Monday, May 23, 2011

ஏன் இந்த கண்ணீர்?



ஏன் இந்த கண்ணீர்?

உன்
எதிரில் உள்ளவரின் வேடிக்கையால்
விளைந்ததுவா? இல்லை,

ஏழ்மையின் கொடுமையால்
எழுந்ததுவா? இல்லை,


ஆடை ஏதும் அணியாத உன்னை
ஆணவக்காரர்கள் செய்த அலட்சியத்தால்
உண்டானதா? இல்லை,

பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தையை
பாவிகள் படுத்தும் பரிதாபத்தால்
புறப்பட்டதா? எதனால்,

ஏன் இந்தக் கண்ணீர்?

உன் வேதனை ததும்பும் கண்களும்,
கோபத்தில் மடிந்த இதழ்களும்
இணைந்து பிரசவித்த கண்ணீர்
முத்துக்களை
பால் போன்ற உன் கண்ணத்தில்
படிய விடாமல் பார்த்துக் கொள்!

உன் கண்களின் நீர் துளிகள்
என் கண்களின் வழியே
ஊடுருவி
என் கண்களிலும் நீர் திவலையை
உண்டாக்குகிறது.

கண நேரத்தில் நீ வாய் விட்டு
கதறி விடுவாயோ என்ற
பயத்தில் பாப்பா என் மனம்
பதைபதைக்கிறது.

உன் விழிகளின் சோகவாள்
என் நெஞ்சை அறுக்கும்முன்
எனக்காக,
உன் வேதனை குமுறும் விழிகளை
சற்று மலர்த்தி,
மடிந்த இதழ்களில் புன் முறுவலை தவழ விட்டு
பளபளக்கும் கண்களில் சிரிப்பெனும்
பட்டாம் பூச்சியை பறக்க விடுவாயா?

No comments:

Post a Comment