வெள்ளம் உயர்ந்தால் மலர் உயரும். உள்ளம் உயர்ந்தால் நீ உயர்வாய்..
என்றபடி "நான் போய் வரட்டுமா?" என்ற பழகிய குரல் கேட்க திரும்பி பார்த்தேன். 2019 மூட்டை முடிச்சுகளோடு நின்றிருந்தது.
"அப்பாடா கிளம்பி விட்டாயா? நீ இந்த வருடம் கொஞ்சம் படாய்தான் படுத்தி விட்டாய்.. . இரு காலிலும் பாரபட்சமின்றி அடிகள், கடுமையான ஜீரங்கள், என மாறி மாறி வரும் போது நெருங்கிய உறவுகளின் நிரந்தர பிரிவுகள், அதனால் மன சலனங்கள் என்றிருந்த வேளையில், கடைசி இந்த மாதத்தில் இருபது நாட்களாக வயிற்றில் வலி, வலி தந்த எரிச்சல், அதை கண்டு கொள்ளாமல் இருந்ததில் "நான் விட மாட்டேனே .! கண்டுப்பேனே," என்று அது செய்யும் அழிச்சாட்டியங்கள், அதைத்தவிர வீட்டிலிருக்கும் சின்னக் குழந்தைகளின் அவ்வப்போதைய முடியாமைகள் அதைக்கண்டு மன வேதனைகள்... .அப்பப்பா..! தாங்க முடியவில்லை..! போய் வருகிறாயா? நல்லது.. நீ போகும் வேளையாவது என் துன்பங்கள் அகலட்டும்...! " என்று வாய் வரை வந்த வார்த்தைகளை அதன் முகம் லேசாக வாடியிருந்ததைப் பார்த்து சொல்லாமல் உள்ளுக்குள்ளேயே விழுங்கினேன்.
கடந்த வருடமாகிய 2019 பிறந்து வளர்ந்து நம்மோடு உறவாடி மகிழ்ந்து, இல்லை நம்முடன் அதுவும் துன்புற்று "இதோ! விடை பெற்றுக் கொள்கிறேன். விடை தா.! எனும் போது நம் கண்களிலும், ஒரிரு கண்ணீர் துளிகள் நம்மையறியாமல் பூத்திருந்ததை உணர முடிந்தது . . பழகிய நட்பின் பிரிவு கொஞ்சம் மனதை சலனபடுத்துமே அந்த மாதிரி அது பேசி விடை கேட்டதும் மனது லேசாக கனத்துப்போய் விட்டது .
" நான் போனாலும் என்னுடன் இருக்கும் உங்கள் நினைவுகளை பகிர்ந்து கொள்ள என் உறவாகிய 2020 வருகிறது. அதனுடனாவது நீங்கள் கஸ்டப்படாமல் சுகமாக இருங்கள்" என அது லேசாக முணுமுணுத்துக் கொண்டே விடை கேட்டது வேறு மனதை என்னவோ செய்தது.
"ஏன் இப்படி சொல்கிறாய்?" என ஏதாவது சொல்லி சமாதானப்படுத்தி விடை தரலாம்..! என நினைக்கும் போது, " நான் முதலில் உங்களுக்காக உதயமாகும் போதும் இப்படித்தான் பட்டாசின் சத்தங்களோடு நள்ளிரவில் நான் பிறந்த நேரத்தை கொண்டாடி உங்களுடன் இரண்டற கலந்தேன். அப்போதும் 2018 கொஞ்சம் வருத்தத்துடன் விடை பெற்றது. இதெல்லாம் எங்களுக்கு சகஜந்தான்..! நீங்கள்தான் ஏதோ ஒரு குறைகளுடன் எங்களுடன் வாழ்ந்து வருட இறுதிக்குள் எங்களை வெறுத்து அனுப்புவதிலேயே குறியாக இருக்கிறீர்கள். " என்றது.
" எப்படி என் மனதிலுள்ளதை அறிந்து கொண்டது இது? என்னும் வியப்பு மேலிட அதை பார்த்த போது, "உன் மனது சொல்ல நினைத்ததை நான் எப்படி தெரிந்து கொண்டேன் என பார்க்கிறாயா? நாங்கள் வரும் போதிலிருந்தே உங்கள் மனதுடன் கலந்து வாழந்துதானே செல்கிறோம்.! எங்களுக்கு உங்கள் மனம் புரியாதா? நீங்கள்தான் எங்களுடன் மனமொப்பி இருப்பதில்லை..!" என்றது சற்று கேலியாக.
உண்மை சற்று நெஞ்சை சுட " "அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை..! ஏதோ கஸ்டங்கள் வரும் போது அப்படி நினைக்கத் தோன்றுகிறது.!"என பொய்யான பேச்சை துவக்கியதும், "போதும்.! நான் மறுபடியும் இந்த மூட்டையை அவிழ்க்காமலே கிளம்புகிறேன். சற்று சிரித்த முகத்தோடு விடை மட்டும் கொடு..! என்றது.
அப்போதுதான் எனக்கு நினைவே வந்தது." ஆமாம்..! இதென்ன மூட்டைகள்.. வரும் போது நீ எதையும் கொண்டு வரவில்லையே! . என்றேன் ஆச்சரியத்தோடு..
" ஆமாம். பிறந்து வரும் போது கைவீசி கொண்டே சந்தோஷமாக இருக்கலாம் என்று வரும் நாங்கள் போகும் போது, நீங்கள் தரும் பரிசாக உங்களுடைய வருத்தங்கள், சோகங்கள், கஸ்டங்கள், வேதனைகள், வசவுகள் என அத்தனையம் மூட்டைகள் கட்டிக் கொண்டு கிளம்புகிறோம். அப்படியும் உங்களுடன் கடந்து வந்த எங்களை நினைவாக வைத்து மறுபடியும் வசைபாடி, வரும் 2020க்கு சுமைகளாக இவைகளை தந்து விடுவீர்கள். சரி.. சரிி.. எனக்கு பேசிக்கொண்டிருக்க நேரமில்லை.. மகிழ்ச்சியுடன் இரு.. . இனியாவது உன் வினைகள் உனக்கு தரும் மகிழ்ச்சி. துயரம் இரண்டையும் சமமாக பார். எங்கள் மேல் கோபங்கள் வராது. எங்களுடன் நீங்களும் ஒத்துழைத்துப் பாருங்கள்.. நான் சொல்வது உனக்குப்புரியும் . போய் வருகிறேன்.
உன்னுடைய மனப்பாங்குதான் உன் உயர்வையும் தீர்மானிக்கிறது. என்றபடி 2019 விடை பெற்றுச் சென்றது.
அது கூறிச் சென்ற உண்மையை இப்போதைக்கு உணர்ந்தவளாய், 2020 ஐ வரவேற்று வாழ்த்த தயாராகினேன்.
நட்புறவுகள் அனைவருக்கும் இனிமையாக பிறந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். புத்தாண்டு அனைவருக்கும் நலமுடன் வளம் சேர்க்க இறைவனை மனமுருக பிரார்த்தனை செய்கிறேன்.
நன்றி.
🙏 🙏 வாழ்க வளமுடன். 🙏🙏

ஆஆஆ மீதான் 1ஸ்ட்டூஊஊ.. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..
ReplyDeleteவணக்கம் அதிரா சகோதரி
Deleteதங்களின் முதல் வருகை மிகவும் ஆனந்தமளிக்கிறது. தங்கள் வருகைக்கும் அருமையான கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். உங்களுக்கும் என் அன்பான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இன்றைக்கு கொஞ்சம் வேலைகளின் பிஸியில் பதிலளிக்க தாமதமாகி விட்டது. மன்னிக்கவும்.
அது போல் என் பதிவுக்கு வந்து எனக்கு அன்பான வாழ்த்துகள் சொன்ன அனைவருக்கும் இன்றே பதிலளிக்க முடியுமா என்றும் தெரியவில்லை. அனைவருக்கும் என் அன்பான நன்றிகளும், புத்தாண்டு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டு அனைவருமே என்னை மன்னித்துக் கொள்ளவும் எனவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி..
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
//2019 மூட்டை முடிச்சுகளோடு நின்றிருந்தது. //
ReplyDeleteஹா ஹா ஹா எதையாவது எடுத்துக் கொண்டு போகாவிட்டால் நிம்மதி இல்லைப்போலும் அவருக்கு கர்ர்:)), எதுக்கும் செக் பண்ணுங்கோ கமலாக்கா, நீங்க நினைக்கிறமாதிரி இல்லாமல், வைரம் தங்கங்களைத்தான் மூட்டையில் வச்சு ரெடியாகிறாரோ என்னவோ:)).
//"இதோ! விடை பெற்றுக் கொள்கிறேன். விடை தா.! எனும் போது நம் கண்களிலும், ஒரிரு கண்ணீர் துளிகள் நம்மையறியாமல் பூத்திருந்ததை உணர முடிந்தது //
இது உண்மையிலும் உண்மை, ஏதோ நம் உறவு பிரிவதைப்போல ஒரு உணர்வு.. இனி 2019 என எழுத முடியாதே இப்பிறவியில்:))....
வணக்கம் அதிரா சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
/எதையாவது எடுத்துக் கொண்டு போகாவிட்டால் நிம்மதி இல்லைப்போலும் அவருக்கு கர்ர்:)), எதுக்கும் செக் பண்ணுங்கோ கமலாக்கா, நீங்க நினைக்கிறமாதிரி இல்லாமல், வைரம் தங்கங்களைத்தான் மூட்டையில் வச்சு ரெடியாகிறாரோ என்னவோ:))./
ஹா. ஹா. ஹா. வைரமா? அதை கண்ணால் கூட நான் பார்த்ததில்லை. நானே பார்க்காத போது அது எப்படி? ஆனாலும், அது சோதனைக்கு எங்கள் வீட்டை உட்படுத்தி விடுமோ என இப்போதுதான் பயமா இருக்கு.... ஹா. ஹா. ஹா.
/இது உண்மையிலும் உண்மை, ஏதோ நம் உறவு பிரிவதைப்போல ஒரு உணர்வு.. இனி 2019 என எழுத முடியாதே இப்பிறவியில்:))..../
என் மனதில் எழுந்த அதே உண்மையை தாங்களும் உணர்ந்ததற்கு நன்றி. தங்கள் வருகைக்கும்,அழகான கருத்துகளுக்கு மிக்க நன்றி. நான்தான் சூழ்நிலையால் தாமதமாக பதிலளித்திருக்கிறேன். மன்னிக்கவும்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஹா ஹா ஹா அழகான பிரியாவிடையும், அழகாக வெல்கம் மும் குடுத்திட்டீங்க வருடங்களுக்கு.
ReplyDeleteவணக்கம் அதிரா சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
பதிவை ரசித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மிக அழகான அருமையான உணர்ச்சி பூர்வமான எழுத்து. வரும் ஆண்டில் இருந்து உங்கள் நோயும் தீர்ந்து குடும்பப் பிரச்னைகளும் தீர்ந்து அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க மனமார்ந்த பிரார்த்தனைகள். உங்கள் வயிற்று நோய் தீரவும் பிரார்த்தித்துக் கொள்கிறேன். இது அசிடிடி என்னும் பிரச்னை எனில் லவங்கப்பட்டை, சோம்பு, ஜீரகம், மிளகு, கருஞ்சீரகம், ஏலக்காய், சுக்கு போன்றவற்றைக் கொஞ்சம் கொஞ்சம் பொடித்துக்கொண்டு ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டுக் கொதிக்கவிட்டு ஆறவைத்து அவ்வப்போது இந்த நீரைக் கொஞ்சம் கொஞ்சம் குடித்து வாருங்கள். எனக்கும், என் கணவருக்கும் இது கண்கண்ட மருந்து. இல்லை எனில் நாட்டு மருந்துக் கடை அல்லது ஆயுர்வேதக் கடையில் அஷ்ட சூர்ணம் கிடைக்கும். அதை ஒரு ஸ்பூன் எடுத்துக் கொண்டு மோரில் போட்டுக் கலக்கி ஒவ்வொரு உணவுக்குப் பின்னரும் சாப்பிடுங்கள். சரியாகி விடும்.
ReplyDeleteவணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
பதிவின் எழுத்தை பாராட்டியமைக்கு முதலில் மிக்க நன்றி.
வயிற்று வலியோடு தொண்டை வலி. ஜலதோஷம் முதலியவையும் சேர்ந்து விட்டதினால், தாங்கள் சொல்வது போல், ஜீரகம், மிளகு சேர்த்து தண்ணீர் எப்போதும் குடித்து வருகிறேன். வெந்தயமும் சாப்பிட்டு வருகிறேன். எனக்கு எப்போதுமே ஆயுர்வேத மருந்துகள் பலனளிக்கும், தொடர்ந்து வரும் உபாதைகளுக்கு முப்பது வருடங்களாக ஆயுர்வேத மருந்துகள்தான் எடுத்து வருகிறேன். அஷ்ட சூர்ணம் நல்ல பலன் தரும்.வாயு தொந்தரவுக்கு முன்பு நானும் சாப்பிட்டிருக்கிறேன்.
இப்போது இந்த வயிற்றுப் புண்ணுக்காக (அல்சர்) ஆயுர்வேத மருந்துகள் எடுத்து வருகிறேன். 25நாட்களாக வலி பொறுத்து வந்தேன். கடந்த ஐந்து நாட்களாக என்னால் வலைப் பதிவுகளுக்கு வர இயலவில்லை. அதனால்தான் தங்கள் அனைவரின் கருத்துக்களுக்கும் பதிலளிக்கவும் தாமதமாகி விட்டது. மன்னிக்கவும்.
தங்கள் ஆலோசனைகளுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள். உங்களின் அன்பான வார்த்தைகள் என் நோயை கண்டிப்பாக குணமாக்கும். மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
உங்கள் பாணியில் புதுமையாக எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துகள். இன்பங்களும் துன்பங்களும் எல்லோருக்கும் வரும். சிலருக்கு கொஞ்சம் கூடவோ, குறைவாகவோ..
ReplyDeleteவரும் வருடங்களில் இன்பம் நிறைய எங்கள் வாழ்த்துகள்.
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
உண்மைதான்..! அழகாக சொல்லியுள்ளீர்கள்.. துன்பங்களும், இன்பங்களும் மாறி மாறி கூடுதல், குறைவாக வருபவைதான். அவற்றை மனதும், உடலும் தாங்கும் அருளையும் அந்த இறைவன்தான் தர வேண்டும்.
வாழ்த்துகளுக்கும், பதிவு குறித்த பாராட்டிற்கும் என் மனமார்ந்த நன்றிகள். தாமதமான பதிலுரைக்கு மன்னிக்கவும்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அனைத்து வளங்களையும் பெற இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
அனைத்து வளங்களும் நிறைந்த தங்கள் புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. தங்களுக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பு கமலா,
ReplyDeleteஇனிய புது நாளின் வணக்கம்.
இரவும் பகலும் இன்பமும் துன்பமும் ,பிரச்சினைகளும் தீர்வும்,
நிறைந்த வாழ்க்கைதான் வருடங்களாகக் கரைந்து ஓடுகிறது.
யாருடைய சோகத்தை யார் தீர்க்க முடியும். மனம் பலவீனப் படாமல்
நிஸ்சலனமாக இருப்பதில் திடம் காட்ட நானும் முயற்சித்து வருகிறேன். இனி எல்லாம் நலமே என்பதே தாரக மந்திரம்.
மனதில் பிரச்சினை இருந்தால் வயிற்றில் காட்டும்.
நம் அன்பு கீதா எல்லாவற்றுக்கும் வழி சொல்வார்.
நீங்களும் குடும்பமும் அழகான அருமையான 2020யை எதிர்கொண்டு மகிழ்ச்சியுடன் இருக்க நல் வாழ்த்துகள்.
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
/இரவும் பகலும் இன்பமும் துன்பமும் ,பிரச்சினைகளும் தீர்வும்,
நிறைந்த வாழ்க்கைதான் வருடங்களாகக் கரைந்து ஓடுகிறது.யாருடைய சோகத்தை யார் தீர்க்க முடியும். மனம் பலவீனப் படாமல் நிஸ்சலனமாக இருப்பதில் திடம் காட்ட நானும் முயற்சித்து வருகிறேன். இனி எல்லாம் நலமே என்பதே தாரக மந்திரம்.மனதில் பிரச்சினை இருந்தால் வயிற்றில் காட்டும்./
உண்மைதான்..! மிகவும் அழகாக சொல்லியுள்ளீர்கள். தங்களுடைய கருத்துக்கள் மன ஆறுதலை தருகிறது. மனதில் கலக்கம் வந்தால் வயிற்று உபாதைகளுக்கு வழிகாட்டும் என்பதை தெரிந்து கொண்டேன். தங்கள் பிரச்சனைகளும் நலமாக தீர்ந்து ஆண்டவன் அருளில் நீங்கள் உடல்/மன ஆரோக்கியமாக வாழ நானும் இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களின் அருமையான ஆலோசனைகளையும் ஏற்றுக் கொண்டேன். அவர்களுக்கும் பதில் தந்துள்ளேன். உங்கள் அனைவரின் பிராத்தனைகளும் என் உடல் நிலையை குணப்படுத்தும் என நம்புகிறேன்.
தங்கள் வாழ்த்துகளுக்கு என மனம் நிறைந்த நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
தங்களது புத்தாண்டு நல் வாழ்த்துக்களுக்கு என் மன மகிழ்வுடன் கூடிய நன்றிகள். தாமதத்துக்கு மன்னிக்கவும். தங்களுக்கும் என் அன்பான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பழைய வருடத்தோடு பேசிக் குலாவியது ரசிக்கும்படி இருந்தது.
ReplyDeleteதங்களுக்கும், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் சகோ.
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
பதிவை ரசித்துப் படித்து தந்த பாராட்டுகளுக்கு மிக்க நன்றி.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்களுக்கும் மனமகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.
தங்களுக்கும் என் அன்பான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தாமதமாக பதில் தருவதற்கு மன்னிக்கவும்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
" ஆமாம். பிறந்து வரும் போது கைவீசி கொண்டே சந்தோஷமாக இருக்கலாம் என்று வரும் நாங்கள் போகும் போது, நீங்கள் தரும் பரிசாக உங்களுடைய வருத்தங்கள், சோகங்கள், கஸ்டங்கள், வேதனைகள், வசவுகள் என அத்தனையம் மூட்டைகள் கட்டிக் கொண்டு கிளம்புகிறோம். அப்படியும் உங்களுடன் கடந்து வந்த எங்களை நினைவாக வைத்து மறுபடியும் வசைபாடி, வரும் 2020க்கு சுமைகளாக இவைகளை தந்து விடுவீர்கள். சரி.. சரிி.. எனக்கு பேசிக்கொண்டிருக்க நேரமில்லை.. மகிழ்ச்சியுடன் இரு.. . இனியாவது உன் வினைகள் உனக்கு தரும் மகிழ்ச்சி. துயரம் இரண்டையும் சமமாக பார். எங்கள் மேல் கோபங்கள் வராது. எங்களுடன் நீங்களும் ஒத்துழைத்துப் பாருங்கள்.. நான் சொல்வது உனக்குப்புரியும் . போய் வருகிறேன்.
ReplyDeleteபுரிந்து விட்டது.
மிக அருமையாக சொன்னீர்கள்.
இந்த ஆண்டு பூரண உடல் நலத்தோடும், ஆரோக்கியமாய் குழந்தைகள், பேரக்குழந்தைகளுடன் மகிழ்வாய் இருங்கள்.
இறைவன் மனபலம், உடல் நலம், பலம் தரட்டும்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். ! வாழ்க வளமுடன்.
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
பதிவை ரசித்துப் படித்து, உணர்ந்து நல்லதொரு அழகான விரிவான கருத்துரைகள் தந்தமைக்கு என் மன மகிழ்வுகள் நிறைந்த நன்றிகள் சகோதரி.
இறைவன் மன/உடல் பலங்கள் தரட்டும் என்ற தங்களது பிரார்த்தனைகளுக்கு என் மகிழ்வான நன்றிகள். தங்களது புத்தாண்டு நல் வாழ்த்துக்களுக்கும் என நன்றிகள். தங்களுக்கும இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
2019க்கு விடை கொடுத்து, 2020ஐ வரவேற்றிருக்கும் விதம் மிகவும் நன்றாக இருக்கிறது. இதில் சில விஷயங்கள் எனக்கும் ஒத்துப் போனது. எது எப்படி இருந்தாலும் life has to move on. புது வருடம் எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சியை கொண்டு வரட்டும்.
ReplyDeleteவணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
பதிவை ரசித்துப் படித்து தந்த பாராட்டுகளுக்கு முதலில் என் பணிவான நன்றிகள்.
வாழ்க்கையில் அதற்கேற்றபடி நாமும் நகர்ந்து கொண்டேதான் இருக்கிறோம். சமயங்களில் கூடுதலான அடிகள். சில வலிகள் என காயப்படுத்துகிறது.
தங்கள் சொல்படி இந்த வருடம் அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தரட்டும். நானும் வேண்டிக் கொள்கிறேன். தாமதமான பதிலுரைக்கு மன்னிக்கவும். தங்களது கருத்துக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இனிய 2020 ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteநலமா? தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
தங்களது புத்தாண்டு நல் வாழ்த்துக்களுக்கு மனமகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.
உங்களுக்கும் என் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
Happy New Year
ReplyDeleteஅருமை
www.nattumarunthu.com
nattu marunthu kadai online
nattu marunthu online
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
தங்களுக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தங்களது வாழ்த்துகளுக்கும் என் நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
தங்களுடைய புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.
தங்களுக்கும் என் மனம் நிறைந்து புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தாமதமான புத்தாண்டு வாழ்த்துகள் கமலா அக்கா ..
ReplyDeleteவித்தியாசமான சிந்தனையில் புத்தாண்டு வாழ்த்து ...
தங்கள் பதிவு கண்டவுடன் வர நினைத்தும் , பயணங்கள் , பசங்களின் தேர்வு , விடுமுறை என பல காரணங்களால் மிக தாமதமான வருகைக்கு வருந்துகிறேன் ..
உன்னுடைய மனப்பாங்குதான் உன் உயர்வையும் தீர்மானிக்கிறது....மிக சிறப்பான வாசகம் என்றும் நினைவில் கொள்ள வேண்டிய வாசகம் ...
நம் எண்ணமே நம் வாழ்க்கை ..
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
பதிவை நன்றாக படித்து தாங்கள் தந்த கருத்துக்களுக்கு என் மன மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.
தாமதமெல்லாம் ஒன்றில்லை. தங்களுக்கு எப்போது செளகரிபடுகிறதோ அப்போது வந்து கருத்துக்கள் தாருங்கள். அதுவே எனக்கு மகிழ்ச்சிதான். இதோ நானும் என் இயலாமையால் தாமதமாகத்தான் பதிலளித்திருக்கிறேன்.
தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும், மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கடந்த ஆண்டுடன் நன்றாக பேசியுள்ளீர்கள்.
ReplyDeleteபுது ஆண்டு நலன்களை நல்க வாழ்த்துகள்.
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
பதிவை படித்து அழகாக கருத்து தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.
தங்கள் அன்பான வாழ்த்துகளுக்கும், பாராட்டுகளுக்கும் என் மனமுவந்த நன்றிகள். தொடர்ந்து வருகை தந்து அன்பான கருத்துக்கள் தர வேண்டிக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வித்தியாசமான அருமையான புத்தாண்டுச் செய்தி..மிகவும்இரசித்துப் படித்தேன். வாழ்த்துகள்..
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
பதிவை ரசித்துப் படித்து தந்த பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.
நான் வலைத்தளம் வந்து எழுத ஆரம்பித்ததில் இருந்தே தங்களுடைய ஊக்கமிகுந்த கருத்துரைகள் என் எழுத்துக்களுக்கு ஆதரவாக இருந்திருக்கின்றன.. இப்போதும் தங்கள் ஊக்கம் மிகுந்த கருத்துக்கள் மிகவும் மகிழ்வை தருகிறது. மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.