பொதுவாக இன்பமும், துன்பமும் சேர்ந்து வருவதுதான் வாழ்க்கை. இப்படி சந்தோஷங்களும், வருத்தங்களும் இணைந்து இரு தண்டவாளங்களாக முடிவில்லாத ரயில் பயணங்களாக பயணிக்கும் இவ்வாழ்வில், நமக்கு இன்பம் வரும் போது சந்தோஷிப்பதும், துன்பம் வரும் போது வருந்துவதும் வாடிக்கையாகி போன விஷயம்.. ( இப்ப என்னதான் சொல்லப் போறீங்க? "தலையும், வாலும் புரியலை" என நீங்கள் கொஞ்சம் தலையை தாங்கிப் பிடிப்பதற்குள் நிச்சயம் சொல்லி விடுகிறேன்.)
கடந்த ஏப்ரல் ஏழாம் தேதி என் உறவுகளிடமி ருந்து எனக்கு வாட்சபில் வாழ்த்துகள் வந்து கொண்டேயிருந்தன. காரணம் நான் அன்றுதான் (அன்று என்பதற்கு அப்போது என அர்த்தமில்லை. அன்றைய நாள் என்பதாகும்.) பிறந்தேனாம். (ஆஹா... சின்ன நூல் கிடைத்து விட்டது. இனி வருடம் என்ற கயிறு கிடைத்து விட்டால், உறவுச் சிக்கலை பிணைத்து கட்டி விடலாம் என சகோதரி கீதா அவர்கள் சந்தோஸிப்பதும் என் மனக் கண்ணில் தெரிகிறது. ஹா ஹா ஹா ஹா. ) எனக்கும் இப்போதுதான் வாட்சப் வசதிகள் கொண்ட ஃபோன் கிடைத்திருப்பதென்பது குறிப்பிடத்தக்கது . நாங்கள் பொதுவாக பிறந்த மாதத்தில் வரும் ஜென்ம நட்சத்திரத்தன்று நினைவில் வைத்துக் கொள்வோம். ஆங்கில தேதிகளில் வாழ்த்துக்கள் தெரிவிப்பது என் குழந்தைகள் ( சகோதரி அதிரா அவர்கள் மன்னிக்கவும் .. "குழந்தைகள் எப்படி கல்லூரியில்.... இந்த கமலா சிஸ்டருக்கு எவ்வளவு தடவை சொன்னாலும் புரியலே" என மனசுக்குள் சொல்வது கேட்கிறது. ஹா ஹா ஹா ஹா ) பள்ளி கல்லூரிக்கு சென்ற பிறகுதான் பழக்கமாகி போனது.
ஆனால் எனக்கு அன்றைய தேதியில் இன்றைய அனைவரின் வழக்கப்படி வாழ்த்துக்கள் வந்தது சற்றே விசித்திர மகிழ்வை தந்தது. "நான் எப்போதுமே ஒவ்வொரு வருடமும் கடக்கும் போது நாம் இந்த வருட இளமையை தொலைத்து விட்டு முதுமையை நோக்கித்தான் அடுத்து அடியெடுத்து வைக்கிறோம் என நினைத்துக் கொள்வேன். சில சமயம் அடுத்தப்பிறவியின் வாசல் படியென்றும் நினைத்துக் கொள்வேன்." (எனக்கு போட்டியா இவங்க அப்போதையிலிருந்தே இங்க ஞானியா? என சகோதரி அதிரா அவர்கள் ஆனந்தத்தோடு விய(ழு)ந்து விய(ழு)ந்து அதிசயப்பது புரிகிறது. ஹா.ஹா ஹா ஹாா..) எப்போதுமே என் பிறந்த நாளுக்கென்று சிறப்பான முறையில் ஏதும் செய்யாத நிலையில், இந்த வருடம் அனைவரின் வாழ்த்துகள் மட்டும் ஏனோ சிறிது ஆனந்தத்தை அளித்ததும் உண்மை.. (காரணம் புது வாட்சப் பாக இருக்கலாம். இல்லை.. நமக்கு அடுத்தபடியாக சிஷ்ய ஞானி உருவாகி விட்ட திருப்தியாகவும் இருக்கலாம். ஹா ஹா ஹா ஹா ஹா )
அதன் பின் அந்த மாதத்தில் பத்தொன்பதாம் தேதி என் நாத்தனார் பெண் அவர்கள் வீட்டில் பத்து வருடத்திற்கும் மேலாக வளர்த்து வந்த செல்லம் ( இங்கு செல்லம் என்று குறிப்பிடுவது சகோதரர் ஸ்ரீராம் அவர்களுக்கு மிகவும் திருப்தியையும், சந்தோஷத்தையும் அளிக்கும் என நினைக்கிறேன்.) தீடிரென்று மரணித்து விட்டதாக அதே வாட்சபில் சொன்ன போது, மனசு சங்கடப்பட்டு அன்று முழுவதும் வேதனையாக இருந்தது. அதற்கு முன் இரு தடவை அவர்கள் வீட்டுக்கு (ஹைதராபாத்) சென்ற போது அந்த செல்லத்தை பார்த்திருக்கிறேன்.. அந்த ஞாபகம் வந்து அதனை நினைத்து அன்று முழுவதும் அவர்களுடன் பேசிக்கொணடிருந்தேன். அவர்களும் அதன் காரணமாக குடும்பத்தில் அனைவரும் சேர்ந்து எங்கும் பயணப்பட மாட்டார்கள். யாரேனும் ஒருவர் அதற்கு காவலாக... இருப்பார்கள். அக்காலத்தில் "வீட்டை காக்கும்" எனப் படித்தது ஞாபகம் வருகிறது.
இப்படியாக அந்த ஒரு மாதத்தில் இன்பமும் துன்பமுமாக இரு நிகழ்வுகள்.( முதலில் சொன்ன வரிகள் ஒரளவுக்கு பொருந்தி வந்து விட்டது.) இந்த பிறந்த நாள்என்றதும் யாருக்கு யார் பெரியவர். சின்னவர் என்பதைக் கண்டதும், ஒரு நினைவு... நமக்கு தெரிந்த பதிவர்கள் அனைவருமே ஒரிரு, இல்லையேல் நான்கைந்து, அதுவும் இல்லையேல் ஆறேழு, அப்படியும் இல்லையென்றால், ஏழெட்டு வயது வித்தியாசத்தில் இருப்போம். ஆனால் சகோதரர் நெ. த அவர்கள் அரை விநாடி பின் பிறந்து விட்ட காரணத்தாால், கீதா ரெங்கனை "அக்கா" என அழைப்பதாக சகோதரி கீதா அவர்கள குறிப்பிடுகிறார்.
ஆனால் அதைப்பார்த்து "சகோ" என வாய் நிறைய அழைத்து வந்த சகோதரி கீதா அவர்கள் நான் எழுதிய 1976க்கு அப்பறம் கமலாக்கா என அழைத்து ஆனந்திக்கிறார். ஹா ஹா ஹா ஹா ஹா.
சரி "நினைவைச் " சொல்லவேயில்லையே... நாங்கள் சென்னையில் குடியிருந்த போது
நான்கு குடித்தனம். அதில் கீழ் வீட்டில் ஒரு அம்மா, இரண்டு மகள்கள் ஒரு மகன்,. தன் பெரிய பெண்ணின் மகளை தன் மகனுக்கு மணமுடித்திருந்தார். (பாட்டியே மாமியார்) அந்த பேத்திக்கு அப்போது என்னை விட ஒரு ஐந்து வயது கம்மியாகயிருக்கலாம். நான் அவர்களை எப்படி பேர் சொல்லி அழைப்பது என்று பரஸ்பரம் இருவருமே "மாமி" என அழைத்துப் பேசிக் கொள்வோம். தீடீரென ஒருநாள் அந்த மாமியார் (பாட்டி) என்னிடம் "மாமி.. (அவரும் என்னை அப்படியே அழைத்தார் என்பது வேறு விஷயம்.) இனி எங்க பேத்தியை மாமி என்று அழைக்காதீர்கள். அவள் உங்களை விட சின்னவர். சீக்கிரமே திருமணம் செய்து விட்டோம். ஆனால் இப்போதுதான் ஒரு குழந்தை பிறந்திருக்கு. அதை வைத்துக்கொண்டு அவளை பெரியவராக நினைத்து விடாதீர்கள்.. இனி பேரைச் சொல்லியே கூப்பிடுங்கள்.. எனச் சொல்லவும் எனக்கு என்னமோ போலாகி விட்டது. (பேத்தி என்பதால், மருமகளிடம் அவ்வளவு பாசம்..) அதற்கு முன் பழகும் போதே எனக்கு பத்தொன்பது வயதில் திருமணமானதையும், சீக்கிரமாகவே குழந்தைகள் பிறந்திருப்பதையும் அறிந்து வியந்தவர்தான் அந்த அம்மா. சரி... அதுதான் போகட்டும்...ஒருநாள், " நான் உங்கள் அம்மா மாதிரிதான்... ஆனாலும் உங்களை பேர் சொல்லி அழைக்க என்னமோ மாதிரி இருக்கு.. அதனால் மாமி என்றே அழைக்கிறேன்" என்றாறே பார்க்கலாம்.
எனக்கு சிரிப்புதான் வந்தது. "என்னை எப்படி வேண்டுமானலும் அழைத்துக் கொள்ளுங்கள் . பாட்டி, கொள்ளுப்பாட்டி எள்ளுப்பாட்டி என அழைத்தாலும் ஆட்சேபனை இல்லை. கூப்பிட்டு விளிப்பதற்காகத்தான் பெயரிடுவது, உறவை குறிப்பிடுவது எல்லாம்... எப்படி அழைத்தால் என்ன.... என்றேன். (ஆஹா எவ்வளவு பெருந்தன்மை... என அனைவரும் புகழாரம் பதியலாம் என யோசிப்பது புரிகிறது. ஆனாலும் வேண்டாமே....)
இப்படி ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு அனுபவங்கள் மறக்க இயலாதவையாக அமைந்து விடுகிறது.
அதெல்லாம் சரிதான்.. இன்னமும் பதிவில் முதலில் எழுதியது வரவில்லையே.. எண நீங்கள் பொங்குவதற்குள், சகோதரி பானுமதி அவர்கள் சகோதரி வல்லி சிம்ஹன் பதிவில், "என்ன இந்த மாதம் எல்லோரும் புனித பயணமா இருக்கே" என நான் சொல்ல வந்ததை சொல்லி விட்டார்.
அதைத்தான் பதிவின் தொடக்கத்தில் ரயிலோடு இணைத்திருந்தேன்.. (இவங்களுக்கு நிஜமாகவே தலைசுத்தல் வந்ததை எந்த இடத்திற்கும் வந்து அடிச்சு சொல்றேன். ஆயுர்வேதமும் பலன் அளிக்கவில்லை போலும் ..) என பொறுமை தாளாமல் சகோதரி கீதா சாம்பசிவம் அவர்கள் நினைப்பதும் என்னால் ஊகிக்க முடிகிறது.
அட.. எல்லோரும் கடுப்பாவது தெரிகிறது. இதோ.... விடுவிக்கிறேன்.விடுவித்தே விடுகிறேன். வரும் ஞாயிறன்று மாலை குலதெய்வ வழிபாட்டிற்காகவும், வேறு சில காரணங்களுக்காகவும் பிறந்து வளர்ந்த ஊருக்குச் (திருநெல்வேலி) செல்கிறோம். ஒரு வாரம் அங்கு தங்க வேண்டியதிருக்கும். இந்த மாதம் குலதெய்வ மாதம் போலும். (அதனால்தான் முதலிலேயே பிறந்தது, இன்பம், துன்பம். அனைத்தையும் ரயில் பயணங்களுடன் கோர்த்து விட்டேன்.)
பொதுவாக உப்புமாவை எங்கள் வீட்டில் "இன்று குலதெய்வ வழிபாடு" என்றுதான் குறிப்பிடுவோம் . கிளம்பும் அன்றாவது உப்புமா இடையில் வராமல் இருக்க வேண்டும்.... ஆமாம்.. வளவளன்னு எழுதியதுதான் எழுதியாச்சு. (ஆனால் தலைப்பையாவது மாத்தி கொடுத்திருக்க கூடாதா? .. பேசாமே கடைசியிலே சொன்னமாதிரியே "விளையாட்டா கோர்த்த பதிவு"ன்னு வச்சிருக்கலாம்..) என்று சகோதரர் கில்லர்ஜி அவர்கள் அவரின் நண்பர் இருவருடன் சத்தமாகவே பேசுவது கேட்கிறது.
அது சரி.. ஊருக்கெல்லாம் போயிட்டு நிதானமா வாங்கோ . அவசரமேயில்லை. Day யை சொன்னீங்களே.. Year யும் சொல்லிட்டு போங்கோ.. கணக்கு போட்டு குழப்பம் தீர்க்கலாமே.. என அனைத்துக் குரல்களும் ஒருசேர அழகான இசையாய் ஒலிப்பது கேட்கிறது.
போயிட்டு வர்றேன். சொல்லலாமா என்று கேட்டு விட்டு வந்து சொல்கிறேன். ( வேறு யாரிடம்? தெய்வத்திடந்தான்.....) 🙏...
அனைவரையும் விளையாட்டாகத்தான் குறிப்பிட்டேன். தவறெனின், 🙏. மன்னிக்கவும்...
(அட... இங்கு தலைப்பும் வந்து விட்டதே...)ஆனால் அதைப்பார்த்து "சகோ" என வாய் நிறைய அழைத்து வந்த சகோதரி கீதா அவர்கள் நான் எழுதிய 1976க்கு அப்பறம் கமலாக்கா என அழைத்து ஆனந்திக்கிறார். ஹா ஹா ஹா ஹா ஹா.