முந்தைய பகுதியின் முடிவு…
அருணா தனக்கு எழுதி அனுப்பியிருந்த கடிதத்தை, படித்து
முடித்த பிரபாகர் அதிர்ச்சியில் உறைந்து போனான்
இன்றைய தொடர்ச்சி..
எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது கார்த்திக்..? நூறு தடவை
கடிதத்தை படிப்பதும், புலம்புவதுமாக இருந்த பிரபாகரனை, சற்று
பொறுமையுடன் இரு! என்று கார்த்திக் எவ்வளவோ, எடுத்துச் சொல்லியும், கேட்க
மறுத்தவனாய், அவன் தவித்துக் கொண்டேயிருந்தான்.
“உனக்கென்ன..! என்
தவிப்பு உனக்கெங்கே புரிய போகுது..! என்னை மறந்து விடு என்று சொல்லி விட்டு அருணா
இந்த முடிவுக்கு ஏன் வந்தா? அப்படிபட்ட முடிவுக்கு வரச்செய்த அந்த பையனுக்கு
மனசு என்ன கல்லா? ஒரு பெண் தன்னை பிடிக்கவில்லை என்று சொன்ன
பிறகும் கொஞ்சம் ௬ட இங்கிதமில்லாமல் நடந்து கொண்டு விட்டானே..! இந்த அளவுக்கு
எங்களுக்கு கடவுள் ஏன் இப்படி சோதனையை கொடுக்கனும்? என்று கிட்டத்தட்ட அழுது விடும் குரலில் புலம்பினான் பிரபாகர்.
“அவன் அப்படி
சொல்லவில்லையென்றால், அந்த இடத்தில் நன்றாக இருக்காது, என்றுதான் அவன்
அந்த முடிவை எடுத்திருப்பானோ? என்னவோ?” என்றான் கார்த்திக்.
“நீ என்ன எனக்கு
நண்பனா? இல்லே
அவனுக்கா..? இந்த நிலையிலும் அவன் நண்பன் மாதிரி அவனுக்கு சாதகமாகவே பேசுறியே..? கோபத்துடன்
கேட்டான் பிரபாகர்.
“அதுக்கு காரணம்
நான் சொல்றேன்..! என்றபடி அவர்கள் பேசிக் கொண்டிருந்த அறைக்குள் தீடீரென
பிரேவேசித்தாள் சங்கவி.
“சங்கவி..!
நீங்களா? பிரபாகர்
அதிர்ச்சியானான்.
நான் இந்த இடத்திலே உங்களை கொஞ்சங்௬ட
எதிர்பாக்கவேயில்லை! இவனை உங்களுக்கு
எப்படித்தெரியும்..? இவன் வீடு எப்படித்தெரியும்..? கார்த்திக் இது……இவங்கதான்…சங்கவி…!”அன்று
சொன்னேனே.! குழப்பத்தில் வார்த்தைகள் வராமல் தடுமாறினான் பிராபகர்.
“பிரபா! சற்று
அமைதியா இரு! நான் எல்லாவற்றையும் உனக்கு நிதானமா, புரிய வைக்கிறேன்..! என்று அவனை அமர வைத்தபடி, அவனை
ஆசுவாசபடுத்தினான் கார்த்திக். “பிரபா! அன்று
எங்கள் வீட்டில் எனக்கு பெண் பார்க்க ஏற்பாடு செஞ்சிருக்காங்க”ன்னு, சொன்னேனில்லியா..? நேற்று
முன்தினம் அந்த வைபவத்துக்கு போனேன். எனக்கு அங்க போய் பாக்கற வரைக்கும் அவங்கதான்
நீ விரும்புற பொண்ணு”ன்னு தெரியாது! அப்புறம் பெண் பார்க்கும் படலம்
முடிஞ்சதும், “அருணாகிட்டே தனியா பேசிக்கிடலாம்”ன்னு, பெரியவங்க சொன்னதும், அந்த தனிமையிலே அவங்க தன்னோட
விருப்பத்தையும், உன்னைப்பத்திய விபரமெல்லாத்தையும் சொன்னவுடனேதான்
எனக்கு எல்லாம் புரிஞ்சது! நான் அந்த இடத்திலேதான் கொஞ்சம் யோசிச்சு
முடிவெடுத்தேன். அருணாவோட அப்பா எப்படியாவது சீக்கிரம் அவங்களுக்கு கல்யாணம்
முடிச்சிடனு”ன்னு, ஆர்வமா
இருக்காரு! இந்த சமயத்துலே, அருணாவோட பேச்சுக்கு நா ஒத்துகிட்டு, அவங்களை
பிடிக்கலைங்கிற மாதிரி நான் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லிட்டு வந்தாலும், ௬டிய
சீக்கரத்திலே, அவங்களுக்கு உடனே வேற ஒரு பையனைப் பார்த்து முடிச்சு வைக்க அவசரப்படுவார்.
அப்போ அருணாவோட நிலைமையை நினைச்சு பார்த்துதான் அப்படி ஒரு முடிவை சொல்லிட்டு
வந்தேன். சற்று தாமதிச்சு, அதனாலே கிடைக்கிற கொஞ்ச அவகாசத்திலே அவர்கிட்டே
உன்னையும், அருணாவையும் பத்திப்பேசி அவரை எப்படியாவது சம்மதிக்க வைக்கலாம்”ன்னு
நினைச்சுத்தான், “எனக்கே அருணாவை ரொம்ப பிடிச்சிருக்கு..! அதனாலே, மேற்கொண்டு இந்த விசயமா பேசலாம்”ன்னு அந்த
நேரத்துக்கு அங்கே உறுதிபடுத்துற மாதிரி பேசிட்டு, வந்தேன். அது புரியாத அருணா உனக்கு இவ்வளவு
பெரிசா கடித்ததை எழுதி உன்னை தவிச்சு அழவே வச்சுட்டாங்க..! என்று புன்னகையுடன்
விபரத்தை சொல்லி முடித்தான் கார்த்திக்.
“கார்த்திக்..!
நீ எனக்கு எவ்வளவு பெரிய உதவி செஞ்சிருக்கே..! அது தெரியாமே, நா உங்கிட்டேயே வந்து என் மனசிலே உள்ளதை சொல்லி
புலம்பியிருக்கேன்..! என்று வருத்தப்பட்டவன், தீடிரென்று நினைவு வந்தவனாய், நாற்காலியில்
அமர்ந்து இவர்களின் உரையாடலை மெளனமாக கேட்டு ரசித்துக்கொண்டிருந்த, சங்கவியைப்
பார்த்து. “ஆமா இவங்களை மறந்துட்டோமே! இவங்க எப்படி உன் வீட்டுக்கு வந்தாங்க..? இவங்களை எப்படி
தெரியும் உனக்கு..? என்று மறுபடியும் கேள்விகளைத் தொடுத்தபடி, பதிலுக்காக
கார்த்திக்கை ஏறிட்டுப்பார்த்தான் பிரபாகர்.
“நான் சொல்றேன்!” என்றபடி
ஆரம்பித்த சங்கவி, எங்கப்பாவும், கார்த்திக் அப்பாவும், ஒரே ஊரை
சேர்ந்த நண்பர்கள்தான். சொல்லப்போனால் தூரத்து உறவின் வழி வந்தவர்கள்தான். இவர்கள்
சென்னையில் செட்டிலானவுடன், என் அப்பா வேலை நிமித்தம் அங்கேயே தங்கியதாலும், உறவு ஒரளவு
விட்டுப்போனது. என் திருமணப்பேச்சு எடுக்கும் போது ௬ட தன் நண்பரும், உறவினருமான
இவர்கள் வீட்டில், பெண் குடுக்கலாம் என்று என் அப்பா கருதினார்.
ஆனால், இவர்
அண்ணாவுக்கு திருமணம் முடிந்து விட்டதாகவும், கார்த்திக் வெளிநாட்டில், வேலைசெய்வதாகவும், வேறு
பிறநெருங்கிய உறவின் மூலம் கேள்விப்பட்டதும், “என்னை வெகு தூரத்தில் திருமணம் செய்து கொடுத்து
பிரிந்து இருக்க முடியாது என்பதினால், அப்பா மேற்கொண்டு எந்த முயற்சியும்
எடுக்கவில்லை..! அப்போது நான் வேறு எனக்குத் திருமணமே, வேண்டாம் என்ற
பிடிவாதத்தில் இருந்தேன். அதன் பிறகு நாங்களும் இங்கேயே வந்து, தங்கலாம் என்ற
முடிவானதும்தான், உங்க அண்ணியின் மூலம் உங்க உறவைப் பற்றி தெரிந்து
அப்பா அடிக்கடி உங்கள் வீட்டுடன் நெருங்கி பழக ஆரம்பித்தார். அதுக்கு அப்புறம்
நடந்ததுதான், உங்களுக்குத்தெரியுமே..! என்று ௬றியவள் சற்று நிறுத்தினாள்.
சரி! இவனை இங்கே எப்படி சந்தித்தீர்கள்? என்ற பிரபாகரை
புன்னகையுடன் பார்த்தவாறு “நான் ஆரம்பித்துதான் இருக்கிறேன் இன்னமும்
முடிக்கவில்லை! அதற்குள் அவசரபடுகிறீர்களே.? என்றவள்
மீண்டும் தொடர்ந்தாள்.
தொடரும்…
கிளைமேக்ஸ் காட்சி வந்து விட்டதா? சுபமுடிவு பக்கத்தில் தெரிகிறதே!
ReplyDeleteவணக்கம் சகோதரரே.
Deleteதங்கள் முதல் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
கிளைமேக்ஸில் சுப முடிவே தெரிந்து விட்டதா.? கதையாகினும் அதைத்தானே அனைவரும் எப்போதும் எதிர்பார்க்கிறோம். நல்லதை நினைத்தால் யாவும் நல்லவையாகத்தானே நடக்கும்.
தங்கள் தொடர் பணிகளுக்கு நடுவே தொடரை தொடர்ந்து வந்து கருத்திட்டு ஊக்கமளிப்பதற்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள். இன்னும் மிகுதியை தொடர்ந்திடவும் வேண்டுகிறேன்.
என்றும் நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
நாங்களும் அவசரப்படுகிறோம்...!
ReplyDeleteவணக்கம் சகோதரரே.
Deleteதங்கள் அன்பான வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
\\ நாங்களும் அவசரப்படுகிறோம்...! //
பிரபாகரை போலவா.? அதனால்தானே நானும் அவசர அவசரமாய் தினமும் தங்களையெல்லாம் சிரமத்துக்குள்ளாக்கி படிக்க வைத்து (கதையை ) முடித்து வைக்க ஆசைபடுகிறேன்.
தங்கள் தொடர் பணிகளுக்கு நடுவே தொடரை தொடர்ந்து வந்து கருத்திட்டு ஊக்கமளிப்பதற்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள். இன்னும் மிகுதியை தொடர்ந்திடவும் வேண்டுகிறேன்.
என்றும் நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
ஆகா அப்படி போகுதா? மகிழ்ச்சி.
ReplyDeleteவணக்கம் சகோதரி.
Deleteதங்கள் அன்பான வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
\\ ஆகா அப்படி போகுதா? மகிழ்ச்சி. //
ஆகா கதையின் முடிவை ஊகித்து மகிழ்ச்சியை கொண்டாடவே ஆரம்பித்து விட்டீர்கள் போலிருக்கிறதே.! தங்கள் நம்பிக்கை விரைவில் பலித்து விட நானும் கண்டிப்பாக ஒத்துழைக்கிறேன். நன்றி.
தங்கள் தொடர் பணிகளுக்கு நடுவே தொடரை தொடர்ந்து வந்து கருத்திட்டு ஊக்கமளிப்பதற்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள். இன்னும் மிகுதியை தொடர்ந்திடவும் வேண்டுகிறேன்.
என்றும் நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
எங்கிட்டாவது டும் டும் டும் கொட்டட்டும் சீக்கிரம்
ReplyDeleteவணக்கம் சகோதரரே.
Deleteதங்கள் அன்பான வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
\\ எங்கிட்டாவது டும் டும் டும் கொட்டட்டும் சீக்கிரம் //
எங்கிட்டோ டும் டும் டும் கொட்டி சீக்கிரம் கதை முடிந்து விட்டால் பரவாயில்லை என்ற (போரடிக்கும்) நிலை வந்து விட்டதா சகோதரரே.?
கதையும் சுபமாக முடிந்து கொட்ற இடத்திலே கொட்டினாத்தானே அனைவருக்கும் சந்தோஷம் இல்லையா?
தங்கள் தொடர் பணிகளுக்கு நடுவே தொடரை தொடர்ந்து வந்து கருத்திட்டு ஊக்கமளிப்பதற்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள். இன்னும் மிகுதியை தொடர்ந்திடவும் வேண்டுகிறேன்.
என்றும் நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
கதை நகர்வு நன்று
ReplyDeleteபடிக்க தூண்டும் பதிவு
தொடருங்கள்
வணக்கம் சகோதரரே.
Deleteதங்கள் அன்பான வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
மேலும் தொடருங்கள் எனக் ௬றி கதையின் நகர்வை பாராட்டியதற்கும், என் பணிவான நன்றிகள். தங்களைப் போன்றோரின் கருத்துரைகள் என் எழுத்துக்கு பலம் கொடுக்கும் . நன்றி.
தங்கள் தொடர் பணிகளுக்கு நடுவே தொடரை தொடர்ந்து வந்து கருத்திட்டு ஊக்கமளிப்பதற்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள். இன்னும் மிகுதியை தொடர்ந்திடவும் வேண்டுகிறேன்.
என்றும் நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்