Sunday, July 25, 2021

இனிப்பு போளி....

 பாதாம், க. பருப்பு, தேங்காய் வெல்ல போளி..

ஒரு வித்தியாசத்திற்காக இந்த சமையல் பதிவு. முன்பெல்லாம் எங்கள் வீட்டில் வருடபிறப்பில் ஆரம்பித்து, ஆவணி அவிட்டம், சரஸ்வதி பூஜை, தீபாவளி, போகி பண்டிகை என விஷேட தினங்களில் கண்டிப்பாக இந்த போளி  வடை, பாயாசத்தோடு இணைந்து  மதிய உணவோடு ஐக்கியமாகும். இப்போது அப்படியெல்லாம் பண்ணவும் இயலவில்லை. வடை, பாயாசமே சாப்பிட முடியாத அதிகப்படியான  உணவாக போய் விடுகிறது. மற்றும்  அன்றைய தினத்தில் செய்வதற்கு நேரமும் இருப்பதில்லை. இதைப் போல்  இடைப்பட்ட நாளில் ஆசைக்காக என்றைக்காவது இதை செய்து சாப்பிட வேண்டியுள்ளது. அப்படி ஒருநாள் தீடிரென தனித்து உதயமான போளி இது. 


முதலில் கடலைப் பருப்பை அரை டம்ளர் எடுத்து கொண்டு வெறும் கடாயில் சற்று  சிவக்க வறுத்துக் கொள்ளவும்.

 

வறுத்ததை ஒரு தடவை அலம்பிய பின் கொஞ்சம்  அது மூழ்கும் அளவிற்கு தண்ணீரை விட்டு ஊற விடவும். 


ஒரு 25 (நல்ல வேளை.. இந்த தடவை  கணக்கில் கோட்டை விடவில்லை. எண்ணி வைத்தது சரியாக உள்ளது.:) ) பாதாமை எடுத்துக் கொண்டு அதையும் அலம்பி அந்த கடலைப் பருப்புடன் சேர்ந்து ஊற விிடவும்


க. பருப்புடன் சேர்ந்து சமர்த்தாக "நாங்கள் ஊறிக் கொண்டிருக்கிறோம்". ..என எவ்வித பிணக்கும்  காட்டாது ஒத்துழைத்த பாதாம் பருப்புகள். 


ஒரு அரைமணிநேரம் ஊறிய பின் அதே தண்ணீருடன் இரண்டையும் ஒரு கனமான பாத்திரத்தில் போட்டு ஒரளவு வாசனை வரும் வரை  வேக வைத்துக் கொள்ளவும்..


இது போளி மாவு. "மைதா உடம்பிற்கு கெடுதலாயிற்றே... .பேசாமல், கோதுமை மாவை சிபாரிசு செய்து விடலாமா....?" என்ற நம் யோசனையை புரிந்து கொண்ட மாதிரி  சற்று சோகமாக இருந்தது. "ஒரு நாள்தான் என்னை சேர்த்துக் கொள்ளுங்களேன்.... நான் என்ன அவ்வளவு பொல்லாததுவா. ...?முன்பெல்லாம் என்னை வைத்து, தோசை, பரோட்டா என்றெல்லாம் செய்து என்னை மகிழ்விக்கவில்லையா...? என கெஞ்சும் குரலில்  நியாயமாக கேட்டதும் மைதா மாவு கொண்டு கலந்து வைக்கப்பட்ட போளி மாவு

    

மைதாவுடன் மஞ்சள்தூள்  உப்பு, ந.எண்ணெய் கலந்து  தேவையான தண்ணீர்விட்டு நல்ல தளர்வாக கலந்து வைத்ததும், மைதாவுக்கு உண்டான சந்தோஷத்தை சொல்லி மாளவில்லை. "எண்ணெய் மினுமினுப்புடன் நான்  எவ்வளவு அழகு பார்த்தாயாா?" என கலக்கும் போதே ஆயிரம் முறை கேட்டு விட்டது. 


"ஆன்லைன் வர்த்தகத்தில் தேங்காய்கள் வாங்குவதால், சின்னதான இந்த தேங்காய்தான்  எனக்கு அன்றைய தினம்  கிடைத்தது.....பெரிய தேங்காயாக வந்திருந்தால் தேங்காய்ப்பூ கணிசமாக கிடைக்கும். சமயத்தில் அதுவும் இளசாக வழுக்கையாகவும் அமைந்து விடும். எதுவுமே நம் அதிர்ஷ்டத்தைப் பொறுத்து தான் அமையும்.. . ஆனால்,...." மேற்கொண்டு என்னை விமர்சிக்க விடாமல்  தடை செய்தது ஒரு குரல்." சரி..  சரி.... ரொம்ப அலட்டிக்காதே...! இந்தளவிற்கு நான் கிடைத்ததே உன்னுடைய அதிர்ஷ்டம்தான்.  . என்னைத்தான் தேர்ந்தெடுத்து என் உடல் மனம் வலிக்கும் வரை உடைத்து விட்டாயே...! பின் என்ன  அங்கலாய்பபு...? " மூடியிருந்தாலும்  தேங்காய், அதன்  ப(சி)ல்லுகள்  இருந்த  தைரியத்தில் வாய்க்குள் முணுமுணுத்தன.) 


பின் என்ன.. .? தேங்காய் சொன்னது போல், மேற்கொண்டு அங்கலாய்காமல்,  உடைத்த தேங்காயிலிருந்து அதன் ப(சி)ல்லுகளை அகற்றி எடுத்தேன்.  (எப்போதும் நான்  தேங்காயை பொடிதாக துருவி விடுவேன். அன்று கொஞ்சம் பிற வேலைகள் அதிகம். அதனால் மிக்ஸியில் போட்டு விடலாம் என ப(சி) ல்லுகளாக எடுத்துக் கொண்டேன்.) " போதுமே உன் பெருமை....! எப்படியோ என்னிடமிருந்த சொத்துக்களை  அகற்றி என்னை வெறும் ஓடாக்கி விட்டாய்... என தேங்காய்  மறுபடியும் என்னை கோபத்துடன் முறைக்க,   நல்லவேளை. ..! அதிலிருந்து வெளிவந்த தேங்காய் ப(சி)ல்லுகள்  அந்த  முழு தேங்காயைப் போல், "என்னை அதிகம் பேசாதே.... ... அங்கலாய்காதே... ..." என்று கடுப்புடன் சொல்லாமல் என் சொல்லை  ஆமோதிக்கிற மாதிரி மெளனமாகவே பல்லிளித்து   கொண்டிருந்தன....." 


இந்த அளவு தேங்காய்க்கு இந்த அளவு வெல்லம் எடுத்துக் கொள்ளலாம்... . கூடவே க. ப. பருப்புகள் வேறு இருக்கிறதே..! வெல்லம் அதன் இனிப்பான குணத்தைப்போல மெளனத்துடன் எல்லாவற்றையும் கேட்டபடி அமர்ந்திருக்கிறது. 


முதலில் மிக்ஸி ஜாடியில், தேங்காய் சில்லுகளை பொடிதாக்கி துருவி எடுத்துக் கொண்ட பின் அதற்குள் ஊறி வெந்த  க. பருப்பு. பாதாம் பருப்புகளை, அதனுள் போட்டு அதையும் நைசாக தண்ணீர் சேர்க்காமல் அரைத்து வைத்துக் கொள்ளவும். 


ஒரு கடாயில், துருவிய தேங்காயையும், வெல்லத்தையும் போட்டு கொஞ்சமாக.... தண்ணீர் கலந்து..... (அந்த தேங்காய் உடைக்கும் போது கிடைத்த தேங்காய் தண்ணீரே போதும். .) வெல்லப் பூரணத்தை நன்றாக வதங்க  விடவும். 


வெல்லப் பூரணம் நன்றாக வெல்லம் சேர்ந்து வதங்கும் சமயத்தில் பொடித்து வைத்திருக்கும் பருப்பு  கலவைகளை அதனுடன் சேர்த்து கிளறிக் கொண்டேயிருக்கவும்.
 
 

தேங்காய், வெல்லம், பருப்புக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து நாங்கள் பூரணத்துவம்  பெற்று விட்டோம் என மகிழ்கிறது. தேங்காயும் தன் கோபம் தவிர்த்து மற்றவைகளுடன் சினேகமாக இணைந்து கொண்டது. 


இறுதியில் தன்னுடன் சேர்ந்த ஏலக்காய் பொடியின் வாசனையில்  அந்த வெல்லப்  பூரணம் மிகுந்த மகிழ்வையடைந்தது. 


"இந்த சந்தோஷத்துடனேயே  சற்று நேரம் பேசிக் கொண்டிருங்கள். நீங்கள் என் கை பொறுக்கும் சூட்டிற்கு வந்ததும், உங்களை  கலந்து  வைத்திருக்கும் மாவுடன்் சேர்த்து  "போளி" என்ற பெயரை உங்களுக்கு சூட்டி விடுகிறேன். .." என்றதும், ஒன்றுடன் ஒன்று கைகுலுக்கிபடி "காத்திருக்கிறோம்" என்றது  வெல்லப் பூரணம். 


கொஞ்ச நேரத்தில் என சொல் கேட்டு உருண்டைகளாக மாவும், பூரணமும் தட்டில் அமர்ந்தபடி " பிறந்த சொந்த கதை, இங்கு வந்த கதை" என அளவாளாவி .கொண்டிருக்கிறது. 



போளி தட்டிச் சுட  வாழை இலை மிகவும் நன்றாக இருக்கும். சுடும் போது தோசைக்கல்லில் எடுத்துப் போட அமைப்பாகவும் வரும். அந்த இலை வாசனையே ஒரு தனிச்சுவை. ஆனால் நினைத்தவுடன் வாழை இலைக்கு எங்கே போவது? .  அதனால்் நெய் வந்த அலுமினிய கவரை தேர்ந்தெடுத்து கொண்டேன். மைதா மாவு உருண்டையை ந. எண்ணொயை கைகளில் தொட்டுக் கொண்டு மாவை பரத்தி, 


அதன் நடுவில் பூரணத்தை வைத்து மூடிக் கொண்டு சுற்றிலும் உள்ள மாவை , நல்ல வட்டமாக மூடிக்கொண்டு மாவோடு சேர்த்து வட்டமாக தட்டி, 


எடுத்து எண்ணெய் தடவிய தோசைக் கல்லில் போட்டு சிவக்க வெந்ததும், 


மறுபுறம் திருப்பி, போட்டு, சுற்றிலும் கொஞ்சம் நல்லெண்ணெய்  விட்டு மறு புறமும் வெந்ததும் எடுத்து, .


இப்படி தட்டில் அடுக்க வேண்டியதுதான். சூடாக சாப்பிடும் போதே போளியில் நெய் விட்டு சாப்பிடலாம். நான் தோசைக் கல்லில் எண்ணெய்க்கு பதிலாக நெய் விடுவதில்லை. சூடு ஆறியதும் உறைந்து விடும். அதனால் சுட்டெடுத்து பின் சூடாக சாப்பிடும் போது அவரவர் விருப்பப்படி நெய் விிட்டுக் கொள்ளலாம்.. என்பது என் கருத்து. 


"இப்போது எப்படி.... நான் அழகாக இருக்கிறேனா?" எனக் கேட்கும் போளிகள். 


நீங்களும் வேண்டியதை எடுத்துக் கொள்ளலாமே. .. .. .! போளி எப்படி உள்ளதென அன்புடன் கருத்துரைகளை தாருங்கள். நன்றி. 🙏. 

அன்புடன் வந்து தெரிந்த சாதாரண பக்குவமானலும், பதிவை படித்து, சுவையான போளிகளை எடுத்துக் கொண்ட அத்தனை சகோதர, சகோதரிகளுக்கும் என் அன்பார்ந்த நன்றிகள். 🙏. 

70 comments:

  1. அதென்ன வறுத்த பிறகு அலம்புவது?  முன்னரே அலம்பினால் காய வித்து வருக்கவேண்டும் என்பதாலா?  அல்லது ஏதாவது ஸ்பெஷல் காரணம்?

    ReplyDelete
    Replies
    1. களைஞ்சுட்டு வறுப்பது கொஞ்சம் கஷ்டம். என்றாலும் வறுக்கலாம். பத்தில்லாமல் பண்ணும் புட்டுக்கு அரிசியைக் களைந்து வடிகட்டிப் பின்னர் சிவக்க வறுப்போம். காப்பரிசிக்கும் அப்படித் தான். ஆனால் ஒரேயடியாகப் போடக் கூடாது. கொஞ்சம் கொஞ்சமாய்ப் போடணும். ஈரம் காயணும் இல்லையா?

      Delete
    2. வணக்கம் சகோதரரே

      தாங்கள் முதல் வருகை தந்து கருத்துரைத்ததிற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      வறுத்த பிறகு அலம்புவது அதன் வாசனை போய் விடும் என்பதுதான் அனைவரின் சந்தேகமும். வறுப்பதற்கு முன் அலம்பினால், சகோதரி கீதா சாம்பசிவம் சொல்வது போல் வறுக்க சிரமமாகி விடும். பொதுவாக. எந்த ஒரு பொருளையும் நீரிலோ, நெருப்பிலோ முதலில் சுத்தப்படுத்தி விட்டால் போதுமானதுதான். (ஆனாலும்,என் அஞ்ஞானம் இருக்கிறதே.. அது என்னை இப்படித்தான் பாடாக படுத்துகிறது. ஹா.ஹா.ஹா) அதனால்தான் "ஒருதடவை" (ஒரு காக்கா குளியல் அதற்கு) என்ற சொல்லை அங்கு உபயோகித்தேன். முதலிலேயே நன்றாக அலம்பி விட்டு நிறைய நேரம் உலர வைத்த பின் வறுக்கலாம்.
      உங்கள் அன்பான கருத்துகளுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    3. வணக்கம் அனைவருக்கும்.

      இந்த பதிவுக்கு வந்து கருத்துரைத்து அளவளாவி, போளியை எடுத்துக் கொண்ட உங்கள் அனைவருக்கும் என் அன்பான, பணிவான மனம் கனிந்த நன்றிகள். என கைப்பேசி உணவு (சார்ஜ்) கேட்கிறது. அதற்கு உணவை ஊட்டி விட்டு இன்னும் சற்று நேரத்தில் வருகிறேன். அதனால் தொடர்ந்து கருத்துகளுக்கு பதில் தர இயலவில்லை.மன்னிக்கவும். அனைவருக்கும் நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    4. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆமாம். ஈரத்துடன் வறுப்பது சிரமம். புட்டுக்கு அரிசியை இன்னும் கொஞ்சம் சிவக்க வறுக்க வேண்டுமென்பதால்,அரிசியை களைந்து நன்றாக உலர வைத்து கொஞ்சம் கொஞ்சமாக போட்டு வறுக்க வேண்டும். (எங்கள் அம்மா எப்படி செய்தாலும் புட்டு, உக்காரை போன்ற ரகங்களையும் பத்தோடு 11 ஆக சேர்த்து விடுவார்கள்.ஹா ஹா.) தாங்கள் சமையலில் அனுபவசாலி. உங்கள் விளக்கங்கள் உண்மைதான். நல்ல விரிவான கருத்துக்கு நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. மைதா மாவை இப்போதும் நாங்கள் அவ்வப்போது உபயோகித்துக் கொண்டுதான் இருக்கிறோம்..  கரைத்த தோசை, பரோட்டா வடிவில்!

    ReplyDelete
    Replies
    1. கரைச்ச தோசைக்கு கோதுமை மாவும்/உளுத்தமாவும் போட்டாலே நன்றாக வருகிறது. எப்போவானும் பண்ணும் நெய்க்கொழுக்கட்டைக்கு ரவையுடன் கொஞ்சம் மைதா சேர்க்கிறேன். அரைக்கிலோ மைதா வாங்கினால் 2,3 மாதங்கள் வந்துடும்.

      Delete
    2. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      மைதா கெடுதல் என்பதால், மாத லிஸ்டில் அதை வாங்குவதில்லை. எப்போதோ ஒரு முறை இப்படி அழையா விருந்தாளியாக என் குழந்தைகள் வாங்கி வந்து விடுகிறது. ஆனால் எல்லா பிஸ்கெட்களில் மைதாவும் உள்ளது. நானும் முந்தியெல்லாம் தனி மைதா கரைத்த தோசை வார்த்திருக்கிறேன். நல்ல மெல்லிசாக வரும். அப்போது இந்தளவிற்கு அதன் மேல் (மைதா) புகார்கள் வந்ததில்லை நானும் இப்போது மீந்து இருக்கும் மாவில் பரோட்டா செய்ய வேண்டும். தங்கள் நல்ல கருத்துக்கு நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    3. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நான் இந்த தோசையென்றால், வெறும் கோதுமை மாவு, கரைத்து வார்ப்பேன். இல்லையென்றால் இட்லிக்கு அரைத்த மாவு கொஞ்சம் போல் மிகுந்தால், அதில் கோதுமை மாவை மட்டும் கலந்து விடுவேன். கரைத்த தோசையென்றால், கோதுமை மாவு+ ரவை+அரிசி மாவு+பச்சை.மி கடுகு தாளித்து சேர்த்து வெங்காயம் கலந்தோ/ இல்லாமல் வார்ப்பேன். உளுந்தம்மாவு நீங்கள் தனியாக அரைத்து வைத்து கொள்கிறீர்கள் போலும்.. கரைத்த தோசை கலவை தகவலுக்கு நன்றி.

      மைதா மாவில் எண்ணெய் கொழுக்கட்டை பண்ணுவோம். நீங்கள் ரவையும் சேர்ப்பீர்களா? தகவல் அறிந்து கொண்டேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    4. நாங்க நெய்க்கொழுக்கட்டை என்போம். குலதெய்வம் கோயிலுக்குப் போறச்சே எல்லாம் அங்கே ஊர் ஆரம்பத்தில் இருக்கும் பொய்யாப் பிள்ளையாருக்கு இதைப் பண்ணி எடுத்துக் கொண்டு போவேன். அதற்கு அதிகம் ரவை தான். பொடி ரவை எனில் பால் விட்டுப் பிசைந்து வைத்தாலே நன்கு சேர்ந்து விடும். சில சமயம் ரவை பெரிதாக இருக்கும். அப்போது கொஞ்சம் மைதாவும் சேர்த்தால் ஊறிக்கொண்டு பிசைந்து பண்ண எளிதாக வரும்.

      Delete
    5. கோதுமை மாவு கரைச்ச தோசை நாங்களும் அவ்வப்போது செய்வோம்.

      Delete
    6. வணக்கம் சகோதரி

      தங்கள் மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஓ.. விபரம் அறிந்து கொண்டேன். நீங்கள் அடிக்கடி பதிவில் குலதெய்வம் கோவிலுக்கு செல்லும் வழியில், பிள்ளையாருக்கு கொழுக்கட்டை செய்து எடுத்துப் போவதைச் சொல்லி அறிந்திருக்கிறேன். ரவையை பாலில் கலந்தால் வைத்து சாப்பிட ஒரிரு நாட்களுக்கு மேல் வருமா? ஏனெனில் இந்த மாதிரியும் ஒரு தடவை செய்து பார்க்கலாம் என்ற எண்ணம்தான். எங்கள் அம்மா வீட்டில் வெறும் மைதாவை மட்டும் மேல் மாவாக கொண்டு எண்ணெய்யில் பொரித்து பிள்ளையாருக்கு விஷேட தினங்களில் இந்த எண்ணெய் மோதகம் செய்வார்கள். ரவையும் உடன் சேர்க்கும் போது சுவை நிச்சயம் நன்றாகத்தான் இருக்கும். தகவல்களுக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    7. வணக்கம் சகோதரரே

      தங்கள் மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      உங்கள் வீட்டிலும், இதேப் போல் கரைத்த தோசை செய்வதறிந்து மகிழ்ச்சி. இட்லிக்கு அரைத்தால், ஒரிரு நாளைக்கு மேல் இட்லி சாப்பிட எங்கள் வீட்டில் யாருக்கும் விருப்பமில்லை. அதனால் நானும் அடிக்கடி இந்த கரைத்த தோசை செய்து விடுவேன். சப்பாத்தியை விட இது எளிது. சப்பாத்தியை போல தொட்டுக் கொள்ள விதவிதமான துணை பதார்த்தங்கள் இதற்கு தேவையில்லை. தே.சட்னி, இல்லை மி.பொடி போதும். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    8. நான் ஒரு மாதம் வைத்திருப்பேன் இந்த நெய்க்கொழுக்கட்டையை. தண்ணீர் விட்டு ரவை+மைதா கலப்பதற்கு பதிலாகப் பால் விட்டுக் கலப்பேன். சுவையும் கூடும்.

      Delete
    9. வணக்கம் சகோதரி

      தங்கள் மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      அப்படியா..? ஒரு மாதம் வரை நன்றாக இருக்குமா? தங்கள் செய்முறைபடி நானும் இந்த கொழுக்கட்டையை ஒரு தடவை செய்து பார்க்கிறேன். நெய் கொழுக்கட்டையை பற்றிய அருமையான தகவல்கள் தந்ததற்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. போளிகள் அருமையாக வந்துள்ளன.  அதைவிட அதன் செய்முறை இன்னும் சிறப்பாக சொல்லப் பட்டிருக்கிறது!  அதைப் படித்ததே சாப்பிட்ட திருப்தி!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஹா.ஹா.ஹா. படித்து பார்த்தவுடனேயே சாப்பிட்ட திருப்தி வந்து விட்டதா? நல்லது.. ஆசைகள் அற்ற மனம். நாங்கள் இதை நான்கைந்து நாட்களுக்கு வைத்து சாப்பிட்டோம். போளிகள் நன்றாக வந்துள்ளது என்ற உங்களது மனம் திறந்த பாராட்டிற்கும்,மனம் நிறைந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. இன்று மாலைக்கு பாஸிடம் போளி கார போளி, இனிப்பு போளி செய்யச் சொல்லலாமா என்று யோசனை.  கொஞ்சம் தள்ளி நின்று ஜாக்கிரதையாக கோரிக்கை வைக்கவேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம்,
      சொல்லலாமா என்று கேட்காதீர்கள் செய்யலாமா
      என்று கேளுங்கள். ஆஹா சரின்னு பதில் வரும்:)

      Delete
    2. ஹா... ஹா.. ஹா... B Positive!!

      Delete
    3. ஹாஹாஹா, ஏதானும் ஒரு போளினா செய்து கொடுப்பாங்க. நீங்க பாட்டுக்குக் கார போளி, இனிப்பு போளினு இரண்டையும் கொண்டானு கேட்டால்? எங்கே போறதாம்?

      Delete
    4. வணக்கம் சகோதரரே

      ஹா.ஹா.ஹா. /இன்று மாலைக்கு பாஸிடம் போளி கார போளி, இனிப்பு போளி செய்யச் சொல்லலாமா என்று யோசனை/

      இப்போது இன்றைய மாலையில் இந்த யோசனை செயல்படுத்த படுகிறதா? ஹா. ஹா.ஹா . நான் கூட தள்ளி நின்று யோசிக்கும் அளவிற்கு உங்களுக்கு அடுப்படி பயம் கிடையாதே என யோசித்தேன்.

      சகோதரி வல்லிசிம்ஹன் சொல்லும் முறையில் கேட்டதில், ஆஹா. சரி என பதில் வந்து விட்டதா?

      சகோதரி கீதா சாம்பசிவம் சொல்கிற மாதிரி உங்கள் பாஸிடம் ஏதாவது ஒரு போளி என்றால், பிரியமாய் செய்து தந்து விடப் போகிறார்கள். ஆனால், ஒரே நாளைக்கு இரண்டையும் செய்வது சிரமந்தான். உங்கள் அனைவரின் அன்பான உரையாடல்களை ரசித்தேன். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. போளி செய்முறை சொனான விதம் ரசனை முடிவில் தான் போலி அல்ல என்று நிரூபித்து விட்டது.

    போணி ஆவதற்குள் நானும் இரண்டு சுட்டுக்கொண்டேன்.

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆகா.. அடுக்கு சொற்களுடன் போளியை ரசித்து பதிவுக்கு கருத்துக்கள் தந்திருப்பதற்கு என் மனமுவந்த மகிழ்ச்சி.

      /போணி ஆவதற்குள் நானும் இரண்டு சுட்டுக்கொண்டேன்./

      ஹா.ஹா.ஹா. தாராளமாக எடுத்துக் கொள்ளலாமே..நான்தான் தட்டுதட்டாக எத்தனை படங்களை பகிர்ந்திருக்கிறேன் எதற்கு கணக்காக இரண்டே இரண்டு.:)

      சகோதரி அதிரா வந்தால் கூட ஒரே படத்தை ஒன்பது தடவை கமலாக்கா பகிர்ந்து பதிவை இப்படி அநியாயத்திற்கு நீ..ள..மாக்கி தருவதில் வல்லவர் என சொல்லப் போகிறார் என நினைத்துக் கொண்டேயுள்ளேன். நாம் அனைவருமே அவர் வருகைக்கு ஆவலுடன் காத்திருக்கிறோம். அதற்காகவாவது அவர் வருவார். கருத்தும் "அதே மாதிரியா..? " என்பதற்குள் முடித்து விடுகிறேன். :) உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. மிக அருமையாக இருக்கிறது போளி .பாதாம் கலந்து நல்ல சத்தான போளி.நான் பாதாம் கலந்து செய்தது இல்லை . பாதாம் தோலோடு செய்ய வேண்டுமா? ஊற வைத்து தோலை உரித்து விட்டு செய்தால் பாதாம் என் தோலை உரித்து விட்டாயே என்று கோபித்து கொள்ளுமோ!

    செய்முறை சொல்லிய விதம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை ரசித்து அருமையான கருத்துக்கள் தந்ததற்கு மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.

      பாதாம் வெறுமனே யாரும் சாப்பிட மாட்டேன் என்பதால் இப்படி இனிப்புடன் கலந்து விட்டேன்.

      / ஊற வைத்து தோலை உரித்து விட்டு செய்தால் பாதாம் என் தோலை உரித்து விட்டாயே என்று கோபித்து கொள்ளுமோ!/

      ஹா.ஹா.ஹா. நீங்களும், என்னை மாதிரியே யோசிக்க ஆரம்பித்து விட்டீர்கள். அதுவும் அப்படி சொன்னாலும் சொல்லும். எதற்கு வம்பு...? அதனால் தோலோடேயே போட்டு விட்டேன். இரண்டாவதாக அதிலும் ஏதேனும் சத்துக்கள் அடங்கியிருந்தாலும் வீணாக போகாதல்லவா..பிறகு அதற்கு வேறு கோபித்துக் கொள்ளும்.:)

      உங்கள் ஊக்கம் நிறைந்த பாராட்டுக்கள் என்னை உற்சாகம் கொள்ள வைக்கிறது உங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. //"இப்போது எப்படி.... நான் அழகாக இருக்கிறேனா?" எனக் கேட்கும் போளிகள். //
    அழகாய் இருக்கிறீர்கள். சுவையாகவும் இருப்பீர்கள்.
    சுவைக்க போகிறோம் எல்லோரும் மகிழ்ச்சிதானே உங்களுக்கு.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை ரசித்து படித்து நல்லதொரு கருத்துகள் தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.

      /அழகாய் இருக்கிறீர்கள். சுவையாகவும் இருப்பீர்கள்.
      சுவைக்க போகிறோம் எல்லோரும் மகிழ்ச்சிதானே உங்களுக்கு./

      கண்டிப்பாக.. அன்று நான் செய்ததை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற என் ஆவலினால்தான் அவைகள் என் விருப்பத்திற்கு உடன்பட்டு படங்கள் எடுக்க சம்மதித்தன.. இப்போது அவைகளும் "நீங்கள் அழகாகவும, சுவையாகவும் உள்ளீர்கள்" எனற உங்களது பாராட்டைக் கேட்ட பின் அகமகிழ்ந்து மனதுக்குள் நன்றி தெரிவித்திருக்கும். எனக்கும் நீங்கள் அனைவரும் போளிகளை எடுத்து சுவைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. இவ்வளவு திறமைகளை உள்ளடக்கிய
    அன்பின் கமலாவுக்கு மனம் நிறை
    வாழ்த்துகள். இத்தனை படங்களோடு
    அருமையாகப் பேசிக் கொண்டே போளி செய்தால்
    பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றுகிறது.
    அழகாக ஆறு போளிகள்.
    நான் துளியே துளி எடுத்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவையும் படங்களையும் படித்துப் பார்த்து நல்லதாக கருத்துக்கள் தெரிவித்திருப்பதற்கு என் மனங்கனிந்த மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

      /அழகாக ஆறு போளிகள்.
      நான் துளியே துளி எடுத்துக் கொள்கிறேன்./

      ஏன் சகோதரி.. அதுதான் மூன்று தட்டுகளாக படத்தை வைத்திருக்கிறேன். கடைசி தட்டில் சூடு ஆறிய போளிகளை நிறைய வைத்துள்ளேன். போளிகளை பார்வையால் எடுத்து உண்ண உங்களது உடல்நிலை தடையேதும் சொல்லப் போவது இல்லையே..:)

      நீங்கள் தந்த உற்சாக பின்னூட்டங்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. வணக்கம் கீதா சாம்பசிவம் சகோதரி

      தற்சமயம் உங்கள் கால் வலி எப்படி உள்ளது? வீட்டிற்குள் கொஞ்சம் நடக்கிறேன் என நீங்கள் கூறியது
      எனக்கும் கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது. விரைவில் முற்றிலும் வலி குணமாகி எப்போதும் போல் நீங்கள் நடக்க வேண்டுமென நானும் இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

      நீங்களும் தாராளமாக எடுத்து சாப்பிட்டிருக்கலாம். மூன்று தட்டுக்களிலும் தாராளமாகத்தானே வைத்திருந்தேன். :) துளிதான் எடுத்துக் கொண்டேன் என சகோதரி வல்லிசிம்ஹனுடன் சேர்ந்து சொல்லியுள்ளீர்கள். தங்கள் வருகைக்கும் நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. பண்டிகை நாட்களில் எல்லாம் செய்து முடிக்கும்
    நேரம் சாப்பிடக் கூடத் தோன்றாது.
    நீங்கள் சொல்லி, செய்து காட்டிய விதம் சிறப்பு.

    கடலைப் பருப்பு வறுத்து,அலம்பி வேக வைத்து
    சரியான வேலை கொள்ளும் போல இருக்கிறது.


    தி.நகரில் ஒரு போளி ஸ்டால் இருக்கும்
    அதில் வாங்கி வந்து சுடவைத்து நெய் தடவி
    சாப்பிட்ட நாட்களை
    நினைக்க வைத்து விட்டீர்கள்.

    மாமியாரும் ,நானுமாகப் போளி செய்வோம்.
    நீங்கள் சொல்வது போல,
    மைதா மாவை ஒதுக்காத நாட்கள்.

    கோதுமை மாவில் போளி செய்ததில்லை.
    மிக அருமையான செய்முறை அம்மா.
    நலமுடன் இருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /பண்டிகை நாட்களில் எல்லாம் செய்து முடிக்கும் நேரம் சாப்பிடக் கூடத் தோன்றாது./

      ஆமாம். முன்பெல்லாம் செய்வேன். நாள் முழுக்க வேலை,வேலை என அன்றைய நேரம் சரியாக இருக்கும். இப்போது நேரமே குறுகி விட்டது போல் தோன்றுகிறது ஒருவேளை உடல் உழைப்புகள் நிதான நடையில் தளர்ந்து விட்டதினால்,நேரம் அது பாட்டுக்கு மகிழ்ச்சியாக ஓடுகிறது என்னவோ..:)

      இந்த போளிக்கு கொஞ்சம் வேலை அதிகந்தான்... ஆனால் நான்கைந்து நாட்களுக்கும் மேலாக வைத்து சாப்பிட்டாலும் கெடுவதில்லை.

      இங்கும் வீட்டுக்கு அருகில் ஒரு போளி கடை உண்டு. சுடச் சுட பருப்பு போளி தேங்காய் போளி என சுட்டு எடுத்த பின் நெய் தடவி தருவார்கள். ஒன்று பதினைந்து ரூபாய்தான். இப்போது ஒரு வருடத்திற்கும் மேலாக எங்கும் வெளியில் செல்வதுமில்லை. வாங்கி வந்து சாப்பிடுவதுமில்லை. இப்படி மனதுக்கு வேண்டியதை வீட்டிலேயே தயார் செய்து சாப்பிடுகிறோம். அதன்படி வந்ததுதான் இந்த போளி.

      கோதுமை மாவில் நானும் இதுவரை செய்ததில்லை. நம் சகோதரி கீதா சாம்பசிவம் கூட கோதுமை மாவில் செய்யலாம் நன்றாக இருக்குமென சொல்லியுள்ளார்கள். ஒருநாள் செய்து பார்க்க வேண்டும். தங்கள் அன்பான பாராட்டுகளுக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. எந்த இனிப்புவகை செய்வதற்கும். வெல்ல அளவு மிக முக்கியம். அதை மட்டும் ரகசியமாக, வைத்துக்கொண்டுவிட்டீர்கள். 1 டம்ளர் தேங்காய் துருவல் + பருப்பு பொடிக்கு 1/2 டம்ளர் வெல்லம் என்பதுபோன்ற அளவு நிச்சயமாக வேண்டும்.

    பாதாம் பருப்பு கூடுதல் சுவைதான். அது கண்டிப்பா வேணும் என்பதில்லை.

    நெய் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது (ஆறினால்உறைந்துவிடும்) நல்ல பாயின்ட்.

    செய்முறையும் படங்களும் மிக அருமை. நான் மைதா பிசையும்போது சிறிது மஞ்சள்கொடி சேர்த்துக்கொள்வேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /எந்த இனிப்புவகை செய்வதற்கும். வெல்ல அளவு மிக முக்கியம். அதை மட்டும் ரகசியமாக, வைத்துக் கொண்டு விட்டீர்கள்/

      ஹா.ஹா.ஹா அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. உங்களைப் போல நல்ல அளவுடன் சொல்ல எனக்குத் தெரியவில்லை. அவ்வளவுதான். எனக்கு எப்பவுமே கண்ணளவுதான். அதனால்தான் அத்தனையையும் படமாக போட்டு காண்பித்து விட்டேன். ஜீனி போட்டு செய்யும் இனிப்புகளில் இத்தனை டம்ளர் என அளவு சொல்வேன். தவிரவும் இது அனைவருக்கும் எப்போதும் செய்யும்/தெரிந்த பக்குவந்தானே எனவும் நினைத்தேன்.

      பாதாம் பருப்பு தேவையில்லை. இந்த தடவைதான் ஒரு வித்தியாசமாக அதையும் சேர்த்தேன். எப்பவும் க. பருப்புடன், தேங்காய் போளிதான் செய்வேன்.

      நெய் பற்றி நான் சொல்லியிருப்பது ஆமோதித்ததற்கு நன்றிகள்.

      நானும் மைதா மாவுடன் மஞ்சள் தூள் சேர்த்துள்ளேனே ..!போளி தயாரிப்பு படங்களும், செய்முறையும் மிகச் சிறப்பு என கூறியமைக்கு என் மனமார்ந்த மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. பாதாம் சேர்க்கவில்லைனா, வறுத்த கடலைப்பருப்பில் வெட்டித்தளைக்கும் வெந்தீரைக் கொட்டி பாத்திரத்தை மூடி இரண்டு மணி நேரம் கழித்துப் பார்த்தால் கடலைப்பருப்பு வெந்திருக்கும். நீரை வடித்துவிட்டு மிக்சியில் பொடித்துவிடலாம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /கடலைப்பருப்பில் வெட்டித்தளைக்கும் வெந்தீரைக் கொட்டி பாத்திரத்தை மூடி இரண்டு மணி நேரம் கழித்துப் பார்த்தால் கடலைப்பருப்பு வெந்திருக்கும். நீரை வடித்துவிட்டு மிக்சியில் பொடித்துவிடலாம்/

      அட இதுவும் நல்ல ஐடியாவாக உள்ளதே.. அடுத்த தடவை பண்ணும் போது இப்படி முயற்சித்து பார்க்கிறேன். ரொம்ப நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. மிக ரசனையான செய்முறை. ஜடப்பொருட்கள் என நினைக்காமல் எல்லாப் பொருட்களையும் உயிர் உள்ளது போல் நினைத்து அவற்றுடன் பேசிக்கொண்டே செய்த விதம் அருமை. நானும் கடலைப்பருப்பு போளி இப்படித்தான் செய்வேன், பாதாம் எல்லாம் சேர்த்தது இல்லை. இனி பண்ணினால் பாதாமும் சேர்த்துப் பண்ணிப் பார்க்கிறேன். தனி பாதாமை ஊற வைத்துத் தோலுரித்து அதனுடன் கொஞ்சம் கோவா, சர்க்கரை, தேங்காய் சேர்த்துப் பூரணமாக்கி மைதாமாவைப் பிசைந்து கொண்டு சோமாசி மாதிரி செய்துப் பொரித்து எடுத்திருக்கேன். நடுவில் நானும் மைதா சேர்க்காமல் இருந்தேன். கோதுமை மாவில் போளி செய்திருக்கேன். அதைத் தட்டி எடுப்பதும் எளிது. இட்டும் பண்ணலாம். இப்போதெல்லாம் எப்போவானும் மைதா சேர்க்கிறேன். போளி எல்லாம் அடிக்கடி பண்ணுவது இல்லை என்பதால் மைதாவுக்குச் செலவு இல்லை. பராட்டா எல்லாம் கண்டிப்பாய் கோதுமை மாவில் தான். மைதாவில் பண்ணவே மாட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை ரசித்துப் படித்து பாராட்டியமைக்கு என் மன மகிழ்வுடன் கூடிய நன்றிகள் சகோதரி.

      /தனி பாதாமை ஊற வைத்துத் தோலுரித்து அதனுடன் கொஞ்சம் கோவா, சர்க்கரை, தேங்காய் சேர்த்துப் பூரணமாக்கி மைதாமாவைப் பிசைந்து கொண்டு சோமாசி மாதிரி செய்துப் பொரித்து எடுத்திருக்கேன். /

      நல்ல குறிப்பு. நானும் ஒரு முறை இப்படி செய்து பார்க்கிறேன்.

      /கோதுமை மாவில் போளி செய்திருக்கேன். அதைத் தட்டி எடுப்பதும் எளிது. இட்டும் பண்ணலாம்./

      நானும் கேள்விபட்டுள்ளேன். இதுவரை செய்ததில்லை. இந்த மைதா மாவில்தான் இடு போளியும் செய்துள்ளேன். முன்பு மாதிரி மைதாவை நானும் அதிகம் சேர்ப்பதில்லை. கோதுமை மாவுதான் தோசைகளுக்கும். தங்கள் அன்பான கருத்து பகிர்வுகளுக்கும் மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  13. அனைத்து பொருட்களும் பேசுவது போல... மிகவும் ரசித்தேன்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை ரசித்து நல்லதொரு ஊக்கம் அளிக்கும் வகையில் கருத்தை தந்தமைக்கு என் மனங்கனிந்த மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  14. பாட்டுக்கு ஒரு போளி என்றால்
    போளிக்கு எத்தனை பாட்டு?..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /பாட்டுக்கு ஒரு போளி என்றால்
      போளிக்கு எத்தனை பாட்டு?./

      ஆகா, அருமையான பாடலைப் பாடி போளிப் பதிவை ரசித்தமைக்கு நன்றி சகோதரரே. பின் வரும் கவிதைப் பாடலையும் ரசித்துப் படிக்கிறேன். மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  15. இதோ அந்தப் பாட்டு!..

    போலி அல்ல என்று சொல்லி
    வாளி நிறைய வந்தது..
    போளி வந்த வாளி பொழுதில்
    காலி ஆகிப் போனது..

    வேலி காத்த ஓணான் போல்
    போளி காத்த பொழுதுகள்
    கூலி ஏதும் தாராமல்
    போளி தின்ற நினைவுகள்..

    க. பருப்பும் பா. பருப்பும்
    கலந்திருக்கும் போளி..
    கட்டி வெல்லம் சுட்டி போல
    கனிந்திருக்கும் போளி..

    தஞ்சாவூர் போளி இது
    தகதகக்கும் போளி..
    கீழவாசல் பேச்சி முத்து
    கை மணக்கும் போளி.

    வாயிலிடக் கரையும்
    வயிற்றில் இது நிறையும்..
    தந்த சுவை தித்திப்பினால்
    மனசும் சேர்ந்து நிறையும்..
    ஃஃஃ

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆஹா. அருமையான கவிதை. ஒவ்வொரு வரியும் அருமை. இப்போதுதான் சகோதரி கோமதி அரசு அவர்களின் பதிவில் அவர் பதிவையும், பேரனையும் சிறப்பித்து ஒரு கவிதை தந்துள்ளீர்கள். அதைப்பார்த்து ரசித்து விட்டு வந்ததும் இங்கேயும் ஒரு அற்புதமான கவிதை. சகோதரி கூட உங்களை வரகவி என குறிப்பிட்டுள்ளார். உண்மையிலேயே நீங்கள் வரகவிதான்.பாடலுக்கேற்ற வரிகள் தானாகவே தங்களிடம் துள்ளி வந்து விழுகின்றன. இந்த சிறப்பு சிலருக்கே அமையும். உங்கள் அருமையான தமிழ் புலமைக்கும், நினைத்தவுடன் கவி பாடும் திறமைக்கும் என்னுடைய பணிவான வந்தனங்கள். மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  16. தஞ்சாவூர் கீழவாசலில் திரு. பேச்சிமுத்து என்பவரது போளி வெகு பிரசித்தம். தினமும் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் செய்யவே மாட்டார்...

    அவர் செய்த போளி அவரை வாழ்வில் உயர்த்தியது..

    சில வருடங்களுக்கு முன்பு இவரைப் பற்றி ஊடகங்களில் செய்திகள் வெளியாகின...

    மிகவும் நல்லவர்... எத்தனை ரூபாய்க்கு போளி வாங்கினாலும் தனியாக இரண்டை மடித்து பிள்ளைகளிடம் கொடுங்கள் என்பார்...

    இப்போது எப்படியிருக்கின்றார் என்று தெரியவில்லை..

    அவரது நல்வாழ்விற்கு இறைவன் துணையிருப்பானாக...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      அருமையான தகவல்கள். அவரைப்பற்றி தாங்கள் சொல்லும் விதத்திலேயே அவரின் நல்ல குணங்களை உணர முடிகிறது.

      /மிகவும் நல்லவர்... எத்தனை ரூபாய்க்கு போளி வாங்கினாலும் தனியாக இரண்டை மடித்து பிள்ளைகளிடம் கொடுங்கள் என்பார்.../

      இந்த ஒரு மனிதாபிமான ஒரு நல்ல குணமே அவரையும், அவர் குடும்பத்தையும் நல்ல நிலைமைக்கு உயர்த்தியிருக்கும்.

      /அவரது நல்வாழ்விற்கு இறைவன் துணையிருப்பானாக./

      நானும் உங்களுடன் சேர்ந்து அவரது நல் வாழ்விற்காக மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

      நல்ல தகவல்களை தந்தமைக்கு மிக்க நன்றி சகோ.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  17. தஞ்சாவூர் அசோகா,
    தஞ்சாவூர் சந்திரகலா,
    தஞ்சாவூர் நெய் புட்டு,
    தஞ்சாவூர் நெய் முறுக்கு,
    தஞ்சாவூர் சாம்பார்,
    தஞ்சாவூர் காரக் குழம்பு,
    தஞ்சாவூர் இட்லி,
    தஞ்சாவூர் காரச் சட்னி,
    தஞ்சாவூர் மணிக் கொழுக்கட்டை,
    தஞ்சாவூர் நெய்ச் சோறு,
    தஞ்சாவூர் கடப்பா,
    தஞ்சாவூர் தயிர் வடை,
    தஞ்சாவூர் டிகிரி காஃபி,

    இன்னும் பலப்பல.. இந்த வரிசையில் -
    தஞ்சாவூர் போளி..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      இன்றைய என் பதிவான போளிதான் எத்தனை விதமான விஷயங்களை தருகிறது.

      ஆஹா.. தஞ்சாவூரின் சிறப்புகளை அறிந்து கொண்டேன். இன்றைய போளியும் தஞ்சாவூர் சிறப்பில் சேர்ந்ததற்கு பெருமகிழ்வு அடைகிறேன். தங்கள் அன்பான கருத்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் சகோ.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  18. ஆஹா... போளி! எனக்கு மிகவும் பிடித்தது! பொதுவாக பாதாம் சேர்த்துச் செய்வதில்லை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆமாம்.. போளி முக்கால்வாசி அனைவருக்கும் பிடித்தமானதுதான். உங்களுக்கும் பிடித்தது என்பதையறிந்து மகிழ்ச்சி.பாதாம் எப்போதும் சேர்ப்பதில்லை. ஒரு வித்தியாசத்திற்காக சேர்த்தேன்.

      பதிவை படித்து தந்து அன்புடன் தந்த கருத்துகளுக்கு மிக்க நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  19. கொஞ்சம் பணக்கார போளியாக இருக்கும் போலிருகிறதே? பாதாம் பருப்பெல்லாம் சேர்த்திருக்கிறீர்கள். நன்றாக வந்திருகிறது. எங்கள் யூ ட்யூபில் போளி செய்முறை போட்டிருந்தோம். எ.பி.யில் பகிர நினைத்திருந்தேன்.
    https://www.youtube.com/watch?v=WZojsrkxsqU&t=36s

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /கொஞ்சம் பணக்கார போளியாக இருக்கும் போலிருகிறதே? பாதாம் பருப்பெல்லாம் சேர்த்திருக்கிறீர்கள்/

      ஹா.ஹா.ஹா. உண்மைதான்... ஏழைகளாகிய நாமெல்லோரும் இப்போது பாதாம் பருப்பெல்லாம் விரும்பி உடலுக்கு நல்லதென சாப்பிட ஆரம்பித்து விட்டோமே :)

      சும்மா ஒரு மாறுதலுக்காக சேர்த்திருக்கிறேன் சகோதரி. குழந்தைகள் தனியாக தந்தால் சமயத்தில் வேண்டாமென்கிறார்கள். அதனால் இனிப்புடன் சேரட்டுமென இதில் சேர்த்துள்ளேன்.

      தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. நீங்கள் தந்த சுட்டிக்கும் சென்று படிக்கிறேன். எ.பி யிலும் உங்கள் பகிர்வை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  20. போளி குறிப்பு மிக அருமை!
    நானும் இப்படித்தான் செய்வேன். பாதாம்பருப்பு சேர்ப்பது நல்ல யோசனை. குறிப்பு அருமை என்றால் அதற்கான எல்லோரது பின்னூட்டங்களும் போளியை விடவும் அதிக சுவையாக இருக்கின்றன!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      பதிவை ரசித்துப் படித்து பாராட்டியமைக்கும், பின்னூட்டங்களை படித்து ரசித்ததற்கும் என் பணிவான நன்றிகள்.நானும் எப்போதும் போளிக்கு பாதாம் சேர்த்ததில்லை. ஒரு வித்தியாசத்திற்காக இம்முறை சேர்த்தேன்.

      உங்களை போன்றோரின் வரவும், ஊக்கம் நிறைந்த வார்த்தைகளும்,எனக்கு தன்னம்பிக்கையையும் தருமென நிச்சயமாக நம்புகிறேன். மிக்க மகிழ்வும் அடைந்தேன் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  21. வணக்கம் நலம் தானே?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      நலந்தான் சகோதரி. நீங்கள் எப்படி உள்ளீர்கள்? இந்த வார இறுதியில் நெருங்கிய உறவுகளின் வருகை. நேரமும் பொழுதும் அவர்களுடன் சரியாக போனது. அதனால் வலைத்தளம் வர இயலவில்லை. இன்றுதான் ஒவ்வொருவர் பதிவுகளுக்கும் வந்து கொண்டிருக்கிறேன். அன்புடன் வந்து விசாரித்தமைக்கு மிக்க நன்றி சகோதரி.

      அன்புடன்
      கமலா ஹரிஹர.

      Delete
  22. என் கேள்விக்கு பதில் தந்தமைக்கு நன்றி.
    நண்பர்கள் தளங்களில் உங்களை பார்க்கவில்லையே என்று கேட்டேன்.
    உறவுகளின் வருகை நேரமும் ,பொழுதும் சரியாகி விடும். நேரம் இருக்கும் போது படித்து பாருங்கள் சிறு பதிவுதான்.

    https://mathysblog.blogspot.com/2021/08/blog-post_8.html

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும், தங்கள் பதிவு குறித்த தகவல்களுக்கும் மிக்க நன்றி.

      இப்போதுதான் இந்த கருத்தை பார்க்கிறேன். தாமதமாக பார்த்தமைக்கு முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இரு தினங்களாக கொஞ்சம் வேலை அதிகம். (நாக சதுர்த்தி, கருட பஞ்சமி) இன்றுதான் மறுபடியும் வலைத்தளத்திற்கு வந்து நண்பர்கள் பதிவுகளை பார்க்கிறேன். தங்கள் பதிவை விரைவில் அவசியம் படித்துப் பார்க்கிறேன்.உங்கள் அன்பான அழைப்பிற்கும், கருத்துக்கும் மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள்.

      அன்புடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  23. அன்பின் சகோதரி...
    நலம் தானே... தங்களது பதிவு வெளியாகி - வெகு நாட்கள் ஆகின்றன...

    வாழ்க நலமுடன்..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் அன்பான வருகைக்கும், அக்கறையான விசாரிப்புக்கும் என் மனம் நிறைந்த மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

      நலமாகத்தான் உள்ளேன். உறவுகளின் வருகையிலும், வீட்டின் ஆடி மாதங்கள் வரும் தெய்வ விஷேடங்கள் காரணமாகவும், வலைப்பக்கம் வந்து அதிக நேரங்கள் எடுத்துக் கொள்ள இயலாமல் போய் விட்டது. உங்களது இரு பதிவுகளுக்கும் வராமல் போனதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தங்கள் அன்பான வாழ்த்துக்களுடன் என் பதிவுகளும் வெளிவர இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். அக்கறையுடன் வந்து விசாரித்தமைக்கு மீண்டும் மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  24. நாடு வாழ்க..
    நாடெங்கும் நலம் வாழ்க...

    சுதந்திர தின நல்வாழ்த்துகளுடன்..
    துரை செல்வராஜூ..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்களும் மிக்க மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

      தங்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  25. தாங்கள் எனது தளத்திற்கு வந்து நலம் கூறியதற்கு மகிழ்ச்சி...

    அத்துடன் வேறொன்று...
    ஆடிப் பூரம் பதிவில் அம்பிகைக்கு சூட்டியுள்ள தமிழ் மாலையையும் அவசியம் காண வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும், பதில் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

      நேற்று இரவுதான் இங்கு வந்திருக்கும் இந்த கருத்துகளைப் பார்த்தேன். கண்டிப்பாக தங்கள் பதிவுக்கு வந்து தங்களின் அருமையான கவிதையை படிக்கிறேன். உங்கள் பதிவில் இது படிக்காமல் விடுபட்டு போனது நினைவிருக்கிறது. கண்டிப்பாக இன்று பதிவுக்கு வருகிறேன்.போன வாரம் விடுபட்டு போன அனைவரின் பதிவுகளுக்கும் இப்போதுதான் ஒவ்வொன்றாக வந்து கொண்டுள்ளேன். தங்கள் அன்பான அழைப்புக்கு மிக்க நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  26. போளி இன்னும் காலியாகலையா?

    புதிய இடுகை எதுவும் வரலையே

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும்,அன்பான விசாரிப்புக்கும் மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

      /போளி இன்னும் காலியாகலையா?/

      ஹா.ஹா.ஹா. புதிய இடுகை தங்களின் ஊக்கமிகுந்த வார்த்தைகளினால் தயாராக வேண்டும். இறைவன் அதற்கான நேரத்தை வகுத்து தரவும் வேண்டிக் கொள்கிறேன். உங்கள் அக்கறையான அன்பிற்கு மிக்க நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  27. என்ன ஆச்சு கமலா? உடம்பு இன்னமும் சரியாகலையா? விரைவில் உங்களை எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
      தாங்கள் முற்றிலும் நலமாகி வருகிறீர்களா? உங்கள் அன்பான விசாரிப்பு என் உடம்பை குணமாக்கி வருகிறது.இன்னமும் மருந்துகள் சாப்பிட்டுதான் வருகிறேன். வாய்க்கு ஒன்றும் பிடிக்காமல் இருக்கிறது. என்னவோ ஒரே புலம்பலாக பதில் சொல்ல வேண்டிய நிலை வந்து விட்டதே எனவும், உங்கள் பதிவுகளுக்கு வந்து நலம் விசாரிக்கிறேன் என்ற திருப்தியும், என் பதிவில், இந்த கருத்தை கவனித்து பதில் சொல்ல தாமதமாகி விட்டது. என் தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete