Monday, April 27, 2015

அந்த நால்வரின் மனம்... ( பகுதி 9)


முந்தைய பகுதியின் முடிவு

சரி! இவனை இங்கே எப்படி சந்தித்தீர்கள்? என்ற பிரபாகரை புன்னகையுடன் பார்த்தவாறு நான் ஆரம்பித்துதான் இருக்கிறேன் இன்னமும் முடிக்கவில்லை! அதற்குள் அவசரபடுகிறீர்களே.? என்றவள்  மீண்டும் தொடர்ந்தாள்.

இன்றைய தொடர்ச்சி..

விட்ட இடத்திலிருந்து மறுபடியும் ஆரம்பித்தாள் சங்கவி…!

சில நாட்களுக்கு முன் ஒரு உறவின் திருமணத்திலே எங்க அப்பா, கார்த்திக்கோட அப்பாவை சந்திருச்சிக்கார். இருவரும் மனம்விட்டு பேசும் போது, என் திருமணம் முடிவான விசயத்தை, அப்பா சொல்லவும், ”என் பையனுக்கும் பெண் பார்த்து முடிவாக இருப்பதாவும், ௬ட நாங்களும், வரவேண்டும்”! என்று கார்த்திக் அப்பா கேட்டுக் கொண்டதினால், நானும் அப்பாவும் இவருடன் உங்க அருணா வீட்டுக்கு சென்றிருந்தோம். போன இடத்திலே பெண் பார்த்த பிறகு நிறைய விசயங்கள் ஏன்! எல்லா விஷயமும், தெரிஞ்சு போச்சு! புரிஞ்சு போச்சுன்னும் சொல்லலாம். கார்த்திக்தான் எல்லா விபரங்களையும் என்கிட்டே சொல்லி புரிய வைத்தார். நீங்க அன்னைக்கு எங்கிட்டே தயங்கி தயங்கி என்ன சொல்ல வந்தீங்கன்னு நா கார்த்திக்கோட அருணாவை பொண்ணு பாத்துட்டு வந்தபிறகு புரிஞ்சுகிட்டேன். இத்தனை விபரமும், உங்க கிட்டே நானே சொல்லனும்தான், நானே நேரிலே இங்க வந்தேன். நா மட்டும் தனியா வரலே! ௬ட ஒரு துணையையும் ௬ட்டிகிட்டு வந்திருக்கேன்.! என்றவள் எழுந்து அருகிலிருக்கும் அறைக்குள் சென்று தான் அழைத்து வந்த ஆளை கண்டதும் பிரபாகர் வாயடைத்துப் போனான்
.
நீயா? எப்படி அருணா? என்னாலே நம்பவே முடியில்லேயே! பிரபாகர் சந்தோசத்தில் திகைத்தான்.

அருணா, அவனை மகிழ்ச்சியாய், பார்த்தபடி! எப்படியோ, உங்க நண்பராலே நம்ம பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்தாச்சு..!!இவங்கதான், சங்கவின்னு எனக்கும் தெரியாது..! ஆனா அன்னைக்கு என்னை கார்த்திக் பொண்ணு பார்க்க வந்திருந்த போது அவருக்கு நெருங்கிய உறவுன்னுதான் சங்கவியை அறிமுகபடுத்தினாங்க..! அதானாலே இன்னிக்கு. சங்கவி அவங்க அப்பாவோட வந்து, “என்னை கொஞ்சம் வெளியிலே ௬ட்டிகிட்டு போறேன்னுசொன்னதும், எங்க அப்பாவும் சரின்னு அவங்களோட அனுப்பிட்டாங்க..! வரும் வழியிலே, “சங்கவி எல்லா விஷயத்தையும் சொல்லி, என்னை சமாதானபடுத்தி, உங்க கல்யாணத்தை தடையில்லாமே நாங்க முடிச்சு வைக்கிறோம்  அப்படினாங்க..!என்றாள் சங்கவியை நன்றியுடன் பார்த்தபடி..!

அருணா..! இன்னும் நம்ப வீட்டுக்கு எந்தவொரு விஷயமும் தெரியாது..! இனிமேதான் பிரச்சனையே எப்படியெல்லாம் பெருசாக போகுதோ..! என்னவோ..? என்றான் கவலையாக பிராபகர்.

அந்த கவலையும் உங்களுக்கு வேண்டாம்..! இதற்குள் உங்க  வீட்டுக்கும், அருணா வீட்டுக்கும் எல்லாவிபரத்தையும் சொல்லி எல்லா விஷயமும் எல்லோரும் புரிந்துகொண்டிருப்பார்கள்…! அதற்கான ஏற்பாடுகளை என் அப்பாவை செய்ய சொல்லி விட்டுதான் வந்திருக்கிறேன்..! அப்பாவும் என் விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்து எல்லாவற்றிக்கும் ஒத்துக்கொண்டு விட்டார்..! பிரபா..! உங்களுக்கும் உங்க அண்ணாவுக்கும் எங்க அப்பா ஆரம்பிச்சிருக்கற கம்பெனியிலே நிச்சயம் வேலை உண்டு. உங்களுக்கு செய்யப்போறதா, சொன்ன உதவியெல்லாம் கண்டிப்பாக உங்களுக்கு உண்டு..! அதனாலே நீங்க ஆசைபட்டபடி உங்க கல்யாணம் கண்டிப்பா நல்லபடியா நடக்கும்..!! கவலைப்படாதீங்க..! ஆறுதலாக சொன்ன சங்கவியை பார்த்து கை ௬ப்பினான் பிரபாகர்..!

சங்கவி..! உங்ககிட்டே என்னசொல்றதுன்னு எனக்குத் தெரியலே..! நீங்க செஞ்ச இந்த உதவிக்கு நான் திருப்பி என்ன கைமாறு செய்யப்போறேன்னு தெரியலே..! உணர்ச்சி வசப்பட்டதால், சற்று கண் கலங்கி பேச நாவெழாமல் தடுமாறினான் பிரபாகர்..!

பிரபா..!தயவுசெஞ்சு இப்படியெல்லாம் பேசி என்னை பிரிக்காதீங்க..! எனக்கு ௬டப்பிறந்தவங்க யாருமேயில்லை..! அருணாவை என் ௬டப்பிறந்தவளா நினைச்சு, இந்த உதவியெல்லாம் நான் செய்றேன்னு நினைச்சு சந்தோசபடுங்களேன்..!என்றதும் அருணா சட்டென்று கண்களில் நீர் வழிய, சங்கவியை அணைத்துக்கொண்டாள்.

சங்கவி..! உங்களைப் போல் ஒரு உடன்பிறப்பு அமைய நான் கொடுத்து வச்சிருக்கனும்..! நீங்க செய்றது உதவி இல்லே..! தியாகம்..! அதுவும் உங்க வாழ்க்கையையே.. எனக்காகஎன்று மெளனமாக அழுத அருணாவை சங்கவியும், கண்கலங்க அணைத்துக்கொண்டாள். பிறகு சட்டென்று சுதாரித்தவளாய், “அருணா, இதோ, பாருங்க..! நீங்க என்னை பத்தியே பேசிறீங்க..! கார்த்திக்கை நாம எல்லோரும் மறந்தே போயிட்டோம்..! அவர் இல்லேன்னா, இப்படியெல்லாம் உங்க வாழ்க்கையிலே, பல திருப்பங்கள் நடந்தே இருக்காது..!என்றதும் பிரபா கார்த்திக்கின், கைகளை அன்போடு இறுக பிடித்தபடி, ஏதும் பேச வராமல், தத்தளித்தான்..!

போதுமடா..! சாமி..! நீ மறுபடியும் என்கிட்டேயிருந்து, உன் நன்றி புராணத்தை ஆரம்பிச்சிடாதே..!”’ தாங்க முடியலே..! இப்படி பேசிகிட்டேயிருந்தா, எனக்கு போரடிச்சு, நான் பேசாம அருணாவையே கல்யாணம் பண்ணிக்கிறேன்னு, எங்க அப்பாகிட்டே சம்மதம்  சொல்லிடுவேன்..!என்று கிண்டலாக கார்த்திக் சொன்னதும் அனைவரின் முகத்திலும் சிரிப்பு பூத்தது..!


தொடரும்

6 comments:

  1. அவங்க ரெண்டு பெரும் சேர்ந்துட்டாங்க... கார்த்திக்-சங்கவி ஜோடி சேர மாட்டாங்களா?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.

      தாங்கள் முதல் வருகை தந்து கருத்துப்பகிர்வு தந்தமைக்கு, என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

      ஒரு செயலை அனுமானிக்கும் திறன் நமக்கு எப்போதுமே அதிகம் போலும்.!

      தினமும் தொடர்ந்து வந்து கருத்திடுவதற்கு நன்றிகள்.இனியும் தொடர்ந்திட்டால், அதி மகிழ்ச்சியுடன் ௬டிய நன்றிகள்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. அடடே ஒரு ஜோடி ரெடி அடுத்த ஜோடி எப்போ ? நாளைக்கு வருகிறேன் நலம்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.

      தாங்கள் வருகைக்கும், கருத்துப்பகிர்வு தந்தமைக்கும், என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

      கதையின் முடிவறிய நாளையும் வருகிறேன் என்றமைக்கு மகிழ்ச்சி சகோதரரே.
      தினமும் தொடர்ந்து வந்து கருத்திடுவதற்கு நன்றிகள்.இனியும் தொடர்ந்திட்டால், அதி மகிழ்ச்சியுடன் ௬டிய நன்றிகள்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. இப்போது அடுத்த பகிர்வு புரிந்தது... (இந்தப் பகுதியை வாசிக்க தவறி விட்டேன்...)

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.

      தங்கள் வருகைக்கும், கருத்துப்பகிர்வு தந்தமைக்கும், என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

      இன்று வந்து இந்தப் பகுதியையும் படித்து கருத்திட்டமைக்கு, மனம் நிறைந்த மகிழ்ச்சியோடு என் பணிவான நன்றிகள்.

      நாளையும் தொடர்ந்து படித்து கருத்திட வேண்டுகிறேன்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete