கடல் போன்ற வீடு!... அதில்
கணக்கற்ற நிறைய மனிதர்கள்!...
சுற்றங்களும், சுகங்களுமாக,
சுமைதாங்கும், உறவுகள்!....
அன்பும் , அரவணைப்புமாக
,
அரண் போன்ற மனங்கள்!...
தவழும் பேரன்களோடு, சேர்ந்து
,
தளர்வின்றி,தவழ்ந்தாடும்
தாத்தாக்கள்!...
பாட்டும், கதையுமாக, பேத்திகளை,
பாசத்துடன் பக்குவமாக்கும்
,பாட்டிகள்!...
விடியலில் உதிக்கும் விறகடுப்பு,
வீதி அசந்து உறங்கும் வரை,
அனல் கக்கும்
அதிசயம்,
அண்டை அசலெங்கும் தொடரும்!...
உணவுகளுக்கும், பஞ்சமில்லை!...
உடைகளுக்கும். வஞ்சமில்லை!....
உறவுகளின், உணர்வுகளும்,
உரிமைகளும் , என்றுமே,
சிதைந்ததில்லை!....
நான், நீ, என்ற பேதமில்லை1….
நாணயம் தவறிய பேச்சுக்களுமில்லை!...
மதிப்பும் , மரியாதையும்
குறைந்ததில்லை!...
மற்ற சண்டைகள் என்றும்
வந்ததில்லை!...
ஆனால் , இது அந்தக்காலம்!....
இன்று கடல்கள், கணிசமாக
வற்றி,
கரையோரங்கள்,கவனிப்பின்றி,
கடுகாய் சின்னதாகி விட்டது!...
அடுப்பும், மரித்து விட்டது!...மக்களின்,
உடுப்பும், மாறி விட்டது!...
மனிதனின்,
சுயநலமெனும், போர்வைக்குள்,
சுற்றங்களின், சுகங்களும்,
சுமைகளும், சிறிதளவும்
சிரமின்றி,
சுகமாக சுருண்டோடி கொண்டு
விட்டன!...
௯டி வாழ்ந்தால் கோடி நன்மையென,
௯டி வாழ்ந்த குடும்பங்கள்,இன்று,
நான் , நீ , என்று நாலும் ௯றிக்கொண்டு,
நான்காய் பிரிந்ததில், நன்றாயிருந்த
நாகரீகங்கள் , மாறி விட்டதால்,
நலம் குலைந்த ந(ரக)கரமாயிற்று!...
என் வாழ்வில் இப்படி மாறிய காலம்!,,,
உன் காலத்தில் எப்படி மாறுமோ?...என்று
புலம்பிக்கொண்டிருந்த என்
பாட்டியின்,
புலம்பல்கள் இன்றும், இன்னாளிலும்,
காதருகே, கால் கடுக்க நின்றபடி
காதுகளில் ஓதியபடிதான்
இருக்கின்றது!!!...
கடல் கடந்து சென்று வாழ்வதுதான்,
தன்
கருமமென, ௯றி காரியத்தை
சாதித்தான் ஒரு பிள்ளை!.....
காசிருந்தும், கார்கள்
பலவிருந்தும், என்
கால் வைக்க இடமில்லை, என்றான்
மற்றொருவன்!......
இல்லத்தில் இணைந்திருந்து பழகு!....என்
இல்லத்தில் பிறகு சேர்த்துக்கொள்கிறேன்
என்றான் ஒரு பிள்ளை!....
சிறிய பிரச்சனை எனக்கு, அது தீர்ந்து முடிந்ததும்
சில காலத்துக்குள் நீ என்னுடன்
… என்றான் இன்னொருவன்!.....
இயந்திரமயமான இக்காலத்தில்,
இளமை விரட்டிய, எங்களுக்கு
, இவ்
இல்லம் என்ற ஒன்றிடமில்லாதிருந்தால்,
இன்னல்களுடன் இணைந்திருப்போம்!......
நான்கு பிள்ளைகள் பிறந்திருந்தும்
,
நான்கும் நாலுவிதமாய் போனதில் , இன்று
முகமறியா ,உறவுகளுடன் வாழ்க்கை,
முதுமையுடன் முறியாமல்
தொடர்கின்றது!.....
உன் சோகத்தை சுமக்க , பாட்டி!...அன்று
உன் பேத்தி நானிருந்தேன்!....
என் வார்த்தை உரைக்க வகையாய், இன்று
என்பேத்தி என்னிடமில்லையே!.....
இந்த இல்லத்தின் உறவுகளுக்கும்
இன்று
இதே நிலமைதான்!...இந்நிலை
மாறுமா?
கடல் போன்ற வீடு!....அதன்
காலம் மாறிப் போச்சு!...என்று
பாட்டி, நீ
கடவுளிடம் புலம்புவது இன்றும் என்
காதுகளில் ஒலிக்கிறது!………ஆம்!
காலம் மாறித்தான் போச்சு!.....
ஆம்...
ReplyDeleteவணக்கம் சகோதரரே!
ReplyDeleteதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நட்புடன்,
கமலா ஹரிஹரன்.