ஆசைதான் அழிவுக்கு காரணம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.. அதிலும் பேராசை பெரு நஷ்டம் எனும் பழமொழியும் நாம் அனைவரும் உணர்ந்ததே.. இருந்தாலும் எந்த ஒரு விசயத்திற்கும் நாம் அதை முன்னிறுத்திதான் அழகு பார்த்து ரசித்து விட்டு அழிவு வரும் போது அல்லலுருகிறோம்....
"ஆசைப்படு...உன் தேவையை உணர்ந்து அதற்கு மட்டும் ஆசைப்படு... தேவையில்லாமல் பேராசை வளர்த்து பெருந்துயரம் அடையாதே ." என பார்த்திபனுக்கு கீதை சொன்ன கிருஷ்ணபரமாத்மாவிலிருந்து அன்றைய நற்சான்றோர்கள் இன்றைய அறிஞர்கள் நம் வீட்டு அனுபவமெய்திய பெரியோர்கள் அனைவரும் இதைத்தான் வலியுறுத்தி வருகின்றனர்.
பெற்ற வரத்தின் மூலம், தொட்டதெல்லாம் பொன்னாக மாறும் விந்தை கண்டு ஆசையின் அதிதீதமாகிய பேராசையால் தன் மகளை தங்கமாக்கி தவறிழைத்தவரின் கதைகள்,
கடவுள் தந்த வரத்தால் தினம் ஒரு பொன் முட்டையிட்டு தினசரி வாழ்வை செழிப்பாக்கி கொண்டிருந்த அதிசய வாத்தை,
அத்தனை முட்டைகளை மொத்தமாக அதன் வயிற்றிலிருந்து எடுத்து விட்டால், பெரிய பணக்காரனாக ஆகி விடலாம் என்ற பேராசை காரணமாய் அதை கொன்று தினசரி வாழ்வையும் இழந்து பரம ஏழையான ஒரு ஏழையின் கதைகள்,
இப்படி எத்தனையோ அனுபவ கதைகள் கண்டும், கேட்டும், நம் ஆசைகளை பேராசைகளாக மாற்றும் முயற்சியில் நாம் இன்னமும் தோற்காமல் வென்று கொண்டேதான் இருக்கிறோம்.
இந்த பேராசைகள் நாளடைவில் தன்னலத்திற்காக, தன்னல எண்ணங்களை நமக்குள் விதைத்து பயனில்லாத மரமாக்கி, அதன் ராட்சத வேரூன்றி இலை செழித்து, தலை விரித்து ஆடுகின்றன..அந்த சுயநலத்தின் விளைவுகள் பெரும்பான்மையாக குடும்பத்தில் சிதைவுகளுக்கு வழிவகுத்து, அங்கு நிம்மதியெனும் வசந்தத்தை ஆழ குழியிலிட்டு புதைத்து விட்டுச் செல்கின்றன... அந்த மரங்களை பயனற்றதாக்கி, வேரோடு களைய நாம் ஆசை விதைகளை நம்முள் என்றும் தூவாமலிருக்க, நம்மை படைத்த ஆண்டவனை தினமும் பிராத்திப்போமாக...
இந்த தமிழ் வருட பிறப்பிலிருந்தாவது இந்த பேராசை விதைகளுக்கு என் மனது இடம் தராமல் இருக்க வேண்டிக்கொண்டு,, தமிழினிய சீராட்டல்களுடன் வரும் சித்தரை வருட நாளில் அனைவரும் எல்லா நலன்களும் பெற்று வளமுடன் பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
வாழ்க தமிழமுதம் ...
வளர்க தமிழுணர்வு...
வலையுலக சகோதர சகோதரிகள் அனைவருக்கும் தமிழ் வருட பிறப்பு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
படித்ததில் பிடித்ததால் ஒரு சிறு கதையை இங்கு பகிர்ந்து.கொண்டுள்ளேன்.
இதையும் படிக்கும் அனைவருக்கும் மிகவும் நன்றிகள்
ஒரு அருமையான கதை...
ஒரு ஊரில் ஒரு செல்வந்தன் இருந்தான். அவன் வியாபார நிமித்தமாக வெளியூர் சென்று திரும்பிய போது அவனது அழகான பெரிய பண்ணை வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. அந்த ஊரிலேயே மிகவும் அழகான வீடு அவனுடையது தான். .அந்த வீட்டை இரண்டு மடங்கு விலை கொடுத்து வாங்க பலரும் தயாராக இருந்தனர். ஆனால் இவன் விற்கவில்லை. இப்போது அந்த வீடு அவன் கண் முன் எரிந்துகொண்டிருந்தது ஆயிரம் நபர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். தீ முழுவதுமாக பரவிவிட்டதால் அதை அணைத்தும் பிரயோஜனம் இல்லை என்று எந்த முயற்சியும் எடுக்கவில்லை. .வணிகனோ செய்வதறியாமல் கண்ணில் நீரோடு புலம்பிகொண்டிருந்தான்.ஐயோ என் வீடு ! என் வீடு ! என்று அலறினான்.
அப்போது அவனின் மூத்த மகன் ஓடிவந்து ஒரு விஷயத்தை சொல்கிறான் “தந்தையே ஏன் அழுகிறார்கள் ? இந்த வீட்டை நான் நேற்றே மூன்று
மடங்கு லாபத்திற்கு விற்றுவிட்டேன். .
இதனால் நமக்கு நஷ்டம் இல்லை என்று
கூறினான்.
கூறினான்.
இதை கேட்ட வணிகனுக்கு ஏக மகிழ்ச்சி.
அவனது சோகம் அனைத்தும் மறைந்து மகிழ்ச்சி உண்டானது.
இப்போது வணிகனும் கூடி இருந்த கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினான்.
"அதே வீடு தான் " ,
"அதே நெருப்பு தான் " ,
"அதே நெருப்பு தான் " ,
ஆனால் சில வினாடிகளுக்கு முன் இருந்த தவிப்பும் சோகமும் இப்போது
அவனிடம் இல்லை.
அவனிடம் இல்லை.
"" சிறிது நேரத்தில் வணிகனின் இரண்டாவது மகன் ஓடி வந்து “தந்தையே ஏன் இப்படி கவலையில்லாம சிரிக்கிறீர்கள்? நாங்கள் விற்ற இந்த வீட்டிற்கு முன்பணம் மட்டுமே வாங்கியுள்ளோம். முழு தொகை இன்னும் வரவில்லை.
"வீட்டை வாங்கியவன் இப்போது மீதி பணத்தை தருவானா என்பது சந்தேகமே” என்றான். .
"இதை கேட்ட வணிகன் அதிர்ச்சி
அடைந்தான். மீண்டும் சோகத்தில் ஆழ்ந்தான். கண்ணீரோடு மீண்டும் புலம்ப ஆரம்பித்தான்."தனது உடமை எரிகிறதே என்ற எண்ணம் மீண்டும் அவனை வாட்டியது.
"சில மணித்துளிகள் பின்பு வணிகனின்
மூன்றாவது மகன் ஓடி வருகிறான். “தந்தையே கவலை வேண்டாம். இந்த வீட்டை வாங்கிய மனிதன் மிகவு நல்லவன் போலும். இந்த வீட்டை வாங்க அவன் முடிவு
மூன்றாவது மகன் ஓடி வருகிறான். “தந்தையே கவலை வேண்டாம். இந்த வீட்டை வாங்கிய மனிதன் மிகவு நல்லவன் போலும். இந்த வீட்டை வாங்க அவன் முடிவு
செய்தபோது வீடு தீ பிடிக்கும் என்று உங்களுக்கும் தெரியாது எனக்கும் தெரியாது.
ஆகையால் நான் பேசியபடி முழு
தொகையை கொடுப்பது தான் நியாயம்
என்று என்னிடம் இப்போது தான் சொல்லி
அனுப்பினான்” என்று மகிழ்ச்சியோடு
தெரிவித்தான்.
தொகையை கொடுப்பது தான் நியாயம்
என்று என்னிடம் இப்போது தான் சொல்லி
அனுப்பினான்” என்று மகிழ்ச்சியோடு
தெரிவித்தான்.
"இதை கேட்ட வணிகனுக்கோ ஏக சந்தோஷம்.
கடவுளுக்கு நன்றி சொல்லி ஆடிப்பாடி
மகிழ்ந்தான். கண்ணீரும் சோகமும்
மீண்டும் காணாமல் போய்விட்டது.
மகிழ்ந்தான். கண்ணீரும் சோகமும்
மீண்டும் காணாமல் போய்விட்டது.
"மீண்டும் கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினான்.
=========================≠==============
=========================≠==============
" இங்கு எதுவுமே மாறவில்லை
" அதே வீடு, அதே நெருப்பு, அதே இழப்பு ",
" அதே வீடு, அதே நெருப்பு, அதே இழப்பு ",
" இது என்னுடையது என்று நினைக்கும்
போது அந்த இழப்பு உங்களை சோகத்தில் ஆழ்த்துகிறது.
" இது என்னுடையது அல்ல என்று
நினைக்கும் போது உங்களை சோகம்
தாக்குவது இல்லை. .
"உலகில் எதுவுமே நிரந்தரமானது இல்லை.
போது அந்த இழப்பு உங்களை சோகத்தில் ஆழ்த்துகிறது.
" இது என்னுடையது அல்ல என்று
நினைக்கும் போது உங்களை சோகம்
தாக்குவது இல்லை. .
"உலகில் எதுவுமே நிரந்தரமானது இல்லை.
"ஒருவனுக்கு மட்டுமே சொந்தமானது
இல்லை. அனைத்துமே அழிய கூடியது.
இல்லை. அனைத்துமே அழிய கூடியது.
"நான் உட்பட எல்லாமே ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் அழியக்கூடியது அல்லது வேறு ஒருவனுக்கு சொந்தமாக கூடியது
======================================
இதைத்தான் அனைத்து மதமும் சொல்கிறது
அன்பாய் இருப்போம்..
பண்பாய் இருப்போம்..
அழிவிற்குப் பின்னும்
அனைவரின் நெஞ்சில் நீங்காமலிருப்போம்...
படித்தமைக்கு மிக்க நன்றிகள்.
பண்பாய் இருப்போம்..
அழிவிற்குப் பின்னும்
அனைவரின் நெஞ்சில் நீங்காமலிருப்போம்...
படித்தமைக்கு மிக்க நன்றிகள்.
========================================
நல்லதொரு கருத்துடன் பதிவு அமைந்திருக்கிறது. நன்றி பகிர்விற்கு. இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் பாராட்டிற்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ..
சித்திரை சிறக்கட்டும். தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்னாளில் அருமையான கருத்துடன்....நல்ல ஆரம்பம்.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் பாராட்டிற்கும் என் மனமுவந்த நன்றிகள்.
சித்திரை சிறக்கட்டும். தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அருமையான கதை மனம் ஒரு குரங்கு என்பதை தங்களது கதை நிரூபித்து விட்டது.
ReplyDeleteஇனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள் சகோ.
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் விளக்கமான கருத்துப் பகிர்வினுக்கும் பாராட்டிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
தங்களுக்கும் இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கதை மிகவும் அருமை...
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் பாராட்டிற்கும் என் மனம் நிறைந்த நன்றிகள் சகோ.
தொடர்ந்து வந்து பதிவுகளுக்கு கருத்திடுவதற்கு மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எமது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் பாராட்டிற்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.
தொடர்ந்து வந்து பதிவுகளுக்கு கருத்திடுவதற்கு மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்
அருமையான கதை.
ReplyDeleteபுத்தாண்டு அனைவருக்கும் நல்லதே செய்யட்டும்.
ஆசை அளவோடு இருந்தால் ந்ல்லதுதான்.
//அன்பாய் இருப்போம்..
பண்பாய் இருப்போம்..
அழிவிற்குப் பின்னும்
அனைவரின் நெஞ்சில் நீங்காமலிருப்போம்...//
அருமை, அருமை.
வாழ்த்துக்கள்.
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
தங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
மேற்கோள் காட்டி வாழ்த்துக்கள் கூறி பாராட்டியிருப்பதற்கு மிக்க நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நல்ல விஷயங்களைச் சொல்லும் சிறப்பான பகிர்வு.
ReplyDeleteஆசையே துன்பத்திற்குக் காரணம் என பல பெரியவர்கள் சொல்லி இருந்தாலும் தொடர்ந்து எதற்காவது ஆசைப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறோம்.
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துகள்.
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் பாராட்டிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
/ஆசைதான் துன்பத்துக்கு காரணம் தெரிந்துமே ஆசைப்பட்டு கொண்டேதான் இருக்கிறோம்./
உண்மையான வார்த்தைகள்.. ஆசைக்கு அளவுகோல் இல்லை போலிருக்கிறது..
தங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நல்ல கருத்துகளுடன் கூடிய பதிவு.. வாழ்த்துக்கள்
ReplyDeleteவணக்கம்,
www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US
உங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.
நன்றி..
தமிழ்US
வணக்கம்
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
எத்தனை அருமையானதொரு கருத்தைத் தாங்கி வரும் பதிவு!! வெகு அருமை.
ReplyDeleteஇருவரின் கருத்தும்
கீதா: எதுவுமே நமதில்லை. என் மனதில் ஆழமாகப் பதிந்த ஒன்று....என்னிடம் கேட்பவர்களுக்கு இது உன் சொந்த வீடா என்றால் எனது என்று சொல்வதில்லை. இன்று நாளை யாருடையதோ....இந்த நிமிடம் இருப்பதற்கு ஒரு கூரை இருக்கு என்று சொல்வது வழக்கம்...
வணக்கம் சகோதரரே
Deleteதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
பழைய பதிவுக்கும் வந்து பதிவை சிலாகித்து பாராட்டிய உங்கள் இருவருக்கும் என் இதயம் கனிந்த மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.
சகோதரி..
/ இது உன் சொந்த வீடா என்றால் எனது என்று சொல்வதில்லை. இன்று நாளை யாருடையதோ....இந்த நிமிடம் இருப்பதற்கு ஒரு
கூரை இருக்கு என்று சொல்வது வழக்கம்.../
தங்களுடைய பக்குவம் அடைந்த மனதை கண்டு மிகவும் வியக்கிறேன் தங்களிடமிருந்து நான் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறையவே இருக்கிறது. நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.