அனைவருக்கும் நவராத்திரி நல்வாழ்த்துகள். அன்னையின் ஆசிகள் அனைவருக்கும் பரிபூரணமாக கிடைத்திட நவராத்திரி அன்னைகளான முப்பெரும் தேவியர்களின் பாதங்களை இந்த நாளில் பக்தியுடன் போற்றி நமஸ்கரித்து கொள்வோம். 🙏.
கொன்றை தும்பை சூடும்
கோடி விங்கர் பாகமுடையவளே..
மைக்குழலி மங்கை உமையவளே..
வார்க்காது பனியுறையும் வடிவே.. .
பொற்க்கொடியே
அடியேனிடர் தீர்ப்பாய்.. .
புகழுடைய முக்திப்பதம் தருவாய்...
சுத்தமாய் ஜோதியொளி காட்டி
ஜெயமான முக்திப்பதம் தருவாய்....
கணடங்கருத்தாரிடத்தில்
கருணையுடன்
எனக்குறுதி சொல்வாய்....
தண்டம் பணிகிறேன்.
போற்றி. போற்றி. ..
சின்மயானந்த பதம் தருவாய்....
பாதகங்கள் தீரவே என்னைப்
பார்த்திடுவாய் உன்
கருணை விழியால்...
பார்வதி அம்மாவென்
பாவங்களைப் போக்கி...
பரிவுடனே மோட்ஷப்பதம்
அருள்வாய்...
அம்மா... எட்டாத தூரத்திலிருப்பாய்...
எந்தனுடைய மனந்தனில்
எப்போதும் இருப்பாய்...
பக்தாளை தேடி அழைப்பாய்..
பாவங்கள் சேராமல் ஒழிப்பாய்..
துன்பமெனும் பாவக் கடலில் வீழ்ந்து.
தாய் முகம் காணாத பிள்ளை போல்,
புலம்புகின்றேன் கர்ம பூமியிலே...
பெரியோர்கள் தொழுதேற்றும்
பெரிய நாயகியே..
தாயே சரணம். உன்
தாளே சரணம்..
சங்கரியே சரணம்.
மின்னே சரணம்..
மீனாம்பா சரணம்..
மீனாட்சி தேவியே சரணம்...
பொன்னே சரணம்...
பூவே சரணம்..
பொற்பாதமே சரணம்...
சரணம்.. சரணம்.. என்னிடர் தீர்த்து
சாயுஞ்சம் தருவாய்...
அச்சந்துலைப்பாய்..
அருளைப் பொழிவாய்..
அழியாப்பதம் தருவாய்....
தொப்பை வயிற்றான்
தும்பிக்கையாலென்னை
தூக்கியே அக்கரை சேர்ப்பாய்....
சரணமென்றுந்தன்
தாளினை நான் பணிந்தேன்
தள்ளி விடலாமோ...
நெடுநாளாய் உன்னை
நம்பினதெல்லாம்
நிஷ்பலனாய் விடுமோ...
கருணாநிதியே...
கல்யாணி உமையே. .
கதம்பவனஷ்வரியே...
பாசத்தை போக்கி பாவ பயம் நீக்கி
பாத நிழலில் சேர்ப்பாய்..
பஞ்சாட்சரத்தை உபதேசம் செயது
பவபயம் போக்குவிப்பாய்..
தேவியே சங்கரர்
வாமத்தில் விளங்குகின்ற
சேர்வையை தந்தருள்வாய்..
அன்னை உமையே
உன்னை அல்லாமல்
எந்தனுக்கு ஆதாரம் வேறுமுண்டோ...
கமலதள லோஷினி
கதம்பவன வாஷினி
கைவல்ய பதகாரணி...
விஸ்வமெல்லாம் நிறைந்த
விஷ்வேஸர் வாமத்தில்
விளங்கியிருந்த தேவி நீயே..
அந்தரி.. சுந்தரி.. சிவகாமி கனகசபை
ஆதிபராசக்தி நீயே..
சந்ததமும் உன்னை நான்
சரணமென்று நம்பினேன்.
பாவமெல்லாம் போக்கியே
அனவிரதம் கருணா கடாட்சம்
வைத்தெந்தனை
அடிமை கொண்டே ஆள்வாய்.
🙏. ஓம்.. தத். ஸத். பிரம்மார்ப்பிதம்.. 🙏
இது எப்போதும் என் சின்ன வயதிலிருந்தே தினமும் சொல்லி வருவது வழக்கம். எங்கள் அம்மா கற்று தந்த பாடல்களில் ஒன்று.எந்த பாடல் வரிசையில் இது உள்ளதென்று தெரியாது. ஆனால் கண்டிப்பாக செவ்வாய் வெள்ளிதோறும் மாலை விளக்கேற்றியதும் இதைப்பாடி அனைவரையும் அன்னை பரமேஸ்வரி அருளுடன் காக்க வேண்டுமாய் பிரார்த்தித்து கொள்வேன். இந்த நவராத்திரியில் அன்னையின் அருள் அனைவருக்கும் பரிபூரணமாக கிடைத்திட இப்போதும் இந்த பாடலை பதிவில் பகிர்ந்து வேண்டிக் கொள்கிறேன். 🙏.

