இறைவா நீ எங்கிருக்கிறாய்….?
வேழ முகமாய், வேதங்களுக்கு
முதல்வனாய்,
வேண்டும் போதெல்லலாம், உனைக் காண்கிறேன்.!
பன்னிருகை வேலனாய், பக்தர்களை
ரட்சிப்பவனாய்,
பக்திப்பரவசத்தில்
பயணிக்கையில், உனைக் காண்கிறேன்.!
பாம்பணையில்
பள்ளிக்கொள்பவனாய், பரந்தாமனாய்,
பாதாதிகேசம் படிய
பணிந்துவந்ததில், உனைக் காண்கிறேன்.!
கைலாயத்தில்
நடனம் செய்யும், நடராஜனாய் உந்தனையே,
கைக்௬ப்பித்தொழும்
போதெல்லாம், உனைக் காண்கிறேன்.!
அன்னையாய் ஆதியாய், ஆதிபராசக்தியாய்
ஆபத்பாந்தவியாய்,
அன்போடு அழைக்கும்
நிமிடமெல்லாம், உனைக் காண்கிறேன்.!
சக்தியும், சிவனுமாய், சடுதியில்
சங்கடங்கள் களையும்,
சகல
தெய்வங்களாயும், சரணிப்பதில் உனைக் காண்கிறேன்.!
ஆண்டுகள் பலதும்
கடந்தும், “அவனன்றி” எதுவும் இல்லையென,
ஆணித்தரமாய்
பதிந்த மனதுடனே, அவனியிலே வாழுகிறேன்,
ஆனாலும், பாராமுகம் காட்டி
மனம் பரிதவிக்க வைப்பதில்,
ஆனானபட்டவன் “நீ” என்பதை பரிதாபமின்றி புரிய
வைக்கிறாய்.!
நஷ்டங்களும் கஷ்டங்களும்
நகர்ந்தே வந்து வாழ்வதனை
நாமறியா போதினிலே, நலம் குலைக்க
செய்ததினால்,
சுற்றமென
சூழ்ந்தவர்கள், சுற்றிலும் நடந்ததும், நடப்பதும்
சூழ்நிலைதான், ஊழ்வினைதான்
எனச்சுட்டியும் உணராமல்,
இறைவனை முறைப்படி
துதிக்கவில்லை.! “நீ” எவரிடமும்
இன்முகமும்
காட்டவில்லை.! இவ்விரண்டும் “நீ” செய்திருந்தால்,
நஷ்டங்களும், கஷ்டங்களும்
நாளும் உனை தேடிவந்து
நலமறிய
நாடியிருக்காது, என
நாச்சுழட்டி நவின்று சென்றனர்.!
“இறைவனிடம்
பாராமுகம், இனியேனும் காட்டாதே.!” எனச்சுற்றி
இருப்பவர்கள் பகரும் போது இயல்பை காட்டிலும் உனைத்
தேடும் உணர்வு, என்னுள் தேயாமல்
அதிகமாய் வளர்கின்றது.!
தேடுதல்
பணியில் இப்பாராமுகம்,! உனக்கா! எனக்கா! புரியவில்லை .!
அழகான தவிப்பு...சகோ
ReplyDeleteவணக்கம் சகோதரி!
ReplyDeleteதங்கள் உடனடி வருகை என்னை உற்சாகப்படுத்துகிறது.
என் மனதின் எண்ணங்கள் வார்த்தையின் வடிவில் வெளிவருகிறது. ஆனால் இறைவன் நமக்குத் துணையாக என்றுமே இருப்பான் சகோதரி!
வந்து ரசித்து, கருத்திட்டமைக்கு என் மகிழ்வான நன்றிகள் சகோதரி!
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.