Tuesday, April 21, 2015

அந்த நால்வரின் மனம்... ( பகுதி 5)

முந்தைய பகுதியின் முடிவு

எப்படி இவள் மனதிலுள்ளது எல்லாம் புரிந்தவளாய் பேசுகிறாள்? ஒருவேளை மனவியல் படித்திருப்பாளோ? என்று திகைத்து ஏதும் சொல்ல தோன்றாமல் பேசாமல் சற்று நேரம் மெளனித்தான் பிரபாகர்.

இன்றைய தொடர்ச்சி..
.
ஒரு சில நிமிடம் மெளனம் நிலவியது இருவரிடமும்
என்னடா! இவள் நம்மை பற்றி எல்லாம் நல்லா தெரிஞ்சவ, மாதிரி பேசறாளேன்னு உங்களுக்கு திகைப்பா இருக்கா.! ஸாரி! எம் மனசிலே தோணறதை சொல்றேன். அது ஒருவேளை உங்களை பொறுத்த வரை சரியா இருக்கலாம்! இல்லே தப்பாவும் இருக்கலாம்! உங்களை மாதிரிதான் எனக்கும் என் திருமணத்திலே கொஞ்சம் ௬ட இஸ்டமேயில்லை! அதாவது, யாரையுமே திருமணம் செஞ்சுகிட்டு, என் அப்பா, அம்மாவை விட்டுட்டு போக பிடிக்கலே! அதனாலே எனக்கு கல்யாணம் வேண்டாம்னு ரொம்ப பிடிவாதமா, இருந்தேன். ஆனா அப்பாவும், அம்மாவும் வறுப்புறுத்திகிட்டேயிருந்தாங்க! அந்த நேரத்திலேதான், உங்க அண்ணி மூலமா. உங்களையெல்லாம் பத்தி அப்பா தெரிஞ்சிகிட்டார். உங்க வீட்டுலே பழகினதலே உங்க எல்லாரையும் எங்க அப்பாவுக்கு ரொம்ப பிடிச்சதுனாலே, “உங்களுக்கு உதவி செஞ்ச மாதிரியும் இருக்கும்.! அவங்க வீட்டுலே நீ வாழ்க்கைப்பட்டா, எங்களுக்கும் நிம்மதியா இருக்கும்! எத்தனை நாளைக்குத்தான் இப்படி கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு, இப்படியே இருக்கப்போறே! எங்களுக்கு அப்பறம் உன்னை யார் பாத்துப்பாங்க! நாங்க இருக்கும் போதே, ஒரு நல்ல இடத்திலே, உன்னை வாழ வச்சி பாத்தாதானே எங்களுக்கும் நிம்மதியா இருக்கும்! தயவு செய்து ஒத்துக்கோன்னு,” அப்பாவும், அம்மாவும் பிடிவாதமா, பேசி என்னை சம்மதிக்க வச்சாங்க! மற்றபடி, எனக்கிருக்கிற குறைக்காகத்தான், உங்களை விலை பேசற மாதிரி என் அப்பா உங்க வீட்டிலே பேசியிருக்காங்கனு, நீங்க தப்பா எடுத்துக்காதீங்க!அவள் பேச பேச பிரபாகர் மெளனமாக கேட்டுக் கொண்டேயிருந்தவன். சே! சே! அந்த மாதிரியெல்லாம் நான் ஒருபோதும் நினைக்கவேயில்லை!என்று அவசரமாக தடுத்தான்.

ரொம்ப நன்றி! என்றவள், “இல்லை! நா சொல்ல வந்ததை சொல்லிடுறேன் என்னை உங்களுக்கு பிடிக்கலைன்னா, தாராளமா, சொல்லிடுங்க. அதைப்பத்தி நா எதுவும் தப்பா எடுத்துக்க மாட்டேன். ஆனா ஒன்னு நிச்சயம்! அப்பா அம்மாவுக்கு, ஏன் எனக்குக் ௬ட உங்களையும், உங்க வீட்டு உறவுகளையும், பார்த்ததுமே, பிடிச்சு போச்சு! அதுக்காக என்னையும், உங்களுக்கு பிடிக்கனும்! அப்படின்னு, நான் வறுப்புறுத்த மாட்டேன். நீங்க தப்பா நினைக்கல்லேன்னா, உங்க குடும்பத்துக்கு வேண்டிய உதவியை அப்பாகிட்டே சொல்லி செய்யச்சொல்றேன். அதைப்பத்தி நீங்க கவலைப்படாதீங்க!அவள் ஆறுதலான குரலில் பேச இவனுக்கு மனதை என்னவோ, செய்தது!

இல்லை! இல்லை! நா சொல்ல வந்தது என்னன்னா, நா என் வாழ்க்கையை எப்படி அமைச்சிக்கிறதுன்னு ஏற்கனவே முடிவு பண்ணிய தருணத்திலே, இப்படிதான் அமைய வேண்டுமென விரும்பி எடுத்த முடிவை சொல்றதுக்குள்ளே எங்க வீட்டிலே, அதைப்பத்தி கவலைப்படாமே, எங்கிட்டே, “உன் விருப்பம் என்னன்னு கொஞ்சம் ௬ட கேக்காமே அவங்க இஸ்டத்துக்கு முடிவு செஞ்சதுதான் எனக்கு ரொம்ப வருத்தமா, இருந்துச்சு! ஏன்னா, என்சூழ்நிலை என்னன்னா,” என்று பிரபாகர் தெளிவாக சொல்ல ஆரம்பித்து முடிப்பதற்குள், மறுபடி குறுக்கிட்டாள் சங்கவி.
 
ஸாரி! நாசொல்றேன்னு, தவறா நினைக்காதீங்க! நம்மை இத்தனை நாள் சுமந்து பெத்து வளர்த்தவங்களுக்கு, நம்ம வாழ்க்கையை வகுத்து கொடுக்க உரிமையில்லைன்னு நினைக்கிறீங்களா? நான் ௬ட என் பிறவியிலேயே, எனக்கு ஏற்பட்ட, இந்த சிறு குறை காரணமா, மனசுக்குள் வருத்தமா இருந்தாலும், என் வாழ்க்கையிலே ரொம்ப தன்னம்பிக்கையாகத்தான் இருந்தேன். ஆனாலும், ஒருத்தர் வாழ்க்கையோடு சேர்ந்து  என் மூலமா அவர் வாழ்விலும் வருத்தத்தை ஏற்படுத்திடக் ௬டாதுங்கிற முடிவுலே மட்டும் உறுதியா நின்னேன். என்னை கல்யாணம் செஞ்சுக்க, வர்றவர். முதலில் சம்மதித்தாலும், பின்னாடி காலம் முழுக்க ஏதாவது மனசை கஷ்டபடுத்துற மாதிரி சொல்லிகிட்டே இருந்தார்ன்னா அதனாலே, எங்க அப்பா அம்மாவும், அவங்க காலம் முழுக்க என்னைப் பார்த்து வருத்தப்பட்டுகிட்டே, இருக்கவேண்டியதா, போயிடிச்சுன்னா, என்ன பண்றது?, அப்படிங்கிற கவலையும் ஒரு காரணமா இருந்ததினாலே, எனக்கு கல்யாணமே, வேண்டாம்ன்னு பிடிவாதமா, இருந்தேன். ஆனா, “உன் வாழ்க்கையிலே, நீ சந்தோசமா, இருக்கறதை, நாங்க பார்த்தாதான், எங்களாலேயும், சந்தோசமா, திருப்தியா இருக்க முடியும்! எங்க மகிழ்ச்சி, சந்தோசம் எல்லாம் உன் முடிவுலேதான், இருக்கு! இப்ப பார்த்த இடம் ரொம்ப நல்லவங்க! தெரிஞ்சவங்க! நீ நினைக்கிற மாதிரியெல்லாம் நடக்காது! அதனாலே, தயவு செய்து ஒத்துக்க எங்களுக்காக!அபபடின்னு சொன்ன அப்பா அம்மாவுக்காக, அவங்க சந்தோசத்துக்காக, நான் இந்த திருமணத்துக்கு, சம்மதிச்சேன். நம்மை இத்தனை நாளா வளர்த்த அப்பா, அம்மாக்கு, அவங்க திருப்திக்காக நாம இதை ௬ட பதிலுக்கு  பண்ணலேன்னாநாம பிறவி எடுத்திலே அர்த்தம் இல்லைன்னு, தோணிச்சு!.அவங்க வாழ்நாள் மொத்தமும், அவங்க நமக்கு காட்டிய அன்புக்கு பிரதி உபகாரமா, அவங்களுக்கு மன மகிழ்ச்சியை, நாம திருப்பி பரிசா கொடுக்கிறதுதானே, நல்லதுன்னு என் மனசிலே பட்டது. நான் சொல்றது சரிதானே!.”.என்று மடமடவென்று பேசியவளை பார்த்தபடி, மெளனத்திருந்த பிரபாகர் சற்று பிரமிபிப்பிற்கு பின் கலைந்தான்.

ரொம்ப சரி! நீங்க சொல்றது! ஆனா,,,,! தங்கள் குடும்பத்தின் மீது  இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கும் இவளிடம் அவர்களின் ஆசைக்காக, தற்சமயத்தின் பணத் தேவைக்காக, தன் முடிவை ஏற்கவும், கேட்கவும் மறுத்ததை எப்படிச் சொல்வது? அதனால் நல்ல குடும்பம் என்று வர்ணித்தவள் தன் குடும்பத்தை தரக்குறைவாக எண்ணி விடுவாளோ? என்ற தடுமாற்றம் அதிகமாகவே, சற்று நிறுத்தி  இழுத்தான் பிரபாகர்.

சரி! உங்களை சந்தித்து என் மனசில் உள்ளதை, மனம் விட்டு பேசியது எனக்கு ரொம்ப திருப்தியா, இருந்தது. நேரமாயிடுச்சு! அம்மா காணமேன்னு வருத்தபடுவாங்க! நீங்க உங்க முடிவை யோசிச்சு தயக்கமில்லாமே, உங்க மனதிலுள்ளதை போனில் ௬ட என்கிட்டே சொல்லலாம்!.. நீங்க எடுக்கும் எந்த முடிவுக்கும் நா கட்டுப்படறேன். ஆனா அது எனக்கு சாதகமா, இருந்திச்சின்னா, என் அப்பா அம்மாவுக்காக, நா ரொம்ப சந்தோசபடுவேன். இரண்டு மூணு நாள்ளே, தவறாமே, சொல்லிடுங்க! ஏன்னா, அப்பா கல்யாணத்துக்கு வேண்டிய துணிகள் நகையெல்லாம் எடுக்க ஆரம்பிக்கனும்ன்னு அம்மாகிட்டே சந்தோஷமா சொல்லிகிட்டு இருந்தார்.!! மறுபடி சொல்றேன். உங்களுக்கு உதவுறதுக்கும், இந்த கல்யாணத்துக்கும் எந்த சம்பந்தமில்லை! உங்க குடும்பத்தை பத்தி தெரிஞ்சிகிட்ட ஒரு நல்ல தோழியா, உங்களுக்கு அப்பாகிட்டே உங்களைப் பத்திச்சொல்லி ஹெல்ப் பண்ணுவேன். நான் எடுத்துச் சொன்னா அப்பா தட்டவே மாட்டார். உங்களுக்கு கண்டிப்பா உதவி செய்வார். என்னை நம்புங்க! என்றவள், எழுந்து வரட்டுமா”! என்று புன்னகையுடன் கை ௬ப்பிவிட்டு சற்று சிரமத்துடன் நடந்து கண்ணை விட்டு மறைந்தாள்.

பிரபாகர் கற்சிலையாய் உறைந்து போயிருந்திருந்தான்.
தன் மனதில் உள்ளதை சொல்லி அவள் மனதை மாற்றி இந்த திருமணத்தை நிறுத்திவிடும்படி அவளைக்கொண்டு செய்து விட வேண்டுமென்று, நினைத்துக்கொண்டு வந்தவனை, தன் மனதில் உள்ளதை சொல்ல விடாமல், அவள் நினைத்ததை எல்லாம் ௬றி விட்ட மகிழ்ச்சியில், “எந்த முடிவுக்கும் கட்டுப்படுகிறேன்”, என்பதாய் சொல்லி சந்தோசமாய் திரும்பிச் சென்ற அவளை போன்ற ஒரு அதிசயமான  பெண்ணை சந்தித்த ஆச்சரியத்தில் திக்குமுக்காடி அமர்ந்திருந்தான்.


தொடரும்

10 comments:

 1. சங்கவி ஆச்சர்யமான பெண்தான். நல்ல பெண்தான். ஆனால் பிரபாவைப் பேசவே விடாமல் இருந்தது நியாயமல்ல.. நான் பிரபாவாக இருந்தால் இன்னும் நிச்சயமே இல்லாத அருணாவை விட சங்கவிதான் ரைட் சாய்ஸ் என்று முடிவேடுப்பெனோ என்னவோ!

  :))))))

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே.

   தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   சங்கவியின் விரைவான முடிவுகளுக்கு முன் பிரபாவின் கனவுகள் தடுமாற்றமடைய செய்து அவனை பேசவிடாது தடுக்கிறது. மனதில் தன் ஆசையை எப்படியாவது நிறைவேற்றி கொள்வதை மட்டும் நினைப்பவனால், எப்படி உறுதியாக வேறு முடிவுகளை குறித்து சிந்திக்க இயலும்.

   தாங்கள் தொடர்ந்து வந்து கருத்திட்டு என் எழுத்துக்களுக்கு ஊக்கமளிப்பது, மகிழ்ச்சியை தருகிறது. நன்றி.

   நன்றியுடன்,
   கமலா ஹரிஹரன்.

   Delete
 2. திகைப்பாகத் தான் இருக்கு... பிரபாகர் போல...!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே.

   தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   \\திகைப்பாகத் தான் இருக்கு... பிரபாகர் போல...!//

   திகைப்புக்கள் கதையின் நகர்தலில் தித்திப்பாயும் மாறலாம் அல்லவா.?

   தாங்கள் தொடர்ந்து வந்து கருத்திட்டு என் எழுத்துக்களுக்கு ஊக்கமளிப்பது, மகிழ்ச்சியை தருகிறது. நன்றி.

   நன்றியுடன்,
   கமலா ஹரிஹரன்.


   Delete
 3. பிரபாகர் எடுக்கும் முடிவுக்காய்,,,,,,,,,,,

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி.

   தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   \\ பிரபாகர் எடுக்கும் முடிவுக்காய்,,,,,,,,,,,//

   காத்திருந்து ஆர்வமாய் படிக்கும் தங்களுக்கு மனம் நிறைந்த நன்றி.

   தாங்கள் தொடர்ந்து வந்து கருத்திட்டு என் எழுத்துக்களுக்கு ஊக்கமளிப்பது, மகிழ்ச்சியை தருகிறது. நன்றி.

   நன்றியுடன்,
   கமலா ஹரிஹரன்.

   Delete
 4. சங்கவி இவ்வளவு பேசுவாள்னு நான் நினைக்கவில்லை சரி அடுத்து பிரபாகர் பேசட்டும் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே.

   தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.

   பிரபாகர் பேசுவதற்குள் அவள் கிளம்பி சென்று விட்டாளே. எனினும் பிரபாவின் செய்கைகள் முடிவை நலமாக்கி தருமா.? இருப்பினும் அதை அறிந்து கொள்ள காத்திருக்கும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

   தாங்கள் தொடர்ந்து வந்து கருத்திட்டு என் எழுத்துக்களுக்கு ஊக்கமளிப்பது, மகிழ்ச்சியை தருகிறது. நன்றி.

   நன்றியுடன்,
   கமலா ஹரிஹரன்.

   Delete
 5. சங்கவியின் பேச்சு மிக அற்புதம் ! தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி.

   தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.

   சங்கவியின் பேச்சை ரசித்து கதையினூடேயே பயணிப்பது கண்டு மகிழ்ச்சியடைகிறேன். தொடகிறேன் சகோதரி.

   தாங்கள் தொடர்ந்து வந்து கருத்திட்டு என் எழுத்துக்களுக்கு ஊக்கமளிப்பதற்கு, என் பணிவான நன்றிகள்.

   நன்றியுடன்,
   கமலா ஹரிஹரன்.

   Delete