ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு காய்கறிகளோடு சேர்ந்து கோரஸாக பேசியபடி கோஸும் வந்தது. அது எப்போதும் போல் வருவதுதான்..! ஆமாம்..! இதிலென்ன அதிசயம்? என நீங்களும் நினைக்கலாம். ஆனால்" அந்த கோஸ் என்னை எத்தனை விதமாக அந்த கால முனிவர்கள் மாதிரி, என் சம்மதம் எதுவுமின்றி உன் சாபங்களினால் உருமாற்றி, உனக்கு சாதகமாக பயன்படுத்தி மகிழ்ந்திருக்கிறாய்.... உன்னை வேறு விதமாக உனக்கு முக்கியத்துவம் தந்து டிபன் மாதிரி செய்யட்டுமா? என இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு நாள் கேட்டது நினைவில் இருக்கிறது.. ஆனால், எப்போதும் மதிய சாதத்தின் துணைக்கு மட்டுமே என்னை தூதாக அனுப்புகிறாய்..!" என்று அதன் முறை வரும் போது முணுமுணுத்து முகம் சுளித்தது..
சரி.. அது ஏதாவது கோபத்தின் மிகுதியில் சாபங்களை பதிலுக்கு மாறி தந்து விட்டால், சிரமமாகி விடுமேயென அன்றைய தினம் அதன் ஆசையை நிறைவேற்றினேன்.
இட்லி அரிசியை ஒரு டம்ளர் களைந்து ஊறவைத்து, பின் தனியாக து. பருப்பு க. பருப்பு உ. பருப்பு மூன்றையும் அரைடம்ளர் வீதம் ஒன்றாக களைந்து ஊற வைத்தேன். நான்கு மணிநேரம் ஊறிய அரிசியுடன் உப்பு, மி. வத்தல், பெருங்காயம் சேர்த்து அடைக்கு அரைக்கிற மாதிரி கெட்டியாக அரைத்துக் கொண்டேன்.பருப்பு கவலையையும் கெட்டியாக மிக நைசாக அரைக்காமல், அரைத்து அத்துடன் கலந்து வைத்துக் கொண்டேன்.
கோஸிடம் நெருங்கி (கோஸை சமாதானபடுத்தி "இன்று நீதான் மெயின் ரோல், கவலைப்படாதே. உன் விருப்பப்படி இன்று நீ காலை டிபனுக்கு தயாராக்க படுவாய்.. உனக்கு மகிழ்ச்சிதானே ..!! இன்றிலிருந்து உன் புகழ் ஓங்கிச் செழிக்கட்டும்." . என்ற வீர வசனம் பேசி வாளை, இல்லையில்லை கத்தியை கையில் எடுத்தேன்.) அதன் வீர பிரதாபங்களை மேலும் சொல்லவும், அதுவும் மகிழ்ச்சியாக சம்மதித்தது.
அப்புறமென்ன.. பொடிதாக நறுக்கிய கோஸை நன்கு கழுவி வடிகட்டியில் ஒரு நிமிடம் இரு..! என சொல்லி விட்டு, ஒரு கடாயில், கடுகு உ. ப தாளித்து விட்டு அதனுடன் கோஸுடன் நறுக்கி வைத்த இரண்டு பெ.ரிய வெங்காயத்தை வதக்கிக் கொண்டு, அதை தனியாக எடுத்து வைத்தப்பின் கோஸை போட்டு உப்ப், மஞ்சள் தூளும் சேர்த்துப் போட்டு, அது நன்றாக வேகும் தருவாயில், வதக்கிய வெங்காயத்தை அதனுடன் சேர்த்துப் போட்டு இரண்டையும் "ஊர் வம்பு பேசி சற்று நேரம் மகிழ்ந்திருக்கிறீர்களா?" என கேட்டதும், அவைகளும் மகிழ்வுடன் சம்மதித்தன.
அதன் பின் அரைத்து வைத்திருக்கும் மாவில் கொஞசம் எடுத்து, நன்கு ஆய்ந்து அலம்பி போட்ட கொத்தமல்லி தழைகளையும் போட்டு ஒரு திருப்பு திருப்பி அரைத்தமாவுடன் கலக்கிய பின் மாவை இட்லி தட்டுக்களில் பரப்பி குக்கரில் வைத்து வேக வைத்துக் கொண்டேன். கொத்தமல்லி தழைகளை பொடிதாக நறுக்கியும் மாவில் கலக்கலாம். ஆனால் எங்கள் வீட்டு சிறு குழந்தைகள் சாப்பிடும் போது அதையெல்லாம் அகற்றிய ஆக வேண்டுமென அடம் செய்வதால், கொத்தமல்லி, கறிவேப்பிலையை. முக்கால்வாசி அனைத்திலும் அரைத்தே கலக்கி விடுகிறேன்.எங்கள் வீட்டின் பெரிய குழந்தைகளுக்கும் இதுதான் மிகவும் பிடித்துள்ளது.
ஒரு கடாயில், ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும், வேக வைத்த இட்லிகளை உதிர்த்து விட்டு, மேலும் கொஞ்சம் எண்ணெய் விட்டு நன்றாக உதிர்ந்து உப்புமா மாதிரி வந்ததும். ஏற்கனவே வம்பு பேசிஅரட்டை அடித்துக் கொண்டிருக்கும் கோஸ், வெங்காய ஜோடிகளை "உப்புமா கலவையில் சேர்ந்து கோஸ் உப்புமா என்ற தனிப்பெயருடன் மிளிர வருகிறீர்களா"? எனக் கேட்டதும் அவைகள் சம்மதிக்கவே அதையும் அந்த அரிசி பருப்பு உப்புமாவுடன் , கலந்து விட கோஸின் முகத்தில் தனி பெருமிதம் ஒன்று தெரிந்து என்னை கவர்ந்தது.
இது நம்மை கவரும், என்னுடன் பேசி ஜெயித்த கோஸின் முகப்பெருமிதத்தை நன்கு கவனிப்பதற்காக...!
நிச்சயமாக இது உங்களையும் கவரத்தான் போகிறது என்பது தெரிந்த உண்மை..
சரி.. சரி.. முறைக்காதே..!
" சொல்லத்தான் போகிறேன். சொல்லத்தான் எழுதினேன்.
வாயிருந்தும் உண்மைதனை
சொல்லாமல் இருப்பேனா..! ஆகா..
சொல்லத்தான் போகிறேன்..
என நான் ராகம் போட்டு இழுக்கவும்,
போதும்.. நிறுத்து..! இன்று வெள்ளி யில்லை...நாளை வெள்ளி முளைக்கும் முன், கோஸின் பெருமையையும் கூடவே உன் பிரதாபத்தையும் பிரகடனபடுத்தும் வழியைப்பார்..! என்றபடி முறைத்துக் கொண்டிருந்த உண்மை சற்று கோபம் தணிந்து நான் உண்மையை கூறப்போகும் மகிழ்வில் விடைப் பெற்று அகன்றது.
அது வேறொன்றுமில்லை..! இது எ.பியில் (இரண்டு வருடங்களுக்கு முன் என நினைக்கிறேன்.)" திங்க"ப் பதிவில் அதன் ஆசிரியர் சகோதரர் கெளதமன் அவர்களின் மருமகள் செய்து பதிவிட்ட பதிவு இந்த கோஸ் உப்புமா.
இதைப் பார்த்துதான் நான் அடிக்கடி கோஸிடம் சொன்னதை அது நினைவில் வைத்துக் கொண்டு இந்த தடவை என்னை வறுப்புறுத்தி தான் "டிபனான பெருமையை" அடைந்தது.
கோஸின் பெரும் ஆவலை தணித்து வைக்க உதவிய எ. பிக்கும், அதன் ஆசிரியர்கள் அனைவருக்கும், கெளதமன் சகோதரர் அவர்களின் மருமகளுக்கும் எனது, மற்றும் கோஸின் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். 🙏.
கோஸை அதன் விருப்பபடி இன்று இப்படி வடிவமைத்து காட்டியமைக்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. அத்துடன் சேர்த்து என் சுய பிரதாபத்தையும், இங்கு கொஞ்சம் அளக்கலாமென நான் நினைத்ததை உண்மை எப்படியோ கண்டுபிடித்து சொல்லி விட்டது.
இது என்னுடைய இரண்டாவது சதம்.. முதல் சதத்தை சுலபமாக அடித்து விட நிறைய சந்தர்ப்பத்தை தந்த இறைவன் நான் இரண்டாவதை அடித்து முடிக்க அவ்வளவாக தக்கத் தருணங்களை தராது இத்தனை நாளை நிதானமாக எடுத்துக் கொண்டிருக்கிறார். போகட்டும்..!
இது குறித்து எனக்கு எந்த வருத்தமோ, மகிழ்வோ இல்லை. இருப்பினும் ஆட்டத்தில் தொடர்ந்து நின்று ஆடவைத்து சாதிக்க வைத்தமைக்கு அந்த ஆண்டவனுக்கு மனப்பூர்வமான நன்றிகள்.
ஆனாலும், இரண்டு வருடங்களாக கணினி வசதி இல்லாமல், கைப்பேசி மூலமாக, பதிவுலகில் நவரச சுவைகளையும் அழகாய் பகிர்ந்து வரும் அனைவருக்கிடையில், எந்தவொரு சுவையும் இல்லாது ஏதோ எனக்குள் தோன்றியதை எழுதி வரும் எனக்கு நிறைய நட்புறவுகளை "அவன்" பரிசாக தந்தமைக்கு முன், என் இரண்டாவது சதத்தின் காலதாமதம் எனக்கொரு பொருட்டாகவே தோன்றவில்லை. எனினும் இந்தப் பதிவின் மூலம் அதை வெளிப்படுத்தும் போதில், அந்த இறைவனுக்கும், அவன் தந்த பரிசான நட்புறவுகளுக்கும் என் பணிவான நன்றியையும், அன்பையும் அந்த கோஸின் பெருமித மனப்பான்மையுடனும், கூடவே மனமார்ந்த மகிழ்வுடனும் சொல்லிக் கொள்கிறேன்.
நன்றி அன்பான சகோதர சகோதரிகளே....! நன்றி. 🙏.

உண்மை என்றதும், அந்த உண்மை "கோஸ் டிபனான உண்மை கதையை சொல்லாமல், சாட்சிக்கு மட்டும் என்னை அழைக்கிறாயா" என கேட்டு முறைத்தது.

ஆஆஆஆஆ மீதான் 1ச்ட்டாக்கும்ம்ம்ம்:)... வருகிறேன் போஸ்ட் படிச்சுப்போட்டு:)
ReplyDeleteவணக்கம் சகோதரி
Deleteவாங்க.. தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
அழைத்தவுடன் வந்த முதல் வருகைக்கு மிக்க நன்றி. நான்தான் பதில் தர கால தாமதம் பண்ணி விட்டேன். மன்னிக்கவும்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆஆஆ மீதான் லேட்டா வந்தும் 2ண்ட்டூஊ:))..
ReplyDeleteகோஸ் புராணம் கந்த புராணத்தை விடப் பெரியதாக இருக்கும்போல இருக்கே. இப்போ கோஸ் சீஸன் போலும், இங்கும் பெரிய பெரிய கோஸ் எல்லாம் மலிவாக கிடைக்கிறது.. நான் அதிகம் ரொட்டியாகத்தான் சுடுவேன்.. ரெசிப்பி முன்பும் போட்டிருக்கிறேன், இருப்பினும் திரும்பவும் ரெடி பண்ணியிருக்கிறேனாக்கும் கொஞ்சம் மாற்றங்களோடு.. போடுவேன், போடாமலும் விடுவேன், சரி உங்கட கோஸ் கதைக்குள் குதிக்கிறேன் இதோ..
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
/கோஸ் புராணம் கந்த புராணத்தை விடப் பெரியதாக இருக்கும்போல இருக்கே/
ஹா.ஹா.ஹா. கந்த புராணம் பாடியிருந்தா போற வழிக்கு புண்ணியமாவது கிடைத்திருக்கும். ஆனால் கோஸும் பாவம் இல்லையா? அது புண்ணியம் கட்டிக் கொண்டு போகட்டுமென அதன் புராணம் பாடியாகி விட்டது.
நீங்களும் உங்கள் கோஸைப்பற்றி காவியம் இயற்றுங்கள். படித்து ரசிக்கலாம்.
பதிவை படித்து விட்டு தந்த அழகான கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
//"இன்று நீதான் மெயின் ரோல், கவலைப்படாதே. //
ReplyDeleteஎன்று சொல்லிப்போட்டு இட்லியை மெயின் ரோல் ஆக்கி, கோஸ் ஐப் பேய்க்காட்டிப் போட்டீங்கள் ஹா ஹா ஹா, ஆனாலும் முடிவில் டிஸ் சூப்பராக வந்திருக்குது, கோஸ் புட்டு எனவும் பெயர் சூட்டலாம்:))
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.
/இன்று நீதான் மெயின் ரோல், கவலைப்படாதே. //
என்று சொல்லிப்போட்டு இட்லியை மெயின் ரோல் ஆக்கி, கோஸ் ஐப் பேய்க்காட்டிப் போட்டீங்கள் ஹா ஹா ஹா, /
ஹா ஹா ஹா. பேய் காட்டியும் அது பயப்படாமல், தன் விருப்பத்தை சாதித்து காட்டி விட்டது. உங்கள் வாயாலேயே நன்றாக உள்ளதென பாராட்டையும் பெற்று விட்டது. நீங்கள் வைத்த தலைப்பும் அருமை.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
//அதன் ஆசிரியர் சகோதரர் கெளதமன் அவர்களின் மருமகள் செய்து பதிவிட்ட பதிவு இந்த கோஸ் உப்புமா. //
ReplyDeleteஓ... அப்போ இது ரெண்டுவருசப் பழைய உப்புமாவோ ஹா ஹா ஹா:))...
200 ஆவது போஸ்ட்டுக்கு வாழ்த்துக்கள்.. இன்னும் எல்லோருடனும் கூடி பல 100 கள் எழுதிக் குவியுங்கள்.
நீங்கள் கிரேட்தான், கைப்பேசியிலேயே இத்தனை தூரம் வலம் வருகிறீங்கள்..
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
/ஓ... அப்போ இது ரெண்டுவருசப் பழைய உப்புமாவோ ஹா ஹா ஹா:)).../
ஹா ஹா ஹா. இரண்டு வருஷத்து பழைய பதிவை நினைவில் வைத்து இரண்டு வாரங்களுக்கு முன் பண்ணிய உப்புமா. ஆனாலும் பழசுதான்.
கைப்பேசியில் எழுதி குவியுங்கள். எங்கே குவிக்கிறது.? இதோ காலையிலிருந்து இப்போதுதான் அனைவருக்கும் பதில்கள் எழுத முடிகிறது. இடையில் கண்கள் வேறு உத்தரவின்றி மூடிக் கொள்கின்றன.
உங்களின் பாராட்டுக்களுக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். உங்கள் அனைவரின் ஊக்கமிகுந்த கருத்துரைகள்தான் இவ்வளவு நாளாக என்னை எழுத வைக்கிறது. நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வீட்டில் உப்புமாக்கள் போணியாகாது. எப்போவாச்சும் கோஸ் உப்புமா என்ற வித்தியாச நாமகரணத்தில் போணியாகுமா என்று முயற்சித்தால் பெரும் பகுதியை நாம் சாப்பிடவேண்டிவரும்.
ReplyDeleteகோஸ் உப்புமா அழகு. பில்டப் அதைவிட அழகு.
பெண்பார்க்க வருவதற்கு முன் இவ்வளவு பில்டப் கொடுத்தால், வந்த வேகத்தில் சொஜ்ஜி பஜ்ஜிகூட சாப்பிடாமல் கிளம்பிவிடுவார்கள்.
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
உப்புமாக்கள் நிறைய இடங்களில் போணியாகாது. ஆனால் இது அரிசி உப்புமா வகைதானே.
/பெண்பார்க்க வருவதற்கு முன் இவ்வளவு பில்டப் கொடுத்தால், வந்த வேகத்தில் சொஜ்ஜி பஜ்ஜிகூட சாப்பிடாமல் கிளம்பிவிடுவார்கள்./
ஹா. ஹா. ஹா. அதனால்தான் எல்லா இடங்களிலும், முதலில் பஜ்ஜி சொஜ்ஜியை தலையில் கட்டுகிறார்கள்.போலும்...! அது ஒரு கால்வாசி கட்டு. அப்புறந்தான் நிரந்தர கால்கட்டு.. :) நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
200வது பதிவுக்கு வாழ்த்துகள், பாராட்டுகள். இன்னும் நிறைய எழுதுங்கள்.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் அன்பார்ந்த பாராட்டிற்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
செல்போனிலேயே இவ்வளவு பெரிதாக எழுதுவது ஆச்சர்யம். முயற்சி உடையார் ....
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
அன்பான வாழ்த்துகளுக்கும் பணிவான நன்றிகள். தங்கள் வாழ்த்துகள் என் எழுத்துக்கு சிறந்த பலம்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கோஸ் புராண பில்டப் நன்றாய் இருக்கிறது. ஒவ்வொரு காய்கறியும் பேச ஆரம்பித்தால் எப்படி இருக்கும்! ஒன்றுக்குள் ஒன்று பொறாமையும் போட்டியும் வந்துவிடும்!
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
/ஒவ்வொரு காய்கறியும் பேச ஆரம்பித்தால் எப்படி இருக்கும்! ஒன்றுக்குள் ஒன்று பொறாமையும் போட்டியும் வந்துவிடும்/
ஹா ஹா ஹா. உண்மைதான். ஆனாலும் அது கூடுதலாக அறிவு உள்ளவர்களுக்கு மட்டும் உள்ள நோய் என்றுதான் நம்புகிறேன். அவைகள் என்றும் ஒற்றுமையாய் இருப்பதாகத்தான் பேசிக் கொண்டிருக்கின்றன. நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஓ... கௌ அங்கிள் சொன்ன கோஸ் உப்புமாவா? எனக்குக்கூட நினைவில்லை! இருநூறாவது பதிவுக்கு வாழ்த்துகள். சீக்கிரமே ஆயிரம், இரண்டாயிரம் என்று முன்னேற வாழ்த்துகள்.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
/ஓ... கௌ அங்கிள் சொன்ன கோஸ் உப்புமாவா?/
உங்களுக்கு நினைவில்லையா? ஆச்சரியமாக உள்ளது நீங்கள்தான் எல்லாவற்றையும் நினைவாக வைத்திருப்பபீர்களே..பதிவை பார்த்தவுடன் நீங்களே சொல்லப் போகிறீர்கள் என நினைத்தேன்.
/இருநூறாவது பதிவுக்கு வாழ்த்துகள். சீக்கிரமே ஆயிரம், இரண்டாயிரம் என்று முன்னேற வாழ்த்துகள்./
வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். ஆயிரம், இரண்டாயிரம் என சொல்வது எளிதாகத்தான் உள்ளது. அதற்கு இன்னமும் இதே நோக்கத்துடன் எத்தனை பிறவிகள் எடுக்க வேண்டுமோ? ஹா ஹா ஹா.தங்கள் கருத்துக்கள்தான் என் முன்னேற்றத்திற்கு பலம். மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மொபைலில் இவ்வளவு வேலைகள் பார்க்க அசாத்திய பொறுமையும், திறமையும் வேண்டும். நான் ஒருமுறை மட்டும் மொபைலில் போஸ்ட் போட முஅயற்சித்திருக்கிறேன். அப்புறம் அந்த வழிக்கே போவதில்லை. படங்களையும் அழகாய் இணைத்து, இவ்வளவையும் எழுத்திச் சேர்த்து... பாராட்டுகள் கமலா அக்கா.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
தங்கள் திறமைக்கு முன் என் பதிவுகள் சதாரணமானவை. தினமும் ஒரு பதிவு, அதற்கு வரும் கருத்துக்கு பதில்கள் என அசாத்திய பொறுமையுடன் "எங்க(ளை)ள் ப்ளாக்" மூலம் வழிநடத்தும் தங்கள் திறமை கண்டு நான் வியக்கிறேன்.
தங்கள் பாராட்டுகளும், வாழ்த்துகளும் என் எழுத்துக்கு நிச்சயமாக பலத்துடன் வளம் சேர்க்கும். மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteகார உக்கரையில் கோஸ் சேர்த்து செய்து இருக்கிறீர்கள்.
மிகவும் அருமை.
மதியம் வருகிறேன் மீண்டும்.
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.
தங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.
கார உக்கரை.. இந்தப் பெயர் நன்றாக உள்ளது.
நீங்கள் மதியும் சொன்னபடிக்கு வந்து சிறப்பான கருத்துரைகள் தந்ததற்கு என் மனம் நிறைந்த நன்றிகள்
எனக்குதான் தாமதமாகி விட்டது. மன்னிக்கவும்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம்
ReplyDeleteஇங்கு இன்றைய என் பதிவுக்கு வந்த அனைவருக்கும், வரப்போகும் மற்றவர்களுக்கும் என் அன்பான வணக்கங்களும். நன்றிகளும். அனைவரின் ஒருமித்த பாராட்டிற்கும் என் மனம் நிறைந்த நன்றிகள். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பதிலளிக்க எனக்கு கொஞ்சம் காலதாமதம் ஆகும். கொஞ்சம் வேலைகளை முடித்துக் கொண்டு பிறகு வருகிறேன்.அதுவரை அனைவருக்கும் மீண்டும் நன்றியுடன்
உங்கள் சகோதரி
கமலா ஹரிஹரன்.
200-வது பதிவுக்கு எமது வாழ்த்துகள் சகோ
ReplyDeleteகோஸ் புராணம் அருமை சுவையும் அப்படியே இருக்கும் என்று நம்புகிறேன்.
வாழ்க வளமுடன்...
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
உங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு என் மனம நிறைந்த நன்றிகள்.
சுவையும் அருமைதான். ஒரு தடவை செய்து பாருங்களேன். நம்பி விடுவீர்கள்.
தங்கள் கருத்துக்கள், பாராட்டுகள் என் பதிவுக்கு உரம். நன்றி சகோ.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாழ்த்துகள் அம்மா...
ReplyDeleteகைப்பேசியில் பகிர கற்றுக் கொள்ள வேண்டும்...
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
உங்களுடைய அன்பான வாழ்த்துக்கள் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். நன்றி.
தாங்கள் கல்லாததா? தங்களிடம் உள்ள திறமைகளை கண்டு நான் வியப்படைகிறேன்.எனது ஒவ்வொரு பதிவுக்கும் உங்களுடைய ஊக்கம் மிகுந்த உற்சாக கருத்துரைகள் ஆரம்பத்திலிருந்தே என எழுத்தார்வத்தை மேம்படுத்துகிறது. தொடர்ந்து ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.கருத்துகளுக்கு நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இருநூறாவது பதிவுக்கு வாழ்துகள்.
ReplyDeleteகோஸ் சமையல் அருமை.
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
தங்களுடைய அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள் சகோதரி.
பதிவு அருமை என்ற பாராட்டும் மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. என் பதிவுகளுக்கு தொடர்ந்து வந்து எனக்கு ஊக்கம் தரும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கோஸ் ஆசையை பூர்த்தி செய்து சாபத்திலிருந்து தப்பித்து விட்டீர்கள். 100 காய் பை கொடுத்தார்கள் வளாகத்திற்கு வந்து அதில் பெரிய கோஸ் இருந்தது. ஒரு நாள் முட்டைக்கோஸ் பருப்பூசிலி.(கோஸ்மல்லி) இன்னொரு நாள் முட்டைகோஸ் சூப். அப்புறம் தொடர மனம் இல்லாமல் வீட்டுவேலைக்கு உதவும் அம்மாவுக்கு கொடுத்து விட்டேன்.
ReplyDeleteஅரிசி துவரம்பருப்பு இரண்டையும் அரைத்து இப்படி ஆவியில் வேக வைத்து உதிரித்து கார உக்காரை செய்வோம். நல்ல எண்ணெய் சேர்த்தால் தொந்திரவு இல்லை என்றால் நிறைய எண்ணெய் வைத்து உதிர உதிர கைவிடாமல் கிண்டி உக்காரை செய்யலாம்.
பெரிய குடும்பம், நிறைய செய்ய வேண்டும் என்றால் இப்படித்தான் செய்வார்கள். உளுந்து, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு முட்டைகோஸ் எல்லாம் சேர்ந்து சாப்பிட மெதுவாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
பச்சை கலரில் முட்டைகோஸ் வாங்கி சமையுங்கல் கமலா. அதுதான் நல்லது என்பார்கள். இப்படி வெள்ளையாக முட்டை கோஸ் இருந்தால் தலைவலி வரும் என்பார்கள்.
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.
/கோஸ் ஆசையை பூர்த்தி செய்து சாபத்திலிருந்து தப்பித்து விட்டீர்கள்/
ஹா.ஹா. எழுதும் போது நகைச்சுவைக்காக இவையெல்லாம் வந்து விடுகிறது. தங்கள் கோஸ் அனுபவமும் அறிந்து கொண்டேன். கோஸில் சூப்பும் செய்யலாம் என்பதையும் தெரிந்து கொண்டேன்.
கார உக்காரையும் நன்றாகத்தான் இருக்கும். வெறுமனே சாப்பிடவா? இல்லை உணவுக்கு தொட்டுக் கொள்ளவா? பருப்புசிலி செய்து அதில் நாம் விரும்பும் காய்களை சேர்ப்போம். நான் வெறும் க.பருப்பில் இனிப்பு உக்கரை தீபாவளிக்கு செய்வேன்.
ஆமாம் கோஸ் உப்புமாவும், அரிசி பருப்புக்கள் சேர்ந்திருப்பதால் அரிசி உப்புமா மாதிரி. அன்றைய தினம் மிருதுவாக நன்றாக வந்திருந்தது.
/இப்படி வெள்ளையாக முட்டை கோஸ் இருந்தால் தலைவலி வரும் என்பார்கள்./
அப்படியா? இன்றுதான் இந்த தகவல் அறிகிறேன். பச்சை கோஸ் வாங்கச் சொல்லிய தங்கள் தகவலுக்கு நன்றி. இனி அப்படியே பார்த்து வாங்குகிறேன். உ. கி போல் இதுவும் ஒரு சில சமயங்களில் வாய்வுவைதான் உண்டு பண்ணும். ஆனாலும் சில நன்மைகள் இருக்கிறது. நன்மையும், தீமையும் நம் வாழ்வில் கலந்திருப்பது போல காய்கறிகளிலும் கலந்துள்ளது.
தொடர்ந்து வந்து பதிவை விபரமாக படித்து தந்த நல்லதொரு கருத்துகளுக்கு நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கணினி இல்லாமல் இப்படி கைபேசியில் பதிவு எழுதுவது ஈனக்கு தெரியாது கற்றுக் கொள்ள வேண்டும்.
ReplyDeleteபதிவு அருமை. பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.
நானும் கணினியில்தான் பதிவுகள் இட்டு வந்தேன். இப்போதுள்ள சூழ் நிலையில் இந்தக் கைப்பேசி என்னிடம் வந்துள்ளது. எதில் வந்தாலும் உங்கள் கருத்துக்கள் என் எழுத்துக்கு பலம் சேர்க்கின்றன.அதற்கும் பாராட்டுக்கும், வாழ்த்துக்களும் மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
200-வது பதிவுக்கு வாழ்த்துகள் கமலா அக்கா ..
ReplyDeleteமிக மகிழ்ச்சி தொடரட்டும் உங்களின் அன்பான இனிய பயணம் ...
கைப்பேசி வழி பதிவுகள் சூப்பர் அக்கா ..சில நேரம் கைப்பேசியும் உபயோகப்படுத்துவேன் பதிவுகளுக்கு ...BLOGGER என்னும் APP இன்னுமே ஈசி யா இருக்கும் ..
கோஸ் உப்புமா ...சூப்பர்....
சாதா உப்புமாவே இறங்காது இதில் கோஸ் உப்புமா வா ...ஆனாலும் கொஞ்சமா செஞ்சு பார்க்கிறேன் ..
இதுக்கு சைடு டிஷ் என்ன நல்லா இருக்கும் ...
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
தங்கள் வாழ்த்துகளுக்கு மகிழ்ச்சியுடன் கூடிய மிக்க நன்றிகள்மா.
கைபேசி வழி பதிவுகள் தொடர தாங்கள் தந்த ஆலோசனைக்கும் மிக்க நன்றி.
உப்புமா எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த சிற்றுண்டி. பொதுவாக உப்புமாவை பிடிக்காதவர்கள்தான் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனாலும் இப்படி காய்கறிகள் சேர்த்து, நிறைய வெங்காயம் சேர்த்து செய்யும் ரவை உப்புமா க்கள் நன்றாகத்தான் இருக்கும். நீங்களும், கோஸ் உப்புமா ஒரு தடவை செய்து ருசித்துப் பாருங்கள். பிறகு சாதா ரவை உப்புமா கூட பிடித்தமாகி விடும். ஹா. ஹா. ஹா.
/இதுக்கு சைடு டிஷ் என்ன நல்லா இருக்கும் .../
இருக்கவே இருக்கிறது. தேங்காய் சட்னி. பிற சட்னிகள்.. ஆனால் அன்று கோஸின் இதமான கலவையில் வெறுமனேயாகவே சாப்பிட்டு விட்டோம்.:)
உங்களுடைய கருத்துகளுக்கு நன்றி. என்னுடைய தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நேற்றே படித்தேன். ஆனால் மின்வெட்டினால் பதில் போட முடியவில்லை. மத்தியானம் ஏதேதோ விட்டுப் போன வேலைகள். சரியாக இருந்தது. சாயங்காலம் அதிகம் கணினியில் உட்காருவதில்லை. அதான் தாமதமான பதில்.
ReplyDeleteவணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
தாமதமெல்லாம் ஒன்றில்லை. தங்களுக்கு எப்போது முடிகிறதோ அப்போது வந்து கருத்துக்கள் தாருங்கள். நானும் இந்த தடவை அனைவருக்கும் தாமதமாகதான் பதில் கருத்து இடுகிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
காய்கறிகளுடன், அஞ்சறைப்பெட்டி சாமான்களுடன் என அழகாய்ப் பேசிக் கற்பனை வளத்தை இல்லை இல்லை ஊற்றைத் தூண்டிவிட்டு அழகாய்ச் சமைப்பதோடு இல்லாமல் அதை அழகாய்ப் பதிவும் போடுகிறீர்கள். உங்கள் கற்பனை வளத்துக்கு எல்லையே இல்லை. எல்லாவற்றையுமே சாதகமாக எடுத்துக்கொள்ளும் உங்கள் மனோபலம் எனக்கும் கிட்டவேண்டும். இந்த முட்டைக்கோஸ்ப் பருப்பு உசிலி நான் சாப்பாட்டில் தொட்டுக்கொள்ளப் பண்ணி இருக்கேன். ஆனால் இலைகளைப் பிரித்து அதில் அரைத்ததைத் தடவிச் சுருட்டி வேட்டில் வேக வைத்து எடுத்துப் பின்னர் அவற்றைத் துண்டங்களாக்கிப் பின்னர் தாளிதத்தில் சேர்த்து வதக்கிச் சமைத்திருக்கேன். ஆனால் எல்லாம் சாப்பாட்டோடு சேர்த்து சாப்பிட. உப்புமா பண்ணியதில்லை. கேஜிஜியின் மருமகள் பண்ணினதும் நினைவில் வரலை.
ReplyDeleteவணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
தாங்களும் அருமையாய் சமைப்பது மட்டுமின்றி, பல வகை திப்பிசங்களும் செய்து அசத்துகிறவர்தானே! தங்கள் பதிவிலும், பல வகை சமையல் பக்குவங்கள், செய்முறைகள் என பார்த்து திகைத்திருக்கிறேன்.
.
/இலைகளைப் பிரித்து அதில் அரைத்ததைத் தடவிச் சுருட்டி வேட்டில் வேக வைத்து எடுத்துப் பின்னர் அவற்றைத் துண்டங்களாக்கிப் பின்னர் தாளிதத்தில் சேர்த்து வதக்கிச் சமைத்திருக்கேன்./
நானும் கோஸ் உசிலி செய்துள்ளேன். ஆனால் இவ்விதம் கோஸ் இலைகளை பிரித்து நீங்கள் சொல்லும் பாணியில் செய்ததில்லை. இனிமேல் அப்படி செய்து பார்க்கிறேன்.
தங்கள் கருத்துகளுக்கு என் அன்பான நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ருசிகரமாய்ச் சமைப்பதோடு அல்லாமல் அதை மிக ருசிகரமாகப் பதிவாக்கும் விதமும் அழகு. அதுவும் மொபைலில்! எனக்கெல்லாம் மொபைலில் இத்தனை எழுதவும் தெரியாது; எழுதுவதும் இல்லை. எல்லாம் மடிக்கணினி மூலமே! இருநூறாவது பதிவுக்கு வாழ்த்துகள். மேன்மேலும் பெருகி இரண்டாயிரத்தையும் தாண்டுவதற்கு மனமார்ந்த வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.
ReplyDeleteவணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
பதிவை படித்து நல்லதொரு கருத்துக்கள் சொன்னதற்கு என் மனம் மகிழ்ச்சியடைந்தேன்.
தாங்கள் என் பதிவுகளுக்கு தொடர்ந்து வந்து தரும் ஊக்கம் மிகுந்த கருத்துக்களும்,பாராட்டுகளும்தான் என் எழுதும் ஆர்வத்தை அதிகமாக்குகிறது. என் எழுத்துக்களுக்கு தனி பலமும் சேர்க்கிறது. இதற்கெல்லாம் நான் உங்களுக்கு எப்படி நன்றி தெரிவிக்கப் போகிறேன் எனத் தெரியவில்லை.
தங்களது அன்பான வாழ்த்துகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.
காலையில் கடமையின் வேகத்தில் நேரம் பறக்கிறது. சரி. வேலைகள் முடிந்த இடைவெளிகளில் அனைவரின் கருத்துகளுக்கும் பதில் உடனே அளிக்கலாமென்றால், இங்கு இப்போது மாலையில் பெய்யும் மழையினால், மின் வெட்டு, நெட் ஸ்லோ போன்ற காரணங்களால் தாமதமாகிறது. இவ்வாறு தாமதமாகும் என் பதிலுக்கும் வருந்துகிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கால தாமதத்தைக் கருதவேண்டாம். எழுத்து தொடரட்டும். வாழ்த்துகள்.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
உங்கள் அன்பான கருத்துக்களுக்கும், ஆலோசனைகளுக்கும் மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.
உங்கள் மனமுவந்த வாழ்த்துக்களுக்கும் என் பணிவான நன்றிகள். தங்களது ஊக்கமிகு கருத்துக்கள் என எழுத்தை செம்மையாக்குகிறது. நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ReplyDelete200 வது பதிவுக்கு வாழ்த்துகள் சகோதரி. மேலும் உங்கள் கற்பனை வளம் பெருகி நிறைய படைப்புகளைப் படைத்திட வாழ்த்துகள்!
துளசிதரன்
கமலாக்கா எப்படி மொபைலில் எழுதுகின்றீர்கள்?! ஹேட்ஸ் ஆஃப்!
எனக்கெல்லாம் கம்ப்யூட்டரில்தான் வசடி என்றாலும் அதுவே சிலப்ப கஷ்டமாகிடுது.
200 வது பதிவுக்கு வாழ்த்துகள்!
ரொம்ப அழகா எழுதறீங்க கமலாக்கா...
நல்லா வந்திருக்கு கமலாக்கா. கௌ அண்ணா சொல்லியிருந்த அவரது மரும்கள் குறிப்பு இல்லையா...கோஸ் பருப்பு எல்லாம் பொட்ட்உப்புமா கலவை. மிக மிக நன்றாக வந்திருக்கு கமலாக்கா..
கீதா
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
தங்களுடைய வாழ்த்துகள் கண்டு மிகவும் மன மகிழ்ச்சியடைந்தேன். தங்களுடைய விருப்பம் போல், என் எழுத்துக் கனவுகள் தடையின்றி அமைந்திட தங்களுடைய வாழ்த்து பலிக்கட்டும். தங்களுடைய ஊக்கமிகும் கருத்துக்கள் என் எழுத்தெனும் ஆணிவேருக்கு உரம். மிகவும் நன்றி சகோ.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
கணினியில்தான் ஆரம்பம் முதற்கொண்டு எழுதி வந்தேன். பின் அது சில இடமாறுதலுக்கு உட்பட்டு போனது. (என் சின்னப்பையன் வீட்டுக்கு) அதன்பின் அவரே வாங்கித்தந்த மொபைலில் எப்படி எழுத வேண்டுமென கற்று தந்து என் வலைத்தள லிங்கையும் அதில் போட்டு தந்தார். நானும் இதில் கொஞ்ச கொஞ்சமாக கற்று வருகிறேன். சின்ன சின்ன சந்தேகங்ளை அவர்களை கொண்டு நிவர்த்தி செய்து கொள்வேன். இப்படியாக இந்த வாழ்க்கையும் பழகி வருகிறது.
தங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சகோதரி. தங்களது ஊக்கமிகு கருத்துரைகள் இன்னமும் நன்றாக எழுத வேண்டுமென்ற ஆவலை தூண்டுகிறது அதற்கு முதலில் உங்கள் அனைவருக்கும் என அன்பான நன்றி களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆமாம்.. கெளதமன் சகோவின் மருமகள் எ. பி யில் செய்து காண்பித்ததுதான் இந்த கோஸ் உப்புமா. அரிசி, பருப்புகளுடன் சேர்ந்து சுவையான சிற்றுண்டியாக இருந்தது. தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கோஸ் பெருமிதம், அதன் உரையாடல் என்று மிக மிக அழகாக இருக்கிறது. நான் சிறு வயதில் மகனுக்கு ஊட்டும் போது காய்கள் அவனுடன் பேசுவது போலவே சொல்லி ஊட்டுவேன். அதே போல இயற்கையும், விலங்குகளும் என்று எல்லாமுமே காரக்டர்களாக. என் தம்பி பெண்ணுக்கு சாதம் ஊட்டும் பொதும் அப்படித்தான் காய்கள், மரங்கள் செடிகள், டைஹோசர் எல்லாவற்றோடும் பேசுவது போல அதில் அவளையும் ஒரு கேரக்டராகச் சொல்லி நல்ல விஷயங்களைச் சொல்லுவதுண்டு. அது கோல்டன் டேய்ஸ்...
ReplyDelete200 வது பதிவுக்கு வாழ்த்துகள் மேலும் மேலும் தொடர்ந்து எழுதி பல படைப்புகள் பெருகிட வாழ்த்துகள் கமலா அக்கா
கீதா
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
நீங்களும் காய்கறிகளுடன் பேசி உங்கள் மகனை மகிழ்வித்து நீங்களும் மகிழ்ந்திருந்ததற்கு மகிழ்ச்சி. இப்படி நானும் என் குழந்தைகளை வளர்க்கும் போது, அது பாவம்...! அதற்கு வாயிருந்தால் இப்படித்தானே பேச வந்திருக்கும் எனபதுவாய் பல கதைகள் சொல்லியிருக்கிறேன். நாம் நல்ல விதமாக கதைகள் சொல்லும் போது வளரும் குழந்தைகளுக்கும் நல்ல சிந்தனைகள் பெருகுமில்லையா? நீங்கள் நானும், ஒரே மாதிரி எண்ணங்களை கொண்டிருப்பது வியப்பாக இருக்கிறது. இன்னமும் நம்மைப் போல எத்தனைப் பேரோ?
உவ்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
200வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.! கோஸ் உப்புமாவிட அதை செய்யும் விதத்தை நீங்கள் சொல்லியிருக்கும் விதம் அசத்தல்.! இன்னும் இதைப்போல் சுவையாக தொடர்ந்து எழுத வாழ்த்துகிறேன்!
ReplyDeleteவணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
பதிவை ரசித்து இட்ட கருத்தையும், 200வது பதிவுக்கு வாழ்த்து தெரிவித்திருப்பது கண்டும் மன மகிழ்ச்சி அடைந்தேன் தங்கள் கருத்துக்கள் என் எழுத்துக்கு சிறந்த பலம். தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சிறப்பான பதிவு
ReplyDeleteவாழ்த்துகள்
வணக்கம் சகோதரரே
Deleteநலமா? தங்கள் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
தங்கள் வாழ்த்துகளுக்கும், ஊக்கமிகு கருத்துக்களும் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.