Wednesday, August 14, 2019

மன மாற்றம்.

விசாலி உறுதியாக சொல்லி விட்டாள். நாளையிலிருந்து ஒருவர் மாற்றி ஒருவராக வீடு சுத்தம் செய்ய வேண்டுமென்ற திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென உறுதியாய் சொல்லி விட்டாள். நானும் ஒரு வ (வீ) ம்பில் சரியென சம்மதம் தந்து விட்டேன்.

வம்பென்றால் அது  இதுதான்....
"பூ... இது என்ன பொல்லாத வேலையா? வீடு பெருக்கி, துடைத்து பாத்திரங்களை சுத்தம் செய்வது இதெல்லாம் ஒரு கடுமையான வேலையா? இதற்கு இத்தனை பில்டப்பா உனக்கு? என்னமோ நீ ஒருத்திதான் இதை நித்ய கர்மாவாக செய்கிற மாதிரியும், நாங்கெல்லாம் ஏதோ உன் செயலுக்கு ஏதோ அபகீர்த்தி பண்ற மாதிரியும் என்ன ஒரு அலட்டல் உனக்கு..! இது பொல்லாத வேலையா? இதை சாக்கிட்டு எத்தனை நாள் எங்களுக்கு பண்ண வேண்டிய (காலை வக்கணையாய், வாய்க்கு ருசியாய் பண்ற டிபனை)  வேலைகளை ஒத்தி வைச்சோ, இல்லை நிராகரித்தோ, இருந்திருக்கிறாய் ! இதுதான் வம்புக்கு முதல் படிகளும், அதற்கு ஏற்றிச்சென்ற மேற்படி படிகளும்.

 வீட்டு வேலைகளுக்கு  உபகாரத்துக்கென்று  ஒரு ஆள் கூட வைத்துக் கொள்ளாமல், திருமணமாகி பதினைந்து வருடங்களாக, பள்ளிக்குச் செல்லும் இரு குழந்தைகளையும், வாய்க்கு ருசியாக குக்கரில் சாதம் என்ற வஸ்துவை கூட சமைக்கத் தெரியாமல், அதட்டி உருட்டி (அன்பாகத்தான்)   "வெளியில் சென்று வேலை பார்த்து குடும்பத்தை நிமிர்த்துவது மட்டுந்தான் என் வேலை"  என்ற கண்டிப்போடும், "மற்றபடி குடும்பத்தை நீதான் பொறுப்பாக கவனித்துக் கொள்ள வேண்டுமென்று" (ஐஸ்) வைத்து ஒப்பேற்றி வரும் என்னையும், சமாளித்து வாழ்ந்து வருபவள் விசாலாட்சி என்ற என்னருமை மனைவி விசாலி.

திடீரென ஒரு நாள் அவளுடைய இயலாமையை சுட்டிக் காட்டி அவள் அக்கம்பக்கம் தோழிகள் உபதேசங்கள் செய்ததையும்,( அதை அவளே அவள் வாயால் சொன்ன வாக்குமூலங்கள்தான்.! இல்லையென்றால் எனக்கு எப்படி தெரியும்?) ஒரு துணையாளை வைத்துக்கொள்ள சிபாரிசு செய்ததையும் சொல்ல ஆரம்பித்து விட்டாள்.

 சில வீட்டு தோழிகள் இந்த மாதிரி துணையாளை வைத்துக் கொள்வது விட நம் துணைவனையே அவ் வேலைகளுக்கு "பக்கபலமாக" வைத்துக் கொண்டால், பணத்துக்கு பணமும் மிச்சம்.. நம்முடைய சுமைகளும் குறைந்து கூன் விழும் முதுகை நிமிர்த்தி காப்பாற்றலாம் என திருவாய் மொழிந்தருள , அதுவும் அன்றைய கூட்டத்தில் பலத்த கைதட்டல்களுக்கு நடுவே  "பரிந்துரை பேச்சாக" வந்ததாம். (இதுவும் அவள் சொல்லித்தான் எனக்கு தெரிந்தது. இதைச் சொல்வதில் தன்  கணவர் உஷாராகி விட்டால் என்ன செய்வது என்ற பயமில்லாமல், வெகுளி மனப்பான்மையில் அதையும் மறைக்காமல் சொன்ன இவளை இந்த விஷயத்தில்  பாராட்டியே ஆக வேண்டும்.)

ஆக இந்த விஷயங்கள் பொழுது போகாத ஒரு நேரம், பொழுதை போக்க வைத்த பேச்சுகளாக மாறி எங்களுக்குள் அலசபட்டதின் காரணமாக ஒரு துணையாளை வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்தது.

அந்த துணையாளைப்பற்றி ஒரு மாதகாலம்  விசாலியால்  கூறப்பட்ட புகழுரைகள்  நாளடைவில் "பெளர்ணமி தினத்திற்கு பின்வரும் நாட்களாய்" ஆகிப்போனதின் காரணம், அந்த துணையாளின் கவனகுறைவுகளும், அவர் எடுத்த சம்பளம் பிடித்தமில்லாத விடுமுறைகளுந்தான்.

அதன்பின் பக்கத்து வீட்டு தோழிகளின் துணையாளர்கள் ஷிப்டு முறையில் வந்து தோற்றுப் போயினர். அதன் காரணமும், "உன்னுடைய அதீதமான சுத்த கெடுபிடிகள்தான்" என" பழகிய வட்டாரங்கள்" எச்சரித்துப் பேசியதில் சற்று எரிச்சலாகி போனாள் விசாலி. . அந்த எரிச்சல்கள் என் மீது அடிக்கடி "அர்ச்சுனன் அம்பாக" பாய மேற்கூறிய வம்புக்கு  அது விதைகளாகின.

வருடக்கணக்காக ஒரே வேலைகளை கடமையாக செய்தும் அசராத விசாலி, ஆறுமாதம் பணி விலக்கி  பணி மாற்றி உழைத்ததில் கொடி மாதிரி இருந்தவள் கொஞ்சம் வளர்ந்த "கொடிக் காயாய்" ஆனதில், அக்கம்பக்கம் விசாரிப்புகள் பலமாகி அவளிடம் இதுவரை இல்லாத பிணிகள் தஞ்சமாக வந்து அடைக்கலம் தேடியதோடு, தனக்கு  "பேர்கிடைத்த சந்தோஷத்திலே," மருத்துவரை சந்திக்க மனம் குளிர பயணித்தன.

இப்படியாக நாட்கள் நகர்ந்து பார்த்து தோல்வியுற்றதில், அந்த ஒரு "வம்பு நாள்" எனக்கு சோதனையாக அமைந்தது. அதுதான் விசாலி என்னிடம் நாம் இருவருமாக ஒருநாள விட்டு ஒருநாள் வேலைகளை பங்காக்கிக் கொள்ள வேண்டுமென " ஒப்பந்த தாள்" இல்லாமலே, முடிவாக்கிய நாள்.

மறுநாள் காலை சீக்கிரம் எழுந்து என் கடமைகளை  துடைப்பத்தின் துணையுடன் கைப்பிடித்தேன். பெருக்கி,  துடைத்து, அவள் சமையல், டிபனை முடித்துப் போட்ட பாத்திரங்களையும்., அதற்கு முன்பே எனக்காக காத்திருந்த பாத்திரங்களையும் கழுவி முடித்து நிமிரும் போது, மணி ஒன்பதை காட்டியது.

இடையிடையே விசாலியின் "கரெக்ஷன் குரல்" வேறு இரண்டு மூன்று முறை நான்   செய்த வேலையை "இம்போஸிஷன்"  செய்ய வைத்தது.  பழக்கமில்லாத வேலையை செய்ததில் என் முதுகும் அறையிலிருந்த பீரோ கண்ணாடியை பார்த்து தாண்டிய போதெல்லாம் ஒன்பதை நினைவூட்டியது.

என் மகன்கள் பள்ளிக்கு கிளம்பும் அத்தனை அவசரத்திலும், என்னை நமுட்டு சிரிப்புடன் பார்த்து கடப்பதாக தோன்றியது. அப்போதெல்லாம் வேர்த்து விறுவிறுத்த  முகத்தை சிரிப்பால் துடைத்தபடி "அப்பா எப்படி? சுறுசுறுப்பாக வேலைகளை முடிக்கிறேனா ? " என்று "பரீட்சை முடிவு" எதுவும் எதிர்பார்க்காத "பிரி. கே. ஜி குழந்தை" மாதிரி கேட்டாலும், "நீங்களும் இப்படி மாட்டும் நாள் வெகு தூரத்தில் இல்லையடா" என மனதுக்குள் (ஒரு சந்தோஷத்துடன்) சொல்லிக் கொண்டேன். ஆக ஒன்பதரைக்குள் நான் அவசரமாக ரெடியாகி ஆபீஸ் கிளம்பும் போது, விசாலி அன்றைய வேலைகளை முடித்து விட்ட "திருப்தியோடு" எனக்கு  விடை கொடுத்தாள்.

ஒரு மாதம் வரை இப்படி ஒடியது. அவள்  முறை வரும் போது, என் வேலையாக காய்கள் நறுக்குவது, குக்கர் எப்படி ஒழுங்காக வைப்பது, தோசை, இட்லி வார்ப்பது என சின்ன சின்ன வேலைகளும் கொஞ்ச கொஞ்சமாக என் வசமாகிப் போனதில் நான் இப்போது பாதி "குடும்ப பொறுப்பாளானாக" பதிவி உயர்வு பெற்றேன்.

இத்தனை நாள் விசாலி அவளே செய்து வந்த வேலைகளின் கடினங்கள் புரிய ஆரம்பித்தன. பாவம். .! எனக்காகத்தானே அவள் "எள்ளத்தைனை" வேலைகளை கூட என்னிடம் தராது அவளே பார்த்து, பார்த்து செய்திருக்கிறாள் என்ற பச்சாதாபம் மனதுள் பொங்கிய பிரவாகமாக  ஆர்பரித்தெழுந்தது. ஆனால் வீட்டின் வேலைகளுக்கிடையே அலுவலகத்து கெடுபடிகளும் சேர்ந்து என்னைக் கொஞ்சம் களைப்படைய வைத்ததென்னவோ உண்மை. அடிக்கடி இப்படி  களைப்படையும் காரணத்தை மருத்துவரிடம் சென்று விசாரிக்கும்  எண்ணமும் எனக்கு அடிக்கடி எற்பட்டது.  இருந்தாலும் "பச்சாதாப அலைகளின்" விளைவாய் விசாலியிடம் ஒன்றும் காண்பிக்காது நான் இருந்ததில் மாதங்கள் கடந்து குழந்தைகளில் பெரியவன் கல்லூரியில் காலடி எடுத்து வைத்து விட்டான்.

"என்னங்க மணி எட்டு.. இப்படி தூங்கறீங்க? இன்னைக்கு சன்டே குழந்தைகளுடன் எங்கேயாவது போயிட்டு வரலாமா?" சியாமளா அசந்து தூங்கிய கணவனை எழுப்பினாள். 

எழுந்து நீண்ட சோம்பலொன்றை விட்டபடி மீண்டும் படுத்தான் தியாகு.  "ஆமாம் எங்கே போறது? தீபாவளி வேறு நெருங்கியாச்சு... அந்தச் செலவெல்லாம் இருக்கு. நீ என்னவோ இன்னைக்கு வீடெல்லாம் க்ளீன் பண்ணுன்னு  வேறு சொல்லிகிட்டிருந்தே! அது தவிர இப்படி எங்கே போனாலும் காசு செலவுதான்... என்றான் முணுமுணுப்பாக. 

"அதெல்லாம் இருக்கட்டும்! அடுத்தவாரந்தானே பண்டிகை. அதுக்குள்ளே வீடு சுத்தம் செஞ்சிட்டு போச்சு! இன்னொன்னு ! பக்கத்து வீட்டுக்கு  இப்பத்தான் புதுசா வந்திருக்கிற உதவியாளரை இங்கேயும் நம்ப வீட்டுக்கும் வந்து வேலைக்கு ஒத்துக்க ஏற்பாடு பண்ணிடலாமா ? ..." 

நீயா? அனாவசியமா பணம் செலவழிக்க உனக்குப் பிடிக்காதே. ! செலவை மிச்சபடுத்தனும்தானே,யார் சொல்லியும் கேக்காம  நீயும் நானும் இந்த வேலையெல்லாம் செய்றோம். இன்னைக்கு எனக்குன்னு ஒரு வேலை வேறே இருக்கு.. அது சரி.! உனக்குள்ளே எப்படி இந்த தீடீர் மாற்றம்?" என்றான் தியாகு சற்று கேலியாக. 

ஆமாம்..நான் கொஞ்சம் ஆரம்பத்திலிருந்தே சிக்கனந்தான்... அதனாலே நம்ப வீட்டு வேலையே நாமளே பண்ணிட்டா அந்த பணம் வேறு எதுக்காவது பயன்படுமேன்னு யோசிப்பேன். ஒரு விதத்துல அதுவும்  கஞ்சதனந்தான்னு இப்ப உணர்ந்திட்டேன். 

எப்போதும் போல நீங்க எழுதுற கதையெல்லாம் வெளியிடுற பத்திரிக்கைக்கு அனுப்பி வைக்க நம்ப வீட்டு கதையையே கிண்டலும், கேலியுமாக பேர் மாத்தி கொஞ்சம் கருவும் மாத்தி எழுதி  ஒரு கதையை உருவாக்கி வைச்சதை நேற்று யதேச்சையா  நான் படிச்சுட்டேன். முடிவா நீங்க அதிலே ஏதாவது காமெடிங்கிற பேர்லே விபரீதமா சொல்லி கதையை சோகமயமா  மாத்துறதுக்குள்ளே உண்மையிலேயே நான் என் முடிவை மாத்திகிடனும்னு தோணிச்சு. இனி  சிக்கனமாக இருக்க வேண்டியதுதான்.  ஆனா அநாவசியமா கஞ்சத்தனம் பார்க்க கூடாதுன்னு முடிவு எடுத்திட்டேன். இந்த வாரம் நான் அவங்ககிட்ட பேசி வீட்டு வேலைகளுக்கு உதவியா  ஏற்பாடு செய்துடுறேன். இனி உங்களுக்கு, மட்டுமில்லை எனக்கும் கொஞ்சம் வேலை பளு குறையும். எழுந்திருங்க....! குழந்தைகளையும் ரெடி பண்றேன்... இன்னைக்கு நாமெல்லாம்  எங்கேயாவது ஜாலியா போயிட்டு, அப்படியே வெளியிலேயே சாப்பிட்டு வரலாம்.! " என்றபடி எழுந்த தன் மனைவியை ஒரு அதிசயத்தைப் பார்ப்பது போல் பார்த்தான் தியாகு . 

சிக்கனமாக இருக்க வேண்டுமென வார்த்தைக்கு வார்த்தை உபதேசித்து, தன்னையும் வருத்திக் கொண்டு, என்னையும் வேலைகள் வாங்கி, பணத்தை எண்ணி எண்ணி செலவு செய்த  தன் மனைவி தான் எழுதியதை பார்த்ததும் திருந்தி விட்டாள் என்பது ஆச்சரியப்பட வைத்தது.

அறைக்கு வெளியில் சென்றவள் மறுபடி உள்ளே வந்து, "நீங்க எனக்கு நல்லபடியா வேணும். கதையிலே உங்க உடம்பு படுத்துற மாதிரி இருக்கிறதை திருத்தி எழுதிடுங்க.. கதை முடிவுலே ஏதாவது அசுபமா மட்டும்  எழுதிராதீங்க. அதை என்னாலே தாங்கவே முடியாது... என் சிக்கன எண்ணத்தாலே நீங்க எவ்வளவு சொல்லியும் கூட மாட ஒத்தாசைக்கு ஆள் வைத்துக் கொள்ளாது இருக்கும் என் போக்கையும் பொறுத்துக் கொண்டு, நீங்க ஒருநாளைப்போல  ஆபீஸும் போய்கிட்டு, வீட்டிலேயும் தினமும்  எனக்கு உதவிகிட்டும்  வர்றீங்க. ஆனா, உங்க அசெளகரியத்தை நான் ஒருநாளும் புரிஞ்சுக்காமே இருந்திட்டேன்.  உங்களுக்கு, உங்க உடம்புக்கு கதையிலே வருகிற மாதிரி ஏதாவது பிரச்சனையென்றால், என்னாலே......என்னாலே.. ." என்றபடி  பேச முடியாமல் கண்ணீர் வழிய உணர்ச்சி வசபட்டவளை, "என்மீது உனக்கு இவ்வளவு பாசமா? என்று மனதுள் கொஞ்சமில்லாமல் நிறையவே பெருமைபட்டவனாய் எழுந்தவன்  பிரியமுடன் அவளின் கைப்பற்றி கட்டிலில் தன்னருகே  அமர்த்திக் கொண்டான் தியாகு. 
                             நிறைந்தது. 

அனைவருக்கும் 
சுதந்திரதினதி
நல்வாழ்த்துகள்.🙏.













     🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
                              நன்றி கூகிள்.. 

36 comments:

  1. குட்மார்னிங். இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. காலை வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
      தங்களுக்கும், இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. இனிய சுதந்திர தின வாழ்த்துகள். நானும் பெரும்பாலும் உதவிக்கு ஆள் இல்லாமலேயே தான் செய்து வந்திருக்கிறேன். ச்ராத்தம் போன்ற நாட்களில் கூட சமையலுக்கோ, பாத்திரங்கள் கழுவவோ ஆட்கள் வைத்துக் கொண்டதில்லை. நானே தான் செய்வேன். முடியாமல் தான் இருக்கும். ஆனாலும் சிக்கனம் கருதி எல்லாம் இல்லை. நம் வேலையை நாமே செய்து கொண்டால் தான் கை, கால்கள் கொஞ்சமானும் நன்றாகச் செயல்படும் என்னும் எண்ணத்தில். ஆனால் இப்போது மருத்துவர் கட்டிலை விட்டே இறங்காதே என்றுசொல்லி விட்டார். காலைக்கடன்களை முடித்துக் குளித்துக் கொள். அதற்கு மட்டும் கட்டிலை விட்டு இறங்கினால் போதும் என்று சொல்கிறார். அதனால் தான் இப்போது சமையல் இல்லை. இரவு உணவு தயாரிப்பு இல்லை. ஆஅவாசை போன்ற விரத நாட்களில் மட்டும் சமைக்கிறேன். சுமார் 2 மாதமாக காடரிங் சாப்பாடு தான்! :( சாதம் மட்டும் வீட்டில் வைக்கிறேன். ஸ்வாமிக்கு நிவேதனம் பண்ணணும்னு!

    ReplyDelete
    Replies
    1. காலை வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்களுக்கும் என் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள். இது சும்மா கதைக்காக எழுதியது. ஆனால் உண்மைதான்! அந்த காலத்தில் முக்கால்வாசி பெண்கள்தான் வீட்டு வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வார்கள். அப்போது எதற்கும் எந்திரங்கள் கிடையாது. ஆண்கள் செய்வதை கெளரவ குறைச்சலாக பார்ப்பார்கள். ஆனால் அதன் பின் வந்த காலங்கள் மாறி விட்டது. என் அம்மாவும், பாட்டியும் வீட்டு வேலைகளை உதவிக்கு ஆள் வைத்துக் கொள்ளாமல் அவர்களின் கடைசி காலம் வரை செய்து விட்டார்கள். நானும் இதுவரை உதவிக்கு ஆள் இல்லாமல்தான் விஷேடங்கள் முதலிய எல்லாவற்றிகும் தனியாளாக பண்ணியிருக்கிறேன்.

      தங்கள் உடல்நிலையை கவனித்துக் கொள்ளவும். சிறுவயதிலிருந்தே இப்படி எல்லா வேலைகளையும் ஒண்டியாக பண்ணியதால்தான் உடம்பு இப்போது படுத்துகிறது என்னவோ? மருத்துவர் சொல்கிறபடிக்கு கொஞ்சம் ஒய்வு எடுத்துக் கொண்டு பின் வீட்டு வேலைகளை பாருங்கள். தங்கள் உடல்நிலை பரிபூரணமாக குணமாக நானும் இறைவனை பிரார்த்திக்கிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. நம்ம ரங்க்ஸால் (கணவரால்) இந்தப் பெருக்கித் துடைப்பது, பாத்திரம் தேய்ப்பது இதெல்லாம் முடியாது. எப்படியோ ஏதேனும் ஒரு சமையல் பண்ணுவார். காஃபி மட்டும் போடுவார். ஆக அவர் இதைச் செய்யும்போது நாம் தான் பெருக்கித் துடைத்துப் பாத்திரங்கள் கழுவினு செய்யும்படி இருக்கும். ஆகவே இப்போது வேலைக்கு ஆள் வைத்திருக்கிறோம். அடிக்கடி விடுமுறை எடுக்கத் தான் செய்கிறார் அந்தப் பெண்மணி. நேற்றுக் கூட விடுமுறை. என்ன ஒண்ணுன்னா முன் கூட்டிச் சொல்லிடுவார்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      என்னதான் வீட்டு ஆண்கள் பண்ணும் போதும் நாம் எழுந்து கொஞ்சம் வேலைகளை பார்த்தால்தான் நமக்கும் நிம்மதி. உதவிக்கு பெருக்கி துடைக்க ஆள் வைத்துள்ளீர்களா? அதுதான் நல்லது. ஒரு வயதிற்கு பிறகு இந்த வேலைகள் கொஞ்சம் சிரமத்தை தருகின்றன. இங்கும் கடந்த சில வருடங்களாக அந்த வேலைக்கு மட்டும் நாங்களும் ஆள் வைத்துள்ளோம். அவர் வராத நாட்கள் அந்த வேலையும் சேர்ந்து விடும். என்ன செய்வது? அதுவும் முக்கியமான விஷேட நாட்களில் அவர் பணி எஸ்கேப் ஆகி விடும். பாத்திரங்கள் சுத்தப்படுத்துவது எப்போதுமே நாங்கள்தான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. மற்றபடி உங்கள் கதை பெரும்பாலான வீடுகளில் நடப்பதே. ஆனால் அம்பேரிக்காவில் (ஹிஹி அமெரிக்காவை நான் இப்படித் தான் சொல்வேன்.) நாமே தான் எல்லாம் செய்துக்கணும். ஆனால் கணவன், மனைவி இருவருமாக அழகாய்ப் பங்கிட்டுக் கொள்வார்கள். முடிந்த பாத்திரங்களைக் கையால் தேய்த்துவிட்டு மற்றவற்றை டிஷ் வாஷரில் போடுவார்கள். சமையலும் மாற்றி மாற்றி. குழந்தையைப் பார்த்துக் கொள்வதில் இருந்து எல்லாவற்றிலும் ஆணின் பங்கு 50% பெண்ணின் பங்கு 50%

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      அமேரிக்காவில் மட்டுமில்லை.. எப்போதிலிருந்தோ எல்லா இடங்களிலும் ஆணின் பங்கு நிறையவே உள்ளது.
      நான் சும்மா கதைக்காக தமாஷாக வார்த்தைகளை ஜோடித்து எழுதியுள்ளேன். மற்றபடி கதையை படித்து ரசித்ததற்கு மகிழ்ச்சி. எனக்கும் ஏனோ உடம்பை படுத்திக் கொண்டே உள்ளது. அத்தோடு வேலைகள் வேறு நடந்து கொண்டு உள்ளது. பத்து நாட்களாக உதவிக்கு வந்து கொண்டிருந்த ஆளும் இல்லை. அதுதான் இந்த கதை எனக்குள் பிறக்க காரணமாயிற்றோ என்னவோ! பதிவுகள் எழுத கூட நேரம் இல்லை.எப்படியோ ஒரு பதிவை இன்று கொண்டு வந்தாயிற்று. வருகைக்கு நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. //எப்போதிலிருந்தோ எல்லா இடங்களிலும் ஆணின் பங்கு நிறையவே உள்ளது.// இல்லை, எனக்குத் தெரிந்து படுத்துக் கொண்டு வேலை செய்யும் மனைவியை அழைத்துக் குடிக்கத் தண்ணீர் கொண்டு வா என்று சொல்லும்/சொல்லிய ஆண்கள் உண்டு! எல்லோரும் அப்படி எல்லாம் இல்லை. இது கசப்பான உண்மை என்றாலும் இது தானே நிஜமும் கூட.

      Delete
    3. வணக்கம் சகோதரி

      உண்மை உண்மையென ஆமோதித்த சகோதரர் ஸ்ரீராம் அவர்களுக்கும் நன்றி..இது போல் இரு பக்கமும் நிகழ்வதுண்டு. " முடியாமல் படுத்துக் கொண்டு வேலை செய்யும் மனைவியை குடிக்க தண்ணீர் கொண்டு வா" என கட்டளையிடும் கணவர்மார்களையும் நான் பார்த்திருக்கிறேன்.அது தன் ஆணாதிக்கத்தை பறைசாற்றும் செயல். அது போல், வீட்டிற்கு வந்து பேசும் நண்பர்களுடன், இல்லை வீட்டுக்கு வந்த உறவினர்களிடம், பேசிக் கொண்டிருக்கும்,கணவரை ஜாடையாக "போதும்! இந்தப்பேச்சு. சீக்கிரம் முடித்து விட்டு வேறு வேலையை கவனியுங்கள்" என்ற விதமாக தன் கண்ணசைவு மூலமாகவோ இல்லை நேரடியாகவோ வந்து கண்டிக்கும் மனைவிகளையும் நான் பார்த்து வியந்திருக்கிறேன். ஒரு கணவனின் வெற்றிக்குப் பின்னால் ஒரு மனைவிதான் இருக்கிறாள் என்பது சொல் வழக்கு.அதற்கு அவரிடம் கண்டிப்பை மனைவி காட்டினாலும், தன் பாசத்தையும், அவருடைய நெருங்கிய உறவுகளின் தொடர்புகளை துண்டிக்க தூண்டி விடாதிருக்கும் பக்குவத்தையும் காட்டினால் எடுத்த காரியங்கள் அவருக்கும் வசமாகும் வாய்ப்பிருக்கிறது. நானும் எல்லோரையும் குறிப்பிடவில்லை. சில வீடுகளில் நடப்பதைதான் கூறுகிறேன். மீள் வருகை தந்து அலசியமைக்கு, அலச வைத்தமைக்கு நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    4. கதையும் அருமை,உள் கதையின் பக்குவமும் அருமை.தங்களது இந்த கருதும் அபாரம் அம்மா..மிக அருமையான கருத்துக்கள்.

      Delete
    5. வணக்கம்

      தங்கள் முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இப்போதுதான் தங்கள் கருத்தை பார்க்கிறேன். அதனால் தாமதமாக பதிலிடுவதற்கு வருந்துகிறேன். தங்கள் கருத்துக்கு மீண்டும் நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.....


    நிதர்சனமான கதை ..இதை வாசிக்கும் போது அனைவருக்கும் அவர்களின் நிலையும், அனுபவமும் கண்டிப்பாக நியாபகம் வரும் ....

    ..எனக்கு 90 சதவீதம் அந்த நாயகி உடன் ஒத்துபோகும் நிலை ..



    வார்த்தைகளின் கோர்வை அட்டகாசம் ...சூப்பர் மா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்களுக்கும் அன்பான இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.
      கதையை ரசித்துப் படித்து பாராட்டியமைக்கு மிகவும் நன்றி சகோதரி. இப்போதுள்ள கால கட்டத்தில் அதுவும் பெண்களும் உழைத்து சம்பாதிக்கும் காலச் சூழ்நிலையில் இருவரும் சேர்ந்து வீட்டுப் பொறுப்புகளை எடுத்துக் கொள்வதில் தவறேயில்லை. நான் நகைச்சுவைக்கு இந்த கருத்தை கையாண்டேன்.மற்றபடி யாருமே தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். கருத்துக்கு மிகவும் நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. ஆஹா எழுத்தாளர் வீட்டு சம்பாஷனைகளும் நல்லாத்தான் இருக்கு.
    இவ்வார இதழ்களில் எதிர் பார்க்கலாமா ?

    இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள் சகோ.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.

      தங்களுக்கும் என் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

      கதையை மிகவும் ரசித்துப் படித்து கருத்து சொல்லியிருப்பதற்கு மிக்க நன்றி சகோ. எழுத்தாளர்களின் மனநிலையில் அவர்கள் மனதில் எத்தனையோ கருக்கள் உருவாகும். அதில் இதுவும் ஒன்றாக வந்து விட்டது. ஆனால் யாரையும் சுட்டிக் காட்டுவதற்காக இதை எழுதவில்லை. நகைச்சுவையாக என் மனதில் வந்தது இந்த மாத என் பதிவிதழில் தலைக்காட்டி விட்டது. அவ்வளவுதான். கருத்துக்கும்,வருகைக்கும் மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

    கதை அருமை. தோழிகள் உரையாடல், கணவன், மனைவி நினைப்பது எல்லாம் மிக அருமை.

    என் கணவரும் வீட்டு வேலைகளில் பங்கு கொள்ள மாட்டார்கள்.
    உடம்பு முடியவில்லை என்றாலும் மாத்திரை மருந்தை சாப்பிட்டு விட்டு நான் தான் எல்லாம் செய்வேன். நானும் சிறு வயதில் வேலை ஆள் வைத்துக் கொள்ளவில்லை. வயதான பின் தான் உதவிக்கு ஆள் வைத்து இருக்கிறேன்.

    கதை மனதை நெகிழ வைத்து விட்டது. கதையின் நாயகி தன் கணவருக்கு உடல்நிலை சிறிது சரியில்லை என்றதும் விதி முறைகளை தளர்த்தி விட்டார். இனி எல்லாம் சுகமே!

    பெண்கள் வேலையும் பார்த்துக் கொண்டு வீட்டிலும் உழைக்கிறார்கள் தானே! அவர்களுக்கு ஏதாவது கூடமாட ஒத்தாசை செய்யலாம்,
    வேலை பளுவிலிருந்து சுதந்திரம் அளிக்கலாம்.(முடிந்த உதவிகள் தான்)


    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      நலமா? நேற்று எந்த பதிவிலும் தங்களை காணவில்லையே.. வெளியூர் சென்றுள்ளீர்களோ என நினைத்தேன்.

      தங்களுக்கும் என் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள் சகோதரி.

      கதையை ரசித்துப் படித்து கருத்துக்கள் தந்திருப்பதற்கு மிக்க நன்றிகள் சகோதரி. அந்த காலத்தில் (என் அம்மா காலத்தில்) ஆண்கள் வீட்டு வேலை செய்வதை அக்கம் பக்கம் உள்ளவர்கள் கொஞ்சம் தாழ்வாக பார்ப்பார்கள். அதன் பின் காலங்கள் நிறைய மாறி விட்டது. ஆண்களாகவே மனமுவந்து வீட்டில் உதவிக்கு வரவும் தயாராகி விட்டனர்.

      என் கணவரும் வீட்டு வேலைகளுக்கு ஒருநாளும் உடன் வரமாட்டார். தங்கள் நிலைதான் என்னுடையதும். ஆனால் வெளியிலிருந்து சாமான் வாங்கி கொடுப்பது, குழந்தைகளின் கல்வியைப்பற்றி ஆலோசனை செய்வது போன்ற செயல்களை விருப்பத்துடன் செய்வார்.

      தங்கள் கூறுவதும் உண்மைதான். தற்சமயம் பெண்களும் ஆபீஸ் சென்று உத்தியோகம் பார்த்து உழைத்து பொருளாதாரத்தை கவனிக்கும் பட்சத்தில் ஆண், பெண் இருவரும் வீட்டுப் பணிகளை சுமப்பதில் தவறில்லை. மற்றபடி ஒரு பதிவை உருவாக்க என்னுடைய கற்பனைக் கேற்றவாறு கதை முளைத்து விட்டது. ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. //நலமா? நேற்று எந்த பதிவிலும் தங்களை காணவில்லையே.. வெளியூர் சென்றுள்ளீர்களோ என நினைத்தேன்.//

      நினைப்பு சரிதான் கமலா, திருநெல்வேலியில் உறவினர் வீட்டு விழா அதில் கலந்து கொண்டு அப்படியே, சங்கரன் கோவில் போய் வந்தோம்..

      Delete
    3. வணக்கம் சகோதரி

      அப்படியா? மிக்க மகிழ்ச்சி சகோதரி. சங்கரன் கோவிலில் இரண்டு தினங்களுக்கு முன்புதான் ஆடித்தபசு விழா நடைப்பெற்றிருக்கும் என நினைக்கிறேன். அங்கு சென்று சங்கர நாராயணரரை யும், கோமதி அம்மனை தரிசித்து வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்களுக்கும் என் மனமார்ந்த இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. இனிய சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. விசாலி தன் கணவனுக்கு சுதந்திரம் கொடுத்த கதையை சுத்தசந்திர தினத்தில் வெளியிட்டது பொருத்தம்தான்!

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம் ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅஹாஆஆஅ ஹைஃபைவ்!!! நானும் இதே தான் நினைத்து சொல்ல வந்தேன்!!!! சியாமளா தியாகுவிற்கு சுதந்திடம் கொடுத்துவிட்டாள் இந்த சுதந்திர தினத்தில் என்று சொல்ல வந்தேன்!!!!

      கீதா

      Delete
    2. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கதையை ரசித்துப் படித்தமைக்கு மிக்க நன்றி. சுதந்திரம் என்பது கொடுத்து பெறுவதுதானே! இந்த தினத்தில் பொருத்தமான கதை என பாராட்டியதில் மகிழ்ச்சி.இதுவரை நான் "முதலைக்கண்ணீரில்" மூழ்கியிருந்தேன்.ஹா. ஹா. ஹா. வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    3. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஓ.. நீங்களும் இதைத்தான் சொல்ல நினைத்தீர்களா ? எழுதிய நானே இதைப்பற்றி மறந்து விட்டேன். நீங்களும், சகோ ஸ்ரீராம் அவர்களும் கதைக்குப் பொருத்தமாய் இன்றைய நாளை நினைத்திருப்பது குறித்து மகிழ்ச்சி. சியாமளா தியாகுவுக்கு கடின வேலையிலிருந்து சுதந்திரம் தந்து விட்டாள். ஹா. ஹா. கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. பெயர் மாற்றி எழுதிய அந்த பார்ட் முதல் பார்ட் செமையா சிரித்துவிட்டேன் கமலாக்கா...ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கதையை ரசித்துப்படித்து பாராட்டி கருத்துரைகளை தந்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்வாக இருக்கிறது சகோதரி. தங்களைப்போன்ற பதிவர்களின் ஊக்கமும் உற்சாகமும் தந்த ஆசிகள் என் எழுத்துக்களை செம்மையாக்க வேண்டுமென பிரார்த்தித்துக் கொள்கிறேன். தங்கள் வருகைக்கும், அன்பான கருத்துக்கும் மிக்க நன்றிகள் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. அப்புறம் ட்விஸ்ட்!! அதுவும் நல்லாருக்கு கமலாக்கா..நல்ல கற்பனை வளம் உங்களுக்கு.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்கள் கருத்துக்கும், பாராட்டிற்கும் மிக்க மகிழ்ச்சி. உண்மையில் என மன மாற்றத்திற்காக ஏதோ யோசிக்கப் போய் இந்தக்கதை வந்தது. அதனால்தான் அதன் தலைப்பையும் மாற்றமில்லாமல் இந்த கதைக்கும் சூட்டி விட்டேன். எப்படி முடிக்கப் போகிறோம் என்ற கவலையும் வந்தது. கடைசியில் எப்படியோ முடித்த முடிவு நன்றாக உள்ளதென குறிப்பிட்டமைக்கு என் பணிவான நன்றிகள்.வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  13. கமலாக்கா எப்படி இருக்கிறீங்க? அதிராவைக் கண்டும் காணததுபொல இருக்கிறீங்களே:)) சரி அது போகட்டும்...

    கதை படிச்சேன் .. அழகிய கதை, மிக அழகாக எழுதிட்டீங்க.. ஆனாலும் எனக்கு இதில் உடன்பாடிலை, ஏனெனில் நம் நாடுகளில்தான் வீட்டு வேலைக்கு தோட்ட வேலைக்கு சமைக்க, தோய்க்க என ஆள் வைக்கும் வழக்கம் தலை விரித்தாடுகிறது.. நம் வீட்டு வேலையை நாமே செய்தால் என்ன? உடம்புக்கும் நல்ல எக்ஸசைஸ் தானே? ஒருவரைப்பார்த்து ஒருவர், வீட்டு வேலைக்கு ஆள் வைக்காவிட்டால் அழகில்லை எனும் நிலைமையாகிவிட்டது.

    இப்போ வெளி நாடுகளில் நாம் என்ன செய்கிறோம்.. அனைத்தையும் நாம் தானே கஸ்டப்பட்டுச் செய்கிறோம்... இதில் என்ன இருக்கு... நம்மை நாம் பிஸியாக வைத்திருப்பதே நம் மனதுக்கும் உடம்புக்கும் நல்லது என்பது என் கருத்து.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

      நலமா சகோதரி? எப்படியிருக்கிறீர்கள்? தங்கள் குழந்தைகள் எப்படியிருக்கிறார்கள்? பிரயாணமெல்லாம் மகிழ்வாக இருந்ததா? உங்களை காணவில்லையே என்று உங்கள் உயிர் தோழி சகோதரி ஏஞ்சலின் அவர்களிடம் நடுவில் விசாரித்திருக்கிறேன் தெரியுமா? (சாட்சி எ. பி பதிவு. ஹா. ஹா. ஹா) உங்களை சகோ கில்லர்ஜி பதிவில் பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஆனால் நேற்று நான் எழுந்தவுடன் நெட் உடன் படுத்ததாலும், சில வேலைகள் காரணமாயும், நேற்று இரவுதான் என்னால் வலை உலா வர முடிந்தது. எ. பி யிலும், சகோ கில்லர்ஜி, பதிவிலும் தங்கள் வருகை கண்டு மிகவும் மகிழ்ச்சியென குறிப்பிட்டுள்ளேன். (சா. நம் 2.)
      (அப்பாடா "கண்டும், காணாமைக்கும்" விளக்கம் தந்து விட்டேன் யுவர் ஆனர். நீதி நிலைக்கட்டும். ஐயம் நீங்கட்டும். தெளிவு பிறக்கட்டும். ஹா. ஹா. ஹா.)

      தாங்கள் என் பதிவுக்கு வந்து அருமையான கருத்துக்கள் கூறியிருப்பதற்கு மிகுந்த மகிழ்ச்சி சகோதரி. உண்மை. இயன்ற வரை செய்யும் வேலைகள் நம் உடலை வலுபடுத்ததான். ஆனாலும் நாம் இப்போது யந்திரங்களை சார்ந்து எந்திரமாகத்தான் வாழ்ந்து வருகிறோம். நான் எழுதியது சும்மா கதைக்காகத்தான். மற்றபடி தங்கள் கூற்றுப்படி எந்நேரமும் நம்மை பிஸியாக வைத்துக் கொண்டால், உடல், மனதுக்கு மிகவும் நல்லது.

      உண்மையில் என் மனதுக்கு இது ஒன்றுதான் இப்போதைக்கு ஆறுதலாக உள்ளது. வருகைக்கும், கருத்துக்கும் மறுபடியும் மகிழ்ச்சியுடன் மிக்க நன்றிகள் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  14. மனைவிக்கு உதவியாக வீடு பெருக்குவதையும் சமையல் செய்வதையும் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் ஆச்சரியமாக எழுதுவார்களோ! இதெல்லாம் நான் எவ்வளவோ காலமாகச் செய்கிறேன். இன்றுவரை சொல்லிக் காட்டினேனா? இல்லையே!
    (உஷ், என் வீட்டுக்கு இப்படி நான் எழுதிய விஷயம் தெரியாது.)

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      இதெல்லாம் நான் எவ்வளவோ காலமாகச் செய்கிறேன். இன்றுவரை சொல்லிக் காட்டினேனா? இல்லையே!
      (உஷ், என் வீட்டுக்கு இப்படி நான் எழுதிய விஷயம் தெரியாது.) ஹா. .ஹா. .ஹா. நல்ல நகைச்சுவையாக கருத்தைப் பதிந்திருக்கிறீர்கள். அட.. இப்போதுதான் சொல்லி விட்டீர்களே.. கணவன், மனைவி இருவரும் வீட்டு வேலைகளை செய்வது நம் காலத்திலிருந்தே சகஜமாகி விட்டதே..தறசமயம் வேலைக்குப் போகும் பெண்கள் உள்ள வீட்டில் பெண் வீட்டுப் பொறுப்பு முழுவதும் சுமப்பது கஸ்டந்தானே.

      தங்களைப் போன்ற பதிவர்களின் வருகைக்கும், கருத்துக்கும். மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.தங்கள் கருத்துக்கள் என் எழுத்துக்களை வளப்படுத்தும் எனவும் நம்புகிறேன்.மிக்க நன்றி சகோ.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete