Showing posts with label வாழ்த்து. Show all posts
Showing posts with label வாழ்த்து. Show all posts

Saturday, August 15, 2015

எங்களுக்கு எப்போது..?





சுதந்திரங்கள் என்றுமே உங்களுக்கு மட்டுந்தான்.!
சுற்றித் திரியும் சுகங்கள் எமக்கென்றும் இருந்ததில்லை!
எமது இனங்கள், வானிலே பறந்து வட்டமிடுவதையும்,
எட்டிப் பார்க்கும் எழுச்சியும் எமக்கிருந்ததில்லை.!
மனிதரின் பிரச்சனைக்கு தீர்வின் மருந்தாக மட்டும்
மண்ணில் வந்து சிறகின்றி அவதரித்தோமா.?
ஆயிரம் மாற்றங்கள் அனுதினமும் உருவாகியும்,
ஆண்டாண்டு காலமாய், அதற்குதானா இந்தச் சிறை.?
தெய்வங்களை நாங்கள் தினந்தோறும் ஸ்பரிசித்தும்,
தீர்வான பாதைகள் இன்னமும் திறக்வில்லை.!
சிறகுகள் இருந்தும், பறக்கப் பழகவில்லை.! உங்கள்
சிரிப்புக்கு பலியென அதை பரிசாகவே தந்து விட்டோம்.
உங்களின் காலத்தை கணிப்பது எங்கள் பணி, ஆயின்
எங்களின் காலங்ள் என்றும் கண்ணுக்கு தெரிந்ததில்லை.!
வருடங்கள் தினமும் சிறகோடு விரைவாக பறப்பதினால்,
வயோதிகங்கள் வளர்ந்தே எங்கள் வாழ்வும் முடிந்து விடும்
உங்களின் சுதந்திர தாகங்கள் தணிந்ததைப் போன்று,
எங்களின் தாகங்களும் என்றுதான் தணியுமோ?
மனமும் மார்க்கமும் உங்களுடன் அமைந்திருந்தால்,
மனதாற எங்களையும் மகிழ்வோடு மறுப்பின்றி,
சுற்றிப் பறக்க விட்டு சுதந்திரத்தின் காற்றுக்களை,
சுவாசித்து வாழ விட சற்று முயற்சித்து பாருங்களேன்.



வலைத்தள சகோதர சகோதரிகள் அனைவருக்கும் 
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.              .                
        படங்கள் : நன்றி ௬குள்                            

Thursday, July 16, 2015

வாழ்த்திசைக்க வாருங்கள் என்றே வரவேற்கிறேன்



எங்கள் வீடெனும் தனித் தடாகத்தில்
ஒரு தங்கத் தாமரை மலர் பூத்தது.
தங்கத்தை நிகர்த்த பெருமழகோடு, இத்
தரணியை வெல்ல மெல்ல உதயமானது.

ஆறுமுகத்தோனின் அருளும் பார்வைகள் என்
அகத்தினில் என்றும் அவனருளால் அசையாதிருக்க,
அண்ணலின் அன்பான பெருங்கருணை மழையினால்,
இன்னல்கள் அதிகமின்றி இனிதாகவே பூத்தது.

முருகா முருகாவென்றே, மனமது ஜபித்திருக்க
முப்பொழுதும், அவன் துணைக்காக தவித்திருக்க
தாமரை மலரில் அழகாக அவதரித்தவன் அந்த
தாமரையையே பரிசாக்கி தந்தருளி விட்டான்.

அழகின் சிரிப்போடு எல்லையற்ற ஆனந்தமும்
அருகருகே இணைய, என் அற்புத நேரங்களும்
அதி சுலபமாய், வாதிடும் சொற்களும் ஏதுமின்றி
அடி பணிந்து பணிவோடு விடைபெற்றுப் போனது.

கண்ணின் மணியாம் என்னவளின் அழகிய
கரு விழியதனில் என் முழுப் பொழுதும்
கட்டுண்டு போனதில் ஒருநாளின் மணிப்பொழுது
கரைந்து தினமும் சில நிமிடங்களே ஆனது..

இக்குயிலின் இனிய வரவால் என் இரவு
துயிலின் உறவும் துண்டித்துப் போனது.
தாமரை மலரின் மனங்கவர் வாசத்தில்
தமிழ்மண சுவாசமும் தடைப்பட்டு போனது.

பூந்தளிரின் வரவால் தமிழினின்று பிரிந்தாலும்,
பூவின் வாசத்தில் மதி மயங்கி கிடந்தாலும்,
மனமெனும் பறவை புதிய உறவின் வரவை
மகிழ்ந்து பறைச்சாற்ற கட்டளையும் பிறப்பித்தது.

தாமரை மலருக்கு தங்களின் அன்பான ஆசிகளை
தப்பாது வந்து மனம் நிறைந்து வாழ்த்திசைத்தால்,
இசைக்கும் இசையினில் மயங்கும் அந்த இளங்குயிலும்   
இனிதான வாழ்வை வளமாக வாழுமெனவும் நம்புகிறேன்.

 மனம் நிறைந்த நன்றிகளுடன் கமலா ஹரிஹரன்.



என் மகளுக்கு அழகான பெண் மகவு பிறந்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அவள் நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் பெற்று நீடுழி வாழ வாழ்த்த வலைத்தள உறவுகளை அன்போடு அழைக்கிறேன். அதன் காரணமாக இத்துனை நாள் வலைப்பக்கம் வாராது இருந்தமைக்கு அனைவரும் மன்னிக்கவும். அனைத்து சகோதர, சகோதரிகளின் பதிவுகளை படித்து வருகிறேன். இனி கிடைக்கும் நேரத்தில், அனைவரின் பதிவுகளுக்கும் கருத்திட முயலுகிறேன். என்னை மறவாதிருக்கும் அன்புள்ள நட்புள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.




நட்போடு வாழ்த்திசைக்க வந்தவருக்கும்வருபவர்க்கும் என் பணிவான மிகப் பணிவான நன்றிகள்.

Wednesday, January 14, 2015

பண்டிகைகளும், சந்தோஷங்களும்....

ன்றைய நாளின் சந்தோஷங்கள் வேறு!     
 ன்றைய நாளின் மகிழ்வுகள் வேறு! 
ஒருமாதம் முன்னதாகவே, பண்டிகை நாட்களின் வரவுகளும், அதனை கொண்டாடி மகிழ்ந்த சென்ற வருட நினைவுகளும், நம்மை வந்தடைய, காலில் சக்கரம் இல்லாகுறையாக நாம் பண்டிகையை நோக்கி ஓட ஆரம்பித்து விடுவோம். ஆனால் அப்போது, இப்போதைய காலக் கட்டத்திலிருந்து, நிறைய மாறுதல்கள் இருந்தது. (அடுப்பிலிருந்து, உடுப்பு வரை மாற்றங்கள்தாம்.) அந்த பண்டிகை நாளின் இறுதி நாள் வரை பணத்திற்கும், சில பல வசதியின்மையின் தட்டுப்பாட்டைப் பற்றி வீட்டின் பெரியவர்கள் கவலை கொள்வது, நம் கண்களுக்குத் தெரிந்தாலும், எப்படியாவது சமாளித்து நாளைய பண்டிகையை நிறைவாக கொண்டாடுவோம் என்ற நம்பிக்கை மனம் நிறைய இருக்கும். அதே மாதிரி பெரியவர்களும், தம் கவலைகளை சிறு சிறு கோபங்களோடு, நம்மிடையே சற்றே வெளிக் காட்டினாலும், அந்தந்தப் பண்டிகையன்று நம் மனம் கோணாமல், நமக்கு வேண்டியதை கிடைக்கச் செய்து, நம்முடன் சேர்ந்து அவர்களும் ஒரு குறைவுமில்லாது விஷேடங்களை சிறுபிள்ளைகளாக கொண்டாடி மகிழ்வார்கள். வீடு முழுவதும் உற்றமும் உறவும் சேர்ந்து நிறைய மகிழ்ச்சியலைகள் நிரம்பி வழியும். பெரியவர்களின் ஆசிர்வாதங்கள், மரியாதையுடன் அதனை விரும்பி வேண்டி, அவர்களிடம் பெறும் பரிசுகள் என புதுமலராக பூத்துக்குலுங்கும் பண்டிகைகள். “மறு வருடம் இதே தினங்கள் என்று பூக்கும்?” என்ற மலரும் நினைவுகளோடும், “சென்ற வருடத்தை விட இந்த முறைச் சிறப்பாக இருந்தது.’! என்ற சந்தோஷமும் மனதை நிரப்ப, “இன்று நிறைவேறாத சிறுக்குறைகளை வரும் வருடம் அன்றைய தினத்தில் வட்டியும், முதலுமாய், அனுபவித்து விடுவோம்”. என்று மனதில் எதிர்பார்போடும், மறுபடியும் அந்தப் பண்டிகைக்காக காத்திருப்புக்கள்.! இப்படியாக அன்றைய நாட்கள் மகிழ்வோடு கழிந்தன.

ஆனால் இன்று எத்தனையோ வசதிகள் இருந்தும், நினைத்தால், பெரும்பாலும் கடனோ, உடனோ பட்டு எதையும் வாங்கி விடலாம் என்ற நம்பிக்கையிருந்தும், காத்திருப்புகள்  இல்லை.! எதிர்பார்ப்புகள் இல்லை!  பண்டிகை என்று வந்தால், ஏதோ கடமைக்காக வரவேற்பது மாதிரி தோன்றுகிறது. விஷேடங்களின் சிறப்புக்கள் மனதை பாதிக்காத மாதிரி அனைவருமே அமைதியாக பண்டிகையா? வரட்டுமே!” என்ற வெகு சதாரணமான மனதுடன் அதை எதிர் கொள்வது மாதிரி ஒரு தோற்றம் ஏனோ உண்டாகி விட்டது. பண்டிகைகள் அன்றைய சந்தோஷங்களோடு, விரைந்து வந்து முகம் காட்ட தயக்கம் கொள்கிற பாவனையோடு, எங்கோ ஒளிந்து மறைந்து கொண்டிருக்கிற மாதிரியான தோற்றத்தை, மாறி வரும் காலங்கள்தான் நிர்ணயத்து அமைத்து விட்டனவா? என எண்ணத் தோன்றுகிறது.

நல்ல உடையிலிருந்து, நல்ல விதவிதமான உணவுகள் வரை, அவ்வப்போது போட்டுப் பார்த்து, உண்டு அனுபவிக்கிறோமே! இதை அந்தந்த பண்டிகையில்தான், உடுத்தி, சந்தோஷத்தித்து, சுவைப்பட சுற்றம் ௬டி, உண்டு அனுபவித்து, மகிழ வேண்டுமென்ற கட்டாயம் ஏதும் இல்லையே! என்பதினாலா? இல்லை,! பண்டிகைகளை சிறப்புற கொண்டாடிச் சிறப்பித்ததில் அந்த பண்டிகைகள் நிஜமாகவே போரடித்து விட்டதினாலா? இல்லை.! உற்றார் உறவுகள், காலச்சுழற்சியால், வாழ்வை நிலைப்படுத்தும், சுகப்படுத்தும் சந்தர்பங்களினால், “நீ எனக்கு என்ன முறை வேண்டும்? பார்த்துப் பேசி நாட்களாகி விட்டதல்லவா? யார் என்று சட்டென்று தெரியவில்லை?” என்று எப்போதோ, என்றோ நடக்கும் ஒரு திருமணத்திலோ, வேறு ஏதோ விஷேடங்களிலோ, சந்திக்கும் போது மட்டும் பேசிக்கொண்டு, பின் அது குறித்து அறவே மறந்து விடும் நிலையினாலா? இல்லை! வழிவழியாக அந்தந்தப் பண்டிகையின் தாத்பரியங்களை, அதன் நிகழ்வுகளின் கட்டாயத்தை காரண காரியங்களுடன், சொல்லி வழி நடத்துபவர்களை, நம் பயணங்களுக்கு நடுவிலேயே, அவர்களின் பாதை மாற்றி, அவர்களை நம் பெரும் வாழ்வின் சுமையெனக் கருதி, இல்லங்களின் வாசல்களில், இறக்கி விட்டு விட்டு ஓடும் அவசர வாழ்வினாலா? எதனால் பழைய அனுபவங்கள், மகிழ்வுகள் தவறுகின்றன? 

ஆனாலும், இன்றும், அன்றைய பழைய சந்தோஷ தருணங்களை நினைவு ௬றுவோர்கள், அந்நாளை மறக்க இயலாதவர்கள் என்றும்    இருப்பதால்தான், காலப்போக்கில் வரும் பண்டிகைகள் கால்வீசி தன்போக்கில் நடை பயின்று வந்து கொண்டிருக்கின்றன. உங்கள் சந்தோஷங்களை  என் நினைவலைகளில் தக்க  வைத்துக்கொண்டு  இதனூடேயே  நானும்  இன்னமும்  எத்தனை  ஆண்டுகளாயினும்  பழமை மாறாது  பயணிப்பேன்.! என்ற மனப்பான்மையோடு  தன்  சம்பிரதாயங்களை  மாற்றிக் கொள்ளாது  நம்மிடையே   இயந்திரமாக  உலாவி  வருகின்றன. அவற்றுடன் நாமும் இனி வரும் காலங்களில், பழைய மகிழ்ச்சியோடு, அதனை எப்போதும் மனதில் தேக்கி வைத்தவாறு அதனுடன் பயணிப்போமா?

என் மனதில் எழுந்ததை பகிர்ந்து கொண்டேனேயன்றி, அன்றைக்கும், இன்றைக்கும், அவனியில் மாற்றங்கள் பெரிதும் ஏதுமில்லை என்ற மனநிலையில் இருப்பவர்களுக்கும், வாழ்ந்துகொண்டிருப்பவர்களுக்கும், என் மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி! 
  
 அனைவருக்கும் என் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்.!!!!



Wednesday, December 3, 2014

அணிலாக நான்...




மழழை வந்தால் பொதுவாக  வீட்டில்
மகிழ்ச்சி வெள்ளம்! அதை  பெற்ற
மகளும் சொன்னால்,  நம்  அனைவரின்
மனமும் துள்ளும்!  அந்த  மகிழ்வின்
வரவை கட்டியங்௬றி,  மனம்  மகிழ்வுற 
வந்ததொரு தகவல் என்னைப்பிடித்து
விரைந்து தள்ளியது.! சென்னைச் செல்லும்
விஜயமொன்றுக்கும் வழி வகுத்தது.
இரு வாரங்களுக்கும் மேலாகவும்
இணையத்தின் தொடர்பையும் துண்டித்தது.
 
நாட்கள் தொண்ணூறு வரை
நகர்த்தும் சிரமம் குறித்தும்,
அன்னையென்ற பதவி தரும்
அளப்பறியா மதிப்பைச் சொல்லியும்,
அவள் அசதிக்கு தோள் கொடுத்து
அவள் அன்புக்கு அன்பு செய்து,
அருமை மகள் இயலாமை துடைத்து,  என்
அருகாமையில் அவள் அச்சம் வடித்து, நான்
உன்னைப்பெற்ற தவத்தின் அருமையை
நீயும் உணரும் நல்ல நேரமிது!எனும்
உண்மைதனை புரிய வைத்து,
உடனிருந்து உற்சாகப்படுத்தி,
உள்ளத்தில் மட்டற்ற களிப்புடன்
உவகையுடன் திரும்பி வந்தேன்!
 
வந்திங்கே  இணையம்  திறந்து  பார்த்துப்படித்திட,
வார்த்தைகள்  ஏதும்  எழுதிட  வரவில்லை!
அறிந்தவர்  தெரிந்தவர்  பதிவெல்லாம்  சிறப்பாக
அதி அற்புத  வேகத்தில்  பறக்குதிங்கே!
அனைவரின்  படைப்பும்  திறமையும்  கண்டு,
ஆனந்தத்துடன்  பெரும் ஆச்சரியபட்டாலும்,
அவர்களுடன்  பயணிக்க  உன்னால்  இயலாது!”  என
அகமானது  பரிகசிக்கமுயற்சியுடன்  ஒரு
அணிலின்  மனநிலையில்  மீண்டும்  பிரவேசிக்கிறேன்.
கடமைகளின்  இரு கரந்தனில்  கட்டுண்டாலும்,
கவலைகளை  களைந்தெறியும்  இக்கணிணி  வாழ்
நட்பினிடையே  நான்  அணிலாக  சுற்றி  வருவதில்
நட்புள்ளங்களுக்கு  ஏதும்  தடையொன்றும்  இல்லையே..?

மனமது மகிழ்வுற அழகிய மகவொன்றை
மனம் நிறைய, சிரமமின்றி, என் மகள்
நலமுடன் பெற்றுச் சிறந்து வாழ்ந்திடஅன்பு
நல்லுறவுகளின் இனிய நல்வாழ்த்துக்களும்,
நன்மை பயக்கும் என்ற நம்பிக்கையுடன்,
நாடுகிறேன் உங்கள் வாழ்த்துக்களையும்,
நன்றிகள்  நிறைந்த  உள்ளத்துடன்..
            
நட்புடன்,
கமலா ஹரிஹரன்.