தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் கடைந்த சரிதம்.
ஒரு காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும்
சண்டை மிகுதியாக, அசுரர்களால் தேவர்கள் அடித்து விரட்டியடிக்கப்பட்டனர். எதிர்த்துப் போரிட சக்தி இல்லா தேவர்கள் ௯டி யோசிக்கும் போது, பிரம்மன், இந்திரன், நாரதர் போன்றோர் தேவர்களின் நன்மையை
உத்தேசித்து, “பாற்கடலை கடைந்து அதிலிருந்து வரும் அமிர்தத்தை
உண்டால், தேவர்கள் மிகுந்த பலமடைவர். அதன் பின் அவர்களை ஜெயிக்க யாராலும்
இயலாது.!” எனச் சொல்ல, தேவர்கள் பாற்கடலில் அமிர்தம் கடையும்
யோசனைக்கு சம்மதித்தனர். ஆனால், பலமுடன் இருக்கும்
அசுரர்களும் தங்களுடன் சேர்ந்து ஒத்துழைத்தால், காரியம் விரைவாகவும், சுலபமாகவும் முடியும் என தேவர்கள் அனைவரும் ஏக மனதாக நினைக்க தேவர்கள்
சார்பில் அசுரர்களுக்கும் அழைப்பு அனுப்பப் பட்டது.
அழைப்பை பெற்ற அசுரர்களும் ஒன்று ௯டி, “இந்த தேவர்களுக்கு உதவுவது போல் நாமனைவரும் அவர்களுடன் ஒன்று சேர்ந்து அமிர்தம்
கடைவோம். அமிர்த கலசம் கையில் கிடைத்ததும், தட்டிப் பறித்துக் கொண்டு, அதன் பலனை முழுவதுமாக நாம்
அடைந்து விடலாம். ஏற்கனவே பலமிழந்த தேவர்களுக்கு ஒரு சொட்டு ௯டத்
தராமல் நாமே அனைத்தையும் உண்டு விடலாம். பாவம் தேவர்களுக்கு வேலை
மட்டும் மிஞ்சும். அமிர்தம் முழுவதும் நமக்குத்தான்.! அதன் பின் அமிர்த பலத்தின் பெரும் உதவிகொண்டு அவர்களை அடித்துத் துரத்தி
விட்டு மூவுலகத்தையும் நாமே ஆண்டு வரலாமென", அசுரர்களின் குரு சுக்ராச்சாரியாரின்
முன் அழகாய் முடிவெடுத்தனர்.
மஹா விஷ்ணுவின் உறைவிடமாகிய திருப்பாற்கடலில், அமிர்தம் கடைய அவரின் அனுமதியோடு, “அமிர்தம்
உங்களுக்குத்தான்.! அசுரர்களின் முழு உழைப்போடு அவர்களின் கண்
முன்னாலேயே, அமிர்தம் மொத்தமும் உங்களை வந்தடையும். கவலை வேண்டாம்.! " என்ற பரந்தாமனின் ஏக ஆசியோடு, தேவர்களும், அசுரர்களும் ஒன்று கலந்து குறிப்பிட்ட வேளையில் ஒரு மனதாக இறங்கினர்.
பெரிய மலையாகிய “மந்திர கிரியை” மத்தாக அமைத்துக்கொண்டு. பரமேஷ்வரனின் கழுத்தை அலங்கரிக்கும்
நாகாபரணமாகிய “வாசுகி” என்ற பாம்பை கயிறாகக்
கொண்டு, நல்லதொரு நாளாம் தசமி திதியன்று, மும்மூர்த்திகளையும் தொழுதவாறு தேவர்கள் அமிர்தம் கடையத் துவங்கினர்.
ஒரு கால கட்டத்தில் மந்தரகிரி மலை பாற்கடலில் மூழ்கத் தொடங்க, தேவர்கள் எம்பெருமான் நாராயணனைத் துதிக்க, மகாவிஷ்ணு பெரும் ஆமை வடிவை எடுத்து மந்தரகிரியின் அடிபாகத்தை தன் முதுகில் தாங்கிப் பிடித்தவாறு மலை மூழ்குவதை தவிர்த்து நிறுத்தினார். இதுவே அனைவரையும் காப்பதற்காக மகாவிஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களில் இரண்டாவது அவதாரமாகிய ௯ர்ம அவதாரம் ஆகும். தேவர்கள் நாராயணனை மேலும் துதித்தபடி தெய்வ சிந்தனையுடன் இருந்தனர்.
வாசுகியின் சிரமத்தைக் குறைக்க அதன் வால் பகுதியை பிடிக்கச் சொல்லி அசுரர்களை தேவர்கள் கேட்டுக்கொண்டும், ஆணவத்தின் பிடியிலிருந்த அசுரர்கள் அதைக் கேளாது வாசுகியின் தலைப் பகுதியை பிடித்துக் கொண்டனர். அவர்களின் அசுர பலத்தின் அழுத்தமும், மூர்க்கதனமாக இழுக்கும் வேதனையும் பொறுக்காது, எரிக்கும் விஷத்தை வாசுகி கக்கியது. மூவுலகினையும், அழிக்கும் ஆலகால விஷமாக அது பரவி உருவாக, அதன் பிடியிலிருந்து தப்பிக்க, அனைவரையும் காத்தருள சர்வேஸ்வரனை தேவர்கள் துதித்துப் போற்ற, கைலாய நாதனாகிய ஈஸ்வரன் அந்த விஷத்தை எடுத்து வருமாறு நாயன்மார்களில் ஒருவரான சுந்தரருக்கு ஆணைப் பிறப்பிக்க, சுந்தரர் விரைந்து பாற்கடல் சென்று அந்த விஷத்தை தன் சக்தியினால், உருட்டி நெல்லிக்கனியளவு கையில் ஏந்தி வந்து சர்வேஸ்வரரிடம் சமர்ப்பித்தார்.
சுந்தரர் கொண்டு தந்த விஷத்தை யாருக்கும் தொந்தரவின்றி அழிக்க
எண்ணம் கொண்ட ஈஸ்வரன் தன் வாயிலிட்டு அமுதமென விழுங்கினார். அவர் வயிற்றினில் இருக்கும் அண்ட சராசரங்களையும் அதில் வாழும் எண்ணற்ற
கோடி ஜீவன்களையும் காக்க வேண்டி, இறைவனின் அருகிலிருந்த பார்வதி
தேவி சட்டென தன் திருக்கரத்தால், நாதனின் கழுத்திலேயே
“விஷம் அமிர்தமாக மாறட்டும்” என வேண்டிக்கொண்டு
அவர் கழுத்தை தடவ தேவியின் வேண்டுதலால், விஷம் அமிர்தமாக மாறி
ஈஸ்வரனின் திருகழுத்தை கருநிறத்தோடு அலங்கரித்தது. அன்றிலிருந்து
இறைவன் "திருநீலகண்டன்” எனப் பெயர் பெற்றார். இப்படியாக அவ்விஷமானது இறைவனுக்கும் சிரமம்
ஏற்படுத்தாது, எவ்வுயிருக்கும் ஆபத்தை விளைவிக்காது அழிந்து
போனது.
பாற்கடலிலிருந்து அனேக விதமான ஔஷதங்கள் உதயமாகி, தேவந்திரன் மகாவிஷ்ணு, மற்றும் அனேகரிடம் தத்தம் விதிப்படி சரணடைந்தன. இறுதியில் அமிர்த கலசம் ஏந்தி மகாலட்சுமி பாற்கடலிலிருந்து உதயமாக, தேவர்களுடன் போரிட்டு ஜெயித்து அக்கலசத்தை அசுராள் பிடுங்கிச்
சென்றார்கள். தேவர்கள் செய்வதறியாமல் திகைத்து நிற்க,
மகாவிஷ்ணு மாயையாகிய மோகினி அவதாரத்துடன் வந்து அசுரர்களை மயக்கி ஏமாற்றி, பின் தேவர்களுக்கு அமிர்தம் பரிமாறி அவர்களின்
தேக பலக்குறையை நிவர்த்தி செய்தார். அதில் சுவர்பானு
என்பவன் அசுரனாக இருந்தாலும் மகாவிஷ்ணுவின் சூழ்ச்சி புரிந்து தேவர்கள் போல் உருமாறி
சூரிய, சந்திரனுடன் சேர்ந்து அமர்ந்து அமிர்தம் பருகினான்.
அப்போது மோகினி உருவத்திலிருந்த மகாவிஷ்ணுவுக்கு சூரிய, சந்திரன் அவன் அசுரன் என குறிப்பால் உணர்த்த அதைப் பார்த்த மகாவிஷ்ணு தன் கையிலிருக்கும்
அகப்பையால் அவன் தலையை கொய்து எறிந்தார், தலை வேறு
, உடல் வேறாகினும் அமிர்த பலத்தால் உயிருடனிருந்த சுவர்பானு பின் மகாவிஷ்ணுவிடம்
மன்னிப்பு வேண்டி விமோசனமும் வேண்ட, மனமிறங்கிய மகாவிஷ்ணு அவர்களின் அங்கஹீனமான உருவத்தை
திருத்தியமைத்து உடலிழந்த உருவத்திற்கு பாம்பின் உடலையும், தலை இல்லா உடலுக்கு பாம்பின் தலையையும் தந்து “ராகு, கேது” என்ற பெயருடன் இன்றளவும்,
நவகிரகங்களில் அவர்களும் ஒன்றாகும் அருளைத் தந்தார் .
தேவர்களுடன் இணைந்து அமிர்தம் பருகிய காரணத்தால், ராகுவும், கேதுவும் தங்களின் அசுர குணம் மறைய பெற்றவர்களாய், மற்றைய கிரகங்களுடன் இணைந்து மக்களுக்கு அவரவர் வினைக்கேற்ப நல்லதைச் செய்து
வருகின்றனர். ஆனாலும், சூரிய, சந்திரன் காட்டிக் கொடுத்தமையால்தான், விமோசனம் பெற்றாலும்,
தன் தேகம் வித்தியாசமான தோற்றத்துடன் இருவேறாக ஆகியது என்ற ஒரு மனக்குறையில்,
மன விரோதத்தில் சுவர்பானு ஆண்டுதோறும், அவர்களை உலகத்தில் பயணிக்கவிடாது
ஒரிரு முறைகள் தன் சக்தியைக் கொண்டு மறையச்செய்ய வரம் பெற்றதாகவும், அந்நிகழ்ச்சியே, சூரிய, சந்திர
கிரகணமென்றும் புராணங்கள் உறுதிப் படுத்துகின்றன.
இந்த தேவர்கள் அமிர்தம் உண்ட சரிதத்தை நான் விவரித்து எழுத வேண்டுமென
நினைத்ததின் காரணம், நான் ஒரு செய்தியை படித்ததுதான். அன்று ஈஸ்வரன்
அந்த ஆலகால விஷத்தை அழிக்காது பெருகவிட்டால் அனைத்து உயிர்களுக்கும் ஆபத்து என்பதற்காக நமக்காக அதை தானே உண்டு அது அமுதமாக
மாறி, திருநீலகண்டர் எனும் காரணப் பெயருடன், திருவிளையாடல் புரிந்து அனைவரையும் அன்போடு காத்து ரட்சித்தார் என்கிறது வியக்க
வைக்கும் புராணங்கள்.
ஆனால் இன்று அமுதமாய் இனிக்கும் ஒரு உணவே ஆலகால விஷமாய் மாறி
ஓர் உயிரை மாய்த்த சம்பவத்தை குறித்த ஒரு செய்தியை கண்ட அதிர்ச்சியில் (வாட்சப்பில் அனைவருக்கும்
பகிர்ந்து கொள்ளுமாறு வந்த ஒரு செய்தி.) காலத்தின் கோலம் இப்படி
மாற்றி விட்டதே என்ற வருத்தத் தோடு அதை இங்கு உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
அந்தச் செய்தி எந்தளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.
இருப்பினும், வந்த அந்தச்செய்தி இதோ….
நண்பர்கள் கவனத்திற்கு...படித்து விட்டு ஷேர்
செய்யுங்கள்....................
தற்போது சீனாவில் நடந்த துயரச் சம்பவம்
வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்ற சீன தேசத்தை சேர்ந்த ஒருவர் அங்கு கடையில் விற்பனை
செய்த பலாப்பழத்தை வாங்கி சாப்பிட்டு விட்டு கூடவே coco-cola வையும் அருந்தி இருக்கிறார்..இதனால் சிறிது நேரம்
கழித்து நெஞ்சடைத்து அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.. மருத்துவ மனைக்கு கொண்டு
சென்று பிரேத பரிசோதனை செய்த போது தான் உண்மை தெரிய வந்துள்ளது.. அது
என்னவென்றால் பலாப்பழத்தை சாப்பிட்டு விட்டு உடனே COCO-COLA அருந்தியதால்
அது விஷமாக மாறி இருக்கிறது.. அப்படி சாப்பிடுவது 5 அடி
நாகப்பாம்பின் விஷத்துக்கு சமம்..அதனால் தயவு செய்து பலாப்பழம் சாப்பிட்டு எட்டு
மணி நேரத்திற்கு COCO-COLA; PEPSI போன்ற பானங்களை
அருந்தாதீர்கள்... தயவுசெய்து இதை அனைவருக்கும் பகிருங்கள்...
படித்ததற்கு நன்றிகள்....
அருமையான பகிர்வு...
ReplyDeleteCOCO-COLA; PEPSI போன்ற பலவற்றிக்கும் தடை வரும்... வர வேண்டும்...
வணக்கம் சகோதரரே.
Deleteதாங்கள் அன்புடன் முதலில் வருகை தந்தமைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், பாராட்டியமைக்கும் என் பணிவான நன்றிகள்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
ஆலகால விஷத்தில் ஆரம்பித்து இக்கால விஷம் வரை பகிர்ந்தமைக்கு நன்றி. பயனுள்ள பதிவு. நாம் திருந்தவேண்டும்.
ReplyDeleteவணக்கம் சகோதரரே.
Deleteதங்களின் அன்பான வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், பாராட்டியமைக்கும் என் பணிவான நன்றிகள்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
அமுத, ஆலகால விஷங்கள் பற்றி எழுதி, பெப்ஸி கோலா விவரமும் சொன்னது பொருத்தம்.
ReplyDeleteவணக்கம் சகோதரரே.
Deleteதங்களின் அன்பான வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், பாராட்டியமைக்கும் என் பணிவான நன்றிகள்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
நல்லதொரு அலசல் (ஏட்டு இசட்டு) வகைகள் அருமையான தகவல்கள் வாழ்த்துகள் சகோ.
ReplyDeleteவணக்கம் சகோதரரே.
Deleteதங்களின் அன்பான வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், பாராட்டியமைக்கும் வாழ்த்துக்களுக்கும் என் பணிவான நன்றிகள்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
நல்லதொரு பதிவு சகோ.
ReplyDeleteவணக்கம் சகோதரி.
Deleteதங்களின் அன்பான வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், பாராட்டியமைக்கும் என் பணிவான நன்றிகள்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
வணக்கம் !
ReplyDeleteபுராணக் கதை தெரியும் அதை சின்னவயசிலே பெற்றோர் ஊட்டிவிட்டனர் ஆனால் பலாப்பழம் கொக்ககோலா புதிது தகவலுக்கு நன்றி !
வணக்கம் சகோதரரே.
Deleteதங்களின் அன்பான வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், பாராட்டியமைக்கும் என் பணிவான நன்றிகள்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
அழகிய புகைப்படங்களுடன் தாங்கள் சொல்லிய விதம் அருமை. புதிய தகவலுக்கும் நன்றிகள் பல, எவ்வளவு பெரிய விஷம், அய்யோ விஷயம்.
ReplyDeleteவணக்கம் சகோதரி.
Deleteதங்களின் அன்பான வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், பாராட்டியமைக்கும் என் பணிவான நன்றிகள்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
அருமையான புராணத் தகவல்கள். அதற்குப் பொருத்தமான படங்கள் என்று கொடுத்திருக்கும் வேளையில் ஃபுட் பாய்சன் பற்றி மற்றவருக்கு எச்சரிக்கை செய்யும் விதமாகப் பகிர்ந்திருப்பதும் அருமை கமலா மேம்
ReplyDeleteவணக்கம் சகோதரி.
Deleteதங்களின் அன்பான வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், பாராட்டியமைக்கும் என் பணிவான நன்றிகள்.
தங்களைப் போன்றோர் என் தளம் வந்து பாராட்டி கருத்தளிப்பது எனக்கு பெரு மகிழ்வைத் தருகிறது. நன்றி.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
அருமையான பதிவு சகோ...கோககோலா நானும் முகநூலில் படித்தேன். கால தாமத வருகைக்கு மன்னிக்கவும். உடல் நிலை சற்று சரியில்லை. அதான் நன்றி.
ReplyDeleteவணக்கம் சகோதரி.
ReplyDeleteதங்களின் அன்பான வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், பாராட்டியமைக்கும் என் பணிவான நன்றிகள்.
முன்னரே இத்தகவலை முகநூலில் படித்தமைக்கு மகிழ்ச்சி
.
தாமதமெல்லாம் ஒன்றில்லை சகோதரி. உங்கள் உடல்நிலை செளகரிய குறைவிலும் வந்து கருத்துரைத்த செயலுக்கு என் பணிவான நன்றிகள் சகோதரி.உங்கள் உடல் நிலையை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். அதுதான் முக்கியம்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
அருமையான பகிர்வு சகோதரி...
ReplyDeleteவிடுமுறையில் சென்றிருந்தேன்... அதான் பதிவுகள் பக்கம் வரவில்லை.
இனி தொடர்வேன்.
வாழ்த்துக்கள்.
வணக்கம் சகோதரரே.
Deleteநலமா ? தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், பாராட்டியமைக்கும் என் பணிவான நன்றிகள்.
தாங்கள் விடுமுறையில் குடும்பத்துடன் சேர்ந்திருக்க சென்ற விபரம் அறிவேன். அனைவரும் நலமா? சந்தோஷமாக விடுமுறையை குழந்தைகளுடன் செலவழித்திருப்பீர்கள் என நம்புகிறேன். அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வந்தவுடன் என் தளம் வந்து வாழ்த்துரைத்தமைக்கு என் பணிவான நன்றிகள்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.