வப்போது வரும் இந்த வலிகளுடன்தான் வாழ வேண்டும். என்ன செய்வது? ஏனென்றால் விதி வலியது அல்லவா? தங்கள் அன்பான கருத்துகள் ஆறுதலை தருகின்றன. நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  14. கதை அருமை. மிகவும் அழகாகச் சொல் நயத்தோடு எழுதியிருக்கிறீர்கள். பொருத்தமாகச் சொற்களில் விளையாடியுள்ளீர்கள். முரண்பாடுகள், மனவலிகள் இல்லா வாழ்க்கை இல்லைதான். முரண்பாடுகளையும் வலிகளையும் மௌனமொழியால் விலக்கி நகர்ந்து செல்ல வேண்டியதுதான். இறைவன் சித்தத்தை யாராலும் மாற்றமுடியாதுதான்.

    உரையாடல்கள் நன்று

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கதை அருமையென கதையை ரசித்துப் படித்து தந்த அன்பான கருத்துக்கு மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.

      /முரண்பாடுகள், மனவலிகள் இல்லா வாழ்க்கை இல்லைதான். முரண்பாடுகளையும் வலிகளையும் மௌனமொழியால் விலக்கி நகர்ந்து செல்ல வேண்டியதுதான். இறைவன் சித்தத்தை யாராலும் மாற்றமுடியாதுதான்./

      ஆம். உண்மை. முரண்பாடுகள் இல்லாத வாழ்க்கை ஏது? ஒருவருக்கொருவர் அனுசரித்து வாழ்வதில்தான் வாழ்வின் வெற்றியே அடங்கியுள்ளது. எப்போதுமே இறைவன் நமக்காக தந்ததை அன்புடன் ஏற்று வாழ பழகிக் கொள்ளத்தான் வேண்டும்.

      பதிவுக்கு நல்லதொரு கருத்தை தந்து,பாராட்டுதல்கள் தந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  15. படித்துக் கொண்டே வரும் பொழுது பூடகமாக வேறு எதையோ சொல்கிறீர்கள் என்பது புரிந்தது. இதைப் போல பல் வலி பற்றி முன்பு ஒரு முறை எழுதியிருக்கிறீர்களோ? நல்ல கற்பனை! 

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை ரசித்து படித்து நல்ல கற்பனை என்ற நல்லதொரு கருத்துகள் தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

      /இதைப் போல பல் வலி பற்றி முன்பு ஒரு முறை எழுதியிருக்கிறீர்களோ?/

      ஆமாம்.. நல்ல நினைவாற்றல் உங்களுக்கு..! உங்கள் நினைவுத் திறனுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  16. நல்ல கற்பனை. முன்னரும் ஒரு தரம் இப்படித்தான் எழுதி இருந்த நினைவு. தேன்மொழி நல்ல பெயர் என்றாலும் மௌனமொழி இன்னமும் கவர்ந்தது. முதலில் புரியாமல் இருந்தாலும் குடும்ப மருத்துவர் என்றதும் புரிந்து கொண்டேன். விரைவில் உங்கள் வலிகள் அனைத்தும் மறைந்து/மறந்து சுகமாக வாழப் பிரார்த்தனைகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை ரசித்துப் படித்து தந்த நல்லதொரு கருத்துகளுக்கு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

      /முன்னரும் ஒரு தரம் இப்படித்தான் எழுதி இருந்த நினைவு./

      ஆம். அது வேறு மாதிரி எழுதியிருந்தேன்.அதுவும் இதே பல்வலி பிரச்சனைதான். உங்களுக்கும் நல்ல நினைவாற்றால்.. நல்ல நினைவாற்றலுக்கு வாழ்த்துகள் சகோதரி.

      இந்த வலிகள் வரும் போது தூக்கம் வராததால், இப்படி கற்பனைகள் செய்து வலியை மறக்கிறேன். தாங்கள் பதிவை ரசித்து படித்ததற்கு மீண்டும் என் மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.

      தங்கள் ஆறுதலான பிரார்த்தனைகளுக்கு மிக்க நன்றி சகோதரி. உங்கள் பிரார்த்தனைகள் சீக்கிரம் என் வலியை குணமாக்கும் என நம்புகிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  17. நான் முதலில் போட்ட கருத்து வரவில்லை. பதிவு பெரிதாக இருப்பதால் மெதுவாய்ப் படிச்சுட்டு வரேன்னு எழுதி இருந்தேன். அதைக் காணோம். :(

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      அடாடா.. இதே பிரச்சனை சகோதரி கீதா ரெங்கனும் சென்ற பதிவில் சொல்லியிருக்கிறார். ஏன் இப்படி கருத்துக்கள் வராது போகிறது.? நான் உண்மையில் என் இரண்டு மூன்று பதிவுகளுக்கு உங்களை காணவில்லையே..! உங்கள் மகன் மருமகள், பேத்தியின் வரவால் உங்களுக்கு வீட்டில் நிறைய வேலைகள் இருக்குமென நினைத்திருந்தேன். ஆனால் நீங்கள் வந்தும், பதிவுக்கு கருத்துகள் தந்தும், உங்கள் கருத்துகள் வராமல் இருந்திருக்கிறது என இப்போதுதான் தெரிந்து கொண்டேன். ஆனால், மீண்டும் முயற்சி எடுத்து தாங்கள் வந்து தந்த கருத்துகள் கண்டு நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். உங்களுக்கு மிக்க நன்றிகளும்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  18. கமலாக்கா வந்துவிட்டேன், நலமாக இருக்கிறீங்கள் எனத் தெரிகிறது. கதை வித்தியாசமாக எழுதியிருக்கிறீங்கள்.. இப்போ இவர்களுக்கு என்ன பிரச்சனை பிரிந்து போகுமளவுக்கு.. எனத்தான் புரியவில்லை.. வயசுக்கும் .. திருமணத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை, மனசுதான் அனைத்துக்கும் காரணம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீங்கள் வந்து பதிவை படித்து கருத்துக்கள் தந்திருப்பது மிக்க மகிழ்ச்சியை தருகிறது. நான் நேற்று இரவுதான் பார்த்தேன். உடன் பதில் தர இயலவில்லை. தவறாக நினைக்காதீர்கள். அவசரத்தில் கொஞ்சம் நீங்கள் பதிவை கூர்ந்து படிக்கவில்லையோ என நான் நினைக்கிறேன். என் பல்வலியைப் பற்றி கற்பனைகளோடு பற்களும், நாக்கும் கூறும் வண்ணம் ஒரு கதையாக எழுதியிருக்கிறேன் என இறுதியில் நான் எழுதியதை தாங்கள் படிக்கத் தவறி விட்டீர்கள் போலும். .

      தாங்கள் தந்த அன்பான கருத்துக்கு மிக்க நன்றிகள். அடிக்கடி பதிவுகளுக்கு வந்து கருத்துரைகள் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ரொம்ப நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  19. அருமையான வலி நிவாரணமாக
    எண்ணங்கள் நேராகட்டும். வலியின் முணுமுணுப்பைத் தாங்குவது
    கஷ்டமே.
    அவர்கள் வாழ்வும் நேராகட்டும்.
    பல்வலி தேவலையா அம்மா.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். என் பதிவுக்கு வந்த தங்கள் கருத்துக்கு தாமதமாக பதிலளிப்பதற்கு மன்னிக்கவும்.

      பதிவை ரசித்து வாழ்த்திட்டிருப்பதற்கு நன்றி. இப்போதைக்கு பல் வலி குணமாகி விட்டது சகோதரி. அன்புடன் விசாரித்தற்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete