Friday, August 29, 2014

மரியாதைக்குரிய மலையின் மரங்களே….!



 

வானத்தை நோக்கி வளர்ந்தாலும், சிறிதும்
வளையாது, வானத்தின் மேல் வைத்த
விழிகளையும், சற்றும் வாங்காது,
காற்றினையும், நீரினையும் மட்டுமே,
கடும் பசியிலும், உணவாக உட்கொண்டு,
மலையிதுவே எனவும் மலைத்து
மாளாமல், மண்ணின் மடியினிலே
உழலும் மற்ற உறவுதனையும்,
உதறித்தள்ளி, உள்ளமதில் கள்ளமில்லாது,
சுற்றியிருக்கும் சொந்தங்களையே
சுகமான சொர்க்கங்களாய், சுமந்து கொண்டு,     
தன்துணை நாடி வரும் பிற உயிர்களின்
தற்காப்பின் அவசியத்தை, உணரும் தன்மையுடனே,
தன்னலம் கருதாது, வளமையான எண்ணமுடனே,
தளர்வில்லா மனமுடனே, தாய்மையின் உள்ளத்துடனே,
அன்போடு தன் கிளைகளையும், இலைகளையும்
அமர்ந்து கொள்ள, அடைக்கலமாய் தந்தபடி,
குளிரையும், மழையினையும் ஒருபோதும்
குற்றமென்று நினைக்காமல், கொடும்
பனியையும், காற்றினையும், பெரும்பாலும்
பாதகமாய் நினையாமல், தினந்தோறும்
“மானிடர்களின் நலன்கள் சிறப்புற,
மாதவம் செய்யும் முனிவர்களின்
மனநிலையில், மட்டில்லா மகிழ்வோடு,
கால்கடுக்க நின்றபடி, கால நேரம் கணக்கின்றி
களைப்பாற நேரமின்றி கடுந்தவம் செய்யும்
மா”மரங்களே..! யாருக்காக இந்த தவம்..?
மரங்களாகிய உங்களுக்காவா..? இல்லை,,!
மற்றவர்களின் நலனுக்காகவா…? இருப்பினும் இந்த
மகத்தான மாண்பினுக்கு மனமதிலே மகிழ்வோடு,
மட்டில்லா மரியாதையுடன், மண்டியிட்டு வணங்குகிறேன்….!

விநாயகர் வழிபாடு...





வலைத்தள உறவுகளுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்


நன்றி ஓம் சக்தி விநாயகர் மந்திர்
முழுமுதற்க் கடவுளே…!
மூஷிக வாகனனே…!
முருகனுக்கு, மூத்தோனே…!
முக்கண்ணனுக்கு, புதல்வனே…!
மூவுலகிற்கும், வித்தகனே…!
உமையவளின், துணைவேண்டி
உருவான அரும்பாலகனே….!
அண்ட சராசரங்களையும்,
அகிலங்கள், அனைத்தையும்,
அடக்கமாய்  தனக்குள்,
அடக்கி வைத்திருப்பவனே….!
எளிமையின், சிகரமாய்,
எத்திக்கும் நிற்பவனே…!
எங்கேயும், எதிலுமாய்,
முண்ணிலையில், இருப்பவனே…!
பிடித்து வைத்தவிடத்திலெல்லாம்,
பிரியமாய் அமர்ந்திருப்பவனே….!
முடிந்ததை, பிரசாதமாக்கினாலும்
முகஞ்சுழிக்காமல், ஏற்றுக்கொள்பவனே…!
எண்ணிய செயல்களில்,
இடர்தனை களைபவனே….!
பண்ணிய பாவங்களின்,
பலன்களை அறிந்தவனே...!
வினைகளை வேரறுத்து
வெல்லும், வழி வகுப்பவனே…!
விநாயகனே…! வேழ முகத்தோனே…!
இன்று உந்தன் வரவிற்காய்,
இதயம் நிரம்ப அன்பு வைத்து,
இல்லந்தோறும் விருந்து வைப்பர்…!
ஷ்ட தெய்வமாய் உனைப்போற்றி
கஷ்டம் நீங்கவே வழி படுவர்….!
அகிலம் காத்து, குறைத்தீர்க்கவே, நானும்
அனைவரின் சார்பிலும் வணங்குகின்றேனே….!