Thursday, April 23, 2015

இடை (வெளி) வேளை…

காலங்காலமாய்  இந்தக் கதைகள்  என்பது நம்மிடையே ஒன்றி விட்டது. கதைகள் சொல்வதும் கேட்பதும் படிப்பதுமாய், நம் அன்றாட பணிகளின் நடுவே  முக்கியத்துவம்  வாய்ந்ததாய் கதைகளும் காலூன்றி கொண்டு விட்டன. ஒரு குழந்தை வளர்ந்து வரும் போது அந்த வீட்டின் பெரியவர்கள்( தாத்தாக்கள், பாட்டிகள் ) தாங்கள் படித்த, பார்த்த. கேட்ட கதைகளை அப்படியேவோ, இல்லை சற்று புனைந்தோ, தம் வாரிசுகளின் மனதில் பதிய வைத்தனர்.( நான் அந்த காலத்தை சொல்லுகிறேன்.) குழந்தைகளின் அறிவை பற்றிய கதைகள், நீதிக்கதைகள், ராஜா ராணிக் கதைகள், நகைச்சுவைக் கதைகள், விலங்கு, பறவையினத்தின் ஒற்றுமை சார்ந்த கதைகள், வாழ்வின் தத்துவக் கதைகள், ஏன் சமயத்தில், நம் விருப்பத்திற்காக பேய் கதைகள், என்று எத்தனையோ கதைகளுடன் நம்மையும் வளர்த்து வந்தனர்.

பள்ளி பாடங்களுடன் இந்தக் கதைகள் அத்தனையையும் தினமும் நம் மனது அசை போட்டாலும், அவ்வப்போது பேய் கதைகள் ஒரிடத்தை நிரந்தரமாக பிடித்துக் கொண்டு இரவு பகலாக மனதில் உலா வந்தபடியே இருக்கும். அதுவும் நடுநிசி  12 மணி என்று ௬ட பாராது நம்மை தட்டி எழுப்பிஉலாவ போகலாம் வருகிறாயா? ‘என்று கேட்டுத் தொலைக்கும். நாமும் உள்ளுக்குள் பயந்து நடுங்கினாலும், மறுநாள் காலை நம் பள்ளி தோழர், தோழிகளுக்கிடையே, நம் வீரத்தை வெளிக்காட்டும் விருப்புடன் அந்த கேட்ட கதைகளுக்கு நடுவே நிறைய விசயங்களை உட்புகுத்தி, ( நமக்கும் பிறந்தவுடனே இந்த புனையும் திறன் அதுவாக வந்து விடுமல்லவா ?)  முதல்நாள் இரவு பேயை கண்டதாகவும், அதனிடம் பேசியதாகவும், அது தன்னை எழுப்பியதாகவும், “கதைகளைகட்டி விடுவோம். இப்படியே இந்த மாதிரி பெரியவர்கள் நமக்கு சொன்ன எல்லா கதைகளும் கை கால் முளைத்து  தன்னை தானே பிறருக்கு பரிமாறிக் கொண்டு வளர்ந்து, வேகமாக பரவி ஒருநாள் கதை சொன்ன நம் வீட்டு பெரியவர்களுக்கே நம் மூலமாகவே வந்து சாரும்போது அவர்கள் அந்தக்கதைகேட்டு பெரும் ஆச்சரியபடுவார்கள். (இப்படி ஒரு கதை உண்டா என்று?) வாழ்வே நித்தமும் ஒரு கதை என்று வாழ்ந்து அனுபவித்திருந்த அவர்களுக்கா புரியாது.. ஆனாலும் நமக்காக திகைப்பை வெளிப்படுத்திநம் திறமையை, நம்முள் ஒளிந்திருக்கும்  கற்பனாசக்தியை வெளிக்கொணர்ந்த பெருமையோடு பாராட்டும் உத்தி அது.

அவர்கள் காலத்தில் நாடகங்கள், தெருக்௬த்து இவைகளின் மூலமும் நல்ல கதைகளை கேட்டு பார்த்து ரசித்தாக சொல்லக் கேட்டு  வளர்ந்தோம். மெளன  படங்கள் என்று வெறும் காட்சிகளை மட்டும் படமெடுத்து திரையிலிட்டு ஓடவிட்டு, திரைக்கு முன் அதன் வசனத்தை சொல்லி இருவர் விளக்க, அதையும் கதைகளுக்காக ரசித்து பார்த்தனர் . காலம் முன்னேற மேம்பட்டு மெளனப் படங்கள் பேசும் படங்களாக மாறி திரைக்கதையை வளர்த்து வசனங்களை அதனூடேயே இணைத்து ரசிகத் தன்மையை ௬ட்டின. பின் நாமும் வளர்ந்ததும்  தரமான கதைகள் என புத்தகங்கள் பலவும் படித்து ரசித்து பரிமாறிக் கொண்டோம். திரைப்படங்களும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நம் முன் காட்சியாக்கி காசுடன் அவையும் வளர்ந்தன. எத்தனையோ கடமைகள் நம் கையை இறுக பிடித்திருந்தாலும், ஒரே மாதிரி அடித்துச்செல்லும்  மன அலைகளின் நடுவே, வித்தியாச மனநிலை வேண்டி கதைகளை விரும்பினோம், கலையாக வளர்த்தோம்,  பாடமாக மதித்தோம், வாழ்வாகவும் ஏற்றோம், புகழுக்காக  அரவணைத்தோம், பொன்னெவும் போற்றினோம். இப்படியாக அது நம் வாழ்வில் இன்று அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது.

தலைப்புக்கும் இத்தனை கதைகளுக்கும் இப்போ என்ன சம்பந்தம்என நீங்கள் குழம்புவது  கொஞ்சம் தெளிவாகவே எனக்குப் புரிகிறது, சொல்கிறேன்.  (“நாசமாபோச்சு! இனிமேதான் சொல்லவே ஆரம்பிக்க போறியா?” முணுமுணுக்கும் சத்தம்  கேட்கிறது ) யார் அது?  யாருங்க அது? ஏன் இப்படி இடையிலே வந்து ஒரு பதிவை எழுத விடாமே  ( யாராயிருந்தா என்ன? சீக்கரம் முடித்து வை.! பொறுமைபோவதற்குள்.! சத்தத்தின் சீற்றம் சற்றே பெரிதாகிறது.  )

சரி சரி விசயத்துக்கு வருகிறேன்..!  நாம் இன்றும் எந்த ஒரு திரைப்படம் கண்டு களிக்க திரையரங்கிற்கு போனாலும் படம் முடிவதற்குள் நடுவில் நம்மை பிடித்து வைத்திருக்கும் கதையோட்டத்தின் பிடியிலிருந்து சிறிது விச்ராந்தியாக நம் மனதை திசை திருப்ப, ஒரு பதினைந்து நிமிடங்களைஇடை வேளைஎன்ற பெயருடன் ஒதுக்குவார்கள்அந்த இடைவெளியில் கண்ணுக்கும். மனதுக்கும் ஓய்வு தந்து, வாய்க்கும் வயிற்றுக்கும் வேலை தந்து அதன் பின் நம் இருக்கைக்கு திரும்பி  திரையில் கவனம் செலுத்துவோம். (சிலர் கதையின் கொடுமையில் இருந்து தப்பிக்க அந்த இடைவெளியை பயன்படுத்தி வெளியேறி விடுவர். அது வேறு விஷயம். அவரவர் மன நிலையை பொறுத்த விஷயம்.) அந்த காலத்தில் இடைவேளையில் விளம்பர படங்கள், அடுத்து அந்த திரையரங்கில் வெளிவரப் போகும்  படங்களின் சில காட்சிகளை பாடலுடன், இதயம் அதிரும் ஒலியோடு சண்டை காட்சிகளின் சில பகுதிகள் என திரையிடுவார்கள். அதையும் விருப்பம் இருப்பவர்கள் அமர்ந்து  ரசிப்பார்கள். இதெல்லாம் ஒரு மாறுதலை ரசிக்கும் சமயத்திலும் வரும் மாறுதல்தான்இப்போதெல்லாம் அந்த முறை இல்லையென நினைக்கிறேன்இப்படி திரைப்படங்கள் நல்ல கதைகள் என்று மெனக்கிட்டு  கொண்டிருந்த காலம் போய். மனதின் திசை மாற்றத்திற்காக  டி.விகணிணி  என புது புது பொழுது  போகும் அம்சங்கள் வந்து விட்டன.

(விசயத்துக்கு வாம்மா! சும்மா வளவளன்னு கையில் மவுஸை ரம்பமாக நினைத்துக் கொண்டு அறுக்காதே... மறுபடியும் முணுமுணுப்பு...)

அட.! கொஞ்சம் இருங்க.!  சொல்ல வந்ததை  இதோ.! சொல்லி  முடித்து விடுகிறேன்மேலே சொன்ன மாதிரி ஒரு மாறுதலுக்கு நிறுத்தி, இடைவேளையை பதிய வைத்து (எப்படியோ!  நானும் ஒரு  பதிவு போட்ட மாதிரி ஆச்சில்லையா ?) இடைவேளை முடிந்தவுடன் நாளை தொடர்கிறேன். “இடைவேளைநேரத்தை அதிகரித்து விட்டால்இடைவெளியும்இடம் பிடித்துவிடுமென்பதால், நாளையே தொடங்கி விரைவில்சுபம்போட்டு விடுவேன். (அட! என்ன கஷ்டகாலம்டா.! என்ன பதிவு இது? இடைவேளை, இடைவெளி என்று, இப்படி பெரிசா எழுதி பொறுமையெல்லாம் சோதிச்சி கதை எழுதி கிழித்ததில் இவங்களுக்கு நிஜமாவே முத்தி போச்சு போலே! இவங்களுக்கு முத்தினது போறாதுன்னு நம்மையும் அந்த கேஸ்லே சேர்த்துடுவாங்கன்னு நினைக்கிறேன். குரல் பலமாக ஒலித்தது.)

ஓ இவங்களா? இப்பத்தான் யாருன்னு புரிஞ்சது.. சரிங்க  இதோ முடிச்சிடுறேன்.   அந்த நால்வரின் மனதைதான் இன்று நிறுத்தி நாளை  தொடருகிறேன் என்றேன். இடை வேளையின் இடைவெளியில் கண்ணுக்கு குளிர்ச்சியாக விளம்பர படத்துக்கு பதிலாக  இதைப் பாருங்களேன். நன்றி ( போ!! இது வேறேயா….? )










படங்கள்: நன்றி கூகுள்

10 comments:

  1. கதை நாளைக்கு வரப்போகுதுங்கிறதுக்காக சொன்ன கதையா ?அடேங்கப்பா இடைவேளை தலைப்பு நல்லாத்தான் இருக்கு இடைவெளி விட்டு நாளை வருகிறேன்
    படங்கள் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே..

      தாங்கள் படித்தவுடன் வருகை தந்தமைக்கும், கருத்தைப் பகிர்ந்தமைக்கும் பாராட்டிற்கும், படங்களை ரசித்தமைக்கும், என் மனமார்ந்த நன்றிகள். குரலை ஊகிக்க இயலவில்லையா?

      இடைவெளி விட்டு கதையின் நாளைய பகுதி 7 ஐ படிக்க வருவதற்கு என்மகிழ்ச்சி கலந்த நன்றிகள்.

      மீதி கதைத் தொடரை படித்து கருத்துக்கள் ௬ற தொடர்ந்து வந்திட வேண்டுகிறேன்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.



      Delete
  2. படங்களை ரசித்தேன். இடைவேளை விடுகிறேன் என்று சொல்லி நீங்கள் சொல்வதுபோல ஒரு பதிவே போட்டு விட்டீர்கள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே..

      தங்கள் வருகைக்கும், கருத்தைப் பகிர்ந்தமைக்கும், படங்களை ரசித்தமைக்கும், என் பணிவான நன்றிகள்.

      கதையின் இடையில், அதன் இடைவெளியில், இடைவேளையாக உதித்த இந்தப் பதிவும் ஒரு அவசியமான ஒன்றல்லவா.! அதனால் இடையில் வந்து இடம் பிடித்துக் கொண்டது.

      இடைவேளையின் முடிவில் மறுபடி ஆரம்பிக்கும் மீதி கதைத் தொடரை படித்து கருத்துக்கள் ௬ற தொடர்ந்து வந்திட வேண்டுகிறேன்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. ஆனாலும் உங்க மனச்சாட்சி நாங்கள் நினைத்ததையே சொல்கிறது...! ஹா... ஹா... ஹா... ஹா...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.

      தங்கள் வருகைக்கும், கருத்தைப் பகிர்ந்தமைக்கும், பதிவை ரசித்தமைக்கும், என் பணிவான நன்றிகள்.

      \\ஆனாலும் உங்க மனச்சாட்சி நாங்கள் நினைத்ததையே சொல்கிறது...! //

      உண்மை.! நீங்கள் நினைப்பதையே என் மனசாட்சியும் வழி மொழிகிறது. ஏனெனில்,எழுத எழுத தங்கு தடையின்றி வரும் என் நீ...ள..மா..ன பதிவுகளை மறுபடி ஒருமுறை நான் படித்து பார்க்கும் போது, என் மனதின் குரலாக படிப்பவர் அனைவரையும் பார்க்கிறேன்.மறுபடி இடையிடையே, மனதின் (உங்கள்) குரலாக சில வரிகளை இணைக்க, இன்னும் நீ.......ளமான பதிவாகி விடுகிறது. (கருத்துரை பதிலிலேயே இவ்வளவா? ) ஐயோ, மறுபடி மனதும் அதன் பிரதிபலிப்பாய்....எனவே முடிக்கிறேன்.

      இடைவேளையின் முடிவில் மறுபடி ஆரம்பிக்கும் மீதி கதைத் தொடரை படித்து கருத்துக்கள் ௬ற தொடர்ந்து வந்திட வேண்டுகிறேன்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. படங்கள் கண்ணுக்கு விருந்து,
    மனதுக்கு விருந்து நாளை,
    இப்போ நமக்கு இடைவேளை,
    ஓகே,,,,,,,,,,
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி..

      தங்கள் வருகைக்கும், கருத்தைப் பகிர்ந்தமைக்கும், படங்களை ரசித்தமைக்கும், என் பணிவான நன்றிகள்.

      ஆம் சகோதரி.. கண்ணுக்கும் மனதுக்கும் தெம்பாக கிடைத்த கொஞ்ச நேர இடைவேளை முடிவினில், தொடரும் கதை மாந்தர்களை வரவேற்க வரும்படி அன்புடன் அழைக்கிறேன்.
      வருவீர்கள் அல்லவா? எதிர் நோக்குகிறேன். நன்றி.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. இடைவேளைக்கு முன்
    இப்படி என்றால்
    இடைவேளையின் பின்
    எப்படி என்றால்
    நானே வருகை தந்து
    கண்டு பிடிக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.

      தங்கள் வருகைக்கும், கருத்தைப் பகிர்ந்தமைக்கும், பதிவை ரசித்தமைக்கும், என் பணிவான நன்றிகள்.

      இடைவேளையின், பின்னும் தொடர்ந்து கதையை படித்து கருத்துக்கள் பதிந்நிட வேண்டுகிறேன். தங்கள் கருத்துரைகள் என் எழுத்துக்களுக்கு உரம். நன்றி சகோதரரே.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete