Thursday, April 22, 2021

கனவு 3.

 கனவு 3..... 

முருகா.. கந்தா,.. எல்லோரையும் நல்லபடியாக காப்பாற்று.. ..! இதை ஒன்றைதான் நான் தினமும் உன்னிடம் வேண்டிக் கொள்கிறேன்.அந்த பூங்காவின்  நீண்ட பெஞ்சில் நான் அமர்ந்து கண்மூடி தியானித்தபடி இருந்தேன்.  

சுற்றிலும் சூரியனின் ராஜ்ஜியமான இந்த பகல் நேரத்திலும், இந்த நட்சத்திரங்கள் எப்படி ஒளி வீசுகின்றன. ஒரு வேளை இது இரவுதானோ? ஆனாலும், இரவுக்கான ஆர்ப்பாட்டம் எதுவும் இல்லையே? இரவின் துணையை ஆரம்பத்திலிருந்தே எப்போதும் தன் வசப்படுத்தி கொண்ட மமதையில், இருளின் தைரியமான எக்களிப்பு குரல் எங்கும் கேட்கவில்லை. அதன் பயமுறுத்தலுக்கு பணிந்து பிறந்து வளர்ந்ததிலிருந்து அமைதி காக்கும் பறவையினங்கள் கூட பயமின்றி அங்குமிங்கும் சலசலத்தபடி பறந்து கொண்டிருக்கின்றன. போட்டியாக மனித நடமாட்டமும், இறக்கை இல்லாத குறையாக அங்குமிங்கும்  எப்போதும் போல் பறந்து கொண்டே உள்ளது. என்ன இது விசித்திரம்.? 

ஆண்டவா..கடம்பா... கதிர் வேலா... ஏன் இந்த குழப்பம்? உன்னை இன்று  நிம்மதியாக நினைத்துப் பார்த்து மனம் விட்டு மனதுக்குள் பேசி, அதுவும்  வண்ண மயில்கள் பல உலாவும் இந்த பூங்காவில், உந்தனுடன் தனி"மையில்" (அது( மயில்) உன் "அருகாமையில்" இல்லாமல்) உன்னுடன் பேசி மகிழலாம் என்று நானும், " நீ அன்றொரு நாள் என்னிடம் விரும்பிக்  கேட்ட உணவை செய்து எடுத்துக் கொண்டு வந்திருக்கிறேன். வந்து ருசி பார்த்து பசியாறி, என் அறிவு பசிக்கும் சிறிது விருந்தளிக்க வருவாயா?  மனம் சிந்தனை சொற்களை கொண்டு வண்ணம் குழைத்து தீட்ட  கண்களுக்குள் கந்தனின் வண்ண முகம் சித்திரமாக ஒளிவீச தொடங்கியது. 

ஹ்ம்ம்ம்..... ஹ்ம்ம்ம்  மயிலின் அகவல் ஓசை கண்ணின் கவனத்தை திசை திருப்பி விழித்துப் பார்த்தால், நிஜமாகவே வண்ணமயில் வேலவன் மயிலின் மேல் வீற்றிருந்தபடி  புன்னகைத்தான். (மயில் மட்டும் எப்போதும் போல் என்னை கோபத்துடன் முறைத்தது. "என் துணையின்றி, என் அருகாமை"(ம)யில்"  இல்லாத கந்தனை தனிமை"(ம)யில்" காண உனக்கு இவ்வளவு ஆசையா? பழைய சம்பவங்கள் உனக்கு மறந்து விட்டதா? இல்லை., உனக்கும், எனக்குமான நட்பை  என்னப்பன் கந்தன் கடைசிவரை காப்பாற்றுவார் என்ற அசட்டு நம்பிக்கையா? (அதன் கோபமான பார்வையில் வடிந்த வாசகங்களை படித்தேன். ) 

"என்ன இது...? உன் விருப்பப்படி வந்தவனை "வா" வென்று வாய் நிறைய அழைக்காது, என்னுடன் வந்த மயிலுடன் பார்வையில், பாடம் படித்தபடி இருக்கிறாய்? முருகனின் நமட்டுச் சிரிப்புடன் கேள்விக்கணை வந்து தாக்க என் கண்கள் அவசரமாக கந்தனின் கண்களை சந்தித்தன. 

" வேலவா... நான் நினைத்தவுடன் வந்து அருள்தரும் உன் கருணையே கருணை... . உன் எத்தனையோ வேலைகளை எனக்காக ஒதுக்கி விட்டு, நான் வேண்டி அழைத்தவுடன் வரும் உன் அன்புக்கு நான் எப்படி..... .? மேற்கொண்டு பேச முடியாமல், என்" நாத் தத்தளிக்க..  ... "நன்றாகத்தான் நடிக்கிறாய்".. என்று பார்வையில் பேசியபடி மயில் முகம் சுழித்து வெறுப்பை உமிழ்ந்தது. 

" இல்லை முருகா!! இன்று நீ நான் நினைத்தவுடன் உடனே எனக்காக வந்திருக்கிறாய்..! அந்த ஆச்சரியத்தில் சிறிது நேரம்  வாய் வார்த்தைகளை மேலெழும்ப விடவில்லை.. வேறு ஒன்றுமில்லை.. . ... என்னை மன்னித்துக் கொள்.." என்றவளாய் அவன் இரு பாதம் பற்றித் தொழ குனிந்தேன்.. 

"பார்த்து... பார்த்து... காலைப் பற்றுகிறேன் பேர்வழி என்று சிலர் காலை வாரி விட்டு விடுவார்கள். எங்கள் ஐயன் முதலில் கீழே இறங்கட்டும். " மயில் அனல் கக்கும் வார்த்தைகளால் தடுத்து நிறுத்தியது. 

" அப்படியே வாரி விட்டாலும் தாங்கிக் கொள்ள நீ இல்லையா?"  கந்தனின் சின்னச் சிரிப்போடு கொஞ்சம் எனக்கும்  சாதகமாக வந்த பதிலை கேட்டதும், மயிலின் முகம் மாறுவதை கண்டு, என் இதழிலும் நகைப்புச் சாயல் வந்ததை கவனித்த மயில்., "என்ன நகைப்பு...? நான்தான் அவரை என்றுமே தாங்கி நிற்கிறேன். என்னுயிரை தாங்கிக் கொள்ள எனக்குத் தெரியாதா? நீயும் ஒன்றும் அவருக்கு ஆமோதிக்க வேண்டாம்." எரிச்சலான பார்வையோடு முறைத்தது மயில். 

"சரி... சரி...உங்களுக்குள் பூசல் வேண்டாம். நான் வேறு வேலையாக இந்த பூலோகத்திற்கு வந்தேன். வரும் வழியில் இந்தப் பூங்காவில் தமிழ் உரையாடல்கள் ஓரிடத்தில் கேட்கவே அங்கு சில நொடிகள் தாமதித்த பின்" நீ வேறு அழைக்கிறாயே"... என உன்னைக்காண இங்கும் வந்தேன். ஆமாம்.. ஏதோ பதிவர் என்ற பெயரோடு நாலு வார்த்தைகள் எழுதி வந்தாயே....  என்னவாயிற்று உன் எழுத்துப்பணி.. ? முற்றுப்புள்ளி வைத்து விட்டாயா? "என்று வேலவன் மடமடவென கேட்டதும், மயிலின் முகத்தில், எனக்கு மட்டும்" ஏளன சாயல்" தெரிந்தது. 

" எங்கே....! இங்கே வெட்ட வெளியில் அமர்ந்து வெட்டி வேலையாக ஏதோ சிந்தித்து கொண்டிருந்தால், சேர்த்தெழுத வரும் சில  வாக்கியங்களும் மறந்துதான் போகும். பின்னர் "வண்ண மயில் வேலவனே, மயிலேறி வந்தெனது அறிவெனும் விளக்கை சிறிதாவது தூண்டி விடுபபா...."என்ற புலம்பல்கள் வேறு.. .. முதலில் அது இருக்கும் இடத்தில்  இயல்பாக இருந்தால் அல்லவா தூண்டி விடுவதற்கு. ... " என மயில் தன்னோடு, கந்தனையும் இணைத்து கூறவே, அதன் விஷமத்தனமான கோபம் கண்டு கந்தன் வாய் விட்டு சிரித்தான். 

"சரி... முருகா...! நான் நேராகவே விஷயத்திற்கு, இங்கு உன்னை வரும்படி வேண்டி அழைத்த விஷயத்திற்கு வருகிறேன். நான் அன்று உன் அண்ணன் கணபதிக்கு அவரின் பிறந்த நாளன்று அவருக்குப் பிடித்தமான நிவேதனங்கள் நிறைய செய்து பூஜித்த பின், அதை நிறைய படங்களும் எடுத்து   என் பதிவுலகத்திலும் பதித்து அது குறித்து விபரமாக எழுதி வைத்தேன்.  அங்கு அதைப்பார்த்து பாராட்டிய  சகோதர சகோதரிகள் எங்களை என்றேனும் சந்திக்கும் போது இந்த உணவுகளுடன் வர வேண்டும் என அன்புடன் கூறினார்கள்..... . 

அதன் பின் தொடர்ந்து  வந்த என் கனவுகளில் நீயும் வந்து, "என் அண்ணன் கணேசனுக்கு செய்து வைத்ததை போன்ற உணவுகளை எனக்கு மட்டும்  நீ எப்போதும் கண்களிலேயே காண்பிக்கவில்லையே? வெறும் பானகமும், பழங்களுடன், தேனும் திணைமாவும் இந்த முருகனுக்கு போதுமென்று நினைத்தாயா?" என்று கேட்கவும், இன்று அந்த நிவேதனங்களை அன்புடன் செய்து  உனக்கும், விரும்பி கேட்ட என்  பதிவுலக  நண்பர்களுக்குமாகவும், கொண்டு வந்திருக்கிறேன். அதனால்தான் உன்னை வறுபுறுத்தி இங்கு வரச்சொல்லி அழைத்தேன். நீ இதை அன்புடன் ஏற்றுக் கொண்டு என்  பதிவுலக  நண்பர்கள் இருக்குமிடத்திற்கும் என்னுடன் கூடவே  வர வேண்டும்."என்று பணிவுடன் கை கூப்பி  நான் விளக்கமாக கூறியதும், முருகன் இளமுறுவல் செய்தான். 

" ஓ... அதனால்தான் நான் வரும் போது ஓரிடத்தில் அத்தனை உரையாடல்களா? இப்போதெல்லாம்  பதிவுலக நட்புகள் உனக்கு ஒரளவு பெருகி விட்டது போலும். சரி.. சரி... என்னையும் அவ்வப்போது முன்பு மாதிரி நினைவின் ஓரத்தில் வைத்திரு.... மறந்து விடாதே... ! என்றான் சற்று  கேலியாக... 

 அதுவரையில் எங்கோ நடந்து சென்றபடி  இருந்த  மயில் பொறுமையாக வந்து கந்தனிடம் வந்து நின்று நாங்கள் பேசுவது அனைத்தையும் கேட்டதும்,  சிறிது பொறாமையுடன் முகம் சுழித்து நெளிவது தெரிந்தது. 

"ஐயனே... என்ன இது..! அபச்சாரமான வார்த்தைகள்.... உன்னை மறந்த பின் என் உடலிலும் உயிர் தங்குமா? தமிழுக்கு பிறப்பிடமான உன்னை  மறக்கும்  ஒரு பொழுதுதான் எனக்கு இந்தப் பிறவியில் உண்டாகியும் விடுமா? நினைக்கவே என் தேகம் நடுங்குகிறதே...! உன்னருளாலேதான் இந்த எழுத்துலகில் நான் பிறந்து தவழ்ந்து அடி எடுத்து நடக்க ஆரம்பித்திருக்கிறேன். அதை மறந்து விட்டாயா?  (இதை சுட்டினால் என்னப்பன் கந்தவேள் என்னுடன் உரையாடிய முதல் கனவு பதிவு வரும். மறக்காமல் இதையும் சுட்டி அங்கும் சென்று அனைவரையும்  படிக்க வேண்டிக் கொள்கிறேன்.🙏.)  தாயை சேய் மறப்பதா? முருகா.. ..நீ எப்போதும் என்னை ஒவ்வொரு நாளிலும்  சிறிதேனும் மறவாதிருக்க வேண்டும். அந்த வரத்தை எனக்கு இந்தப்பிறவியில் தந்தருள வேண்டும் "  நான் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் மல்க பேசுவதை கண்ட கந்தன்   "சரி.....சரி... எனக்கும் நேரமாகி விட்டது. உன்னை மட்டுமல்ல...   உலகில் அனைவரையும் நானறிவேன்.. உங்களை எழுத வைப்பதும் பேச வைப்பதும், இயக்க வைப்பதும் அனைத்தும் நானேதான். நீ அவர்களை உங்கள்  ஏற்பாட்டின்படி சென்று சந்தித்து கொள். நான் வருகிறேன்... "  என்றபடி கிளம்பினான். 

வேலவா. .!    என்ன இது...? உன் துணையின்றி நான் எப்படி... .. ? எனக்கு பொதுவாகவே பேச்சறிவு குறைவு..... நீயும் என் அருகில் இருக்க வேண்டுமென்றுதானே உன்னிடம் வேண்டினேன். தவிரவும் உனக்காக  நான் கொண்டு வந்த உன்  அண்ணனுக்கு பிடித்தமான நிவேதனங்களை நீ உண்டு  ஏற்க வேண்டாமா?"  நான் அவசரமாக தடுக்கவும்  "எல்லாம் என் பார்வையில் விழுந்தாகி விட்டது. என் பார்வையாலேயே உங்களின் அன்பும், மற்ற அனைத்தும் ஏற்கப்பட்டு விடும் என உனக்குத் தெரியாதா?  என்று கூறியபடி மயிலேறி கொண்ட  முருகன், "வேண்டுமானால், என்னுடன் வா. . .! நான் வரும் போது கண்ட அந்த இடம் வந்ததும் உன்னை இறக்கி விட்டுச் செல்கிறேன்.... "என்றான். 

"ஆமாம்..ஆமாம்...வா...வா...என்ற மயிலும் அங்கு உன்னை "உதிர்த்து" விடுகிறேன்..."  (அந்த" உதிர்த்து" என்பதை எனக்கு மட்டும் சிறு குரலில் கூறியவாறே...) என்றது அதே விஷம பார்வையுடன். 

எனக்கு லேசாக பழைய நினைவுகள் நடுக்கத்தை வரவழைத்தது. 

எப்படியோ முருகனுடன் மயிலேறி குறிப்பிட்ட இடம் வந்ததும் அங்கு எவரையும் காணாமல் திகைத்தேன் .." இங்குதான் நிறைய மனிதர்கள் அமர்ந்திருக்க கண்டேன். இப்போது எவரையும் காணவில்லையே? விந்தையாக உள்ளதே....!" என்ற முருகன் மயிலை நோக்கி, "நீ சற்று, சுற்று முற்றும் பறந்து சென்று அவர்கள் எங்கேனும் உள்ளார்களா எனப் பார்த்து விட்டு வா.." என ஆஞ்கை பிறப்பித்ததும்,, மயில் கண வேகத்தில் காணாமல் போனது. 

"உனக்காக மறுபடியும் தாமதிக்கிறேன். உன் நண்பர்கள் இருக்குமிடத்தை மயில் வந்து சொன்னதும் நான் செல்ல வேண்டும்..நேரமாகிறது. . ." முருகன்  சிறிது தவிப்புடன் சொல்ல "சரி. வேலவா...! என் கைப்பேசியில் அவர்கள் எங்கிருக்கிறார்கள் என கேட்டுக் கொள்ளலாமா?" என நான்  அவன் உத்தரவை கேட்டதும், "கைப்பேசியா? அப்படியென்றால்,  ....?என முருகன் வியக்கவும், "ஆம்.. முருகா..  இதன் மூலம்தான் ஒருவர்  மற்றவரின் நலன்களை விசாரித்து தெரிந்து கொள்வதும் அவர்களுடன் தொடர்பு கொண்டு இப்படி சந்திக்கவும், பேசி ஏற்பாடுகளும் செய்து கொள்கிறோம்.""என்று பணிவுடன் சொன்னதும் கந்தன் மீண்டும் வியப்பிலாழ்ந்தான். 

அந்நேரம் அவன் ஆச்சரியத்தை போக்கவென்றே மயில் வந்து இறங்கியது. "வெகு தூரத்தில் சில மனிதர்கள் பேசிக் கொண்டே கடந்து சென்றார்கள். இந்தப் பெண்மணியிடம்  அவர்கள் அன்றைய ஓர் தினத்தில் ஏதோ" குளிர் சாதன பெட்டியில் " தங்களுக்கு சில பிடித்தமான உணவு வகைகளை வைத்திருக்க சொன்னதாகவும், அவர்களுக்கு இவர் தற்சமயம் அதைத்தான் கொண்டு வந்து விட்டதாகவும்," எப்போதோ செய்து வைத்திருந்த அதை உண்டால் எங்கள் உடல் நலம் என்னாவது?" என்று கூறிக் கொண்டே, எனவே  அவர்கள் இவர் வருவதற்குள் இந்த இடத்தை விட்டு அகன்று விட வேண்டுமென ஒருவடோரொருவர் பேசிக் கொண்டே சென்று விட்டார்கள். "என்று மயில் பெருமூச்சுடன் கூறி முடிக்கவும், முருகன்"குளிர் சாதன பெட்டியா.. ? அப்படியென்றால்., குளிர் சாதன பெட்டியென்றால்?" என மீண்டும் வியந்தான். 

" கந்தா.... செய்த அனைத்து உணவுகளையும் அன்றே எங்களால் சாப்பிடுவதற்கு முடியாதென்பதால், சிலவற்றை இந்த குளிர் சாதன பெட்டியில் வைத்து ஒரிரு நாட்களாக உண்போம். ஆனால்  இதையெல்லாம் நான் அதற்குள் வைப்பதில்லை. அன்று அவர்கள்  வேடிக்கைக்காக சொன்னது இத்தனை வீபரீதமான  அர்த்தமாக போகுமென்பதை நான் உணரவில்லை. இன்று அவர்களை சந்திக்க வரும் போது, அவர்களுக்கு ஒரு  தீடிர் எதிர்பாராத விருந்தாக, மனம் களிப்பாக இருக்கட்டுமென, புதிதாக இந்த உணவெல்லாம் செய்து கொண்டு  வந்துள்ளேன். ஆனால், அப்படி  செய்து கொண்டு வரப்போவதாகவும், நான் சொல்லவுமில்லை.  என் தவறுக்கு தகுந்த தண்டனைதான் எனக்கு கிடைத்துள்ளது.... " என்று நான் மேலும், மேலும் பேசி வருத்தப்படுவதை கண்ட முருகன்,  "சரி... சரி இப்போதென்ன...! மற்றொரு நாள் எல்லா ஏற்பாடுகளை, உங்களிடமிருக்கும் பேசும் உபகரணத்தின் மூலமாக விபரமாக பேசி செய்து கொண்டு  வந்து சந்தித்தால் போயிற்று... கவலைப்படாதே.... " இப்போது நான் புறப்படுகிறேன். .. . அடுத்த தடவையாவது  புத்திசாலிதனமாக நடந்து கொள்.... என்றபடி, திரும்பியவன் "வருகிறாயா? நீ வருத்தத்தில் இருப்பதால், தனியாக செல்ல வேண்டாம். உன்னிருப்பிடத்தில் விட்டு விடுகிறேன்....." என்று இரக்கத்துடன் முருகன் கூறவும், மயிலின் முகத்தில் எவ்வித மாற்றமும் இல்லாததது எனக்கு  அத்தனை வருத்தத்திலும் கொஞ்சம் ஆச்சரியத்தையும் தந்தது. 

மயில் எங்களை தன் முதுகில் ஏற்றியபடி மின்னல் வேகத்தில் பறக்கத் துவங்கிய சற்று நேரத்தில்,  "எப்படி....? எப்படி. .? என் திட்டம் வெற்றியடைந்தது பார்த்தாயா? என் துணை இல்லாமல் என்னப்பனை சந்தித்து பேச வேண்டுமென நீ நினைத்ததற்கு தண்டனை எப்படி கிடைத்தது பார்த்தாயா? நீ கந்தனுடன் பேசி நீ தயாரித்து கொண்டு வந்திருந்த உணவுகளை சிலாகித்து கொண்டிருந்த அந்த கண நேர "தனிமையில்" இந்த மயில் உன் நட்புக்களை வேறு மனித உருவத்தில், அதுவும் உன் சொந்தமென கூறிக் கொண்டு சென்று சந்தித்து நீ கொண்டு வந்திருக்கும் உணவுகளைப் பற்றி கூறி அவர்களை எப்படி அவ்விடம் விட்டு புறப்பட வைத்தேன் பார்த்தாயா? இனி என் உதவியில்லாமல் கந்தனை தரிசிக்க விருப்பபடுவாயா? சொல்... "என்றபடி முகம் வளைத்து  கந்தன் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்த நேரம் எனக்கு மட்டும் கேட்கும்  குரலில்  மயில்  வன்மமாக கேட்கவும் திடுக்கிட்டேன் . 

" இது உன் வேலையா?  கண நேரத்தில் இப்படி செய்ய உன்னால் எப்படி முடிந்தது.? ஏன் இப்படி செய்தாய்? நானும் உன்னைப் போல், உன்  தெய்வம் கந்தனை மனதாற வழிபட்டு நேசிப்பவள்தானே...! நீ இப்படிச் செய்யலாமா? " என்று அழாத குறையாய் கூறி சமாதானபடுத்துவற்குள், கொஞ்சமும் அதற்கு செவி மடுக்காமல், " அதுதான்.. நான்... சரி.  சரி. . உன் இருப்பிடம் வந்தாகி விட்டது.  இறங்கிக் கொள்..." என்றபடி மயில் முதுகை சிறிது ஆட்டவும், (அதன் பாணிப்படி உதிர்க்கவும்) நான் மடமடவென்று  "ஆ"வென்றுஅலறியபடி கீழே வந்து விழுந்தேன். 

" அம்மா... என்ன இது? ஏன் கத்துகிறாய்? கனவா? " என   என் பெண் உலுக்கியதில், "ஆம். .. பதிவு கனவு மூன்று...." என்றேன். 

" இப்ப மணியும் மூன்று. ....தூங்கும் நேரத்தில் வரும் கனவிலும்  பதிவுலக நினைவா? கொஞ்சம் நேரம் நிம்மதியாக மறுபடி  படுத்து தூங்கு...!" என்ற அவளது குரலின் அன்புக்கு கட்டுப்பட்டு படுத்து, கனவையும், கந்தனையும் நினைத்தபடியிருக்க உறக்கம் மறுபடி சிறிது நேரத்தில் வராவிட்டாலும், விடியலின் அருகாமை பொழுதில் வந்து என்னை அணைத்துக் கொண்டது.  

இப்போதுள்ள சூழ்நிலைகளில் ஒருவரையும் சந்திக்க இயலாவிடினும், கனவிலும் உங்கள் அனைவரையும்  என்னால் சந்திக்க முடியாமைக்கு அனைவரும் மன்னிக்கவும். அதனால்தான் பதிவின் மூலம்  கனவையும் எடுத்துக் கொண்டு உங்களை சந்திக்க இங்கு வந்து விட்டேன். அன்புடன் வந்து கனவுடன் சேர்ந்து வந்த பதிவையும்  சந்தித்த அனைவருக்கும் என் அன்பான நன்றிகள். 🙏🙏🙏🙏🙏. 

42 comments:

  1. //நீ இதை அன்புடன் ஏற்றுக் கொண்டு என் பதிவுலக நண்பர்கள் இருக்குமிடத்திற்கும் என்னுடன் கூடவே வர வேண்டும்."என்று பணிவுடன் கை கூப்பி நான் விளக்கமாக கூறியதும், முருகன் இளமுறுவல் செய்தான். //
    உங்களுக்கு காட்சி அளித்த முருகனை எங்களுக்கும் காட்சி தர அழைத்து வர எண்ணிய எண்ணம் வாழ்க!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தாங்கள் முதலில் வருகை தந்தமைக்கும், நல்லதொரு விதமாக தந்த கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீங்கள் பதிவை ரசித்துப் படித்ததற்கு மகிழ்ச்சி. யாம் பெற்ற இன்பம் வையகமும் பெற வேண்டும் என என்னை நினைக்க வைத்த முருகனுக்கும் நன்றி. அவனுக்குத் தான் அந்த பெருமையும் சாரும். நீண்ட பதிவாக இருப்பினும், உடனடியாக வந்து படித்து தந்த அருமையான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. //முருகா.. கந்தா,.. எல்லோரையும் நல்லபடியாக காப்பாற்று.. ..! இதை ஒன்றைதான் நான் தினமும் உன்னிடம் வேண்டிக் கொள்கிறேன்//

    நல்ல வேண்டுதல் . இந்த காலத்தை இறைவன் அருளால்தான் கடக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /இந்த காலத்தை இறைவன் அருளால்தான் கடக்க வேண்டும்./

      உண்மை.. தினமும் உங்களனைவரைப் போலவும் நானும் அவனை வேண்டியபடியேதான் இருக்கிறேன். அனைவரும் நலமாக இருக்கவேண்டும் என்பதே என் மனதில் அவனை தொழும் போது எழும் பிரார்த்தனை. கண்டிப்பாக இந்த இக்கட்டான காலத்தை கடந்து செல்ல நமக்கு தைரியம் தருவான். உங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. மயில் இல்லா காண விரும்பிய உங்கள் உள்ளத்தில் தொன்றிய எண்ணங்களும் அருமை.
    மயில் பேசும் பேச்சுகளும் அருமை.
    உங்கள் விருப்பபடி ஒரு நாள் வீட்டுக்கு வந்து நீங்கள் தயாரித்த உணவுகளை வலை நட்புகள் உண்டு மகிழ்வார்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      பதிவை ரசித்து விரிவான கருத்துரைகள் தந்திருப்பது கண்டு மன மகிழ்ச்சியடைந்தேன்.

      மயில் இல்லா முருகனை காண ஏன் விரும்பினேன் என்றால், மயிலுடன் வந்தால், முருகன் சீக்கிரமாகவே மயிலேறி பறந்து சென்று விடுவான். மற்றபடி மயிலையும் அவனையும் பிரிக்க முடியுமா? எப்போதுமே இணைபிரியாத மயில்வாகனன்தானே முருகன். (சும்மா கற்பனைக்கு வந்த எண்ணங்களுடன் உரையாடல்கள்.) மயில் பேசுவதையும் ரசித்ததற்கு மிக்க நன்றி.

      /உங்கள் விருப்பபடி ஒரு நாள் வீட்டுக்கு வந்து நீங்கள் தயாரித்த உணவுகளை வலை நட்புகள் உண்டு மகிழ்வார்கள்./

      உங்கள் வாக்கு பலிக்கட்டும் சகோதரி. அந்நாளை எதிர்பார்த்திருக்கிறேன். உங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. அருமையானதொரு கற்பனை. கனவென்றாலும் நினைவென்றாலும் கந்தனுடன்
    இருப்பது இனிமை.
    ஏறு மயிலுக்கு ஏன் இத்தனை
    மாற்றம் உங்களுடன்:)?

    கூவி அழைப்பதே மயிலேறும் வடிவேலனைத்தானே.
    நீங்கள் கொண்டு வந்த பக்ஷணங்களைக் கண்ணால்
    அருள் செய்த முருகன் நம் எல்லோருக்கும் நோயில்லாத
    வாழ்வைத் தருவான்.
    தமிழும் நாமும் வாழ்வோம்.
    நன்றி அன்பு கமலா.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் உடனடி வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /அருமையானதொரு கற்பனை. கனவென்றாலும் நினைவென்றாலும் கந்தனுடன்
      இருப்பது இனிமை.
      ஏறு மயிலுக்கு ஏன் இத்தனை
      மாற்றம் உங்களுடன்:)?/

      உண்மைதான்.. நினைவிலும், கற்பனை கனவிலும் அவனுடன் இருப்பதே இன்பம். "கற்பனை என்றாலும்" டி.எம்.எஸ் பாடலைத்தான் அடிக்கடி பாடிக் கொண்டிருப்பேன்.

      நீங்கள் மயிலுடன் நான் உரையாடிய என் கற்பனை முதல் பதிவை படித்தால் மயில் என் மீது கோபபடுவதற்கு அர்த்தம் உள்ளது என விளங்கும். ஆனால். என்னவோ.. என் பதிவுகள் எழுத எழுத நீண்டு விடும் வல்லமை பெற்றது.:) உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது படியுங்கள். இந்தப்பதிவும் நீண்டு விட்டது. நீங்கள் பொறுமையாக படித்து நல்லதொரு கருத்துரைத்ததற்கு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

      கண்டிப்பாக வடிவேல் முருகன் மயிலேறி வந்து தன் வேல் கொண்டு நம் வினையகற்றி நோய்கள் அனைத்தையும் துவம்சம் செய்வான் என நம்புவோம்.

      உங்கள் ஊக்கம் நிறைந்த அருமையான கருத்துக்கள்தான் என்னை எழுத வைத்துக் கொண்டு உள்ளது. உங்கள் அன்பான கருத்துக்களுக்கு மீண்டும், மீண்டும் என் நன்றிகள் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. நிஜமாவே முருகன் வந்து பேசிய உனர்வு.  சகஜ உரையாடல்.  அந்தக்கால சிவாஜி ஜெமினி போல செயற்கையாக இல்லாமல்!!  அது சரி எங்கள் மயில் (ஸ்ரீதேவி அல்ல) ஏன் உங்களுக்கு இவ்வளவு கோபம்?  அதற்குதான் என்மேல் கோபம் என்று சொலலதீர்கள்.  மயில் பற்றி எங்களுக்குத தெரியும்!!!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை ரசித்துப் படித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.
      /அந்தக்கால சிவாஜி ஜெமினி போல செயற்கையாக இல்லாமல்!!/

      ஹா.ஹா.ஹா. கற்பனை சினிமாத்துவம் போல் இருக்கிறதா/இல்லையா? நிஜமாகவே முருகனுடன் நடத்திய உரையாடல் போலிருக்கிறது என ரசித்ததற்கு மிக்க நன்றி. நன்றி.

      /அதற்குதான் என்மேல் கோபம் என்று சொலலதீர்கள்./

      ஹா.ஹா.ஹா. உண்மையில் அதற்குத்தான் என் மேல் கோபம். மயிலுக்கு என் மேல் ஏன் கோபம் என முதல் கனவு பகுதியை படித்து விட்டால் புரியும். ஆனால், என் நீண்ட வியாக்கியானங்களுடன் கூடிய பதிவை படிக்க உங்களுக்கு நேரமிருக்க வேண்டும். உங்கள் அலுவலகப்பணி நேரங்களுக்கிடையே என் பதிவையும் படித்து ரசித்து ஊக்கமிகும் கருத்துக்கள் இடுவதற்கு நான் மீண்டும் என் மன மகிழ்வுடன் கூடிய நன்றிகளை சொல்லிக் கொள்கிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. விழித்த்துக்கொள்ளும்போதே கனவு எண் மூன்று என்று சொல்லும் அளவு அதே சிந்தனையுடன் இருக்கிறீர்கள் போல...  அது சரி..   தின்பண்டங்களின் படமே போடாமல் நீங்கள் அவற்றை எடுத்துச் சென்றீர்கள் என்று எப்படி நம்புவது?  எல்லாவற்றையும் என்னப்பன் முருகன் கொண்டுபோய் விட்டானா?!!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆமாம்.. கனவுகள் பலவிதம். அன்றாட தூக்கத்தில் தினமும் ஒரு கனவு வருகிறது.(சில சமயம் நம் ஆசைகளும் கனவாகிப் போவதும் வேறு விஷயம்) நாமும் நம் கனவுகளை அது நினைவில் உள்ளவரை வலைதளத்தில் பேசி பகிர்ந்திருக்கிறோமே.. இது கற்பனை கனவு. அதனால்தான் எண்ணிக்கையுடன் நினைவில்... இல்லையில்லை.. கனவிலும் நினைவிருக்கிறது:)

      /அது சரி.. தின்பண்டங்களின் படமே போடாமல் நீங்கள் அவற்றை எடுத்துச் சென்றீர்கள் என்று எப்படி நம்புவது? /

      ஹா.ஹா.ஹா. அதுசரி.. கனவில் எப்படி படமெடுப்பது? ஆனால், உங்களின் நம்பிக்கைக்காவது பழைய படங்களை இணைத்திருக்கலாம். பதிவு இன்னமும் நீ..ண்..டு விடுமே என முருகனே அறிவுரை தந்து விட்டான் என நினைக்கிறேன்.:) அப்படியே அந்த தின் பண்டங்களை (அண்ணனுக்கு மிகவும் பிடித்தமானதை) தம்பியும் தன் அண்ணனுக்காக கொண்டு சென்றிருந்தால் சந்தோஷந்தானே...!

      உங்கள் அன்பான கருத்துகளுக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. கந்தனுடன் கனவில் உரையாடியது நல்ல சுவாரஸ்யம் சகோ.

    தொடரட்டும் கனவுகள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      இது கந்தனுடன் கற்பனைக் கனவு. அவனை நினைத்தபடியே இருக்கும் போது வரும் கனவுகள். நீங்களும் இந்தப் பதிவை ரசித்துப் படித்து தந்த நல்லதொரு கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள் சகோதரரே.

      தொடரட்டும் இது போன்ற கனவுகள் என வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை ரசித்து ரசனையான கனவு என நல்லதொரு கருத்தினை கூறியமைக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. கனவுகள் குறித்த உங்கள் பதிவு நன்று.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை ரசித்துப் படித்து நன்றாக உள்ளது என்ற கருத்தை தந்தமை கண்டு மனம் மகிழ்ந்தேன். மிக்க நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. கனவில்கூட முருகனுக்கு பஞ்சாம்ருதம் செய்து தந்தமாதிரி தெரியவில்லையெ. அவர் அண்ணனுக்கு பூரணம் தனியாவும் மாவு தனியாகவுமா கொடுக்கிறீர்கள்? கஷ்டப்பட்டு கொழுக்கட்டை செய்கிறீர்கள் அல்லவா? ஏன் இந்த ஒரவஞ்சனை முருகனுக்கு? இப்போது பலா, மா கிடைக்கும் சமயம். அதனால் பஞ்சாம்ருதம் பண்ணிடுங்க. இல்லைனா அடிக்கடி கனவில் வருவார்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை படித்து என்னப்பன் முருகனை விட நீங்கள்தான் அதிக உணர்ச்சி வசப்பட்டு இருக்கிறீர்கள். ஹா.ஹா.

      நான் முருகன் விரும்பிக் கேட்ட உணவுகளைதானே கொண்டு வந்துள்ளேன். தவிர இது ஒரு கற்பனைக் கனவு உரையாடல்கள். உங்கள் பின்னூட்டம் அப்படி என்ன ஓர வஞ்சனை செய்து விட்டோம் என நிஜமாகவே என்னை பயமுறுத்தி விட்டது. ஹா.ஹா.ஹா.

      ஆனாலும் சீக்கிரமாகவே பஞ்சாமிருதம் செய்து முருகனுக்கு நிவேதனம் செய்ய வேண்டுமென ஆசை வந்து விட்டது. இன்று சஷ்டி கவசத்துடன்,சண்முக கவசமும் மாலை பாராயணம் செய்தேன்.

      தங்கள் கருத்துக்கு நன்றி. உங்கள் சொல்படி இன்று உடனே காலையிலேயே அனைவருக்கும் பதில் தந்து விட்டேன். மதியம் வந்த உங்கள் கருத்துக்கும் சேர்த்து உடனடியாக பதில் தர முடியாமைக்கு வருந்துகிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. பதிவுக்கு பதில் தர லேட்டானால், வாசகர்கள் கனவில் வந்து பயமுறுத்திவிடப்போகிறார்களே என்ற எச்சரிக்கை போலிருக்கு.

      எனக்கும் பஞ்சாம்ருதம் சாப்பிடணும்னு ரொம்ப நாளா எண்ணம். தமிழக அரசு கூட, பழனி பஞ்சாம்ருதம் இவ்வளவு ரூபாய் கட்டினால், பிரசாதத்தோடு போஸ்டலில் வரும் என்று சொல்லியிருந்த நினைவு.

      Delete
    3. வணக்கம் சகோதரரே

      ஹா.ஹா..ஹா. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை... அப்படியே கனவில் பயமுறுத்தாமல் வந்தாலும் கூட பேசிக் கொள்ளலாம்.ஒரு வேளை அந்த பேச்சில் பயமுறுத்தல் தொடருமோ ...? முருகனுக்கு வெளிச்சம்.

      இனி பஞ்சாமிருதத்தையும் நேயர் விருப்பமாக மற்ற உணவுகளோடு சேர்த்துக் கொண்டால் போயிற்று.:)

      மீள் வருகை தந்து பயமுறுத்தாமல் நல்ல கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. பெரிய நீண்ட கனவு. இத்தனை நேரம் கனவு காண்பீர்களா என்ன? கனவிலும் முருகன் வந்ததும், உங்களுடன் பேசியதும், நீங்களும் பிரசாதங்கள் பண்ணிக் கொடுத்ததும் அழகு, அருமை! முருகனுக்கு மட்டுமே கடும் விரதம் இருப்போம் இல்லையா? அதனால் தான் நிவேதனங்களும் அதற்கு ஏற்றாற்போல் தேன், தினைமாவு, பழங்கள், பஞ்சாம்ருதம் என இருக்கின்றன. நல்லதொரு கற்பனைக் கனவு.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை ரசித்து தந்த கருத்துரைகள் கண்டு மிகவும் மன மகிழ்ச்சி அடைந்தேன். நன்றி.

      ஆமாம்...எனக்கு நீண்ட கனவு எப்போதுமே வரும். இரவு முழுக்க ஒரே கனவாக நீண்டும் வரும். நேற்று கூட ஒரே கனவு தொடர்ந்து வந்தது. ஆனால் இது கற்பனைக் கனவு. நண்பர்கள் (ஸ்ரீராம் சகோதரர், நெல்லை சகோதரர்) முன்பு விரும்பி கேட்ட கணபதிக்கு பிடித்தமான பிரசாதங்களையும், முந்தைய மயில் பதிவையும் இணைத்து, அதில் கந்தனையும் அன்புடன் அழைத்து வந்து அவனுக்கும் அதே பிரசாதங்களை தருவதாகவும் கற்பனை உரையாடல்கள் இணைத்த கனவு.

      ஆமாம்.. முருகன் உண்பது தேனும், தினைமாவும், பழங்களுடன் கூடிய பஞ்சாமிர்தம். இவைகள்தான் அவனுக்கு விருப்பமாய் நாம் படைப்பது.

      உங்கள் பதிவையும் படித்தேன். தங்கள் கைவலி எப்படி உள்ளது.? உடம்பை பார்த்துக் கொள்ளவும். அத்தோடு இங்கும் வந்து நல்லதொரு கருத்தை தந்ததற்கு மிக்க நன்றிகள் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. அம்மாடியோவ்வ்வ்வ்வ்வ்.. என்னா பெரிய கனவு:)).. கந்தனால இவ்ளோ நேரம் உங்களோடு ரைம் ஸ்பெண்ட் பண்ண முடியுமோன்னோ?:)) அவர் அதிரா வீட்டுக்கும் வரோணுமெல்லோ:)).. இப்பூடி அவரை மினக்கெடுத்தாமல் இனிமேல் டக்குப் பக்கென அதிரா வீட்டுக்கு அனுப்பிடுங்கோ:))

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      இன்று நீங்கள் பதிவை ரசித்துப்படித்து வந்து தந்த கருத்துக்களை கண்டு மிக்க மன மகிழ்ச்சியடைந்தேன்.

      அம்மாடியோவ்வ்வ்வ்வ்வ்.. என்னா பெரிய கனவு:)).. கந்தனால இவ்ளோ நேரம் உங்களோடு ரைம் ஸ்பெண்ட் பண்ண முடியுமோன்னோ?:))

      ஹா.ஹா.ஹா. நீண்ட கனவுதான். கனவில் கந்தனும் சுவையாக உரையாடி இருக்கிறாரே..

      /அவர் அதிரா வீட்டுக்கும் வரோணுமெல்லோ:)).. இப்பூடி அவரை மினக்கெடுத்தாமல் இனிமேல் டக்குப் பக்கென அதிரா வீட்டுக்கு அனுப்பிடுங்கோ:))/

      ஹா.ஹா.ஹா. அதற்கென்ன..! அடுத்த தடவை அதிரா வீட்டுக்கு அனுப்பி வைத்தால் போயிற்று. கந்தன் எல்லோரின் அன்புக்கும் கட்டுப்படுவன்தானே...!

      பதிவில் கந்தனை உங்களனைவரையும் காண அழைத்துக் கொண்டேதான் இருந்தேன். நீங்கள் அதை கவனிக்கவில்லையோ? இதன் முதல் பதிவை படித்தால் இந்தப்பதிவின் காரணமும் தெரிந்து விடும், அதையும் முடிந்த போது படித்துப் பாருங்கள். உங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. ராணியம்மா! முருகன் உங்க வீட்டுக்கு மட்டும் தானா? எல்லார் வீட்டுக்கும் விசிட் அடிக்க வேணாமோ? இங்கு வருவதே அபூர்வம். கமலாக்கா கஷ்டப்பட்டு கூட்டியாந்துருக்காங்க!!!!! நம் எபி முருகபக்தர் வேறு அங்கு காத்திருப்பாராக்கும்...

      கீதா

      கமலாக்கா அந்த முதல் பதிவு உங்கள் பிறந்த நாள் போது முருகன் பற்றி கவிதை அதுதானே?!

      Delete
    3. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஹா.ஹா.ஹா. அவருக்கு மட்டுமல்ல...! தமிழோடு உறவாடும் நம் அனைவரின் வீட்டிற்கும் தமிழ் கடவுள் விஜயம் செய்வான்.

      அது முந்தைய கவிதையோடு வந்த பதிவு. இதனுடன் தொடர்புடையது அதுவல்ல சகோதரி.. அது மயிலுடன் என் உரையாடலான பதிவு. இந்தப் பதிவிலேயே சுட்டி தந்திருக்கிறேன். தங்களுக்கு முடிந்து போது படித்துப் பாருங்கள். உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  13. அழகான கனவுக்குள் நானும் கலந்து விட்டேன்... முருகனையும் அவனது மயிலையும் கண்ட பின்பு வேறொன்றும் காணத் தோன்றுமோ!...

    அழகான பதிவு..மகிழ்ச்சி.. மகிழ்ச்சி..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தாங்களும் கனவுக்குள் வந்து கலந்து பதிவை ரசித்துப் படித்து தந்த பாராட்டுகளுக்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.

      ஆம்... மயிலுடன் முருகனை கண்ணாற கண்ட பின் வேறொன்றையும், காண்பதற்கும், கேட்பதற்கும் தோன்றுமோ ...! எல்லாமே அவனருள். என்னை இயக்க வைப்பதும், இப்படி எழுத வைப்பதும் அவன்தான். அவனருள் அனைவரையும் காக்க வேண்டுமென்பதே என் மனமார்ந்த பிரார்த்தனை யாகும்.🙏.

      உங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  14. கமல மனம் தேற்ற வருகின்றான் கந்தன்
    கமல முகம் காட்டி வருகின்றான்..
    கமல மனம் போற்ற வருகின்றான் கந்தன்
    கமல கரம் நீட்டி வருகின்றான்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆகா... அழகான கவிதை. படித்து ரசித்தேன். சட்டுசட்டென்று உங்கள் மனதிலிருந்து புறப்பட்டு வரும் உங்கள் தங்கு தடையில்லாத தமிழில் அந்த தமிழ் கடவுளையே கண்டு மண்டியிட்டு வணங்குகிறேன். என் மனதிற்கு மகிழ்ச்சியை தந்த அருமையான கவிதைக்கு என் மனமுவந்த நன்றிகள் சகோதரரே. மிக்க நன்றி...நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. துரை அண்ணா அசத்தறீங்க!!

      கீதா

      Delete
    3. வணக்கம் சகோதரி

      இங்கும் வந்து துரை சகோதரரின் தமிழ் புலமையை பாராட்டியமைக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    4. // தமிழ் புலமை.. (?)..//

      ஆச்சர்யம்!..

      Delete
    5. வணக்கம் சகோதரரே

      இதில் என்ன ஆச்சரியம்? உண்மையைதானே சொன்னேன். உங்களுக்கு ஒன்றை நினைத்தாலோ, பார்த்தாலோ கவித்துவமான வார்த்தைகள் உடனே வந்து உங்கள் சிந்தனையில் விழுந்து நீங்கள் எழுதும் வரிகளை சிறப்படைய செய்கின்றவே...! உங்கள் தமிழறிவு வியக்க செய்பவை...! அதைத்தான் குறிப்பிட்டேன். உங்கள் பதில் உங்கள் தன்னடக்கத்தை காட்டுகிறது. நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  15. எல்லாவற்றையும் போய்ப் பார்த்துட்டு வந்துட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் உடல் நிலை எவ்வாறுள்ளது? கை வலி பூரண குணமா? மீள் வருகை தந்து கருத்துரைத்தமைக்கு என் அன்பான நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  16. கமலாக்கா கனவிலும் உங்கள் தமிழ் விளையாடுகிறது! போங்க!!! உங்கள் தமிழை மிகவும் ரசித்தேன். ஏ பி நாகராஜன் படம் பார்த்தது போன்ற ஓர் உணர்வு!!!

    ரொம்ப அழகாக எழுதியிருக்கீங்க.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
      /ஏ.பி நாகராஜன் படம் பார்த்தது போன்ற ஓர் உணர்வு!!!/

      ஹா.ஹா.ஹா. சினிமா மாதிரி உள்ளதா? பதிவை ரசித்துப் படித்து தந்த பாராட்டுகளுக்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள் சகோதரி.

      நேற்று எனக்கு கொஞ்சம் உடல் நலமில்லை. அதனால் பதில் உடன் கருத்துரைக்க தாமதமாகி விட்டது வருந்துகிறேன். மன்னிக்கவும்.

      நீங்கள் அன்புடன் வந்து நல்லதொரு கருத்துக்களை தந்தமைக்கும் உங்கள் அன்பான பாராட்டுகளுக்கும் மீண்டும் என் மனம் நிறைந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  17. சிறந்த முடிவு.... கதையாக்க அற்புதமான படைப்பு... உங்கள் கற்பனை திறன் அருமை..!

    எனது பதிவொன்று

    ஒரு இனத்தின் சிந்தனை விருத்தியை எடுத்துக் கூறும் "வாழ வேண்டும்" கவிதையின் சிறப்பு ஆய்வு...!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      முதன் முதலாக என் வலைத்தளம் வந்து பதிவை ரசித்து படித்து நல்லதொரு கருத்துகள் தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.

      ஊக்கம் மிகுந்த தங்கள் பாராட்டுக்களும் மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி.

      கண்டிப்பாக தங்கள் தளம் வந்து படிக்கிறேன். தகவல் தந்தமைக்கும் மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete