வணக்கம் அனைவருக்கும்.. ..
ஒரு மாதத்திற்கு ஒருமுறையேனும் ஏதாவது என் தளத்தில் கிறுக்கிக் கொண்டிருந்தேன். கொஞ்ச நாட்களாக எதுவும் எழுதவே இயலவில்லை. நானும் தினமும் வேலைகளுக்கு நடுவே எழுதுவதற்கென்று ஏதேனும் விஷயங்களை யோசித்து வைத்துக் கொள்வேன். ஒரு வழியாய் கடமைகள் முடித்து ,கைப்பேசியை தொடும் போது, வடித்து வைத்த எண்ணங்கள் அத்தனையும் காணமல் போய் மனதில் சஞ்லங்கள் மட்டுமே நிறைந்திருக்கும்.
இதோ..! இந்த மகளிர் தினத்திற்கு புதிதாக ஏதேனும் எழுத வேண்டுமென ஒரு மாத காலமாய் நினைத்துக் கொண்டேயிருந்தேன். ஆனாலும், என்னவோ இயலாததால், என்னிடமிருந்த பழைய சோற்றை, சிறிது தாளிப்புடன் இனியதாக்கி, அதனால் சுவை சற்று கூடியிருக்கும் என்ற எண்ணம் தந்த அசட்டு தைரியத்தில் புதியதாக்கி படைத்திருக்கிறேன். பார்த்து படித்து ரசிப்பவர்களுக்கு என் பணிவான நன்றிகள். 🙏.
உலகிலுள்ள அத்தனை மகளிர்களுக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துகள். அத்துடன் அவர்களது சாதனைகளுக்கு அக்காலம் தொட்டு என்றுமே உறுதுணையாய் நின்று அரவணைத்து கை கொடுக்கும் அத்தனை ஆண்மக்களுக்கும் மனப்பூர்வமான வாழ்த்துகளும், நன்றிகளும்.... 🙏.
பெண்....
மண்ணில் பதிந்த பாதங்களை
பற்றியிழுத்து விட்டு
மறுபடி ஓடிவந்து
பாதங்களை தழுவி
தவறுக்கு வருந்தி
மன்னிப்பு கேட்கும் குழந்தை
மனதுடன் நித்தம் நித்தம்
மருகி கொண்டு
வந்து போகும் கடல் அலைகள்...
ஆனால், நீ அந்த கடல்
மட்டுமல்ல......
விண்மீன்களின் நடுவே
தனக்கென்று ஓர் இடத்தை,
விரும்பி அமைத்துக்கொண்டு
கவிஞனுக்கு துணை செய்ய,
பாதியாகவே, பாதி நாட்கள்
வந்து போனாலும் ஒளியில்,
பரிதிக்கு நிகராக
பாரினில் உலா வரும் நிலவு....
ஆனால், நீ அந்த நிலவு
மட்டுமல்ல.....
மயக்கும் அந்தி சாயும் பொழுதில்,
கை விசிறியாக தான் மாறி,
மனதையும் உடலையும் குளிர்வித்து,
தானும் குளிர்ந்து
மண்ணுலக மாந்தர்களை
மகிழ வைப்பதே கடமையென,
மட்டற்ற மகிழ்ச்சியுடன்
ஓடிவரும் தென்றல்......
ஆனால், நீ அந்த தென்றல்
மட்டுமல்ல....
வாசமாக பிறந்து,
வாசங்களுடன் வளர்ந்து,
மனிதரின் சுவாசத்துடன் கலந்து,
பிறப்பெய்தியதே பிறருக்குத்தான்
எனும், மாபெரும் உண்மையை,
மனிதருக்கு பாடமாக்கி இறுதியில்,
மடிவையும் இந்த மண்ணிலேயே
சந்தித்து போகும் பூக்கள்.....
ஆனால், நீ அந்த பூக்கள்
மட்டுமல்ல....
பச்சைப் பயிரினங்கள்
செழிப்பாக வளர அதற்குதவிடவே,
பாய்ந்தோடும் நீர் நிலைகள்
என்றும் நிறைந்திருக்க,
விண்ணில் பிறந்து
மண்ணில் தவழ்ந்து படைத்தவனின்,
விருப்பத்தை நிறைவேற்றும்
மழைத் துளிகள்........
ஆனால், நீ அந்த மழை
மட்டுமல்ல........
கடலின் கருணையும்.
நிலவின் பரிவும்,
தென்றலின் பொறுமையும்,
பூக்களின் தியாகமும்,
மழையின் பாசமும்,
குடக்கூலி எதுவும்
கேட்காமல்...
உன்னிடம்....
என்றோ....
குடியேறி விட்டனவே.....!!!!.
இவையணைத்தும் ஒன்றிணைந்து,
இயல்பாய் தோற்றுவித்த,
இயற்கையின் பொக்கிஷம் நீ.....
இறைவனின் இனிய படைப்பு நீ......
இவ்வுலகில் நீ அன்றும்,
இன்றும், என்றும்,
இன்றியமையாதவள்....!!!!.
மகளிர் தின வாழ்த்துக்கள் அம்மா
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்களது உடனடி வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என மனம் நிறைந்த நன்றிகள்.
உங்களது மகளிர் தின வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கவிதை கலர் கலராக அழகாக வந்திருக்கிறது சொற்களும் நன்றாக இருக்கிறது ஆனால் உண்மையை சொல்லும் என்றால் கவிதைகள் எனக்கு அதிகம் புரிவதில்லை
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
ஹா.ஹா.ஹா. கலர் கலராக வந்திருக்கும் கவிதையை படித்து ரசித்தமை கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.
/கவிதைகள் எனக்கு அதிகம் புரிவதில்லை/
நான் எழுதும் கவிதைகள் கூடவா? கவிதை என்ற பெயரில் சற்று உரைநடை கவிதையாகத்தானே எழுதுகிறேன்...! பதிவுக்கு வந்து தந்த உங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆஆஆஆஆ மகளிர் தினமோ.. நீங்க சொன்னதும்தான் நினைவு வருது ஹா ஹா ஹா..
ReplyDeleteகவிதைகள் நன்று.
வணக்கம் அதிரா சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
யூடியூப் சேனல் ஆரம்பித்த மகிழ்வில் தங்களுக்கு மகளிர் தினம் மறந்து விட்டதா? ஹா.ஹா.ஹா. சும்மா வேடிக்கையாகத்தான் கேட்டேன். தாங்கள் யூடியூப் சேனல் வெற்றிகரமாக நடத்த என் வாழ்த்துக்கள். பிரார்த்தனைகள் என எப்போதும் உங்களுக்கு உண்டு.
கவிதையை பாராட்டியமைக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மகளிர் தினத்திற்கான கவிதை நன்று.
ReplyDeleteபெண்ணின் பல்வேறு பரிமாணங்களைச் சொல்லிச் செல்கிறது. பாராட்டுகள்.
பெண்ணிற் பெருந்தக்க யாவுள என்பதுதான் நினைவுக்கு வருகிறது.
பெண்களும், அவர்களது தியாகமும் இல்லையென்றால் இவ்வுலகம் வாழுமிடமாகவா இருக்கைம்?
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
மகளிர் தின கவிதையை அது எப்படியிருந்தாலும், நீங்கள் வந்து படித்து மனதாற பாராட்டுக்கள் தந்ததற்கு மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
/பெண்களும், அவர்களது தியாகமும் இல்லையென்றால் இவ்வுலகம் வாழுமிடமாகவா இருக்கைம்?/
உண்மைதான்.. பெண்களின் தியாகங்கள் மிகப் பெரிது. ஆனால் அவர்களைப்போல் ஆண்களும் இப்போது நிறைய தியாகங்களை செய்து அவர்களுக்கு தோள் கொடுக்கின்றனர். அதற்காக அவர்களையும் பாராட்ட வேண்டும்.
தாங்கள் மற்றும் அனைவரும் எழுதிய பொங்கல் மலருக்கான மின்னூல் விமர்சனம் இனிதான் புதன் பதிவுடன் எ.பியில் வருமென நினைத்திருந்தேன். ஆனால் இன்று எ.பியில் தற்செயலாக பார்த்த போது மின்னூலுக்கென தனியிடம் ஒதுக்கி,அதில் அனைவரின் விமர்சனங்களும் இடம் பெற்றிருக்கின்றன. நான் கைபேசியில் வலை உலா வருவதால் அவ்வளவாக கவனிக்க இயலவில்லை போலும் என நினைத்துக் கொண்டேன். அனைவரின் விமர்சனங்களையும் நேரம் கிடைக்கையில் அவசியம் படிக்கிறேன். அனைவரும் என் தாமதத்திற்கு பொறுத்துக் கொள்ளவும்.
தங்களின் அருமையான கருத்துக்களுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இனிய மகளிர் தின வாழ்த்துகள் சகோ.
ReplyDeleteகவிதையின் வரிகள் பெண்மையை உயர்த்தி போற்றி இருக்கிறது அருமை.
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
உங்களுடைய வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோ.
கவிதையை நீங்கள் நல்லதொரு கருத்துக்கள் தந்து அலங்கரித்த பாங்கிற்கு மிக்க மகிழ்ச்சியடைந்தேன். பாராட்டுதலுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அது மட்டுமல்ல, அது மட்டுமல்ல என்று ஒன்றிலிருந்து இன்னொன்றிற்கு இருக்கும் கவிதை வரிகள் சிறப்பு. பெண்ணின் பெருமையை நன்றாகவே எடுத்து இயம்பி இருக்கிறீர்கள்.
ReplyDeleteபெண்கள் தின வாழ்த்துகள் அக்கா.
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
உங்களின் ஊக்கம் மிகுந்த வரிகள்தான் என் எழுத்துக்களுக்கு எப்போதும் சிறந்த உரமாக இருந்து வருகிறது. கவிதை குறித்த உங்களின் பாராட்டுதலுக்கும், பெண்கள் தின வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கவிதை மிக அருமை.
ReplyDeleteநன்றாக இருக்கிறது கவிதை .
//இவையணைத்தும் ஒன்றிணைந்து,
இயல்பாய் தோற்றுவித்த,
இயற்கையின் பொக்கிஷம் நீ.....
இறைவனின் இனிய படைப்பு நீ......
இவ்வுலகில் நீ அன்றும்,
இன்றும், என்றும்,
இன்றியமையாதவள்....!!!!. //
அருமையான வரிகள்.
மகளிர் தின வாழ்த்துக்கள்.
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
பதிவை ரசித்துப்படித்து. கவிதையை குறிப்பிட்டு எடுத்தெழுதி பாராட்டுக்கள் தந்தமை கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். தங்களின் அன்பான ஊக்கமிகுந்த வரிகள் என் எழுத்துக்களுக்கு சிறந்த உரமாக இருந்து, என்றும் என் எழுத்துக்களுக்கு துணையாகவும் வந்து கொண்டிருக்கிறது.
உங்களின் அன்பான கருத்துரைக்கும். மகளிர் தின வாழ்த்துக்களுக்கும் என் பணிவான நன்றிகள் சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கவிதை பிரமாதம். மிக அழகாய் யோசித்து எழுதி இருக்கிறீர்கள். ஒவ்வொரு பரிமாணமாய்க் கொண்டு சென்ற விதம் அழகு. பெண் இல்லை எனில் உயிர்ப்பு ஏது? ஆனால் எந்தப் பெண்ணும் அதைப் புரிந்து கொண்டதாய்த் தெரியலை. அதான் பிரச்னையே!
ReplyDeleteவணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
/பெண் இல்லை எனில் உயிர்ப்பு ஏது? ஆனால் எந்தப் பெண்ணும் அதைப் புரிந்து கொண்டதாய்த் தெரியலை. அதான் பிரச்னையே!/
உண்மைதான். இப்படி சில பல பெண்கள் இழைக்கும் தவறுகள் பெரும்பான்மையோரை பாதிக்கிறது. சமயத்தில் பெண்களே பெண்களுக்கு எதிரியாக மாறி தங்கள் பெண்மையின் சிறப்பை புறக்கணித்து கொள்கின்றனர்
என்ன செய்வது?
கவிதையை பாராட்டியமை கண்டு மகிழ்வடைந்தேன். தங்கள் அன்பான பாராட்டுதலுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பொதுவாய் எனக்கு இந்த மாதிரித் தனிப்பட்ட தினங்கள் எல்லாம் கொண்டாடப் பிடிக்காது. கொண்டாடியதும் இல்லை. ஆனால் இன்றைய தினத்திற்கென நானும் கொஞ்சம் எழுத நினைச்சேன். எழுதலை. மகளிர் தீனம் கொண்டாடுபவர்கள் அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துகள்.
ReplyDeleteவணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
நானும் எந்த தினத்தையும் கொண்டாடியதேயில்லை. உறவோ, நட்போ எவருக்கும் வாழ்த்துக்கள் பகிர்ந்து கொண்டதுமில்லை. வலைத்தளம் வந்த பின்தான் இந்த மாதிரி அன்னையர், தந்தையர், மகளிர் என தினங்கள் இருபபதை அறிந்து கொண்டவளாய், இப்படி வந்து ஏதோ எழுதிப் போகிறேன்.
நீங்கள் உங்கள் பேத்தியை பற்றிய மன வருத்தத்தில் இருப்பதால், மகளிர் தினத்திற்காக ஏதும் எழுத தோன்றவில்லையென நேற்று உங்கள் பதிவில் கூறியிருந்தீர்களே .. உங்கள் பேத்தி இப்போது சோர்வு அகன்று இயல்பாக உள்ளாளா? ஒரு தடவை வார இறுதியில் உங்கள் பேத்தியுடன் சற்று நீண்ட நேரம் பேசினால் உங்கள் வருத்தங்கள் நீங்கி விடும்.
உங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மகளிர் தின நல்வாழ்த்துகள்.
ReplyDeleteகவிதை சிறப்பாக அமைந்திருக்கிறது. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
கவிதை சிறப்பாக உள்ளதென்ற தங்களின் ஊக்கமிகுந்த பாராட்டுரைகள் எனக்கு மிகவும் மன மகிழ்ச்சியை தருகிறது.
தங்களுடன் பாராட்டுதலுக்கும், வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மகளிர் தின வாழ்த்துக்கள் அம்மா...
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
உங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க மகிழ்வுடனான நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தாங்கள் கவிதை அருமை...
ReplyDeleteமகளிர் தின நல்வாழ்த்துகளுடன்.
துரை செல்வராஜூ..
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
உங்களின் அன்பான மகளிர் தின வாழ்த்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி சகோதரரே. மிக்க நன்றியும்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இன்று எனது தளத்தில் எதுவும் பதிவு செய்வதற்கு இயலாத நிலை..
ReplyDeleteஆனாலும் என்ன..
தங்களுக்காக இதோ!..
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
/இன்று எனது தளத்தில் எதுவும் பதிவு செய்வதற்கு இயலாத நிலை../
அதனாலென்ன.. தங்களின் வேலை பளுவெனும் சுமைகளின் நடுவினிலும், நல்முத்துக்களாய் பார்த்தெடுத்துக் கோர்த்து எத்தனை மணிமணியான முத்தாரங்களாய் பதிவாக்கி எங்களுக்காக தந்துள்ளீர்கள். அதற்கே நாங்கள் என்றும் கடமைபட்டுள்ளோம். நன்றி.
ஆனாலும். அன்புடன் இன்று என் தளம் வந்து எனக்காக அருமையான கவிதையை தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கண்மை கொண்டு
ReplyDeleteவரைந்த தல்ல பெண்மை..
அது கொண்டிருக்கும்
வண்ணம் எல்லாம் உண்மை..
தூய்மை வாய்மை
என்றிலங்கும் மென்மை..
அது கசிந்துருகிக்
கவியாகும் பெண்மை!..
வாழ்க நலமெல்லாம்!..
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
ஆஹா.. அருமையான கவிதை.
இப்படி சட்டென்று வார்த்தை
வரிகள் வரிசை கட்டி கொண்டு
வருவதல்லவோ கவிதை.. இதற்கிடையில் என் கவிதைகளும் பிறந்தெழுந்து வருவது கவிதைக்கே
இழுக்கோ என எண்ண வைக்கிறது.
இருப்பினும், இன்றைய பதிலாய்
கவிதை தந்து என் பதிவை
கலகலப்பாக்கி கவித்துவமாக்கிய
கவி"துரை"க்கு காலங்காலமாய்
கமலா ஹரிஹரனின் நன்றிகள்.
மிக அழகாக எழுதியுள்ளீர்கள். இயல்பாக எடுத்த எடுப்பிலேயே கவிதை வரிகள் தங்களுக்கு வசமாகிறது. ரசித்துப் படித்தேன். மனமார்ந்த பாராட்டுக்கள். மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சிறப்புக்கவிதை மிக மிக அருமை...கவிதையின் பொருளும் அதை அமைத்த நேர்த்தியும் மனம் கவர்ந்தது...வாழ்த்துகள்..
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
தங்களது ஊக்கம் நிறைந்த கருத்துரைகள் என் எழுத்துக்களுக்கு நான் வலைத்தளம் வந்த அன்றிலிருந்து பலம் சேர்ப்பதை உணர்ந்து மிகவும் மனமகிழ்ச்சியடைந்துள்ளேன். இப்போதும் அடைகிறேன். தங்கள் அன்பான பாராட்டுகளுக்கும், வாழ்த்துக்களுக்கும் என் பணிவான நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
This comment has been removed by the author.
ReplyDeleteநான் ஒரு அரசியாக இருந்தால், "யாரங்கே! இந்தக் கவிதையின் ஒவ்வொரு வரிக்கும் ஒரு பொன் பரிசளியுங்கள்" என்று ஆணையிட்டிருப்பேன். என்ன செய்வது இப்போது உங்களுக்கு என் வாழ்த்துக்களை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன். இறைவன் உங்களுக்கு எல்லா நலன்களையும் அருளட்டும்.
ReplyDeleteவணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
இந்தப்பதிவுக்கும் வந்து நல்லதொரு கருத்துக்கள் தந்தமை கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஆனால் உங்களை பயணங்களின் போது தொந்தரவு செய்து விட்டேனோ? என கவலையும் வருகிறது. தங்களின் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி.
/நான் ஒரு அரசியாக இருந்தால், "யாரங்கே! இந்தக் கவிதையின் ஒவ்வொரு வரிக்கும் ஒரு பொன் பரிசளியுங்கள்" என்று ஆணையிட்டிருப்பேன்/
ஹா.ஹா.ஹா. என் பதிவுகளுக்கு நீங்கள் வந்து தந்த/தரும் உங்களுடைய வாழ்த்துகள் ஒவ்வொன்றும் எனக்கு ஆயிரம் பொன்னுக்கு சமம். உங்கள் அன்பான வாழ்த்துக்கள் கண்டு மன மகிழ்ச்சியடைந்தேன். மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.