Tuesday, April 28, 2015

அந்த நால்வரின் மனம்... ( இறுதிப்பகுதி 11)


முந்தைய பகுதியின் முடிவு

முதல்ல அவங்க தன் சம்மதத்தை சொல்லட்டும்…! அவங்க சம்மதிச்சா, நான் என் வெளி நாட்டு வேலையை விட்டுட்டு அவங்க அப்பா அம்மா விருப்பப்படி இங்கேயே ஒரு வேலை தேடிக்கவும் சம்மதிக்கிறேன்..! என்று தன் சம்மதத்தை மறைமுகமாக உணர்த்திய நண்பனை அளவு மீறிய சந்தோஷத்தில் ஆரத் தழுவிக்கொண்டான் பிரபாகர்.

இன்றைய தொடர்ச்சி..

கடற்கரை..! என்ன பிரபா..? இன்னமும் அவங்களை காணோமே..!என்றான் தவிப்பான குரலில் கார்த்திக்…!

இரு..! கொஞ்ச நேரம் பார்க்கலாம்…! அவங்க நானறிந்து சொன்ன வாக்கு தவறியது இல்லை. வந்து விடுவார்கள். இல்லாவிட்டால் ஃபோன் செய்து விசாரிக்கலாம்..!

நீ சொன்னாயே என்றுதான் நான் இங்கு வர ஒத்துக்கொண்டேன்..! இல்லையென்றால், இந்த காத்திருப்பும், தவிப்பும் நாம் இப்படி தேடிக்கொண்டிருக்க வேண்டியதில்லை..!என்று சலிப்பான குரலில் அலுத்துக்கொண்டான் கார்த்திக்..!

சற்று மனத்தாங்கலுடன் நேரம் நகர்ந்தது. சற்றுப்பொழுது கடலை வெறித்தபடி எதுவும் பேசாமல் இருவரும் அமைதியாயிருந்தனர்.

வானவெளி மேக மூட்டத்துடன் மப்பும் மந்தாரமாக ஒரே அடைச்சலாக காட்சி தந்தது..! அந்தி வெளிச்சத்தில், ஆங்காங்கே பளிச்சிடும் நட்சத்திரங்கள் ஒன்று ௬ட கண்ணுக்கு புலப்படாமல் போய், “எங்கே எங்களில் ஒருவரையாவது எப்படியாவது கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.!என்று சவால் விடுவது போல மறைந்துப் போயிருந்தன..! மழை வருவதற்கான அறிகுறிகளை விரைந்து சென்று சொல்லுங்கள்.என்று உறுமியவாறு கட்டளையிட்ட மேகங்களின் அதிரடி கட்டளைக்கு பயந்து அவ்வப்போது லேசான கொடி மின்னலும், பெருங்காற்றும்,    நீ சென்று சொல்கிறாயா? இல்லை நான்தான் செல்ல வேண்டுமா?” என்று சிறு சிறு பிணக்குகள் இட்டுக் கொண்ட போதும், “இந்த முறை நீதான் செல்ல வேண்டும்என்று சிம்மமாய் வந்து கர்ஜித்த மேகக் குரலுக்கு வேறு வழியின்றி பணிந்து எந்நேரமும் மழை வரலாம்.என காற்று வந்து தன் வேகத்தை சற்றுக் ௬ட்டி எச்சரித்து விட்டு போனபடியிருந்தது..! கடலலைகள் பெரும் சத்தத்துடன் நுரைகளை உமிழ்ந்தபடி சோம்பல் ஏதுமின்றி கரைக்கு வந்து போய்க் கொண்டிருந்தன..! கடமை உணர்வுடன் கரைக்கு வந்து ஆர்பரித்து போனாலும், நட்சத்திரங்களின் கண் சிமிட்டலுடன், அவைகளின்  பேச்சுக்கள் ஏதுமில்லா மெளனமாக இருண்டு கொண்டிருந்த இருட்டைக்கண்டு, அலைகளின் மனவருத்தம் கோபமாக மாறத் துவங்கியது. அதனுடன் பேசுவதற்கு தோதாக யாருமில்லை என்ற கோபம், அதன் பொங்கி வந்த சீற்றத்தில் மிகவும் வெளிப்படையாக தெரிந்தது..! இரவின் இருட்டு, “நான் இன்னும் சற்று கருமையாகி விடட்டுமா..?” என்று இரவிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருந்தது..! இயற்கையின் இந்த சலசலப்பைக் கண்டு மனிதர்கள் ௬ட்டங்௬ட்டமாக எழுந்து கலைந்து சென்ற வண்ணம் இருந்தனர்..!

இனி காத்திருப்பதில் பலனில்லை, என பிரபாவும், கார்த்திக்கும் எழுந்து நடக்க ஆரம்பித்தனர்.

நான்தான் அப்பவே சொன்னேன், அவங்களுக்கு இதில் இஸ்டமில்லை என்று..! நீதான் தேவையில்லாமல் அவங்களை வைத்துக்கொண்டே பேச்சை ஆரம்பித்து, இங்க வந்து உறுதியான அவங்க முடிவை தெரியப்படுத்திறதா, அவங்க சொன்னாங்கன்னு என்னையும் ௬ட்டி வந்து, இப்ப என்ன ஆச்சு பாத்தியா..?” கார்த்திக் அவமானத்தினிடம் பட்ட வலியின் வேதனை பொறுக்காமல், ௬றினான்..!

பிரபாவுக்கும் சற்று வருத்தமாக இருந்தது..! தான் சற்று அவசரப்பட்டு பிரச்சனையை பெரிதாக்கி விட்டோமோ…? என்று தோன்றியது…! சங்கவிக்கு கார்த்திக்கை மணம் செய்து கொள்ளச்சம்மதமா..? என்று கார்த்திக்கை வைத்துக் கொண்டே அவளிடம் கேட்டது தவறோ..? சங்கவிக்கு நல்ல இடத்தில் வாழ்க்கை அமைத்து கொடுப்பதை தன் கடமையாக நினைத்ததை சற்று நிதானிக்காமல் கேட்டு, இதனால் தனக்கு தான் விரும்பிய வாழ்வை அடைய உதவி செய்த இருவரின் மனதையும் அனாவசியமாக புண்படுத்தி விட்டோமோ..! என்றெல்லாம் யோசனை செய்தபடி கார்த்திக்குடன் நடந்து கொண்டிருந்தான்..!

வேதனையை குறைக்க பிரபாகரின் கைப்பேசி ஒலித்தது..! ஹலோ..! பிரபா! நான்தான் சங்கவி பேசுறேன். என்னால் நான் ௬றியபடி அங்கு வரமுடியவில்லை..! மன்னித்து விடுங்கள்..! என்றதும், என்னங்க.! நீங்க இங்கே எங்களை வரச்சொல்லிட்டு இப்படிஎன்று ஆரம்பித்த பிரபாவை, ஹலோ, கொஞ்சம் இருங்க.! அதைத்தான் சொல்ல வர்றேன், மழை வர்ற மாதிரி இருக்குன்னு அம்மா தடுத்திட்டாங்க. பிடிவாதமா கிளம்ப முடியலே.! அதான் ஃபோன் பண்றேன். நீங்க தீடிரென்று என்னிடம் கார்த்திக்கை மணக்க சம்மதமா? என்று நேத்துக் கேட்டதும் எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நம் இருவருக்கும் திருமண ஏற்பாட்டை நம் வீட்டில் தொடர்ந்த போது௬ட, உங்களை முதலில் சந்தித்த போது என் பெற்றோரை மகிழ்விப்பதற்காக ஒத்துக் கொண்டேன் என்ற உண்மையை ௬றினேன். ஆனால் கார்திக்கை நா முதன் முதலில் சந்தித்ததும், நீங்க அருணாவை தவிர வேறு எவரையும் மணந்து கொள்ள முடியாதுங்கிற பிடிவாதத்தில் உறுதியாக இருந்தீங்களே.! அந்த நிலையை நானும் என்னுள் மெதுவாக உணர ஆரம்பித்தேன். புரிகிறதா? ஆனா என் எண்ணத்தை எப்படி சொல்றதுன்னு நா மனசுக்குள்ளே நினைசிண்டிருந்தப்போ நீங்களே இந்த விஷயத்தை ஆரம்பிச்சு வைச்சீங்க.! ஆனாலும் கார்த்திக் பேச்சு இதுக்கு ஒத்துக்காத மாதிரி இருக்கவே என் முடிவை நாளை சொல்றேன்னு அங்கிருந்து கிளம்பிட்டேன். மறுபடியும் நீங்க நேத்து சொன்னதை இன்னைக்கு காலையிலேயும் சொல்லி என் சம்மதத்தை கேட்கவும் நானும் மறுபடி யோசிச்சேன்..! நீங்க என் நன்மையை மனசிலே, வச்சிகிட்டு நல்ல முடிவா சொல்லியிருக்கீங்க..! என் விருப்பத்தை நா உங்க கிட்டையாவது சொல்லாம்னு நினைச்சேன். ஆனா உங்க நண்பரோட விருப்பத்தை முதல்லே தெரிஞ்சிக்காமே,… அவர் என்னதான், எனக்கு தெரிந்தவரா, உறவினரா இருந்தாலும், உங்க விருப்பத்துக்காக சம்மதிச்சு, என்னை கல்யாணம் பண்ணிகிட்டா, அப்புறம் பின்னாடிவர நாளெல்லாம், உங்களுக்காகத்தான் என்னை பண்ணிகிட்டேங்கிற மாதிரி ஏதாவது எண்ணங்களோ பேச்சுக்களோ வந்துட ௬டாதில்லியா..? அதனாலே முதல்லே அவர் சம்மதத்தை முழுசா கேட்டுக்குங்க..! மனசார அவர் என்னை விரும்புனா, அந்த மாதிரி அவர் சம்மதிச்சா, அப்புறமா என்னோட விருப்பத்தை நான் சொல்றேன்..! அதைத்தான் இன்று அங்குவந்து மனம்விட்டு பேசலாம்ன்னு….” என்று சங்கவி பேசிக்கொண்டே போக, குறுக்கிட்ட பிரபா சரி சங்கவி! இப்ப ஒரு விஷயம் தெரியுமா? நீங்க ரெண்டு பேரும் யார் முதல்லே சொல்றதுங்கிற ஒரே மன நிலையில்தான் இருக்கிறீங்க.! நா இப்ப உங்க விருப்பபடி அவனை கேட்டு நல்ல முடிவோட, நாளைக் காலையிலே கார்த்திக் அப்பா அம்மாவை ௬ட்டிகிட்டு உங்க வீட்டுக்கு வந்து பெரியவங்க சம்மதத்தோட கல்யாண நாளே குறிச்சிடலாம் சரியா? என்றதும், மறு பக்கம் வெட்கத்தாலோ என்னவோ குரல் எழும்பாமல் சற்று அமைதி காக்க, தொடர்பை துண்டித்து விட்டு கார்த்திக்கின் கையை பிடித்து உற்சாகமாய் குலுக்கினான்..!

கார்த்திக்.! உன் எண்ணமும், சங்கவியின் எண்ணமும் ஒரே மாதிரி அமைஞ்சிருக்கு..! உங்க வீட்டிலே உன் பெத்தவங்க வேற எந்தப்பொண்ணை உனக்கு பேசி முடிச்சிருந்தாலும், இந்த மாதிரி ஒரு பொருத்தம் அமையாது.. நீ ரொம்ப கொடுத்து வைத்தவன். இப்ப நா எவ்வளவு சந்தோஷமா இருக்கேன்னு தெரியுமா..? என்றபடி, சங்கவி ஃபோனில் சொன்னதை ௬றியதும், நண்பனின் முகத்தில் உதித்த அந்த பரிபூரண மகிழ்ச்சியை கண்டு கார்த்திக் உள்ளமும் சங்கவியை ஏற்றுக்கொள்ள மிகவும் இசைவாயிருப்பதை உணர்ந்தவனாய் உள்ளம் குளிர்ந்தான் பிரபா..!

இவர்களைப்போல் சிறப்பான எண்ணங்கள் உடையவர்களை இந்த பூமித்தாய் பெற்றெடுத்த மகிழ்ச்சியில், மனநிறைவில், வானம் மனம் மகிழ்ந்து இவர்களுக்காகவேனும், மழையை தந்து இந்த மண்ணுலகிற்கு உதவ வேண்டுமென உறுதி பூண்ட மனதுடன் மடமடவென மழையை பொழிவித்து தன் மனதினையும் குளிர்வித்து கொண்டு பூமியில் உள்ளவர்களையும், குளிர்விக்க முயன்றது…!


--------------------------------முற்றும்----------------------------------------

 பிரபா அருணா, 
கார்த்திக் சங்கவி 
ஜோடிகளை இனிப்புடன் வாழ்த்துவோம்

முடிவுரை:::
இந்தக்கதைக்கு முன்னுரை என்ற ஒன்றை நான் எழுதா விடினும், முடிவுரையை எழுத என் மனம் ஆவல் கொள்கிறது நான் ஏற்கனவே  ( 1 வருடம் முன்பு ) டிராப்டில் எழுதிய இதை நீண்டகதையாக உள்ளதே என 11 பகுதிகளாகப் பிரித்து வெளியிட்டேன். சகோதரர் ஸ்ரீராம் அவர்களின் ஆலோசனைபடியும், சில வரிகளை உடன் சேர்த்தேன். இன்னும் பெரிதாக்கினால், படிக்கும் பொறுமைக்கு பங்கம் வந்தால் என்னசெய்வதென கொஞ்சம் விரைவாகமுடித்து விட்டேன்.


இக்கதைக்கு ஆதரவளித்து மிகவும் பொறுமையுடன் தினமும் வந்து படித்துக் கருத்திட்ட நான்குமனங்களுக்கும், அவ்வப்போது வந்து படித்துக் கருத்திட்ட நான்குமனங்களுக்கும், கதையில் உலவிய மாந்தர்களின் நான்கு மனங்களின் நன்றியோடு சேர்த்து என் மனதில் எழுந்த மிக மிக பணிவான நன்றியையும், தெரிவித்துக்கொள்கிறேன்.

( இப்போது தெரிகிறதா? நான் எழுதியக் கதைக்கு எவ்வளவு பொருத்தமான பெயராகத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறேன் என்று. ) மறுபடியும் இது போலவே நிறைய கதைகளோடு உங்களை சந்திக்கும் வரை நன்றி.


16 comments:

 1. சுபம். மகிழ்ச்சி.

  இயல்பாகவே சுப முடிவுகள் மனதுக்கு ஒரு மகிழ்ச்சியைத் தருகின்றன என்பதை மறுப்பதற்கில்லை . முன்னர் எங்கள் ப்ளாக்கில் நானும் சற்றுத் தயக்கத்துடனே ஒரு நீண்ட கதையை இதே போல் ட்ராப்டில் நீண்ட நாள் ஙைத்திருந்து வெளியிட்டேன். ஒரு வெற்றி பெற்ற காதல் கதை என்ற தலைப்பில்!

  என்னைக் குறிப்பிட்டுள்ளதற்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே.

   தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   தாங்கள் சொல்வது உண்மைதான் ! சுபமான முடிவுகள் என்றுமே மகிழ்ச்சி ஏற்படுத்தும் விசயங்கள்தாம். தொடர்ந்து வந்து கதையை ரசித்து பின்னூட்டங்கள் இட்டு என்னை ஊக்கப் படுத்தியமைக்கு மீண்டும் என் பணிவான நன்றிகள்.

   நன்றியுடன்,
   கமலா ஹரிஹரன்.

   Delete
 2. சுபம். மகிழ்ச்சி.

  இயல்பாகவே சுப முடிவுகள் மனதுக்கு ஒரு மகிழ்ச்சியைத் தருகின்றன என்பதை மறுப்பதற்கில்லை . முன்னர் எங்கள் ப்ளாக்கில் நானும் சற்றுத் தயக்கத்துடனே ஒரு நீண்ட கதையை இதே போல் ட்ராப்டில் நீண்ட நாள் ஙைத்திருந்து வெளியிட்டேன். ஒரு வெற்றி பெற்ற காதல் கதை என்ற தலைப்பில்!

  என்னைக் குறிப்பிட்டுள்ளதற்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே.

   விரைவில் தாங்கள் எழுதிய கதையையும் படித்துப் பார்க்கிறேன். நன்றி.

   நன்றியுடன்,
   கமலா ஹரிஹரன்.

   Delete
 3. சுபமான முடிவு... பாராட்டுக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே.

   தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   சுபமான முடிவு மகிழ்வை ஏற்படுத்த ௬டியதுதானே.! இந்த கதையை தொடர்ந்து ரசித்துப் படித்து கருத்துக்கள் இட்டு என்னை ஊக்கப் படுத்தியமைக்கு மீண்டும் என் பணிவான நன்றிகள்.

   நன்றியுடன்,
   கமலா ஹரிஹரன்.

   Delete
 4. பிரபா – அருணா, கார்திக் – சங்கவி ஜோடிகள் எல்லா நலனும் வளமும் பெற்று வாழ வாழ்த்துகள் அருமையாக முடித்தீர்கள் கதையை தலைப்பு சரிதான்
  அந்த நால்வர் சரி இந்த நால்வர் யார் யாரோ.... சுபம்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே.

   தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   பிரபா – அருணா, கார்திக் – சங்கவி ஜோடிகள் எல்லா நலனும் வளமும் பெற்று வாழ வாழ்த்துகள் ௬றியமைக்கும், பாராட்டிற்கும், இந்த கதையை தொடர்ந்து வந்து ரசித்துப் படித்து கருத்துக்கள் இட்டு என்னை ஊக்கப் படுத்தியமைக்கும் மீண்டும் என் பணிவான நன்றிகள்..

   கதையின் தலைப்பு சரிதான் என்று "புரிந்து" ஒத்துக் கொண்டமைக்கு மகிழ்ச்சி.

   நன்றியுடன்,
   கமலா ஹரிஹரன்.

   Delete
 5. பிரபா அருணா கார்த்திக் சங்கவி ஜோடிகள் நல்ல படியாக சேர்ந்தாச்சி ! இரண்டு ஜோடிகளும் எல்லா வளமும் பெற்று வாழ நாமும் வாழ்த்துவோம்.சகோதரி 11 பதிவும் மிக அருமை. உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் !

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி.

   தங்கள் அன்பான வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   பிரபா – அருணா, கார்திக் – சங்கவி ஜோடிகள் எல்லா நலனும் வளமும் பெற்று வாழ வாழ்த்துகள் ௬றியமைக்கும், கதை அருமை என்ற பாராட்டிற்கும், இந்தக் கதையை தொடர்ந்து வந்து ரசித்துப் படித்து கருத்துக்கள் இட்டு என்னை ஊக்கப் படுத்தியமைக்கும் என்னை வாழ்த்தியமைக்கும் மீண்டும் என் பணிவான நன்றிகள்..

   நன்றியுடன்,
   கமலா ஹரிஹரன்.

   Delete
 6. அன்பின் இனிய வலைப் பூ உறவே!
  அன்பு வணக்கம்
  உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
  இனிய "உழைப்பாளர் தினம்" (மே 1)
  நல்வாழ்த்துகள்
  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே.

   தங்கள் வருகைக்கும், இனிய "உழைப்பாளர் தினம்" (மே 1) நல்வாழ்த்துக்கள் ௬றியமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   தங்களுக்கும் என் அன்பார்ந்த( ஆனால் தாமதமான) வாழ்த்துக்கள்.

   நான்கு நாட்களாக வெளியூர் பயணம். அதனால் எந்த ஒரு பதிவையும் படித்து கருத்திட இயலவில்லை. வருந்துகிறேன். நன்றி.!

   நன்றியுடன்,
   கமலா ஹரிஹரன்.

   Delete
 7. அருமை சகோ தொடர் கதை எழுதி இருக்கிறீர்கள்...முதலில் பிடியுங்கள் வாழ்த்துக்களை...நான் முதலில் இருந்து படித்து விட்டு கருத்திடுகிறேன். இப்பகுதியை படிக்கவில்லை...அப்புறம் சுவாரஸ்யம் போய் விடும் அல்லவா..சகோ அதனால் தான். நன்றி

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி.

   தங்கள் அன்பான வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   தாங்கள் மனமுவந்து தந்த வாழ்த்துக்களுக்கு என் மகிழ்வான நன்றிகள் பல கோடி சகோதரி.

   நான்கு நாட்களாக வெளியூர் பயணம். அதனால் எந்த ஒரு பதிவையும் படித்து கருத்திட இயலவில்லை. வருந்துகிறேன். அதனால் நிதானமாக படித்து விட்டு கருத்துரை இடுங்கள் என்று நான் சொல்வதற்குள் தங்களிடமிருந்து படித்து ரசித்ததற்கான அடையாளமாக கருத்துரையே வந்து விட்டது. மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி சகோதரி.

   நன்றியுடன்,
   கமலா ஹரிஹரன்.

   Delete
 8. நல்ல முடிவு சகோ.

  ஆரம்பம் முதல் கடைசிவரை கதை நல்ல நடையுடன் செல்கிறது. சுவார்ஸ்யமாகவும் இருக்கிறது. கதாபாத்திரங்கள், உரையாடல்கள் அருமையாகச் செல்கிறது.

  தொடர்ந்து எழுதுங்கள் சகோ. வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி.

   தங்கள் அன்பான வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   தொடர்ந்து வருகை தந்து என் படைப்பை ஊக்குவித்து, நிதானமாக அனைத்தையும் படித்து, கருத்துரை இட்டமைக்கு என் மனம் நிறைந்த நன்றிகளை மறுபடியும் தெரிவித்துக் கொள்கிறேன் சகோதரி.

   தொடர்ந்து எழுத ஊக்குவித்ததற்கும், வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். என்றும் என் பதிவுகளை தொடரவும் வேண்டுகிறேன்.

   நட்புடன்.
   கமலா ஹரிஹரன்.

   Delete